ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது இலங்கைப் பயணம் .

+8
ஜாஹீதாபானு
சசி
பாலாஜி
ChitraGanesan
T.N.Balasubramanian
krishnaamma
krissrini
M.Jagadeesan
12 posters

Page 1 of 46 1, 2, 3 ... 23 ... 46  Next

Go down

எனது இலங்கைப் பயணம் . Empty எனது இலங்கைப் பயணம் .

Post by M.Jagadeesan Tue Mar 22, 2016 9:13 am

எனது இலங்கைப் பயணம்
=========================
சென்ற டிசம்பர்த் திங்கள் 23 ம் நாள் முதல் ஜனவரி - 2016 ம் திங்கள் 3 ம் நாள் வரையில் 10 நாட்களுக்கு இலங்கைப் பயணம் மேற்கொண்டேன் . இது ஒரு சுற்றுலா நோக்கில் மேற்கொண்ட பயணமாகும் . இந்தப் பயணத்தில் நான் , என் துணைவியார் , என் மாப்பிள்ளை , என் மகள் மற்றும் அவர்களுடையை ஒரே பையன் பிரணவ் ஆகிய ஐந்து பேரும் கலந்துகொண்டோம் .
இது என்னுடைய இரண்டாவது விமானப் பயணம் ஆகும் . முதல் விமானப் பயணம் , சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து , புனே சென்றது ஆகும் .

என்னுடைய மாப்பிள்ளையின் அண்ணன் திரு . R . கணேஷ் என்பவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் Finance & Accounting Process பிரிவில் General Manager ஆகப் பணிபுரிந்து வருகிறார். அவருடைய அழைப்பின் பேரில்தான் இந்தப் பயணத்தை நான் மேற்கொண்டேன் . அவர் மனைவி சித்ராவுடனும் , மகள் பாவனாவுடனும் அங்கு வசித்து வருகிறார்

பொதுவாக எனக்கு ஜோசியம், கைரேகை இவற்றில் நம்பிக்கை கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய கைரேகையைப் பார்த்த ஒருவர் , " உங்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு இருக்கிறது " என்று சொன்னார் . அவருடைய வாக்கு என்னுடைய 68 ம் வயதில் பலிக்கும் என்று நான் நினைக்கவில்லை .
பயணம் புறப்படுவதற்கு முன்பாக ,  வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்குச் சென்று வேண்டிக்கொண்டோம். இலங்கை சென்று திரும்பி வருகின்ற வரைக்கும் , உடல்நலம் நன்றாக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டோம் . மருந்து மாத்திரைகளையும் , மறக்காமல் எடுத்துக் கொண்டோம் .

23-12-2015 அன்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து Sri Lanka Airlines விமானத்தில் இரவு மணி 8.50க்குப் புறப்பட்டோம் . விமானத்தில் வெஜிடபிள் பிரியாணியும் , ஸ்வீட்டும் , காபியும் கொடுத்தார்கள் சரியாக இரவுமணி 9.55 க்குக் கொழும்பு விமான நிலையத்தை விமானம் அடைந்தது .

கொழும்பு விமான நிலையம் , சென்னை விமான நிலையத்தைவிட சிறியது என்றாலும் , மிகவும் தூய்மையாக வைத்திருந்தார்கள் .விமான நிலைய நடைமுறைகளை எல்லாம் முடித்துக்கொண்டு , லக்கேஜ்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வெளியே வருவதற்கு ஒருமணி நேரம் பிடித்தது .
விமான நிலையத்தில் எங்களை வரவேற்க திரு . கணேஷ் & அவரது குடும்பத்தினர் காத்திருந்தனர் . கொழும்பு விமான நிலையத்திலிருந்து சுமார் 45 நிமிட பயணத்திற்குப் பிறகு , அவரது இல்லத்தை அடைந்தோம் . அப்போது இரவு மணி 10-45 இருக்கும். எங்களுக்காக சூடான இட்டலிகள் செய்திருந்தார்கள் . அவற்றை சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொண்டோம் . வீடு , பெரிய வீடு . குளியலறையுடன் இணைந்த இரண்டு பெரிய படுக்கை அறைகள் , ஒரு வரவேற்பறை , பெரிய சமையலறை என்று இருந்தது . வாடகை எவ்வளவு என்று கேட்டபோது ரூ 75000/= என்று கணேஷ் சொன்னார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது . இந்திய நாணயம் ஒரு ரூபாய்க்கு , இலங்கை நாணயம் ரூ 2.20 சமம் என்று சொன்னார். ஆனாலும் வீட்டு வாடகை எனக்கு அதிகம் என்றே தோன்றியது . இலங்கைக் கரன்சியும் ரூபாய் என்றே அழைக்கப்படுகிறது . அன்று இரவு அனைவரும் நன்றாகத் தூங்கினோம் .

எனது இலங்கைப் பயணம் . HzB056K2S72dyqdasIx9+IMG_20151223_190849எனது இலங்கைப் பயணம் . Sj5V98v0RfyV43Ov9sce+IMG_20151223_190731எனது இலங்கைப் பயணம் . Dcm15czXT6u7EJcXdgT1+IMG_20151223_203758எனது இலங்கைப் பயணம் . RsTiAFf1SeytxD3HM0RM+IMG_20151223_215949எனது இலங்கைப் பயணம் . ><img src=]" />


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எனது இலங்கைப் பயணம் . Empty Re: எனது இலங்கைப் பயணம் .

Post by krissrini Tue Mar 22, 2016 10:17 am

கட்டுரை அருமை


ஸ்ரீனிவாசன்
krissrini
krissrini
பண்பாளர்


பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Back to top Go down

எனது இலங்கைப் பயணம் . Empty Re: எனது இலங்கைப் பயணம் .

Post by krishnaamma Tue Mar 22, 2016 10:21 am

வாவ்  ! நேத்துதான் கேட்டேன், இன்னைக்கு ஆரம்பித்து விட்டீர்கள்............மிக்க  நன்றி  ஐயா ......இதோ  படிக்கிறேன்  !...அருமை அருமை அருமை ஐயா !................போட்டோக்களும் மிக அருமை !...............

அதில் இருப்பது தான் நீங்களா ஐயா?......மாமி, மகள், மற்றும் சுட்டிப் பேரன்  எல்லோருமே அழகாய் இருக்கீங்க !.............. சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அனைவருக்கும் சுற்றிப் போட சொல்லுங்கோ ஐயா புன்னகை
.
.
.
ஐயா, ஒரு வேண்டுகோள், போடோக்களை ஒவ்வொன்றாக  போடுங்கள், நெட் slow  வாக இருப்பவர்களுக்கு down  load  ஆக நேரம் எடுக்கும் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


Last edited by krishnaamma on Tue Mar 22, 2016 11:24 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எனது இலங்கைப் பயணம் . Empty Re: எனது இலங்கைப் பயணம் .

Post by T.N.Balasubramanian Tue Mar 22, 2016 10:29 am

!!
வாழ்த்துகள் Jagadeesan .

எங்கள் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை பயணக் கட்டுரை ஆரம்பித்ததற்கு .
படத்தில் மகள் . பேரன், மனைவி மற்றும் நீங்கள் சரியா .

உங்களுக்கு ஏற்பட்ட இன்ப அதிர்வுகளையும் பகிர்ந்து கொள்ளவும் . அதிர வைத்த 
நிகழ்ச்சிகளையும் பகிர்ந்து கொள்ளவும் .

ரமணியன்  




எனது இலங்கைப் பயணம் . DLPV9bUGQDWxn2own3oy+220


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எனது இலங்கைப் பயணம் . Empty Re: எனது இலங்கைப் பயணம் .

Post by ChitraGanesan Tue Mar 22, 2016 10:48 am

இலங்கைஅய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

எனது இலங்கைப் பயணம் . Empty Re: எனது இலங்கைப் பயணம் .

Post by M.Jagadeesan Tue Mar 22, 2016 11:24 am

நன்றி கிருஷ்ணம்மா !
படத்தில் இருப்பது நான் , என் துணைவியார் ரேவதி , மகள் மகாலட்சுமி , பேரன் பிரணவ் ஆகியோர் .

தங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி ரமணியன் ஐயா !
அங்கு அதிரவைத்த நிகழ்வு என்று எதுவும் நடக்கவில்லை ! சிக்ரியா என்று ஒரு சிறிய குன்று . அதன்மீது ஏறும்போதுதான் மிகவும் சவாலாக இருந்தது . அதுபற்றி பின்னர் விளக்குகிறேன் .

சித்ரா கணேஷன் அவர்களுக்கு ,
நீங்கள் நினைப்பதுபோல் " இலங்கை " என்றாலே ஓடவேண்டிய அவசியமில்லை . ஒரு காலத்தில் யுத்த பூமியாக இருந்த அந்த நாடு , தற்போது யுத்தம் நடந்த சுவடே தெரியாமல் அங்கு அமைதி நிலவுகிறது . தமிழர்களும் ,சிங்களவர்களும் ஒற்றுமையாகத்தான் வாழ்கிறார்கள் . மக்கள் யுத்தத்தை வெறுக்கிறார்கள் .
கருணாமூர்த்தி புத்த பகவானின் காலடி பட்ட மண்ணிலே , யுத்தம் நடந்தது வேதனைக்குரிய விஷயம்தான் .

Krissrini அவர்களின் பாராட்டுக்கும் நன்றி !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எனது இலங்கைப் பயணம் . Empty Re: எனது இலங்கைப் பயணம் .

Post by krishnaamma Tue Mar 22, 2016 11:29 am

//நீங்கள் நினைப்பதுபோல் " இலங்கை " என்றாலே ஓடவேண்டிய அவசியமில்லை . ஒரு காலத்தில் யுத்த பூமியாக இருந்த அந்த நாடு , தற்போது யுத்தம் நடந்த சுவடே தெரியாமல் அங்கு அமைதி நிலவுகிறது . தமிழர்களும் ,சிங்களவர்களும் ஒற்றுமையாகத்தான் வாழ்கிறார்கள் . மக்கள் யுத்தத்தை வெறுக்கிறார்கள் .
கருணாமூர்த்தி புத்த பகவானின் காலடி பட்ட மண்ணிலே , யுத்தம் நடந்தது வேதனைக்குரிய விஷயம்தான் .//


எனக்கு கூட நீங்க இலங்கை போனேன் என்று சொன்னபோது மனதில் கொஞ்சம் பயமாய்த்தான் இருந்தது........நீங்கள் சொல்வதை பார்த்ததும் இப்போ பயம் 'போயே போச்' ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எனது இலங்கைப் பயணம் . Empty Re: எனது இலங்கைப் பயணம் .

Post by krishnaamma Tue Mar 22, 2016 12:49 pm

ஐயா , இந்த  கட்டுரையை  சுற்றுலா  பகுதிக்கு  மாற்றுகிறேன்  புன்னகை


Last edited by krishnaamma on Tue Mar 22, 2016 1:17 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எனது இலங்கைப் பயணம் . Empty Re: எனது இலங்கைப் பயணம் .

Post by பாலாஜி Tue Mar 22, 2016 1:10 pm

பகிர்வுக்கு நன்றி ..

மனதில் உள்ள பயம் விலகியது . நிச்சயம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவேண்டும் .

தொடர்ந்து படிக்க மிக்க ஆவலாக உள்ளேன் ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எனது இலங்கைப் பயணம் . Empty Re: எனது இலங்கைப் பயணம் .

Post by M.Jagadeesan Tue Mar 22, 2016 1:40 pm

அவசியம் போய் வாருங்கள் பாலாஜி !

பயம் என்பது தேவையில்லை ! " War begins in the minds of men " என்று சொல்வார்கள் . அதற்கு நாடு என்ன செய்யும் ? இயற்கை வளம் கொழிக்கும் நாடு . குறைந்தது ஒரு மாதம் தங்கியிருந்தால் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்க்கலாம் .

தொலைதூர நாடுகளுக்கு நம்மால் போய்வர இயலாது; பொருளாதார நிலையும்இலங்கைக்குப் இடம் கொடுக்காது. ஆனால் கூப்பிடு தூரத்தில் உள்ள இலங்கைக்குப் போய்வரலாமே !

ஒரு மணிநேரப் பயணம் ! போய்வர ஆளுக்கு ரூ 12500 / =


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எனது இலங்கைப் பயணம் . Empty Re: எனது இலங்கைப் பயணம் .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 46 1, 2, 3 ... 23 ... 46  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum