ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காட்சிக்கு எளியன் ...

3 posters

Go down

காட்சிக்கு எளியன் ... Empty காட்சிக்கு எளியன் ...

Post by M.Jagadeesan Fri Feb 26, 2016 9:39 am

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் நேற்று பஸ்சில் பயணம் செய்ய 5 ரூபாய் இல்லாமல் தவித்துள்ளார். நேற்று பாட்னாவில் நடந்த புதிய பஸ் வழித்தட பாதையை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தொடங்கி வைத்து அவர் அந்த பஸ்சில் பயணிகளுடன் சேர்ந்து காந்தி மைதானத்தில் இருந்து ரெயில் நிலையம் வரை பயணமும் செய்தார். நிதிஷ்குமாரிடம் பெண் நடத்துனர், காந்தி மைதானத்தில் இருந்து ரெயில் நிலையம் வரை செல்ல கட்டணமாக 5 ரூபாய் கேட்டார். அப்போது நிதிஷ்குமார் தன் பையில் பணத்தை தேடினார். ஆனால் அவர் பணம் எதுவும் கொண்டு வரவில்லை. தான் பணம் கொண்டு வராததை உணர்ந்த நிதிஷ்  ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளரை பார்த்தார். உடனே முதன்மை செயலாளர் தன்னிடம் இருந்த 5 ரூபாயை நிதிஷ்குமார் சார்பாக பெண் நடத்துனரிடம் கொடுத்து டிக்கெட் வாங்கினார். அதன்பின் நிதிஷ்குமார் தனது பயணத்தை தொடந்தார். இச்சம்பவம் அவருடன் சேர்ந்து பயணித்த பயணிகளுக்கு ருசிகரமாக இருந்தது. மேலும் முன்னதாக நடந்த துவக்க விழாவில் நிதிஷ்குமார் பேசும்போது, ‘‘நான் அரசியலுக்கு வந்த போது பஸ்சில் மட்டும்தான் பயணம் செய்தேன். முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆன போது பஸ்சில் தான் சட்டமன்றத்துக்கு சென்று வந்தேன்’’ என்றார்.

இந்த செய்தியைப் படித்தவுடன் ஒரு திருக்குறள்தான் என் நினைவுக்கு வந்தது .

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம் . ( இறைமாட்சி- 386 )

என்ற குறள்தான் அது .

பொருள் :
=========
அரசன் என்பவன் , தன்னைக் காண வருவோர்க்கு எளிதில் காட்சி தருபவனாகவும் , அவர்களிடம் கடுஞ்சொல் கூறாதவனாகவும் இருந்தால் , மக்கள் எல்லோரும் அவன் புகழ் கூறுவர்.

சிலப்பதிகாரக் கண்ணகி ஒரு சாதாரணக் குடிமகள் . அவள் நினைத்தவுடன் மன்னனைப் பார்க்க முடிந்தது தன் குறையைச் சொல்ல முடிந்தது. நீதியை நிலைநாட்ட முடிந்தது.

மன்னனும் , அவளிடம் மரியாதையாகவே நடந்துகொண்டான் . கடுஞ்சொல் ஒன்றுகூட கூறவில்லை.

" கள்வனைக் கோறல் கடுங்கோலன்று
வெள்வேற் கொற்றம் காண் "

என்றே கூறுகிறான் .

" திருடன் கோவலன் மனைவியா நீ ! " என்று கடுஞ்சொல் கூறி அவளை அவமானப் படுத்தவில்லை . இதுதான் அன்றைய நீதி .

உயர்திணையை விட்டுவிடுங்கள் . அஃறிணை உயிரினமாம் ஒரு பசு கூட , ஆராய்ச்சிமணி அடித்து , அரசனின் கவனத்தைக் கவரமுடியும் என்பதைத்தானே  மனுநீதிச்சோழன் வரலாறு நமக்குத் தெரிவிக்கிறது .

இங்கே " காட்சிக்கு எளியன் " என்பதை இருவிதமாகப் பொருள் கொள்ளலாம் .

ஒன்று , ஆடம்பரமில்லாமல் எளிய உடையணிந்து காட்சி தருதல் . நம்முடைய முன்னாள் முதல்வர் காமராஜரைப் போலவும் , இந்நாள் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியைப் போலவும்  எளிய உடையணிந்து இருத்தல் .

மற்றொன்று மன்னன் என்பவன் மக்களோடு மக்களாகப் பழகவேண்டும் . மக்களின் குறையைக் கேட்டறிதல் வேண்டும் . முடியாட்சி நடைபெற்ற காலத்திலே , மன்னன் , மாறுவேடமணிந்து , மக்களை சந்திக்கும் முறை இருந்தது . மக்களோடு மக்களாகப் பழகி , மக்களின் குறைகளைக் கேட்டறிந்து , மன்னன் அவற்றை நிவர்த்தி செய்வான் . தற்காலத்தில் இது முடியாது என்றாலும் , மக்களை , முதல்வர் சந்திப்பதற்குப் பல்வேறு வழிகள் உள்ளன. அரசு அலுவலகக் கட்டிடங்கள் ,அணைகள் ,பாலங்கள் , மக்கள் நலத்திட்டங்களை அறிமுகம் செய்தல் ஆகியவற்றை முதல்வர் அவ்விடங்களுக்குச் சென்று தொடங்கி வைப்பதுதான் முறை . அப்போது மக்களை சந்திக்கும் வாய்ப்பு முதல்வருக்குக் கிடைக்கும்; மக்களும் முதல்வரைச் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும். தங்கள் குறைகளைச் சொல்லவும் முடியும் .

எல்லாமே  " காணொளிக் காட்சி " மூலம்தான் என்றால் , அது முதல்வர் மக்களை விட்டு விலகிச் செல்கிறார் அல்லது விலகி இருக்கவே விருப்பப்படுகிறார் என்பதாகவே பொருள்படும் . மெட்ரோ ரயில் துவக்க விழாவை , சென்னையில் இருந்துகொண்டே ,அவ்விழாவிற்குச் செல்லாமல்  முதல்வர் அவர்கள் காணொளிக் காட்சி மூலம் , மெட்ரோ ரயிலைத் துவக்கி வைக்கின்றார் . ஆனால் பீஹார் முதல்வரோ பேருந்து புதிய தடத்  துவக்க விழாவில் , பேருந்தை துவக்கி வைத்தது மட்டுமன்றி , அதில் பயணிக்கவும் செய்கிறார் .

ம்ம்ம் ... என்ன செய்வது ? நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

காட்சிக்கு எளியன் ... Empty Re: காட்சிக்கு எளியன் ...

Post by krishnaamma Fri Feb 26, 2016 10:43 pm

ம்ம்ம் ... என்ன செய்வது ? நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் !...நிஜம் ஐயா சோகம்
.
.
.
நல்ல பகிர்வு!............ காட்சிக்கு எளியன் ... 3838410834 காட்சிக்கு எளியன் ... 3838410834 காட்சிக்கு எளியன் ... 3838410834


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காட்சிக்கு எளியன் ... Empty Re: காட்சிக்கு எளியன் ...

Post by சசி Sat Feb 27, 2016 9:09 am

அருமையான பகிர்வு ஐயா. நாம் தமிழர் மரபில் வந்தவர்கள் என்பதையே இவர்கள் எல்லாம் மறந்து விட்டார்கள். எளிமை என்றால் என்ன? என்பது அவர்களது கேள்வியாக இருக்கும் போது அவர்கள் எங்கே எளிய மக்களுக்கு வழி காட்டுவது? 
தனி விமானத்தில் வரும் போது தலை வணங்கி மரியாதை செலுத்தும் அரசியல் வியாதிகள் இருக்கும் வரை நம் பாரம்பரியம் எள்ளளவும் பயன்படாது.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

காட்சிக்கு எளியன் ... Empty Re: காட்சிக்கு எளியன் ...

Post by M.Jagadeesan Sat Feb 27, 2016 5:17 pm

கிருஷ்ணம்மா, சசி பாராட்டுக்கு நன்றி !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

காட்சிக்கு எளியன் ... Empty Re: காட்சிக்கு எளியன் ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum