ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் இந்த வந்திதா பாண்டே? - ஒரு கண்டிப்பு காக்கியின் பின்னணி

4 posters

Go down

யார் இந்த வந்திதா பாண்டே? - ஒரு கண்டிப்பு காக்கியின் பின்னணி  Empty யார் இந்த வந்திதா பாண்டே? - ஒரு கண்டிப்பு காக்கியின் பின்னணி

Post by மதுமிதா Thu Apr 28, 2016 5:32 pm

யார் இந்த வந்திதா பாண்டே? - ஒரு கண்டிப்பு காக்கியின் பின்னணி  Pande600

இந்திய காவல் துறையில் அதிரடிக்கு பெயர் பெற்ற பெண் அதிகாரி வந்திதா பாண்டே. பூர்வீகம் உத்தரப்பிரதேசம் அலகாபாத். தமிழக கேடரில் 2010ம் வருட ஐ.பி.எஸ். பேட்ஜ். கடந்த ஐந்து வருடங்களில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பணியாற்றி, மக்களிடம் நல்ல பெயர் எடுத்தவர். காக்கிகளிடம் ரொம்ப கண்டிப்பானவர் என்று பெயர் எடுத்தவர். "அதிரடியில் ஈடுபட்டாலே, தன்னை டிரான்ஸ்பர் செய்துவிடுவார்களோ?" என்பதற்காக தவறுக்கு துணைபோகும் காக்கிகள் மத்தியில், 'இந்தியாவில் எங்கே இடமாற்றம் கொடுத்தாலும் கவலைப்படேன்' என்று நேர்மை தவறாமல் பணியாற்றி வருபவர் வந்திதா.

உயர் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட வி.ஐ.பி-க்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிவகங்கை சிறுமியிடம், உண்மையில் நடந்ததை வாக்குமூலமாக வாங்கி, அதை சட்டப்படி பதிவு செய்தவர். அதற்கு பரிசாக கரூருக்கு மாற்றல் கொடுத்தது காவல்துறை. வழக்கமாக கொடும் குற்றவாளிகள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்துவது இயல்பு. " கரூர் எஸ்.பி. வந்திதா பாண்டே தற்கொலை முயற்சி.... அவர் மீது துப்பாக்கிச் சூடு " என்றெல்லாம் அடுத்தடுத்து தகவல் வெளியானதில் இளம் போலீஸ் அதிகாரிகள் ஆடித்தான் போய்விட்டனர். கடைசியில் அது யாரோ கிளப்பிவிட்ட வதந்தி என்று தெரிந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

வெங்கடேசன் என்கிற நபர், வந்திதாவிடம் ஒடிவந்து, " முகமூடி அணிந்த ரெண்டுபேர் என்னை கடத்திச் சென்றனர். ஒரு இடத்தில் வைத்து என்னை மிரட்டி, உங்களை கொலை செய்யச் சொல்லி துப்பாக்கி கொடுத்தார்கள். உங்களை கொன்றால், 10 லட்ச ரூபாய் பணம் கொடுக்கறதா சொன்னாங்க. இல்லைன்னா என்னைக் கொல்வேன்னு சொல்றாங்க. என்னைக் காப்பாத்துங்க" என்று கதறியபடி அவரிடம் ஒரு பையைக் கொடுத்து இருக்கிறார். மர்ம நபர்கள் கொடுத்ததாக சொல்லப்படும் அந்த பையில் ஏர் கன் (டாய் கன்) ஒன்று இருந்தது. பார்ப்பதற்கு நிஜ துப்பாக்கி, தோட்டாக்கள் போலவே இருந்துள்ளது.

"தேர்தலில் வாக்களார்களுக்கு நிச்சயமாக பண பட்டுவாடா செய்வோம். அந்தப் பணத்தை ரெய்டு நடத்தி பறிமுதல் செய்தால், இனி டாய் கன் வராது. நிஜ துப்பாக்கியே உன்னை கொல்லும்" என்று வந்திதாவை மிரட்டும் தொனியில் இருந்தது இந்த சம்பவம்.

"சீனியர் அமைச்சர் ஒருவரின் பினாமியான அன்புநாதனிடம் சமீபத்தில் நாலே முக்கால் கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்ததில் வந்திதாவுக்கு பெரும் பங்கு உண்டு. இந்த விஷயத்தில் அன்புநாதன், வந்திதா மீது கோபமாய் இருப்பார். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி அன்புநாதனின் அரசியல் எதிரிகளே டாய் கன் அனுப்பிவிட்டு, பழியை அன்புநாதன் மீதே போடுகிறார்களோ?" என்கிற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. டாய் கன் கொண்டுவந்த வெங்கடேஷனும் முன்னுக்குப்பின் முரணாக பேசுகிறார். தீர விசாரித்து வருகிறோம்" என்கிறார் கரூரை சேர்ந்த அதிகாரி ஒருவர்.

இன்னொரு பக்கம், சிவகங்கை சிறுமி விவகாரத்தில், வந்திதாவால் பாதிக்கப்பட்ட போலீஸ் உயர் அதிகாரிகளின் தூண்டுதல் காரணமாக கொலை முயற்சி நிஜமாகவே நடந்ததா? என்ற கோணத்திலும் போலீஸ் விசாரணை நடக்கிறது. கரூர் வருவதற்கு முன்பு சிவகங்கையில் வந்திதா ஏ.எஸ்.பி-யாக பணியாற்றினார். தெற்கு மண்டல போலீஸ் உயர் அதிகாரிகள் சிலர், சிவகங்கை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து சித்ரவதை செய்ததாக புகார் எழுந்தது. போலீஸ் சரிவர நடவடிக்கை எடுக்காததால், விவகாரம் நீதிமன்றத்துக்குப் போனது.

அந்த காலகட்டத்தில், அந்த சிறுமியிடம் வாக்குமூலம் வாங்கியவர் வந்திதா. அந்த வாக்குமூலத்தில் தன்னை பலாத்காரம் செய்த போலீஸ் அதிகாரிகள் பெயர்களை எல்லாம் அந்த சிறுமி பட்டியல் போட்டு சொல்லி இருந்தார். அதன்பின்பு சிறுமியின் வாக்குமூலத்தில் சிக்கிக்கொண்ட போலீஸ் அதிகாரிகள், வந்திதாவுக்கு குடைச்சல் கொடுத்து தங்கள் பெயர்களை நீக்கச் சொல்லி வற்புறுத்த, கறாராக மறுத்து விட்டார், வந்திதா. அதுமட்டுமல்ல மேலதிகாரிகள் கொடுத்த நெருக்கடியைத் தாண்டி முறையாக, நேர்மையாக சிறுமியின் வாக்குமூலத்தை எங்கு சேர்க்க வேண்டுமோ அங்கே கொண்டுபோய் சேர்த்தார். அந்த கோபத்தில் மாட்டிக் கொண்ட போலீஸ் அதிகாரிகள் சிலர், கூட்டணி அமைத்து வந்திதாவுக்க்கு நெருக்கடி கொடுத்தனர். அந்த சிறுமியிடம் வாக்குமூலம் வாங்கியதால், இவரின் சாட்சி வழக்கிற்கு முக்கியமானதாக அமைந்தது. திடீரென வந்திதாவை பதவி உயர்வு என்கிற பெயரில் சிவகங்கையை விட்டு கரூருக்கு மாற்றினர்.

சில நாட்களுக்கு முன்பு, கரூரில் நத்தம் விஸ்வநாதன் பினாமியான அன்புநாதனிடம் வந்திதா முன்னிலையில் ரெய்டு நடந்தபோது, அவரிடமிருந்து நாலே முக்கால் கோடி ரூபாயை பறிமுதல் செய்தது பாண்டேதான். அப்போதும் மேலிடத்தில் இருந்து பிரஷர் வந்தது. அதுபற்றி எதுவும் கவலைப்படாமல் துணிச்சலாக நடவடிக்கை எடுத்தார். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க காத்திருந்த வேறுசில அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களின் கோபத்துக்கும் பாண்டே ஆளானார். அதன் பிறகுதான், வந்திதாவைப் பறறிய அவதூறு செய்திகள் றெக்கைக் கட்டிப் பறக்க ஆரம்பித்தன.

இப்போது வந்திதா பாண்டே விவகாரத்தை டிஐஜி அருண், ஐஜி செந்தாமரைக் கண்ணன் இருவரும் கையில் எடுத்து விட்டனர். சைபர் க்ரைம் நிபுணர்கள் உதவியுடன் முதலில் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் கொடுத்தது யார்? என்று துப்பறிய ஆரம்பித்து விட்டனர். முதலில் "வந்திதா மீது துப்பாக்கிச் சூடு என்ற செய்தியை பரப்பியது யார்?" ன்கிற கேள்விக்கு விடை காணும் வேலையில் பிஸியாகிவிட்டனர். ஐ.ஜி -யான செந்தாரைக்கண்ணன், வீரப்பன் ஆப்ரேஷனில் மூளையாக செயல்பட்டவர். உளவுவேலை பார்ப்பதில் கில்லாடி. வந்திதா விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்து தோண்ட ஆரம்பித்து கரூரை சேர்ந்த மர்ம ஆசாமிகளை தங்களின் கண்கானிப்பு வளையத்துக்குள் கொண்டுவந்து விட்டனர். இன்னும் ஓரிரு
நாளில் உண்மையான குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்று போலீஸ் மேலிடம் சொல்கிறது.

- ஆர்.பி, எம். குணா, விகடன்


யார் இந்த வந்திதா பாண்டே? - ஒரு கண்டிப்பு காக்கியின் பின்னணி  Mயார் இந்த வந்திதா பாண்டே? - ஒரு கண்டிப்பு காக்கியின் பின்னணி  Aயார் இந்த வந்திதா பாண்டே? - ஒரு கண்டிப்பு காக்கியின் பின்னணி  Dயார் இந்த வந்திதா பாண்டே? - ஒரு கண்டிப்பு காக்கியின் பின்னணி  Hயார் இந்த வந்திதா பாண்டே? - ஒரு கண்டிப்பு காக்கியின் பின்னணி  U



யார் இந்த வந்திதா பாண்டே? - ஒரு கண்டிப்பு காக்கியின் பின்னணி  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

யார் இந்த வந்திதா பாண்டே? - ஒரு கண்டிப்பு காக்கியின் பின்னணி  Empty Re: யார் இந்த வந்திதா பாண்டே? - ஒரு கண்டிப்பு காக்கியின் பின்னணி

Post by balakarthik Thu Apr 28, 2016 5:51 pm

லேடி சகாயம் வெல்டன் யார் இந்த வந்திதா பாண்டே? - ஒரு கண்டிப்பு காக்கியின் பின்னணி  103459460 யார் இந்த வந்திதா பாண்டே? - ஒரு கண்டிப்பு காக்கியின் பின்னணி  103459460 யார் இந்த வந்திதா பாண்டே? - ஒரு கண்டிப்பு காக்கியின் பின்னணி  103459460


ஈகரை தமிழ் களஞ்சியம் யார் இந்த வந்திதா பாண்டே? - ஒரு கண்டிப்பு காக்கியின் பின்னணி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

யார் இந்த வந்திதா பாண்டே? - ஒரு கண்டிப்பு காக்கியின் பின்னணி  Empty Re: யார் இந்த வந்திதா பாண்டே? - ஒரு கண்டிப்பு காக்கியின் பின்னணி

Post by சரவணன் Thu Apr 28, 2016 9:24 pm

இதை எல்லாம் எந்த செய்தியும் தொலைகாட்சியில் வரவில்லை..


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

யார் இந்த வந்திதா பாண்டே? - ஒரு கண்டிப்பு காக்கியின் பின்னணி  Empty Re: யார் இந்த வந்திதா பாண்டே? - ஒரு கண்டிப்பு காக்கியின் பின்னணி

Post by krishnaamma Thu Apr 28, 2016 11:44 pm

உயர் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட வி.ஐ.பி-க்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிவகங்கை சிறுமியிடம், உண்மையில் நடந்ததை வாக்குமூலமாக வாங்கி, அதை சட்டப்படி பதிவு செய்தவர்.

எங்கே மாற்றல் செய்தாலும், ஒருபோலிஸ் பதிவு செய்த கேசை, அதாவது அவங்க கேசை அவங்க தான் முடிக்கணும் என்று சட்டம் கொண்டுவந்தால் , மாற்றல் கொடுப்பவர்களின் கொட்டம் அடங்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

யார் இந்த வந்திதா பாண்டே? - ஒரு கண்டிப்பு காக்கியின் பின்னணி  Empty Re: யார் இந்த வந்திதா பாண்டே? - ஒரு கண்டிப்பு காக்கியின் பின்னணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
» தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்.. யார் இவர்.. இவரது முழு பின்னணி
» 6 ஆண்டுகளில் 5வது இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்: பிரிட்டனில் இந்த இசை நாற்காலி விளையாட்டின் பின்னணி என்ன?
» "யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!
» யார் இந்த அம்ருதா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum