புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாற்றமா, மயக்கமா? Poll_c10மாற்றமா, மயக்கமா? Poll_m10மாற்றமா, மயக்கமா? Poll_c10 
107 Posts - 49%
heezulia
மாற்றமா, மயக்கமா? Poll_c10மாற்றமா, மயக்கமா? Poll_m10மாற்றமா, மயக்கமா? Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
மாற்றமா, மயக்கமா? Poll_c10மாற்றமா, மயக்கமா? Poll_m10மாற்றமா, மயக்கமா? Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
மாற்றமா, மயக்கமா? Poll_c10மாற்றமா, மயக்கமா? Poll_m10மாற்றமா, மயக்கமா? Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
மாற்றமா, மயக்கமா? Poll_c10மாற்றமா, மயக்கமா? Poll_m10மாற்றமா, மயக்கமா? Poll_c10 
9 Posts - 4%
prajai
மாற்றமா, மயக்கமா? Poll_c10மாற்றமா, மயக்கமா? Poll_m10மாற்றமா, மயக்கமா? Poll_c10 
3 Posts - 1%
Barushree
மாற்றமா, மயக்கமா? Poll_c10மாற்றமா, மயக்கமா? Poll_m10மாற்றமா, மயக்கமா? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மாற்றமா, மயக்கமா? Poll_c10மாற்றமா, மயக்கமா? Poll_m10மாற்றமா, மயக்கமா? Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மாற்றமா, மயக்கமா? Poll_c10மாற்றமா, மயக்கமா? Poll_m10மாற்றமா, மயக்கமா? Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
மாற்றமா, மயக்கமா? Poll_c10மாற்றமா, மயக்கமா? Poll_m10மாற்றமா, மயக்கமா? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாற்றமா, மயக்கமா? Poll_c10மாற்றமா, மயக்கமா? Poll_m10மாற்றமா, மயக்கமா? Poll_c10 
234 Posts - 52%
heezulia
மாற்றமா, மயக்கமா? Poll_c10மாற்றமா, மயக்கமா? Poll_m10மாற்றமா, மயக்கமா? Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
மாற்றமா, மயக்கமா? Poll_c10மாற்றமா, மயக்கமா? Poll_m10மாற்றமா, மயக்கமா? Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
மாற்றமா, மயக்கமா? Poll_c10மாற்றமா, மயக்கமா? Poll_m10மாற்றமா, மயக்கமா? Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
மாற்றமா, மயக்கமா? Poll_c10மாற்றமா, மயக்கமா? Poll_m10மாற்றமா, மயக்கமா? Poll_c10 
18 Posts - 4%
prajai
மாற்றமா, மயக்கமா? Poll_c10மாற்றமா, மயக்கமா? Poll_m10மாற்றமா, மயக்கமா? Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
மாற்றமா, மயக்கமா? Poll_c10மாற்றமா, மயக்கமா? Poll_m10மாற்றமா, மயக்கமா? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மாற்றமா, மயக்கமா? Poll_c10மாற்றமா, மயக்கமா? Poll_m10மாற்றமா, மயக்கமா? Poll_c10 
2 Posts - 0%
Barushree
மாற்றமா, மயக்கமா? Poll_c10மாற்றமா, மயக்கமா? Poll_m10மாற்றமா, மயக்கமா? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மாற்றமா, மயக்கமா? Poll_c10மாற்றமா, மயக்கமா? Poll_m10மாற்றமா, மயக்கமா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாற்றமா, மயக்கமா?


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 29, 2016 8:30 am

மாற்றம் வேண்டுமென்று ஒவ்வொரு தேர்தலிலும்
எண்ணம் ஏற்படுவது இயற்கை. அந்த வாய்ப்பு
எப்போதுமே நழுவிப் போய்க் கொண்டிருக்கிறது.

என்ன காரணம்? மாற்றத்துக்கு முயற்சிக்கும் அரசியல்
கட்சிகள், மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலோடு அந்த
முயற்சியை மேற்கொள்வதுதான்.

காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக அறிஞர் அண்ணா
1967 எடுத்த முயற்சிகூட அந்த வகையில்தான் முடிந்தது.
காங்கிரசுக்கு எதிரான மாற்று என்று சுமார் 17 ஆண்டுகள்
பாடுபட்டது 17 நாள் கூட நிலைக்கவில்லை.

சமீபத்தில் அதே நிலை அ.தி.மு.க. தே.மு.தி.க. உறவிலும்
ஏற்பட்டது. சோ முயற்சியால் தி.மு.க.வுக்கு எதிராக
உருவாக்கப்பட்ட கூட்டணி, தேர்தல் முடிந்த சில
மாதங்களுக்கு கூட நீடிக்கவில்லை.

ஏனென்றால் மாற்றத்துக்கான முயற்சி, தலைவர்களின்
உள்ளத்திலிருந்து வரவில்லை. மாறாக அரசியல்
நிர்பந்தங்களால் வந்தது. வேறு வழி இல்லை என்ற
நிராசையால் வந்தது. எனவே மக்களுக்கு ஏமாற்றம் தான்
மிஞ்சியது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 29, 2016 8:31 am


2016 தேர்தலில் மாற்றத்துக்கான இரண்டு முயற்சிகளை
நான் உன்னிப்பாகப் பார்க்கிறேன்.

ஒன்று - டாக்டர் அன்புமணி தலைமையில் பா.ம.க.வின்
ஹைடெக் பிரசாரம். மற்றது மக்கள் நலக் கூட்டணியின்
முயற்சி.

அன்புமணி நன்கு திட்டமிடப்பட்டு பல மாதங்களுக்கு
முன்பே வேலைகளைத் தொடங்கி விட்டார். தங்களுக்கு
இயற்கையாக வீச்சு இருக்கக் கூடிய பகுதிகளில் ஊடுருவி
வேலை செய்கிறார்.

தமிழகம் முழுவதுக்குமான பொதுவான இயக்கும் என்ற
பிம்பத்தைப் பெற பிற பகுதிகளிலும் முயற்சி எடுக்கிறார்கள்.
முக்கியமாக, கூட்டணிக்காக யாரிடமும் போய்ப் பேச்சு
வார்த்தை நடத்திக் கொண்டிருக்கவில்லை.

மக்கள் நலக் கூட்டணி தாமத முயற்சி என்றாலும்
வைகோவும் திருமாவளவனும், ஜி.ஆரும், முத்தரசனும்
தமிழகம் முழுவதும் அலைந்து மக்கள் மத்தியில்
மாற்றத்துக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

அதே நேரத்தில் விஜயகாந்தையும், வாசனையும் சேர்த்துக்
கொண்டிருக்கிறார்கள்.

இந்த முயற்சிகள் எல்லாம் 20 சதவிகிதம் இருக்கக் கூடிய
புதிய வாக்காளர்கள் மனத்திலும் சுமார் பத்து சதவிகிதம்
இருக்கக்கூடிய பூத் டிஸிஷன் மேக்கர்ஸ் மத்தியிலும்
பெரிய அதிர்வை ஏற்படுத்தும் என்றே நினைக்கிறேன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 29, 2016 8:31 am



பலமுனைப் போட்டி, ஆளும் கட்சிக்கான சாதக நிலை
என்று வர்ணிக்கப்படுகிறது. அதில் ஓரளவு உண்மை
இல்லாமலும் இல்லை. அதிமுகவின் வாக்குவங்கி நடந்து
முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பது சதவிகிதத்துக்கு
மேல் உள்ளது. ஆட்சிக்கு எதிரான அதிருப்தி காரணமாக
அதில் சுமார் பத்து சதவிகிதம் போய்விட்டாலும், முப்பது
சதவிகிதத்துக்கும் மேல் அதற்குக் கிடைக்கும்.

வட மாட்டங்களில் பா.ம.க. பெறும் வோட்டு ஆளும்
கட்சிக்குச் சாதகமாகவே முடியும். பிற மாவட்டங்களில்
தே.மு.திக., ம.தி.மு.க., வி.சி போன்றவை பிரிக்கும்
வோட்டுகளும் அதிமுகவுக்கே சாதகம். இப்படி ஒரு
எண்ணம் தேர்தல் கணிப்பாளர்களின் மனத்தில் உள்ளது.

அ.தி.மு.க. தோன்றியபோது தென்மாவட்டங்களில் தி.மு.க.
பாதிக்கப்பட்டது. ஆனால் வடமாவட்டங்களில் பலமாகவே
இருந்தது. அலை மற்றும் அசாதாரண சூழல்களைத்
தவிர்த்துப் பார்த்தால், பொதுவாக வடமாவட்டங்கள்
தி.மு.க.வை தேர்தல்களில் ஏமாற்றியதில்லை.

வன்னியர் வாக்கு வங்கி அக்கட்சிக்குப் பெரிதும் துணையாக
இருந்தது. தலித் வோட்டுகள் அ.தி.மு.க.வுக்குச் சென்று
கொண்டிருந்தன. இது 1989க்கு முன்பிருந்த நிலை.

சுமார் கால் நூற்றாண்டுக்குப் பிறகு இப்போது பா.ம.க.வின்
பரிமாண வளர்ச்சியைப் பார்க்கிறேன். ஃபேஸ்புக், வாட்ஸ் அப்,
எல்.இ.டி., ஸ்கிரீன், பவர் பாயிண்ட் மேடைப் பேச்சு என்று
மிக நவீனமான பிரசார உத்திகள் வியப்பில் ஆழ்த்துகின்றன.
அவர்கள் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்குமா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 29, 2016 8:31 am


மக்கள் நலக் கூட்டணி, தே.மு.தி.க., த.மா.கா., பிரசாரமும்
களைகட்டுகிறது. இந்தத் தேர்தலின் நட்சத்திரப் பேச்சாளர்
பிரேமலதா என்று அடித்துச் சொல்லிவிடலாம். அந்த
அளவுக்கு அவர் ஏரியாவுக்குத் தகுந்த பாயிண்ட்டுகளை
அள்ளி வீசி அனைவரின் கவனத்தையும் கவர்கிறார்.

இந்தத் தேர்தலில் இலவசங்கள் வெளிப்படையாக இல்லை.
கடன் தள்ளுபடி, ஊராட்சிக்கு ஒரு டிராக்டர் என்பது போன்ற
சில ஐட்டங்கள் இருந்தாலும் எல்லாக் கட்சிகளின் தேர்தல்
அறிக்கைகளும் கவனமுடன் தயாரிக்கப் பட்டிருக்கின்றன.

குழந்தைகளுக்கான ஒரு வேளை சத்துணவு அந்தக் கால
பட்ஜெட் 45 பைசா. பெரியவர்களுக்கு 90 பைசா. சத்துணவுத்
திட்டத்துக்கு தமிழ்நாடு வரவு செலவில் சுமார் 15% நிதி
ஒதுக்கப்பட்டது. மதிய உணவைக் காரணம் காட்டித்தான்
மது தாராளமாக்கப்பட்டது. இன்று அது ஆறாகப்
பெருக்கெடுத்து ஓடுகிறது.
-
சத்துணவு அரசியலில் இருந்து வந்தவர்தான் இன்றைய
முதல்வர் ஜெயலலிதா என்பது பலருக்குத் தெரியுமோ
என்னவோ? அவருக்கு சத்துணவுத் திட்ட உயர் மட்டக் குழு
உறுப்பினர் பதவியை அளித்தார் எம்.ஜி.ஆர். அதுவே அவரது
அரசியல் பிரவேசத்துக்குப் பிள்ளையார் சுழி.

இலவசங்கள் என்பவை மக்களின் வரிப்பணத்திலிருந்து
மக்களுக்குத் தரப்படுபவைதான். சமூக நலம் சார்ந்த ஓர்
அரசியல் அவை காலத்தின் கட்டாயம்.

ஆனால் அவற்றுக்கான நிதி தாராள மது மூலம் திரட்டப்படக்
கூடாது. தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மலிவு விலை மது என்ற
பெயரில் கிட்டத்தட்ட சாராயத்தை பாட்டில்களில் அடைத்து
விற்றார்கள். பின்னர் அது 1991ல் ஒழிக்கப்பட்டு விஸ்கி, பிராந்தி
வகையறாக்களுக்குத் தாராளமாக மடை திறந்து விடப்பட்டது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 29, 2016 8:32 am


வளவளவென்று பேச வேண்டாம். வரும் தேர்தலில் வெற்றி
யாருக்கு?

கூட்டணி என்பது மூன்று வகைப்படும் என்பார்கள். ஒன்று '
நேச்சுரல் அலையன்ஸ்' இயற்கையாக எழுவது. வோட்டு
டிரான்ஸ்பர் நீட்டாக இருக்கும். ஒன்றின் பலத்தில் மற்றொன்று
ஜெயிக்கும். தன் வோட்டுகளை தனது கூட்டணிக் கட்சிக்கு
மாற்றிக் கொடுக்கும். தேர்தல் முடிந்த பிறகும் நீடிக்கும்.
பொதுவாக இது வெற்றிக் கூட்டணி.

அடுத்தது 'வானவில் கூட்டணி'.
ஒரு வகையான வண்ணக் கலவை. மழை ஓய்ந்த பிறகு
காணாமல் போய்விடும்.

மூன்றாவதான ரேக்-டாக் கூட்டணி தான் ஒட்டுத் துணி
அலையன்ஸ். பல்வேறு துணிகளைக் கொண்டு ஒட்டுப்
போட்டுத் தைத்த வோட்டுச் சட்டை. சில நேரங்களில்
தேர்தலுக்கு முன்பே கூட டிரவுசர் கிழிந்துவிடும்.

இந்த முறை சிறு மற்றும் நடுத்தரக் கட்சிகள் பல ஒன்று
சேர்ந்து மக்கள் நலக் கூட்டணி தே.மு.தி.க., - த.மா.கா.
என்ற புதிய வடிவம் பெற்றுள்ளன. பா.ம.க. நாம் தமிழர்
இன்னும் பல்வேறு புதிய கட்சிகள் தனித்துப்
போட்டியிடுகின்றன. இரட்டை இலை முதல் முறையாக
அனைத்துச் தொகுதிகளிலும் களம் இறங்குகிறது.

தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி பிரதான போட்டியாளர்.
அ.தி.மு.க. தனது தனிப்பட்ட வாக்கு வங்கியை மட்டும்
நம்புகிறது. தி.மு.க. ஆட்சி மாற்றத்துக்கான அவசியம்
தமிழ்நாட்டில் எழுந்துவிட்டதாகக் கருதி அந்த அலை ஒன்றே
வெற்றிக்குப் போதுமானது என்று நினைக்கிறது.

ஆனால் மைக்ரோ கட்சிகளும் சுயேச்சைகளும் தேர்தலின்
தலையெழுத்தையே மாற்றும் அபாயம் உள்ளது.
5000 ஓட்டுகளுக்கு கீழ் வெற்றி வித்தியாசம் வரக்கூடிய
தொகுதிகளின் எண்ணிக்கை, கூடக் கூட முடிவுகள் தலை
கீழாக அமையும். அதற்குச் சரியான உதாரணம் 1971 தேர்தல்.

மக்கள் மனத்தை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள
முடியாது. ஒவவொரு தேர்தலிலும் அவர்கள் ஏதாவது
ஒரு காரணத்தை வைத்து வோட்டளிக்கிறார்கள்.
அந்த வகையில் இந்தத் தேர்தலில் புதிதாக வந்திருக்கும்
விஜயகாந்த்-வைகோ முயற்சியும், பா.ம.க.வின் தேர்தல்
அறிக்கையும் வாக்காளப் பெருங்குடி மக்களின் கவனத்தைக்
கவர்ந்திரக்கின்றன.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 29, 2016 8:32 am

தேர்தல் அறிக்கைகளும் வெளிவந்திருக்கும். சாத்தியமில்லாத
வாக்குறுதிகள், வாக்காளர்களுக்கு சோப்புப் போடும் திட்டங்கள்.
இருபது ஆண்டுகள் ஆனாலும் முடிக்க முடியாத வெற்று
அறிவிப்புகள், நிதி ஆதாரம் இல்லாத உடான்ஸ்கள் என்று
வழக்கமான கூத்துகளுக்குப் பஞ்சமில்லை.

ஆனால் நமது வாக்காளர்கள் புத்திசாலிகள். அவர்கள் வரிகளுக்கு
இடையே வாசிக்கத் தெரிந்தவர்கள். எனவே தேர்தல்
அறிக்கைகளை அவர்கள் அப்படியே முக முதிப்பில் ஏற்றுக்
கொள்வதில்லை.

தமிழக வாக்காளர்கள் அதிர்ச்சியான முடிவுகளைத் தருவதிலும்
மன்னர்கள். சுமார் அரை நூற்றாண்டுக்கு முன் அகில இந்திய
அளவில் காங்கிரஸ் கட்சிக்கு முதல் மரணஅடி தந்தார்கள்.

1977ல் இந்திராவுக்கு எதிரான அலை இந்தியா முழுவதும் வீசிய
போது, தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் - இந்திரா காம்பினேஷன்
வெற்றி பெற்றது

நரேந்திர மோடியின் கொடி பாரதமெங்கும் பட்டொளி வீசிப்
பறந்தபோது தமிழ்நாட்டில் அது பறக்க, போதுமான காற்று
அடிக்கவில்லை.

2016 தேர்தலில் தமிழகத்தின் வாக்கு சதவிகிதம் 85-90 சதவிகிதம்
வரை உயர்ந்தால் மாற்றத்துக்கான முதல் அடி எடுத்து வைக்கப்
பட்டதாகப் பொருள்! அது வாக்குப் பதிவு முடிந்து வோட்டுக்கள்
எண்ணப்படும் வரை எல்லாக் கட்சிகள் மத்தியிலும் ஒரு திகிலை
ஏற்படுத்தும்.

கூடுதல் வாக்குகள் ஒருமுனைப்படுத்தப்பட்டால் பழைய வாக்கு
வங்கிக் கணக்குகள் சிதறடிக்கப்படும். அந்த வகையில் இந்தத்
தேர்தல் ஒரு வாட்டர் ஷெட் எலெக்ஷன் தமிழகத் தேர்தல்
களத்தை வெறும் நம்பர் கேம் என்று பார்க்க கூடாது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 29, 2016 8:33 am


வேறு எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு 2016ல்
சமூக ஊடகங்களின் தாக்கமும் காட்சி ஊடகங்களின் வீச்சும்
அதிகம்.

'வோட்டிங் இஸ் இன்பர்மேஷன்'
என்று எங்களுக்கு
ஜர்னலிசம் வகுப்புகளில் சொல்லிக் கொடுப்பார்கள்.
மிக அதிகப்படியான தகவல்கள் இந்தத் தேர்தலில்
வாக்காளர்களுக்குக் கிடைக்கி்னறன. எனவே 2016ஐ வெறும்
நம்பர் கேம் என்று சொல்லிவிட முடியாது.


உனக்கு 25 அவர்களுக்கு 32 இவர்களுக்கு 24 என்று சதவிகிதக்
கணக்கை வைத்து சீட்டுகளின் எண்ணிக்கையை யூகிக்க
முயல்வது புத்திசாலித்தனமாகாது.

அசெம்பிளி தேர்தல் முடிவுகளை யூகிக்க ஒரு வகையான
மைக்ரோ அனாலிசிஸ் தேவை. தொகுதிக்குத் தொகுதிகள்
நிலவரம் கணிக்கப்பட வேண்டும். முன் எப்போதும் இல்லாத
அளவுக்கு வேட்பாளர் தேர்வில் காணப்படும் பகிரங்க அதிருப்தி
கவனத்தில் கொள்ளத்தக்கது.

பெரிய கட்சிகள் கூட அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலை
மாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் மையப் புள்ளிகளாக எழுந்திருப்பவை
மதுவிலக்கும், ஊழல் ஒழிப்பும், இரண்டுமே கொள்கை
அடிப்படையில் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்
விஷயங்கள்தான். இதுவரை ஆண்ட கட்சிகள் மீது ஊழல்
வழக்குகம் குற்றச்சாட்டுகளும் உள்ளன.

புதிதாக ஆட்சிக்கு வரத் துடிக்கும் கட்சிகள் ஏற்கெனவே
இவற்றோடு ஏதாவது ஒரு காலகட்டத்தில் உறவு
வைத்திருந்தவை. எனவே முனை மழுங்கிய அம்புகளைத்
தான் அவற்றால் எறிய முடிகிறது.

இந்த இதழை நீங்கள் வாசிக்கும்போது அனேகமாக எல்லாத்


2016 பல ஆச்சர்யங்களையும் எதிர்பாராத் திருப்பங்களையும்
உள்ளடக்கியது. நம்மை நம்மாலேயே யூகிக்க முடியாது.

-
---------------------------
- ஷ்யாம்
கல்கி



சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 30, 2016 4:00 pm

நீங்க யாருக்கு ஆதரவு தரீங்க?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 30, 2016 5:37 pm

நல்ல அலசல் . / நல்ல பகிர்வு

நன்றி ஷ்யாம் --கல்கி /ayyasami ram

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 01, 2016 11:21 am

மாற்றமா, மயக்கமா? 3838410834 நல்ல கட்டுரை

மாற்றம் வருமா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக