புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_vote_lcapசிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_voting_barசிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_vote_rcap 
60 Posts - 46%
ayyasamy ram
சிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_vote_lcapசிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_voting_barசிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_vote_rcap 
54 Posts - 41%
T.N.Balasubramanian
சிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_vote_lcapசிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_voting_barசிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_vote_rcap 
3 Posts - 2%
mohamed nizamudeen
சிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_vote_lcapசிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_voting_barசிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_vote_rcap 
3 Posts - 2%
Balaurushya
சிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_vote_lcapசிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_voting_barசிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_vote_rcap 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
சிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_vote_lcapசிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_voting_barசிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_vote_rcap 
2 Posts - 2%
Karthikakulanthaivel
சிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_vote_lcapசிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_voting_barசிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_vote_rcap 
2 Posts - 2%
prajai
சிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_vote_lcapசிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_voting_barசிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_vote_rcap 
2 Posts - 2%
Manimegala
சிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_vote_lcapசிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_voting_barசிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
சிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_vote_lcapசிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_voting_barசிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_vote_lcapசிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_voting_barசிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_vote_rcap 
420 Posts - 48%
heezulia
சிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_vote_lcapசிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_voting_barசிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_vote_rcap 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
சிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_vote_lcapசிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_voting_barசிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_vote_rcap 
72 Posts - 8%
T.N.Balasubramanian
சிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_vote_lcapசிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_voting_barசிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_vote_rcap 
32 Posts - 4%
mohamed nizamudeen
சிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_vote_lcapசிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_voting_barசிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_vote_rcap 
28 Posts - 3%
prajai
சிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_vote_lcapசிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_voting_barசிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_vote_lcapசிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_voting_barசிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
சிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_vote_lcapசிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_voting_barசிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_vote_rcap 
5 Posts - 1%
Ammu Swarnalatha
சிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_vote_lcapசிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_voting_barசிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_vote_rcap 
3 Posts - 0%
ayyamperumal
சிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_vote_lcapசிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_voting_barசிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம்

ManiThani
ManiThani
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 18/03/2015

PostManiThani Sun Apr 24, 2016 2:43 pm

ஆர்.பாலகிருஷ்ணன். ஐ.ஏ.எஸ் ஒடிஸா அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். மதுரையில் தமிழ் இலக்கியம் பயின்ற பாலகிருஷ்ணன் தமிழில் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இடப் பெயர்களின் ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். சிந்துவெளி ஆய்வு பற்றிய தன் கட்டுரையை கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்ப்போலா போன்ற அறிஞர்கள் முன்னிலையில் சமர்பித்துள்ளார். அக்கட்டுரை சிந்துவெளி ஆய்வுலகில் மிகுந்த பாராட்டினைப் பெற்றுள்ளது.

தனது சிந்து சமவெளி ஆய்வுகளை முடிப்பதற்காக அரசு பணியிலிருந்து இரண்டு ஆண்டுகள் விடுப்பு எடுத்துக் கொண்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் தலைமையில் இயங்கும் Indus Research Centre, Roja Muthiah research library .Chennai ல் ஆய்வுப் பணியினை மேற்கொண்டுள்ளார்.

The High West Low East Dichotomy of Indus Cities : A Dravidian Paradigm என்ற இவரது ஆய்வுக்கட்டுரை சிறுநூலாக Indus Research Centre மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

சிந்துசமவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் பாய்ச்சிய ஆர் பாலகிருஷ்ணனின் ஆய்வுமுடிவுகள் மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளன. இவர் முன்வைக்கும் திராவிடச்சான்றுகளை ஏற்றுக் கொள்ள மறுத்து சில ஆய்வாளர்கள் எதிர்வாதம் செய்வதும் தொடர்ந்து வருகிறது.

இடப்பெயர் ஆய்வுகள் மற்றும் சிந்துசமவெளி ஆய்வின் மூலம் உலக அளவில் தன் கவனத்தை ஈர்த்துள்ள ஆர்.பாலகிருஷ்ணன். ஐ.ஏ.எஸ் தமிழ் சமூகத்தின் பெருமைக்குரிய ஆளுமையாக விளங்குகிறார். அவருக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள்.

------------------------------------
சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்– ஆர்.பாலகிருஷ்ணன்

1980களில், ஒரிசாவில் நான் பார்த்த ஒரு ஊரின் பெயர்ப் பலகை என்னை தடுத்து நிறுத்தியது. அந்த பெயர் ‘தமிழி’. குவி என்கிற திராவிட மொழி பேசும் பழங்குடிகள் வசிக்கும் அந்த ஊருக்குள் என் கால்கள் என்னையும் அறியாமல் சென்றன. அதிலிருந்து ஊர்ப் பெயர்கள் மீது காதல் கொண்டேன்.

எங்கு மாறுதலாகிச் சென்றாலும் ஊர்ப் பெயர்கள் அடங்கிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் புத்தகங்களைத் தூக்கிச் சென்றேன்.மானுட வரலாறு என்பது பயணங்களால், இடப் பெயர்வுகளால் ஆனது. மனிதன் ஒரு ஊரை விட்டு இடம்பெயரும்போது, அவனது நினைவுகளைச் சுமந்து செல்கிறான். புதிய இடத்தில் குடியேறும்போது, பழைமையுடன் தொடர்புகொள்ளும் விதத்தில் தன் ஊர்ப் பெயரை அங்கே வைக்கிறான். இது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிற சமூக உளவியல். அப்படி அவன் விட்டுச் சென்ற ஊர்ப்பெயர்களும், சுமந்து சென்ற ஊர்ப் பெயர்களும் சொல்வது மனித குலத்தின் வரலாறு.

ஈரானில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஏராளமான ஊர்ப் பெயர்கள், அப்படியே ஒரிசாவில் கொனார்க்கில் உள்ள சூரியக்கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களில் இருப்பதைக் கண்டேன். இதன் சாத்தியம் என்னை ஆச்சரியப்படுத்தியது.பின்னர், தமிழ்நாடு – கேரள எல்லையில் உள்ள இடுக்கி, பழனி, குமுளி, தேனி, தேக்கடி, கம்பம், போடி போன்ற ஊர்ப் பெயர்கள், மத்தியப்பிரதேசம் மற்றும் வடமாநிலங்களில் இருப்பதைக் கண்டேன்.இன்னொரு ஆச்சரியமான விஷயம் – ஒரிசாவுக்கும் நைஜீரியாவுக்கும் உள்ள ஒற்றுமை. ஒரிசா – ஆந்திர எல்லையில் உள்ள கொராபுட் மாவட்டத்தில் உள்ள சுமார் 463 ஊர்களின் பெயர்கள் அப்படியே நைஜீரியாவில் உள்ளன.

ஆதிமனிதன் முதன்முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றினான் என்றும், பின்னர் அங்கிருந்து பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தான் என்றும் இன்றைக்கு நவீன மரபியல் ஆய்வுகள் சொல்வது, இந்த இடப் பெயர்வுடன் பெரிதும் பொருந்துகிறது.

இது பற்றிய எனது கட்டுரை உலக அளவில் பலராலும் எடுத்தாளப்படுகிறது.சுமார் 9ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள் இரவு. சிந்து சமவெளி நாகரிகம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் (தற்போதைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிழக்கு ஈரான் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில்) உள்ள பல்வேறு ஊர்களின் பெயர்களை கணினியில் சேமித்து, அவற்றில் தமிழகத்தின் பழங்கால ஊர்ப்பெயர்கள் ஏதேனும் இருக்குமா என்று தேடிக்கொண்டிருந்தேன்.நான் முதலில் தேடிய பெயர் ‘கொற்கை’. ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் ‘கொற்கை’ என்ற பெயரில் ஊர்ப்பெயர் இருக்கிறது என்றது கணினி. முதலில் இதை ஒரு விபத்து என்றே கருதினேன்.அடுத்து ‘வஞ்சி’ என்ற ஊர்ப்பெயரைத் தேடினேன். அதுவும் அங்கே இருந்தது. எனக்குள் சுவாரஸ்யம் பெருகிற்று.தொண்டி, முசிறி, மதிரை(மதுரை), பூம்புகார், கோவலன், கண்ணகி, உறை, நாடு, பஃறுளி… என பழந்தமிழ் இலக்கியத்தில் வரும் பெயர்களை உள்ளிட்டுக் கொண்டே இருந்தேன். நூற்றுக்கும் மேற்பட்ட அத்தகைய பெயர்கள் இப்போதும் பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தானில் இருப்பதை கணினி காட்டிக் கொண்டே இருந்தது…4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக செழித்து விளங்கி, பின் காணாமல் போன சிந்து சமவெளி நாகரிகம், 1924-ல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த நாகரிகம் விளங்கிய இடத்தில் வாழ்ந்த மக்கள் யார்? அவர்கள் என்ன மொழி பேசினார்கள்? ஏன் அந்த நாகரிகம் மண்ணோடு மண்ணானது? யாருக்கும் தெரியாது. ஆனால், அந்த நாகரிகம் விளங்கிய பகுதிகளில் இருக்கும் ஊர்கள் இன்றும் தமிழ்ப் பெயர்களை தாங்கி நிற்கின்றன.எனில், சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும், சங்கத் தமிழ்ப் பண்பாடு தொட்ட இடமும் ஒன்றுதான்.

சுமார் 4ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சிந்துவெளிப் பண்பாடு அழிந்தது. தமிழகத்தில் கிடைத்துள்ள அகழாராய்வு முடிவில் கி.மு.800 வரையிலான சான்றுகள் கிடைத்துள்ளன. அதற்கு முந்தைய ஒரு 1000 ஆண்டுகள் இடைவெளியை பின்னோக்கி ஆய்வுகள் மூலம் சென்று நிரப்பினால் சிந்துவெளிப் புதிரை அவிழ்த்து விடலாம்.பழந்தமிழர் வாழ்வுடன் தொடர்புடைய அவர்களின் தொன்மங்களுடன் தொடர்புடைய பெயர்கள் இன்று சிந்துவெளியில் கிடைத்திருப்பது ஏதோ விபத்தால் நிகழ்ந்தது அல்ல என்றே கருதுகிறேன்.

கிடைத்திருப்பது ஓர் ஊர்ப்பெயர் மட்டுமல்ல; சங்க இலக்கியத்தில் உள்ள அவ்வளவு பெயர்களும் அங்கு இருக்கின்றன. (வரைபடத்தைக் காண்க.)இடப்பெயர்வு நடந்திருக்கலாம். அங்கிருந்து இங்கு மனிதர்கள் புலம்பெயர்ந்து வந்திருக்கலாம். கொஞ்சம் பேர் அங்கிருந்து புலம் பெயர்ந்த பின், மிச்சம் இருந்தவர்கள் அங்கே வந்தவர்களுடன் கலந்து தங்கள் மொழியை, தனி அடையாளங்களைஇழந்திருக்கலாம். ஆனாலும் இன்னமும் அந்த ஊர்ப்பெயர்கள் மட்டும் தப்பிப் பிழைத்திருப்பதாக வைத்துக் கொள்ளலாம்.

அங்கிருந்து கிளம்பி வந்தவர்கள் புதிதாக குடியேறிய இடத்தில் பழைய நினைவுகளை தங்கள் ஊர்ப்பெயர்களாக வைத்திருக்கலாம். கொற்கை, வஞ்சி, தொண்டி, காஞ்சி எல்லாமே இப்படி இருக்கலாம்.சங்ககாலப் புலவர்கள் சமகால நிகழ்வுகளை மட்டும் இலக்கியத்தில் பதிவு செய்யவில்லை. அவர்களது காலத்திற்கு முற்பட்ட காலத்து பழைய நிகழ்வுகளையும் வாய்மொழி மரபுகளையும் தங்களது பாடல்களில் பதிவு செய்துள்ளார்கள். அவை வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம் என்கிற பரப்புக்குள் தமிழர் இருப்பைச் சொல்கிறவை மட்டுமல்ல. அவை சொல்லும் தொன்மங்கள் இந்த எல்லையைக் கடந்தவை.

சங்க இலக்கியத்தில் “வான் தோய் இமயத்து கவரி” என்று வரும். கவரி என்பது இமயத்தின் உச்சியில் திபெத் பக்கமாக வாழும் யாக் என்கிற விலங்கு. இந்த கவரி ஒரு வகை வாசனை மிகுந்த புற்களைத் தேடித்தேடி உண்ணும் என்றும் சங்க இலக்கியம் சொல்கிறது. இன்று இந்த யாக் விலங்கின் பால், ஒரு வகைப் புல்லை உண்பதால் மிகுந்த வாசனையுடன் இருப்பதாகவும், அதை ‘யாக் தேநீர்’ என்று விளம்பரப்படுத்தி திபெத்தில் விற்கிறார்கள் என்றும் அறிகிறோம். எங்கோ குளிர் பிரதேசத்தில் இருக்கும் யாக் விலங்கு பற்றி சங்ககால கவிஞனுக்கு எப்படித் தெரிந்தது? பழைய நினைவுகள், கதைகள், தொன்மங்களின் எச்சங்கள் அவனுக்கு இதை சாத்தியமாக்கி இருக்கலாம்.(வள்ளுவர் “மயிர் நீப்பின் உயிர்வாழா கவரிமான்” என எழுதியிருப்பதாக பரவலாக ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் அவர் “கவரிமான்” என்று சொல்லவில்லை. “கவரிமா” என்றுதான் சொல்கிறார். மா என்பது விலங்குகளைக் குறிக்கும் பொதுச் சொல்.

கி.பி.535 வாக்கில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆசியாவின் பல பகுதிகளில் பயணம் செய்த காஸ்மாஸ் இண்டிகோப்லுஸ்டெஸ் என்ற ஐரோப்பியப் பயணி, “வால்முடியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தனது உயிரையே விடத் தயாராக இருக்கும் விலங்கான கவரி” பற்றி தனது நூலில் குறிப்பிடுகிறார்.)தமிழர்களின் ஐந்திணைகளில் பாலையும் ஒன்று. நம்மிடம் அந்த நிலப்பரப்பு இல்லை. ஆனால் அகநானூற்றில் மருதன் இளநாகனார், “உணவுக்கே வழியில்லாத பாலையில் ஒட்டகம் எலும்பைத் தின்னும்” எனக் குறிப்பிடுகிறார். இது ஒட்டகம் வளர்க்கும் தார் பாலைவனத்தில் உள்ளவர்களுக்கே தெரிந்த செய்தி. தொல்காப்பியர், ஒட்டகத்தின் குட்டியை கன்று என்று சொல்ல வேண்டும் என இலக்கணம் வகுக்கிறார். உறையூர் மணல்மாரியால் மூடியதால் சோழர்கள் இடம் பெயர்ந்ததாக பழந்தமிழ் மரபுகள் சொல்கின்றன. மணல்மழை பாலைவனத்தில் தான் சாத்தியம்.

இன்னொரு உதாரணம் சொல்கிறேன். “பொன்படு கொங்கானம்” என்ற வரி. கொங்கணம் அதாவது கோவா, மகாராஷ்டிரப் பகுதி. இப்போதைய கொங்கண் பகுதியில் உள்ள டைமாபாத் என்ற இடத்தில் சிந்துவெளி நாகரிகக் கூறுகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.ஆக, சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும் தமிழ்ச் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாக இருக்கக் கூடும் என்றே கருதுகிறேன்.தமிழனின் பழைய வரலாறு என்ன என்கிற கேள்வியும், சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் யார் என்கிற கேள்வியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.ஊர்ப் பெயர்கள் சாகா வரம் பெற்றவை. அவை புலம்பெயரும் மனிதனின் நினைவோடு சென்று உயிர் பெறுகின்றன. பிறதுறை ஆய்வுகளின் உதவியுடன் செய்யப்படுகிற அறிவுப்பூர்வமான ஆய்வுகள், இந்திய வரலாற்றை உண்மையின் ஒளி கொண்டு மீட்டெடுக்க வழி செய்யும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.

•••

http://www.sramakrishnan.com/?p=5402

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 24, 2016 4:42 pm

பகிர்வுக்கு நன்றி சிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் 3838410834 நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 25, 2016 12:10 am

பகிர்வுக்கு நன்றி !............ நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக