ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏப்ரல் 23: எஸ்.ஜானகி 78-வது பிறந்த தினம்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஏப்ரல் 23: எஸ்.ஜானகி 78-வது பிறந்த தினம் Empty ஏப்ரல் 23: எஸ்.ஜானகி 78-வது பிறந்த தினம்

Post by ayyasamy ram Sat Apr 23, 2016 7:39 am

ஏப்ரல் 23: எஸ்.ஜானகி 78-வது பிறந்த தினம் 6I8TSQhQS7Gf6PNKOX0J+janagi_2824139g
-
ஏப்ரல் 23: எஸ்.ஜானகி 78-வது பிறந்த தினம் –
காற்றை கவுரவப்படுத்தும் குரல்!

சிறுவயது கமல் ஹாசன் தன் பிஞ்சு உதடுகளை
அசைத்துத் திரையில் பாடும் `அம்மாவும் நீயே
அப்பாவும் நீயே’என்னும் பாடலுக்கு
எம்.எஸ். ராஜேஸ்வரியின் குரல் அவ்வளவு
பொருத்தமாக இருக்கும்.

இந்த மழலைக் குரலைக் கேட்டாலே சந்தோஷம்
பொங்கும். களத்தூர் கண்ணம்மாவுக்குப் பிறகு,
`மௌன கீதங்கள்’படத்தில் ‘டாடி.. டாடி.. ஓ மை
டாடி உன்னைக் கண்டாலே ஆனந்தமே…’
பாடலைக் கேட்கும்போதுதான் மீண்டும் அத்தகைய
சந்தோஷம் பொங்கியது.

காரணம், காற்றை கவுரவப்படுத்தும் அந்தக் குரல்
எஸ்.ஜானகினுடையது!

குழந்தையின் குரலா, குமரியின் குரலா, காதலியின்
ஏக்கமா, காதலனோடு கிறக்கமா, `பழைய நெனப்புடா
பேராண்டி.. பழைய நெனப்புடா..’ எனப் பாடும்
கிழவியின் விசனமா? இப்படி எந்த உணர்ச்சியையும்
குரலில் வடிக்கும் திறனைப் பெற்றிருந்த
எஸ். ஜானகியே, தமிழ், தெலுங்கு, மலையாளம்,
கன்னடம் எனத் தென்னிந்திய
இசையமைப்பாளர்களின் ஏகோபித்த முதல் தேர்வாக
இருந்தார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஏப்ரல் 23: எஸ்.ஜானகி 78-வது பிறந்த தினம் Empty Re: ஏப்ரல் 23: எஸ்.ஜானகி 78-வது பிறந்த தினம்

Post by ayyasamy ram Sat Apr 23, 2016 7:40 am

பிரபலப்படுத்திய பாடல்

1957-லிருந்து தமிழ் மொழியில் பாடிவருகிறார்.
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி,
சிங்களம், வங்காளம், சமஸ்கிருதம், ஒடியா, குஜராத்தி,
ஆங்கிலம், கொங்கணி, துளு, சவுராஷ்டிரம், ஜெர்மன்,
படுகா, பஞ்சாபி ஆகிய 17 மொழிகளில் பாடியிருக்கிறார்.

1962-ல் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையமைப்பில்
வெளிவந்த ‘கொஞ்சும் சலங்கை ’ திரைப்படத்தில்
இடம்பெற்ற ‘ சிங்கார வேலனே தேவா…’ என்ற
பாடல் தமிழில் அவரது முதல் வெற்றிப் பாடலாக
அமைந்தது. தொழில்நுட்பம் பெரிதும் வளராத அந்தக்
காலத்தில் இந்தப் பாடல் இரண்டு இடங்களில்
பதிவானது.

தயாரிப்பாளர் ராமன் ஸ்டூடியோவில்
(மும்பை) எஸ்.ஜானகி பாட, பாடலோடு இணையாக
ஒலிக்கும் நாகஸ்வரத்தை, நாகசுர மேதை காருக்குறிச்சி
அருணாசலம் சென்னை ஸ்டூடியோ ஒன்றில் வாசித்து
2 டிராக்கில் பதிவு செய்யப்பட்டு, அதன் பின் மிக்ஸிங்
செய்யப்பட்ட பாடல் அது.
இந்தப் பாடலுக்குப் பின்தான் எஸ்.ஜானகியின் புகழ்
பரவியது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஏப்ரல் 23: எஸ்.ஜானகி 78-வது பிறந்த தினம் Empty Re: ஏப்ரல் 23: எஸ்.ஜானகி 78-வது பிறந்த தினம்

Post by ayyasamy ram Sat Apr 23, 2016 7:40 am

எஸ். ஜானகியின் குரல் தனித்துவமானது.
பின்னணிப் பாடகியான பிறகு இசைக்கான எந்தப்
பயிற்சியையும் ஜானகி எடுத்துக்கொள்ளவில்லை.
தனது உள்ளுணர்வாலும், தனிப்பட்ட முயற்சியினாலும்
எந்த மொழிப் பாடலாக இருந்தாலும் அம்மொழிக்கே
உரிய தன்மைகளுடன் அம்மொழியின் வட்டார
வழக்கையும் சேர்த்தே தனது குரலில் வெளிப்
படுத்தினார். இந்தத் திறமையினாலேயே ஒரே
நேரத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு
ஆகிய நான்கு மொழிகளிலும் ஒரே நேரத்தில் சிறந்த
பாடகியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் காலத்தால்
அழியாத பல வெற்றிப் பாடல்களையும் அம்மொழிகளில்
கொடுத்தார்.

இப்போதும் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு
இசை ரசிகர்கள் ஜானகியை எங்களுக்கானவர் என
உரிமை கொண்டாடுகின்றனர்; யாரும் விட்டுக்
கொடுக்கத் தயாராகவில்லை. இதைவிட ஒரு
கலைஞருக்குப் பெரிய அங்கிகாரம் தேவையில்லை.

தென்னிந்தியத் திரையிசைப் பாடகிகளில்
எஸ்.ஜானகிக்கு முன்பும் பின்பும் இவரைப் போல்
எவருமில்லை.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஏப்ரல் 23: எஸ்.ஜானகி 78-வது பிறந்த தினம் Empty Re: ஏப்ரல் 23: எஸ்.ஜானகி 78-வது பிறந்த தினம்

Post by ayyasamy ram Sat Apr 23, 2016 7:40 am

இளையராஜாவின் பெருந்துணை

இளையராஜாவின் மாறுபட்ட இசை முயற்சிகளுக்கு
உற்ற துணைகளில் ஒன்றாக ஜானகியின் பாடும்
திறமை முன் நின்றது. அந்தத் திறமையைக்
கண்டடைந்து அதைச் சரியாகப் பயன்படுத்தியவரும்
இளையராஜாதான்.

கிராமியப் பாடலாக இருந்தாலும்,
கர்னாடக சங்கீதத்தில் அமைந்த பாடலாக இருந்தாலும்
ஜானகி எப்போதுமே இளையராஜா எதிர்பார்த்ததை
விட ஒரு மடங்கு அதிகமாகவே தனது குரலில்
பங்களிப்புச் செய்தார்.

சிக்கலான மெட்டுகளையும் எளிதாகப் பாடினார்.
ஒரு பாடல், அத்திரைப்படத்தில் பாடப்படுகின்ற
சூழலுக்கு ஏற்றவாறு, திரையில் யார் வாயசைத்து
நடிக்கப்போகும் நட்சத்திரம் யார் போகிறார் என்பதைக்
கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு பொருத்தமான
உணர்ச்சியை வெளிப்படுத்திப் பாடும் திறமையைப்
பெற்ற பாடகியாக எஸ்.ஜானகி மிளிர்ந்தார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஏப்ரல் 23: எஸ்.ஜானகி 78-வது பிறந்த தினம் Empty Re: ஏப்ரல் 23: எஸ்.ஜானகி 78-வது பிறந்த தினம்

Post by ayyasamy ram Sat Apr 23, 2016 7:41 am

ஹம்மிங் பேர்ட்

பாடல்களில் இடம்பெறும் ஹம்மிங்கிலும் நிறைய
ஜாலங்களை எஸ்.ஜானகி புரிந்திருக்கிறார்.
ல, லா வில் ஆரம்பிக்கும் ஹம்மிங் பாடல்களே
நிறைய இருக்கின்றன.

“லல்லா லல்லா லல்லா லல்லா … சின்ன சின்ன
வண்ணக்குயில்… (மெளனராகம்), “ லால லால ல …
ஆத்துமேட்டிலே ஒரு பாட்டு கேட்குது…( கிராமத்து
அத்தியாயம்),” “லாலலல்லா லாலலல்லா …
எந்தப் பூவிலும் வாசம் உண்டு… (முரட்டுக்காளை) “
என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

எஸ்.ஜானகியால் பாடப்பட்ட எந்தவொரு ஹம்மிங்கும்
அலாதியான குரலிலேயே ஒலிக்கும்.

எஸ்.ஜானகி பாடிய பல தனிப்பாடல்கள் பெரும்
வெற்றியைப் பெற்றுள்ளன. இப்பாடல்கள் மகிழ்ச்சி,
சோகம், ஏக்கம், பிரிவு, கொண்டாட்டம், ஆசை,
தாய்மை எனப் பல விதமான உணர்வுகளை வெளிப்
படுத்தும் வகையில் அமைந்திருந்தாலும்
என்றென்றும் கேட்கக்கூடிய செவ்வியல் தன்மையைப்
பெறுகின்றன.

“எனது ரசிகர்கள்தான் எனக்குப் பெரிய விருது”
என்று ஜானகி சொன்னது போல ரசிகர்களின்
மனங்களில் என்றைக்குமே அவருக்கு இடமிருக்கும்.
தென்னிந்திய மொழிகள் இருக்கும் வரை இவ்வுலகில்
ஜானகியின் குரல் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும் .

————————-
-ஜெ.செல்வராஜ்
தமிழ் தி இந்து காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஏப்ரல் 23: எஸ்.ஜானகி 78-வது பிறந்த தினம் Empty பாடகி எஸ்.ஜானகியின் பிறந்தநாள் இன்று !

Post by seltoday Sat Apr 23, 2016 9:42 am

எஸ்.ஜானகி பிறந்தநாள் !

தென்னிந்திய திரையிசையின் தனிப்பெரும் தலைவியான எஸ்.ஜானகியின் பிறந்தநாள் இன்று. ஈடுஇணையில்லாத பாடகியான எஸ்.ஜானகியின் இசைமேதமையைக் கொண்டாடுவதுடன்,பாடும் முறையில் அவரின் பங்களிப்பை முன்னெடுக்க வேண்டும். தென்னிந்திய திரையிசையுலகில் எஸ்.ஜானகி போல பாட எவருமில்லை அன்றும் இன்றும். பாடும் முறையில் அவர் நிகழ்த்திய சாதனைகளை வைத்து பல Phdகள் வாங்கலாம்.

ஜானகியின் திறமைகளில் மிகவும் வசீகரிக்கக்கூடிய திறமை , தமிழ் மொழியை அவர் கையாண்டிருக்கும் விதம் தான். திரையிசைப்பாடல்களில் 1980 கள் வரை ஓரளவு திருத்தமாக ஒலித்த தமிழ் , 80 களுக்கு பிறகு இன்று வரை திருத்தமில்லாமல் பிழைகளுடனே பாடப்படுகின்றன. லகரம் (ல , ள, ழ ) ,ரகரம் ( ர, ற ), ணகரம் ( ண, ன ) போன்றவை பல ஆண்டுகளாக கணக்கில் கொள்ளப்படுவதில்லை. எந்த வெகுஜன இதழ்களும் பிழையான தமிழுன் வெளிவருவதில்லை.எழுத்து மொழியில் ஆங்காங்கே எழுதப்படும் வாசகங்களில் இருக்கும் எழுத்துப்பிழையைச் சுட்டிக் காட்டுகிறோம். அதே சமயம் நமது பேச்சு மொழியிலோ , கோடிக்கணக்கானவர்களைச் சென்றடையும் திரையிசைப்பாடல்களிலோ பிழைகளை எந்த பிரக்ஞையும் இல்லாமல் ஏற்றுக் கொள்கிறோம்.

எஸ்.ஜானகி பாடிய அனைத்துப் பாடல்களிலும் (கிராமிய பாடலாக இருந்தாலும் ) தமிழை திருத்தமாக பிழையின்றி பாடியுள்ளார். அவரின் குரல் இனிமையுடன் , தமிழின் இனிமையும் சேர்ந்ததால் தான் நாம் எங்கு சென்றாலும் அங்கெல்லாம் ஜானகியின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இளையராஜாவின் இசையுன் ஜானகியின் குரலையும் சேர்த்தே ரசிக்கிறோம்.

பாடும் எந்தப்பாடலையும் சிறப்பாக பாடும் ஜானகியின் திறமையைக் கொண்டாடுவதுடன். திரையிசைப்பாடல்களில் திருத்தமான உச்சரிப்பிற்கு வழிவகை செய்ய வேண்டும்.

நண்பர்களே ! எஸ்.ஜானகியின் பாடல்கள் உங்களுக்கு ஏற்படுத்திய தாக்கங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
எஸ்.ஜானகியைக் கொண்டாடுவோம் ! #SJ
seltoday
seltoday
பண்பாளர்


பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013

http://jselvaraj.blogspot.in/

Back to top Go down

ஏப்ரல் 23: எஸ்.ஜானகி 78-வது பிறந்த தினம் Empty Re: ஏப்ரல் 23: எஸ்.ஜானகி 78-வது பிறந்த தினம்

Post by krishnaamma Sat Apr 23, 2016 12:10 pm

ஏற்கனவே இந்த திரி இருக்கு , இதையும் அத்துடன் இணைத்து விடுகிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஏப்ரல் 23: எஸ்.ஜானகி 78-வது பிறந்த தினம் Empty Re: ஏப்ரல் 23: எஸ்.ஜானகி 78-வது பிறந்த தினம்

Post by seltoday Sun Apr 24, 2016 7:54 am

வணக்கம் கிருஷ்ணம்மா அவர்களே ,நீங்கள் கேட்ட தற்போது பிரசுரமாகியுள்ள கட்டுரை தான் மேலே அய்யாசாமி ராம் அவர்கள் பதிவிட்டு உள்ளார்.
seltoday
seltoday
பண்பாளர்


பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013

http://jselvaraj.blogspot.in/

Back to top Go down

ஏப்ரல் 23: எஸ்.ஜானகி 78-வது பிறந்த தினம் Empty Re: ஏப்ரல் 23: எஸ்.ஜானகி 78-வது பிறந்த தினம்

Post by krishnaamma Sun Apr 24, 2016 10:27 am

seltoday wrote:வணக்கம் கிருஷ்ணம்மா அவர்களே ,நீங்கள் கேட்ட தற்போது பிரசுரமாகியுள்ள கட்டுரை தான் மேலே அய்யாசாமி ராம் அவர்கள் பதிவிட்டு உள்ளார்.
மேற்கோள் செய்த பதிவு: 1204325

ம்ம், நான் ஹிந்துவிலேயே பார்த்தேன் செல்வராஜ், அருமையாக எழுதி இருக்கீங்க புன்னகை............... ஏப்ரல் 23: எஸ்.ஜானகி 78-வது பிறந்த தினம் 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மனமார்ந்த வாழ்த்துகள் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஏப்ரல் 23: எஸ்.ஜானகி 78-வது பிறந்த தினம் Empty Re: ஏப்ரல் 23: எஸ்.ஜானகி 78-வது பிறந்த தினம்

Post by M.Jagadeesan Sun Apr 24, 2016 5:00 pm

" சிங்கார வேலனே தேவா " என்ற பாடல் கர்நாடக சங்கீத ரசிகர்களுக்கு நல்ல விருந்து !இப்போது கேட்டாலும் நம்மையறியாமல் தலை ஆடும் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஏப்ரல் 23: எஸ்.ஜானகி 78-வது பிறந்த தினம் Empty Re: ஏப்ரல் 23: எஸ்.ஜானகி 78-வது பிறந்த தினம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
»  சர்.பி.தியாகராய செட்டி பிறந்த தினம் : ஏப்ரல் 27, 1852
» இந்திய தேசிய இளைஞர் தினம்- சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிறந்த தினம் இன்று
»  ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேன் பிறந்த தினம்: ஏப்ரல் 28, 1937
» ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்கள் தினம்: ஏப்ரல் ஃபூல் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது
» முன்னாள் தமிழக முதல்வர் வி.என்.ஜானகி மறைந்த தினம்: மே 19, 1996

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum