புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன்னுத்தாயி! Poll_c10பொன்னுத்தாயி! Poll_m10பொன்னுத்தாயி! Poll_c10 
53 Posts - 42%
heezulia
பொன்னுத்தாயி! Poll_c10பொன்னுத்தாயி! Poll_m10பொன்னுத்தாயி! Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
பொன்னுத்தாயி! Poll_c10பொன்னுத்தாயி! Poll_m10பொன்னுத்தாயி! Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
பொன்னுத்தாயி! Poll_c10பொன்னுத்தாயி! Poll_m10பொன்னுத்தாயி! Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
பொன்னுத்தாயி! Poll_c10பொன்னுத்தாயி! Poll_m10பொன்னுத்தாயி! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பொன்னுத்தாயி! Poll_c10பொன்னுத்தாயி! Poll_m10பொன்னுத்தாயி! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பொன்னுத்தாயி! Poll_c10பொன்னுத்தாயி! Poll_m10பொன்னுத்தாயி! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன்னுத்தாயி! Poll_c10பொன்னுத்தாயி! Poll_m10பொன்னுத்தாயி! Poll_c10 
304 Posts - 50%
heezulia
பொன்னுத்தாயி! Poll_c10பொன்னுத்தாயி! Poll_m10பொன்னுத்தாயி! Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
பொன்னுத்தாயி! Poll_c10பொன்னுத்தாயி! Poll_m10பொன்னுத்தாயி! Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
பொன்னுத்தாயி! Poll_c10பொன்னுத்தாயி! Poll_m10பொன்னுத்தாயி! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
பொன்னுத்தாயி! Poll_c10பொன்னுத்தாயி! Poll_m10பொன்னுத்தாயி! Poll_c10 
21 Posts - 3%
prajai
பொன்னுத்தாயி! Poll_c10பொன்னுத்தாயி! Poll_m10பொன்னுத்தாயி! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பொன்னுத்தாயி! Poll_c10பொன்னுத்தாயி! Poll_m10பொன்னுத்தாயி! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
பொன்னுத்தாயி! Poll_c10பொன்னுத்தாயி! Poll_m10பொன்னுத்தாயி! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பொன்னுத்தாயி! Poll_c10பொன்னுத்தாயி! Poll_m10பொன்னுத்தாயி! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பொன்னுத்தாயி! Poll_c10பொன்னுத்தாயி! Poll_m10பொன்னுத்தாயி! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன்னுத்தாயி!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 16, 2016 12:57 am

''கீரெ... கீரெ... அரக்கீர... சிறுகீரெ... பொன்னாங்கண்ணிக்கீர...''
தலையில் கூடையும், இடுப்பில் மூட்டையுமாக மெல்ல நடந்து வரும் பொன்னுத்தாயிக் கிழவியின் குரல், அந்த தெருவின் கடைசி வரை கணீரென்று ஒலித்தது.

பல வீட்டு இல்லத்தரசிகள் வாசலுக்கு வந்து தயாராக நின்றனர்.
''ஏம்மா... சிறு கீரை கட்டு எவ்வளவு?''
''10 ரூபா...''
''அய்யோடா... என்னது கீரையப் போய் இந்த விலை விக்கிறே...''

''என்னம்மா... அவ்வளவு எளக்காரமாப் பேசற... ரெண்டு கட்டு வாங்கி கடைஞ்சேன்னா, குடும்பம் மொத்தத்துக்கும் ஆவும். 20 ரூபாயில, எந்தக் காயி வாங்கி, என்ன செய்வே?''
கேட்டவளுக்கு, சரியான பதில் கொடுத்தாள் பொன்னுத்தாயி.

என்ன கேள்வி கேட்டாலும், கடைசியில் கீரை வாங்காமல் போக மாட்டார்கள். அந்த ஏரியாவில், வேற யாராவது கீரை கொண்டு வந்து கூவிக் கூவி விற்றாலும், ஒரு கட்டு கூட விற்காது. கிழவியின் கீரை மண்ணும், களையுமின்றி, 'தளதள'வென்று இருக்கும். கடைகளில் வாங்கும் கீரையில், கட்டுக்கு பாதி தேறினாலே அதிகம்; ஆனால், பொன்னுத்தாயின் கீரையில் முழுக்கட்டுமே சுத்தம். இது, இன்று நேற்றல்ல, கிட்டத்தட்ட, பல ஆண்டுகளாக அத்தெருவாசிகளின் அனுபவம்.

தெருவுக்கு புதிதாக குடிவந்தவர்கள், விஷயம் தெரியாமல், கிழவியிடம் பேரம் பேசுவதுண்டு. அதிலும் சில, 'ரிட்டையர்டு' ஆசாமிகள், அவ்வளவு சீக்கிரம் கீரைக் கட்டை வாங்கி, காசு கொடுக்க மாட்டார்கள்.
ஒருநாள் ஒரு ரிட்டையர்டு ஆபீசர், 'ஏய் கிழவி... கடையிலயே, எட்டு ரூபாய்க்கு தான் குடுக்கிறான்; நீ விலைய கூடச் சொல்றியே... ஒரு பொருளை அதிக விலை வச்சு விக்கறது, சட்டப்படி குத்தம் தெரியுமா...' என்றார்.

'எந்தக் கடையில, எந்தச் சாமானை, நியாய விலையில விக்குறான்... உங்க சட்டத்த அங்க பேசறீங்களா... கேட்ட விலைய குடுத்துட்டு, வாங்கிட்டு தான வர்றீங்க...' என்றாள் பொன்னுத்தாயி.
'ஓகோ... அப்ப நீ என்ன விலை சொன்னாலும், அந்த காசை கொடுத்து கீரைய வாங்கிக்கணும்... அப்படித்தானே?'

தன் இயலாமையை கிழவி குத்திக் காட்டியதில், ஆத்திரமாகக் கேட்டார் அதிகாரி.
இடுப்பிலிருந்த மூட்டையை கீழே வைத்து, மெல்ல தலையிலிருந்த கூடையை இறக்கி வைத்து, அந்த ஆபீசரைப் பார்த்து, 'எந்தக் கீரை வேணுமோ எவ்வளவு கட்டு வேணுமோ எடுத்துக்கங்க...' என்றாள் பொன்னுத்தாயி.

'அப்படி வா வழிக்கு...' தான் மிரட்டியதில், கிழவி பயந்து விட்டாள் என நினைத்து உற்சாகமான ஆபீசர், இரண்டு கட்டு வாங்கலாமென்றிருந்தவர், நான்கு கட்டுகளை எடுத்தார்.
இரண்டு, 10 ரூபாய் நோட்டுகளை நீட்டியபடியே, 'ஒரு கட்டு அஞ்சு ரூபான்னு, நாலுகட்டு எடுத்துக்கிட்டேன்...' என்றார்.

பணத்தை வாங்காமல், அவருடைய முகத்தையே பார்த்த கிழவி, 'வேணாங்க சாமி...' என்றாள்.
'என்னது... காசு வேணாமா சரி சரி... ரெண்டு ரூபா சேர்த்து தரேன்; வாங்கிக்க...'
'காசே வேணாங்கறேன்... எதுக்கு சேர்த்து குடுக்கறே....' என்ற பொன்னுத்தாயை, அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தார் ஆபீசர்.

'இதோ பாருங்கய்யா... இன்னிக்கு என் கீரைய சமைச்சு சாப்பிட்டு பாருங்க; நாளைக்கு கடையில வாங்கி சமைச்சு சாப்பிட்டு பாருங்க. அப்புறமா எனக்கு காசு குடுக்கணும்ன்னு தோணுச்சுன்னா, நான் கேட்ட காசக் குடுங்க; இல்ல நீங்களே வெச்சுக்கங்க. எம்புள்ளக்கி குடுத்ததா நெனச்சுட்டுப் போறேன்...' என, அவரின் பதிலுக்கு காத்திருக்காமல், மூட்டையையும், கூடையையும் தூக்கி கிளம்பி விட்டாள் பொன்னுதாய்.

'கீரெ... கீரெ... அரக்கீரெ... சிறுகீரெ... முளக்கீரே... பொன்னாங்கண்ணிக்கீரெ...' கொஞ்சம் கூட சுருதி பிசகாமல், உரக்கக் கூவியபடி தெருவில் நடக்க துவங்கிய பொன்னுத்தாயை, வியப்புடன் பார்த்தபடி நின்று விட்டார் ஆபீசர்.

இது போன ஆண்டு நடந்தது; இந்த ஆண்டு பொங்கலுக்கு, சின்னாளம்பட்டிப் புடவை எடுத்து, பொன்னுத்தாயிக்கு கொடுத்தார் அந்த ஆபீசர்; சந்தோஷமாக வாங்கி கொண்டாள்.ஆனாலும், இன்றைக்கும் விலையில் கறார் தான்; குறைக்க மாட்டாள். ஒரு கட்டு கீரைகூட மிஞ்சாது; காலிக் கூடையுடன் தான் வீட்டுக்கு திரும்புவாள்.

தெருவாசிகள் பலருக்கு, பொன்னுத்தாயின் விஷயத்தில் ஆச்சரியம்! கிழவிக்கு குடும்பம் என்று யாருமே கிடையாது. முன்பெல்லாம் கேட்ட விலைக்கு கொடுத்து விட்டு போய் விடுவாள். கொஞ்ச நாட்களாக தான், இப்படி கறாராக இருக்கிறாள். இதை, பொன்னுத்தாயிடமே வாய்விட்டு கேட்டவர்களும் உண்டு.
'என்ன கிழவி... வயசாக வயசாக, உனக்கு காசு மேல ஆசை ஜாஸ்தியாகிட்டே போவுதே...'

தொடரும்............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 16, 2016 12:58 am

'ஆமாமா... உங்ககிட்ட அநியாய விலைக்கு கீரைய வித்து, காசு சேத்து, மச்சுவீடு கட்டப் போறேன் போ...'கேட்டவள் வாயை மூடிக் கொண்டாள்.

காலையில், 5:00 மணிக்கு எழுந்தால், 6:00 மணிக்குள் ஊர் கடைசியில் உள்ள தோட்டத்துக்கு சென்று, கீரைகளை பிடுங்கி, வாய்க்கால் நீரில் அலசி ஆய்ந்து, அதை கட்டுகளாக்கி எடுத்து, 7:00 மணிக்குள்ளாகவே கூவத் துவங்கி விடுவாள். விற்று முடிந்து வீடு திரும்ப, 10:00 மணி ஆகிவிடும்.

அன்றைய வருமானத்தை எண்ணிப் பார்த்து, முந்தைய சேமிப்போடு சேர்த்து வைத்து, அந்த சிறிய ஓட்டு வீட்டில் பத்திரப்படுத்துவாள். அதன் பின் தான், சமைக்கவே ஆரம்பிப்பாள். இந்த நடைமுறை சில ஆண்டுகளாக தான். அவளுடைய வாடிக்கையாளர்கள் சிலர் கூறுவதைப் போல, காசு ஆசை வந்து, காசை சேர்த்துக் கொண்டுதானிருக்கிறாள்.

ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் -

குழந்தைகள் விளையாடுவதை பார்த்த படியே, மெல்ல நடந்தாள் இல்லத் தலைவி சிஸ்டர் ஏஞ்சலினா. பின்னாலிருந்து, ''வணக்கம்மா...'' என்ற குரல் கேட்டு திரும்பினாள்.

பொன்னுத்தாயி நின்றிருந்தாள்.
''என்ன பொன்னுத்தாயி... சவுக்கியமா...''
''நல்லாயிருக்கேன்ம்மா...''
''உன் பேரனப் பாக்க வந்தியா... அதோ விளையாடிட்டுருக்கான் பாரு...''

சிஸ்டர் கை காட்டிய திசையில் பார்த்தாள் , பொன்னுத்தாயி. 'துறுதுறுவென்று மூன்று வயது சிறுவன் ஒருவன் ஓடிப் பிடித்து விளையாடியபடி இருந்தான்.

முகம் கனிந்து, கண்களில் நீர் நிறைய, ''என் பேரன்னா சொன்னீங்க...'' என, மெல்ல கேட்டாள், பொன்னுத்தாயி.
''ஏன் உன் பேரன்னு சொல்றதுல என்ன தப்பு?''

கிழவி ஏதும் பேசவில்லை. அமைதியாக குழந்தைகள் கூட்டத்தில், குதித்து ஓடும் சிறுவனையே பார்த்தாள்.
''பொன்னுத்தாயி...'' என்ற சிஸ்டரை திரும்பி பார்த்தாள்.

''என்ன யோசனை செய்றே?''
''ஒண்ணுமில்லம்மா...''
''மூணு வருஷத்துக்கு முன், விடியக்கால நேரத்துல, இந்தப் பையன, பச்சைக் குழந்தையா என் கையில கொண்டு வந்து கொடுத்தியே... அத நினைச்சுக்கிட்டயா?'' என்று கேட்டாள் சிஸ்டர்.

''ஆமாம்மா... அத நெனச்சா இன்னிக்குக் கூட என் நெஞ்சு பதறுது. பொறந்த பச்சக் குழந்தைய, தோட்டத்துல செடிகளுக்கு நடுவுல, மண்ணுல தூக்கிப் போட்டுட்டு போறதுக்கு, ஒரு பொம்பளையோட மனசு எப்படி துணிஞ்சதுன்னு நெனக்கறப்போ...''

''நடந்து போனதப் பத்தி இன்னும் எதுக்கு நினைச்சு வருத்தப்படறே... இது மாதிரி, ஆயிரம் அவலங்கள் இந்த உலகத்துல நடந்துட்டுதானிருக்கு. அத தடுக்கிற சக்தி நமக்கேது... ஆனா, இந்தக் குழந்தை உன் கண்ணுல பட்டுச்சு பாத்தியா... அதுதான் கர்த்தரோட கருணை. இவன் அதிர்ஷ்டக்காரப் பையன்; அதான், உன் கைக்கு கிடைச்சு, உன் மூலம், இந்த இல்லத்துக்கு வந்திருக்கான். இவனோட எதிர்காலம், நிச்சயம் நல்லபடியாக இருக்கும்; வருத்தப்படாத...'' என்றாள் சிஸ்டர்.

முந்தானையால் கண்களையும், முகத்தையும் துடைத்தாள் பொன்னுத் தாயி. பின், சிஸ்டரின் முகத்தை தயக்கத்துடன் பார்த்து, ''அம்மா... நா இப்ப குடுக்கறத வேணாம்ன்னு சொல்லக் கூடாது,'' என்றாள்.
வியப்புடன் கிழவியின் முகத்தை பார்த்து, ''என்ன பொன்னுத்தாயி... புதுசா என்னமோ சொல்றே...'' என்றாள் சிஸ்டர்.

ஏதும் பேசாமல், மடியில் சொருகியிருந்த துணிப்பையை எடுத்துப் பிரித்து, கட்டாக பணத்தை எடுத்தாள் பொன்னுத்தாயி. அந்தக் கட்டில், 10, 20, 50, 100 ரூபாய்கள் என அடுக்கி, ஒரே கட்டாக நூலினால் கட்டப்பட்டிருந்தது. அதை அப்படியே சிஸ்டரிடம் நீட்டினாள்.

வியப்புடன் பார்த்து, ''என்ன பொன்னுத்தாயி இது... எதுக்கு இவ்வளவு பணத்தக் குடுக்கற?''என்று கேட்டாள் சிஸ்டர்.

''இதுல, 10 ஆயிரம் ரூபா இருக்கும்மா...'' என்று கிழவி சொன்னதும், சிரித்தபடியே, ''அன்னிக்கி இந்தப் பையனுக்கு நல்ல படிப்பு குடுக்கணும்ன்னா கொஞ்சம் செலவாகும்ன்னு சொன்னனே... அத நினைச்சு இந்த பணத்தை தர்றியா?'' என்று கேட்டாள் சிஸ்டர்.

''இந்தப் பையன நல்லா படிக்க வைக்கணும்ன்னு எனக்கு ஆசை தான்; ஆனா, அவனுக்காக மட்டும் இந்தப் பணத்த குடுக்கல...''
''பின்ன...''

''இங்க இருக்கிற குழந்தைங்கள வளக்கறதுக்கு, உங்களுக்கு நிறையப் பேரு பணம் குடுக்கறாங்களே... அதுக்கு ஏதோ சொல்வீங்களே...''
''டொனேஷன்.''

''ஆ... அதாம்மா... இந்தப் பணத்த அப்படி நினைச்சு வாங்கிக்கங்க,'' என்றாள்.
பணத்தை வாங்காமல், பொன்னுத்தாயை ஆச்சரியத்துடன் பார்த்தாள் சிஸ்டர்.

''என்னம்மா அப்படிப் பாக்குறீங்க... இந்த வருஷம் பூரா கீர வித்து, நான் சேத்த பணம்மா இது...''
''பொன்னுத்தாயி... உன்னை எனக்கு பல வருஷமா தெரியும். எங்கயோ கிடந்து எடுத்து வந்த பையனுக்கு, இந்த வயசான காலத்துல, உன்னை நீ வருத்திக்கணுமா...'' என்றாள்.

''இல்லம்மா... இந்தப் பையனுக்குன்னு நா இந்தப் பணத்தைக் குடுக்கல. நீங்க என்ன பாத்ததும், பேரனப் பாக்க வந்தியான்னு கேட்டிங்க; நான், அவன மட்டும் பேரனா நினைக்கல; இங்க விளையாடற எல்லா குழந்தைகளும் எம்பேரன், பேத்திகளா தான் தெரியுது. இந்தப் பணத்த எல்லாருக்குமா தான் குடுக்கறேன்,'' என்றாள்.பதில் பேச முடியாமல், கிழவியை பிரம்மிப்புடன் பார்த்தாள் சிஸ்டர்.

''இந்தப் பையனை, பச்சக் குழந்தையா விடியற்கால நேரத்துல, உங்க கையில குடுத்துட்டு போனப்புறம், இவன் நெனப்பாவே கொஞ்ச நாள் இருந்தேன். இவன நெனச்சு தான், ஆரம்பத்துல காசு சேர்த்தேன். ஆனா, இங்க அப்பப்ப வந்து பாத்துட்டு போனப்புறம், பெத்தவங்களே இல்லாத இந்த பிஞ்சுகளோட முகத்த பாக்க பாக்க, இந்த குழந்தைங்க எல்லாருமே எம்மனசுல நிறைஞ்சுட்டாங்க.

''இனிமே இந்த உடம்புல உசிரு இருக்கிற வரைக்கும், இந்த குழந்தைகளுக்காக உழைச்சா என்னன்னு தோணுச்சு. என்னோட அந்த ஓட்டு வீட்டக்கூட, எனக்கு அப்புறம் இந்த இல்லத்துக்கு எழுதி வெக்கலாம்ன்னு இருக்கேன்; அது எப்படின்னு, நீங்க தான் சொல்லணும்...'' என்று பொன்னுத்தாயி நிறுத்தியதும், கண்களில் நீர் நிறைய, கிழவியின் இரு கைகளையும், பணத்தோடு சேர்த்துப் பிடித்து, நெகிழ்ச்சியுடன், ''பொன்னுத்தாயீ...'' என்று கூறிய சிஸ்டரால் அதற்கு மேல் பேச முடியவில்லை!

ராகவன் தம்பி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 16, 2016 1:15 am

பொன்னுத்தாயி! 3838410834 பொன்னுத்தாயி! 3838410834 பொன்னுத்தாயி! 3838410834 இப்படியும் சிலர் இருப்பதால் தான் இன்னும் மழை பெய்கிறது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Mar 16, 2016 8:34 am

நெகிழ்வான கதை அம்மா. மனது கனத்து விட்டது. நல்ல பகிர்வு அம்மா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 16, 2016 10:46 am

சசி wrote:நெகிழ்வான கதை அம்மா. மனது கனத்து விட்டது. நல்ல பகிர்வு அம்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1197829

ம்ம்.. ஆமாம் சசி.......நன்றி ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 16, 2016 10:56 am

பொன்னுத்தாயி! 3838410834
-
பொன்னுத்தாயின் கருணை உள்ளம்... சூப்பருங்க
-
இதைத்தான்,
"நல்லார் ஒருவர் உளரேல்
அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை'
என்று ஒளவைப் பாட்டி மூதுரையில் கூறிச்
சென்றாரோ
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 16, 2016 10:58 am

ஒரு உண்மை சம்பவம் (கடந்த மாதம் நிகழ்ந்த்து)
-
முன்பின் தெரியாத பயணிக்காக தனது வாகனத்தை அடகுவைத்த சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரை உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் எப்படிப்பட்ட நாட்டில் வாழ்கிறீர்கள் என்பதில் உங்களையே பெருமிதம் கொள்ளச் செய்யும் நிகழ்வு அது.
-
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் கே.ரவிசந்திரன் (57), ஆட்டோ ஓட்டுநர். ஆட்டோ ஓட்டுவது ஒன்றுதான் அவருக்கு வருமானம்.
-
இரு மாதங்களுக்கு முன் ராமாபுரத்திலிருந்து திருவல்லிக்கேணிக்கு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பயணி ஒருவர் அவரது ஆட்டோவில் பயணித்தார். அண்ணா சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது திடீரென பயணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
-
உடனடியாக ஓட்டுநர் ரவிசந்திரன் அந்தப் பயணியை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரிலுள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தார். தவிர, பயணியின் மகனுக்கும் தொலைபேசியில் தகவல் தெரிவித்தார்.
-
அங்கு பயணியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது இருதயத்தில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதாகவும், அவருக்கு அறுவைச்சிகிச்சை மூலம் இருதயத்தில் "பேஸ் மேக்கர்' சாதனத்தை உடனடியாகப் பொருத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
-
அதற்கு சுமார் ரூ. 47 ஆயிரம் செலவாகும் என்ற நிலையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அந்தப் பயணியிடம் அந்த அளவு பணமில்லை. சென்னைக்கு விரைந்து வந்த மகனும் குறைந்த அளவு பணமே வைத்திருந்தார்.
-
அப்போது ரவிசந்திரன் சற்றும் யோசிக்காமல், தனது பிழைப்புக்கு ஆதாரமாக இருக்கும் ஆட்டோவை அடமானம் வைத்து பணம் திரட்டி மருத்துவமனையில் கட்டிவிட்டார். அதையடுத்து, அந்தப் பயணிக்கு இருதய அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று, அவரும் உடல்நலத்துடன் ஊர் திரும்பிவிட்டார்.
இதையறிந்த அண்ணாநகர் குடியிருப்போர் நலச்சங்கம், ஆட்டோ ஓட்டுநர் ரவிசந்திரனை பாராட்டி கெளரவித்தது.
-
இந்தச் செய்தி, "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் வெளியாகி இருக்கிறது.
அதன்பிறகு அந்த ஆட்டோ ஓட்டுநருக்கு பல நல்லுள்ளங்கள் நிதியுதவி செய்ததால், தனது ஆட்டோவை அவர் மீட்டுவிட்டார் என்பது தனிக்கதை.
-
ஆனால், முன்பின் தெரியாத யாரோ ஒருவருக்காக தனது ஆட்டோவை அடமானம் வைக்கும் பெருந்தன்மையும் காருண்யமும் யாருக்கு வரும்?
-
நன்றி- தினமணி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக