புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வள்ளுவர் காட்டும் அம்மா !
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
"அம்மா " என்ற சொல் திருக்குறளில் இல்லையென்றாலும் " தாய் " , " அன்னை " , " ஈன்றாள் " ஆகிய சொற்களைப் பயன்படுத்துகிறார் . வள்ளுவர் மனைவி வாசுகியா என்பதில் கருத்து மாறுபாடு இருந்தாலும் ,வள்ளுவர் திருமணம் செய்து குழந்தைகள் பெற்றவர் என்பதும் , தாயின் மீது பெருமதிப்புக் கொண்டவர் என்பதும் தெரிய வருகிறது .
பெண்பிள்ளை வளர்ந்து பருவத்திற்கு வந்துவிட்டால் , தாயானவள் அவளைக் கண்கொத்திப் பாம்பாக இருந்து கவனிக்கவேண்டும் . வயிறாரச் சாப்பிடுகிறாளா , சரியாகத் தூங்குகிறாளா , நேரத்திற்கு வீடு வந்து சேருகிறாளா , செல்போனில் தனியாக நீண்டநேரம் பேசுகிறாளா என்பதையெல்லாம் கண்காணிக்க வேண்டும். செல்போனில் தனியாக நீண்டநேரம் பேசினால் , ஒரு பெரிய தவறைச் செய்ய ஆயத்தமாகிறாள் என்று பொருள். மகள் தவறு செய்யும்போது , முதலில் கண்டுபிடிப்பவள் தாய்தான் . கண்டிப்பதும் தாய்தான் . ஆகவேதான் வள்ளுவர் , "தந்தை சொல் " என்று சொல்லாமல் " அன்னை சொல் " என்று சொன்னார் .
இதிலே வேடிக்கை என்ன தெரியுமா ? அன்னையானவள் திட்டத் திட்ட , மகளின் காதல் பயிரானது செழித்து வளருமாம் ! பெண்ணின் காதல் ஊருக்குத் தெரிந்துவிட்டது . ஊரார் இவளின் காதலுக்குக் கண் , காது , மூக்கு வைத்துப் பேசி மகிழ்கின்றனர் ! " பாரடி ! இவள் கெட்ட கேட்டுக்கு பண்ணையார் வீட்டுப் பையனுக்கு வலை வீசி இருக்கிறாள் ! " என்றெல்லாம் புறம் பேசுகின்றனர் . ஆனால் இதற்கெல்லாம் அந்தப் பெண் அசரவில்லை ! மீண்டும் தீவிரமாகக் காதலிக்கிறாள் !
ஊரார் பேசும் பேச்சுக்கள் எல்லாம் , அவள் காதல் பயிருக்கு உரமாக அமைகிறது ; அன்னையின் வசவுகள் எல்லாம் அப்பயிருக்கு நீராக அமைந்து , காதல் பயிர் ஜோராக வளர்கிறது . இப்போது குறளைப் பார்ப்போமா !
ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய் . ( அலர் அறிவுறுத்தல் - 1147 )
மகள் காதல் வயப்பட்டுவிட்டாள் என்று தெரிந்தவுடனே தாயானவள் என்ன செய்யவேண்டும் .சட்டுபுட்டென்று திருமணத்தை முடித்துவிடவேண்டும் . தாமதிக்கும் ஒவ்வொருநாளும் அவளின் காதல் பயிரானது தீவிரமாக வளரும் . " பருவத்தே பயிர் செய் " என்ற பழமொழி செடிகளுக்கு மட்டுமல்ல ; மனிதர்களுக்கும் தான் ! ஆண்கள் விஷயத்தில் சற்று தாமதிக்கலாம் ; ஆனால் பெண்கள் விஷயத்தில் அப்படி இருக்கக்கூடாது . முற்றிய வெண்டைக்காயை யாரும் வாங்கமாட்டார்கள் . பெண்கள் முற்றிப்போனால் அழகு குன்றிப்போகும் ; திருமணச் சந்தையில் விலைபோக மாட்டார்கள் . இதைத்தான் வள்ளுவர் ," மிகநலம் பெற்றாள் தமியள் மூத்தற்று " என்பார்.
மகளை மட்டுமல்ல; மகனை வளர்க்கும் பொறுப்பும் தாய்க்கு உண்டு.
ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே !
சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே !
என்ற புறநானூற்று வரிகள் இக்காலத்திற்குப் பொருந்தாது. மகனை வளர்த்து சான்றோனாக்கும் பொறுப்பு தாய்க்கும் உண்டு . பெற்றெடுத்த தந்தை வேலையின் பொருட்டு ஊர் ஊராக அலைந்து கொண்டிருக்கிறான்; வேளா வேளைக்கு வீட்டிற்கு வருவதில்லை . இந்த நிலையில் தாயின் பொறுப்பு மிகவும் அதிகமாகிறது.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய் . ( மக்கட்பேறு- 69 )
இந்த குறளுக்கு வள்ளுவரின் நெஞ்சத்தை அறியாமல் , பரிமேழலகர் உரை எழுதிய காரணத்தால் வசமாக மாட்டிக்கொண்டார் . புலவர்களும் , பண்டிதர்களும் அவரைக் காய்ச்சி எடுத்துவிட்டனர் .
அப்படி அவர் என்ன சொல்லிவிட்டார் ?
பெற்றெடுத்த தாய்க்கு மகனைப் பற்றி அறிந்துகொள்ளும் சுயபுத்தி இல்லை என்று சொல்லிவிட்டார் . காரணம் அவள் ஒரு பெண் என்று சொல்லி பெண் இனத்தை இழிவு செய்துவிட்டார் என்பது அவர்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு . உரையை அவர் வாயாலேயே கேட்போமா !
“ பெண்ணியல்பால் தானாக அறியாமல் கேட்ட தாய் " என சிறப்பு உரையில் கூறியுள்ளார்.
அதாவது பெண்ணிற்கு கல்வி, கேள்விகளால் வரும் அறிவில்லை எனவும் அதனால் தாய் தன் மகன் சான்றோனாய்த் திகழும் சிறப்பைத் தானே அறிய மாட்டாள் எனவும் ஊர்ப்பெரியோர் வாயிலாகக் கேட்டே அறிவாள் எனவும் , அவ்வுரை கேட்டமையால் பெரிதும் மகிழ்வாள் எனப் பரிமேலழகர் உரைக்கிறார். இது முற்றிலும் வள்ளுவத்திற்கு எதிரான கருத்து ஆகும்.
மகனைச் சான்றோன் ஆக்கியபின் , அவனுக்குத் திருமணம் செய்வது பெற்றோர் கடமை . அத்துடன் பெற்றவர்கள் கடமை முடிந்துவிடுகிறது . அடுத்து மகனின் கடமை தொடங்கிவிடுகிறது .
தன்னை ஈன்றெடுத்த தாயைக் காப்பது , தனயனின் தலையாய கடன் . பாலூட்டி , சீராட்டி வளர்த்த தாயை , அவளுடைய கடைசி காலத்தில் சோறூட்டி காப்பாற்ற வேண்டியது , மகனின் கடமையாகும் . மூன்று வேளையும் வயிற்றுக்குச் சோறிடவேண்டும் . எப்பாடு பட்டாவது அவள் பசியைப் போக்கவேண்டும் .
கையில் காசில்லையே ! என்ன செய்வது ?
காசில்லைஎன்றால் திருடியாவது அவள் பசியைப் போக்கவேண்டும் .
திருடுவது தப்பில்லையா ?
இல்லை என்கின்றன அறநூல்கள் .
இறந்த மூப்பினராய இருமுதுகுரவரும் கற்புடை மனைவியும் குழவியும் பசியான் வருந்தும் எல்லைக்கண் தீயன பலவுஞ் செய்தாயினும் புறந்தருக' என்னும் அறநூற்பொது விதி .
ஆனால் வள்ளுவரோ இந்த அறநூற் பொதுவிதியை ஏற்க மறுக்கின்றார் . பசியால் பெற்ற தாய் வருந்துவதாக இருந்தாலும் , சான்றோர் பழிக்கும் செயல்களைச் செய்யாதே ! அவளுக்கு உன் உழைப்பால் வந்த பணத்தில் சோறிடு ! அதுவே அவளுக்கு மகிழ்வைத் தரும் .
ஈன்றாள் பசிகாண்பா னாயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை. ( வினைத்தூய்மை-656 )
கட்டிய மனைவி , பெற்ற பிள்ளைகள் பசியால் வருந்துவதாக இருந்தாலும் , சான்றோர் பழிக்கும் செயல்களைச் செய்யாதே என்று வள்ளுவர் கூறவில்லை; மாறாக
பெற்ற தாய் பசியால் வருந்துவதாக இருந்தாலும் சான்றோர் பழிக்கும் செயல்களைச் செய்யாதே என்று கூறுவதன் மூலமாகத் தாயின் மீது வள்ளுவர் கொண்ட மதிப்பை நாம் அறிகிறோம் .
தாய் , மகனுக்கு ஒரு கஷ்டம் என்றால் நெஞ்சு பொறுக்கமாட்டாள் . மகனுக்கு தொழிலில் நஷ்டம்; கொடுத்த கடன் வரவில்லை; வாங்கிய கடனுக்குக் கடன்காரர்கள் நெருக்குகிறார்கள் . மகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை . கட்டிய மனைவி சீர் கொண்டுவந்த நகைகளைத் தரமுடியாது என்று சொல்லிவிட்டாள் .
ஆனால் தாயால் அப்படி இருக்கமுடியுமா ? "தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் " என்பதுபோல நெஞ்சம் பதறுகிறாள். மகனைப் பார்த்து,
' அப்பா ! கவலைப்படாதே ! இந்தா ! இந்த நகைகளை எடுத்துக்கொள் ! எனக்குப் பின்னால் இவையெல்லாம் உனக்குத்தானே ! அது இப்போது ஒரு கஷ்டத்துக்கு உதவட்டுமே ! " என்று சொல்வதுதான் தாயுள்ளம் .
அதே மகனுக்கு வறுமை வேறு விதத்தில் வந்தால் ?
மகன் குடித்துவிட்டு கும்மாளம் போடுகிறான் ; வேசியர் வீட்டுக்குச் சென்று வருகிறான் ; பெரும்பொருள் தொலைத்துவிட்டான் ; தீராத வறுமை வந்துவிட்டது .
இந்தநிலையில் அதே தாய் என்ன செய்வாள் ? தன்னிடம் உள்ள நகைகளைக் கொடுப்பாளா ? நிச்சயம் கொடுக்கமாட்டாள் ; மகனின் கண்ணில் படாதவாறு மறைத்துவைப்பாள்.
ஏனென்றால் இந்த வறுமை தானாக வந்ததல்ல ; அவனாகத் தேடிக்கொண்டது ! அறத்திற்கு முரணானது . எனவே அவனை மகனாகப் பார்க்கமாட்டாள் ; ஒரு அந்நியனாகவே பார்ப்பாள் .
அறஞ்சார நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும் . ( நல்குரவு -1047 )
இவைதான் வள்ளுவர் காட்டும் அம்மா !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1