ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

Top posting users this week
ayyasamy ram
சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_m10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10 
heezulia
சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_m10சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல்

Go down

சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Empty சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல்

Post by ayyasamy ram Mon Apr 11, 2016 9:58 am

சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் YOZ5CuSAd8pEWDdHLdQO+sagayamvc2
-
நாமக்கல் மக்களின் மனிதநேயத்திற்கு இதைவிட சிறந்த
சான்று இருக்க முடியாது. 'நம்பிக்கை இல்லம்' என்ற
பெயரில், ஆதரவற்ற குழந்தைகளுக்காக சகாயம் ஐ.ஏ.எஸ்
திறந்த கட்டடத்தின் ஒவ்வொரு செங்கல்லிலும் மனிதநேயம்
நிரம்பி வழிகிறது.
-
நாமக்கல் கலெக்டராக சகாயம் இருந்த சமயத்தில், ஆதரவற்ற
குழந்தைகளுக்காக உதயமான சிறிய யோசனை, இன்று
ஆலமரமாக கிளைபரப்பி வளர்ந்து நிற்கிறது. மோகனூர் செல்லும்
வழியில் உள்ள விவசாய கிராமம் லத்துவாடி. இந்தக் கிராமத்தில்,
ஐம்பது சென்ட் நிலத்தில் நம்பிக்கை இல்லம் கட்டப்பட்டுள்ளது.
வருகிற தமிழ்புத்தாண்டு தினத்தன்று திறப்பு விழாவை நடத்த
இருக்கிறார்கள்.
-
சகாயம் ஐ.ஏ.எஸ், இயக்குநர் சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள்
நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84873
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Empty Re: சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல்

Post by ayyasamy ram Mon Apr 11, 2016 9:59 am

சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் MOPGPzeuQhmCai1l9sNN+sagayamvc1
-

" பல மொழிகளைக் கற்கக் கூடிய இடமாகவும், தொழிற்பயிற்சி,
விளையாட்டுப் பயிற்சி, விஞ்ஞானப் பயிற்சி என நமது
பிள்ளைகளை வாழ்வின் அடுத்தகட்டத்திற்கு அழைத்துச் செல்லும்
விதமாகவும் புதிய கட்டடத்தை வடிவமைத்திருக்கிறோம்.
-
எதிர்காலத்தில், தமிழ்வழியில் பாடம் நடத்தும் தரமான
பள்ளியாகவும், ஜப்பான், ஜெர்மன், ஆங்கிலம் உள்ளிட்ட உலக
மொழிகளை கற்கும் இடமாகவும் மாற்றுவோம். கிராமத்துப்
பிள்ளைகளை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கச் செய்யும் விதமான
பயிற்சிகளை வழங்க இருக்கிறோம்.
-
மனப்பாட சக்தியை வளர்க்கும் கல்வியாக இல்லாமல், சிந்திக்கக்
தூண்டும் கல்வியைக் கொடுக்கும் வகையிலான திட்டங்களை
வைத்திருக்கிறோம். எங்கள் இல்லத்தில் ஆதரவற்ற நிலையில்
25 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்களுக்கு மட்டுமல்லாமல்,
சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள ஏழைப் பிள்ளைகள் அனைவரும்
எங்கள் இல்லத்தில் பயிற்சி பெற்றுக் கொள்ளலாம்" - என
நெகிழ்ச்சியாகத் தொடங்கினார் சகாயம்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84873
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Empty Re: சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல்

Post by ayyasamy ram Mon Apr 11, 2016 10:00 am

சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் E6YUXERRR0me5Dj6JFD2+sagayamvc3
-

'இப்படியொரு முயற்சி எப்படி சாத்தியமானது?' என்ற கேள்வியை
அவரிடம் கேட்டோம்.
-
" 2009-ம் ஆண்டு நாமக்கல் கலெக்டராக இருந்தபோது, ஒருநாள்
ஃபைல் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஆதரவற்ற
குழந்தைகள் இருவருக்கு அரசின் உதவித் தொகை கொடுப்பது
தொடர்பான கடிதம் ஒன்று வந்திருந்தது.
-
அவர்களுக்கு ஏன் இந்த நிலை வந்தது? என சம்பவத்தைப் படித்த
போது, அதிர்ந்து போனேன். நான் காஞ்சிபுரத்தில் டி.ஆர்.ஓவாக
இருந்து வெளிவந்த நேரத்தில், ஒரு வழக்கில் போலீஸின்
நடவடிக்கை சரியில்லை என்றுகூறி, ஒரு பெண் தீக்குளித்து
தற்கொலை செய்து கொண்டார். இது நடந்தது 2003-ம் ஆண்டு.
அதன்பிறகு அந்தப் பெண்ணின் கணவர் நாமக்கல்லுக்கு வந்து
விட்டார்.
-
அவருக்கு நிலத்தில் நீர் உள்ளதா? என கண்டுபிடிக்கும் வேலை.
இரண்டு குழந்தைகளையும் வளர்த்துக் கொண்டிருந்தார். ஒரு
கட்டத்தில் அவரும் மாரடைப்பால் இறந்துவிட்டார். இந்த இரண்டு
குழந்தைகளையும் யாரோ ஒருவர் வளர்த்துக் கொண்டிருந்தார்.
இவர்களுக்கு உதவித் தொகை கேட்டு வந்த கடிதத்தைத்தான் நான்
பார்த்தேன். உடனே, அந்தக் குழந்தைகளை காப்பகம் ஒன்றில்
சேர்த்துவிட்டேன். அந்த இல்லத்தில் இருந்து அந்தக் குழந்தைகள்
ஓடிப் போய்விட்டனர். அவர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும்
என்பதற்காக, கலெக்டர் அலுவலகத்திற்கு அருகிலேயே ஓர்
இடத்தைத் தேர்வு செய்து அந்தக் குழந்தைகளை பராமரித்து
வந்தேன். அப்படித்தான் என்னுடைய முயற்சி தொடங்கியது"
என்று சொல்லி நிறுத்தியவர்,
-
"அந்த இல்லத்தில் மூன்று நேரம் உணவுகள், பராமரிப்புக்கு
ஆட்கள், அருகில் உள்ள அரசு பள்ளியில் படிப்பு என அனைத்த
வசதிகளையும் செய்து வந்தோம். இதைப் பார்த்து மேலும் சில
ஆதரவற்ற பிள்ளைகள் உதவி கேட்டு வந்தார்கள். அப்படி சிறிது
சிறிதாக வந்தவர்கள், இப்போது 25 குழந்தைகள் வரை
இருக்கிறார்கள். இவர்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய
ஓர் இல்லத்தை உருவாக்க வேண்டும் என மனதில் நினைத்துக்
கொண்டே இருந்தேன்.
-
இவர்களைப் போல வசதியற்ற ஆயிரக்கணக்கான ஏழைப்
பிள்ளைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்
புதிய கட்டடம் கட்டும் முயற்சியைத் தொடங்கினோம். நண்பர்கள்
ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு லத்துவாடியில் 50 சென்ட் இடம்
வாங்கிவிட்டோம்.
-
ஆனால், கட்டடம் கட்ட நிதி வேண்டுமே? மக்களிடமே போனோம்.
என் பெயரைச் சொன்னதும், மக்கள் மறுபேச்சில்லாமல் தங்கள்
உழைப்பில் ஒரு பகுதியை தாராளமாக கொடுத்து உதவினார்கள்.
இதுவரையில் நாற்பத்தைந்து லட்ச ரூபாய் வரைக்கும் கொடுத்து
உதவியிருக்கிறார்கள்.
-
நாமக்கல் மக்களின் கருணை உள்ளத்தால் நெகிழ்ந்து போனேன்.
கட்டடம் பிரமாண்டமாக வளர்ந்து நிற்கிறது. புத்தாண்டுக்குப் பிறகு
ஏழைப் பிள்ளைகளுக்கு நம்பிக்கைகளை விதைக்கும் இடமாக
லத்துவாடி இருக்கும்" என்றார் உணர்ச்சிப்பெருக்கோடு.
-
சகாயம் இருக்கும் இடத்தில் எப்போதும் புதிய நம்பிக்கைகள்
பிறக்கும். லத்துவாடியிலும் அவை கிளை விட்டு பரவட்டும்.
-
--------------------------------------------

-ஆ.விஜயானந்த்
விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84873
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல் Empty Re: சகாயம் தொடங்கிய 'நம்பிக்கை இல்லம்'....! - ஆதரவற்ற பிள்ளைகளை அரவணைத்த நாமக்கல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இல்லம் இனிய இல்லம்
» பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்!
» ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்!
» பாசமில்லாத தாயால் தூக்கியெறியப்பட்ட குழந்தை : அரவணைத்த அன்னையிடம் இருந்து சட்டம் பிரித்தது
» வெற்றிப் பதிவுகள் ! நம்பிக்கை மேல் நம்பிக்கை ! நூல் ஆசிரியர் : தொழிலதிபர் டாக்டர் தே. அருளானந்து ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum