ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பர்களே காசினி கீரை பற்றிய தகவல் தேவை

+4
ராஜா
இளவரசன்
தாமு
செரின்
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நண்பர்களே காசினி கீரை பற்றிய தகவல் தேவை Empty நண்பர்களே காசினி கீரை பற்றிய தகவல் தேவை

Post by செரின் Wed Nov 18, 2009 5:09 pm

நண்பர்களே காசினி கீரை பற்றிய தகவல் தேவை


இந்த கீரை எப்படி இருக்கும் இதன் பயன் என்ன என்பது பற்றி விளக்கம் தேவை தெரிந்தவர்கள் தயவு செய்து தாருங்கள்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

நண்பர்களே காசினி கீரை பற்றிய தகவல் தேவை Empty Re: நண்பர்களே காசினி கீரை பற்றிய தகவல் தேவை

Post by தாமு Wed Nov 18, 2009 5:14 pm

மூலிகை சமையல்
நண்பர்களே காசினி கீரை பற்றிய தகவல் தேவை Keerai
வெப்பத்தைத் தணிக்கும் காசினி கீரை

ஒவ்வொரு இதழிலும் மூலிகை சமையல் பகுதியில் நம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் கீரை உள்ளிட்ட மூலிகைக் குணம் கொண்ட காய்கறிகள் பற்றி அறிந்து வருகிறோம். கீரைகளின் மருத்துவக் குணங்களை சிலர் படித்து அறிந்து, உபயோகித்து, எங்களிடம் தொடர்புகொண்டு தங்கள் கருத்துக்களைக் கூறி வருகின்றனர். சிலர் இவை எங்கு கிடைக்கும் என்று ஆர்வத்துடன் கேட்கின்றனர்.

இவை நமக்கு அருகிலேயே நம் சுற்றுப்புறங்களில் கிடைக்கின்றன. கீரைகளைப் பயன்படுத்தி உணவின் மூலம் நோய் வராமல் பாதுகாப்பதே நமது நோக்கம்.

கீரைகளைப் பற்றி மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பது கொஞ்சம் ஆறுதலான விஷயமாக உள்ளது.

இந்த இதழில் காசினிக் கீரை என அழைக்கப்படும் காணாம்கோழிக் கீரை பற்றி தெரிந்துகொள்வோம்.

இந்த கீரை புளிச்சக் கீரை வகையைச் சார்ந்தது. மூலிகை மருத்துவத்தில் இதற்கு அதிக முக்கியத்துவம் உண்டு. நல்ல சுவையுடைய கீரையாகும்.

உடல் சூடு குறைய

தற்போது கோடைக் காலம் என்பதால் வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும். இதனால் உடலானது அதிக சூடடைகிறது. மேலும் பல வெப்ப நோய்கள் தாக்க ஏதுவாகிறது. இன்னும் சிலருக்கு குளிர்காலத்தில் கூட உடம்பு அதிக சூடாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் தண்ணீர் அருந்தினாலும் சூடு குறையாமல் இருக்கும். இவ்வாறு எப்போதும் உஷ்ணமாக இருப்பவர்களுக்கு காசினிக் கீரை சஞ்சீவியாக உதவுகிறது.

காசினிக் கீரையோடு தூதுவளைக் கீரையையும் சேர்த்து கூடவே பாசிப்பருப்பு கலந்து வேகவைத்து நன்றாக கடைந்து அல்லது மிக்ஸியில் இட்டு அரைத்து சாதத்துடன் சேர்த்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடல் காங்கை என்னும் உடல் சூடு தணிய இதுவே நல்ல கீரை என்கின்றனர் சித்தர்கள்.

உடல் எடை குறைய

சிலரின் உடலானது நன்கு குண்டாக காணப்படும். இவர்களால் அதிக தூரம் நடக்க முடியாது. வேகமாக செயல்பட முடியாமல் தவிப்பார்கள். ஓல்லியாக இருப்பவர்களைப் பார்த்து ஏக்க மூச்சு விடுவார்கள். சில சமயங்களில் உடல் எடையைக் குறைக்கிறேன் என்று உணவு சாப்பிடாமல் பட்டினியாக இருப்பார்கள். சிலர் பல உடற்பயிற்சி செய்தும் உடல் எடை குறையவில்லை என்பார்கள். இதற்கு பல காரணங்கள் உள்ளன.

உடம்பில் அதிகம் நீர் சேர்வதால் உடம்பு பெருத்து காணப்படும். இவர்களுக்கு எந்த வகையான மருந்து கொடுத்தாலும் உடல் எடை குறையாது. இவர்கள் காசினிக் கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற நீரை நீக்குவதுடன் உடலை சீராக வைக்க உதவும்.

மேலும் இந்தக் கீரையை நீரில் கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் உடல் எடை குறையும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு

சர்க்கரை நோயாளிகளுக்கு காசினிக் கீரை ஒரு அற்புத மருந்தாகும். உணவு, தூக்கம், உடற்பயிற்சி இவை சரியாக இல்லாததால் சர்க்கரை என்னும் நீரழிவு நோய் உருவாகிறது. மேலும் பரம்பரை மற்றும் சில காரணங்களாலும் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

காசினிக் கீரை, சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து விடுபடவைக்கும்.

காசினிக் கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு, தினமும் காலை வேளையில் ஒரு டம்ளர் வெந்நீரில் 1 ஸ்பூன் அளவு கலந்து வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

பெண்களுக்கு

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதல், அதிக உதிரப்போக்கு இவற்றிற்கு காசினிக் கீரை நல்ல மருந்து.

காசினிக் கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.

அல்லது காசினிக் கீரையை கடைந்து மதிய உணவில் வாரம் இருமுறை சேர்த்து சாப்பிட்டு வந்தால் அதிக உதிரப்போக்கு குறையும்.

ஆறாத புண் குணமாக

சிலருக்கு புண்கள் ஏற்பட்டால் எளிதில் ஆறாது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புண்கள் ஏற்பட்டால் சில சமயங்களில் அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு சென்றுவிடும். இதற்கு காசினிக் கீரையை நன்கு அரைத்து புண்ணின் மேல் கனமாக பற்று போட்டு கட்டி வந்தால் வெகு விரைவில் புண்கள் ஆறிவிடும்.

இரத்தத்தை சுத்தப்படுத்த

இன்றைய நவீன முறை உணவு வகைகளால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் இரத்தத்தின் வீரியம் குறைந்து போகிறது. மேலும் தூய்மையான பிராணவாயுவும் கிடைப்பதில்லை. மன அழுத்தம் போன்ற காரணங்களால் உடலில் பித்தம் அதிகரித்து பித்த நீர் இரத்தத்தில் கலந்து இரத்தம் மாசுபடுகிறது. இதனால் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைகிறது.

இதற்கு காசினிக் கீரையை பாசிப்பருப்புடன் வேகவைத்து கடைந்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடைந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தாதுவை விருத்தி செய்ய

தாதுவை விருத்தி செய்யும் குணம் காசினிக் கீரைக்கு உண்டு. காசினிக் கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

இதன் வேர் காய்ச்சலைப் போக்கி உடலுக்கு வலு கொடுக்கும். அதிக உயிர்ச்சத்து கொண்ட கீரை இது.

இத்தகைய பயனுள்ள கீரையை அடிக்கடி பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழலாம்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நண்பர்களே காசினி கீரை பற்றிய தகவல் தேவை Empty Re: நண்பர்களே காசினி கீரை பற்றிய தகவல் தேவை

Post by இளவரசன் Wed Nov 18, 2009 5:16 pm

நண்பர்களே காசினி கீரை பற்றிய தகவல் தேவை 677196 நண்பர்களே காசினி கீரை பற்றிய தகவல் தேவை 677196 நண்பர்களே காசினி கீரை பற்றிய தகவல் தேவை 677196 \

கேட்டவுடன் கொடுத்து அசத்தீட்டீங்க...

அருமை தாமு நண்பர்களே காசினி கீரை பற்றிய தகவல் தேவை 677196 நண்பர்களே காசினி கீரை பற்றிய தகவல் தேவை 677196 நண்பர்களே காசினி கீரை பற்றிய தகவல் தேவை 677196
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

நண்பர்களே காசினி கீரை பற்றிய தகவல் தேவை Empty Re: நண்பர்களே காசினி கீரை பற்றிய தகவல் தேவை

Post by தாமு Wed Nov 18, 2009 5:18 pm

நன்றி -- ஹெல்த்து சாய்ஸ் நண்பர்களே காசினி கீரை பற்றிய தகவல் தேவை 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நண்பர்களே காசினி கீரை பற்றிய தகவல் தேவை Empty Re: நண்பர்களே காசினி கீரை பற்றிய தகவல் தேவை

Post by தாமு Wed Nov 18, 2009 5:18 pm

நன்றி இள நண்பர்களே காசினி கீரை பற்றிய தகவல் தேவை 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நண்பர்களே காசினி கீரை பற்றிய தகவல் தேவை Empty Re: நண்பர்களே காசினி கீரை பற்றிய தகவல் தேவை

Post by ராஜா Wed Nov 18, 2009 5:21 pm

நண்பர்களே காசினி கீரை பற்றிய தகவல் தேவை 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நண்பர்களே காசினி கீரை பற்றிய தகவல் தேவை Empty Re: நண்பர்களே காசினி கீரை பற்றிய தகவல் தேவை

Post by தாமு Wed Nov 18, 2009 5:28 pm

நண்பர்களே காசினி கீரை பற்றிய தகவல் தேவை 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நண்பர்களே காசினி கீரை பற்றிய தகவல் தேவை Empty Re: நண்பர்களே காசினி கீரை பற்றிய தகவல் தேவை

Post by செரின் Mon Nov 30, 2009 3:36 pm

நன்றி தாமு
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

நண்பர்களே காசினி கீரை பற்றிய தகவல் தேவை Empty Re: நண்பர்களே காசினி கீரை பற்றிய தகவல் தேவை

Post by ராஜா Wed Dec 02, 2009 6:02 pm

இந்த காசினி கீரை இங்கு கிடைக்குமா தல , இங்கு இதை எப்படி சொல்லுவார்கள் ?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நண்பர்களே காசினி கீரை பற்றிய தகவல் தேவை Empty Re: நண்பர்களே காசினி கீரை பற்றிய தகவல் தேவை

Post by தாமு Fri Dec 04, 2009 5:06 am

காசினிக் கீரை சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். சூடு தணிக்கும்.


காசினிக் கீரையை சாப்பிட்டு வந்தால் ஈரல் வலுப்படும், ரத்தம் சுத்தப்படுத்தப்படும்.

நண்பர்களே காசினி கீரை பற்றிய தகவல் தேவை 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நண்பர்களே காசினி கீரை பற்றிய தகவல் தேவை Empty Re: நண்பர்களே காசினி கீரை பற்றிய தகவல் தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum