ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 3:07 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:58 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:00 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ்ன் நினைவு நாள்!

Go down

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ்ன் நினைவு நாள்! Empty திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ்ன் நினைவு நாள்!

Post by krishnaamma Sun Mar 06, 2016 11:37 am

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ்: இன்று அவரது நினைவு நாள்!


திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ்ன் நினைவு நாள்! UCIiidGPQoW1rMDcnOin+kural_2764357f

எல்லிஸ் துரை உருவாக்கிய திருவள்ளுவர் உருவ தங்கக் காசு.

திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸின் நினைவு நாள் இன்று. ராமநாதபுரத்தில் உள்ள அவரது கல்லறை, கல்வெட்டுகளை பாரம்பரிய சின்னமாகப் பராமரிக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவில் ஆட்சி செய்த ஐரோப்பியர்கள் தமிழைக் கற்றால் தான் சமயப்பணி செய்ய முடியும் என்பதை உணர்ந்து தமிழ் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார்கள். இதற்காக தென்னிந்திய மொழிகளையும், பிற இந்திய மொழிகளையும் ஆங்கிலேய அதிகாரிகளுக்குப் பயிற்றுவிப்பதற்காக சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தி மெட்ராஸ் காலேஜ் 1812-ல் நிறுவப்பட்டது. இக்கல்லூரியை நிறுவியவர் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ்.

அவர் தமிழை நன்கு கற்று தமிழில் செய்யுள் எழுதும் அளவுக்கு மொழி ஆற்றலை வளர்த்துக் கொண்டதுடன், தமிழ் மீது கொண்ட காதலால் தன் பெயரை எல்லீசன் என தமிழ்ப்படுத்திக் கொண்டார். ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி யில் கி.பி.1796-ல் எழுத்தராகச் சேர்ந்த எல்லிஸ், படிப்படியாக உயர்ந்து 1810-ல் சென்னை ஆட்சி யர் ஆனார். சென்னையில் உள்ள எல்லிஸ் சாலை அவர் பெயரால் அமைந்துள்ளது. மதுரையில் எல்லிஸ் நகர் அவர் பெயரால் உருவாக்கப்பட்டதுதான்.

இதுகுறித்து தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மைய நிறுவனர் வே.ராஜகுரு ‘தி இந்து’விடம் கூறியதாவது:

இந்திய மொழிகளை ஆங்கிலே யருக்கு பயிற்றுவிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் நிறுவப்பட்ட 'சென்னை கல்விச் சங்கம்' எல்லி ஸின் மொழி ஆய்வுகளுக்குக் கள மாக விளங்கியுள்ளது. இக்கல்லூரி யில் தமிழ் துறைத் தலைவராகப் பணியாற்றிய முத்துசாமிப்பிள்ளை என்பவரைக் கொண்டு வீரமாமுனி வர் எழுதிய நூல்களை தேடிப் பாதுகாக்கச் செய்தார்.

தொடரும்................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ்ன் நினைவு நாள்! Empty Re: திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ்ன் நினைவு நாள்!

Post by krishnaamma Sun Mar 06, 2016 11:37 am

திருவள்ளுவர் உருவ தங்கக் காசு

எல்லிஸ் தமிழையும், வடமொழி யையும் நன்கு கற்று மனுதர்ம சாஸ்திரத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததுடன் திருக்குறளில் அறத்துப்பாலின் முதல் 13 அதி காரங்களை ஆங்கிலத்தில் 1812-ல் மொழிபெயர்த்து உரை எழுதி அச்சிட்டிருக்கிறார். இதுவே ஆங்கி லத்தில் திருக்குறளின் முதல் மொழிபெயர்ப்பாகும்.

1818-ல் சென்னையில் பெரும் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டபோது அங்கு 27 கிணறுகள் வெட்டி வைத் தார். அவற்றில் ஒன்று சென்னை ராயப்பேட்டையில் பெரிய பாளையத்தம்மன் கோயிலில் உள்ளது.

அக்கிணற்றில் எல்லிஸின் திருப்பணி பற்றிய செய்தி தமிழில் பாடல் வடிவக் கல்வெட்டாக உள்ளது. சென்னை ஆட்சியராக இருந்தபோது நாணய சாலையின் தலைவராகவும் இருந்ததால் திரு வள்ளுவர் உருவம் பொறித்த தங்கக் காசுகளை வெளியிட ஏற்பாடு செய்தார். ஆனால் அது புழக்கத்துக்கு வரவில்லை.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு, மால்டோ ஆகிய ஏழு மொழிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும் அம்மொழிக் குடும்பத்துக்கு தென்னிந்திய மொழிக் குடும்பம் எனவும் பெயரிட்டார். வடமொழிச் சேர்க்கையால் தமிழ் மொழி தோன்றவில்லை என முதன்முதலில் கூறியவரும் அவரே.

எல்லிஸுக்குப் பிறகே அயர்லாந்து சமயத் துறவி ராபர்ட் கால்டுவெல், தன் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) என்ற நூலில் தென்னிந்திய மொழிக் குடும்பத்துக்கு திராவிட மொழிக் குடும்பம் எனப் பெயரிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடரும்...................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ்ன் நினைவு நாள்! Empty Re: திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ்ன் நினைவு நாள்!

Post by krishnaamma Sun Mar 06, 2016 11:39 am

ராமநாதபுரத்தில் இறுதிக் காலம்!

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ்ன் நினைவு நாள்! GWJg0TNRmSxbgbIynJdD+kural_2_2764358a

பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் கடந்த 1818-ம் ஆண்டில் உடல்நலக் குறைவால் மூன்று மாதம் பணியில் இருந்து விடுப்பு கோரியிருந்தார். விடுப்பில் இருந்தபோது, தமிழாய் வுப் பணிகளுக்காக மதுரை, ராம நாதபுரம் ஆகிய இடங்களுக்குச் சென்றார்.

ராமநாதபுரத்தில் இருந்த போது தாயுமானவர் சமாதி போன்ற இடங்களைப் பார்வையிட்டுள்ளார். 1819-ம் ஆண்டு மார்ச் மாதம் 6-ம் தேதி ராமநாதபுரம் ராமலிங்க விலாசம் அரண்மனைப் பகுதியில் தங்கி இருந்தபோது திடீரென காலமானார்.

ராமநாதபுரம் வடக்குத் தெரு வில் உள்ள கிறிஸ்துநாதர் தேவாலய வளாகத்தில் அவரது கல்லறை உள்ளது. அதில் தமிழில் கவிதை வடிவிலும், ஆங்கிலத்திலும் கல்வெட்டுகள் உள்ளன. இதில் அவர் திருக்குறளை ஆங்கிலத் தில் மொழிபெயர்த்த செய்தி குறிப் பிடப்பட்டுள்ளது. வெள்ளை பளிங் குக் கற்களில் வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டுகள், தற்போது ராம நாதபுரம் ராமலிங்க விலாசம் அரண் மனையில் வைக்கப்பட்டு உள்ளன.

திருக்குறளை ஆங்கிலத்தில் முதன்முறையாக மொழி பெயர்த்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸின் கல் லறை உள்ளிட்ட கல்வெட்டுகளை பாரம்பரிய சின்னமாகப் பராமரிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராமநாதபுரம் ராமலிங்கவிலாசம் அரண்மனையில் உள்ள எல்லிஸ் துரை குறித்த கல்வெட்டு.

நன்றி: தி ஹிந்து


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ்ன் நினைவு நாள்! Empty Re: திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ்ன் நினைவு நாள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum