புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_c10தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_m10தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_c10 
87 Posts - 64%
heezulia
தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_c10தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_m10தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_c10தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_m10தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_c10தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_m10தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_c10தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_m10தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_c10 
3 Posts - 2%
sram_1977
தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_c10தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_m10தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_c10தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_m10தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_c10தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_m10தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_c10 
1 Post - 1%
prajai
தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_c10தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_m10தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_c10தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_m10தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_c10 
423 Posts - 76%
heezulia
தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_c10தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_m10தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_c10தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_m10தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_c10தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_m10தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_c10தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_m10தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_c10 
8 Posts - 1%
prajai
தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_c10தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_m10தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_c10தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_m10தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_c10தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_m10தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்?

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 16, 2016 1:00 am

'உங்களுக்கு சரி வரவும், முறையாகவும் பல் விளக்கத் தெரியாது...' என்று நான் கூறினால், 'என்ன விளையாடுறீங்களா... நான் என்ன பச்சக் குழந்தையா...' என்று, என்னுடன் பலரும் வாதம் செய்ய முன் வருவீர்கள்; ஆனால், நம்மில், 90 சதவீதம் பேர், பல் விளக்கும் முறை சரியில்லை என்பதை, பல் மருத்துவர்கள் பலர் சுட்டிக் காட்டுகின்றனர்.

சிலர், பல் விலக்க, ஏகப்பட்ட நேரம் எடுக்கின்றனர். சில கிராமத்துப் பண்ணையார்கள், வேப்பங்குச்சியை எடுத்து, வயல் வரப்புகளில் வலம் வந்தபடி, வீடு திரும்பும் வரை பல் தேய்க்கின்றனர்; பல் எனாமலுக்கு, இதை விட கேடு வேறு தேவையில்லை.

பல்லை மேலிருந்து கீழாக, முரணையில் ஆரம்பித்து, பல் முடிவு வரை மேல் வரிசையையும், கீழ் வரிசையை கீழ்முரணையில் ஆரம்பித்து மேல் நோக்கியும், உணவுத் துகள்களை வெளியே தள்ளும் முறையே, சரியான பல் விளக்கும் முறை!

நாமோ (நான் இல்லீங்க!) இந்த மூலையிலிருந்து அந்த மூலைக்கு தேய்க்கிறோம். இதனால், உணவுத் துகள்கள் கடைசி வரை பற்களிலேயே தங்கி, காரையாக மாறி, பாக்டீரியாக்களின் முகாம்களாக ஆகிவிடுகின்றன.

நம்மவர்களுக்கு, தெரியாததை சுட்டிக் காட்டினால், அப்படி ஒரு கோபம் வருகிறது. இது மட்டுமா... தெரியாததை தெரியாது என்று ஒப்புக் கொள்ளவும் மனம் வருவதில்லை. தெரியாது என்பது வெளியில் தெரிந்தால், வெட்கமாம், அசிங்கமாம், கேவலமாம், அவமானமாம், தர்மசங்கடமாம், மானக்கேடாம்!
ஆனால், இப்படி இல்லவே இல்லை.

எல்லாம் தெரியும் என்று பச்சைப் பொய்யை பல்லாண்டுகளாக கூறி, புளுகு மூட்டைகளாகவும், அறியாமையின் குவியல்களாகவும் வாழ்கின்றனர் பலர். அறியாமை, வெட்கப்பட வேண்டிய விஷயம் அல்ல; அதை ஒப்புக் கொள்ளாதது தான்!

மேற்குத் தொடர்ச்சி மலையில், தெற்கு, வடக்காக ஓடுகிறது கொங்கண் ரயில் பாதை. இந்த ரயிலில் பயணிப்போர், மேற்குப் பக்க ஜன்னல் ஓரம் அமர்ந்தால், கடற்கரை காட்சிகளை மட்டுமே அதிகமாக காணலாம். கிழக்கு பக்க ஜன்னல் ஓரம் அமர்ந்தால், மலைத் தொடர்ச்சிகளை மட்டுமே காண முடியும்.

மறுபுறம் பார்க்கத் தவறவிட்ட இந்த ரயில் பயணிகளை குறை சொல்ல முடியுமா... இப்படி தான், நம் அறியாமைகளும்! நாம் பயணிக்கிற வாழ்வின் பாதையில், மறுபுறம் உள்ளவை, நமக்கு தெரிய வராமலேயே போகின்றன. இது ஒரு பெரிய குறையா?

கடற்கரைப் பகுதியை பார்த்தவரும், மலைத் தொடர்ச்சிகளைப் பார்த்தவரும், தங்கள் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது எப்படி தவறில்லையோ, அதேபோல, நாம் அறியாத மறு பக்கங்களை பிறர் கூறுகிற போது, தெரிந்த மாதிரிக் காட்டிக் கொள்ளாமலும், 'எனக்குத் தெரியாதது என்ன இருக்கிறது...' என்று நடித்து, பாவ்லா காட்டாமலும், 'சொல்லுங்க... எனக்கு இதெல்லாம் புதுசு...' என்று கேள்வி கேட்கும் குழந்தையாக மாறி விடுவது நல்லது; இது, புத்திசாலித்தனமும் கூட!

நான் தமிழ் படித்து வளர்ந்தவன்; என் வழக்கறிஞர் நண்பர், திடீரென, 'ப்ரோ கிரேஸ்டி நேஷன் ==pro crasti nation' என்று ஒரு சொல்லைக் கூறி, உரையாட ஆரம்பித்து விட்டார். அவர் பேசி முடித்ததும், 'புராக்காஸ்டினேஷன்னு சொன்னீங்க; அதுக்கு என்ன அர்த்தம்?' என்று கேட்டேன்.

'அட இது தெரியாதா...' என்று இளக்காரப் புன்னகை சிந்தினார்.'தெரியாது நண்பரே... நான் படிச்சதெல்லாம் தமிழ் இலக்கியம். அதுல எதுவும் தெரியலன்னா தான் தப்பு...' என்றேன் புன்னகை மாறாமல்!

'அதுவும் சரி தான்...' என்று இறங்கி வந்தவர், 'அப்படீன்னா, தள்ளிப்போடுவது, தாமதப்படுத்துவது...' என்றார்.
'நன்றி நண்பரே...' என்றேன்.

மேலைநாட்டவர்கள் தெரியாததை தெரியாது என்று சொல்ல வெட்கப்படுவதே இல்லை; எல்லாம் தெரிந்த மேதாவி என்று காட்டிக் கொள்வதில் அவர்களுக்கு உடன்பாடே இல்லை. அறிவு தேடலில் உள்ளவர்கள், இத்தவறை செய்வதே இல்லை.

ஹோமியோபதி மாத்திரைகள், அலோபதி மாத்திரைகளைப் போல அல்ல. எல்லா வியாதிகளுக்கும் தரப்படும் மாத்திரைகள், பார்க்க ஜவ்வரிசி போலவே இருக்கும். ஆனால், அதற்குள் இறக்கப்பட்டிருக்கும் சாராம்சம் வேறு வேறு.

நாமும் வெறும் ஜவ்வரிசியாக இல்லாமல், சரக்கு இறக்கி கொண்ட, சாரமுள்ள மாத்திரைகளாக மாறுவோம். இதற்கு, வெட்கம் மற்றும் வீண் கவுரவம் ஆகியவை, தடைகளாக இருக்கவே கூடாது!

லேனா தமிழ்வாணன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 16, 2016 1:07 am

அறியாமை, வெட்கப்பட வேண்டிய விஷயம் அல்ல; அதை ஒப்புக் கொள்ளாதது தான்!

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Mar 16, 2016 8:39 am

உண்மை தான். தெரியாது என்று சொல்வதற்கு பலரும் தயங்க தான் செய்வார்கள். தயக்கம் தான் முன்னேற்றத்திற்கு தடை. நல்ல பகிர்வு.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Mar 16, 2016 9:16 am

ஆசிரியர் ஒருவர் , மாணவர்களுக்குப் பாடம் நடத்திக்கொண்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம் .
கணக்குப் பாடம் என்று வைத்துக்கொள்வோம் .

எந்த ஒரு எண்ணையும் அதே எண்ணால் வகுத்தால் விடை 1 என்று கூறுகிறார். பல எடுத்துக் காட்டுகளுடன் அதை விளக்குகிறார் .

5 ஐ 5 ஆல் வகுத்தால் விடை 1  
10 ஐ 10 ஆல் வகுத்தால் விடை  1
1000 ஐ 1000ஆல் வகுத்தால் விடை 1

என்று சொல்லிக்கொண்டே போகிறார் . அப்போது ஒரு மாணவன் எழுந்து ,

ஐயா ! 0 என்ற எண்ணை 0 என்ற எண்ணால் வகுத்தால் விடை 1 வருமா என்று கேட்கிறான் .

ஆசிரியருக்குத் தூக்கிவாரிப் போட்டது . என்ன விடை சொல்வது என்று அவருக்குத் தெரியவில்லை .

" எனக்குத் தெரியாது " என்று ஆசிரியர் சொன்னால் , மாணவர்களுக்கு ஆசிரியர் மீதிருந்த மதிப்பு குறைந்துவிடும் . தப்பான விடை சொன்னாலோ , ஆசிரியரின் நிலை இன்னும் மோசமாகப் போய்விடும் .
எனவே ஒரு புத்திசாலியான ஆசிரியர் என்ன சொல்லவேண்டும் தெரியுமா ?

" தம்பி ! " நீ கேட்ட கேள்வி மிகவும் அருமையான கேள்வி . உன்னுடைய கேள்விக்கு சரியான பதிலை நாளை சொல்கிறேன் ! " என்று சொல்லவேண்டும் . ஏன் தெரியுமா ?

தன்னிலும் குறைவான அறிவுடைய மாணவர்களிடம் ஆசிரியர் , " எனக்குத் தெரியாது " என்று சொல்லக்கூடாது. எப்போதும் அறிவில் மேம்பட்டவராகவே காட்டிக்கொள்ளவேண்டும் .

அதே ஆசிரியர் , தன்னிலும் மேம்பட்ட அல்லது சமமான அறிவுடையவர்களிடம் தன்னுடைய தோல்வியை அல்லது அறியாமையை ஒப்புக்கொள்வதில் தவறில்லை !

எனவே " எனக்குத் தெரியாது " என்ற வார்த்தையை சபை அறிந்து நாம் சொல்லவேண்டும் .
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 16, 2016 10:41 am

சசி wrote:உண்மை தான். தெரியாது என்று சொல்வதற்கு பலரும் தயங்க தான் செய்வார்கள். தயக்கம் தான் முன்னேற்றத்திற்கு தடை. நல்ல பகிர்வு.

நன்றி சசி...............ஆமாம், தயக்கம் தான் முன்னேற்றத்திற்கு தடை தான்............இத்தனை நாள் தான் தெரியாமல் போச்சு , இப்போவாவது தெரிந்து கொள்ளலாமே என்று நினைக்கணும் புன்னகை
.
.
.
BETTER LATE THAN NEVER என்பதை நினைவில் கொள்ளணும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 16, 2016 10:45 am

M.Jagadeesan wrote:ஆசிரியர் ஒருவர் , மாணவர்களுக்குப் பாடம் நடத்திக்கொண்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம் .
கணக்குப் பாடம் என்று வைத்துக்கொள்வோம் .

எந்த ஒரு எண்ணையும் அதே எண்ணால் வகுத்தால் விடை 1 என்று கூறுகிறார். பல எடுத்துக் காட்டுகளுடன் அதை விளக்குகிறார் .

5 ஐ 5 ஆல் வகுத்தால் விடை 1  
10 ஐ 10 ஆல் வகுத்தால் விடை  1
1000 ஐ 1000ஆல் வகுத்தால் விடை 1

என்று சொல்லிக்கொண்டே போகிறார் . அப்போது ஒரு மாணவன் எழுந்து ,

ஐயா ! 0 என்ற எண்ணை 0 என்ற எண்ணால் வகுத்தால் விடை 1 வருமா என்று கேட்கிறான் .

ஆசிரியருக்குத் தூக்கிவாரிப் போட்டது . என்ன விடை சொல்வது என்று அவருக்குத் தெரியவில்லை .

" எனக்குத் தெரியாது " என்று ஆசிரியர் சொன்னால் , மாணவர்களுக்கு ஆசிரியர் மீதிருந்த மதிப்பு குறைந்துவிடும் . தப்பான விடை சொன்னாலோ , ஆசிரியரின் நிலை இன்னும் மோசமாகப் போய்விடும் .
எனவே ஒரு புத்திசாலியான ஆசிரியர் என்ன சொல்லவேண்டும் தெரியுமா ?

" தம்பி ! " நீ கேட்ட கேள்வி மிகவும் அருமையான கேள்வி . உன்னுடைய கேள்விக்கு சரியான பதிலை நாளை சொல்கிறேன் ! " என்று சொல்லவேண்டும் . ஏன் தெரியுமா ?

தன்னிலும் குறைவான அறிவுடைய மாணவர்களிடம் ஆசிரியர் , " எனக்குத் தெரியாது " என்று சொல்லக்கூடாது. எப்போதும் அறிவில் மேம்பட்டவராகவே காட்டிக்கொள்ளவேண்டும் .

அதே ஆசிரியர் , தன்னிலும் மேம்பட்ட அல்லது சமமான அறிவுடையவர்களிடம் தன்னுடைய தோல்வியை அல்லது அறியாமையை ஒப்புக்கொள்வதில் தவறில்லை !

எனவே " எனக்குத் தெரியாது " என்ற வார்த்தையை சபை அறிந்து நாம் சொல்லவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1197835

தங்கள் விளக்கமான பதிலுக்கு நன்றி ஐயா புன்னகை ...சபை அறிந்து நடந்து கொள்வோம் ! சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 16, 2016 11:07 am

தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்? 103459460
-
குருகுலத்தில் கல்வி கற்க சென்றவனிடம்
பெற்றோர், கல்வியை நல்ல முறையில் கற்று
வருகிறாயா, என கேட்டபோது, கற்பித்து வருகிறேன்
என்று பதில் சொன்னானாம்...
-
அதே மாணவன் ஆசிரியராக பணிபுரிந்த போது,
பெற்றோரிடம் சொன்ன பதில் கற்றுக் கொள்கிறேன்
எனபதாம்...
-
ஆக ஆவன் மாணவனாக இருந்த போது, அவன் கேட்கும்
அரிய சந்தேகங்களுக்கு தக்க பதிலை கூற ஆசிரியர்கள்
மேலும் படிக்க வேண்டியிருந்தது...
-
அதே மாணவன் ஆசிரியராக இருந்த போது, அவனது
மாணவர்கள் கேட்கும் கேட்கும் கேள்விகளுக்கு
மேலும் அவன் கற்க வேண்டியிருந்தது என்பதாகும்

-

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Mar 16, 2016 11:31 am

தினமும் சார்ஜ் செய்துகொண்டு இருந்தால்தான் செல்போன் இயங்கும்; ஆசிரியரும் அப்படியே ! தினமும் படித்தால்தான் வகுப்பறையில் திறம்பட பாடம் நடத்தமுடியும் . கற்பித்தலில் பல ஆண்டுகள் அனுபவம் உள்ள ஆசிரியர்களும் , அன்றையதினம் நடத்தவேண்டிய பாடத்தை ஒருமுறை படித்துக் குறிப்பெடுத்துக் கொள்வார்கள் .

கற்றலுக்கு முடிவில்லை; அது மாணவனாக இருந்தாலும் சரி; ஆசிரியராக இருந்தாலும் சரி .சாகும்வரை கற்றுக்கொண்டே இருப்பதுதான் கல்வி.

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு . ( கல்வி - 397 )

' சாந்துணையும் கல்லாத வாறு " என்ற வார்த்தைகள் சாகும் வரை ஒருவன் கற்கவேண்டும் என்பதை உணர்த்துகிறது .

சிவாஜிகணேசன் எவ்வளவு பெரிய நடிகர் ! அவரே ஒவ்வொரு படப்பிடிப்புக்கு செல்லும் முன்பு , பயந்துகொண்டே செல்வாராம் ! இன்றைய படப்பிடிப்பு , அதில் நம்முடைய நடிப்பு சிறப்பாக அமையவேண்டுமே என்ற படபடப்பு அவருள்ளே எப்போதும் இருக்குமாம் .

இது எப்படி இருக்கு ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 16, 2016 11:41 am

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 16, 2016 11:55 am

M.Jagadeesan wrote:தினமும் சார்ஜ் செய்துகொண்டு இருந்தால்தான் செல்போன் இயங்கும்; ஆசிரியரும் அப்படியே ! தினமும் படித்தால்தான் வகுப்பறையில் திறம்பட பாடம் நடத்தமுடியும் . கற்பித்தலில் பல ஆண்டுகள் அனுபவம் உள்ள ஆசிரியர்களும் , அன்றையதினம் நடத்தவேண்டிய பாடத்தை ஒருமுறை படித்துக் குறிப்பெடுத்துக் கொள்வார்கள் .

கற்றலுக்கு முடிவில்லை; அது மாணவனாக இருந்தாலும் சரி; ஆசிரியராக இருந்தாலும் சரி .சாகும்வரை கற்றுக்கொண்டே இருப்பதுதான் கல்வி.

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு . ( கல்வி - 397 )

' சாந்துணையும் கல்லாத வாறு " என்ற வார்த்தைகள் சாகும் வரை ஒருவன் கற்கவேண்டும் என்பதை உணர்த்துகிறது .

சிவாஜிகணேசன் எவ்வளவு பெரிய நடிகர் ! அவரே ஒவ்வொரு படப்பிடிப்புக்கு செல்லும் முன்பு , பயந்துகொண்டே செல்வாராம் ! இன்றைய படப்பிடிப்பு , அதில் நம்முடைய நடிப்பு சிறப்பாக அமையவேண்டுமே என்ற படபடப்பு அவருள்ளே எப்போதும் இருக்குமாம் .

இது எப்படி இருக்கு ?

அது அவருடைய தொழில் பக்தியைக்  காட்டுகிறது ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக