ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 pm

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm

» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' !

+3
krishnaamma
e.sivakumar1988
B.VENKATESAN
7 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 4 Empty ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' !

Post by B.VENKATESAN Sat Feb 27, 2016 3:21 am

First topic message reminder :

விரைவில் தொலைந்த மன அமைதி ...

இயந்திரங்கள் இதயமாகி விட்டதால் இதயம் இயந்திரமாகி விட்ட காலம் இது!!!.
எங்கும் விரைவு!!!...எதிலும் விரைவு!!!...விரைவு...விரைவு...விரைவு...
தண்ணீரைக் கூட சுவைத்து பொறுமையாக பருகினால் இதயக் கோளாறுகளை சரி செய்யலாம் என்கிறது நவீன மருத்துவ உலகம்.ஆனால் ஒரு தேனீரைக் கூட திருப்தியாக சுவைத்து அருந்த நேரமில்லை நம்மில் பலருக்கு...! சுவை அரும்புகள் கூட சோர்ந்து விட்டன...நம்முடைய விரைவில்...!
நகர வாழ்க்கைக் கடிகாரத்தில் நொடிமுள் கூட வேகமாகவே நகரும் என்றால் அது மிகையில்லை என்றே தோன்றுகிறது.ஏன் இந்த விரைவு? எப்படி வந்தது ? என்று நாம் சற்றே எண்ணிப் பார்ப்போம். காலம்தான் பதில் கூற வேண்டும். காலத்தை சற்று பின்னோக்கிப் புரட்டினாலும் கூட பதில் கிடைக்கக்கூடும்.
சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் விவசாயமே பிரதானமாக இருந்தது. கிராமங்கள் கிராமங்களாக இருந்தன.நாட்கள் மெதுவாக நகர்ந்தன. மக்களின் வாழ்வியல் இயற்கையை ஒட்டி இயல்பாக இருந்தது.
மன அமைதிக்கு யாரும் மருந்து தேடவில்லை. வாழ்க்கை முறையே மன அமைதியை வாரி வழங்குவதாக இருந்தது. உதாரணமாக, அன்று  விறகு அடுப்பில் தான் சமைத்தார்கள். விறகு அடுப்பு எரிவதைப் பார்ப்பது கூட நம்மையும் அறியாமல் நமக்குள் ஒருவித அமைதியை ஏற்படுத்தி விடும். சமையலும் சுவையாக இருக்கும் ; ஆரோக்கியமும் கூட.
ஆனால் இன்றோ இயற்கையான தீயைத் தவிர மற்ற அனைத்திலும் சமையல் நடக்கிறது. அறிவியலின் கொடைகள் இன்று நேரத்தைக் குறைத்தாலும் நோய்களை அதிகரித்து விட்டன.ஆம். மனித குலம் இன்று ஆட்படும் பெரும்பாலான நோய்களுக்கு மனதின் விரைவே காரணம். மலச்சிக்கலில் தொடங்கி மனச்சிக்கலில் கொண்டுபோய் விடுகிறது இந்த விரைவு.


நகரங்களில் அவசர அவசரமாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, அரைகுறையாக சாப்பிட்டு தண்ணீர் கூட குடிக்காமல் அலுவலகம் செல்வோர் எத்தனையோ பேர் உள்ளனர்.இந்த நிலை ஏன் என்று விளங்கவில்லை. ஐந்து நிமிடங்களாவது உண்ட உணவிற்கு தண்ணீர் சேர்க்க அரை நிமிடம் கூட ஆகாதுதானே?!

கொஞ்சம் நிதானமாக சிந்தித்தால்...
சிந்தித்ததைச் செயல்படுத்தினால்...
விரைவு தரும் விரையங்களை விரைவில் குறைக்கலாம்தானே?!!!


.                                                                                                - பா.வெ.


எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

Back to top Go down


ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 4 Empty Re: ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' !

Post by krishnaamma Tue Mar 01, 2016 11:05 pm

B.VENKATESAN wrote:அனைவருக்கும் மிக்க நன்றி !!! அனைத்து பதிவுகளுமே என்னுடைய சொந்த கருத்துக்கள்தான் அம்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1196164

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மிக அருமை வெங்கடேசன்... ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 4 3838410834 ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 4 3838410834 ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 4 3838410834 தொடருங்கள்......நான் உங்களைத் தொடர்கிறேன்...............புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 4 Empty Re: ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' !

Post by B.VENKATESAN Tue Mar 01, 2016 11:48 pm

மிக்க நன்றி அம்மா!!!


எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

Back to top Go down

ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 4 Empty Re: ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' !

Post by T.N.Balasubramanian Wed Mar 02, 2016 4:44 am

தொலைந்த மன நிம்மதி ,
உண்மை ,
ரசித்தேன் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 4 Empty Re: ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' !

Post by B.VENKATESAN Wed Mar 02, 2016 7:27 am

நன்றி ஐயா !!!


எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

Back to top Go down

ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 4 Empty Re: ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' !

Post by B.VENKATESAN Wed Mar 02, 2016 1:23 pm

என்றும் மகிழ்ச்சியாக வாழ...
தொடர்ச்சி ...

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா சாப்பிடுவது நமக்கு பிடிக்கும் ; மகிழ்ச்சியைத் தரும் என்று வைத்துக்கொள்வோம். ஆசைதீர சாப்பிட ஒரு அரை கிலோ வாங்கிக் கொள்வோம். முதல் துண்டை சுவைக்கும்போது...ஆஹா!!!...என்ன ருசி...என்ன ருசி...அப்படியே தேவாமிர்தமாக இருக்குமல்லவா? மனமெல்லாம் மகிழ்ச்சி பரவி நிற்கும்தானே?
சரி. ஒரு நூறு கிராம் வரை இவ்வாறு சுவைத்துவிட்டோம். அதன் பின்னரும் இதே மகிழ்ச்சி இருக்குமா? சரி.கஷ்டப்பட்டு ஒரு கால் கிலோ வரை சாப்பிட்டுவிட்டோம் என்றே வைத்துக்கொள்வோம். அதன் பின்னரும் சாப்பிட முடியுமா ? முதல் துண்டை ருசித்த போதிருந்த அதே மகிழ்ச்சி இருக்குமா? கண்டிப்பாக இல்லை என்பதே நம் அனைவரின் பதிலாக இருக்கும். பால்கோவா சாப்பிடுவதில்தான் மகிழ்ச்சி இருக்கிறது என்றால் முதல் துண்டை சுவைத்த போது இருந்த மகிழ்ச்சி கால் கிலோவை சாப்பிட்டபோதும் அதன் பின்னரும் இருக்க வேண்டும் அல்லவா ???

இதிலிருந்து நாம் விரும்பியதை அடைந்து துய்க்கும்போதோ அல்லது விரும்பிய செயலைச் செய்யும்போதோ மகிழ்ச்சி கிடைப்பதில்லை என்பது தெளிவாக புரிகிறது அல்லவா ?
நம் அனைவரின் அடுத்த கேள்வி , மகிழ்ச்சி பின்பு வேறு எங்குதான் உள்ளது ??? என்பதே.வாங்க ... ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா சாப்பிட்ட ஸ்டோரியை ரீவைண்டு பண்ணி பார்ப்போம் ...
நமக்கு வெகுநாட்களாக ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா சாப்பிட வேண்டுமென ஆசை இருப்பதாக வைத்துக்கொள்வோம். இந்த ஆசை அடிக்கடி ஏற்பட்டு மனதில் எப்போதும் ஒருவித எண்ணப்போராட்டம் உருவாகி இருக்குமல்லவா? இந்த ஆசை தீருவதற்கான நாளும் வந்துவிட்டது. ஆமாங்க...இப்போது பால்கோவா சாப்பிடப்போகிறோம். அதே ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாதான்…
முதல் துண்டை சுவைக்கும்போது இவ்வளவு நாளாக மனதில் இருந்த அந்த ஒருவித எண்ணப்போராட்டம் ஒருசில நொடிகள் இப்போது அடங்கி மனம் அமைதியாகிவிட்டது அல்லவா ?! இதற்கு பெயர்தான் மகிழ்ச்சி , இன்பம் , சுகம் , ஆனந்தம்...
பால்கோவாவில் முதல் துண்டை சுவைத்தபோதே அதுவரை இருந்த எண்ணப்போராட்டம் அடங்கிவிட்டது. அதனால்தான் போகப்போக மகிழ்ச்சி குறைகிறது.இதிலிருந்து மகிழ்ச்சி என்பது வெளியில் இல்லை ; நம் மனதில்தான் இருக்கிறது என்பது நம் எல்லோருக்குமே நன்றாக புரிந்திருக்கும் அல்லவா ???

நிற்க. எல்லாம் சரி. நாம் ஏன் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை???!!!

- பா.வெ.
தொடரும் ...


எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

Back to top Go down

ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 4 Empty Re: ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' !

Post by T.N.Balasubramanian Wed Mar 02, 2016 7:20 pm

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா 50 கிராம் சாப்பிட்டது போலிருந்தது .

தொடருங்கள் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 4 Empty Re: ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' !

Post by B.VENKATESAN Wed Mar 02, 2016 8:13 pm

மிக்க நன்றி ஐயா !!!


எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

Back to top Go down

ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 4 Empty Re: ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' !

Post by B.VENKATESAN Sun Mar 06, 2016 11:40 am

என்றும் மகிழ்ச்சியாக வாழ...
தொடர்ச்சி ...

பால்கோவா சாப்பிட்டது போதும். வாருங்கள்... குளத்தின் அருகில் அமர்ந்து யோசிப்போம்.
ஆம். ஒரு குளம் சலனமற்ற நிலையில் எப்படி எந்த அலைகளும் இல்லாமல் அமைதியாக அழகாக உள்ளதோ அவ்வாறே நம் மனமும் ஆசைகள் என்னும் எண்ணங்களற்ற நிலையில் அமைதியாக ஆனந்தமாக அதாவது மகிழ்ச்சியாகவே சலனமற்ற குளத்தைப் போல உள்ளது. இதுவே அதன் இயல்புநிலை.ஆனால் நாம்தான் ஆசைகள் என்னும் எண்ணங்களை மனதில் ஒரு குளத்தில் கல்லை போடுவது போல் போட்டு அலைபாய விடுகிறோம். மனமும் தன் இயல்புநிலையை அதாவது மகிழ்ச்சியை அடைய எப்போதும் முயன்று கொண்டிருக்கிறது. நாம் தெரிந்தோ தெரியாமலோ மகிழ்ச்சியாக இருக்கவே அதாவது மனம் அதன் இயல்புநிலையிலேயே இருக்க தொடர்ந்து முயல்கிறோம். ஆனால் இந்த மகிழ்ச்சியை வெளியில் தேடிக்கொண்டே இருக்கிறோம்.

இனி அன்றாட வாழ்வில் இந்த தெளிவைக் கொண்டு எப்போதும் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்று பார்ப்போம்.

- பா.வெ.
தொடரும் ...


எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

Back to top Go down

ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 4 Empty Re: ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' !

Post by B.VENKATESAN Mon Mar 07, 2016 5:39 am

என்றும் மகிழ்ச்சியாக வாழ...
தொடர்ச்சி ...

நம் மனதின் எண்ணங்களற்ற இயல்பான அமைதிநிலைதான் உண்மையில் மகிழ்ச்சி என்று இப்போது தெரிந்துவிட்டது அல்லவா ? அதற்காக நாம் எப்போதும் அமைதியாகவோ தியானத்திலோ இருப்பதும் சாத்தியமில்லை. அப்படியென்றால் என்னதான் செய்வது???!!! என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

நம் மனது அதன் இயல்பான நிலையில் மகிழ்ச்சியாகதான் இருக்கிறது என்று பார்த்தோம் அல்லவா ? அப்படியென்றால் அந்த இயல்புநிலையை நம் பேராசைகளாலும் தேவையற்ற எண்ணங்களாலும் கெடுக்காமல் இருந்தாலே மகிழ்ச்சியாக இருக்கலாம் என்கிற சூட்சுமம் இந்நேரம் உங்களுக்கு புரிந்திருக்கும்தானே!!!

ஆம். நம் மனதின் ஆனந்தநிலையை கெடுக்காத வண்ணம் நம் செயல்கள் இருந்தாலே போதும். நாம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கலாம். மேலும் மகிழ்ச்சி என்பது வெளியில் இல்லை என்கிற தெளிவு நமக்கு எப்போதுமே இருக்க வேண்டும்.

இங்கு இன்னொரு முக்கியமான விஷயத்தை பற்றிய புரிதலும் நமக்கு வேண்டும். மனம் தன் இயல்புநிலையை அடைய அதாவது மகிழ்ச்சியாக இருக்க சில நேரங்களில் நம்மை தவறான செயல்களில் ஈடுபடுத்தவும் செய்யும். உதாரணமாக போதைப்பொருட்கள் உபயோகிப்பவர்கள் அது உடல்நலத்திற்கு தீங்கு என்று தெளிந்த பின்பு தெரிந்தும் அதைவிட்டு மீள முடியாமல் இருப்பதற்கு மனமும் முக்கிய காரணம். எனவே எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதில் நம் அறிவு சொல்வதையே நாம் கேட்க வேண்டும். ஏனென்றால் அறிவு மட்டுமே நம்மை நல்வழியில் அழைத்துச் செல்லும்.

- பா.வெ.


எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

Back to top Go down

ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 4 Empty Re: ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum