புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளை (14th March )காரடையான் நோன்பு ! Poll_c10நாளை (14th March )காரடையான் நோன்பு ! Poll_m10நாளை (14th March )காரடையான் நோன்பு ! Poll_c10 
48 Posts - 51%
heezulia
நாளை (14th March )காரடையான் நோன்பு ! Poll_c10நாளை (14th March )காரடையான் நோன்பு ! Poll_m10நாளை (14th March )காரடையான் நோன்பு ! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
நாளை (14th March )காரடையான் நோன்பு ! Poll_c10நாளை (14th March )காரடையான் நோன்பு ! Poll_m10நாளை (14th March )காரடையான் நோன்பு ! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
நாளை (14th March )காரடையான் நோன்பு ! Poll_c10நாளை (14th March )காரடையான் நோன்பு ! Poll_m10நாளை (14th March )காரடையான் நோன்பு ! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
நாளை (14th March )காரடையான் நோன்பு ! Poll_c10நாளை (14th March )காரடையான் நோன்பு ! Poll_m10நாளை (14th March )காரடையான் நோன்பு ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளை (14th March )காரடையான் நோன்பு ! Poll_c10நாளை (14th March )காரடையான் நோன்பு ! Poll_m10நாளை (14th March )காரடையான் நோன்பு ! Poll_c10 
48 Posts - 51%
heezulia
நாளை (14th March )காரடையான் நோன்பு ! Poll_c10நாளை (14th March )காரடையான் நோன்பு ! Poll_m10நாளை (14th March )காரடையான் நோன்பு ! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
நாளை (14th March )காரடையான் நோன்பு ! Poll_c10நாளை (14th March )காரடையான் நோன்பு ! Poll_m10நாளை (14th March )காரடையான் நோன்பு ! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
நாளை (14th March )காரடையான் நோன்பு ! Poll_c10நாளை (14th March )காரடையான் நோன்பு ! Poll_m10நாளை (14th March )காரடையான் நோன்பு ! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
நாளை (14th March )காரடையான் நோன்பு ! Poll_c10நாளை (14th March )காரடையான் நோன்பு ! Poll_m10நாளை (14th March )காரடையான் நோன்பு ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை (14th March )காரடையான் நோன்பு !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 14, 2016 1:30 am

மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது நாளை (14th March )காரடையான் நோன்பு. மாசி மாத மும் பங்குனியும் கூடும் நேரத்தில் செய்வார்கள். இந்த நோன்பை 'சத்யவான் சாவித்திரி விரதம்' என்றும் சொல்வார்கள். சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக் காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும்.

கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன் இனிப்பு கலந்து தயாரிப்பதே காரடை ஆகும். மந்திர தேசத்து மன்னன் அஸ்வபதியின் மகள் சாவித்திரி, வீரத்தில் சிறந்தவள். இவள் ஒருநாள் வேட்டைக்குச் செல்லும்போது, தியானத்தில் இருந்த சாளுவதேசத்து இளவரசன் சத்தியவானைப் பார்த்தாள். அவனது தந்தை ஒரு போரில் நாட்டை இழந்து விட்டார்.

அதனால், காட்டில் மகனுடன் வசித்தார். பார்வையற்ற பெற்றோரை சத்தியவான், அன்புடன் கவனித்துக் கொண்டான். அவனையே திருமணம் செய்வதென்று முடிவு செய்தாள் சாவித்திரி. மந்திர தேசத்திற்கு வந்த நாரதர், சாவித்திரியின் தந்தையிடம் இன்னும் ஓராண்டு காலத்தில் சத்தியவான் இறந்து விடுவான் என்றும், அதனால் சாவித்திரியை அவனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என்றும் எச்சரித்தார்.

ஆனால், சாவித்திரி விடாப்பிடியாக சத்தியவானையே திருமணம் செய்து கொண்டாள். கணவனையும், பார்வையற்ற மாமனார், மாமியாரையும் அவள் அன்புடன் கவனித்துக் கொண்டாள். அரண்மனைவாசியான அவள் காட்டில் பல சிரமங்களை அனுபவித்தாலும், பொறுமையுடன் ஏற்றுக் கொண்டாள்.

சத்தியவானின் ஆயுள் முடியும் நாள் வந்தது. அன்று அவள் கணவனைப் பிரியவே இல்லை. அவர்கள் காட்டில் பழம் பறித்துக் கொண்டிருந்தனர். திடீரென சத்தியவான், மயங்கி விழுந்து இறந்தான். அவனது உயிரை எமதர்மராஜா, எடுத்துச் சென்றார்.

சாவித்திரி எமனைப் பின்தொடர்ந்தாள். தலை சிறந்த கற்புக்கரசி என்பதாலும், கணவன் இறப்பான் என்று தெரிந்தும், தைரியத்துடன் அவனை திருமணம் செய்து கொண்டதாலும், பார்வையற்ற முதியவர்களுக்கு தளராத சேவை செய்தவள் என்பதாலும் அவளுக்குக் காட்சி தந்த எமதர்மர், அவளை திரும்பிப் போகச் சொன்னார். அவரிடம், நான் என் கணவருடன் வாழ விரும்பு கிறேன்.

நான் பதிவிரதை என்பது உண்மையானால், அவரது உயிரைத் திருப்பித்தர வேண்டும், எனக் கேட்டாள். இறப்புக்குப் பிறகு யாருக்கும் வாழ்வு கிடையாது என மறுத்த எமதர்மர், அதற்குப் பதிலாக வேறு எந்த வரம் கேட்டாலும் தருவதாகக் கூறினார். சாவித்திரி சமயோசிதமாக,என் மாமனார், மாமியாருக்கு மீண்டும் பார்வை வேண்டும். ஆண் வாரிசு இல்லாத என் தந்தைக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும், என்றாள். சற்றும் யோசிக்காத எமதர்மன் அந்த வரங்களைக் கொடுத்து விட்டார்.

எனக்கு நூறு குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால், என் கணவன் உயிருடன் இருந்தாக வேண்டுமே! அவரது உயிரை திரும்பக் கொடுங்கள், என யாசித்தாள் சாவித்திரி. எமதர்மராஜா அவளது அறிவின் திறனை வியந்து, சத்தியவானை அங்கேயே விட்டுச் சென்றார். மாசியும், பங்குனியும் இணையும் சமயத்தில் காரடையான் நோன்பு நோற்பது வழக்கம்.

மாங்கல்ய பாக்கியத்திற்காக பெண்கள் அனுஷ்டிக்கும் விரதம் காரடையான் நோன்பாகும். மாசி மாதம் முடிந்து, பங்குனி மாதம் துவங்கும் வேளையில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும்.

விரதமுறை: விரதம் இருக்கும் நாளில் பெண்கள் அதிகாலையில் நீராடி, பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு கலசத்தின் மேல் தேங்காய், மாவிலை வைக்க வேண்டும். கலசத்திற்கு சந்தனம், குங்குமம், மஞ்சள் பூசி, அதன் மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகில் இஷ்ட அம்பாள் படம் வைத்து, அவளை காமாட்சியாக அல்லது சாவித்திரியாகக் கருதி வழிபட வேண்டும்.

அம்மனுக்கு கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயும் நிவேதனம் செய்வார்கள். நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து கழுத்தில் கட்டிக் கொள்வார்கள். மாசிக்கயிறு பாசி படியும் என்று, பங்குனி முதல் நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக் கொள்வது விசேஷமானதாகக் கருதப்படுகிறது.

தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 14, 2016 1:33 am

பெண்கள் கடைப்பிடிக்கும் விரதங்களிலேயே மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தது, தலையாயது என்று கூறப்படுவது காரடையான் நோன்புதான். இதை சத்யவான் சாவித்ரி விரதம் என்றும் கூறுவர்

"சாவித்ரி பாடம்'' என்ற கர்ண பரம்பரைப் பாட்டு ஒன்றில் இந்த நோன்பு தோன்றிய வரலாறும் அதன் மகிமையும் விவரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

பத்ர தேசத்தை ஆண்டு வந்த அச்வபதி என்ற மன்னன் மகா தர்மசீலன். அவன் மனைவி மாலதி தேவியோ மகா பதிவிரதை. ஆனால் குழந்தை பாக்கியம்தான் அவர்களுக்கு வாய்க்கவில்லை. மகாராணி மாலதி தேவி பெரும் விரதமிருந்து வஷிஷ்ட மகரிஷியிடம் வேத மாதாவான சாவித்ரி தேவியின் ஆராதனா மந்திர உபதேசத்தைப் பெறுகிறாள்.

பின்பு பக்தி சிரத்தையுடன் பல காலம் அந்த மந்திரத்தை உச்சாடனம் செய்ய, கணவன் அச்வபதியும் விடாமல் காயத்ரி ஜெபத்தையும் செய்ய அதன்படியே அவர்களுக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறக்கிறது.

"சாவித்ரி' என்றே பெயரிட்டு வளர்த்து வந்தார்கள். அவள் மணப்பருவத்தை அடைகிறாள். விதி வசமாய் ஒருமுறை சாவித்ரி, சத்யசேனன் என்ற சத்யவானைக் காண நேரிட்டது. அப்போது அவன் கண் பார்வையற்ற தன் பெற்றோருக்குப் பணிவிடை செய்து கொண்டிருக்கிறான். அவன் தன் பெற்றோர்பால் கொண்டிருந்த பக்தியும் சிரத்தையும் அவள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள அவனையே தன் கணவனாக மனதில் வரித்து விடுகிறாள்.

அவள் விரும்பிய சத்யவானையே மணக்க சாவித்ரியின் தந்தையும் சம்மதிக்கிறார். இந்த நிலையில் நாரதர் சாவித்ரியிடம் வந்து, ""அம்மா.. நீ நெடுங்காலம் சௌபாக்யவதியாய் சகல லக்ஷ்மிகரமும் பொருந்திய வாழ்வு வாழ வேண்டியவள். இந்த சத்யவானுக்கு ஆயுள் பலம் கிடையாது. இன்னும் ஓராண்டில் அவன் காலகதி அடைந்து விடுவான். எனவே, இவனைத் தவிர்த்துவிட்டு வேறு ஒரு நல்ல கணவனைத் தேர்ந்தெடுத்துக்கொள்'' என்று உபதேசிக்கிறார். எனினும் சாவித்ரியும் தன் தந்தையிடம் மன்றாடி சத்யவானையே மணக்கிறாள்.

நாரதர் சொன்னபடியே சத்தியவான் காட்டில் விறகு வெட்டி வரச் சென்று அங்கு தன் கோடரியால் காலை வெட்டிக் கொண்டு கீழே சாய்கிறான். யமதர்மராஜன் பாசக்கயிற்றை வீசி அவன் உயிரைக் கவர்ந்து கொண்டு செல்கிறான். அவனை விடாமல் பின் தொடர்கிறாள் சாவித்ரி. தன் கணவன் உயிரை எடுத்துச் செல்ல வேண்டாமென்று யமனிடம் மன்றாடி வேண்டுகிறாள். சாவித்ரியின் மன உறுதியையும், பதிவிரதா பக்தியின் மேன்மையையும் உணர்ந்த யமதர்மராஜன் அவளுக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்கிறான்.

""தர்மபிரபுவே... என் கற்புக்குப் பங்கம் வராமல் எனக்கு நிறைய குழந்தைகள் பிறக்க வரம் தாரும்'' என்கிறாள். யமனும் ""இவ்வளவுதானே தந்தேன்'' என்று அவள் கேட்ட வரத்தைக் கொடுத்துவிட்டான். அவள் கணவன் உயிரோடு இருந்தால்தானே அவள் கேட்டபடி குழந்தைகள் பிறக்கும்?

யமதர்மராஜனுக்கு இப்போது சத்தியவானின் உயிரைத் திரும்பத் தருவதைத் தவிர வேறு வழியில்லை. இதனால், சத்தியவானை உயிர்ப்பித்துவிட்டு மறைகிறான்.

சாவித்ரி செய்த அந்த நோன்பு மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. சிலர் இதை, ""ஸம்பத் கௌரீ'' பூஜை என்றும் சொல்கிறார்கள். எது எப்படியோ... இந்த மாசி, பங்குனி நோன்பு நம் தேசத்தில் எல்லாச் சுமங்கலிகளாலும் புராண காலம் தொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு நைவேத்தியம் காரரிசி மாவும், காராமணி அல்லது துவரையும் கலந்த அடை என்னும் பணியாரம். இதனால்தான் காரடையான் நோன்பு என்பார்கள். காட்டில் உயிர் பெற்று எழுந்த சத்தியவானுடன் சாவித்திரி அக்காட்டிலேயே நோன்பு அனுஷ்டித்து அங்குள்ள மரப்பட்டைகளின் சிறு இழைகளை நூலாக்கிச் சரடாக அணிந்து கொண்டாள். பழங்களையும் காட்டில் கிடைத்த துவரையையும் கொண்டு செய்த அடையையும் தேவிக்கு நிவேதனம் செய்வித்தாள்.

இப்போது நம் வீடுகளில் செய்யப்படும் இந்த நோன்பிற்கு, பூஜை செய்யும் இடத்தை நன்கு மெழுகிக் கோலமிட்டு சிறிய நுனிவாழை இலை போட்டு இலை நுனியில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், மஞ்சள் சரடு (மஞ்சள், பூஇதழும் நடுவில் கட்டி) இவைகளை வைத்து இலை நடுவில் வெல்ல அடையும் வெண்ணெயும் வைக்க வேண்டும். முதிர்ந்த சுமங்கலிகள் தங்கள் இலைகளில் அம்பிகைக்கு ஒரு சரடும் சேர்த்து வைத்துக் கொள்வார்கள்.

மூன்று இலை போடக்கூடாது. நான்கு இலையாகப் போட்டு சரடு கட்டிக்கொண்ட பின் மீதமுள்ள இலையில் வீட்டிலுள்ள ஆடவர்களைச் சாப்பிடச் சொல்லலாம். தீர்த்தத்தால் இலையைச் சுற்றி நைவேத்தியம் செய்த பிறகு அம்பாள் படத்தில் சரடை அணிவித்த பின் இளைய வயதுப் பெண்மணிகளுக்கு முதிய சுமங்கலிகள் சரடு கட்ட வேண்டும். பிறகு தானும் கட்டிக்கொண்டு அம்பிகையை நமஸ்கரிக்க வேண்டும். அப்போது

"உருகாத வெண்ணெயும் ஓரடையும் நான் நோற்றேன் . ஒருக்காலும் என் கணவர் என்னைப் பிரியாதிருக்க ணும்'

என்று வேண்டிக் கொள்வார்கள். அதுமட்டுமல்ல, மாசி முடிவதற்குள் சரடு கட்டிக்கொள்ள வேண்டும். "மாசி சரடு பாசி படியும்' என்பது சொலவடை. அதாவது பாசி படிய வேண்டும் என்றால் எத்துணை பழைமையாக வேண்டும்....? அத்துனைக் காலம் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பர் என்பது ஐதீகம்.

சில அடைகளை வைத்திருந்து மறுநாள் காலை அவற்றை பசு மாட்டிற்குக் கொடுக்க வேண்டியதும் அவசியம். அடைகளைப் படைக்க வாழை இலை கிடைக்காவிடில் பலா இலைகளைச் சேர்த்து முடைந்து அதில் படைப்பது மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது.

பூஜையை முடிக்கும் வரை பெண்கள் எதையும் உண்ணாமல் இருக்க வேண்டும். முடியாதவர்கள் சிறிதளவு பழம் ஏதேனும் சாப்பிடலாம். ஆனால் மோர், தயிர், பால் என்று எதையும் உட்கொள்ளக் கூடாது.

ஏனைய பிற நோன்புகளுக்கு கையில் சரடு கட்டிக்கொள்வது வழக்கமாயிருக்க இந்தக் காரடையான் நோன்பிற்கு மட்டும் சரட்டில் மஞ்சள் சேர்த்துக் கழுத்தில் கட்டிக்கொள்வார்கள்.

இந்த நோன்பால் பிரிந்த தம்பதியர் கூடுவர். கணவரின் ஆயுளும் ஆரோக்யமும் அதிகரிக்கும். கன்னிப் பெண்களுக்கு நல்ல குணமான கணவன் கிடைப்பான். இந்த நோன்பின் மிக முக்கியமான பலம் தீர்க்க சௌமாங்கல்யம். அதைவிடப் பெண்களுக்கு வேறு என்ன வேண்டும்...?

நளினி சிவராமன் + Me புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Mar 14, 2016 6:45 am

காரடையான் நோன்பு :
இந்த நோன்பு சுமங்கலிகளுக்கு தீர்க்க சௌமங்கல்யத்தை அளிப்பதற்காக

ஏற்பட்டது. தேவியை பிரார்த்தனை செய்து படத்தின் முன்னால் சிறிது இலை/

தட்டு வைத்து, அதில் அடை சிறிது வெண்ணை, வெற்றிலைப் பாக்கு மஞ்சள்

கயிறுகளையும் அதில் வைத்து விட வேண்டும். பிறகு கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச்

சொல்லி பிரார்த்தனை செய்து ஒரு கயிற்றை அம்பாளின் படத்திற்கு சாத்திவிட்டு

மற்றதைத் தான் அணிய வேண்டும். பிறகு அம்பாளுக்கு நைவேத்யம் செய்து,

கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை முடிக்க வேண்டும்.

மஞ்சள் கயிற்றை கட்டிக் கொள்ளும்பொழுது சொல்ல வேண்டிய ஸ்லோகம்.

தோரம் கிருஷ்ணாமி சுபகே ஸஹாரித்ரம்

தராமி அஹம்!பர்த்து:ஆயுஷ்ய

ஸித்யர்த்தம் ஸுப்ரீதாபவ ஸர்வதா

ஒரு ஸமயம் சத்யவான் என்னும் ராஜா கல்யாணமான சில

வருஷங்களுக்குள் இறந்துபோக நேரிடுகிறது. அப்பொழுது தன் கணவனுடைய

உயிர் இங்கேயே இருக்கும்படி செய்து, எமனுடைய ஆசீர்வாதத்தால் சென்ற

உயிரை மீட்டுவந்த நினைவே, காரடையான்நோன்பு. பொதுவாக உமா மகேஸ்வரர்,

லக்ஷ்மிநாராயணன், என்று அம்மை பெயருடன்தான், ரிஷிகள் ஸ்வாமி பெயர்கள்

வரும். இங்கே சத்யவான் சாவித்திரி என்று சத்யவான் முன்பாகவும் சாவித்திரி

இரண்டவதாகவும் சொல்லப்படுகிறது. கணவனே மாதா, பிதா, பதி தெய்வம் என

எல்லா வகையிலும் கணவனுக்கு முக்யத்துவம் கொடுத்து, அவன் வாழ்வே தன்

வாழ்வு என நினைத்து, கணவன் வாழ்வுக்காக, கணவனை எமன் எங்கெல்லாம்

இட்டுச் சென்றானோ அங்கெல்லாம் தன் தவவலிமையால் சென்று, எத்தனையோ

பல வகையான வரங்கள் தருகிறேன் என்று சொன்னாலும் ஒரு வரனிலும்

விருப்பமில்லாமல், கணவன் மீண்டும் வரவேண்டும் என ஒரே வரத்தோடு

கணவனை மீட்டு வந்த காரிகை சாவித்ரி. ஆகவேதான் சத்யவான் சாவித்ரி என்று

சொல்வார்கள். பொதுவாக இல்லறத்தில் கணவன் மனைவி இருவருமே பொதுக்

காரியங்களில் ஒத்துப்போகவேண்டியதாக இருந்தாலும் கணவனுடைய ஆபத்து

காலத்தில் அவன் பிரிந்து விட்டால் என்ன ஆகுமோ என்று பயந்து போய்

விடுவார்கள் பிற்காலத்தில் தனக்கு வேண்டிய பொருள்களை சேகரித்து வைத்துக்

கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். இது உலக நியதி. இதற்கு விதிவிலக்காக

பலரும் உண்டு. குந்தியின் கணவன் பாண்டு இறந்தவுடன் மாத்ரி என்ற மற்றொரு

மனைவி இறந்து விடுகிறாள். அப்போது குந்திதேவி கணவனோடு உயிர்த்தியாகம்

செய்யாமல், சாபத்தினால் உயிர் போவதை தடுக்க முடியாமல் போனதால் கணவன்

சொல்படி ஐந்து குழந்தைகளை காப்பதில் ஈடுபட்டாள். மாத்ரி போல் குந்தியும்

கணவனோடு உயிர்விட்டிருந்தாலும், அல்லது குந்தியின் வரபலத்தால் சூரியன்

வந்தது போல் யமனை வரவழைத்து பாண்டுவின் உயிரை காப்பாற்றியிருநதாலும்,

ரிஷிகளின் சாபப்படியும், மகபாராதத்தில் நடந்த தெய்வீக ஸங்கல்ப்பப் படியும்,

எமனால் கூட பாண்டுவின் மரணத்தை தவிர்க்க முடியாது. ஆகவேதான்

அத்தனை வலிமையுள்ளவளாக இருந்தும் அவதியின் பலத்தோடு மகாபாரத

நிகழ்ச்சிக்கு உறுதுணையாக பஞ்ச பாண்டவர்களை காப்பாற்றினாள்.

இதுபோலத்தான் காந்தாரியும் கணவன் பார்க்காததை தானும் பார்க்க மாட்டேன்

என்று தன் கண்களையே கட்டிக் கொண்டு வாழ்ந்தாள். இப்படி சிலர்

கணவனுக்காக வாழ்ந்தாலும் சாவித்ரி போல் விதியின் பலத்தையும் மாற்றி

கணவனோடு வாழ்நாள் முழுவதும் சுமங்கலியாக வாழும் பாக்யத்தை பெற்றவள்

சாவித்ரி.

ஆகவே காரடையான் நோன்பின் தத்துவம் கணவனோடு எப்பொழுதும்

சுமங்கிலியாக வாழவேண்டும் என்பதுதான்.

நன்றி காமகோடி.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Mar 14, 2016 8:26 am

நல்ல பகிர்வு அம்மா!
சசி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 14, 2016 9:21 am

நாளை (14th March )காரடையான் நோன்பு ! 103459460
-
நாளை (14th March )காரடையான் நோன்பு ! Tu7L2AIRl28MWsvappfo+karadayan-noimbu

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 16, 2016 12:15 am

நன்றி கார்த்தி,
நன்றி சசி,
நன்றி ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக