ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீவுத்திடல் அம்மாவுக்கு....

+4
ராஜா
பாலாஜி
balakarthik
M.Jagadeesan
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தீவுத்திடல் அம்மாவுக்கு.... Empty தீவுத்திடல் அம்மாவுக்கு....

Post by M.Jagadeesan Mon Apr 11, 2016 7:07 am

கொட்டும் மழையில் ராஜாஜி
...கட்டு மரத்தின் கதவைத்தான்
தட்டி மதுக்கடை திறக்காதே !
...தள்ளா வயதிலும் கேட்டாரே !

என்று சொல்லும் அம்மாவே !
... ஏனோ இப்படி நடிக்கின்றாய் ?
நன்று மதுக்கடை எல்லாமே
...நானே மூடுவேன் எனச்சொல்ல

உன்னைத் தடுத்தது யாரம்மா ?
...உன்னால் முடியா இச்செயலை
பின்னால் வந்த பீஹாரின்
...முதல்வன் செய்ததைப் பாரம்மா !

நத்தம் விஸ்வா சபையினிலே
...மதுக்கடை மூடல் இல்லையென
சத்தம் போட்டு சொல்லுகையில்
...சகோதரி நீயும் ரசித்தாயே !

“ மரணம் எல்லாம் மதுவாலே !
...மதுவை விலக்கு “ எனச்சொல்லி
மரணம் அடைந்த சசிபெருமாள்
...மறுபடி மீண்டு வருவாரா ?

கோவன் செய்த குற்றமென்ன ?
...கொலையா இங்கு செய்திட்டார் ?
பாவம் ! அவரைச் சிறையினிலே
...பலநாள் போட்டு அடைத்தாயே !

மதுவை எதிர்த்துப் போராட்டம்
...மாநிலம் முழுதும் நடக்கையிலே
எதிலும் கவனம் கொள்ளாமல்
...மௌனம் காத்தது ஏனம்மா ?


வெள்ளப் பெருக்கு யாராலே ?
...வேதனை எல்லாம் யாராலே ?
உள்ளதை மறைக்க நினைக்காதே !
...உன்னால் தானே அதுவெல்லாம் !

காரை விட்டு இறங்காமல்
...காலைச் சிறிதும் நனைக்காமல்
தேறுதல் சொன்ன நிலைகண்டு
...தெய்வம் கண்ணீர் சிந்தியதே !

ஆட்சி முடியும் தருவாயில்
...அடுத்து நானே வந்திட்டால்
காட்சி எல்லாம் மாறுமெனக்
...காதில் பூவைச் சுற்றாதே !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தீவுத்திடல் அம்மாவுக்கு.... Empty Re: தீவுத்திடல் அம்மாவுக்கு....

Post by balakarthik Mon Apr 11, 2016 12:25 pm

கவிதை நன்று ஐயா தீவுத்திடல் அம்மாவுக்கு.... 3838410834 தீவுத்திடல் அம்மாவுக்கு.... 3838410834

என்னைபொருத்தவரை மதுவிலக்கு முற்றிலும் சாத்தியமில்லை சட்டம் போட்டெல்லாம் யாரையும் எதையும் கட்டுபடுதமுடியாது.

இன்று குடிக்கெதிராக போராடுபவர்களே குடித்துவிட்டுத்தான் வருகிறார்கள் உதாரணம் கிழே உள்ள படம்

தீவுத்திடல் அம்மாவுக்கு.... Pmk%2Bprotest

ammaa என்றில்லை ஐயாவும் சரி வைத்தியரும் சரி யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல மொத்தத்தில் திராவிடம் பேசி ஆட்சியை பிடித்த திராவிட கட்சிகளால் நாடு கெட்டதுதான் பலன்


ஈகரை தமிழ் களஞ்சியம் தீவுத்திடல் அம்மாவுக்கு.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தீவுத்திடல் அம்மாவுக்கு.... Empty Re: தீவுத்திடல் அம்மாவுக்கு....

Post by M.Jagadeesan Mon Apr 11, 2016 1:09 pm

பீகாரில் எப்படி சாத்தியமாயிற்று ?

முதலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக திருட்டுத்தனமாக சிலபேர் குடித்துக் கொண்டிருப்பார்கள் . ஆனால் அடுத்த தலைமுறைக் குழந்தைகள் மது என்றால் என்னவென்று தெரியாமல் இருப்பார்கள் . என்னுடைய சிறுவயதில் , மதுவென்றால் என்னவென்று எனக்குத் தெரியாது. கருணாநிதி மதுக்கடை திறந்தவுடன் , அதை வேடிக்கை பார்த்தவர்களில் நானும் ஒருவன் .

ஆகவே அரசு மனம் வைத்தால் அது சாத்தியம்தான் ! ஆனால் அரசுக்குச் சொந்தக்காரர்கள் , மது ஆலைகளை வைத்துக்கொண்டு (மிடாஸ் ) மதுவை உற்பத்திசெய்து , டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விற்பனை செய்யும்போது , மதுக்கடைகளை மூடமாட்டார்கள் .

எனவே மதுக்கடைகளை மூடுவோம் என்று சொல்பவர்களுக்கு வாய்ப்பளித்தால் என்ன ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தீவுத்திடல் அம்மாவுக்கு.... Empty Re: தீவுத்திடல் அம்மாவுக்கு....

Post by balakarthik Mon Apr 11, 2016 1:31 pm

பீகாரில் எப்படி சாத்தியமாயிற்று ?

பீகாரில் இப்பொழுதுதான் அறிவித்திருக்கிறார்கள் நடைமுறை சிக்கல் இனிதான் தெரியும் கேரளாவில் ஆரம்பித்தார்களே என்ன ஆனது அதுபோலதான்


ஈகரை தமிழ் களஞ்சியம் தீவுத்திடல் அம்மாவுக்கு.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தீவுத்திடல் அம்மாவுக்கு.... Empty Re: தீவுத்திடல் அம்மாவுக்கு....

Post by M.Jagadeesan Mon Apr 11, 2016 1:58 pm

ஒரு காலத்தில் பால்ய விவாகம் , உடன்கட்டை ஏறுதல் போன்ற சமுதாயக் கொடுமைகள் நடந்துகொண்டு இருந்தன . தற்போது இவைகள் அறவே ஒழிக்கப்பட்டுவிட்டன !

நடைமுறைச் சிக்கல் இருக்கும் என்று பயந்துகொண்டு இருந்திருந்தால் , இந்தக் கொடுமைகள் இன்னமும் நாட்டில் நடந்துகொண்டுதான் இருக்கும் .

ஆகவே மதுவை ஒழிப்பதில் நடைமுறைச் சிக்கல் இருக்கும் என்பது தற்காலிகம்தான் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தீவுத்திடல் அம்மாவுக்கு.... Empty Re: தீவுத்திடல் அம்மாவுக்கு....

Post by balakarthik Mon Apr 11, 2016 2:07 pm

நடக்கவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் நடந்தால் மகிழ்ச்சிதான் ஆனால் ஒரேஅடியாக நடக்காது என்பதே என்கருத்து படி படியாகத்தான் குறைக்கவேண்டும் திடீர் என்று நிறுத்தினால் மதுவுக்கு அடிமையானவர்கள் பயித்தியம் பிடிக்கும் நிலைக்கு தள்ளபடுவார்களே


ஈகரை தமிழ் களஞ்சியம் தீவுத்திடல் அம்மாவுக்கு.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தீவுத்திடல் அம்மாவுக்கு.... Empty Re: தீவுத்திடல் அம்மாவுக்கு....

Post by பாலாஜி Mon Apr 11, 2016 2:22 pm

M.Jagadeesan wrote:ஒரு காலத்தில் பால்ய விவாகம் , உடன்கட்டை ஏறுதல் போன்ற சமுதாயக் கொடுமைகள் நடந்துகொண்டு இருந்தன . தற்போது இவைகள் அறவே ஒழிக்கப்பட்டுவிட்டன !

நடைமுறைச் சிக்கல் இருக்கும் என்று பயந்துகொண்டு இருந்திருந்தால் , இந்தக் கொடுமைகள் இன்னமும் நாட்டில் நடந்துகொண்டுதான் இருக்கும் .

ஆகவே மதுவை ஒழிப்பதில் நடைமுறைச் சிக்கல் இருக்கும் என்பது தற்காலிகம்தான் .

ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தீவுத்திடல் அம்மாவுக்கு.... Empty Re: தீவுத்திடல் அம்மாவுக்கு....

Post by ராஜா Mon Apr 11, 2016 2:46 pm

M.Jagadeesan wrote:பீகாரில் எப்படி சாத்தியமாயிற்று ?

முதலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக திருட்டுத்தனமாக சிலபேர் குடித்துக் கொண்டிருப்பார்கள் . ஆனால் அடுத்த தலைமுறைக் குழந்தைகள் மது என்றால் என்னவென்று தெரியாமல் இருப்பார்கள் . என்னுடைய சிறுவயதில் , மதுவென்றால் என்னவென்று எனக்குத் தெரியாது. கருணாநிதி மதுக்கடை திறந்தவுடன் , அதை வேடிக்கை பார்த்தவர்களில் நானும் ஒருவன் .

ஆகவே அரசு மனம் வைத்தால் அது சாத்தியம்தான் ! ஆனால் அரசுக்குச் சொந்தக்காரர்கள் , மது ஆலைகளை வைத்துக்கொண்டு (மிடாஸ் ) மதுவை உற்பத்திசெய்து , டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விற்பனை செய்யும்போது , மதுக்கடைகளை மூடமாட்டார்கள் .

எனவே மதுக்கடைகளை மூடுவோம் என்று சொல்பவர்களுக்கு வாய்ப்பளித்தால் என்ன?


உண்மை தான் ஐயா , எங்களின் சிறுவயதில் கிராமத்து வீட்டு முன் உள்ள திண்ணையில் அப்பாவுடன் உட்கார்ந்திருந்தால் , சில நேரம் சில உறவினர்கள் எங்கள் வீட்டை தாண்டும் போது எங்கள் பக்கம் முகத்தை திருப்பாமலேயே கடந்து போவார்கள். சிறுபிள்ளைகள் என்பதால் நாங்களும் அவர்களை பார்த்த உற்சாகத்தில் உறவுமுறை சொல்லி அழைத்தாலும் காதில் வாங்காமலேயே போய்கொண்டிருப்பர், அப்பா சொல்லுவார் "விடுங்கடா அவன் இப்ப இங்க வரமாட்டான்" என்று. ஏன் என்று எங்களுக்கு சில வருடங்களுக்கு பின் தான் தெரிந்தது.

கிராமத்தில் , எங்கள் வீடு முதல் தெருவில் இருப்பதால் அனைவரும் எங்கள் தெருவை கடந்து தான் போகணும். குடித்துவிட்டு வருபவர்களில் பெரும்பாலும் அப்பாவிடம் படித்த முன்னால் மாணவர்களாக இருப்பார், அதனால் யாரும் திரும்பி கூட பார்க்காமல் கடந்து செல்வர்.

ஆனால் இப்ப 6 , 7 படிக்கும் மாணவர்கள் பள்ளி சீருடையில் சென்று மது வாங்கும் புகைப்படங்களை பார்க்கும் போது வேதனையாக உள்ளது.


நீங்கள் சொல்வது போல , "மதுக்கடைகளை மூடுவது நடைமுறை சாத்தியமில்லை" என்று சொல்பவர்களை விட , "மதுக்கடை மூடுவதற்கு தான் முதல் கையெழுத்து " என்று சொல்லுபவருக்கு ஒரு வாய்ப்பளிக்கலாமே என்று தான் தோன்றுகிறது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தீவுத்திடல் அம்மாவுக்கு.... Empty Re: தீவுத்திடல் அம்மாவுக்கு....

Post by T.N.Balasubramanian Mon Apr 11, 2016 5:51 pm

தமிழ் மக்களை , பணம் உள்ளவனோ ,பணம் இல்லாதவனோ ,
இலவசம் என்ற ஒரு பொருளை கொடுத்து , மதி மயக்கி ,
தேர்தல் என்றாலே எந்த கட்சி எவ்வளவு பணம் கொடுக்கும் ,
என்னென்ன பொருட்களை இலவசமாக கொடுக்கும் என்று
எதிர்பார்க்கும் பிச்சைக்காரனாக மாற்றியது திராவிட கட்சிகள்.
இலவசம் கொடுக்க , மதுக்கடைகள் மூலம் கிடைக்கும் வருமானமே அவசியம் எனக் கூறி , தங்கள் குடும்ப மதுபான தொழிற்சாலைகளை விருத்தி செய்துகொண்ட கட்சிகள் திமுக அதிமுக .

திருடிய திருடன் ஓடும்போது திருடன் திருடன் என்று கத்திக்கொண்டே ஓட ,
அவனை பின் தங்க வைத்து விட்டு இல்லாத திருடனை தேடி ஓடும் கும்பல்கள்
நம் தமிழ் மக்கள் . அரசியல் லாபம் பற்றி அதிகம் அறியாத காலத்தில், அவசர அவசரமாக ,நானோ எந்தன் குடும்பமோ அரசியலில் ஈடுபட்டால் ,நார்ச்சந்தியில்
எங்களையும் எங்கள்  குடும்பத்தினரையும்  சவுக்கடி கொடுக்கவும் என்று சொன்னவர் , திராவிட கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்து சொத்து சேர்த்தவர் . பசுமை தாயகம் வேண்டும் இன்று கூறும் அவர் அன்று ஆயிரக்கணக்கில் மரங்களை வெட்டி அழித்தவர் .   ஐந்து வருடத்திற்கும் குறைவான மந்திரி பதவி காலத்தில்   அனுபவித்த சலுகைகள் , மந்திரிக்கே இவ்வளவு என்றால் முதலமைச்சருக்கு எவ்வளவு என்ற கணக்கு .

இன்னொரு முதலமைச்சர் விரும்பியோ , என்ன சொல்லுவது .அவர் பேசுவதை விட அவர் மனைவியின் வீராவேச பேச்சு , கேட்க நன்றாகத்தான் இருக்கிறது .அவர் பேசுவது ......என்ன , புரிவது கஷ்டம் . நாளை இவர் ஆட்சிக்கு வந்தால் ,
பீகார்தான் நினைவுக்கு வரும் ராப்ரிதேவி பெயரளவில் முதல் அமைச்சர் .
லாலு in cognito முதலமைச்சர் .  தமிழகத்தில்லும் அதுதான் நடக்கும் .
திரை மறை முதலமைச்சர் ராணி ருத்ரமாதேவிதான் .
சட்டசபை நிகழ்சிகள் .....................எப்பிடி இருக்கும் . எக்ஸ் TV இல் telecast ஆகுமோ ?????


எந்த ஒரு கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைப்பது என்பது சந்தேகம் என்றால்  , கூட்டணி ஆட்சியா?  
தொகுதிகள் பங்கீடு அப்பிடி உள்ளனவே . (அதிமுக / பாம க  வை தவிர )

பார்ப்போம் ,இன்னும் 39 நாட்கள் .

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Mon Apr 11, 2016 8:43 pm; edited 1 time in total


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தீவுத்திடல் அம்மாவுக்கு.... Empty Re: தீவுத்திடல் அம்மாவுக்கு....

Post by krishnaamma Mon Apr 11, 2016 8:11 pm

M.Jagadeesan wrote:ஒரு காலத்தில் பால்ய விவாகம் , உடன்கட்டை ஏறுதல் போன்ற சமுதாயக் கொடுமைகள் நடந்துகொண்டு இருந்தன . தற்போது இவைகள் அறவே ஒழிக்கப்பட்டுவிட்டன !

நடைமுறைச் சிக்கல் இருக்கும் என்று பயந்துகொண்டு இருந்திருந்தால் , இந்தக் கொடுமைகள் இன்னமும் நாட்டில் நடந்துகொண்டுதான் இருக்கும் .

ஆகவே மதுவை ஒழிப்பதில் நடைமுறைச் சிக்கல் இருக்கும் என்பது தற்காலிகம்தான் .

நீங்க சொல்வது ரொம்ப சரி ஐயா, கஷ்டப்பட்டாவது நாம் நம்முடைய அடுத்த தலைமுறைகள் நன்கு வாழ வழி செய்யத்தான் வேண்டும், சிலர் பக்கத்து மாநிலத்துக்கு போய் குடிப்பார்கள் என்பதற்காக இங்கேயே கடைகளை தொடர்ந்து நடத்துவதில் எனக்கும் உடன் பாடு இல்லை தான் .......கொஞ்சமோ நிறையவோ , விஷம் விஷம் தானே! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தீவுத்திடல் அம்மாவுக்கு.... Empty Re: தீவுத்திடல் அம்மாவுக்கு....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum