புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_c10காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_m10காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_c10 
68 Posts - 41%
heezulia
காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_c10காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_m10காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_c10காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_m10காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_c10காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_m10காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_c10காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_m10காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_c10காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_m10காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_c10காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_m10காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_c10காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_m10காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_c10 
2 Posts - 1%
manikavi
காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_c10காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_m10காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_c10 
1 Post - 1%
prajai
காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_c10காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_m10காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_c10காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_m10காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_c10 
319 Posts - 50%
heezulia
காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_c10காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_m10காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_c10காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_m10காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_c10காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_m10காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_c10காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_m10காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_c10 
21 Posts - 3%
prajai
காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_c10காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_m10காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_c10காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_m10காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_c10காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_m10காளமேகப்  புலவரா? கம்பரா?....... - Page 4 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

காளமேகப் புலவரா? கம்பரா?.......

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 13, 2016 11:23 am

First topic message reminder :

இன்று நெடில் ஏதோ தேடியபோது, இந்த இரு பதிவுகளைக் காண நேர்ந்தது, இதில் எதுசரி என்று , தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் புன்னகை.... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

ஒருமுறை ஒளவையாரை நோக்கி காளமேகப் புலவர் நையாண்டியாக ஏதோ கூற, வெகுண்டெழுந்த ஒளவையார் இந்தப் பாடலை பாடினார். கோபம் கொப்பளிக்கும் வார்த்தைகள் எவ்வளவு நயமாக வந்து விழுந்திருக்கின்றன, பாருங்கள்:

எட்டேகால் லட்சணமே எமனேவும் பரியே

மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமுட்டக்

கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே

யாரையடா சொன்னாய் அது.

தமிழில் "அ" என்ற எழுத்து "எட்டு" என்ற எண்ணை குறிக்கும். அதேபோல் "வ" என்பது "1/4" ஐ குறிக்கும். அப்படியானால் "எட்டேகால்" என்பது "அவ" என்றாகிறது. முதல் சொற்றொடர் "அவ லட்சணமே" என்று பொருள் தருகிறது.

எமன் ஏவும் பரி என்பது "எருமை".  புன்னகை

பெரியம்மை என்பது "லட்சுமியின் தமக்கையான மூதேவி". :rolleyes:

முட்டமுட்ட கூரையில்லா வீடு என்பது "மேகம்" (அதாவது காளமேகம்  மகிழ்ச்சி )

குலராமன் தூதுவன் "குரங்கு"

அப்படியே "யாரையடா சொன்னாய் அது".

அவ்வையை இப்படி பாடவைக்க காளமேகம் என்ன கூறியிருப்பார் என தெரியவில்லை.

இது, யாரல் .காம் இல் பார்த்தேன்..............

----------------------------------------------

31 December, 2009
ஒளவையின் சிலேடை :

ஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த "அம்பர்" என்ற ஒரு ஊரின் ஒரு தெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்தத் தெருவிலிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் சற்றே அமர்ந்தார்.

அந்தக் காலத்தில் இன்றுள்ளது போல் பேருந்துகளோ மற்ற மோட்டார் வாகனங்களோ கிடையாது. ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்ல வேண்டுமென்றால் நடந்தோ, குதிரை மீதோ அல்லது குதிரை அல்லது மாட்டு வண்டியிலோ தான் செல்ல வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் வழிப்போக்கர்கள் இளைப்பாறிச் செல்வதற்காகவென்றே திண்ணை இருக்கும்.

ஔவையார் அமர்ந்த திண்ணையக் கொண்ட வீட்டில் "சிலம்பி" என்ற தாசி இருந்தாள். தன் வீட்டின் திண்ணையில் ஒரு மூதாட்டி அமர்ந்திருப்பதைக் கண்ட சிலம்பி தான் குடிப்பதற்காக வைத்திருந்த கூழைக் கொணர்ந்து ஔவையாருக்குக் கொடுத்தாள்.

கூழை அருந்திய ஔவையார் அந்த வீட்டின் சுவற்றிலே காரிக் கட்டியினால் எழுதியிருந்த இரண்டு வரிகளைக் கவனித்தார்:

"தண்ணீருங் காவிரியே தார் வேந்தன் சோழனே
மண்ணாவதுஞ் சோழ மண்டலமே"

தனக்குப் பசியாரக் கூழ் கொடுத்த சிலம்பியை நோக்கி, "இது என்ன?" என்று கேட்டார் ஔவையார்.

"குலோத்துங்க சோழ மன்னனின் அவைக்களப் புலவரான கம்பர் வாயால் பாடல் பெற்றவர்கள் மிகவும் சீரோடும் சிறப்போடும் வாழ்வதாகக் கேள்விப்பட்டு நான் சேர்த்து வைத்திருந்த 500 பொற்காசுகளைக் கொடுத்து என் மீது ஒரு பாடல் பாட வேண்டுமென்று அவரைக் கேட்டுக் கொண்டேன். அதற்குக் கம்பர், 'ஒரு பாடலுக்கு ஆயிரம் பொன் தர வேண்டுமென்றும் 500 பொன்னுக்கு அரைப் பாடல் தான் கிடைக்கும்' என்றும் கூறிக் காரிக் கட்டியால் இவ்விரண்டு வாரிகளைச் சுவற்றில் எழுதிவிட்டுப் போய்விட்டார். கையிலிருந்த 500 பொன்னும் பறிபோனதால் நான் அன்றிலிருந்து வறுமையில் வாடுகிறேன்." என்று கூறினாள் சிலம்பி.

அதைக் கேட்ட ஔவையார் உடனே ஒரு காரித்துண்டினை எடுத்து அவ்விரண்டு வாரிகளின் கீழே கீழ்க்கண்ட வாரிகளைச் சேர்த்துக் கவிதையைப் பூர்த்தி செய்தார்:

பெண்ணாவாள் அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு

என்பதாகும் அவ்வரிகள்.

இதையும் சேர்த்து முழுப்பாடலாக,

"தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவ துஞ்சோழ மண்டலமே - பெண்ணாவாள்
அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு "

என்பதாகும்.

ஔவையார் வாயால் பாடல் பெற்றதும் சிலம்பியின் புகழ் நாடெங்கும் பரவியது. அவள் கால்களில் செம்பொன்னிலான சிலம்பணியுமளவிற்குப் பெரிய செல்வச் சீமாட்டியாக ஆனாள்.

தான் 500 பொன் பெற்று ஏழையாக்கிய சிலம்பியை ஔவையார் கூழுக்குப் பாடிச் செல்வச் செழிப்பு மிக்கவளாக்கி விட்டதைக் கேள்வியுற்ற கம்பர் ஔவையார் மீது துவேஷம் கொண்டார். ஒரு நாள் ஔவையார் அரசவைக்கு வருகை தந்தார். அப்பொழுது கம்பர் அவரை நோக்கி ஆரைக் கீரைக்கும் ஔவைக்கும் சிலேடையாக அதாவது இரு பொருள் படும் படியாக ஔவையையும் ஆரக்கீரையையும் ஒப்பிட்டு,

"ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடீ"

என்று கூறினார். இதற்கு உத்தரமாக ஔவையார்,

"எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்க்
கூறையில்லா வீடே, குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாயது."

தமிழில் "அ" அன்பது எண் 8 ஐக் குறிக்கும் "வ" 1/4 ஐக் குறிக்கும். 8, 1/4 இரண்டையும் சேர்த்தால் "அவ" என வரும்.

எட்டேகால் லட்சணமே என்றால் "அவ லட்சணமே" எனப் பொருள் படும். எமனேறும் பரி எருமை. எமனேறும் பரியே என்றால் "எருமையே" எனப் பொருள் படும். மட்டில் பெரியம்மை வாகனமே என்றால் "மூதேவியின் வாகனமே" என்று பொருள். கூரையில்லா வீடு குட்டிச் சுவர். கூரையில்லா வீடே என்றால் "குட்டிச் சுவரே" என்று பொருள்.

"குலராமன் தூதுவனே" என்றால், ராமாயணத்தை எழுதியவனே என்றும், ராமனுக்குத் தூது சென்ற ஹனுமானான "குரங்கே" என்றும் பொருள் படும். "ஆரையடா சொன்னாயது" என்றால் நீ சொன்னதன் பொருள் ஆரக்கீரை யென்றும் யாரைப் பார்த்து இப்படிச் சொன்னாய் என்றும் இருபொருள் படும். இத்துடன் "அடா" என்ற அடைமொழி சேர்த்துத் தன்னை "அடி" என்றதற்குப் பதிலடி கொடுத்தார்.

எவ்வளவு அருமையான புலமை விளையாட்டு பார்த்தீர்களா !!

இதை, http:// ஞானமேதவம் .ப்ளாக் ஸ்போட்   இல் பார்த்தேன் புன்னகை

-----------------------------------

எனக்கு என்னவோ அது காளமேகப் புலவராகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 13, 2016 3:03 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:இப்போதுதான் வந்தேன் .
மறுபடியும் வெளியே போகவேண்டிய வேலை .
வந்து இது விஷயம் அலசுவோம் .

நானறிந்த வரையில்

"எட்டேகால் லக்க்ஷணமே, யமனேறும் வாகனமே" ,
என்றே வரும் .
யமனேறும் வாகனம் ----------எருமை .

ரமணியன்

அவசரம் ஒன்றும் இல்லை ஐயா, உங்கள் வேலைகளை முடித்துக் கொண்டு வாருங்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1202602

எமன் ஏவும் பரி யா ?

பரி என்றால் குதிரை
எமன் ஏவும் பரி -- எமனால் , கட்டளை இடப்படும் ,குதிரை யா ?

"எமன் ஏறும் வாகனமே," சரி எனப்படுகிறது .

ஒளவையார் காலத்தவர் என கம்பனையும் திருவள்ளுவரையும் கூறுவர் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Apr 13, 2016 3:43 pm

"எமனேறும் பரியே " என்ற இரு வார்த்தைகளில் தளை தட்டுகிறது.

எம /னே / றும் = நிரை நேர் நேர் = புளிமாங்காய்

பரி / யே = நிரை நேர்

அதாவது காய் முன் நிரை வருகிறது . இது தவறு
காய் முன் நேர் வருதல் வேண்டும் .
எனவே
பரியே என்பதற்குப் பதிலாக வாகனமே என்று வருதல் வண்டும் .

மேலும் கூரை என்று வரவேண்டும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 13, 2016 6:24 pm

M.Jagadeesan wrote:இவ்வாறு வருவதை " இருசொல் அலங்காரம் " என்பர் .
மேற்கோள் செய்த பதிவு: 1202630

சிறு வயதில் ,பள்ளி இடைவேளையில் ,தோழர்களுடன் விளையாடும் விளையாட்டு .
அந்நாள் போல் இனி வருமா ?

இன்னும் ஞாபகத்தில் உள்ள ஒன்று ,

"நெல் அளப்பதும் எதனாலே ?
நொண்டி நடப்பதும் எதனாலே ?"

மரக்காலால் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Apr 13, 2016 6:35 pm

ஆமாம் ஐயா!

பள்ளிப் பருவ நினைவுகள் இன்னும் நெஞ்சில் நிழலாடுகிறது . அந்த நாட்கள் எல்லாம் இனி வராது . .

இப்போதைய குழந்தைகள் , அதாவது என்னுடைய பேரன்கள் நொறுக்குத் தீனி தின்றுகொண்டு , கணினியே கதியென்று கிடக்கிறார்கள் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 13, 2016 7:20 pm

கனி நீயே என கதியற்று பெற்றவரிருக்க
கணினினியே கதியென அவர்களிருக்க
காலங்களை கடத்தித்தான் இருக்க பழகிட வேண்டும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 15, 2016 12:54 am

ராஜா wrote:
M.Jagadeesan wrote:இவ்வாறு வருவதை " இருசொல் அலங்காரம் " என்பர் .

எட்டேகால் லட்சணமே எமனே றும்பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே -- முட்டமேற்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னா யடா ?
இதற்கு இரண்டுவிதமான பொருள் வரவேண்டுமல்லவா ஐயா..

ராஜா, என்னுடைய இந்த பதிவுக்கான பதில் ஜகதீசன் ஐயா சொன்னது புன்னகை

krishnaamma wrote:பாலா, இதுக்கும் கொஞ்சம் பதில் சொல்லுங்களேன் புன்னகை

1. சாம்பார் மணப்பது எதனாலே,
பெரும் படை அவதியுறுவது  எதனாலே ?

விடை: பெருங்காயத்தால்  

2. எருக்கம் இலை பழுப்பதேன்,
எருமைக்  கன்று சாவதேன்?

விடை: பால் வற்றி............

இப்படிப்பட்டதை என்ன வென்று சொல்வோம்?..சிலேடைகள் என்றா ? புன்னகை....இது போல நிறைய இருக்கும், யோசிக்கிறேன் நினைவுக்கு வரலை.............
மேற்கோள் செய்த பதிவு: 1202584

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 15, 2016 12:55 am

balakarthik wrote:
M.Jagadeesan wrote:இவ்வாறு வருவதை " இருசொல் அலங்காரம் " என்பர் .

ஆமாம் ஐயா இணையத்தில் தேடியதில் ஊ வே சா எழுதிய  புத்தகம் ஒன்று இருக்கிறது

1.அச்சு வண்டி ஒடுவதேன்
மச்சான் உறவாடுவதேன்.
விடை :- அக்காளைக் கொண்டு (அக் காளையைக் கொண்டு ; அக்காவைக் கொண்டு)

2.அரக்கு பொன்னிறம் ஆவதேன்
அனுமார் இலங்கைக்கு போனதேன்
விடை :- அரிதாரம் ( சாயம்; அரியின் தாரம்... (ராமர் அரியின் அவதாரம் தானே))

3.கீரை விதைப்பதேன்
கிழோர் செல்வரைச் சுற்றுவதேன்
விடை :- (பிடுங்கித் தின்ன ( கீரையைப் பிடுங்கித்தின்ன; பணக்காரர்களை பிடுங்கித்தின்ன)

4.சந்தனம் சிறந்தது ஏன்?
சொந்த உறவு துறந்ததது ஏன்?
விடை :- பூசலாலே (சந்தனம் பூசுவதாலே;சண்டையினாலே)

இருசொல் முச்சொல் அலங்காரம்

Author உ.வே. சாமிநாதையர்
Published by Amudha Nilayam
Book Title Irusol Muchchol Alangaaram
Format Paperback (அச்சு)
Year Published 2012

இதத்தான் பாலா நான் கேட்டேன் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்......... ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 15, 2016 12:57 am

M.Jagadeesan wrote:இவ்வாறு வருவதை " இருசொல் அலங்காரம் " என்பர் .
மேற்கோள் செய்த பதிவு: 1202630

மிக்க நன்றி ஐயா புன்னகை.............. நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 15, 2016 1:01 am

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:இப்போதுதான் வந்தேன் .
மறுபடியும் வெளியே போகவேண்டிய வேலை .
வந்து இது விஷயம் அலசுவோம் .

நானறிந்த வரையில்

"எட்டேகால் லக்க்ஷணமே, யமனேறும் வாகனமே" ,
என்றே வரும் .
யமனேறும் வாகனம் ----------எருமை .

ரமணியன்

அவசரம் ஒன்றும் இல்லை  ஐயா, உங்கள் வேலைகளை முடித்துக் கொண்டு வாருங்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1202602

எமன் ஏவும் பரி  யா ?

பரி என்றால் குதிரை
எமன் ஏவும் பரி -- எமனால் ,   கட்டளை இடப்படும் ,குதிரை யா ?

"எமன் ஏறும் வாகனமே," சரி எனப்படுகிறது .

ஒளவையார் காலத்தவர் என கம்பனையும் திருவள்ளுவரையும் கூறுவர் .

ரமணியன்
 
நன்றி ஐயா, எனக்கும் எங்கப்பா சொல்லி இருப்பது நினைவில் இருக்கு " எமனேறும் வாகனமே" ! என்று தான் சொல்வார் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 15, 2016 1:01 am

M.Jagadeesan wrote: "எமனேறும் பரியே " என்ற இரு வார்த்தைகளில் தளை தட்டுகிறது.

எம /னே / றும் = நிரை நேர் நேர் = புளிமாங்காய்

பரி / யே = நிரை நேர்

அதாவது காய் முன் நிரை வருகிறது . இது தவறு
காய் முன் நேர் வருதல் வேண்டும் .
எனவே
பரியே என்பதற்குப் பதிலாக வாகனமே என்று வருதல் வண்டும் .

மேலும் கூரை என்று வரவேண்டும் .

விளக்கத்துக்கு மிக்க நன்றி ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக