ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

80 வயதிலும் இணையற்ற சாதனை!

5 posters

Go down

80 வயதிலும் இணையற்ற சாதனை! Empty 80 வயதிலும் இணையற்ற சாதனை!

Post by ayyasamy ram Tue Apr 26, 2016 9:43 am

80 வயதிலும் இணையற்ற சாதனை! I0mno6HTSoOKh5XEDmx7+ga1
-
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலைஅமைப்பின்
சார்பில் சமீபத்தில் தில்லியில் நடைபெற்ற
மாபெரும் உலக கலாசாரத் திருவிழாவில்,
1700 பேர் பங்கேற்ற பிரம்மாண்டமான பரத
நாட்டிய நிகழ்ச்சியை வடிவமைத்து சாதனை
புரிந்துள்ளார் பிரபல பரதநாட்டிய கலைஞர்
சரோஜா வைத்தியநாதன்.

பத்மஸ்ரீ, பத்மபூஷண், கலைமாமணி, சங்கீத நாடக
அகாடமி, தில்லி சாஹித்ய கலா பரிஷித், காளிதாஸ்
சம்மேளன், போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ள
80 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த
நாட்டியமணி, சாதனைகள் படைப்பதற்கு வயது ஒரு
தடையில்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

தில்லியிலுள்ள கணேச நாட்டியாலயாவின் நிறுவனரும்,
தலைவருமான சரோஜா வைத்தியநாதனைச் சந்தித்து,
'வாழும் கலை அமைப்பின் சார்பில் மார்ச் 11-12
தேதிகளில் தில்லியில் நடைபெற்ற உலக கலாசாரத்
திருவிழாவில் தாங்க வடிவமைத்த பிரம்மாண்டமான
நடன நிகழ்ச்சி பலத்த பாராட்டுதல்களைப் பெற்றது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

80 வயதிலும் இணையற்ற சாதனை! Empty Re: 80 வயதிலும் இணையற்ற சாதனை!

Post by ayyasamy ram Tue Apr 26, 2016 9:46 am

80 வயதிலும் இணையற்ற சாதனை! YaD07N9ES0CuOO4FoRP0+ganesa_natyalaya_indian_dance_classes_delhi-39
-
அதுகுறித்து தங்களின் அனபவங்களை எங்களுடன்
பகிர்ந்து கொள்ளலாமே..' என்று கேட்டோம்.

இந்த நிகழ்ச்சிக்காக ஆறு மாதங்களுக்கு முன்பே
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் என்னை தொடர்பு கொண்டார்.
ஏற்கெனவே பல நடன நிகழ்ச்சிகளை வடிவமைத்த
அனுபவம் எனக்கு இருந்தாலும் 1700 பேர்களை
ஒன்று சேர்க்க வேண்டும் என்றவுடன்
மலைப்பாகத்தான் இருந்தது.

தமிழகத்தின் சென்னை உட்பட பல ஊர்களிலும்,
புதுச்சேரி, அஸ்ஸாம், புனே, லக்னோ, முசொரி,
பெங்களூரு, தில்லி போன்ற இடங்களிலும், பரத
நாட்டியப் பள்ளிகள் நடத்தும் ஆசிரியர்களைத்
தொடர்பு கொண்டேன். ஆடவேண்டிய இரண்டு
உருப்படிகளையும் வீடியோவில் பதிவு செய்து
எல்லா ஊர்களுக்கும் அனுப்பினேன்.

எந்த நிறத்தில், எப்படி உடை தைக்க வேண்டும்,
என்னென்ன ஆபரணங்கள் அணிந்து கொள்ள
வேண்டும் என்று விவரமாகப் படங்கள் மூலம்
விளக்கினேன்.

இரண்டு நாட்களுக்கு முன்பே தில்லிக்கு வந்த
1700 பேர்களை ஒன்றுதிரட்டி ஒத்திகை பார்ப்பது
பிரம்மப்பிரயத்தனமாகவே இருந்தது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

80 வயதிலும் இணையற்ற சாதனை! Empty Re: 80 வயதிலும் இணையற்ற சாதனை!

Post by ayyasamy ram Tue Apr 26, 2016 9:47 am

80 வயதிலும் இணையற்ற சாதனை! HGkN1gLSZyTmlNXjf6vG+gal2
-

இந்த நிகழ்ச்சியை அரங்கேற்றியதில் தாங்கள்
சந்தித்த சவால்கள் என்னென்ன?


பள்ளித் தேர்வு நேரம் என்பதால் நடனம் ஆடுவதற்குக்
குழந்தைகளை வரவழைப்பதே கடினமாக இருந்தது.
யமுனை நதிக்கரையில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் நடை
பெற்ற இந்த மாபெரும் விழாவிற்கு சுற்றுச்சூழல்
சம்பந்தமாக பலத்த எதிர்ப்பு; விழா நடக்குமா என்று
கடைசி வரையில் சந்தேகம்.

நிகழ்ச்சிக்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பு,
இரண்டு முறை மழை வேறு கொட்டித் தீர்த்து விட்டது.
அங்கு குழுமியிருந்த லட்சக்கணக்கான மக்களும்,
37000 கலைஞர்களும் தொப்பமாக நனைத்துவிட்டார்கள்.
ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டிருந்த மேடை
சேரும் சகதியுமாக ஆகிவிட்டிருந்தது. ஆடும்போது யாரும்
வழுக்கி விழுந்து விடக்கூடாதே என்ற கவலை ஒரு பக்கம்,
இவை எல்லாவற்றையும் கடந்து,

1700 பேரும் ஈர உடையில் 'ஆங்கிகம் புவனம் யஸ்யா'
மற்றும் 'குரு பிரும்மா குரு விஷ்ணு' என்ற சுலோகங்களுக்கு
மிகப் பிரமாதமாக ஆடிவிட்டார்கள்.

இந்நிகழ்ச்சியை உலகம் முழுவதிலும் உள்ள மக்கள்
தொலைக்காட்சிகள் மூலமாகவும், 150 நாடுகளிலிருந்து
வந்திருந்த தலைவர்கள் மற்றும் பத்து இலட்சம் மக்கள்
நேரிலும் கண்டு களித்தார்கள்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

80 வயதிலும் இணையற்ற சாதனை! Empty Re: 80 வயதிலும் இணையற்ற சாதனை!

Post by ayyasamy ram Tue Apr 26, 2016 9:55 am

80 வயதிலும் இணையற்ற சாதனை! Vyy9CwORPKqj5EPYEuBQ+dance
-
80 வயதிலும் இணையற்ற சாதனை! BesLkX3XSiaUqXa9dSOv+2016_3$largeimg116_Mar_2016_184622070gallery
-


தங்களது இளமை பருவம் பற்றி?


நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை திருவல்லிக்
கேணியில்தான். பாலசரஸ்வதி, கமலா லக்ஷ்மணன்
போன்றவர்களின் நடனத்தால் கவரப்பட்டு, ஏழாவது வயதில்
சென்னை சரஸ்வதி கான நிலையத்தில் நடனப் பயிற்சியைத்
தொடங்கினேன். எனது குரு லலிதா, தஞ்சாவூர்
காட்டுமன்னார்குடி முத்துக்குமரனின் சிஷ்யை. குடும்பப்
பெண்கள் நாட்டியம் ஆடுவதை அவ்வளவாக விரும்பாத
அன்றைய காலகட்டத்திலும், எனது தாயார் கனகமும்,
தந்தை தர்மராஜனும் என் ஆசைக்குத் தடைபோடவில்லை.

பன்னிரெண்டாவது வயதில் அரங்கேற்றம் செய்தேன்.
பேராசிரியர் சாம்பாமூர்த்தியிடம் கர்நாடகச் சங்கீதமும்
கற்றுக் கொண்டேன். சென்னைப் பல்கலைக் கழகத்திலிருந்து
இசையில் டிப்ளமோ பெற்றுள்ளேன்...

பதினாறு வயதிலேயே எனக்குத் திருமணமாயிற்று.
கணவர் வைத்தியநாதன் ஐ.ஏ.எஸ்., அதிகாரி. 1972ஆம் ஆண்டு
தில்லிக்கு வந்த பிறகுதான் முழுமூச்சாக இந்தக் கலைபணியில்
இறங்கினேன்.

தங்களது நாட்டியப் பள்ளியைப் பற்றி..?

1974ல் தொடங்கப்பட்ட கணேச நாட்டியாலயா நடனப் பள்ளி,
1988லிருந்து தெற்கு தில்லியில் சொந்தக் கட்டடத்தில் இயங்கி
வருகிறது. எனது நாட்டியப் பள்ளியில் பயில்பவர்களில்
பெரும்பாலானோர் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களே.
உலக நாடுகள் பலவற்றிலிருந்து நேரடியா ஐசிசிஆர்
மூலமாகவும் வந்து எங்கள் பள்ளியில் பயிலுகிறார்கள்.

என்னிடம் பயின்றவர்கள், இந்தியா ம்டடுமின்றி, உலகின் பல
இடங்களிலும் பரதநாட்டிய வகுப்புகள் நடத்தி வருகிறார்கள்.


மறக்க முடியாத அனுபவம்?


எனது இரண்டாவது மருமகள் ரமா வைத்தியநாதன்,
சிறந்த பரதநாட்டிய கலைஞர். எனது பேத்தி தட்சிணா
வைத்தியநாதன், வளர்ந்து வரும் நாட்டியமணி,

ஒரே மேடையில் மாமியார், மருமகள், பேத்தி என்று மூன்று
தலைமுறைகளைச் சார்ந்த நாங்கள் சேர்ந்து ஆடியதும், எனது
பேத்தி தட்சிணாவுடன் பாட்டியும், பேத்தியமாக ஆப்பிரிக்காவில்
ஆடியதும் மறக்க முடியாத அனுபவங்கள்.

-
--------------------------------
- ரமாமணி சுந்தரம்
கல்கி
புகைப்படங்கள் - இணையம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

80 வயதிலும் இணையற்ற சாதனை! Empty Re: 80 வயதிலும் இணையற்ற சாதனை!

Post by krishnaamma Tue Apr 26, 2016 11:44 pm

நல்ல பகிர்வு, படங்களைத்தான் பார்க்க முடியவில்லை அண்ணா சோகம்........இப்போ தான் போன மாதம் வீணைக் கலைஞர்களை வைத்து பெங்களூரில் ஒரு நிகழ்ச்சி நடத்தினார்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

80 வயதிலும் இணையற்ற சாதனை! Empty Re: 80 வயதிலும் இணையற்ற சாதனை!

Post by சசி Wed Apr 27, 2016 8:20 am

நல்ல பகிர்வு ஐயா. சவால்களை சந்திக்க வயது தடை இல்லை என்பதற்கு சான்று.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

80 வயதிலும் இணையற்ற சாதனை! Empty Re: 80 வயதிலும் இணையற்ற சாதனை!

Post by M.Jagadeesan Wed Apr 27, 2016 9:06 am

படம்போட முடியல ; படம்பார்க்க முடியல
...படிக்கின்ற செய்திக்குப் படமே உயிராகும் !
புடம்போட்ட தங்கமென இருக்கின்ற  ஈகரையில்
...புகுந்த சிக்கலுக்கு ஏன்இன்னும் தீர்வில்லை ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

80 வயதிலும் இணையற்ற சாதனை! Empty Re: 80 வயதிலும் இணையற்ற சாதனை!

Post by krishnaamma Wed Apr 27, 2016 9:59 am

M.Jagadeesan wrote:படம்போட முடியல ; படம்பார்க்க முடியல
...படிக்கின்ற செய்திக்குப் படமே உயிராகும் !
புடம்போட்ட தங்கமென இருக்கின்ற  ஈகரையில்
...புகுந்த சிக்கலுக்கு ஏன்இன்னும் தீர்வில்லை ?
மேற்கோள் செய்த பதிவு: 1204819

சிவாவிடமும் ராஜாவிடமும் சொல்லி இருக்கு ஐயா, தீர்வு விரைவில் வரும் என்று நினைக்கிறேன் புன்னகை...கொஞ்சம்காத்திருப்போம் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

80 வயதிலும் இணையற்ற சாதனை! Empty Re: 80 வயதிலும் இணையற்ற சாதனை!

Post by T.N.Balasubramanian Wed Apr 27, 2016 12:15 pm

ஸ்ரீமதி சரோஜா வைத்யநாதன் அவர்களுக்கு நன்றி நன்றி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

80 வயதிலும் இணையற்ற சாதனை! Empty Re: 80 வயதிலும் இணையற்ற சாதனை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum