புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 3 Poll_c10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 3 Poll_m10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 3 Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 3 Poll_c10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 3 Poll_m10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 3 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 3 Poll_c10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 3 Poll_m10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 3 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 3 Poll_c10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 3 Poll_m10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 3 Poll_c10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 3 Poll_m10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 3 Poll_c10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 3 Poll_m10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 3 Poll_c10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 3 Poll_m10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 3 Poll_c10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 3 Poll_m10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 3 Poll_c10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 3 Poll_m10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 3 Poll_c10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 3 Poll_m10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' !


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Sat Feb 27, 2016 2:51 pm

First topic message reminder :

விரைவில் தொலைந்த மன அமைதி ...

இயந்திரங்கள் இதயமாகி விட்டதால் இதயம் இயந்திரமாகி விட்ட காலம் இது!!!.
எங்கும் விரைவு!!!...எதிலும் விரைவு!!!...விரைவு...விரைவு...விரைவு...
தண்ணீரைக் கூட சுவைத்து பொறுமையாக பருகினால் இதயக் கோளாறுகளை சரி செய்யலாம் என்கிறது நவீன மருத்துவ உலகம்.ஆனால் ஒரு தேனீரைக் கூட திருப்தியாக சுவைத்து அருந்த நேரமில்லை நம்மில் பலருக்கு...! சுவை அரும்புகள் கூட சோர்ந்து விட்டன...நம்முடைய விரைவில்...!
நகர வாழ்க்கைக் கடிகாரத்தில் நொடிமுள் கூட வேகமாகவே நகரும் என்றால் அது மிகையில்லை என்றே தோன்றுகிறது.ஏன் இந்த விரைவு? எப்படி வந்தது ? என்று நாம் சற்றே எண்ணிப் பார்ப்போம். காலம்தான் பதில் கூற வேண்டும். காலத்தை சற்று பின்னோக்கிப் புரட்டினாலும் கூட பதில் கிடைக்கக்கூடும்.
சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் விவசாயமே பிரதானமாக இருந்தது. கிராமங்கள் கிராமங்களாக இருந்தன.நாட்கள் மெதுவாக நகர்ந்தன. மக்களின் வாழ்வியல் இயற்கையை ஒட்டி இயல்பாக இருந்தது.
மன அமைதிக்கு யாரும் மருந்து தேடவில்லை. வாழ்க்கை முறையே மன அமைதியை வாரி வழங்குவதாக இருந்தது. உதாரணமாக, அன்று  விறகு அடுப்பில் தான் சமைத்தார்கள். விறகு அடுப்பு எரிவதைப் பார்ப்பது கூட நம்மையும் அறியாமல் நமக்குள் ஒருவித அமைதியை ஏற்படுத்தி விடும். சமையலும் சுவையாக இருக்கும் ; ஆரோக்கியமும் கூட.
ஆனால் இன்றோ இயற்கையான தீயைத் தவிர மற்ற அனைத்திலும் சமையல் நடக்கிறது. அறிவியலின் கொடைகள் இன்று நேரத்தைக் குறைத்தாலும் நோய்களை அதிகரித்து விட்டன.ஆம். மனித குலம் இன்று ஆட்படும் பெரும்பாலான நோய்களுக்கு மனதின் விரைவே காரணம். மலச்சிக்கலில் தொடங்கி மனச்சிக்கலில் கொண்டுபோய் விடுகிறது இந்த விரைவு.


நகரங்களில் அவசர அவசரமாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, அரைகுறையாக சாப்பிட்டு தண்ணீர் கூட குடிக்காமல் அலுவலகம் செல்வோர் எத்தனையோ பேர் உள்ளனர்.இந்த நிலை ஏன் என்று விளங்கவில்லை. ஐந்து நிமிடங்களாவது உண்ட உணவிற்கு தண்ணீர் சேர்க்க அரை நிமிடம் கூட ஆகாதுதானே?!

கொஞ்சம் நிதானமாக சிந்தித்தால்...
சிந்தித்ததைச் செயல்படுத்தினால்...
விரைவு தரும் விரையங்களை விரைவில் குறைக்கலாம்தானே?!!!


.                                                                                                - பா.வெ.



எண்ணம் போல் வாழ்வு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 01, 2016 9:38 am

B.VENKATESAN wrote:மிக்க நன்றி அம்மா !!! மிக்க நன்றி !!!

ம்ம்... பரவாஇல்லை வெங்கடேசன் புன்னகை..............இன்று தான் உங்கள் பதிவுகளை படிக்கணும் ! .தொடர்ந்து பதிவிடுங்கள் புன்னகை அருமையிருக்கு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Tue Mar 01, 2016 2:37 pm

தலைமுறை - இடைவெளியில் ...

"தலைமுறை தலைமுறையாய்" - இந்த வார்த்தைகளை கிராமங்களில் நீங்கள் அதிகமாகக் கேட்டிருக்கலாம். ஆனால் இன்றைய சூழலில் கிராமங்களில் கூட தலைமுறை தலைமுறையாய் ஓரிடத்தில் வாழும் கூட்டுக்குடும்ப வாழ்வியல் குன்றிவிட்டது. வருமானத்தேடல் விவசாயத்திலிருந்து விலகியதாலும் நாகரிக மோகத்தால் நவீனம் தேடியும் நகரம் நோக்கி நகர்ந்துவிட்டன தலைமுறைகள்!!!. என்ன செய்வது? காலத்தின் கட்டாயம் அப்படி ...
வசிப்பிடம்,நடை,உடை,பாவனை மாறியது போல் மனித மனமும் மாறிவிட்டது. சென்ற தலைமுறையில் காணப்பட்ட பல தலையாய குணங்கள் இன்றைய தலைமுறையினரிடம் குறைந்துவிட்டன. அவற்றை மீண்டும் மீட்டெடுப்பது நம் அனைவரின் கடமையாகும்.
பிறருக்கு அறிவுரை கூறுவது எளிது.ஆனால் அதை நாம் கடைபிடிப்பது கடிது.பிறருக்கு அறிவுரை கூறுமுன் நாம் முதலில் அதை எவ்வளவு தூரம் கடைபிடிக்கிறோம் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.ஏனென்றால் நாம் கூறும் அறிவுரையை விட நாமே ஒரு அறிவுரையாய் வாழ்ந்தால் மட்டுமே நம் அறிவுரை கூட கேட்பவர்களால் சரியாக கடைபிடிக்கப்படும்.
குழந்தை வளர்ப்பில் இது முக்கியமான அம்சம்.ஏனெனில் குழந்தைகள் பெரும்பாலும் நாம் கூறும் அறிவுரைகளைக் கேட்டு வளர்வதில்லை.நம் செயல்பாடுகளைப் பார்த்தே வளர்கின்றனர்.எனவே நம் குழந்தைகளை எவ்வாறு பண்புடன் வளர்க்க ஆசைப்படுகிறோமோ அவ்வாறு முதலில் நாம் நடந்துகொள்ள வேண்டும்.
மேலும் குழந்தைகளை எப்போதும் பிற குழந்தைகளோடு ஒப்பிட்டு வளர்க்கவே கூடாது.இது அவர்களுக்குள் தாழ்வுமனப்பன்மை போன்ற பல மனரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.
இதே போல் குழந்தை கீழே விழுந்து அடிபட்டால் உடனே அவ்வாறு அடிபட காரணமானவற்றை குற்றம் சொல்லி குழந்தையின் அழுகையை நிறுத்துவது நம்மில் பலருக்கு வழக்கம்.இது முற்றிலும் தவறு.

ஏனெனில் தெரியாமல் விழுந்து அடிபட்டது குழந்தையின் தவறு என்று நமக்கு தெரியும்.ஆனால் குழந்தைக்கு இது தெரியாது.இதை நாம்தான் குழந்தைக்கு பக்குவமாக புரியவைக்க வேண்டும்.இல்லாவிட்டால் தன தவறுக்கு பிறரை காரணம் காட்டும் குணத்துடனே குழந்தை வளர ஆரம்பிக்கும்.
பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை முதல் மதிப்பெண் பெற படாத பாடு படுத்துவதும், பிள்ளைகளோ ஒருவேளை தேர்ச்சியே பெறமுடியாவிட்டால் தற்கொலை செய்துகொள்வதும் அண்மைக்காலத்தில் பெருகிவருவது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலை ஏன் என்று நாம் சற்றே சிந்திப்போம்.ஒவ்வொருவருக்கும் இயல்பாகவே தகுதியும் திறமையும் அளவில் மாறுபடும்.எல்லோரும் முதலிடம் பிடிக்க முடியாது.தங்கள் பிள்ளைகள் முதலிடம் பிடிக்காவிட்டாலும் தேர்ச்சி அடைந்ததையே கொண்டாடும் பெற்றோரும் உள்ளனர். ஏனெனில் முதலிடம் பிடிக்கும் அனைவருமே புத்திசாலிகள் இல்லை.ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கும்.அதைக்  கண்டுபிடித்து அந்தத் திறமையை மேன்மேலும் வளர்த்துக்கொள்ள முயற்சிக்கலாம்.
ஏனெனில் இன்று வாழ்வில் முதலிடம் பிடித்தவர்கள் யாருமே படிப்பில் முதலிடம் பிடித்தவர்கள் இல்லை.பெற்றோர்களின் செயல் பிள்ளைகளின் திறமைகளைத் தூண்டுவதாய் இருக்க வேண்டுமே தவிர தற்கொலைக்கு தூண்டுவதாய் இருக்கக்கூடாது.

நமது கெளரவம் நம்முடைய நற்செயல்களில்தான் இருக்கிறதே தவிர பிள்ளைகளின் முதலிடத்தில் ஒருபோதும் இல்லை என்பதை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.இந்த உலகில் அவர்கள் தங்களுக்கான இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும் வாழ்க்கைக்கும் வாழ்வுக்கும் பொருள் தேடும் வகையில் அறிவினையும் நற்பண்புகளையும் வளர்க்கவுமே கல்வி பயில வேண்டும் என்ற எண்ணத்தை அவர்களுக்குள் பசுமரத்தாணி போல் பதியவைப்பது மட்டுமே பெற்றோர்களின் கடமை.

இது நன்கு புரிந்தால் அவர்களே நன்றாக படிப்பார்கள்.இந்த புரிதலில் இருந்து  விலகும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் பொறுமையாக புரியவைப்பது பெற்றோரின் தலையாய கடமையாகும்.இதை விடுத்து முதலிடம் வேண்டும் முதலிடம் வேண்டும் என்று பிள்ளைகளை நெருக்கி அது தற்கொலையில் முடியும் பட்சத்தில் நீங்கள் மீண்டும் நெருக்கவோ உங்களிடம் நெருங்கவோ பிள்ளைகள் என்று இந்த உலகில் யார் இருக்கபோகிறார்கள்? எனவே கண்கெடும் முன்பே சூரிய நமஸ்காரம் செய்துவிடலாமே!!!

மேலும் எதிர்காலத்தில் நம்மை நம் பிள்ளைகள் முதியோர் இல்லம் அனுப்புவதும் ஆதரிப்பதும் கூட நம் வளர்ப்பிலும் நம் செயல்பாடுகளிலும் தான் இருக்கிறது.குறிப்பாக நாம் நம்முடைய பெற்றோரை மதித்து நடந்தால் நம்மை பார்த்து வளரும் நம் பிள்ளைகளும் அவ்வாறே நம்மையும் மதிப்பார்கள் என்பது திண்ணம்.அதற்காக அவர்கள் நம்மை ஆதரித்தே தீர வேண்டும்; அவர்களை வளர்த்ததற்கு ஏதேனும் அவர்களும் திருப்பி செய்தே ஆகவேண்டும் என்ற எண்ணத்தோடு வளர்க்க வேண்டிய அவசியமில்லை. அவர்களை நன்றாக வளர்க்க வேண்டியது பெற்றோராகிய நம் கடமை. நம் கடமையை நாம் சரியாக செய்தாலே போதும்.
வீண் எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டியதில்லை. ஏனென்றால், எதிர்பார்ப்புக்கும் எதார்த்தத்திற்கும் இடையே உள்ள இடைவெளி அதிகமானால் ஏமாற்றமே மிஞ்சும். இன்றைய காலகட்டத்தில் எல்லாமே மாறிவிட்டது. வருங்காலத்தில் தாத்தா பாட்டிகளை அருங்காட்சியகத்தில் மட்டுமே காண முடியும் என்ற அவலநிலை தோன்றிவிடும்போல் தெரிகிறது. அந்த அளவிற்கு மனித மனம் சுருங்கி விட்டது.
விண்வெளித் தொலைவை விரைவில் தொட முடிந்த விஞ்ஞானத்தால் மனித உறவுகள் மனதளவில் விலகிய தொலைவைத் தொட முடியவில்லை. எனவே வருங்காலத்தில் உறவுகள் எப்படி இருக்குமென்று கூறுவதற்கில்லை. ஆகவே எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொண்டு நன்றாக வளர்ப்பதே நம் கடமை என்ற அளவில் இருப்பதே நல்லது.

இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஓர் வேண்டுகோள்!!! பெற்றோரை உங்களோடு வைத்து பார்த்துக்கொள்ள இயலாவிட்டாலும்கூட தூரமாக ஓரிடத்தில் வைத்து பார்த்துக்கொள்ளலாமே!!! சிலநேரம் தூரத்தில் இருப்பது கூட நெருக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால் அந்த தூரமான இடம் முதியோர் இல்லமாக மட்டும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், தூரத்தில் இருந்தாலும் அவர்கள் உங்கள் பெற்றோர்தான். ஆனால் முதியோர் இல்லத்தில் இருந்தால் அவர்கள் அகதிகள் அல்லவா???

நாம் இந்த பூமிக்கு வர தெரிந்தோ தெரியாமலோ பெற்றோர் காரணமாகிவிட்டனர். ஆனால் அவர்கள் பூமியை விட்டுச் செல்ல நாம் தெரிந்தே காரணமாக வேண்டாமே!!!




எண்ணம் போல் வாழ்வு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 01, 2016 9:39 pm

ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 3 103459460 ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 3 3838410834

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Mar 01, 2016 10:48 pm

ஆனால் அந்த தூரமான இடம் முதியோர் இல்லமாக மட்டும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், தூரத்தில் இருந்தாலும் அவர்கள் உங்கள் பெற்றோர்தான். ஆனால் முதியோர் இல்லத்தில் இருந்தால் அவர்கள் அகதிகள் அல்லவா???
உள்ளம் தொடும் வரிகள். ஆனால், உண்மை சுடும் போது பெரியவர்கள் அருகில் இருக்க மாட்டார்கள்.



ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 01, 2016 11:55 pm

நாம் குறைந்தபட்சம் வேலைக்காக மட்டுமே இதை பயன்படுத்தலாம்.வாழ்க்கைக்கே அந்நிய மொழிதான் பிரதானம் என்று தொடர்ந்தால் நம் தாய்மொழிக்கு எமன் வெளியில் வேண்டாம்.நாமே பொதும்.தாய்மொழிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டாம்.குறைந்தபட்சம் கல்லறை கட்டாமல் இருக்கலாமே?!


ம்ம் ரொம்ப சரி, இவையெல்லாம் நீங்களே எழுதுகிறீர்களா வெங்கடேசன்?.............எங்கிருந்தாவது எடுத்து போடுவதானால் அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள் புன்னகை.முதலில் சில பதிவுகளில் பா.வெ. என்று பார்க்க முடிகிறது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 01, 2016 11:58 pm

ஒரு வேளை உண்டால் அடுத்த வேளைக்கு சரியாக பசிக்க வேண்டும் ; படுத்தவுடன் உறக்கம் வர வேண்டும். இதுவே பணம், பொருள் சேர்ப்பதற்கான சரியான அளவுகோல். இந்த நிம்மதி தொலையும் பட்சத்தில் நாம் அதீதமாக பணம் தேடுகின்றோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எஸ்............... ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 02, 2016 12:21 am

குழந்தை கீழே விழுந்து அடிபட்டால் உடனே அவ்வாறு அடிபட காரணமானவற்றை குற்றம் சொல்லி குழந்தையின் அழுகையை நிறுத்துவது நம்மில் பலருக்கு வழக்கம்.இது முற்றிலும் தவறு.

ஆமாம், நிறைய பெற்றோர்கள் இத தவறை செய்வார்கள் , நான் பார்த்திருக்கிறேன்.....குழந்தை தவறி, கீழே விழுந்து விட்டால், உடனே தரையை அடிக்க சொல்வார்கள்.........தன் தப்பை சுலபமாக மற்றவர் மேல் போடும் மன நிலையைத்தான் இது வளர்க்கும் சோகம் ...அது பிற்காலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 02, 2016 12:25 am

விண்வெளித் தொலைவை விரைவில் தொட முடிந்த விஞ்ஞானத்தால் மனித உறவுகள் மனதளவில் விலகிய தொலைவைத் தொட முடியவில்லை. எனவே வருங்காலத்தில் உறவுகள் எப்படி இருக்குமென்று கூறுவதற்கில்லை. ஆகவே எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொண்டு நன்றாக வளர்ப்பதே நம் கடமை என்ற அளவில் இருப்பதே நல்லது.

ரொம்ப சரி, நாம் நம் எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொண்டு விட்டாலே எல்லாம் நன்றாக நடந்துவிடும் தான் புன்னகை

இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஓர் வேண்டுகோள்!!! பெற்றோரை உங்களோடு வைத்து பார்த்துக்கொள்ள இயலாவிட்டாலும்கூட தூரமாக ஓரிடத்தில் வைத்து பார்த்துக்கொள்ளலாமே!!! சிலநேரம் தூரத்தில் இருப்பது கூட நெருக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால் அந்த தூரமான இடம் முதியோர் இல்லமாக மட்டும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், தூரத்தில் இருந்தாலும் அவர்கள் உங்கள் பெற்றோர்தான். ஆனால் முதியோர் இல்லத்தில் இருந்தால் அவர்கள் அகதிகள் அல்லவா???

மனம் கனக்கும் வார்த்தைகள் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Wed Mar 02, 2016 9:47 am

அனைவருக்கும் மிக்க நன்றி !!! அனைத்து பதிவுகளுமே என்னுடைய சொந்த கருத்துக்கள்தான் அம்மா.



எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Wed Mar 02, 2016 9:56 am

என்றும் மகிழ்ச்சியாக வாழ...

உண்மையில் நாம் அனைவருமே எப்போதுமே மகிழ்ச்சியாக ஆனந்தமாகதான் இருக்கிறோம் என்று சொன்னால் நம்புவீர்களா?நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அதுதான் உண்மை.
"அது எப்படி ???!!!" என்று ஆச்சரியமாகவும் அவசரமாகவும் ஆர்வத்துடனும் நீங்கள் எழுப்பும் கேள்வி புரிகிறது.சில புரிதல்கள் உங்களுக்குள் ஏற்பட்டுவிட்டால் இந்த கேள்விக்கான பதிலும் எளிதில் புரிந்துவிடும்.
வாருங்கள்... மகிழ்ச்சியை நோக்கிய புரிதலில் பயணிப்போம்...

நீங்கள் மே மாதத்தில் சகாரா பாலைவனத்தைக் கடந்து செல்ல விரும்புவீர்களா? அல்லது நவம்பர் மாத மழையில் நனைந்தாட விரும்புவீர்களா? என்று நம்மை யாராவது கேட்டால் நம் அனைவரின் ஒரே பதில் கண்டிப்பாக நவம்பர் மாத மழையில் நனைந்தாடுவதாகதான் இருக்கும்.சரிதானே?!
இதிலிருந்து ஒன்று உங்களுக்கு நன்றாக புரிந்திருக்கும். அதாவது நாம் அனைவருமே கடினமான அல்லது மகிழ்ச்சி தராத செயல்களைச் செய்ய விரும்புவதில்லை. மகிழ்ச்சியான செயல்களைச் செய்ய மட்டுமே விரும்புகிறோம்.
ஆம்.உண்மைதான்.நம் மனது தனக்கு இலகுவான எளிதான விஷயங்களையே செய்யத் துடிக்கும். அது தவறான தீமை விளைவிக்கக்கூடிய செயல்களாக இருந்தாலும் சரி. மனம் ஒருமுறை ஏதேனும் ஒரு செயலில் இதம் கண்டுவிட்டால் திரும்ப திரும்ப அதையே செய்யத் தூண்டும்.

"மனம் கவர்ந்த", "மனதிற்கு பிடித்த" - இதுபோன்ற வார்த்தைகளை நாம் அனைவருமே அசைபோட்டிருப்போம் அல்லவா ?
மகிழ்ச்சி பற்றிய நமது புரிதல் பயணத்தில் நாம் சென்றடைய வேண்டிய இடம் இவ்விரு வார்த்தைகளில் தான் உள்ளது. இந்நேரம் உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆம். நம் மனம் தான் எல்லா அனுபவங்களையும் அனுபவிக்கிறது. மகிழ்ச்சி , துக்கம் , கோபம் , கவலை உள்ளிட்ட அனைத்து உணர்ச்சிகளின் பிறப்பிடமும் நம் மனம்தான்.

நம் வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை எத்தனையோ செயல்களில் ஈடுபட்டு பல்வேறு அனுபவங்களைப் பெறுகிறோம். ஆனால் அனுபவங்கள் பல்வேறாக இருந்தபோதிலும் நமது மனம் அதில் மகிழ்ச்சியை மட்டுமே விரும்புகிறது. இதை நீங்கள் எப்போதாவது கவனித்தது உண்டா?நம் அன்றாட வாழ்வில் இதற்கு பல்வேறு உதாரணங்களை கூறலாம்.

நம்மில் பலருக்கும் அலுவலகத்திற்கு காலதாமதமாக சென்று மேலாளரிடம் திட்டு வாங்கிய அனுபவம் இருக்கும். அன்றே சபதம் எடுப்போம். மறுநாள் கண்டிப்பாக அரைமணி நேரம் முன்னரே எழுந்து சீக்கிரம் அலுவலகம் செல்ல வேண்டுமென்று...ஆனாலும் அலாரத்தை அணைத்து விட்டு அல்லது மாற்றிவைத்து விட்டு இன்னும் ஒரு ஐந்து நிமிடமாவது தூங்க வேண்டும் என்றுதான் நம் மனம் அதன் பாதையில் இழுத்துச் செல்லும். அந்த நேரம் அது இன்பம் (அ) மகிழ்ச்சியையே விரும்புகிறது. ஆனால் மேலாளரிடம் நாம் திட்டு வாங்கும்போது கவலைப்படப்போவதும் அதே மனம்தான்.

இங்கு நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். அலாரத்தை அணைத்து விட்டு கொஞ்ச நேரம் தூங்குவதில் மகிழ்ச்சியைத் தேடுகிறது நம் மனம். ஆனால் அதன் விளைவுதான் மேலாளரிடம் திட்டு வாங்கி கவலைப்படுவது என்பது.
எனவே எந்தவொரு செயலிலும் அது நன்மையானாலும் சரி தீமையானாலும் சரி, அதில் மகிழ்ச்சி ஒன்றையே நமது மனம் தேடுகிறது என்பது புரிகிறது அல்லவா ?!

நல்லது. நமது மனம் நம் செயல்களில் மகிழ்ச்சியைத் தேடட்டும். நாம் மகிழ்ச்சி எங்கிருக்கிறது என்று தேடுவோம். வாருங்கள்...தேடலுடன் புரிதல் பயணத்தைத் தொடர்வோம்...

- பா.வெ.
தொடரும் ...



எண்ணம் போல் வாழ்வு
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக