புதிய பதிவுகள்
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_c10 
61 Posts - 41%
ayyasamy ram
சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_c10 
60 Posts - 41%
T.N.Balasubramanian
சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_c10 
2 Posts - 1%
prajai
சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_c10 
426 Posts - 48%
heezulia
சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_c10 
297 Posts - 33%
Dr.S.Soundarapandian
சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_c10 
29 Posts - 3%
prajai
சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 15 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதுரகிரி பயணம்.....

Page 15 of 24 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 19 ... 24  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Apr 29, 2016 2:53 pm

First topic message reminder :

சதுரகிரி பயணம்..... - Page 15 1yMy9gPDTdCobIqKidPt+001

மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!

சதுரகிரி பயணம்..... - Page 15 SxCdjytQQzO4vVLM3L0G+001

சதுரகிரி பயணம்..... - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 15 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 28, 2016 10:20 pm

ஸ்ரீரங்கா wrote:சித்தி இருக்காலம்..........  கருப்புசாமி  
இருக்கலாம் இல்ல...... இருக்கிறது! புன்னகை

சதுரகிரி பயணம்..... - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 15 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 28, 2016 10:23 pm

krishnaamma wrote:ம்ம்... அடுத்தது ஸ்வாமி தரிசனம் தானா? புன்னகை
அதற்குள்ளாகவா.....? புன்னகை அவ்வளவு சீக்கிரம் அந்த மகாலிங்கம் தரிசனம் கொடுத்துவிடுவாரா என்ன? :வணக்கம்: :வணக்கம்:

சதுரகிரி பயணம்..... - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 15 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 28, 2016 10:37 pm

டுத்த இருபதாவது நிமிடம் ஸ்ரீ மகாலிங்கம் சந்நிதி வந்து விட்டது.

சதுரகிரி பயணம்..... - Page 15 XsPEoW40TPuH1LzvEQT5+109

சதுரகிரி பயணம்..... - Page 15 T9umj0RSwuPnaYXQUtag+110

படிகள் ஏறி சுந்தர மகாலிங்க வாயிலை தாண்டிய உடனே நமக்கு வலது பக்கத்தில் சுந்தரமூர்த்தி ஆலயம் இருக்கிறது.

சதுரகிரி பயணம்..... - Page 15 SYAiOUpQeOHEfkzhKTzp+110-1

இந்த சுந்தரலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது அகத்திய முனிவரால் என்றாலும், இந்த லிங்கத்தை பூஜித்து வந்த சுந்தரானந்தர் சித்தர் பெயரிலேயே சுந்தரலிங்கம் என்று அழைக்கப்படுகிறது.

இவரது சந்நிதியில் வேண்டி நின்றால் வேண்டும் வரம் தருபவர். இவர் தோன்றிய வரலாறு பற்றி அப்புறம் பார்க்கலாம்.

சதுரகிரி பயணம்..... - Page 15 EpGrLLNkQDGsaVWXiDYu+111

இவ்வளவு நேரமாக மலை ஏறிவந்த களைப்பை போக்கிக்கொள்ள, சில அடி தூரம் நடந்தால் அதே வலது புறமாகவே இருந்த (சில மடங்களில்) கஞ்சி மடத்தினுள் நுழைந்தோம்.

சதுரகிரி பயணம்..... - Page 15 2DZZrxzoRBin4BvkOSub+112

மடத்தின் பொறுப்பாளர்கள் மிகவும் ஆதுரத்துடன் வரவேற்றார்கள். உடன் சென்று சாப்பிட சொன்னார்கள்.  எங்களை மட்டுமில்லை, மடத்திற்கு வருகை தரும் அனைத்து பக்தர்களையும் இப்படி தான் கவனிக்கிறார்கள்.

எங்களுக்கு முன்னதாகவே எங்களது லக்கேஜுகள் வந்து விட்டிருந்தன. கொண்டு வந்த கைத்தடியை எங்கள் லக்கேஜுடன் வைத்துவிட்டு, நாங்கள் சாப்பிடப்போகும் போது மணி மதியம் 12.20 ஆகியிருந்தது. சாதம், சாம்பார், ரசம், வாழைக்காய் பொரியல், பாயாசம் மற்றும் ஊறுகாய் இவற்றுடன் அருமையான சாப்பாடு.

சதுரகிரி பயணம்..... - Page 15 OVZRhzgrQval5Y30lCVn+113

சென்ற முறை சென்ற போது இந்த டேபிள் – சேர் வசதி இல்லை. ஆனால் இம்முறை அந்த வசதி செய்து வைத்திருக்கிறார்கள்.

தட்டுக்கள், தம்ளர்கள் ஒரு கூடையில் கவிழ்த்து வைத்திருப்பார்கள். சாப்பிடப்போகும் போது நாம் தான் கையோடு தட்டும், தம்ளரும் எடுத்துக்கொண்டு போகவேண்டும். சாப்பிட்டு முடித்ததும் அதேபோல அடுத்ததாக வரும் பக்தர் சாப்பிடும் வகையில் சுத்தமாக கழுவி குடையில் கவிழ்த்து விட்டு வரவேண்டும்.

இங்கே எந்த நேரமும் வரும் பக்தர்களுக்கு சாப்பாடு இருக்கும். அது இரவு எந்நேரமானாலும் சரி. நடுஇரவில் வருபவர்களிடம் கூட அவர்கள் சொல்லும் முதல் வார்த்தை, “சாப்பிட வாங்க சிவா...” ஆகவே எந்நேரமானாலும் சாப்பாடு இல்லை என்ற நிலையே இந்த மடத்தில் இல்லை.

இருந்தாலும், உணவு வேலை அல்லாத நேரத்தில் உச்சியை அடைய இருப்பவர்கள்,  ஒரு குழுவாக மலையேறும் பட்சத்தில்,  முன்கூட்டியே இங்கே தகவல் தெரிவித்து விட்டால் உணவு பற்றாகுறையால் மடத்தினருக்கு ஏற்படும் தர்மசங்கடத்தினை நாம் தவிர்க்கலாம்.

மலையேறி வந்தவர்கள் இவர்களது புண்ணியத்தில் எப்பொழுதுமே பசியோடிருந்ததில்லை என்பது கஞ்சி மடத்தின் ஸ்பெஷல்.  

சாப்பாடு முடிந்தது.

இந்த கஞ்சி மடத்தின் தலைவர் ராஜ பாளையத்தில் இருக்கிறார். அமாவாசையின் பொருட்டு வந்திருந்த அவரையும் பார்க்க முடிந்தது. கால் வலியால் நடக்க முடியாமல் இருந்தும் மலைக்கு வந்திருந்தார்.

அவருடன் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, உச்சிகால அபிஷேகம், பூஜை முடிந்து விட்டிருந்த நிலையில், ஆற அமர மாலைபொழுதில் சுந்தரமகாலிங்க சுவாமியை தரிசனம் செய்யலாம் என்று முடிவெடுத்தோம். அதற்கு முன் சற்றே ஓய்வெடுத்துக்கொள்ளலாம் என்று கஞ்சி மடத்திண்ணையிலேயே படுத்து இளைப்பாறினோம்.

மடத்தில், மலை ஏறி வரும் பக்தர்களுக்கு கால்வலிக்காக வலிநிவாரணி மாத்திரைகள் கூட கொடுக்கிறார்கள்.

மதியம் ஒன்றரை மணியளவில் மடத்தில் எங்களுக்காக (எங்களுக்கு மட்டும்) பஜ்ஜி செய்து கொடுத்தார்கள். மடத்தின் தலைவர் இருந்ததாலோ அல்லது மடத்தில் இருப்பவர்களுக்காகவோ செய்திருக்கலாம் என்று நினைக்கிறன். அனால், எங்களுக்கு மட்டுமே கொடுத்தார்கள் சுடச்சுட இருந்தது.

சதுரகிரி பயணம்..... - Page 15 BiRFgbEqRHOeUpyU8hFz+114

திண்ணையில் அமர்ந்தபடியே பஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டே வேடிக்கைபார்த்தபடி பொழுதை கழித்துக்கொண்டிருந்தோம்.

மாடுகளும், குரங்குகளும் பைரவர்களும் ஒரே அதகலப்படுத்திக்கொண்டு இருந்தார்கள். மலைக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் அமாவாசை தரிசனம் செய்த திருப்தியில் ஒவ்வொருவராக கிளம்பிக்கொண்டிருந்தனர். மெது, மெதுவாக மலை காலியாக ஆரம்பித்தது.  

சதுரகிரி பயணம்..... - Page 15 IcBlWmUGRRWCcYg4wWy2+114-1

எங்களுக்கு எதிரே இருந்த மரத்தில் ஒரு உடும்பு.

சதுரகிரி பயணம்..... - Page 15 AFvDB6RYTpOWe28XY314+114-2

கீழே செல்லும் யாரோ ஒருவருக்கு ஒரு டோலி தயாராகிக்கொண்டு இருக்கிறது.

சதுரகிரி பயணம்..... - Page 15 Irqq1SicRBacPASrjxvX+115

சதுரகிரி பயணம்..... - Page 15 Dm4LTVVTh6dNZfUHdU8c+116

சதுரகிரி பயணம்..... - Page 15 QmRawjOjQhmc02FjIz3v+117

இந்த குட்டிக்குரங்கின் சர்க்கஸ் சாகசங்கள் சூப்பர்.

சதுரகிரி பயணம்..... - Page 15 RZ27ufFjTCaqHWcNc3Xp+118

எங்கள் தலைக்கு மேலே ஒரு வானரம் எட்டிபார்கிறது பாருங்கள்.

சதுரகிரி பயணம்..... - Page 15 OHkBcZI8RuaYnnpF8lv6+119

சதுரகிரி பயணம்..... - Page 15 IYdn33KyQJyHDKGev18x+120

சண்டை போட்டுகொள்கிரார்களா அல்லது பேச்சு வார்த்தை நடக்கிறதா என்றே தெரியவில்லை.

சதுரகிரி பயணம்..... - Page 15 YNbOXeHMRhKaUiedRNlS+121

சதுரகிரி பயணம்..... - Page 15 Eox3SbfMT4O4KprSDF1l+001

சதுரகிரி பயணம்..... - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 15 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 28, 2016 11:31 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:ம்ம்... அடுத்தது ஸ்வாமி தரிசனம் தானா? புன்னகை
அதற்குள்ளாகவா.....? புன்னகை  அவ்வளவு சீக்கிரம் அந்த மகாலிங்கம் தரிசனம் கொடுத்துவிடுவாரா என்ன? :வணக்கம்: :வணக்கம்:

நீங்க தானே அடுத்தது கோவில் தான் என்று போட்டீங்க, அது தான் கேட்டேன்........புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 29, 2016 11:33 pm

ரிசனம் முடித்துவிட்டு மடத்தில் சாப்பிட்டுவிட்டு செல்லும் பக்தர்களுக்கு பிரசாதமாக திணைமாவு பொட்டலங்களை கொடுத்து அனுப்புகிறார்கள்.

சதுரகிரி பயணம்..... - Page 15 EugYtuj5SydBnMEW09eO+00

இந்த திணைமாவுப்பிரசாதம் கோரக்கர் குகையில் அமாவாசை தோறும் திணைமாவினால் செய்யப்பட்ட லிங்க வழிபாடு நடக்குமாம். அந்த வழிபாடு முடிந்ததும் அது இங்கே பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது என்று மடத்தில் சொன்னார்கள். ஒவ்வொருவருக்கும் கைநிறைய இந்த பிரசாதத்தினை தருகிறார்கள்.

கஞ்சிமடத்தில் அளிக்கப்படும் உணவு மட்டுமில்லை அது முதன்முதலாக இங்கு தோன்றிய விதம் கூட சுவையானது தான்.  ஆண்டவனை தரிசிக்க மலைக்கு வந்து பசியால் வாடும் பக்தர்களுக்கு அன்னமிட நினைத்தார் காளிமுத்து சுவாமிகளின் அன்னையான பற்றகாளியம்மாள்.

தன் தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்ய பிறந்தது தான் இந்த காளிமுத்து சுவாமிகள் கஞ்சி மடம். வெறும் கையும், காலோடு நடந்து செல்லவே கடினமாக இருக்கும் இந்த மலைப்பாதையில் சமையல் சாமான்களை தலைச்சுமையாகவே மலைக்கு எடுத்து சென்று பக்தர்களின் பசியை போக்கியவர்.

1976  -ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த மடத்தில் ஆரம்பத்தில் பசியோடு வரும் பக்தர்களுக்கு அரிசி கஞ்சியும், ஊறுகாயும் வழங்கப்பட்டதாம். அதனாலாயே இதற்க்கு கஞ்சி மடம் என்று பெயர் வந்துவிட்டது.

சதுரகிரி பயணம்..... - Page 15 W8lpedRXSD2xnUzU28PH+001

சதுரகிரி பயணம்..... - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 15 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 29, 2016 11:39 pm

நேரம் ஆகிவிட்டது. மாலை மணி 3.35. கிட்டதட்ட மலையே காலி ஆகிவிட்டிருந்தது. மொத்தமாக பார்த்தால் எங்களையும் சேர்த்து ஒரு பதினைந்து பேர்கள் இருந்தால் அதிகம்.

முகம், கைகால் கழுவ திரும்ப வந்த வழியே சென்றோம். இங்கு இது தான் ஒரு சங்கடம். நாம் தங்கும் மடத்தின் அருகே கழிப்பறை எதுவும் கிடையாது. கால்கள் இரண்டும் அசதியில் அழுதாலும், மறுபடியும் படிகள் ஏறி இறங்கி, ஏறியிறங்கி..... ப்பா..... எனக்கு ரொம்பவே சிரமமாக தான் இருந்தது.

கழிப்பறைக்கு வரவேண்டுமானால், ஒன்று சுந்தரமகாலிங்க வாயிலை தாண்டி மலையேறி வந்த திசையில் போகவேண்டும். வழியில் குடிநீர் குழாய்களும் இருக்கிறது. (இங்கு பக்தர்கள் குளிக்க குளியலறை போல ஆண்கள், பெண்கள் என்று தனித்தனியாக தடுப்பு அமைத்திருக்கிறார்கள்)

சதுரகிரி பயணம்..... - Page 15 Fz6z70UqRiWHlPezgdOX+01

அல்லது, சந்தன மகாலிங்கம் செல்லும் வழியில் சென்று,

சதுரகிரி பயணம்..... - Page 15 OKW6oYYsSTWTzvVk6h0j+02

அம்புக்குறி இட்டிருக்கும் கட்டிடத்திற்கு பின்னால் போகவேண்டும்.

சதுரகிரி பயணம்..... - Page 15 DiZq8O8FRauKY6Sov7aA+03

இங்கு பக்தர்களுக்கு வசதியாக கழிவறை மற்றும் குளியலறை கட்டி விட்டிருக்கிறார்கள். ஆனால், ஆத்திர அவசரமேல்லாம் இங்கு செல்லுபடியாகாது.

இந்த கழிவறை வசதி பற்றி இங்கு சொல்ல தேவையில்லை தான். ஆனாலும், ஒருக்கால் நம் ஈகரை வாசிகள் யாரேனும் முதன்முறையாக சதுரகிரி செல்ல நேர்ந்தால், கொஞ்சம் உதவியாக இருக்குமே என்ற காரணத்தினால் தான் இந்தே டீப் டிஸ்க்ரிப்ஷன்.

சதுரகிரி பயணம்..... - Page 15 RrWpeULEQ5SNHrN67f4n+001

சதுரகிரி பயணம்..... - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 15 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 29, 2016 11:53 pm

றுநாள் சந்தன மகாலிங்கதிற்கும், சுந்தர மகாலிங்கதிற்கும் அபிஷேக ஏற்பாடுகள் செய்திருந்தோம். பிரம்ம முகூர்த்தத்தில் சந்தன மகாலிங்கத்திற்கும், அது முடிந்ததும் 5.30 மணியளவில் சுந்தர மகாலிங்கத்திற்கும் அபிஷேகம் செய்வார்கள்.

சுந்தர மகாலிங்கத்திற்கு தேவையான வஸ்திரம், மாலை மற்றும் அபிஷேக பொருட்கள் அனைத்தும் நாங்களே வாங்கி வந்துவிட்டோம். சந்தன மகாலிங்க அபிஷேக பொருட்கள் மட்டும் வாங்கவில்லை. அவர்களே ஏற்பாடு செய்துவிடுவதாக சொன்னார்கள். அபிஷேகத்திற்கு உண்டான பணத்தை மட்டும் இங்கேயே online transfer செய்துவிட்டோம்.

அதன் நிமித்தம் சந்தன மகாலிங்க கோயிலில் உள்ள பிள்ளையார், சந்தன மகாலிங்கம், முருகர், சந்தன மகாதேவி, பதினெண் சித்தர்கள் மற்றும் நவகிரகங்கள் ஆகிய சந்நிதிகளுக்கு உண்டான வஸ்திரங்களை கொண்டு சென்று கொடுத்துவர, இவரும், என் நாத்தனார் பிள்ளையும் சென்று விட்டார்கள்.

சுந்தரமகாலிங்க வாயிலில் இருந்து இறங்கினோமானால் நமக்கு வலது புறமாக மேலே ஏறும் படிக்கட்டுகள் நேரே சந்தன மகாலிங்க கோயிலுக்கு தான் இட்டுச்செல்லும். சிவப்பு அம்புக்குறி சந்தன மகாலிங்கதிற்கும், மஞ்சள் அம்புகுறி ஏறிவந்த பாதையையும் குறிக்கிறது.

சதுரகிரி பயணம்..... - Page 15 XiIx2cDZRg2ddacmEzqZ+04

சுந்தர மகாலிங்க வாயிலருகே ஒரு பெரிய பலா மரம்.

சதுரகிரி பயணம்..... - Page 15 OSngKJ7ZRZOcwURAjAIN+04-1

சதுரகிரி பயணம்..... - Page 15 QT8fsokkTqmZ2X7sOkCN+05

இந்த மரம் சர்க்கரை வில்வமாம். சர்க்கரை வியாதிக்கான மூலிகை. இந்த மரத்திற்கு வலது பக்கத்தில் தான் நான் முன்னே சொன்ன கழிவறை உள்ளது.

சதுரகிரி பயணம்..... - Page 15 PJ88ywb9Se6odnDZUE2T+06

அங்கேயே பக்கவாட்டில் ஒரு அன்ன சத்திரம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கும் கீழிருந்து தான் கட்டுமானப்போருட்கள் வரவேண்டும்.

சதுரகிரி பயணம்..... - Page 15 E0O0ALf9RZWTCm2zOOt0+07

சர்க்கரை வில்வ மரத்தை தொர்ந்து நடந்தால் பாலம் ஒன்று எதிர்படும். இங்கே தான் இரவுநேரங்களில் அடிக்கடி கரடிகள் வழிமறிப்பதாக கூறுகிறார்கள்.

சதுரகிரி பயணம்..... - Page 15 AKxWI3RFRF21BE31xySw+08

எங்களுக்கும் ஒரு அனுபவம் ஏற்பட்டது. ஆனால், அது இங்கில்லை. சந்தன மகாலிங்கத்திற்காக முதலில் ஏறுகிறோமே அங்கே, அந்த இடம் தான் இது.

சதுரகிரி பயணம்..... - Page 15 VXOcZR9FSPqslIGF3PO1+05

அந்த அனுபவம்,

நாங்கள் மறுநாள் விடியற்காலை ஐந்து மணிக்கு, பிரம்ம முகூர்த்த பூஜை முடித்து நாங்கள் திரும்பும் போது, எனக்கு துணையாக என் பெண்ணும், நாத்தனார் பெண்ணும் உடன் வர லைட் வெளிச்சத்தில் மெதுவாக இறங்கி கொண்டிருந்தேன்.

எங்களுக்கு முன்னால் இவரும், என் நாத்தனார் பிள்ளையும் சென்று கொண்டிருந்தார்கள். அது கூப்பிடும் தூரத்தை விட அதிகம். எங்களுடன் பூஜையில் கலந்து கொண்ட அந்த 25 / 30 பேர்களும் விறுவிறுவென்று சுந்தரமகாலிங்க அபிஷேகத்திற்காக போய்.... போயே விட்டார்கள்.

இந்நிலையில் தான் இவர் தன் தங்கை பிள்ளையுடன் வருகையில் ஏதோ உறுமல் சத்தம் வந்திருக்கிறது. அது இருவருக்குமே கேட்டிருக்கிறது.

‘ஏய்... யாரது.......????’ என்று கேட்டபடியே இவரும் கையில் இருந்த டார்ச் லைட் வெளிச்சத்தை பரவவிட்டு துழாவி இருக்கிறார். டார்ச் வெளிச்சத்தை தவிர வேறு வெளிச்சமில்லாத கும்மிருட்டு. கண்களுக்கு எதுவும் புலப்படாத நிலையில் இருவரும் சுந்தர மகாலிங்க வாயிலை வந்தடைந்திருக்கிரார்கள்.

நாங்கள் வெகு தூரத்தில் இருந்ததால் எங்களுக்கு இந்த சப்தங்கள் ஏதும் கேட்கவில்லை. அடுத்த பத்து நிமிடங்களில் நாங்களும் வந்து சேர்ந்தவுடன் தான் எனக்கு விஷயம் தெரிந்தது. ஆனாலும், ஏனோ மனதில் பயம் தோன்றவில்லை.

ஆனால் இது மட்டும் கேட்டேன், ‘உருமற சத்தம் கேட்டும் எங்களை தனியா விட்டுட்டு வந்திருக்கீங்களே....?’

அதற்கு அவர் சொன்ன பதில், ‘மகாலிங்கம் கூட இருக்க ஒரு ஆபத்தும் வராது.....’

உண்மை தான்! பூரணமாய் நம்பி வந்திருக்கிறோமல்லவா... கயிலை மலையானே போற்றி!!

தொடர்ந்து ஏறவும் சித்தர்கள் தோரண வாயில் வரும்.

சதுரகிரி பயணம்..... - Page 15 LbvGxzt6QgWJz5fooVq4+09

சதுரகிரி பயணம்..... - Page 15 EUWwcaReSmq2NaAuzVMH+10

இதோ சந்தன மகாலிங்கம் சந்நிதி வந்து விட்டது.

சதுரகிரி பயணம்..... - Page 15 DBDbWtDRuKIPj28aRmo1+11

சதுரகிரி பயணம்..... - Page 15 TQht3KIcRWqNy9qX31Hs+001

சதுரகிரி பயணம்..... - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 15 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 30, 2016 9:54 am

தன் தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்ய பிறந்தது தான் இந்த காளிமுத்து சுவாமிகள் கஞ்சி மடம். வெறும் கையும், காலோடு நடந்து செல்லவே கடினமாக இருக்கும் இந்த மலைப்பாதையில் சமையல் சாமான்களை தலைச்சுமையாகவே மலைக்கு எடுத்து சென்று பக்தர்களின் பசியை போக்கியவர்.

1976 -ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த மடத்தில் ஆரம்பத்தில் பசியோடு வரும் பக்தர்களுக்கு அரிசி கஞ்சியும், ஊறுகாயும் வழங்கப்பட்டதாம். அதனாலாயே இதற்க்கு கஞ்சி மடம் என்று பெயர் வந்துவிட்டது.

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: எவ்வளவு கருணை அவர்களுக்கு........இப்போவே இதனை கடுமையான பயணம் என்றால் , 40 வருடங்களுக்கு முன் ?..............நினைக்கவே பயமாய் இருக்கு.....கண்டிப்பாக இதையும் விட அடர்ந்த காடும், வன விலங்குகளும் நிறைந்து இருந்து இருக்கும் புன்னகை................அப்படிப்பட்ட இடத்தில் எப்படிப் பட்ட சேவை செய்கிறார்கள்?.............நாம் ஏதும் டொனேஷன் போல அங்கு அனுப்ப முடியுமா விமந்தனி?....விவரம் சொல்லுங்களேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 30, 2016 10:01 am

இந்நிலையில் தான் இவர் தன் தங்கை பிள்ளையுடன் வருகையில் ஏதோ உறுமல் சத்தம் வந்திருக்கிறது. அது இருவருக்குமே கேட்டிருக்கிறது. பயம் பயம் பயம்
.
.
.
இரவு மலை மேலே தங்க முடியுமா விமந்தனி? .............வசதி இருக்கா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 30, 2016 2:39 pm

krishnaamma wrote:தன் தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்ய பிறந்தது தான் இந்த காளிமுத்து சுவாமிகள் கஞ்சி மடம். வெறும் கையும், காலோடு நடந்து செல்லவே கடினமாக இருக்கும் இந்த மலைப்பாதையில் சமையல் சாமான்களை தலைச்சுமையாகவே மலைக்கு எடுத்து சென்று பக்தர்களின் பசியை போக்கியவர்.

1976 -ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த மடத்தில் ஆரம்பத்தில் பசியோடு வரும் பக்தர்களுக்கு அரிசி கஞ்சியும், ஊறுகாயும் வழங்கப்பட்டதாம். அதனாலாயே இதற்க்கு கஞ்சி மடம் என்று பெயர் வந்துவிட்டது.

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: எவ்வளவு கருணை அவர்களுக்கு........இப்போவே இதனை கடுமையான பயணம் என்றால் , 40 வருடங்களுக்கு முன் ?..............நினைக்கவே பயமாய் இருக்கு.....கண்டிப்பாக இதையும் விட அடர்ந்த காடும், வன விலங்குகளும் நிறைந்து இருந்து இருக்கும் புன்னகை................அப்படிப்பட்ட இடத்தில் எப்படிப் பட்ட சேவை செய்கிறார்கள்?.............நாம் ஏதும் டொனேஷன் போல அங்கு அனுப்ப முடியுமா விமந்தனி?....விவரம் சொல்லுங்களேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1209249

எங்களுக்கு தெரிந்தவர் வருடாவருடம் 2500 முதல் 5000 வரை அன்னதானத்திற்கு , பணம் அனுப்புகிறார் .
வேண்டுமானால் முகவரி கேட்டு அனுப்புகிறேன் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 15 of 24 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 19 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக