புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள் Poll_c10மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள் Poll_m10மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள் Poll_c10 
284 Posts - 45%
heezulia
மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள் Poll_c10மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள் Poll_m10மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள் Poll_c10மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள் Poll_m10மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள் Poll_c10மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள் Poll_m10மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள் Poll_c10மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள் Poll_m10மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள் Poll_c10 
19 Posts - 3%
prajai
மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள் Poll_c10மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள் Poll_m10மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள் Poll_c10மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள் Poll_m10மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள் Poll_c10மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள் Poll_m10மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள் Poll_c10மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள் Poll_m10மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள் Poll_c10மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள் Poll_m10மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள்

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 14, 2016 1:12 pm

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
---
‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்பது போல
சூரியன் – புதன் சேர்க்கையை ஜாதகத்தில் பெற்றவர்கள்,
இளம் வயதிலேயே அபாரமான மூளை பலத்தோடு இருப்பார்கள்.
நிர்வாகத் திறனோடு கூர்மையான புத்தியும் சேர்ந்திருக்கும்.
சூரியன் – புதன் சேர்க்கை என்பது, எதிலுமே நிபுணத்துவத்தைக்
கொடுக்கும் அமைப்பாகும்.
-
குறிப்பாக லக்னத்திலும், நான்கு, ஏழு, எட்டு மற்றும் பன்னிரெண்டாம்
இடங்களிலும் இந்த இரு கிரகங்கள் அமரும்போது இன்னும் நன்றாக இருக்கும்.
-
மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள் K84WcdpQs6xbQ7z8mwRQ+24

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 14, 2016 1:13 pm

இவர்கள் சூரியனின் ஆளுமையும், தலைமைக் குணமும், புதனின் நுட்பமான புத்தியும், நிபுணத்துவமும் பெற்றுத் திகழ்வார்கள். நாடாளும் யோகமும், மக்களிடம் மதிப்பும் இயல்பாகக் கிடைக்கும். கஷ்டப்படாத ஜீவனமும், சுகமான வாழ்க்கையும் வாழ்வார்கள். சிறிய வயதிலேயே தனித்துச் செயல்படுவார்கள். பாடநூலைத் தாண்டி நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்வார்கள். இளம் வயதில் நூலகமே கதி என்று கிடப்பார்கள். இந்த அமைப்பானது ஏதேனும் ஒரு முயற்சியை அளித்துக் கொண்டேயிருக்கும். எதையாவது சாதிக்கும் வைராக்கியத்தோடு வலம் வரச் செய்யும். அநியாயத்தை தட்டிக் கேட்கத் தயங்க மாட்டார்கள். மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு சிந்திப்பார்கள். புதனும், சூரியனும் இணைந்தால் எதிலுமே தீவிரமாக ஈடுபடுவார்கள்.

மிதுன லக்னத்தின் அதிபதியான புதன், லக்னத்திலேயே சூரியனுடன் சேர்ந்து நிற்பது சிறப்பு. சேவகாதிபதி சூரியனுடன் புதன் சேர்ந்திருப்பது என்பது எதிலும் ஒரு நுணுக்கத்தை கொடுக்கும். புத்தி சாதுர்யமும், தைரியமும், சுறுசுறுப்பும் கொடுத்து வழி நடத்தும். பல்வேறு விதமான திறமைகளோடு இவர்கள் விளங்குவார்கள். இளைய சகோதரர்கள் மிகவும் அனுசரணையோடு இருப்பார்கள். அவர்களோடு சேர்ந்து தொழில், வியாபாரம் தொடங்குவார்கள். பளிச் தோற்றத்தோடும், அனுபவ முதிர்ச்சியான முகக் களையோடும் பொலிவோடு இருப்பார்கள்.

கடக ராசியான இரண்டாம் இடத்தில் புதனுடன் மூன்றுக்குரிய சூரியன் சேர்ந்திருந்தால், பேச்சால் ஏதேனும் ஒரு பிரச்னை வந்தபடி இருக்கும். சூரியன் இங்கு பகை பெற்றிருப்பதால், கண்வலி மற்றும் கண்ணில் ஏதேனும் தொந்தரவு இருந்த படியே இருக்கும். கண்ணில் சிறு பிரச்னை என்றாலும் உடனே கவனிக்க வேண்டும். சிறு சிறு விபத்துகள் ஏற்பட்டு பல்லில் பாதிப்பு உண்டாகும். அரசால் ஏதேனும் ஆபத்து வரும். தேவையற்று வீண்பழிகளையும் வழக்குகளையும் சந்திக்க நேரும். சிறுவயதில் படிப்பு தடைபட்டு, பிறகு உயர்கல்வி நன்றாக அமையும். சிலருக்கு ஐந்து வயது வரை பேச்சு திக்கி, பிறகு சரியாகும். இவர்கள் பெரியோர்களை மதிக்க வேண்டும். வீண் செலவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஒருபோதும் கூட்டுத் தொழிலில் ஈடுபடக் கூடாது.

மூன்றாம் இடமான சிம்மத்தில் சூரியனும் புதனும் சேர்ந்திருந்தால், வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். இளம் வயதிலேயே வீடு, மனை வாங்கி செட்டில் ஆகி விடுவார்கள். சூரியன் இங்கு சிம்மத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் எளிதாக அரசுப் பதவியில் அமர்வார்கள். மிகச் சிறந்த ஆலோசகர்களாகவும் வழிகாட்டிகளாகவும் திகழ்வார்கள். நீண்ட ஆயுள் உண்டு. பலர் சுய தொழில் தொடங்கி முன்னேறுவார்கள். மக்கள் செல்வாக்கு இருப்பதால் அரசியலிலும் சிலர் ஈடுபடுவார்கள். போகத்தில் மிகவும் ஈடுபாட்டோடு இருப்பார்கள்.

கன்னி ராசியில் லக்னாதிபதியான புதன் உச்சம் பெறுகிறார். அப்படி உச்சம் பெற்ற புதனோடு மூன்றாம் இடத்திற்குரிய சூரியன் சேருகிறார். இந்த அமைப்பு உள்ளவர்கள், மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்திருந்தாலும் நல்ல நிலைக்கு முன்னேறுவார்கள். தாயார் ஜீனியஸாக இருந்து வழிநடத்துவார்கள். இவர்கள் அன்னையைப் போற்றுவார்கள். தங்களைச் சுற்றியிருப்பவர்களிடமிருந்து வித்தியாசப்படுவார்கள். சொந்தத் தொழிலோ, வேலையோ, எதுவாக இருந்தாலும் சிரமமின்றி கிடைக்கும். புத்தகம் எழுதுவதில் மிகவும் ஆவலோடு ஈடுபடுவார்கள். அரசியல்வாதிகளின் ஆதரவு எப்போதும் உண்டு. பயணங்களை சுகமாக மேற்கொள்வார்கள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 14, 2016 1:15 pm

ஐந்தாம் இடமான துலாம் ராசி, சூரியனுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானம். இங்கு லக்னாதிபதியும், சுகாதிபதியுமான புதனுடன் மூன்றுக்குரிய சூரியன் அமர்கிறார். இந்த இடத்தில் சூரியன் நீசமாகிறார். இதனால் இவர்கள் எப்போதும் பதற்றமாகவே இருப்பார்கள். சொந்த பந்தங்களுக்கு எவ்வளவு நல்லது செய்தாலும், கெட்ட பெயரே மிஞ்சும். பூர்வீகச் சொத்தில் பாகப் பிரிவினைகளால் பிரச்னைகளும், பாரபட்சமும் இருக்கும். இவர்களுக்கு குழந்தை பாக்கியம் சற்றே தாமதமாகக் கிடைக்கும். பெண் குழந்தைகளால் விசேஷமான அதிர்ஷ்ட பலன்கள் கிட்டும். கனவுத் தொல்லைகளால் அவதிப்படுவார்கள். உறக்கமின்மையும் தொடரும். சொந்த ஊரிலிருந்து வெளியூருக்கு வந்தால் இன்னும் நன்றாக முன்னேறலாம்.

ஆறாம் இடமான விருச்சிகம், லக்னாதிபதியான புதனுக்கு பகை வீடாகும். ஆனால், சூரியனுக்கு விசேஷமான வீடு. லக்னாதிபதி ஆறாம் வீட்டில் இங்கு சூரியனோடு சேர்க்கை பெற்று மறைவதால், இவர்கள் சரியான அவசரக் குடுக்கையாக இருப்பார்கள். கல்விப் புலமையும் அறிவுக் கூர்மையும் மிகுந்திருக்கும். ஆனால் இடம், பொருள், ஏவல் அறிந்து பேசத் தெரியாது. ஆட்சி மட்டத்தில் செல்வாக்கோடு திகழ்வார்கள். சைனஸ் தொந்தரவு எப்போதும் இருக்கும். கழுத்து வலி, எலும்புத் தேய்வு என்றெல்லாம் சிரமப்படுவார்கள். சூரியன் ஆறாம் இடத்தில் இருப்பதால், நான்கு ரூபாயை வைத்துக்கொண்டு நானூறு ரூபாய் பொருளை விலை பேசுவார்கள். இவர்களுக்கு எதிரிகளே இவர்கள்தான். இவர்களே ஏதாவது சொல்லி மாட்டிக் கொள்வார்கள். பொருளாதாரத்தில் ஏதேனும் ஏற்ற இறக்கங்கள் இருந்தபடி இருக்கும். தனுசு ராசியில் லக்னாதிபதியான புதன் அமர்ந்து கொண்டு ஏழாம் பார்வையாக மிதுன லக்னத்தைப் பார்க்கிறார்.

அதே சமயம், மூன்றாம் இடத்திற்கு அதிபதியான சூரியன் ஏழாம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். ஏழு என்பது வாழ்க்கைத்துணைக்குரிய ஸ்தானமாகும். இங்கு இவ்விரு கிரகங்களும் அமரும்போது வாழ்க்கைத்துணையோடு ஏதேனும் கருத்து வேறுபாடு வந்தபடி இருக்கும். வாழ்க்கைத்துணைக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்னைகள் இருந்தபடி இருக்கும். கண்களில் சிறிய பிரச்னை என்றாலும் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. கூட்டுத் தொழில், வியாபாரம் சரிவராது. மற்றபடிக்கு இந்த இடமும் சாதகமான பலன்களையே தரும். பணவரவோ, செல்வாக்கோ கொஞ்சம் கூட குறையாது. விட்டுக் கொடுப்பதன் மூலமாக சில விஷயங்களை சரிசெய்து கொள்ளலாம் என்பதை நன்கு உணர்ந்தாலே போதுமானது.

எட்டாம் இடமான மகர ராசியில் லக்னாதிபதியான புதனும், சூரியனும் சேர்ந்து இருப்பது நல்லதுதான். வாழ்க்கை பிரச்னை இல்லாமல் நகரும். நல்ல விஷய ஞானம் இருக்கும். ஏதேனும் ஒன்றில் நிபுணத்துவமும் இருக்கும். ஆனால், எல்லாம் காலம் கடந்த பின்னரே கிட்டும். இவர்கள் எப்போதும் அலைச்சல், டென்ஷன் என்றுதான் இருப்பார்கள். கடந்து போன விஷயங்களை நினைத்தே வருந்துவார்கள். இதனாலேயே எதிலும் திருப்தியுற மாட்டார்கள். எல்லா விஷயத்தைப் பற்றியும் தெரிந்து வைத்திருப்பார்கள். சகலகலா வல்லவர்களாக விளங்குவார்கள். ஆனால், என்ன… எவ்வளவு பணம் இருந்தாலும் வீண் செலவு செய்துவிட்டு வெறுங்கையோடு விழிப்பார்கள்.

ஒன்பதாம் இடமான கும்ப ராசியில், பிதுர்க்காரகனான சூரியனோடு, லக்னாதிபதியான புதன் அமர்ந்தால் தந்தையோடு நெருக்கமாக இருக்க மாட்டார்கள். ஏதேனும் கருத்து மோதல் இருந்தபடியே இருக்கும். தந்தையைவிட தான் வித்தியாசப்பட வேண்டும் என்று முயற்சித்து அப்படியே இருப்பார்கள். திடீர் பயணங்கள் செய்தபடி இருப்பார்கள். அலைச்சலால் லாபம் உண்டு. நான்கு இடம் அலைந்துதான் சம்பாதிக்க முடியும். ஆனால் சேமிப்புகள் அதிகம் இருக்காது.

பத்தாம் இடமான மீன ராசியில் புதன் நீசமாகிறார். இங்கு சூரியன் புதனோடு சேர்க்கை பெற்று அமர்வதால், பொதுவாக ஜீவகாருண்ய சிந்தனை மேலோங்கியிருக்கும். உதவி என்றால் முதல் ஆளாக நிற்பார்கள். எதிலும் தடாலடியாக முடிவெடுப்பார்கள். அரசியலில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள். எம்.எல்.ஏ., எம்.பி. என்று ஆவார்கள். பலர் சி.ஏ. படித்துவிட்டு ஆடிட்டர் ஆவார்கள். அதேபோல ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறும் திறமையும் இவர்களுக்கு உண்டு. அந்த அளவிற்கு இங்கு கிரகங்கள் வலிமையாக நின்று பலன்களை அள்ளித் தரும்.

மேஷத்தில் சூரியன் உச்சம் பெற்று அமர்கிறார். அதாவது மூன்றுக்குரிய சூரியன் உச்சம் பெறுவதால் இளைய சகோதரர்களால் எப்போதும் நன்மை உண்டு. இது 11ம் இடமாகவும் அமைவதால் மூத்த சகோதர, சகோதரிகளாலும் நன்மைகள் அதிகமுண்டு. இவர்கள் எந்தத் தொழிலைத் தொடங்கினாலும் அதில் எப்பாடுபட்டாவது முன்னேறுவார்கள். துணிவும் ஈடுபாட்டுணர்வும் இவர்களோடு பிறந்தது.

ரிஷபமான பன்னிரெண்டில் சூரியனும் புதனும் இடம்பெற்றிருந்தால் சகல துறைகளைக் குறித்த ஞானமும் இவர்களிடத்தில் நிரம்பியிருக்கும். அரசாங்க அலுவலகத்திலிருந்து ஓய்வு பெற்றாலும், இவரைத் தேடி வந்து ஆலோசனை பெற்றுச் செல்வார்கள். ஆத்மகாரகனான சூரியனோடு புதனும் சேர்ந்தால் எங்கேனும் தீர்த்த யாத்திரை சென்றபடி இருப்பார்கள். ஆன்மிகப் புத்தகங்களை எழுதிக் குவிப்பார்கள். மகான்களின் ஜீவசமாதிகளை தரிசித்தபடி இருப்பார்கள்.

பொதுவாகப் பார்த்தால், இது ஒரு நல்ல அமைப்புதான். ஆனால், கிரகங்கள் நீசமோ அல்லது பகையோ பெறும்போது பாதிப்புகள் ஏற்படும். அப்படியான பாதிப்புகள்தான் மிதுன லக்னத்தை மையமாகக் கொண்ட சூரியன் – புதன் சேர்க்கை ஏற்படும்போதும் நிகழ்கிறது. இந்த பாதிப்பிலிருந்து மீண்டெழ, மதுரைக்கு அருகேயுள்ள திருமோகூரில் அருள்பாலிக்கும் காளமேகப் பெருமாள் ஆலயத்திலுள்ள பெருமாளையும், இத்தலத்தின் மிகவும் விசேஷ தெய்வமான சக்கரத்தாழ்வாரையும் தரிசியுங்கள்.
-
===============================
ஓவியம்: மணியம் செல்வன்
குங்குமம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 15, 2016 7:24 am

ஒர் உண்மை தெரியுமா ?

ஜாதக கட்டங்களில் 75 % , ஜாதகர்களுக்கு , சூரியனும் புதனும் ஒரே கட்டத்தில்தான் இருப்பார்கள் .

ஏன் தெரியுமா ?

பால்வீதியில் , ( Milky way --Our galaxy ) சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கிரகம் புதன் .
மேலும் சூரியனை சுற்றும் ,புதனின் சுயற்சியும் அதி வேகம் .
அதாவது சூரியனும் புதனும் பூமியும் நேர்கோட்டில் இல்லாமல் இருக்கும் நேரம் குறைவு

சூரியனும் புதனும் ஒரே கட்டத்தில் இருந்தால் , அவர்கள் சிறிது புத்திசாலிகளாகவே இருப்பார்கள்

இது நான் நடைமுறையில் கண்டது !புன்னகை புன்னகை புன்னகை a ram

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 15, 2016 8:10 am

T.N.Balasubramanian wrote:ஒர் உண்மை தெரியுமா ?

ஜாதக கட்டங்களில் 75 % , ஜாதகர்களுக்கு , சூரியனும் புதனும் ஒரே கட்டத்தில்தான் இருப்பார்கள் .

ஏன் தெரியுமா ?

பால்வீதியில் , ( Milky way --Our galaxy ) சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கிரகம் புதன் .
மேலும் சூரியனை சுற்றும் ,புதனின் சுயற்சியும் அதி வேகம் .
அதாவது சூரியனும் புதனும் பூமியும் நேர்கோட்டில் இல்லாமல் இருக்கும் நேரம் குறைவு

சூரியனும் புதனும் ஒரே கட்டத்தில் இருந்தால் , அவர்கள் சிறிது புத்திசாலிகளாகவே இருப்பார்கள்

இது நான் நடைமுறையில் கண்டது !புன்னகை புன்னகை புன்னகை a ram

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1193571
-
அரிய தகவல் பகிர்வு...
-
கைவசம் இருந்த மகன் மற்றும் இரண்டு பேத்திகளின்
ஜாதகங்களை பார்வையிட்டேன்...
சூரியனும் புதனும் ஒரே கட்டத்தில்தான் இருக்கிறார்கள்!
-
மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள் 1571444738

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 15, 2016 10:09 am

சிறிது வானியல் (astronomy )
சிறிது ஜோதிடம் ....(astrology )
சிறிது ஆராய்ச்சி...(analysis )
அவ்வளவுதான் அய்யா !
எனக்கும் மகிழ்ச்சி தான் , நன்றி ayyasami ram .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 15, 2016 10:17 am

T.N.Balasubramanian wrote:ஒர் உண்மை தெரியுமா ?

ஜாதக கட்டங்களில் 75 %  , ஜாதகர்களுக்கு , சூரியனும் புதனும் ஒரே கட்டத்தில்தான் இருப்பார்கள் .

ஏன் தெரியுமா ?

பால்வீதியில் , ( Milky way --Our galaxy ) சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கிரகம் புதன் .
மேலும் சூரியனை சுற்றும் ,புதனின் சுயற்சியும் அதி வேகம் .
அதாவது சூரியனும்  புதனும் பூமியும் நேர்கோட்டில் இல்லாமல் இருக்கும் நேரம் குறைவு

சூரியனும் புதனும் ஒரே கட்டத்தில் இருந்தால் , அவர்கள் சிறிது புத்திசாலிகளாகவே இருப்பார்கள்

இது நான் நடைமுறையில் கண்டது !புன்னகை புன்னகை புன்னகை a ram

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1193571

நிஜமாகவா ஐயா, அப்போ மத்தவா மக்கா இருப்பாளா? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 15, 2016 10:24 am

நம்முடை மற்ற ஈகரை உறவுகளும் , இது போலுள்ளதா ,
என்று அவரவர் ஜாதகங்களைப் பார்த்து கூறினால் ,
உண்மைத் தன்மை வெளிப்படும் என்றே நினைக்கிறேன் .

எனக்கு தெரிந்த ஐவர் ஜாதக ஆராய்ச்சியில் 60 % உண்மை .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 15, 2016 10:28 am

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:ஒர் உண்மை தெரியுமா ?

ஜாதக கட்டங்களில் 75 %  , ஜாதகர்களுக்கு , சூரியனும் புதனும் ஒரே கட்டத்தில்தான் இருப்பார்கள் .

ஏன் தெரியுமா ?

பால்வீதியில் , ( Milky way --Our galaxy ) சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கிரகம் புதன் .
மேலும் சூரியனை சுற்றும் ,புதனின் சுயற்சியும் அதி வேகம் .
அதாவது சூரியனும்  புதனும் பூமியும் நேர்கோட்டில் இல்லாமல் இருக்கும் நேரம் குறைவு

சூரியனும் புதனும் ஒரே கட்டத்தில் இருந்தால் , அவர்கள் சிறிது புத்திசாலிகளாகவே இருப்பார்கள்

இது நான் நடைமுறையில் கண்டது !புன்னகை புன்னகை புன்னகை a ram

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1193571

நிஜமாகவா ஐயா, அப்போ மத்தவா மக்கா இருப்பாளா? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1193601

மக்கு என்று சொல்லி இருக்கேனா நான் ?
எந்தன் வார்த்தை பிரயோகங்களை உன்னிப்பாக கவனியுங்கள் .
சிறிது புத்திசாலித்தனம் கூடவே இருக்கும் .

எனக்கு ஒரு சந்தேகம் வருகிறது .... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 15, 2016 10:32 am

ஒரு academic interest தான் க்ரிஷ்ணாம்மா .

உங்கள் நால்வர் ஜாதகங்களை கவனியுங்கள் .

ஒரு feedback கொடுங்கள் . அவசியமெனில் என் கணிப்பை நான் மாற்றிக் கொள்ளலாம் அல்லவே ?

நன்றி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக