புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_c10ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_m10ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_c10 
53 Posts - 42%
heezulia
ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_c10ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_m10ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_c10ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_m10ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_c10ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_m10ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_c10ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_m10ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_c10ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_m10ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_c10ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_m10ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_c10ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_m10ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_c10 
304 Posts - 50%
heezulia
ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_c10ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_m10ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_c10ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_m10ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_c10ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_m10ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_c10ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_m10ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_c10 
21 Posts - 3%
prajai
ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_c10ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_m10ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_c10ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_m10ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_c10ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_m10ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_c10ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_m10ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_c10ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_m10ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு


   
   

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Mar 23, 2016 7:23 am

கோபால்சாமி துரைசாமி நாயுடு
ஜி.டி. நாயுடு (மார்ச் 23, 1893 - 1974) என்று பரவலாக அறியப்படும் கோபால்சாமி துரைசாமி நாயுடு தமிழகம் தந்த அறிவியல் மேதைகளுள் ஒருவர். விவசாயத்தில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்தவர்.
வாழ்க்கை

இவர் கோயம்புத்தூர் மாவட்டம், கலங்கல் கிராமத்தில் பிறந்தார். ஜி.டி. நாயுடு அவர்கள் தன் இளம் வயதில் படிப்பில் அதிக நாட்டம் இல்லாதவராய் இருந்தார். எழுதப் படிக்க தெரிந்திருந்த இவர் தனக்குத் தானே ஆசிரியராக இருந்து தனக்கு விருப்பமான நூல்களையெல்லாம் வாங்கி படித்து தன் அறிவுத்திறனை வளர்த்துக்கொண்டார்.

எதைச் செய்தாலும் அதில் தன்னுடைய தனித்தன்மை வெளிப்படவேண்டும் என்று நினைத்தவரை அவருடன் இருந்தவர்கள் விநோதமாய் பார்த்தனர்.

வாலிப வயதில் ஒரு புரட்சிக்காரனாக இருந்தவர் ஒருமுறை தன் கிராமத் தலைவர்களுக்கு எதிராக குடியானத் தொழிலாளர்களைத் திரட்டி அதிகக் கூலி கேட்டு வேலை நிறுத்தம் செய்தார். வேலை நிறுத்த நேரத்தில் கூலியின்றி சிரமப்பட்ட தொழிலாளர்களுக்கு தன்னுடைய சொந்த சேமிப்பு முழுவதையும் கொடுத்தார்.

தனித் திறன்கள்

இளம் வயதில் ஜி.டி.நாயுடு கோவையிலிருந்த ஒரு மோட்டார் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்தார். பணியிலிருந்தபோதே அத்தொழிலின் நுட்பங்களை கருத்தூன்றி படித்து அறிந்துக்கொண்டார்.

சிறிது காலத்திலேயே அவருக்கு பிறரிடம் தொழிலாளியாக இருப்பது வெறுத்துப் போனது. வேலையை விட்டுவிட்டு தன்னுடைய ஊதியத்திலிருந்து சேமித்து வைத்திருந்த பணத்துடன் நண்பர்களிடம் கடன் பெற்று திருப்பூரில் ஒரு பருத்தித் தொழிற்சாலையை நிறுவினார்.

அப்போது முதலாம் உலகப் போர் துவங்கிய காலமாயிருந்ததால் அவருடைய பருத்தி தொழில் சூடு பிடித்தது. அவருடைய அபிரிதமான வர்த்தகத் திறமை குறுகிய காலத்திலேயே திருப்பூரில் விரல் விட்டு எண்ணக்கூடிய லட்சாதிபதிகளில் ஒருவரானார்.

ஆரம்பத்தோல்விகள்

பின்னர் பம்பாய் சென்று பருத்தி வியாபாரத்தை தொடர்ந்தார். பம்பாய் பருத்தித் தரகர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கையிருப்பை முழுவதும் இழந்து ஊர் திரும்பினார்.

ஆனால் மனந்தளராத நாயுடு அப்போது மோட்டார், லாரி, பேருந்து போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த ஸ்டேன்ஸ் துரையிடம் பணிக்கு சேர்ந்தார். அவர் நாயுடுவின் திறமையைப் பற்றி கேள்விப்பட்டிருந்ததால் ஒரு பேருந்தைக் கடனாக கொடுத்து தவணை முறையில் கடனைத் திருப்பி அடைத்தால் போதும், அதுவரை தினமும் வசூலாகும் தொகையில் ஒரு பகுதியை தனக்கு அளிக்க வேண்டும் என்றார்.

முதலாளியும் தொழிலாளியுமாக இருந்து முதன் முதலில் பொள்ளாச்சிக்கும் பழனிக்கும் பேருந்தை இயக்கினார் நாயுடு.

சாதனைகள்

தனி முதலாளியாக இருக்க விரும்பாத நாயுடு வேறு சிலரையும் கூட்டு சேர்த்துக்கொண்டு யுனைடெட் மோட்டார் சர்வீஸ் என்ற நிறுவனத்தை துவக்கினார். அந்நாளிலேயே பிரயாணிகளுக்கான வசதிகள், ஓட்டுனர்களுக்கு தங்கும் இடம் போன்று வசதிகளை செய்து காட்டியவர் நாயுடு.

முதன் முதலாக அவருடைய நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்துகள் வந்து, புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்து பேருந்து நிலையங்களில் வைத்து சாதனைப் படைத்தார். பயணச்சீட்டுகள் வழங்குவதற்கு அந்த காலத்திலேயே ஒரு இயந்திரத்தை தன்னுடைய சிறிய தொழிற்சாலையிலேயே தயாரித்து பயன்படுத்தினார்.

இத்தகைய கண்டுபிடிப்புகள் நாயுடுவிற்கு கைவந்த கலையாகும். பல்கலைக்கழகப் படிப்பில்லாதிருந்தும் அறிவியல் துறையில் அவர் படைத்த சாதனைகள் பல.

மோட்டார் ரேடியேட்டருக்கு இணையான ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்தன் மூலம் ரேடியேட்டருக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் அவருடைய பேருந்துகளுக்கு இருந்ததில்லை.

எஞ்சின் ஓடிக்கொண்டிருக்கும்போதே அதன் அதிர்வு விகிதம் அதிகமா, குறைவா என்பதைக் கண்டுபிடிக்க Vibrator Tester என்ற இயந்திரத்தையும் கண்டுபிடித்து அயல்நாட்டு விஞ்ஞானிகளுக்கு இணையாக நம் நாட்டிலும் அறிவியல் துறையில் சாதனைப் புரிய இயலும் என்று உலகுக்கு நிரூபித்தவர் நாயுடு.

அவர் செய்து வந்த மோட்டார் வாகனத் துறைக்கு முற்றிலும் மாறுபட்ட துறைகளிலும் அவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன.

புகைப்படத் துறையில் பிற்காலத்தில் மிகவும் உதவியாயிருந்த டிஸ்டன்ஸ் அட்ஜஸ்டர் என்ற கருவி, பழச்சாறு பிழிந்தெடுக்க ஒரு கருவி, எந்தவித வெட்டுக்காயமுமின்றி முகச்சவரம் செய்துக்கொள்ள பிளேடு என அவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன.

நாயுடு தயாரித்த பிளேடுகளைத் தானே தயாரித்துக்கொள்ள ஒரு அமெரிக்க நிறுவனம் விருப்பம் தெரிவித்து அதன் காப்புரிமத்தை ஒரு லட்சம் டாலருக்கு விற்கும்படி கேட்டும் அவர் சம்மதிக்கவில்லை. தமிழகத்திலேயே அவற்றைத் தயாரிக்கும் எண்ணத்தில் அதற்குத் தேவையான எஃகை நார்வே நாட்டிலிருந்து தருவிக்க பெரும் முயற்சியெடுத்தார். ஆனால் அவரது முயற்சி கைகூடவில்லை. அதனால் நாயுடுவின் அரும்பெரும் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமம் செய்ய முடியாமலே போய்விட்டன.
ஜெர்மன் நகரில் நடைபெற்ற பொருட்காட்சியில் அவருடைய கண்டுபிடிப்புகளில் ஒன்றான பிளேடுக்கு மூன்றாவது பரிசு

ஜெர்மன் நகரில் நடைபெற்ற பொருட்காட்சியில் அவருடைய கண்டுபிடிப்புகளில் ஒன்றான சவரக் கத்தி, பிளேடு ஆகியவற்றிற்கு முறையே முதல் பரிசும், மூன்றாவது பரிசும் கிடைத்தன. "பல நிறுவனங்கள் இவருடைய கண்டுபிடிப்புகளுக்கு உரிமையைக் கேட்டும் வழங்க மறுத்து அவற்றை நம் நாட்டிலேயே தயாரிக்க இந்திய அரசிடம் நிதியைக் கோரினார். ஆனால் இந்திய அரசாங்கம் அவருடைய கோரிக்கைக்கு செவிமடுக்காததால் அதுவும் செயல்படுத்தப்படாமல் போனது. இதனால் மனம் உடைந்துப்போன நாயுடு ஒரு அமெரிக்க நிறுவனம் அவருடைய கண்டுபிடிப்பிற்கு பத்து லட்சம் கொடுக்க முன்வந்தும் அதன் உரிமையை இலவசமாகவே வழங்கிவிட்டார்".

அதற்கு அவர் கூரிய காரணம்: ‘ஒரு அமெரிக்க நிறுவனத்திடமிருந்து பத்து லட்சம் ரூபாயை வாங்கி இந்திய ஆங்கிலேய அரசுக்கு ஒன்பது லட்சம் வரி செலுத்துவதைவிட இலவசமாக கொடுப்பதே மேல்.’

மேலும், தன்னால் கண்டுபிடிக்கப்பட்டவைகள் எல்லாம் தம் தேசத்திற்கு முழுவதும் சொந்தமாக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவற்றை தன் பெயரில் பதிவு செய்துக்கொள்ளாமல் வைத்திருக்கிறேன் என்றும் இந்தியர்கள் யாராயிருந்தாலும் அவற்றை இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் பகிரங்க அறிக்கை விட்டார்.

நாயுடுவின் கண்டுபிடிப்புகள் பலவும் அதிக அளவில் நாட்டுக்கு பயன்படாமல் போனதற்கு வேறொரு காரணம் அன்றைய அரசு அவர்மேல் திணித்த அதிகபட்ச வரி. அன்றைய சூழலில் நாட்டிலேயே அதிக வரி செலுத்தியவர்களில் ஒருவராயிருந்தும் அவர்மேல் வரி ஏய்ப்பு செய்பவர் என்ற அவப்பெயரும் சுமத்தப்பட்டது.

எனவே, மனம் உடைந்துப் போன நாயுடு அரசாங்கத்துக்கு கொடுப்பதைக் காட்டிலும் வெறுமனே இருந்துவிட்டு போய்விடுவேன். இனி ஒரு பைசா கூட வருமான வரியென்ற பெயரால் செலுத்த மாட்டேன், என்று சபதமெடுத்தார்.

அவருடைய கண்டுபிடிப்புகள் இயந்திர, மோட்டார் தொழிலில் மட்டுமல்லாமல் விவசாயத்திலும் பல வியக்கத்தக்க சாதனைகளைப் புரிந்தார்.

விதைகளில்லா நார்த்தங்காய், ஆரஞ்சு பழம் ஆகியவை இவருடைய கண்டுபிடிப்புகளில் சில. அடுத்து, சோளச்செடிகளுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தி நட்ட சிறிது காலத்திலேயே 26 கிளைகளுடன் 18 1/2 அடி உயரத்திற்கு வளரச் செய்தார்! சாதாரண சோளச்செடியில் மூன்று அல்லது நான்கு கதிர்கள்தான் இருந்தன. ஆனால் நாயுடுவின் அதிசய செடிகளில் 39 கதிர்கள்வரை இருந்தன!

அதன் பிறகு பருத்திச் செடி, துவரைச் செடி என அவருடைய ஆராய்ச்சி தொடர்ந்தது.

அவர் கண்டுபிடித்த தாவர ஆராய்ச்சி முடிவுகள் அமெரிக்கர்களையே பிரமிக்க வைத்தன. ஜெர்மானியர்கள அவருடைய அதிசய பருத்திச் செடிக்கு ‘நாயுடு காட்டன்’ என்ற பெயர் சூட்டி கவுரவித்தனர். ஆயினும் இந்திய அரசாங்கம் அவரை கண்டுகொள்ளவேயில்லை.

சமூக சேவைகள்

1938 ஆம் ஆண்டு பதினெட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்துகளை கோவை வட்டார கழகத்தாரிடம் இலவசமாக ஒப்படைத்தார்.

தாய்நாட்டின் இளைஞர்கள் தொழில் நிபுணர்களாக உருவெடுத்து நாட்டுக்கு பயன் பெற வேண்டுமென்று விரும்பிய நாயுடு அவர்கள் படிப்பதற்கு தன்னால் இயன்ற அளவுக்கு பொருளுதவி செய்தார். தொழிற்கல்வி மட்டுமே இன்றைய இந்தியாவிற்குத் தேவை என்பதை தன் உதவியை நாடி வந்த இளைஞர்களை அறிவுறுத்தினார்.

அத்துடன் நின்றுவிடாமல் தன்னுடைய சுயமுயற்சியினால் பாலி டெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளை துவக்கினார். இவர்தான் தமிழகத்தின் தொழிற்கல்வி நிறுவனங்களின் தந்தை என்றால் மிகையாகாது.

இவருடைய மகன் ஜி.டி. கோபாலையும் கலைக்கல்லூரிக்கு அனுப்பாமல் தொழிற் கல்வி படிக்கச் செய்தார். அவர் இப்போது தன் தந்தை உருவாக்கிய தொழில் ஸ்தாபனங்களைக் கவனித்துக் கொள்கிறார்.

நாயுடுவின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின்போது பல ஸ்தாபனங்களும் நிறுவனங்களும் பயிற்சி அளிக்கும் சாதனங்களையும், கருவிகளையும் இவருடைய கல்லூரிக்கு இலவசமாக அளித்தன.

இந்தியாவிலேயே முதன் முதலாக மின்சார மோட்டார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கோவையிலேயே துவக்கப்பட்டது என்ற பெருமை அவரையே சாரும்.
பாராட்டுகள்

நாயுடுவின் அறிவுத்திறன், அவருடைய தாராள மனப்பான்மை, எளியவர்க்கு உதவும் நற்குணம் ஆகியவற்றை பல தலைவர்கள் பாராட்டியுள்ளனர்.

‘இவர் தமிழகத்திற்கு ஒரு நிதி. இவரது புகழ் உலகெங்கும் பரவ வேண்டும்’ என்றார் பெரியார்.

‘நாயுடுவின் அறிவை நம் சமுதாயம் முழு அளவில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவருடைய கண்டுபிடிப்புகள் ஒரு அளப்பரியா மதிப்புடைய கருவூலங்கள்’ என்றார் அறிஞர் அண்ணா.

'கோவை வாசிகள் தங்களுடைய கல்வியிலும், முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் நாயுடுவை கண்டு பெருமை கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட மனிதருடன் வசிக்க நாம் எவ்வளவு பெருமை கொள்ள வேண்டும்’ என்று மனம் திறந்து பாராட்டினார் சர். சி. வி. ராமன்.

அவினாசி சாலையில் அமைந்துள்ள கோபால் பாக்கில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர பொருட்காட்சி இன்றும் அவருடைய அறிவுத்திரனை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன!.


நன்றி முகவரி.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Mar 23, 2016 8:10 am

இவரைத் தமிழ்நாட்டின் தாமஸ் ஆல்வா எடிசன் என்றால் மிகையாகாது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 23, 2016 8:19 am

அவருடைய ஆட்டோமொபைல் ஷாப்பில் பயிற்சி பெற்றவர்கள் ,சிறந்த வல்லுனர்கள் .
எல்லாவிதமான கார்களையும் நுட்பங்களையும் அறிந்து சீர் செய்யும் திறமைசாலிகள் .
நாயுடு இந்தியாவின் பொக்கிஷம் .மறைக்கப்பட்ட .மறக்கப்பட்ட மாணிக்கம் . சோகம் சோகம்

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Mar 23, 2016 8:39 am

நன்றி கார்த்திக் 
நல்ல பகிர்வு 
நம் நாட்டில் நல்ல திறமையான 
நபர்களுக்கு முக்கியதுவம் 
இருக்காது.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 23, 2016 9:46 am

நல்ல பகிர்வு கார்த்திக், நன்றி !........ நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Mar 23, 2016 10:34 am

இவரை பற்றிய ஒரு நூலின் விமர்சனம்
தமிழகத்தின் வித்தியாசமான முரண்பாடுகளுள்ள பல ஆளுமைகளுள் ஒன்று G.D.நாயுடு. ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வார். அடேய் இந்தியாவிலேயே சிறந்த அறிவாளி ஒன்று G.D.நாயுடு இன்னொன்று நான்தான் என்று.

இந்தப் புத்தகம் G.D.நாயுடுவைப் பற்றி அவரது மகன் கூறுவது போல தகவல்களை திரட்டி எழுத்தாளர் சிவசங்கரி எழுதியது.


இந்தப்புத்தகம் கையில் எடுத்தவுடன் மடமடவென்று படித்து முடித்துவிடக்கூடியதான நடை கொண்டது. நாயுடுவின் மகன் கோபாலின் பார்வையில் கதை சொல்லும் பாணி நன்றாகவே வேலை செய்திருக்கிறது.

அடிப்படையில் நாயுடு ஒரு சுறுசுறுப்பான வணிகர். என்ன செய்தாலும் அதில் உள்ள வியாபாரத்தன்மையை சட்டென அடையாளம் கண்டுகொள்ளக் கூடிய புத்தி கொண்டவர். பதினெட்டு வயதில் ஊரில் ஒரு காலி மருந்து புட்டியை பார்த்து (அது அந்தக் கிராமத்துக்கு ஒரு புதிய வஸ்து...)அது என்ன என்று விசாரிக்க அது பார்க்டேவிஸ் என்கிற மருந்து கம்பெனி தயாரித்த வலி நிவாரணி (pain killer) என்று கேள்விப்பட்டு. அது எப்படியோ அங்கே வந்திருந்தது.

நம்ம ஊரிலேதான் நிறைய பேர் மூட்டு வலி, தலைவலின்னு அவஸ்தைப் படுகிறார்களே என்று உடனே அமெரிக்காவிற்கு தபால் எழுதி வரவழைத்து அக்கம் பக்கம் இருக்கும் எல்லா கிராமத்தில் எல்லாம் விற்று அந்த வருடம் லாபம் மட்டும் ரூபாய் எண்ணூறு. இது நடந்தது பதினெட்டு வயதில். 1911 ல் எண்ணூறு லாபம்! விற்கத் தெரிஞ்சவன்தான் வாழத் தெரிஞ்சவன் என்கிற மாதிரியான கேரக்டர். ஆனால் அது மட்டும் அல்ல G.D.நாயுடு.
அந்த ஊரின் குடியானவர்களுக்கான ஊதியத்தை அதிகமாக்க அவர்களுக்காக வாதாடி அந்த எண்ணூறு ரூபாயை செலவழித்தது அவரது இன்னொரு பரிமாணம்.

மோட்டார் சைக்கிளை பிரித்து மாட்டி...

தன் ஊர் கலங்கலுக்கு வந்த ஆங்கிலேய அதிகாரி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை பார்த்து மலைத்து போனவர் தான் அந்த ஊரில் இருந்தால் வேலைக்கு ஆகாது என்று கோயம்புத்தூர் போய் அங்கே ரயில் வண்டி, தொழிற்சாலை எல்லாம் பார்த்து விட்டு அங்கேயை ஒரு ஹோட்டலில் சர்வராக மாதம் மூன்று ரூபாய் சம்பளத்தில் சேர்ந்து மூன்று வருடத்தில் நானூறு சேர்ந்ததும் அந்த வெள்ளைக்காரரிடம் போய் மோட்டார் சைக்கிளை கேட்க, அவரும் கொடுக்க, வாங்கி முதல் வேலை அதை அக்கு அக்காக பிரித்து மறுபடியும் மாட்டியதுதான்.
பக்கத்தில் சைட்பாக்ஸ் பொருத்தினால் இன்னோரு ஆளும் அமரலாம் என்று அதைப் படம் வரைந்து செய்து மாட்டியவரும் அவரே! (ஷோலே படத்தில் அமிதாப்பும் தர்மேந்திராவும் பாடிக்கொண்டே வருவார்களே!)

கோயம்புத்தூரில் அடுத்து வந்த வருடங்களில் தொழிற்சாலையில் வைலைபார்த்து பின்னர் ஒரு தொழிற்சாலையையே வாங்கி, அங்கே உலக யுத்தம் நடந்து கொண்டிருக்க, தனது புத்திசாலித்தனத்தால் ஒரு ஆண்டில் ஒன்றரை லட்சம் சம்பாதித்துவிட்டார் G.D.நாயுடு. அசுரத்தனமான வளர்ச்சி. 1919 ல் அவ்வளவுபணம் என்பது நினைத்துப் பார்க்க இயலாதது. அதே வருடம்
காட்டன் வியாபாரம் செய்யப் போகிறேன் என்று பம்பாயில் அத்தனையையும் இழந்து கையைத் துடைத்துக் கொண்டு ஊருக்குத் திரும்பி வந்துவிட்டார்.

பஸ் போக்குவரத்து :

பம்பாய் கசப்பான பயணம் அவரை வீழ்த்திவிடவில்லை. மோட்டார் பிஸினஸ் நடத்திக் கொண்டிருந்த ஸ்டேன்ஸ் என்பவரிடம் ஃபிட்டராக சேரப் போக அவரோ உனக்கு இது சரிப்பட்டு வராது. உன் உழைப்பை நான் அறிவேன். நீ ஏன் ஒரு பஸ் வாங்கி ஓட்டக் கூடாது என்று கேட்க, அப்போது கோயம்புத்தூருக்கு அது தேவையாயிருந்தது. நண்பர்களிடம் கடன் வாங்கி, மீதி பணத்தை ஸ்டேன்ஸ் துரையே கொடுக்க 1920 ஒரு பஸ் வாங்கி விடுகிறார். பொள்ளாச்சியிலிருந்து பழனிவரை- டிரைவர், கண்டக்டர், கிளீனர், முதலாளி எல்லாமே அவர்தான். 1922 ல் இரண்டு பஸ்ஸானது. அடுத்து வருவதெல்லாம் ரஜினி படத்தில் தான் சாத்தியம். 1933 ல் அவரின் U.M.S. பஸ் சர்வீஸூக்கு 280 பஸ்கள் இருந்தன.

அசுர உழைப்பு. சும்மா இல்லாமல் வெளிநாடுகளுக்கு பயணம் செய்து (ஜெர்மனி, லண்டன், அமெரிக்கா) அங்கே உள்ள தொழிற்சாலைகளுக்கு போய் விசாரித்து இங்கே அதை தொடங்க என்ன செய்யலாம் என்று ஆரம்பித்து ,அவர் தொடங்கிய தொழிற்சாலைகள் ஏராளம். அதோடு U.M.S. ம் வளர்ந்தது.

பயணிகள் இருக்கிறார்களோ இல்லையோ பஸ் குறிப்பிட்ட நேரத்தில் கிளம்பிவிட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். முதலில் அது நஷ்டத்தை அது உண்டு பண்ணினாலும் போகப் போக பயணிகள் நேரத்துக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள்.

அந்தக் கால சாலைகளினால் பயணம் முடிந்ததும் பேருந்து முழுதும் செம்மண் படிந்து மக்கள் உடை எல்லாம் அழுக்காகி விடுகிறது என்று தினமும் எல்லா பேருந்துகளையும் கழுவி விட ஆள் ஏற்பாடு செய்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தினசரி பேப்பரில் மாதம் தோறும் விளம்பரம் செய்திருக்கிறார் எவ்வளவு பயணிகள் பயணித்தார்கள் எத்தனை சர்வீஸ் விடப்பட்டது. எத்தனை விபத்துகள் போன்ற புள்ளி விபரங்களை. அதோடு நீங்கள் வெள்ளை வேட்டியில் வந்தால் வெள்ளை வேட்டியிலேயே இறங்கலாம் என்று.

ஆராய்ச்சி மனம் :

ஊசி வழியாக மருந்துகளை செலுத்தி விதைகளை உருவாக்கி அதன் மூலம் விதையில்லாத பப்பாளி, ஆரஞ்சு ஆகியவற்றை உருவாக்கியிருக்கிறார். 19 அடிவரை வளர்ந்த சோளம், கிலோ கணக்கில் காய்த்த துவரை, பருத்தி செடி என்று நிறைய வேலை செய்திருக்கிறார். எலக்ட்ரிக் ரேஸரை கண்டுபிடித்தது அவரே என்கிறது இந்த புத்தகம்.

தன் மகனை சமையற் காரருடன் வேலை செய்தால் உனக்கும் கூலி தருவேன் என்று சொல்லி அவனையும் எல்லாருக்கும் பரிமாறி, வீட்டை பெருக்கி எல்லா வேலையும் செய்யச் சொல்லி சம்பளம் தந்திருக்கிறார் சில வருடங்களாக!

முரண்பாடுகள் :

எலக்ட்ரிக் ரேஸரை தயாரித்து லண்டனில் 7500 க்கும் மேற்பட்டதை விற்றிருக்கிறார். அமெரிக்காவில் அதை ஒரு கம்பெனி 3 லட்சம் டாலருக்கு தயாரிக்கும் உரிமையை கேட்ட போது மறுத்திருக்கிறார். இந்தியாவிலேயை அது தயாரிக்கப் படவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் பிளேடு கம்பெனிகள் சதி செய்து அவருக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் அனுமதி தர மறுத்துவிட்டது.

மின்சார ஒட்டுப்பதிவு இயந்திரத்தை கண்டுபிடித்திருக்கிறார். அதை பரிசீலித்த அமெரிக்க அரசாங்கம் முப்பதாயிரம் எண்ணிக்கைக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறது. அப்போது அவர் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்ததால் அதை அவரால் நிறைவேற்றமுடியவில்லை. முடிவில் அந்த காப்புரிமையை அமெரிக்க அரசுக்கு கொடுத்து விட்டார்.

ஆரஞ்சு தோல் கசப்பாக இருக்கும். அதிலிருந்து வைட்டமின்களை மட்டும் பிரித்தெடுக்க இயந்திரம் கண்டுபிடித்திருக்கிறார். அதை இப்போதும் அவர் மகன் உபயோகிக்கிறார்.

போத்தனூர் போகும் வழியில் பென்ஸ் கார் தொழிற்சாலை ஆரம்பிக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு ஆனால் வருமான வரித்துறையிடம் சண்டையிட்டதால் எல்லாமே கேன்ஸலாகிவிட்டது.

1961-ல் தன் மகனிடம் ஒரு லட்சம் ரூபாயைத் (இப்போது அது கோடி மதிப்புடையது) தந்து கம்பெனியின் வளர்ச்சிக்காக உன் இஷ்டப்படி செலவு செய்.
என்று சொல்லிவிட்டு பின்னர் அவர் செலவு செய்த பின் எது வருவாய் ஈட்டக் கூடிய செலவு எது அப்படி இல்லை என்று பாடம் எடுத்திருக்கிறார். ரொம்ப காஸ்ட்லி பாடம்.

அது மட்டுமில்லாமல் தீடீரென்று பதினெட்டு கம்பெனிகளின் பொறுப்பை தன் மகனிடம் கொடுத்துவிட்டு அதில் கடைசிவரை தலையிடாமல் இருந்திருக்கிறார்.

காங்கிரஸூக்காக ஆதரவாக இருந்தவர் பின்னர் அதற்காக எதிராக பிரச்சாரம் செய்திருக்கிறார்.

தேசபக்தியும் அதிகமாக இருந்திருக்கிறது. லண்டனில் மியூசியத்தில் தன் மகனிடம் உலகிலேயே முதலில் ரைஃபிள ஃகண்டுபிடித்தது திப்புசுல்தான், இண்டிகோ நிறம் உபயோகித்தது ராஜஸ்தான் மக்கள், உலகிலேயே 'செப்டிக் டேங்க்' முறைப்படி கழிவுப்பொருள் அகற்றி கிராமத்தில் பொதுக்கழிவுமுறை அமைப்பு மூலம் அகற்றப்பட்டது இந்தியாவில் என்று அங்கே வைத்திருந்த வரைபடத்தை காட்டி பெருமைப்பட்டுக் கொண்டார் என்று அவரது மகன் சொல்கிறார்.

வெளிநாட்டிலுள்ள அத்தனை தொழிற்சாலைகளையும் இந்தியாவில் கொண்டுவந்துவிட வேண்டும் என்று முயன்றிருக்கிறார் G.D.நாயுடு.
முதல் பாலிடெக்னிக் ஆரம்பித்தவரும் அவரே.

வருமானவரிச் சண்டை

1963 ல் இந்த சண்டை ஆரம்பித்திருக்கிறது. அதுதான் ஆரம்பம். அவரின் கல்லூரிகளுக்கு செய்த செலவுகளை வருமானவரித்துறை வருவாயாக கணக்கிட அவர் வாதம் செய்ய ஆரம்பித்தார். அதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். அந்த அதிகாரி பிராமணர். G.D.நாயுடு பெரியாருக்கு நெருக்கமானவராக இருந்ததால் இந்தப் பிரச்னை வந்தது என்றும் சொல்கிறார்கள்.

அந்தக் காலத்திலேயே டிக்கெட் கொடுக்க இயந்திரம் வைத்திருந்தார். வருமான வரித்துறை நீங்கள் பஸ் கம்பெனி வருமானத்தை சரியாக காட்டவில்லை என்று சொன்னது. மொத்தமாக கூட்டிக் கழித்து வருமானவரி 24 லட்சம் என்று வந்தது. 1941-1946 க்கான வருமான வரியை கட்டச் சொல்லி சொல்லியிருக்கிறார்கள். G.D. நாயுடுவிற்கு கோபம் தலைக்கு ஏறியிருக்கிறது. வீம்பாக நீ என்ன செய்வாயோ செய் நான் கட்டமாட்டேன் என்று சொல்லிவிட்டார்.

வருமானவரி மீதான அபராதமும் ஏறிக்கொண்டே போனது. என் சொத்து இருந்தால் தானே ஜப்தி செய்வீர்கள் என்று புது கார், வீட்டில் இருந்த விலை மதிப்பான பொருட்கள் எல்லாவற்றையும் உடைத்துப் போட்டார்.

தான் வளர்த்த நாய்க்கு 'போஸ்' என்று பெயரிட்டு அதை மூன்று கம்பெனிக்கு பங்குதாரராக்கி, அதன் கவனிப்பாளரை கையெழுத்து போடச் சொல்லிவிட்டு, பின்னர் ஒரு நாய் பங்குதாரர் என்று தில்லு முல்லு செய்தால் உங்களால் கண்டுபிடிக்க முடியாது ஆனால் நேர்மையாய் நான் வரி கட்டினால் அபராதம் விதிப்பீர்களா என்று கடிதம் எழுதியிருக்கிறார்.

அப்போதைய மதிப்பில் 2 லட்சம் மதிப்புள்ள கேஷ் பாண்ட் பத்திரங்களை வீட்டு வாசலில் உட்கார்ந்து தெருவில் போவோர் வருவோருக்கெல்லாம் விநியோகித்திருக்கிறார். தன் சொத்து எல்லாவற்றையும் தன் மனைவி பேருக்கு மாற்றி அவரை விவாகரத்து பேப்பரில் கையெழுத்து போடச் சொல்லியிருக்கிறார். கடைசியில் வருமானவரித்துறையிடம் என்னிடம் எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டார். ஆனால் மனைவியுடன் தான் வாழ்ந்தார்.


சர்க்கரை வியாதிக்கு சித்தவைத்திய முறைப்படி மருந்து தயாரித்து இங்கே மட்டுமல்ல வெளிநாட்டிலும் விற்றிருக்கிறார். அந்த மருந்தில் பயன்படுத்தும் ஸிந்திக் கொடி மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வேலை செய்கிறது மற்ற மாதங்களில் இல்லை என்று நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கிறார்.

பெரியாருடன் அவருக்கு நெருக்கமான நட்பு இருந்திருக்கிறது. பெரியாரிடம் நீங்கள் என் பண்ணையில் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் தங்கலாம் ஆனால் பணம் மட்டும் தர மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.

பெரியார் விடுதலை பத்திரிக்கையில் விளம்பரம் செய்துவிட்டார். கழக மாநாடு இந்தப் பண்ணையில் நடப்பதால் எல்லாரும் அங்கே வாருங்கள் என்று. எல்லாருக்கும் சாப்பாடு, மற்றும் இதர செலவு என்று நாயுடுவுக்கு பல ஆயிரம் செலவு. பெரியார் எப்படியோ வசூலித்துவிட்டார்.

அவருக்கு கடவுள் எதிர்ப்பு மீது பிடிப்பு இருந்தாலும் போகப் போக எதிர்ப்பையும் காட்ட வில்லை ஆதரவையும் காட்டவில்லை. எல்லா கதைகள் சடங்குகளின் பின்னே ஒரு அறிவியல் இருப்பதாகவும் அது பாமர ஜனங்களுக்குப் புரியாததால் அதை சடங்காக மூதாதையர்கள் ஆக்கிவிட்டதாகவும் கூறி இருக்கிறார்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 23, 2016 10:48 am

அருமையான பகிர்வு கார்த்தி, படிக்க படிக்க மேலும் படிக்க ஆவல் வருகிறது....முழு புத்தகம் கிடைக்குமா?........ ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  3838410834 ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  3838410834 ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  3838410834 சூப்பருங்க ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  1571444738 .



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Mar 23, 2016 10:49 am

சசி wrote:நன்றி கார்த்திக் 
நல்ல பகிர்வு 
நம் நாட்டில் நல்ல திறமையான 
நபர்களுக்கு முக்கியதுவம் 
இருக்காது.
மேற்கோள் செய்த பதிவு: 1198837

நன்றி சசி.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Mar 23, 2016 11:40 am

krishnaamma wrote:அருமையான பகிர்வு கார்த்தி, படிக்க படிக்க மேலும் படிக்க ஆவல் வருகிறது....முழு புத்தகம் கிடைக்குமா?........ ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  3838410834 ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  3838410834 ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  3838410834 சூப்பருங்க ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  1571444738 .
மேற்கோள் செய்த பதிவு: 1198861

நன்றி அம்மா..என்னிடம் இல்லை முயல்கிறேன்.





எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 23, 2016 11:51 am

கார்த்திக் செயராம் wrote:
krishnaamma wrote:அருமையான பகிர்வு கார்த்தி, படிக்க படிக்க மேலும் படிக்க ஆவல் வருகிறது....முழு புத்தகம் கிடைக்குமா?........ ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  3838410834 ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  3838410834 ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  3838410834 சூப்பருங்க ஜி.டி.நாயுடு பிறந்ததின சிறப்பு பதிவு  1571444738 .
மேற்கோள் செய்த பதிவு: 1198861

நன்றி அம்மா..என்னிடம் இல்லை முயல்கிறேன்.

மேற்கோள் செய்த பதிவு: 1198885

நன்றி கார்த்திக், கிடைத்தால் பகிருங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக