புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயணம்! Poll_c10பயணம்! Poll_m10பயணம்! Poll_c10 
100 Posts - 48%
heezulia
பயணம்! Poll_c10பயணம்! Poll_m10பயணம்! Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
பயணம்! Poll_c10பயணம்! Poll_m10பயணம்! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
பயணம்! Poll_c10பயணம்! Poll_m10பயணம்! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
பயணம்! Poll_c10பயணம்! Poll_m10பயணம்! Poll_c10 
7 Posts - 3%
prajai
பயணம்! Poll_c10பயணம்! Poll_m10பயணம்! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பயணம்! Poll_c10பயணம்! Poll_m10பயணம்! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பயணம்! Poll_c10பயணம்! Poll_m10பயணம்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
பயணம்! Poll_c10பயணம்! Poll_m10பயணம்! Poll_c10 
2 Posts - 1%
cordiac
பயணம்! Poll_c10பயணம்! Poll_m10பயணம்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயணம்! Poll_c10பயணம்! Poll_m10பயணம்! Poll_c10 
227 Posts - 51%
heezulia
பயணம்! Poll_c10பயணம்! Poll_m10பயணம்! Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
பயணம்! Poll_c10பயணம்! Poll_m10பயணம்! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
பயணம்! Poll_c10பயணம்! Poll_m10பயணம்! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
பயணம்! Poll_c10பயணம்! Poll_m10பயணம்! Poll_c10 
18 Posts - 4%
prajai
பயணம்! Poll_c10பயணம்! Poll_m10பயணம்! Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
பயணம்! Poll_c10பயணம்! Poll_m10பயணம்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பயணம்! Poll_c10பயணம்! Poll_m10பயணம்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பயணம்! Poll_c10பயணம்! Poll_m10பயணம்! Poll_c10 
2 Posts - 0%
Barushree
பயணம்! Poll_c10பயணம்! Poll_m10பயணம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயணம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 07, 2016 12:58 pm

அப்பா ஏன் தனக்கு சபர்மதி என பெயர் வைத்தார் என்று, எப்போதும் போல் நினைத்துக் கொண்டாள், சபர்மதி. நேர்மையும், சத்தியமும், அகிம்சையும், அறப்போராட்டமும், உறுதியும் கொண்டவளாக, தன் மகள் உருவாக வேண்டும் என்பது தான், அப்பாவின் கனவு. அவளும் இன்று வரை அப்படித்தான் இருக்கிறாள்.

ஆனால், அந்த பண்பு நலன்கள், உத்தரவாதமான இயல்பு வாழ்க்கையை, ஏன் இதுவரை தனக்கு அளிக்கவில்லை என்பது தான், அவளின் கேள்வியாக இருக்கிறது.

ரகுவின் புகைப்படத்திலிருந்து காய்ந்த மல்லிகை ஒன்று உதிர்ந்து, அவள் மடியில் விழுந்தது.
'ரகு... ஏன், 35 வயதிலேயே அப்படியொரு அவசர மரணத்தை எதிர்கொண்டீர்கள்? இந்த சிறிய காலத்திற்குள் நீங்க வாழ்ந்த வாழ்க்கை, எத்தனை செறிவானது!

மனித உரிமை, கருத்து சுதந்திரம், காட்டைக் காப்பது, நிலத்தடி நீர் என உங்க வாழ்நாள் முழுவதும் எத்தனை போராட்டம் அர்த்தம் நிறைந்ததாக, நெகிழ்ச்சியூட்டக்கூடியதாக இருந்தன. நம் மயூரிக்குட்டிக்கு காய்ச்சல் வந்து திடீரென மயங்கி விழுந்தபோது கூட, நான் தான் அள்ளிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினேன்.

'அவளுக்கு சரியான பின் தான், கரையோர ஆமைக்குட்டிகளைக் காப்பாற்றி, கரை சேர்க்கிற பணிக்கு தலைமை தாங்கியிருந்த உங்களுக்கு தகவல் சொன்னேன். ஏனென்றால், உங்களுடைய சமுதாயப் பண்பால் கவரப்பட்டு, நேசித்து, உங்க கரம் பற்றியவள் நான்...' என்று நினைத்தபடியே பருப்பு ரசமும், காரட் பொரியலும் செய்து முடித்தாள் சபர்மதி.

பின், மொபைல்போனை எடுத்து, சிறிது தயக்கத்துடனே தன் அண்ணனின் எண்களை தட்டினாள்.
நீண்ட காத்திருத்தலுக்குப் பின்தான் லைனில் வந்தான். பெரியப்பா மகன் என்ற உணர்வைக் காட்டாமல், எப்போதும் போல் வறண்ட குரலில், ''சொல்லு,'' என்றான்.

''நல்லா இருக்கியா அண்ணா... ஒண்ணுமில்ல அந்த பப்ளிகேஷன் வேலை... ஜி.எம்., சாரைப் பாத்தியா... ஏதாவது நல்ல செய்தி உண்டா?'' என்றாள் தயக்கத்துடன்!

''இருந்தா நானே சொல்ல மாட்டேனா... பெரிய ஆளுங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும். நேரம் பாத்து தானே கேட்க முடியும்... அதுலயும் சின்னப் பொண்ணுன்னா முதல் பிரிபரென்ஸ் இருக்கும். விதவைப் பொண்ணு, பெண் குழந்தை வெச்சிருக்கிறவ, வேலை இழந்தவள்ன்னா கேக்கவே கஷ்டமா இருக்கு,'' என்று படபடத்தான்.

''சாரிண்ணா... உங்கள தர்ம சங்கடப்படுத்தறதுல எனக்கு இஷ்டமில்ல தான்; ஆனா, நிலைமை ரொம்ப மோசமா இருக்கு,'' என்றாள்.

''ஒரு கேள்வி கேக்கலாமா?'' என்றான்.
''கேளுங்கண்ணா...''

''அந்த ரகுவோட காதலும், கல்யாணமும் உனக்கு தேவைதானா... என்ன மாதிரி பொண்ணு நீ... எம்.எஸ்சி., மாத்ஸ்ல சென்டம் வாங்கினவ. ஓவியம் மாதிரி அழகு; சமையல், தோட்டம், கம்ப்யூட்டர்ன்னு அத்தனை திறமை. போயும் போயும் ஒரு வீம்பு பிடிச்சவனக் கல்யாணம் செய்து, பொம்பள பிள்ளையையும் பெத்து, இப்ப அவனையும் லாரிக்கு வாரிக் கொடுத்துட்டு, நடுத்தெருவுல நிக்கற... தேவையா இதெல்லாம்?'' என்றான்.

''அப்புறம் பேசறேண்ணா... மயூரிக்கு ஸ்கூலுக்கு நேரமாச்சு,'' என்று தொடர்பை துண்டித்த போது, உள்ளே கனலும், கண்ணீருமாக தள்ளாடியது.

இது மாதிரி எவ்வளவோ கேட்டு விட்டாள். அதில் இதுவும் ஒன்று!

'அவனிடம் வேலை வேண்டும் என்று பிச்சை கேட்பதால் தானே இப்படியெல்லாம் விமர்சிக்கிறான்... காலம் ஏன் வெறிநாய் போல அவள் மேல் பாய்ந்து குதறுகிறது... ஒரு நேர்மையான, எளிய வேலைக்கு, தன் முழுமையான உழைப்பைக் கொட்ட, அவள் தயாராகத் தானே இருக்கிறாள்....

இருந்த வேலையைப் பிடுங்கிக் கொண்ட காலம், அவளின் ஆதாரத் தேவைக்கு மற்றொன்றை ஏன் வழங்க மறுக்கிறது...' அவளின் சிந்தனைகளை கலைப்பது போல், மகள் மயூரி ஓடி வந்து, ''அம்மா... ரிக் ஷா வந்தாச்சு கிளம்புறேன்; பீஸ் கட்டுறதுக்கு இன்னும் பத்து நாட்கள் இருக்கு மறந்துடாத,'' என்று கூறி, முத்தமிட்டு ஓடினாள்.
தான் பணியாற்றிய பழைய அலுவலகத்தை பார்த்து வரலாம் என்று கிளம்பினாள் சபர்மதி.

வெயில் கொளுத்தியது. இரண்டு மாடுகள் வேப்பமர நிழல் தேடி ஒதுங்கின. பேருந்து நிறுத்தத்தில் இருந்த நிழற்குடை நோக்கி நடந்தபோது, ''சபர்மதி...'' என்று அழைத்தபடி வேகமாக ஓடி வந்தாள் பிரபா.
இளைத்து, ஒடுங்கி, கறுத்துப் போயிருந்த பிரபாவைப் பார்த்து, திகைப்புடன், ''என்ன பிரபா... என்னாச்சு உடம்புக்கு? பாதியா போயிட்டேயே...'' என்றாள் கவலையுடன், அவள் கைகளை பற்றியபடி!

தொடரும்..............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 07, 2016 12:59 pm

உடம்புக்கு என்ன, அது கல்லு மாதிரி தான் இருக்கு; மனசு தான் வெந்து ரணமாகிக் கெடக்கு,'' என்றாள்.
''தெரியும் பிரபா... உன் கணவர் எப்படி இருக்கார்... கேஸ் எந்த நிலையில இருக்கு...'' என்று விசாரித்தாள்.
''பெயிலுக்கு கூட பயப்படுதே கோர்ட்டு... பத்து வருஷத்துக்கு முன் தன் நண்பனோட எடுத்துக்கிட்ட போட்டோ, இப்ப அவர் வாழ்க்கையையும் பறிச்சு, எங்களையும் நடுத்தெருவுல நிறுத்திடுச்சு,'' என்று அழுதாள் பிரபா.

கல்லூரிக் காலத்தில் நல்ல நண்பனாக இருந்தவன், பின்னாளில் ஆயுதம் ஏந்தும் போராளியாவான் என்றோ, காவல் நிலையத்தை தீயிட்டுக் கொளுத்துவான் என்றோ யாரால் எதிர்பார்த்திருக்க முடியும்? பரிதாபமாக மாட்டி, சிறையில் அடைக்கப்பட்டான் பிரபாவின் கணவன். தான் நிரபராதி என, மூன்று ஆண்டுகளாக போராடுகிறான்; இன்னும் நிரூபிக்க முடியவில்லை.

''கவலைப்படாத பிரபா... உன் கணவர் நல்லபடியா வீட்டுக்கு வந்துடுவார். முதல்ல உன் உடம்ப கவனிச்சுக்கோ... உன் மகன் எப்படி இருக்கான்?''

''எதுவும் சொல்லிக்கிற மாதிரி இல்ல... மாமியாருக்கு சுத்தமா கண்ணு தெரியல; மாமனாருக்கு சர்க்கரை நோயால, ஒரு காலை எடுத்தாச்சு. காலையில, 8:00 மணிக்கு வேலைக்கு போனா, நைட், 8:00 மணி வரை ஆபீஸ் வேலை ரத்தத்தை உறிஞ்சுது. இதுல பாபுவுக்கு வராத கணக்கு, சயின்ஸ்ன்னு கோச்சிங் கொடுக்க நேரம் ஏது... 'சாலையைக் கடக்கும் நத்தைகள்'ன்னு ஒரு கவிதையை பத்தி அன்னிக்கு பேசினோமே நினைவிருக்கா... எப்ப வேணா எந்த வாகனம் வேணா நத்தை மேல ஏறி நசுக்கலாம். அது தான் என் வாழ்க்கையும்,'' என்றாள் விரக்தியுடன்!

''ஏன் இப்படி விரக்தியா பேசறே? நம்பிக்கையை மட்டும் இழக்கவே கூடாது. தைரியமா இரு; நிச்சயம் நிலைமை மாறும்,'' என்று ஆறுதல் கூறியவள், ''பிரபா... உனக்கு எப்படியாவது உதவணும்ன்னு மனசு அடிச்சுக்குது. ஆனா, என்ன செய்றதுன்னு தான் தெரியல,'' என்றாள் உணர்ச்சியுடன்!

''நீ மட்டும் என்ன ராஜ வாழ்க்கையையா வாழறே... ரகுவும் போயி, உன் வேலையும் போயி, எவ்வளவு கஷ்டத்துல நீ இருக்கன்னு எனக்கு தெரியாதா... விடு... 'எழுதிச் செல்லும் விதியின் கைகள்'ன்னு கலீல் ஜிப்ரான் சொன்ன கவிதை போன்று தான் என் விதி,'' என்று வறண்ட வார்த்தைகளில் பேசும் தோழியைப் பார்த்து, கலங்கி நின்றாள் சபர்மதி.

'உண்மையைக் காண்பது கஷ்டமல்ல, அதைக் கண்டதும், கை விட்டு ஓடாதிருப்பது தான் கஷ்டம்...' என்று தமிழாசிரியை அடிக்கடி சொல்வார். ஒன்றை விட மற்றொன்று கனமாய், மேலே விழுந்து நசுக்குகிற எத்தனை கசப்பு நிஜங்கள்?

'பாவம் பிரபா... இத்தனை பிரச்னைகளுக்கு இடையே எப்படி வெளியே வரப் போகிறாள்...இந்த சமூகத்தின் இரக்கமற்ற நீதிகளை தனியாக எதிர்த்து நிற்க அவளால் முடியுமா... தாமரைகள் பூத்த தடாகமாய் இருந்த வாழ்க்கை, இப்போது முதலைகள் வெறி கொண்டு அலையும் கொலைகார ஏரியாகி விட்டது. எப்படி அவளுக்கு உதவுவது...' என்று நினைத்தவளுக்கு, 'பள்ளத்தில் கிடக்கும் நீ எப்படி அடுத்தவரை கை தூக்கி விட முடியும்...' என்று மனது நையாண்டி செய்தது.

தன்னைப் போல நூறு மடங்கு துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்து அல்லாடும் பிரபாவை நினைத்து வேதனைப்பட்டாள் சபர்மதி.

இரவின் அமைதியில், வால்குருவி ஒன்று ராகம் இசைத்து விட்டுப் பறந்தது.

''அம்மா... இன்னொரு தோசை ப்ளீஸ்,'' என்று கொஞ்சும் குரலில் கேட்ட மயூரி, ''மாவு இருக்காமா...'' என்றாள்.
''இருக்கே... எவ்வளவு வேணும்ன்னாலும் சாப்பிடேன்.''
''இன்னும் ஒண்ணே ஒண்ணுமா... நல்ல திக்கா...'' என்றாள்.

தொடரும்...............




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 07, 2016 1:00 pm

மயூரிக்கு மெல்லிய கரகர தோசை தான் பிடிக்கும். இன்று என்ன அடர்த்தியான தோசை கேட்கிறாள் என ஆச்சரியப்பட்டு, தோசை மாவை அடர்த்தியாக விட்டு குண்டு தோசை வார்த்து அவள் தட்டில் போட்டாள்.
''போதுமா இல்ல இன்னொன்னு போடட்டுமா?'' புன்முறுவலுடன் கேட்டாள்.

''மாவு இருக்காமா... அப்படின்னா மெல்லிசா கரகரன்னு ஒண்ணு,'' என்று மயூரி சிரிக்க, சபர்மதி தோசை வார்த்து திரும்பி வரும் போது, அங்கே மயூரி இல்லை.

''மய்யூ... எங்க போயிட்ட?'' என்றாள் உரத்த குரலில்!
''இதோ வாசல்ல இருக்கேம்மா... நீயும் வாயேன்...'
''அங்க என்ன செய்யுற...'' என்றபடி விரைந்தாள்.

வாசலில் கண்ட காட்சி அவளை திகைக்க வைத்தது. அழகிய கறுப்பு நிறத்தில் நாய்க்குட்டி ஒன்று பளபளவென்று வாலை ஆட்டியபடி தோசையை, 'அவ் அவ்' என தின்றபடி இருக்க, அதன் அருகில் உட்கார்ந்து, சின்னச் சின்ன விள்ளலாக கிள்ளிப் போட்டாள் மயூரி.

''அம்மா பாரேன் இந்த நாய்க்குட்டிய.... செம பசி இதுக்கு... இன்னும் ரெண்டு தோசை கூட சாப்பிடும் போல,'' என்று பரபரத்தாள் மயூரி.

''ஓ... உன் தோசையெல்லாம் இப்ப நாய்க்குட்டி வயத்துல இருக்கா... இது, எங்க இருந்து வந்தது?'' என்றாள் சிரித்தபடியே!

''சாயங்காலம் என் ஸ்நாக்ஸ் டப்பாவுல இருந்து ரெண்டு பிஸ்கட் எடுத்து போட்டேம்மா... உடனே சாப்பிட்டுட்டு வாலை ஆட்டுச்சு. இப்ப பாத்தா கேட் கிட்டே படுத்துக் கிடக்கு. என் தோசையில ரெண்டு போட்டேனா உடனே சாப்பிட்டிடுச்சு... சாரிம்மா... உனக்கு மாவு இருக்கா,'' என்று தாயை அணைத்தபடி கேட்டாள் மயூரி.
''நிறைய இருக்குடா... அதுசரி... இதென்ன புதுசா நாய்க்குட்டி, சாப்பாடு எல்லாம்?''

''எங்க மிஸ் சொன்னாங்கம்மா... 'உன்னால நூறு பேருக்கு சாப்பாடு போட முடியலன்னாலும் பரவாயில்ல, ஒரே ஒருத்தருக்காவது சாப்பாடு போடு. அதுவே பெரிய உதவி தான்னு! என்னால நாய்க்குட்டிக்கு பிஸ்கட், இட்லி, பிரெட்ன்னு தானே போட முடியும்...'' என்றாள்.

''என் தங்கமே...'' என, குழந்தையை அணைத்துக் கொண்டவளுக்கு கண்களில் நீர் வடிந்தது; நெஞ்சினுள் பரபரப்பு.
உள்ளே ஓடி மொபைல் போனை எடுத்து, தோழி பிரபாவை அழைத்தாள்.

''பிரபா... உனக்கு ஏதாவது ஒரு வகையில உதவி செய்யணும்ன்னு நினைச்சேன்; ஆனா, அது எப்படின்னு தெரியாம தவிச்சேன். என் குட்டிப் பொண்ணு எனக்கு வழிகாட்டிட்டா... உன் பையனுக்கு நான் தினமும் சயின்ஸ், மாத்ஸ் சொல்லி தர்றேன்; அவனை புத்திசாலியாக ஆக்கறேன். என்னால முடிஞ்சது அதுதான்... நாளைக்கே அவனை வரச் சொல்லு,'' என்றவள், ''ஒரு கால் வருது அப்புறம் பேசுறேன்,'' என்று சொல்லி மொபைல் போனை பார்த்த போது, அண்ணனின் அழைப்பு.
''சொல்லுங்கண்ணா...''

''சபர்மதி... அந்த வேலை உனக்கு கிடைச்சிருச்சு. அடுத்த வாரம் வேலையில சேர்ந்திடு... ஆரம்பத்துல, 20,000 ரூபா சம்பளம். போகப் போக ஏறும்; சந்தோஷமா...'' என்றான்.
''நிஜமாவா... தாங்க்ஸ் அண்ணா...'' என்ற போது நாய்க்குட்டி அவளைப் பார்த்து, வாலை ஆட்டியது சந்தோஷமாக!

வி.சம்யுக்தா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Mar 07, 2016 6:40 pm

நல்ல கதை அம்மா. நம்மால் முடிந்த வரை பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்று புரிய வைக்கும் கதை.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக