புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_vote_lcapமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_voting_barமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_vote_rcap 
84 Posts - 44%
ayyasamy ram
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_vote_lcapமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_voting_barமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_vote_rcap 
75 Posts - 39%
T.N.Balasubramanian
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_vote_lcapமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_voting_barமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_vote_lcapமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_voting_barமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_vote_lcapமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_voting_barமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
i6appar
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_vote_lcapமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_voting_barமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_vote_rcap 
4 Posts - 2%
Karthikakulanthaivel
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_vote_lcapமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_voting_barமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
prajai
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_vote_lcapமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_voting_barமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_vote_lcapமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_voting_barமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Srinivasan23
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_vote_lcapமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_voting_barமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_vote_lcapமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_voting_barமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_vote_rcap 
441 Posts - 47%
heezulia
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_vote_lcapமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_voting_barமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_vote_rcap 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_vote_lcapமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_voting_barமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_vote_rcap 
77 Posts - 8%
T.N.Balasubramanian
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_vote_lcapமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_voting_barமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_vote_rcap 
38 Posts - 4%
mohamed nizamudeen
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_vote_lcapமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_voting_barமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_vote_rcap 
30 Posts - 3%
prajai
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_vote_lcapமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_voting_barமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Srinivasan23
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_vote_lcapமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_voting_barமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%

sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது…

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 02, 2016 5:47 pm

First topic message reminder :

மகா பெரியவா ஒருநாள் அவர் ஆழ்ந்து
தியானத்தில் இருந்தபோது பாம்பு ஒன்று
அவருடைய தொடையில் ஏறி சுருண்டு
படுத்திருப்பதைப் பார்த்து நாங்கள் பதறிப்
போனோம்.

அந்த அறைக்குள் நாங்கள் போகக்கூடாது;
அவரை எச்சரிக்கவும் வழியேதும் இல்லை.
மூச்சுவிடக்கூட அஞ்சியபடியே நாங்கள்
ஜன்னல் வழியாக
அவரையே பார்த்துக்கொண்டிருந்தோம்.

அவர் கண்ணைத் திறந்து பார்த்தபோது,
அவர் மடியில் பாம்பு ஒன்று படுத்திருப்பதை
சன்னமான குரலில் தெரியப்படுத்தினோம்.

அவர் உடனே தன்னுடைய ஆடையை லேசாக
உதறினார், பாம்பு ஊர்ந்து வெளியேறியது.
பெரியவா எங்கள் பக்கம் திரும்பி, “அது நாலு
நாளா எங்கிட்ட வர்றது, இதுக்கு என்னத்துக்கு
ஆர்ப்பாட்டம் என்று மெல்லிய குரலில்
முணுமுணுத்தார்”

—————————–
படித்ததில் பிடித்தது

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Apr 06, 2016 6:05 am

எல்லாம் மால் என்னங்க .யாருங்க நாட்ல வாங்கிய கடனை நாணயமா திருப்பி கொடுக்க நினைக்கிறாங்க. அந்த நினைப்பே இல்லாம நடங்கன்னு நல்லவங்க சொல்லி கொடுத பாடங்க.அதனாலே!!!!! மால் கொடுத்து வலிய கடன் படராங்ன்னா பாருங்களேன்....

krissrini
krissrini
பண்பாளர்

பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Postkrissrini Sat Apr 09, 2016 11:01 am

மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 Clearமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 Clearமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 Clearமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 Clear

"பதினோரு ரூபாயில் புது வாழ்க்கை "

(‘நீ சமையல் வேலை பார்க்கிறே இல்லையா…. இங்கே வருகிற குழந்தைகளுக்குக் கல்கண்டு கொடுத்தா திங்கரதில்லே… முடிஞ்சா கொஞ்சம் லட்டு செஞ்சிண்டுவந்து தாயேன் !’)

அறுசுவைஅரசு

நன்றி-பால ஹனுமான்.

ஒவ்வொரு வருடமும் மே மாதம் நெருங்க நெருங்க எனக்குள் ஒரு விதமான பரபரப்பும் பரவசமும் தொற்றிக்கொள்வது வழக்கம். எனக்கு மட்டுமல்ல… என் குடும்பத்தார் அத்தனை பேருக்கும்!

காஞ்சி முனிவர் மஹா பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகளின் ‘ஜெயந்தி’ (பிறந்த தினம்) வருவது அந்த மாதத்தில்தான். அந்த நாளின் போது, நான், என் மனைவி நாகலட்சுமி மற்றும் குடும்பத்தினர் முழுவதுமாக காஞ்சிபுரத்துக்குச் சென்று, ஏதாவது ஒரு கல்யாண மண்டபத்தை வாடகைக்குப் பிடித்து, லட்டுகள் செய்து, கூடையில் சுமந்து கொண்டுபோய் மடத்தில் ஒப்படைப்போம். இது ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து கொண்டிருக்கிற நிகழ்ச்சி.

இந்த சாதாரண சமையல்காரன், ஒரு கட்டத்தில் வாழ்க்கை மீதே நம்பிக்கை இழந்து ‘இதோடு எல்லாம் போதும்’ என்று விபரீதமான முடிவு எடுக்க இருந்த சமயத்தில், நம்பிக்கை கொடுத்து, “நீ நன்றாகத்தான் இருப்பாய்’ என்று அபயக்கரம் நீட்டிய அந்தமாமுனிவருக்கு நான் செலுத்தி வரும் காணிக்கை இது.கொஞ்சம் முழுசாகச் சொன்னால்தான் உங்களுக்குப் புரியும்.

எனக்கு ஏழு வயதாயிருக்கும்போது சங்கர மடம் கும்பகோணத்தில் இயங்கி வந்தது. மஹா பெரியவாள் அங்குதான் இருந்தார். தினந்தோறும் மதியம் பன்னிரண்டு மணி தொடங்கி நாலுமணிவரையில் அன்னதானம் ஜேஜேவென்று அங்கே நடக்கும். இதற்காக மூட்டை மூட்டையாக அரிசி வந்து குவியும். மடத்தில் அப்போது பெரிய சமையல்காரர் — கபிஸ்தலம் வெங்கட்ராமய்யர். அவருக்கு உதவியாக என் அப்பா (விக்கிரபாண்டியம் நாராயணசாமி அய்யர்) உட்பட நாலைந்து பேர் இருந்தனர். என்னைப் போல் சின்னப் பையன்கள் நிறையப் பேர் எடுபிடிகளாக இருந்தோம்.

ஒவ்வொரு பந்திக்கும் சாப்பாடு முடிந்ததும் அந்த இலைகளை அள்ளி எடுத்து மூங்கில் கூடைகளில் நிரப்பி எடுபிடி பையன்களில் தோளில் வைப்பார்கள். படுவெயிட்டாக இருக்கும். இரண்டு கைகளால் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு ஓடும்போது, கூடைக்குள்ளிருந்து மிச்சம் மீதி சாம்பார், ரசம், பாயசமெல்லாம் காதோரமாகக் கொட்டி தோளெல்லாம் வழியும். அதைத் துடைப்பதற்கு முடியாமல் அப்படியே தலையை ஒடித்துக் கன்னத்தால் தேய்த்து விட்டுக் கொள்கிறபோது அது வாயில்பட்டு நாக்கில் ருசிக்கும். ‘எச்சில்’ என்று தோன்றாது. பெரியவர்கள் எல்லாம் சொல்லிக் கொடுத்த மாதிரி, இறைவனால் கொடுக்கப்பட்ட பிரசாதத்தின் மீதியாகத் தான் அது தோன்றும் என்பதால் துளிகூட அருவருப்பு இருக்காது எங்களுக்கு!

இப்படி இலைக்கூடையைக் கொண்டுபோய் கொட்டிய கையோடு, காவிரியில் குளித்துவிட்டு தயாராக வந்து நிற்க வேண்டும், அடுத்த பந்தியின் இலையை எடுப்பதற்கு!

சங்கர மடத்துக்கு இணையாக விசேஷ நாட்களில் தெய்வப்பெருமாள் நல்லூர் அன்னதான சிவன் என்பவரும் தனியாக அன்னதானம் செய்வார். இத்தனைக்கும் சாதாரண சமையல்காரர்தான். அதென்னவோ அவருக்குள் ஒரு வெறி. தானே கடை கடையாக ஏறி இறங்கி, வியாபாரிகளிடம் மன்றாடி அரிசி, பருப்பு என்று தானம் வாங்கி வந்து ஏழைகளுக்கு அன்னதானம் நடத்துவார்.

‘மடத்துக்குப் போட்டியாக அவர் அப்படிச் செய்கிறார்’ என்று ஒரு தரப்பினர் பேசிக்கொண்டாலும், மஹா பெரியவருக்கு இதில் சந்தோஷம்தான். தன்னை தரிசிப்பதற்கு அன்னதான சிவன் வரும்போது, சிரித்துக் கொண்டே, ‘என்ன சிவன், இன்னிக்கு எத்தனை பேருக்கு சாப்பாடு போட்டாய் ?’ என்று பெரியவர் கேட்பார்.

‘இன்னிக்கும் நிறையப் பேருக்குப் போட்டேன்!’ என்று சிவனும் பெருமையாகவும் மகிழ்ச்சியுடனும் சொல்வார். (இந்த அன்னதான சிவன் பேரிலேயே பெரிய கமிட்டி போட்டு, பல பெரிய மனிதர்கள் சேர்ந்து ‘டிரஸ்ட்’ டாகத் தொடர்ந்து அன்னதானப் பணியைச் செய்துகொண்டு இருந்தார்கள். அந்த ‘டிரஸ்ட்’ இப்போது இருக்கிறதா எனத் தெரியவில்லை).

இந்த மாதிரியான கலகலப்பான சூழல்களைவிட்டு என் வாழ்க்கை அப்படியும் இப்படியும் திசை மாறியது. திருமணமாகி என் மனைவியோடு சென்னையில் வசிக்க ஆரம்பித்தபோது எனக்கு வயது இருபத்து மூன்று. ஒரு குழந்தையும் பிறந்து விட்டது. என் வாழ்க்கையில் அதுபோல் கடினமான ஒரு கட்டத்தை நான் அனுபவித்ததில்லை. வறுமை எங்களைப் பிடுங்கித் தின்றது.

‘வேண்டாம்….இதற்கு மேலும் நம்மால் வாழ்வது என்பது முடியாது. வறுமையை எதிர்த்துப் போராடுவது இனி நடக்காத காரியம்!’ என்று நானும் என் மனைவியும் முடிவெடுத்தோம்.

இடையில் இத்தனை வருஷம் ‘டச்’ விட்டுப் போயிருந்த மடத்துக்கு ஒரே ஒரு முறை போய், மஹா பெரியவரைப் பார்த்து விட்டு வந்துவிடலாம் என்று முடிவெடுத்தோம். இப்போது மடம் காஞ்சிபுரத்தில் இருந்தது.

காஞ்சிக்குப் போனேன். பெரியவரை தரிசனம் செய்தேன். என் மனசு கலக்கத்தைப் பட்டும்படாமல் அவரிடம் சொன்னேன்.

எல்லாம் பொறுமையாகக் கேட்டுவிட்டு, ‘சரி! இன்று நீயும் உன் மனைவியும் ஊருக்குப் போக வேண்டாம். இங்கேயே தூங்குங்கள். நாளை போய்க் கொள்ளலாம்!’ என்று என்னிடம் காஞ்சிப் பெரியவர் சொல்ல…. கட்டிக்கொள்ள மாற்றுத்துணிக்கூட எங்களிடம் இல்லையே என்ற வேதனைக் குமுறலுடன் அன்று காஞ்சி மடத்திலேயே தூங்கினோம். பகவான் பாதத்தில் படுத்திருக்கிறபோது மனம் துக்கங்களை மறந்திருப்பதால், தூக்கம் நன்றாக வந்தது.

காலையில் எழுந்து குளித்துப் பெரியவரைத் தரிசனம் செய்யப் போய் நின்றோம். புது வேட்டியும், புதுப் புடவையும் எடுத்து வரச் சொல்லி, அதை எங்களிடம் கொடுத்து உடுத்திக்கொண்டு வரச் சொன்னார்.

உடுத்திக்கொண்டு போய் நமஸ்கரித்ததும், எதிரில் மூங்கில் தட்டிலிருந்த பதினோரு ரூபாய் பணத்தை எடுத்து எங்களிடம் கொடுக்கச் சொன்னார். ‘போ! எல்லாம் சரியாயிடும்! ‘ என்று கையை உயர்த்தி ஆசீர்வதித்தார். என்னுள் புது நம்பிக்கை துளிர் விட்டது. ‘வறுமையை எதிர்த்துப் போராடலாம். தெய்வத்தின் அருள் நமக்கு இருக்கிறது. வெற்றி நிச்சயம் கிடைக்கும்’ என்ற உறுதி பிறந்தது.

அன்றிலிருந்துதான் என்னைப் பற்றியிருந்த வறுமை கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போக ஆரம்பித்தது. கல்யாண வேலைக்குக் கூப்பிட்டு, மெள்ள மெள்ள ஆள் வர ஆரம்பித்தனர். அன்றாட ஜீவனத்துக்குக் காசு புழங்க ஆரம்பித்தது.

அதன் பின் மாதா மாதம் முதல் தேதியன்று மடத்துக்குப் போவதை வழக்கமாக வைத்துக் கொண்டேன். ஒரு முதல் தேதியன்று அப்படிப்போய் நமஸ்கரித்தபோது, ‘நீ சமையல் வேலை பார்க்கிறே இல்லையா…. இங்கே வருகிற குழந்தைகளுக்குக் கல்கண்டு கொடுத்தா திங்கரதில்லே… முடிஞ்சா கொஞ்சம் லட்டு செஞ்சிண்டுவந்து தாயேன் !’ என்றார் பெரியவர்.

வீட்டுக்கு வந்து என்னதான் பிராய்ந்து பார்த்தும் சல்லிக்காசு இல்லை. என் மனைவி நாகலட்சுமியைப் பார்த்தேன். காதில் தோடு தெரிந்தது. அதை விற்று லட்டு செய்து (சுமார் நூறு கூட இருக்காது) கொண்டு போனேன். பெரியவர் முன் வைத்து வணங்கியதும்……

‘என்ன…. லட்டு செய்ய முடிஞ்சுதா? ரொம்பத்தான் கஷ்டப்பட்டு செஞ்சுண்டு வந்தே போலிருக்கே!’ என்றார் மெலிதான புன்னகையுடன்.

என்னால் அப்போது எதுவும் சொல்ல முடியவில்லை. ‘நம் கஷ்டம் தெய்வம் வரை போனதே…. அதுவே போதும்’ என்று நினைத்துக் கொண்டு வந்துவிட்டேன்.

அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் பெரியவரின் ஜெயந்தி (பிறந்த நாள்) அன்று லட்டு செய்து கொண்டு போவதை நானே வழக்கமாக்கிக் கொண்டேன். லட்டுகள் நூறு ஐந்நூறு ஆனது….ஐந்நூறு ஆயிரம் ஆனது… இன்று எங்கள் குடும்பம் முழுவதும் மே மாதத்தில் பெரியவர் ஜெயந்தி வந்தால், அந்தப் புனிதமான நாளில் லட்டு செய்ய காஞ்சிபுரம் கிளம்பிவிடும்.

ஸ்ரீனிவாசன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 09, 2016 12:24 pm

இங்கே வருகிற குழந்தைகளுக்குக் கல்கண்டு கொடுத்தா திங்கரதில்லே… முடிஞ்சா கொஞ்சம் லட்டு செஞ்சிண்டுவந்து தாயேன் !’ என்றார் பெரியவர்.

வீட்டுக்கு வந்து என்னதான் பிராய்ந்து பார்த்தும் சல்லிக்காசு இல்லை. என் மனைவி நாகலட்சுமியைப் பார்த்தேன். காதில் தோடு தெரிந்தது. அதை விற்று லட்டு செய்து (சுமார் நூறு கூட இருக்காது) கொண்டு போனேன். பெரியவர் முன் வைத்து வணங்கியதும்……

‘என்ன…. லட்டு செய்ய முடிஞ்சுதா? ரொம்பத்தான் கஷ்டப்பட்டு செஞ்சுண்டு வந்தே போலிருக்கே!’ என்றார் மெலிதான புன்னகையுடன்.

என்னால் அப்போது எதுவும் சொல்ல முடியவில்லை. ‘நம் கஷ்டம் தெய்வம் வரை போனதே…. அதுவே போதும்’ என்று நினைத்துக் கொண்டு வந்துவிட்டேன்.

நீர் துளிகள் .....விழி ஓரத்தில்
அவரது அருள் பார்வை கஷ்டங்களை நீக்கும் .
எங்கோ நடக்கும் சிறிய விஷயங்களும்
தப்பாது இவர் பார்வைக்கு மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 CyiUP8S9q5riNtYiYNsQ+namaste_hands

மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 TsyMdyjWTBCEEUhBsaHV+namaste_hands  

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 09, 2016 12:33 pm

ரமண மகரிஷி அவர்களும் ஒரு முறை தினத்தில் இருந்த போது ,
அவர் கால்கள் மேல் சுள் எறும்புகள் கூட்டம் கூட்டமாக மொய்த்துக் கொண்டு ,
இருக்க பதறிப் போன பக்தர்கள் ,இதை அவர் கவனத்திற்கு கொண்டு செல்ல ,
பாவம், அதுகளுக்கு ஆகாரம் இன்று எந்தன் கால்தான் . ஒன்றும் செய்யவேண்டாம் என்று விட்டாராம் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 10, 2016 1:18 am

M.Jagadeesan wrote:மனிதனின் எண்ணங்களை , செடிகளும் ,பறவைகளும் , விலங்குகளும் புரிந்துகொண்டு அதற்கேற்ப மாற்றுவினை ஆற்றுகின்றன . ஆனால் ஒரு மனிதனின் எண்ணங்களை மற்றொரு மனிதனால் புரிந்துகொள்ள முடிவதில்லை .

புரிந்திருந்தால் , மல்லையாவுக்கு 9000 கோடி கடனை வங்கிகள் கொடுத்திருக்குமா ?

அப்படி இல்லை ஐயா, இவர்களும் நன்கு தெரிந்தே தான் கடன் தருகிறார்கள், அதில் அவர்களுக்கு வேண்டிய பங்கையும் தவறாமல் வாங்கிக்கொள்கிறார்கள்.......பைத்தியமாக அடிக்கப்படுவது பொதுமக்களாகிய நாம் தான் சோகம் ...அந்தப்பாவியால் நாம் இப்போ நம்முடைய சிறு சேமிப்புகளின் வட்டி விகிதத்தை இழக்கிறோம் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 10, 2016 1:25 am

மனம் நெகிழவைக்கும் பகிர்வு ஸ்ரீநி !.............மிக்க நன்றி ! ........... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Apr 10, 2016 9:17 am

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:மனிதனின் எண்ணங்களை , செடிகளும் ,பறவைகளும் , விலங்குகளும் புரிந்துகொண்டு அதற்கேற்ப மாற்றுவினை ஆற்றுகின்றன . ஆனால் ஒரு மனிதனின் எண்ணங்களை மற்றொரு மனிதனால் புரிந்துகொள்ள முடிவதில்லை .

புரிந்திருந்தால் , மல்லையாவுக்கு 9000 கோடி கடனை வங்கிகள் கொடுத்திருக்குமா ?

அப்படி இல்லை ஐயா, இவர்களும் நன்கு தெரிந்தே தான் கடன் தருகிறார்கள், அதில் அவர்களுக்கு வேண்டிய பங்கையும் தவறாமல் வாங்கிக்கொள்கிறார்கள்.......பைத்தியமாக அடிக்கப்படுவது பொதுமக்களாகிய நாம் தான் சோகம் ...அந்தப்பாவியால் நாம் இப்போ நம்முடைய சிறு சேமிப்புகளின் வட்டி விகிதத்தை இழக்கிறோம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1201779
ஆமாம் ! நீங்கள் சொல்வது உண்மைதான் ! இந்தியன் வங்கியின் முன்னாள் சேர்மன் M . கோபால கிருஷ்ணன் தற்போது தண்டிக்கப் பட்டுள்ளார் ! எவ்வளவு வாங்கினாரோ தெரியவில்லை ! இரண்டு வருடங்கள் உள்ளே இருந்துவிட்டு வந்தால் , குடியா முழுகிவிடும் ? வாங்கியது எல்லாம் பறிமுதல் செய்யவில்லையே !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 10, 2016 9:41 am

M.Jagadeesan wrote:
krishnaamma wrote:
M.Jagadeesan wrote:மனிதனின் எண்ணங்களை , செடிகளும் ,பறவைகளும் , விலங்குகளும் புரிந்துகொண்டு அதற்கேற்ப மாற்றுவினை ஆற்றுகின்றன . ஆனால் ஒரு மனிதனின் எண்ணங்களை மற்றொரு மனிதனால் புரிந்துகொள்ள முடிவதில்லை .

புரிந்திருந்தால் , மல்லையாவுக்கு 9000 கோடி கடனை வங்கிகள் கொடுத்திருக்குமா ?

அப்படி இல்லை ஐயா, இவர்களும் நன்கு தெரிந்தே தான் கடன் தருகிறார்கள், அதில் அவர்களுக்கு வேண்டிய பங்கையும் தவறாமல் வாங்கிக்கொள்கிறார்கள்.......பைத்தியமாக அடிக்கப்படுவது பொதுமக்களாகிய நாம் தான் சோகம் ...அந்தப்பாவியால் நாம் இப்போ நம்முடைய சிறு சேமிப்புகளின் வட்டி விகிதத்தை இழக்கிறோம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1201779
ஆமாம் ! நீங்கள் சொல்வது உண்மைதான் ! இந்தியன் வங்கியின் முன்னாள் சேர்மன் M . கோபால கிருஷ்ணன் தற்போது தண்டிக்கப் பட்டுள்ளார் ! எவ்வளவு வாங்கினாரோ தெரியவில்லை ! இரண்டு வருடங்கள் உள்ளே இருந்துவிட்டு வந்தால் , குடியா முழுகிவிடும் ? வாங்கியது எல்லாம் பறிமுதல் செய்யவில்லையே !
மேற்கோள் செய்த பதிவு: 1201806

ஆமாம் ஐயா, அதுவும் அவர்கள் எல்லாம் A கிளாஸ் ஜெயிலில் இருப்பார்கள் சோகம்....அந்த சத்தியம் ஆள் என்ன ஆனாரோ?..........அங்கு வேலை செய்பவர்கள் தான் கஷ்டப்படுவர்களே தவிர ஊழல் செய்பவர்கள் இல்லையே ஐயா ! சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 10, 2016 11:45 am

பெரியவா ,ரமண ரிஷி அவர்கள் வாழ்ந்தமுறை ,பெருமையாக பேசிக்கொண்டு இருக்கும்போது ,
விளையாடி விட்ட இந்த கோபாலக்ருஷ்ணன் , மல்லையா, சத்யம் ராஜு
இடையில் புகுந்து விளயாடுராங்களே! சோகம் சோகம்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 10, 2016 11:51 am

T.N.Balasubramanian wrote:பெரியவா ,ரமண ரிஷி அவர்கள் வாழ்ந்தமுறை ,பெருமையாக பேசிக்கொண்டு இருக்கும்போது ,
விளையாடி விட்ட இந்த கோபாலக்ருஷ்ணன் , மல்லையா, சத்யம் ராஜு
இடையில் புகுந்து விளயாடுராங்களே! சோகம் சோகம்

ரமணியன்

நீங்களும் ஈகரை பெரியவா தவறை மன்னித்து அமைதியாக இருங்கோ ஆறுதல் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஈகரை தமிழ் களஞ்சியம் மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக