ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தராசு பதில்கள் (கல்கி)

Go down

தராசு பதில்கள் (கல்கி) Empty தராசு பதில்கள் (கல்கி)

Post by ayyasamy ram Sat Apr 02, 2016 10:05 am

மா. உலகநாதன், திருநீலக்குடி:
தர்மபுரி பஸ் எரிப்புக் குற்றவாளிகளுக்கு மரண
தண்டனை ஆயுளாகக் குறைக்கப்பட்டிருக்கிறதே?

-
ராஜீவ் கொலை வழக்கிலேயே மரண தண்டனையை
ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றமே
குறைத்திருக்கும்போது இது எதிர்பார்க்கக்கூடியதே.

தீர்ப்பில், 'கூட்டத்தினரின் வெறி காரணமாக ஏற்பட்ட
உயிரிழப்பு இது, முன்விரோதம் ஏதுமில்லை' என்று
நீதிபதி குறிப்பிட்டிருப்பது கவனத்துக்குரியது.

ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க தற்போது
தமிழக அரசு முயற்சி மேற்கொள்வது போல் இந்தக்
குற்றவாளிகளையும் சில காலம் சென்று விடுவிக்க
வேண்டும் என்ற கோரிக்கை எழாமலிருந்தாலே
ஆச்சரியம்தான்.

நம் தலைவர்களிடம் கருணை கட்டுக்கடங்காமல்
பெருகிவருவதற்கான காரணத்தை மனோதத்துவ
நிபுணர்கள்தான் விளக்க வேண்டும்.
-
-----------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தராசு பதில்கள் (கல்கி) Empty Re: தராசு பதில்கள் (கல்கி)

Post by ayyasamy ram Sat Apr 02, 2016 10:06 am


ஏ. சுகுமார், காட்பாடி:
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் கலாசார விழாவுக்கு மத்திய
அரசு தனிப்பிரியம் காட்டுவதாக சர்ச்சை பற்றி?

-
இந்து மதமும் அதன் இந்திய கலாசாரமும்
உன்னதமானவை. அதன் எளிமையே அதன் சிறப்பு.
இயற்கை வழிபாடே அதில் முதலிடம் பெறுகிறது.
அவ்வாறிருக்க அதற்கு ஆடம்பர விழா எதற்கு?

அதுவும் யமுனையின் வௌ்ளச் சமவெளிப்
பகுதியை ராணுவத்தைக் கெண்டு சீர் குலைத்து
பாலம் கட்டி பாழ்படுத்தும்போது பசுமைத் தீர்ப்பாயம்
கேள்விகள் எழுப்பவே செய்யும்.

உலக மக்களிடையே இந்துமத விழுமியங்களை
எடுத்துச் செல்லும் பணியில், ஸ்ரீஸ்ரீயும் இன்னபிற
ஆன்மிகத் தலைவர்களும் ஏற்கெனவே முழு
ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர்.

பிரம்மாண்ட கலாசார விழா, சர்ச்சைக்கு வழி
வகுத்தது மட்டுமே மிச்சம். அடக்கத்துடன்
இருந்திருந்தால் அதிகம் சாதித்திருக்கலாம்.

ஸ்ரீஸ்ரீ - மோடி நெருக்கம் மஜோகர் பாரிக்கரை
பரவசப்படுத்தித் தவறிழைக்கச் செய்திருக்கிறது.
முன் ஜாக்கிரதையாகக் கழன்றுகொண்ட புத்திசாலி
பிரணாப் முகர்ஜியே!
-
------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தராசு பதில்கள் (கல்கி) Empty Re: தராசு பதில்கள் (கல்கி)

Post by ayyasamy ram Sat Apr 02, 2016 10:06 am



கே.சூர்யா, வேங்கைவாசல்:
தமிழக தேர்தல் தேதி அறிவித்த முதல் நாளிலேயே
108 விதிமீறல் புகார்கள்?

-
108 விதி மீறல் மட்டுமல்ல; 108 விதிகளை
மீறுவார்கள் நம் அரசியல்வாதிகள்! பணமூட்டைகள்
பயணத்தைத் தொடங்கி விட்டன!

விதி என்று ஒன்றை வகுத்தால், அதை மீறுவது
நம் அரசியல் கட்சியனரின் முதல் கொள்கை,
என்றைக்கு இவர்கள் விதிகளை அனுசரித்து
நடந்திருக்கிறார்கள்?

தீவிர நடவடிக்கை, கடுமையான தண்டனை என்று
வீரியம் காட்டினால்தான் குறைந்தபட்ச நெறி
முறையையேனும் கட்சிக்காரர்கள் பின்பற்றுவார்கள்.

தேர்தல் நெருங்க நெருங்க ராஜேஷ் லக்கோனி நிலை
மேலும் பரிதாபமாகும்!
-
--------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தராசு பதில்கள் (கல்கி) Empty Re: தராசு பதில்கள் (கல்கி)

Post by ayyasamy ram Sat Apr 02, 2016 10:07 am



எஸ். கண்ணன், நெய்வேலி:
தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில் பணம்
கைப்பற்றப்பட்டு வருகிறதே, அத்தனையுமே
கணக்கில் வராத பணம்தானா?

-
கணக்கில் வந்திருந்தால், பறக்கும் படை அவற்றைப்
பிடித்தே இராதே. 1.73 கோடி ரூபாய் பிடிபட்டதாக
சமீபத்திய செய்தி. உரிய ஆவணங்கள் இல்லாமல்
இவ்வளவு தொகை வெளியே புழங்குவது ஆச்சர்யம்
அளிக்கவில்லை.

கறுப்புப் பண பொருளாதாரம் கட்சிகளிடம் கொடி
கட்டிப் பறக்கிறது! மேலும், ஜெ. ஸ்டிக்கர் ஒட்டிய
காலணிகள் என்று பல ரகப் பொருள்களும்
பிடிபட்டுள்ளன. தேர்தலுக்கு 60 நாட்களுக்கு முன்பே
இவ்வளவு வேகமா? ஐயோடா சாமி!
-
------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தராசு பதில்கள் (கல்கி) Empty Re: தராசு பதில்கள் (கல்கி)

Post by ayyasamy ram Sat Apr 02, 2016 10:07 am



ஜி. வசந்தா, ஐயப்பன்தாங்கல்:
இந்தியா பாக்., போட்டி கொல்கத்தாவுக்கு மாற்றம்?

-
இந்திய அரசின் உயர்மட்ட அளவில் பாதுகாப்புக்கு
உத்தரவாதம் கொடுத்தால்தான், வீரர்களை அனுப்ப
முடியும் என்று பாக். பிடிவாதம் பிடித்து
பின்னர் ஜகா வாங்கியது. எல்லை கடந்த பயங்கரவாதம்
நிற்கும்வரை பாக். அணியுடன் இந்திய வீரர்கள்
விளையாடக் கூடாது என்று சிவசேனை முஷ்டி

உயர்த்தியது. ஹிமாலய பிரதேசத்தில் போட்டியை
நடத்த ஒப்புக் கொள்ளாமல், பா.ஜ.க., அரசாங்கத்தின்
மதவாதத்தை அடி கோடிட்டுக் காட்ட முயன்றார்
காங்கிரஸ் முதல்வர் வீரபத்ர சிங்.

பாக். அணியை கொல்கத்தாவுக்கு அழைத்து, தன
துணியை வெளிப்படுத்தி, கிரிக்கெட் ஆர்வலர்களின்
பாராட்டைப் பெற்றுக் கொண்டார் மம்தா.
கிரிக்கெட்டுக்குள் ஒவ்வொருவரும் அரசியல் லாபம்
ஈட்ட முயற்சிப்பது வெட்கக்கேடு!
-
-------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தராசு பதில்கள் (கல்கி) Empty Re: தராசு பதில்கள் (கல்கி)

Post by ayyasamy ram Sat Apr 02, 2016 10:07 am



எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்:
ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் மசோதா
ஒருவழியாக நிறைவேறிவிட்டதே?

-
தனியுரிமை (பிரைவசி) தொடர்பான பிரச்னை தவிர,
ஆதார் விஷயத்தில் வேறு எந்தப் பிரச்னையும்
இல்லை. அந்த உரிமை காக்கப்படும் என்று அரசு
உறுதி அளித்திருக்கிறது.

மடியில் கனம் இல்லாதோர் இதுபற்றி கவலைப்படப்
போவதில்லை. உலக நாடுகள் பலவற்றிலும் இது
போன்ற ஒற்றை அடையாள அட்டை புழக்கத்தில்
உள்ளது. காங்கிரஸ் அரசில் ஆதாரை எதிர்த்த
பா.ஜ.க.வே அதற்குச் சட்ட ரீதியான அங்கீகாரம்
பெற்றுத் தந்துள்ளது வரவேற்கத்தக்கது.

எனினும், 'ஆதார் அட்டை இல்லாததால் ஒருவரது
மான்யம் பெறுதல் போன்ற இதர உரிமைகளும்
பறிபோகாமல் காக்கப்படும்' என்றும் அரசு உறுதி
அளித்தால் நல்லது.
-
--------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தராசு பதில்கள் (கல்கி) Empty Re: தராசு பதில்கள் (கல்கி)

Post by ayyasamy ram Sat Apr 02, 2016 10:08 am



எஸ். ஸ்ரீகாந்த், பெங்களூரு:
குஜராத் கக்ரபார் அணுமின் நிலையத்தில் கசிவு?

-
2012ல் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட முதலாம்
அலகில் ஏற்பட்ட கசிவால், உடனடியாக அந்த
உலையே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே
கல்பாக்கத்தில் ஒரு அலகில் உற்பத்தி நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் இதுபோன்ற கசிவு செய்திகள்
வெளியாகும்போது ஏற்படும் அச்சம் அபரிதமானது.
அந்த உலையைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு
எவ்வளவு தூரம் தற்காப்புப் பயிற்சிகள் கொடுக்கப்
பட்டுள்ளன.

அணு உலைகள் பற்றிய ஞானம் ஊட்டப்பட்டுள்ளது
என்றெல்லாம் சந்தேகம் எழுகிறது. விபத்து,
முன் அனுமதி பெற்று வருவதல்ல; மனிதனுக்கு
கவனக் குறைவு எப்போது நேரும் என்பதையும்
நிர்ணயிப்பதில்லை.

ஆக, அணுமின் உலைகள் நிறுவுவது மரணத்தை
மடியில் கட்டிக் கொண்டு தூங்குவது போன்றதே!
-
-----------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தராசு பதில்கள் (கல்கி) Empty Re: தராசு பதில்கள் (கல்கி)

Post by ayyasamy ram Sat Apr 02, 2016 10:08 am



கே. பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்:
அதிமுகவின் பினாமிதான் மக்கள் நல கூட்டணி
என்கிறாரே மு.க. ஸ்டாலின்?

-
ம.ந.கூ. உருவான காலத்திலிருந்தே இத்தகைய
அவதூறு பரப்பப்படுகிறது. அ.தி.மு.க. எதிர்ப்பு
வாக்குள் அனைத்தும் தனக்கே வரவேண்டும்
என்று தி.மு.க. விரும்புவதில் தவறில்லை.

ஆனால், மாற்றுக் கூட்டணி உருவாகிவிடக் கூடாது,
அப்படி உருவாவதெல்லாம், அ.தி.மு.க.வுக்குச்
சாதகமானவையே என்று பேசுவது தி.மு.க.வின்
அச்சத்தையே காட்டுகிறது.

ம.ந.கூ. மக்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு.
அதன் வாழ்வும் சரிவும் மக்களிடமே,
அவதூறுகளால் வலுவடைகிறது ம.ந.கூ.
பேராசையால் பெருநஷ்டம் கண்டது தி.மு.க. -
காங்கிரஸ் கூட்டணி.
-
-------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தராசு பதில்கள் (கல்கி) Empty Re: தராசு பதில்கள் (கல்கி)

Post by ayyasamy ram Sat Apr 02, 2016 10:08 am



ச. வள்ளுவன், வேம்பார்:
தே.மு.தி.க. தனித்துப் போட்டி என்ற விஜயகாந்தின்
அறிவிப்பு பற்றி?

-
தனித்துப் போட்டி என்று விஜயகாந்த் சொன்னதை
'கேப்டன் தலைமையில் அமையும் அணி' என்று
விளக்கமளித்தார் பிரேமலதா. அதாவது, 'விஜயகாந்த்
எந்த அணியிலும் போய்ச் சேர மாட்டார்;

அவரே ஒரு அணிக்கத் தலைவராக இருப்பார்'
என்பதையே அன்று விஜயகாந்தும் பிரேமலதாவும்
தெரிவித்தனர். 'பழம் கனிந்து விட்டது. கையில் வந்து
விழும்' என்று காத்திருந்த கலைஞர் பழத்துக்குப்
பதில் ஏமாற்றத்தை மென்று விழுங்கிக்
கொண்டிருக்கிறார்!

பா.ஜ.க.வோ, மக்கள் நலக் கூட்டணியைச் சேர்ந்த
கட்சிக்காரர்களோ, விஜயகாந்த் பின்னே அணி
திரள இன்னும் நேரம் இருக்கிறது. ஆறுமுனை
என்பது தேர்தலுக்கு முன்னதாக நான்கு முனைப்
போட்டியானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
-
--------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தராசு பதில்கள் (கல்கி) Empty Re: தராசு பதில்கள் (கல்கி)

Post by ayyasamy ram Sat Apr 02, 2016 10:09 am



ஜி. மஞ்சரி, கிருஷ்ணகிரி:
இந்தத் தேர்தலிலாவது இலவச அறிவிப்புகள்
இல்லாமல் போகுமா?

-
அது இல்லாமலா? ரெஃப்ரிஜிரேட்டர் கொடுக்கப்
போகிறார்களாமே! ஆனால், இம்முறை தேர்தல்
ஆணையத்தின் ஒரு கட்டுப்பாடு இருக்கிறது.
அதாவது, கொடுக்கப்படும் வாக்குறுதியை நிறை
வேற்ற போதுமானநிதி ஆதாரங்கள் எங்கே
என்பதை விவரிக்க வேண்டுமாம்.

இது ஒரு கட்டுப்பாடா என்று சிரிக்கின்றன
அரசியல் கட்சிகள். தங்கள் ஏழ்மை கொச்சைப்
படுத்தப்படுவது கண்டு மக்கள் வெகுண்டெழுந்து,
இவற்றை நிராகரித்தால் மட்டுமே. இலவசங்களுக்கு
தீர்வு கிடைக்கும்.

அது வரை, நம் மக்களின் இயலாமையை,
இல்லாமையைச் சுரண்டும் மனப் போக்கு மாறப்
போவதில்லை.
-
------------------------------------

--கல்கி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தராசு பதில்கள் (கல்கி) Empty Re: தராசு பதில்கள் (கல்கி)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum