ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவரா இவர் ??!! - நம்பமுடியாத அனந்த் அம்பானி

3 posters

Go down

 அவரா இவர் ??!! -  நம்பமுடியாத அனந்த் அம்பானி  Empty அவரா இவர் ??!! - நம்பமுடியாத அனந்த் அம்பானி

Post by ராஜா Mon Apr 11, 2016 7:00 pm

ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் மூத்த மகன் அனந்த் அம்பானி 18 மாதங்களில் தனது உடல் எடையில் 108 கிலோ எடையை குறைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

 அவரா இவர் ??!! -  நம்பமுடியாத அனந்த் அம்பானி  201604111047076341_UNBELIEVABLE-Mukesh-Ambanis-son-Anant-Ambani-trends-on_SECVPF

ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆட்டத்தின் போது இவரை அனைவரும் பார்த்திருக்க முடியும். இவரை வைத்து கிண்டல் மீம்ஸ்களும் வலம் வரும்.

நாள்பட்ட ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட அவர், அந்நோய்க்காக எடுத்துக் கொண்டமருத்துவத்தின் பக்க விளைவு காரணமாக உடல் எடை அதிகப்படியாக அதிகரித்தது.

இந்நிலையில் கடந்த 18 மாதங்களாக கடும் முயற்சி மேற்கொண்டு தனது உடல் எடையில் 108 கிலோ எடையை குறைத்து அனைவரையும் அதிர வைத்துள்ளார் ஆனந்த் அம்பானி.இதற்காக தினமும் அவர் 21 கி.மீ நடைபயணம், யோகா, உடற்பயிற்சி என தனது அன்றாட வாழ்க்கையில் கடைபிடித்துள்ளார்.

மேலும், தனது உணவு பழக்கவழக்கங்களிலும் சில மாற்றத்தை கொண்டுவந்த அவர் கொழுப்புச் சத்து இல்லாத உணவு வகைகளை உட்கொண்டு வந்துள்ளார்.


தவிர, அமெரிக்காவைச் சேர்ந்த நிபுணர் ஒருவரின் நேரடி கண்காணிப்பில் தனது உடல் எடையைக் குறைக்கும் வேலையில் தீவிரமாக இறங்கினாராம். அதன் விளைவாக அனைவரும் அசந்து போகும் அளவு ஸ்லிம் ஆகிவிட்டார்.


 அவரா இவர் ??!! -  நம்பமுடியாத அனந்த் அம்பானி  8827A351-8627-4B5D-A8A7-13F641660BF2_L_styvpf

நேற்று நடந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆட்டத்தின் போது எடுக்கப்பட்ட இவரது ஸ்லிம் புகைப்படம் தான் டுவிட்டர், பேஸ்புக் என அனைத்து சமூகவலைதளங்களிலும் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 அவரா இவர் ??!! -  நம்பமுடியாத அனந்த் அம்பானி  Empty Re: அவரா இவர் ??!! - நம்பமுடியாத அனந்த் அம்பானி

Post by krishnaamma Mon Apr 11, 2016 7:18 pm

வாவ் ! எடையையும் குறைத்துக்கொண்டு முடியையும் குறைத்துக்கொண்டு ஸ்டைலாக இருக்காரே.......அசகாய சூரன் தான்....அசுர முயற்சி............ சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 அவரா இவர் ??!! -  நம்பமுடியாத அனந்த் அம்பானி  Empty Re: அவரா இவர் ??!! - நம்பமுடியாத அனந்த் அம்பானி

Post by krishnaamma Mon Apr 11, 2016 10:17 pm

'எப்படி இருந்த நான்... இப்படி ஆகிட்டேன்' - விவேக்கோட தெறி டயலாக் எல்லாருக்குமே ஞாபகம்  இருக்கும். அவர் சொன்னத ஒருத்தர் செஞ்சே காட்டி இருக்காரு. ஆமாம்,  அம்பானி பையன் ஆனந்த் அம்பானி,  108 கிலோவிலிருந்து 60 கிலோவிற்கு 18 மாதங்களில் வந்திருக்கிறார். தன்னுடைய சொந்த முயற்சியாலும் கடின உழைப்பாலும் இதை சாதித்திருக்கிறார் இந்த மில்லியன் டாலர் பேபி!

 அவரா இவர் ??!! -  நம்பமுடியாத அனந்த் அம்பானி  0rLfG87mTLj6ZLBnSgzO+Anant-Ambani1

எப்படி சாத்தியமானது இந்த எடைகுறைப்பு என்பதை சொல்லும் ஃபிட்னெஸ் ரகசியங்கள் இதோ...

1 - லோ கார்ப் டயட்!

ஆனந்த் பின்பற்றியது ''குறைவான கார்போஹைட்ரேட் உணவுகள், ஜீரோ சர்க்கரை, கெமிக்கல்கள் கலக்கப்பட்ட ப்ராசஸ்ட் உணவுகளை தவிர்ப்பது'' என ஒரு லோகார்ப் டயட். ரொட்டி, அரிசி உணவுகள், இனிப்புகள், கார்பனேடட் குளிர்பானங்கள் என எதையும் நினைப்பதற்கு கூட தடைதான். முழுக்க முழுக்க புரதச்சத்து மிகுந்த உணவுகளும் ஆரோக்கியமான கொழுப்பு கொண்ட பொருட்களும்தான் உண்ண வேண்டும்.


2 - 21 கிமீ நடைப்பயிற்சி!


ஒவ்வொரு நாளும் 21 கி.மீ வரைக்கும் நடையாய் நடந்துதான் அம்பானி பையன் தன்னுடைய எடையை முழுமையாக குறைத்திருக்கிறார். இது அத்தனை எளிதல்ல. 21 கி.மீ என்பது அரை மாரத்தான் நீளம். ஆமை வேகத்தில் நடந்தால் கூட மூன்றரை மணி நேரமாகும். ஒவ்வொருநாளும் இதை செய்வதற்கு,  உறுதியான உடலை விட செய்யமுடியும் என்கிற நம்பிக்கைதான் ரொம்பவே அவசியம். அது ஆனந்திடம் இருந்திருக்கிறது.

3 - யோகா!

எந்த ஒரு செயலையும் மிகச்சரியாக செய்ய உங்கள் மூச்சு ரொம்பவே முக்கியம். அதை மிகச்சரியாக பயன்படுத்த யோகா ஒரு நல்ல கருவி. கூடவே யோகா செய்யும்போது,  உடல் எடை குறைவதால் உண்டாகும் உடல் மற்றும் மன மாற்றங்களை சீராக்கி தேவையில்லாத பின்விளைவுகள் உண்டாவதை குறைக்கும். கூடவே எடை குறைப்புக்கான அடுத்தடுத்த விஷயங்களை செய்வதற்கான உத்வேகத்தையும் அது கொடுக்கும்.

4 - எடைப்பயிற்சி!

வெறும் நடையும் யோகாவும் மட்டுமே உடல் எடையை குறைத்துவிடாது. ஜிம்களில் இந்த வெயிட் ட்ரெயினிங்தான் இப்போது ட்ரெண்ட். இது உங்களுடைய தசைகளை வலுவாக்கும். கூடவே கொழுப்பை வேகமாக கரைக்கவும் உதவும்.

5 - ஃபங்கஷனல் ட்ரெயினிங்!

உங்களுடைய ஒட்டுமொத்த உடலையும் பயன்படுத்தி செய்யக்கூடிய தொடர்ச்சியான எளிய உடல்பயிற்சிகள். உதாரணத்திற்கு உட்கார்ந்து எழுந்திருக்கிற ஸ்குவாட் வகைகள், முன்னோக்கி நகர்ந்து அமரும் லஞ்சுகள், ஸ்டெரச்சிங் பயிற்சிகள் என பலதும் இதில் உண்டு. இதை முறையான பயிற்சியாளர் மூலம் கற்றுக்கொண்டு செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

விகடன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 அவரா இவர் ??!! -  நம்பமுடியாத அனந்த் அம்பானி  Empty Re: அவரா இவர் ??!! - நம்பமுடியாத அனந்த் அம்பானி

Post by balakarthik Tue Apr 12, 2016 5:20 pm

அப்பா படுத்துகிட்டே சாப்புடற அளவுக்கு சொத்து சேர்திருக்காரு இவரு வேற வேலை பாக்காம உடல்பயிற்சி செய்யலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம்  அவரா இவர் ??!! -  நம்பமுடியாத அனந்த் அம்பானி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 அவரா இவர் ??!! -  நம்பமுடியாத அனந்த் அம்பானி  Empty Re: அவரா இவர் ??!! - நம்பமுடியாத அனந்த் அம்பானி

Post by ராஜா Tue Apr 12, 2016 5:57 pm

உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கு , எவ்வளவு அழகா ஸ்மார்ட் ஆக இருக்குற பையன் ஆஸ்துமா பிரச்சினையால் குண்டாகி , அவனுக்கு எப்படி இருந்திருக்கும் ஒவ்வொரு நாளும் கண்ணாடியில் தன்னை பார்த்த போது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 அவரா இவர் ??!! -  நம்பமுடியாத அனந்த் அம்பானி  Empty Re: அவரா இவர் ??!! - நம்பமுடியாத அனந்த் அம்பானி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum