புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_c10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_m10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_c10 
171 Posts - 80%
heezulia
ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_c10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_m10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_c10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_m10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_c10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_m10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_c10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_m10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_c10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_m10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_c10 
3 Posts - 1%
கோபால்ஜி
ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_c10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_m10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_c10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_m10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_c10 
1 Post - 0%
prajai
ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_c10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_m10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_c10 
1 Post - 0%
Pampu
ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_c10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_m10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_c10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_m10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_c10 
336 Posts - 79%
heezulia
ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_c10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_m10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_c10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_m10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_c10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_m10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_c10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_m10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_c10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_m10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_c10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_m10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_c10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_m10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_c10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_m10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_c10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_m10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Wed Feb 10, 2016 9:28 am

First topic message reminder :

ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை )-1


சமீபத்தில் பெய்த அதிகப்படியான மழையாலும் வேறு காரணங்களாலும் ,
ஏற்ப்பட்ட வெள்ளப்பெருக்கிளால் பல்வேறு இடங்களில் வீடுகள் வெள்ளக்காடானது .
கீழ்தளத்தில் இருந்த வீடுகளில் இருந்த வீடுகளும் , ஒட்டு வீடுகளும் ,குடிசை வீடுகளும் அத்தனையும்  வெள்ளத்தால் சூழ்ந்தது .
அவைகளில் இருந்த அனைத்து பொருள்களும் அடியோடு நாசமானது .
இத்தகைய நிலை சென்னை போன்ற பெரு நகரில் மட்டுமல்லாது தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களிலும் நிகழ்ந்தது .
அனைத்து நிலை மக்களும் அவரவர்கள் வாழ்ந்த நிலைகேறப்ப,
மிகுந்த இழப்பு அடைந்தனர் .

அவர்களின் அத்தனை பொருள் இழப்பின் துயத்தின் இடையே ,
எனக்கு வேறுவிதமான கவலையும் சிந்தனையும் வருத்தியது .
சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத
ஒத்துழைப்புடன் தமிழர்களின் பாரம்பரிய அறிவையும் ,ஞானத்தையும்
வெளிப்படுத்திய தமிழ் சித்தர்கள் எழுதிய சுவடிகள் காலத்தால் அழியாது
எஞ்சி இருக்கும் சுவடிகளைத்தேடி நீண்ட நெடும் பயணம் தமிழகமெங்கும் மேற்கொண்டு  சுமார் ஒரு லக்ஷம் சுவடிகளைதேடி ,தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்திடம் ஒப்படைத்து ,அவை அத்தனையும்
மினாக்கம் செய்யப்பட்டது .
அந்த சுவடிகள் தேடிய பயணத்தின்போது நான் கண்ட உண்மைகள் சில

1) பனை ஓலைகளின் அதிகபட்ச வாழ்நாள் ௨௦௦ -௨௫௦  ஆண்டுகள் தான் ,

2) ஒவ்வரு ஆண்டும் புதிய பனை ஓலைகளை ஆடி மாதத்தில் சேகரம் செய்து பதப்படுத்தி ,
அதில் பழைய சுவடிகளில் இடம் பெற்ற நூல்களை பிரதி எடுப்பார் .,அது படி எடுத்தல் எனப்படும்

3) பிறகு பிரதி எடுக்கப்பட்ட பழைய சுவடிகளை
மரியாதையுடன், சப்பரம் எனும் அலங்கரிக்கப்பட்ட
சிறு தேரில் வைத்து எடுத்துச் சென்று  ,
ஆடி 18 அன்று அதை ஆற்றில் ஓடும் நீரில் இடுவர் .

4) அச்சு இயந்திரங்கள் வந்ததால் அச்சிட்ட புத்தகங்கள் ஆரம்ப பாடசாலைகளில் இடம்பெற்றதால் , ஓலைச் சுவடி படிக்கும் ,ஆட்களும் ,அதை எழுதும் ஆட்களும் அருகிப்போயினர்

5) எனவே பின்பு பிரதி எடுக்காமலேயே ,அதை சப்பரத்தில் இட்டு ஆற்றில் இட்டனர் .

6) பின்பு பழைய சுவடிகள் இல்லாமல் போனதால்
வெறும் சப்பரத்தை மட்டும் ஆடி 18 அன்று ஆற்றிற்கு இழுத்துச் சென்றனர் .

7)நான் சிறுவனாக இருந்தபோது ,வெறும் சப்பரத்தை அலங்கரித்து சிதம்பரத்தில் அங்கே இருந்த பாலமான் எனும் ஆற்றிற்கு சென்றதுண்டு .
(1960)
8) பிறகு படிப்படியாக சப்பரமே இப்போது காணாமல் போனது ,

இவ்வாறு படிஎடுத்த சுவடிகளை மரியாதையுடன் ஆற்றில் விடும் சடங்கும் ,படி எடுக்க ஆட்கள் இல்லாமல் போனதால் ,படிஎடுக்கமலேயே ,சுவடிகளை ஆற்றில் இட்டு ,பின்பு சுவடியே இல்லாமல் சப்பரம் இட்டு ,தற்போது சுவடிகளும் இல்லை ,கூடவே சப்பரமும் இல்லை என்று இப்போது  ஆகிவிட்டது .


இன்னம் ஒரு குறிப்பிடத்தக்க செய்தி அச்சு இயந்திரம் கண்டுபிடித்து இப்போது சுமார் 200 ஆண்டுகள் ஆகிவிட்டன .எனவே படி எடுத்தும் இப்போது 200ஆண்டுகள் ஆகிவிட்டன .
எழுத்தப்பட்ட பனை ஓலைகளின் வயதும் இப்போது
150-200 ஆண்டுகள் ஆகிவிட்டன .
அவை பொடிப் பொடியாக பயனற்றுப் போக இன்னமும் அதிகப்படியாக பத்து ஆண்டுகளே
எஞ்சி உள்ளன .இன்னமும் தேடுவாரற்று ஒளிந்துக்கிடக்கும்
தமிழர்களின் அத்தனை ஞானமும் அருவும் கொண்ட சுவடிகள் வெகு விரைவில் மொத்தமாக
அழிந்து போகும் அபாயம் உள்ளது .

நான் இந்தக்கட்டுரையின் துவக்கத்தில் வெள்ளைத்தை குறிப்பிடக் காரணம் ,
இன்னமும் தேடப்படாத ஓலைச்சுவடில் எஞ்சி இருப்பது அத்தனை விரைவில் எளிதில்
நெருங்க இயலாத கிராமங்களில் ,முகவரியற்ற சிறிய எளிய கிராமத்து வீடுகளில் மட்டுமே உள்ளது .

எளிதில் நெருங்கி எடுக்கக்கூடியவைகள் அத்தனையும் பத்திரப்படுத்தப்பட்டுவிட்டது
பல்கலைக் கழகத்தில் மட்டுமல்ல பல தனியார் தேடுபவர்களிடம் தான் .

நான் பெரும்பாலும் தேடிஎடத்தது அத்தகைய மிகச் சிறிய கிராமங்களிலும் ,எளிய மக்களிடமும் தான் .
செல்வந்தர்கள் பலர் அதன் மதிப்பு தெரிந்து விற்றுவிட்டனர் .

கிராமங்களின் தான் அவைகள் தங்கள் பாட்டன் ,முப்பாட்டன் நினைவாக அவர்கள் வீட்டுப் பரண்களில் தூங்கிக்கிடக்கிறது

இன்னமும் ஒரு அபாயமும் இருக்கிறது ,அந்த எளிய மக்கள் சற்று வசதிப்பெற்று ஒரு மச்சு வீடுகட்டிப்போகும் போது .,அந்த நாகரீகத்துக்கு ஒத்துப்போகாது என்று பரணில் கிடந்த பழைய சாமான்களை எடுப்பவர்கள் ,ஓலைச் சுவடியை பழவீட்டிலேயே விட்டுச் செல்கின்றனர் .
இதை நான் பயணித்தபோது பல இடங்களில் கண்டேன் .

அந்தப்பழைய வீட்டில் குப்பையிலே சென்று கண்ணீருடன் சிதைந்த சுவடிகளைப் பொருக்கி
இருக்கிறேன் .

இந்த சமீபத்திய வெள்ளம், கீழ்தள வீடுகளில் ,ஒட்டு வீடுகளில் ,குடிசை வீடுகளில் இருந்த சுவடிகள் ,பழமை வாய்ந்த புத்தகங்களை பாழ்ப்படுத்தி இருக்கும் .

எனவே நம்மிடம் இன்னமும் சில ஆண்டுகளே எஞ்சி உள்ளன .

நமது தமிழர் அறிவிற்கும் ,ஞானத்திற்கும் ,மருத்துவத்திற்கும் ,இன்னமும் பல துறைகளில் ,
தமிழர் ஆதிக்கம் செலுத்தினர் எட்ன்று நாம் உரிமைக்கொண்டாட நமக்கு ஆதாரம் தேவை .
ஆதாரமாகக்காட்ட இந்த சுவடிகள் தேவை .

இல்லையேல் அத்தனைக்கும் பலநாட்டவரும் உரிமைக்கொண்டாடி பேட்டண்ட் பெற்றுவிடுவர்

நான் அலைந்துத் தெரிந்து அனுபவித்த ,கண்ட காட்சிகளை பகிர்ந்து கொள்கிறேன் ஆழ்ந்த கவலையுடன் .
இன்னமும் நம் வசம் இருப்பது சில ஆண்டுகளே .
பின் ஒரு நிலை வரும் அப்போது எங்கும் எஞ்சி இராது தமிழரின் எந்த சுவடியும் .

வரும் காலத்திற்கு நமது பாரம்பரிய அறிவை
காத்துக்கொடுப்பது ,தமிழர் ஒவ்வருவரின் கடமை .
நான் உழைக்கத்தயார்  , தோள்கொடுக்க ,துணையாக இருக்க வாரீர்எனக்கேட்டுக்கொள்கிறேன்

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
தலைவர் தமிழ் சித்தர்கள் ஓலைச் சுவடிகள்
ஆய்வு அறக்கட்டளை
புதுச்சேரி

.09/02/2016
i
[




ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 Vzienro7TJSeSmQcWBlS+99
09/02/2016https://www.filepicker.io/api/file/Du8HDIeOS82JjDDUXEO1+googleஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 ?ui=2&ik=9a1e3d31df&view=fimg&th=152c9009b4bcdb58&attid=0

இத்தனையும் ஓலைச் சுவடிகள்தான் ! ஒரு கிராமத்தில் மூட்டை ஒன்றில் கட்டிவைக்கபட்டிருந்த சுவடிகளின் கதியை பார்த்தீர்களா ?
என்னஎன்ன செய்திகள் அதில் இருந்ததோ ? எத்தனை அறிஞர்கள் கரம் தொட்டு எழுதியதோ ?
நம் தலை முறையில் இவைகளைக் காக்கத்தவறிவிட்டோம் !  .
இனியாவது இந்நிலை வேறு எங்கும் ஏற்ப்படுவதர்க்கு முன் அவைகளை மீட்கவேண்டாமா ?
( கண்ணீருடன் அவைகளை அங்கேயே விட்டுவந்தோம் )

[/b]


கிழே இருக்கும் கட்டுரை நான் 2010  எழுதிய கட்டுரையின் ஆரம்பப்பகுதி
இந்த்தனை நாள் நான் தனிப்பட்ட முறையில் அலைந்து திரிந்து ,
இடங்களில் இருக்கும் தம்ழ்ர்களின் அறிவின் எச்சமான ,மிஞ்சிக்கிடக்கும்
பல ஓலைச் சுவடிகளை கண்டு அவைகளை புகைப்படம் எடுத்துள்ளேன் .
இந்த அனுபவங்களை ஈகரை சொந்தங்களுடன் பகிர இருக்கிறேன் .
இந்தக்கட்டுரை ஒரு முகவுரையே .
முதலில் இதுவரை கண்டு தமிழ் பல்கலைக்கழகத்தில் ஒப்படைக்கப்பட்ட சுமார்
100000 சுவடிகள் தேடிய கதையை சொல்லிவிட்டு ,புதிய பயண வரலாற்றை தொடர இருக்கிறேன் .
நண்பர்கள் படிக்கிறீர்கள் என்பதைத் அவ்வப்போது தெரிவித்தால் ,சிரமப்பட்டு எழுதுவதற்கு
சற்றே ஊக்கம் கிடைக்கும் ,
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

உங்களின் அன்பான ஆதரவு கண்டு தொடருகிறேன்




mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Feb 12, 2016 10:49 am

அய்யா உங்களின் அரும் பெறு பணிக்கு என்னால் முடிந்த உதவி செய்கிறேன் மேலும் தங்களின்
பணி சிறக்கவும் வாழ்த்துக்கள்

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Feb 12, 2016 12:34 pm

தாங்கள் இந்த பணி(சேவை) செய்வதற்கு எனது நன்றிகள் ஐயா.. நன்றி நன்றி
தங்களின் பணி மேன்மேலும் வளர்ச்சியும் சிறப்பும் பெற எனது வாழ்த்துக்களும் ஐயா....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மெய்பொருள் காண்பது அறிவு
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Feb 15, 2016 8:57 am

வரலாற்றில் ஓலை சுவடிகளின் பங்கு  - ௧ (   1 )
அண்ணாமலை சுகுமாரன்



வரலாறு என்பதன் அவசியம்  சென்றதையும் ,கடந்து போன இறந்தகாலத்தை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்ப்பதற்காக   மட்டும் அல்ல .  வரலாறின் தேவை  நிகழ்காலத்த்ன் தேவைக்கேற்ப மாறக்கூடியது .  சொல்லப்போனால் வாழ்வின் வளர்ச்ச்யே நாம் புறப்பட்ட இடத்தையும் ,இதுவரை கடந்து வந்த பாதையை நினைவு படுத்திக் கொள்வதிலும் ,அதிலிருந்து பாடங்கள் பெறுவதைப் பொறுத்துத்தான் அமைகிறது .வரலாறு எத்தனை
ஆழமாக பாடங்களை ஒரே ரீதியில் கூறினாலும் அதன் பாடங்களை சரிவர புரிந்து கொள்ளாதவர்கள் வரலாற்றில் இடம் பெறுவதில்ல .

வரலாறுக்கு ஆதாரமான  காலத்தை ஆய்வதற்கு  அந்தக்காலத்தைய இலக்கியமும்  நிகழ காலத்தில் செய்யப்படும் தொல்பொருள் ஆய்வும் முக்கியபங்கு வகிக்கிறது. .அகழ்வாய்வில் பெறப்படும் முடிவுகள் அந்தக் காலத்தய  இலக்கிய செய்திகளோடும், அந்தக் காலத்தய இலக்க்ய செய்திகளை அகழ்வாய்வில் பெறப்படும் சான்றுகளோடும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும் .
அப்போதுதான் ஒரு உறுதியான முடிவுக்கு வரலாற்றின் செய்திப் பற்றி வரஇயலும் .

ஆனால்  உலகின் பெரும்பாலான இடங்களில்  இதுவரை அகழ்வாய்வில்பெறப்பட்ட சான்றுகள இலக்க்யத்தொடு ஒப்பிடப்பட்டு முடிவுகள் பெற ப படவில்லை .காரணம் அங்கே தொல்லிலக்க்யங்கள் கிடைக்கப் பெறவில்லை .

எகிப்த்தில்  பிரமிடுகள் கண்ணுக்கேதிரே இன்னும்  நிற்க்கின்றன. வரலாற்றை பறை  சாற்றுக்றது .
காலத்தை வென்று சான்றுகள் நிற்க்கிறது. ஆனால் ஒரே குறை ஒப்பு நோக்க தொல்லிலக்க்யங்கள்மட்டும் அங்கே  இல்லை .நம் நாட்டிலேயே   கூட  வட இந்தியாவில் சிந்து வெளியில் மொகஞ்சோத்ரோ  ,  ஹாரப்பா அகழ்வாய்வில் கிடைத்த முடிவுகள்
சான்றுகள்  இருக்க்ன்றன .
ஆனால் அந்த ஆய்வை நிலை நிறுத்தும் ஒப்புநோக்கத் தக்க தொல்லிலக்க்யங்கள் தான்  கிடைக்கப் பெறவில்லை .

ஆனால் தமிழ் நாட்டின் நிலையே வேறு மாதிரியானது நேர்மாறானது .
இங்கே  தொல்லிலக்க்யங்கள் நிறைய கொட்டிக்கிடக்க்ன்றன .ஒப்பிட்டுப்பார்க்க , தொல்லிலக்க்யங்கள்கூறும் சான்றுகளை தேடும் தொல்பொருள் ஆய்வுதான் அத்தன இல்லை.

பூம்புகாரின் சிறப்புக்களைக் கூறும் சிலப்பதிகாரம் நம்மிடம் உண்டு .ஆனால் பூம்புகார் இன்னும்ஆழ்கடலில் தான் பத்திரமாக தேடுவாரின்றி  உறங்கிகொண்டு   இருக்கறது .
அங்கே எகிப்த்தில்  பிரமிடுகள், சிந்து வெளியில் மொகஞ்சோத்ரோ  ,  ஹாரப்பா அகழ்வாய்வில் கிடைத்த முடிவுகள் சான்றுகள்  இருக்க்ன்றன .ஆனால்நிலை நிறுத்த இலக்க்யங்கள் வேறு புற சான்றுகள்தான் இல்லை .

ஆனால் தமிழ் நாட்டின் வரலாறை நிலை நிறுத்த எந்த அகழ்வாய்வும் தேவைப்படாத அளவில் நம்ம்ம்டம் மிக முக்கய ஆதாரங்கள் இருக்க்றது.அதுவே வழி வழி வந்த இன்றும் நிலைத்த்ருக்கும்   பழந்தமிழர் மரபு ஆகும் .
தொல்லிலக்க்யங்களில் பேசப்படும் அதே மொழியை இன்றும் வழி வழி யாக பேசவரும் பழந குடிகளான தமிழர் மரபு இன்றும் இருந்து வருகிறது .
இரண்டாயிரம்    ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட அதே இலக்கண விதிப்படி  இன்னும் அதேபோல் பாடல் இயற்ற வல்லமை கொண்ட தமிழர் மரபு இழை இன்னும் அறுபடாமல் வாழ்ந்து வருகிறது .சீரிளமை குறையாமல் தம்ழ குடி வாழ்ந்து வருகிறது ...யாதும் ஊரே
யாவரும் கேளிர் என வாழ்ந்த குலம் இன்னும் வாழ்ந்து வருகிறது .

வாழும் வரலாற்று சின்னங்கள் தான்  தொல் தமழர்கள் .
அவர்களிடமே இன்னும் தொல்லிலக்க்யங்கள் ஓலை சுவடிகளிலே  
 எழுதப்பட்டு ஆண்டாண்டு காலமாக பாதுகாப்பாக  இருக்க்றது , வாழும் தொல்குடிகளும்  இருக்க்ன்றனர்  ஆனால் இதை
அனைவரும் ஒப்புக்கொள்ளும் வகையில் செய்யும் புற சான்றுகளான அகழ்வாய்வுகள் தான் தேவை ..

தமிழர்களான நாம் உண்மையல் அதிர்ஷ்டம் செய்தவர்கள் .ஆயிரம், இரண்டாய்ரம் வருஷத்த்ற்கு முன் உள்ள ஒரு கவியின் உள்ளத்தை    அறியக்கொடுத்து வைத்த்ருக்கிறோம்
.அந்த மொழி இன்னும்அதே வடிவில் இருக்க்றது . இன்னும் அதில் உள்ள சொல்கள்  நமக்கு புரிகிறது .
அதே அர்த்தத்தில் இன்னும்  அந்த சொல்  புழக்கத்தில் இருக்கறது .  

ஆயிரம் வருடத்ர்க்கு முந்தய இத்தாலிய லத்தீன் நூல்கள ,தாய் மொழ்யாக கண்டு வாசிப்பவர் தற்போது இல்லை .ஆயிரம்வருஷத்த்ற்கு முன் இருந்த ஆங்கில  நூல் எதையும் தற்காலத்து ஆங்கிலேயர்களால் படித்து விட முடியாது ..

இது எப்படி தமிழ நாட்டில் மட்டும்நிகழ்ந்தது ?

இதில் தான் தமிழர் தம் தொல்லறிவு வெளிப்படுகிறது .
தன்னைச்சுற்றி இருந்த இயற்கையின் கொடையான செடி கொடி  மரங்கள இவைகளை தனது உணவு மற்றும் உடல் நலம் பேணும் மருத்துவ குணங்களைக் கண்டு அவகளை தக்கவாறு பயன்படுத்த அறிந்த தொல் தமிழ் இனம் ,மன வழி , செவி வழி பெற்ற
கருத்துக்கோவைகளை வரிவடிவில் மாற்ற ஏற்ற சாதனம் ஒன்றை தங்கள் ஆற்றல் மிகு அறிவால்கண்டனர் .

கற்பக விருஷமான பண மரத்தின் ஓலைகளின் பெரும்பயன்பாட்டை         கண்டனர் ..
பனை ஓலைகளில் எழுதப்பட்டவை எந்தவ்த பராமரப்பு இல்லாதபோதும் குறைந்தது  300ஆண்டுகளாவது இருக்கும் திறன் அறிந்தனர் .,தொடர்ந்த பராமரப்பு இருப்பின் ஓலைகளின் ஆயுள் நீடிப்பதையும் கண்டனர் .
இவ்வாறு பழன் தமிழர் தொல் இலக்க்யங்கள்  , அறிவுச்செல்வங்கள் காலம் காலமாக ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டு தொடர்ந்து பாதுகாக்கப்பட்டது வட இந்தியாவில் பனை  ஓலைகள் கிடைக்காத இடங்களில் பத்த்ரங்கள் எனப்படும்  இலைகளில் எழுதப்பட்டது .

.இதுவே தம்ழ நாட்டின் தொல் இலக்க்யங்கள் தொடர்ந்து பாதுகாப் பட்டதன் காரணம் ஆனது .
தமிழின் அன்ற்லிருந்து  இன்றயவரை இருக்கும் சீரிளைமைக்கும் ஓலைகளே ஒருவகையில் காரணம் ஆனது .


தொன்ம  இலக்க்யங்களை ஓலைகளில் பாதுகாத்து படிஎடுத்து  தங்களன் வருங்கால சமுதாயத்ர்க்கு பாதுகாப்பாக தங்கள் மரபின் செல்வங்கள வழங்கியதே இன்றும் அன்றிருந்த மொழ்யும் இலக்கணமும் சொல்களும் இன்னும்  ஜீவனுடன் விளங்குவதற்கு   காரணமாக அமைந்தது .
இன்றும்தமிழின் தொன்மைக்கு சான்றாக நமக்குகிடைத்துள்ள எண்ணற்ற இலக்க்யங்களுக்கும் ,அறிவு சார் நூல்களுக்கும் காரணம் ஓலை சுவடிகளே .நமது ஓலையில் எழுதும் பழக்கமே .ஆகும் .
பனையின் கொடையால் தான் நமக்கு ஜீவனஊள்ள நமது தமிழ மொழி யும்  அதன் தொன்மை இலக்க்யங்களும் கிடைத்துள்ளது .

.
முன்னையோரின் புலமையையும் அவர்களுடைய கல்வி பண்பாட்டுப் பெருமை முதலியவற்றையும் அறிந்து கொள்வதற்குத் துணை நிற்பது ஓலை சுவடிகள் மூலம் அவர்கள் விட்டுச் சென்ற அறிவுசார்ந்த சொத்துக்களேயாகும்.
சென்ற நூற்றாண்டுவரை அவைகளை செல்வமாக மதித்து பூசித்து வந்தனர் .
ஓலைகள் இல்லாத வீடுகளே தம்ழ நாட்டில் இல்லை என ,எல்லா கிராமங்கல்லும் நீக்கமற நிறைந்திருந்தது .
தமிழின் தொன்மையை அறிவதற்குத் துணையாக நிற்கும் சங்க நூல்களைச் சுவடிகளில் தான்   எழுதி தொடர்ந்துபோற்றிப் பாதுகாத்தனர். பனை ஓலையை நன்கு பதப்படுத்தி ஒழுங்குபட நறுக்கிச் சுவடி வடிவில் அமைத்து எழுதினர். இன்றும் தமிழகத்தில்பல்லாயிரக் கணக்கான ஓலைச் சுவடிகள்  தமிழ நாட்டின் கிராமங்களில் பரவலாக கிடந்தது நமது    பண்டையோரின் அறிவின்  நயத்தை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

சீனர் கிரேக்கர், பினிசியர், உரோமர், எபிரேயர், அர்மீனியர், அராபியர் ஆகியோர் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை பைரஸ் என்னும்  ஒருவகை   புல்லையே எழுதப்படும் பொருளாகப் பயன்படுத்தினர். பேப்பர் என்ற சொல்லும் ''பைபரஸ்'' என்னும் சொல்லிலிருந்து உருவானது என்பர். ஆனால் இவைகள் நமது தொன்ம தமழர் பயன்பாட்டில் இருந்த ஓலை சுவடிகளுக்கு தரத்தில்  ஈடாகாது .


பழஞ்சுவடிகளுள் பல போற்றுவாரின்றி அழிந்து போனமையால் நமக்குக் கிடைக்க வேண்டிய பல அரிய நூல்களும் கிடைக்கவில்லை. இலக்கண இலக்கியங்கள், மருத்துவம், சோதிடம், வானசாத்திரம் முதலான பல்வேறு சுவடிகள் இன்னும் அச்சிடப் பெறாத நிலையில் கிராமங்களில்  இருக்கக் கூடும். அவற்றையெல்லாம் தொகுத்து முறைப்படுத்தி
ஆராய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் ..
சுவடிகளைப் படித்து அவற்றைப் படியெடுத்துப் பாதுகாக்கும் அரிய கலையைப் பயிற்றுவிக்க ஆர்வம் கொண்டோர் அருகிப் போனதால் படிஎடுக்கப் படாமலும் , பாதுகாக்கும் முறை அறியாததாலும் கொஞ்சம் கொஞ்சமாக சுவடிகள்  நமது கிராமங்களில் இருந்து  மறையத்தொடங்கின ..
அப்போதுதான்  எஞ்சிய  ஓலை சுவடிகளை காப்ப்ற்றவேண்ட்யதன் அவசியத்த்யும் , அவசரத்தையும் உணர்ந்த மத்திய அரசின் கலாச்சாரத் துறை  2003 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம்  இந்தியா முழுவதும் பரவிக் கிடக்கும்    பழமை வாய்ந்த ஓலை சுவடிகள் , காகித சாசனங்கள் இவைகளைக் காக்க ஒரு  இயக்கம் (  NMM) தொடங்கியது .


இந்த இயக்கம் தமிழ் நாட்டில்   NSS     மாணவர்களைக் கொண்டு அந்தந்த பகுதில் இருந்த  கிளை நூலகர்களக் கொண்டு ஒரு மாபெரும் கணக்கெடுப்பு நடத்தி தமிழ் நாட்டில் மட்டும் சுமார் ஐந்து லக்ஷம் சுவட்கள் சுமார்  16,000  இடங்களில் இருப்பதாக அறிவித்தது .

இன்னும் சுவையான இனிய பல அனுபவங்கள் ஓலையை தேடி நாங்கள்  ஓடிய போது சந்தித்த பெரிய மனிதர்கள்  ,அவர்கள் காட்டிய பெருந்தன்மை   ,தங்களன் பாரம்பர்ய  சொத்தாக பாதுகாத்து வந்த அறிவின் செல்வங்களை நாங்கள்
கொடையாக கேட்டபோது எந்த பொருளாதார எத்ர்ப்பார்ப்பும் இல்லாமல்
முக மலர்ச்ச்சியோடு அவர்கள் தஞ்சை பல்கலைக்கு வழங்க்ய பண்பு ,அப்போது அவர்கள் கட்டிய உபசரிப்பு   இவைகளை வாழ்நாள் முழுதும் மறக்க இயலாது .
நான் அவர்களைப்பற்றி செய்த்களை அறிவ்க்காமல் போனால்  அது எனது மனத்தளவில் ஒரு குற்றமாகவே ஆகிவடும் எனும் எண்ணத்தால் இந்த தொடரை துவங்குக்றேன் .
இதில்  பயணத்தின் போது நடைபெற்றதன் இனிமையான சம்பவங்களே இடம்பெறும்.
கசப்பான சம்பவங்கள் எனது மனதிற்கு கிடைத்த  மருந்தாக எண்ணி
ஜீரணத்து விட்டேன் .
மீண்டும் மீண்டும் சுவைக்க இனி ப்புதானே சேமிக்கப்படவேண்டும் .
கசப்புகள் மறக்கப்படவேண்டியவை .
,முனைவர் கோவை மணி அவர்கள் தஞ்சை பல்கலை சார்பாகமுதல் கட்ட பயணத்தில்   கலந்துகொண்டார் ,அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்
இந்த திட்டத்த்ன பின் புலமாக  இயக்கும் சக்த்யாக செயல்பட்ட   THF  நிர்வாகிகள்  சுபா ,கண்ணன் ,   ஆண்டோ இவர்களின் அன்பும் ஆதரவும் என்றும் மறக்க முடித்தவை .

ஆறு ஆண்டுகளுக்கு பின்னும் தனிப்பட்ட முறையில் இந்த தொண்டினைத் தொடர்ந்து வருகிறேன் .அவைகளை
பழையதும் புதியதும் கலந்து அளிக்க இருக்கிறேன் .

சமீபத்தில் ஜனவரி முதல் வாரம் 2015 இல் நான் ஒரு இடத்தில் கண்ட சுமார் 20000 சுவடிகளில் ஒரு பகுதி

தஞ்சை தமிழ் பல்கலை கழகத்தில் நடந்த பாட்டு விழாவில் அப்போதைய துணைவேந்தர் முனைவர் ராஜேந்திரன் பாராட்டியபோது
தஞ்சையில் தந்த சுவடிகளில் மிகச் சிறிய பகுதி ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 FEkprC4fSQm3VkFX1DjP+IMG_0107ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 - Page 2 G8HArAiZSTe8gKNXJGUF+sugu9
தஞ்சை தமிழ் பல்கலை கழகத்தில் நடந்த பாட்டு விழாவில் அப்போதைய துணைவேந்தர் முனைவர் ராஜேந்திரன் பாராட்டியபோது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 15, 2016 9:43 am

நீங்கள் மேலே போட்டுள்ள ஓலைச்சுவடிகள் போல நான் எங்க அப்பா வீட்டில் பார்த்திருக்கேன் ஐயா சின்ன வயதில் புன்னகை..இவ்வளவு நிறைய ஓலைகள் இல்லை இதில் பாதி இருக்கும், மேலும் எழுத்தாணியும் சில வெற்று ஓலைகளும் கூட வைத்திருந்தார். ஆனால் அவை தமிழில் இல்லை, கிரந்தம் என்று சொன்னார். அப்பா ஒரு புத்தகப் பிரியர், கிட்ட தட்ட 3 மாற பீரோக்கள் மற்றும் 2 திரங்கக் பெட்டிகள் முழுக்க புத்தகங்கள் வைத்திருந்தார்.

எல்லா விதமான புத்தகங்களும் படிப்பார். அவரால் தான் எங்களுக்கு படிக்கும் பழக்கம் வந்தது. அப்பா போனதும் தம்பிகள் ஆளுக்கு ஒரு தேசத்தில் இருப்பதால் புத்தகங்களை பராமரிக்க முடியாமல், ஒரு லைபிரரி  இல் கொடுத்துவிட்டார்கள் சோகம்...........மனம் கனக்கிறது ஆனால் வேறு வழி இல்லை, அத்துடன் ஓலைகளையும்  கொடுத்துவிட்டார்கள் என்றே நினைக்கிறேன்.............புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Feb 15, 2016 2:40 pm

krishnaamma wrote:நீங்கள் மேலே போட்டுள்ள ஓலைச்சுவடிகள் போல நான் எங்க அப்பா வீட்டில் பார்த்திருக்கேன் ஐயா சின்ன வயதில் புன்னகை..இவ்வளவு நிறைய ஓலைகள் இல்லை இதில் பாதி இருக்கும், மேலும் எழுத்தாணியும் சில வெற்று ஓலைகளும் கூட வைத்திருந்தார். ஆனால் அவை தமிழில் இல்லை, கிரந்தம் என்று சொன்னார். அப்பா ஒரு புத்தகப் பிரியர், கிட்ட தட்ட 3 மாற பீரோக்கள் மற்றும் 2 திரங்கக் பெட்டிகள் முழுக்க புத்தகங்கள் வைத்திருந்தார்.

எல்லா விதமான புத்தகங்களும் படிப்பார். அவரால் தான் எங்களுக்கு படிக்கும் பழக்கம் வந்தது. அப்பா போனதும் தம்பிகள் ஆளுக்கு ஒரு தேசத்தில் இருப்பதால் புத்தகங்களை பராமரிக்க முடியாமல், ஒரு லைபிரரி  இல் கொடுத்துவிட்டார்கள் சோகம்...........மனம் கனக்கிறது ஆனால் வேறு வழி இல்லை, அத்துடன் ஓலைகளையும்  கொடுத்துவிட்டார்கள் என்றே நினைக்கிறேன்.............புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1193584
நன்றி கிருஷ்ணம்மா அவர்களே ,
ஓலைச் சுவடிகளும் பழைய புத்தகங்களும் தான் இப்போதைய தமிழ்
வளர்ச்சிக்கு த் தேவை .அச்சு இயந்திரம் புழக்கத்துக்கு வந்த போது ,
ஆர்வமிகுதியினால் பல பண்டைய நூல்கள் அச்சேறின .
ஆனால் அவைகள் ஒருமுறைமட்டுமே பதிப்பிக்கப்பட்டது .
ஆதரவு இன்மையால் மறுபத்திப்பு வரவே இல்லை .
அத்தகைய புத்தகம் ஒன்றைக்கொண்டு இப்போது பத்து புத்தககங்கள் தப்பும் தவறுமாக போடுகிறார்கள் .
உண்மை என்னவென்று அறியவும் ,,உயர்ந்த புத்தகங்களை ,
தற்க்காலத்தில் உள்ள வசதிகளைக்கொண்டு செம்பதிப்பாக ,பதிப்பிக்கவும் ,ஓலைச் சுவடிகளும் , புத்தகங்களின் முதல் பதிப்பும் தேவை .
நீங்கள் முயற்சி செய்து பாருங்கள் ,எதாவது ஞானத்தைப் பற்றியும் ,மருத்துவத்தைப்பற்றியும்உங்கள் உறவுகளிடம் கிடைக்குமா என்று ,

இது தமிழ் குலத்திற்கு செய்யும் உதவியாக அமையும் .
நன்றி அம்மா ,
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 15, 2016 6:47 pm

sugumaran wrote:
நன்றி கிருஷ்ணம்மா அவர்களே ,
ஓலைச் சுவடிகளும் பழைய புத்தகங்களும் தான் இப்போதைய தமிழ்
வளர்ச்சிக்கு த் தேவை .அச்சு இயந்திரம் புழக்கத்துக்கு வந்த போது ,
ஆர்வமிகுதியினால் பல பண்டைய நூல்கள் அச்சேறின .
ஆனால் அவைகள் ஒருமுறைமட்டுமே பதிப்பிக்கப்பட்டது .
ஆதரவு இன்மையால் மறுபத்திப்பு வரவே இல்லை .
அத்தகைய புத்தகம் ஒன்றைக்கொண்டு இப்போது பத்து புத்தககங்கள் தப்பும் தவறுமாக போடுகிறார்கள் .
உண்மை என்னவென்று அறியவும் ,,உயர்ந்த புத்தகங்களை ,
தற்க்காலத்தில் உள்ள வசதிகளைக்கொண்டு செம்பதிப்பாக ,பதிப்பிக்கவும் ,ஓலைச் சுவடிகளும் , புத்தகங்களின் முதல் பதிப்பும் தேவை .
நீங்கள் முயற்சி செய்து பாருங்கள் ,எதாவது ஞானத்தைப் பற்றியும் ,மருத்துவத்தைப்பற்றியும்உங்கள் உறவுகளிடம் கிடைக்குமா என்று ,

இது தமிழ் குலத்திற்கு செய்யும் உதவியாக அமையும் .
நன்றி அம்மா ,
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

மேற்கோள் செய்த பதிவு: 1193666

நீங்கள் சொல்வது புரிகிறது, கண்டிப்பாக கேட்கிறேன் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Fri Feb 19, 2016 4:38 pm


ஓலைச் சுவடிகள் தேடியபடலம் (புதிய காதை ) , 3
அண்ணாமலை சுகுமாரன்

ஓலைச் சுவடிகள் பற்றிய சில சுவையானச் செய்திகள்

இறைவனின் கையெழுத்துடன் ஒரு ஓலைசுவடி !


கடவுளை ப் பற்றியே இன்னமும் முழுத் தெளிவு அனைவருக்கும் உண்டானதாகத் தெரியவில்லை
கடவுள் உண்டா இல்லையா என்று சந்தேகத்திலேயே இன்னும் சிலர் இருக்கும் போது , கடவுளே தன கைப்பட பக்கம் பக்கமாக எழுதி பின் அடியில் கைச்சான்றும் ( SIGNATURE ) இட்ட ஒரு பனை ஓலைசுவடிக் கட்டு இன்னும் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது ஒரு வித்தியாசமான செய்தி தானே .

ஒவ்வரு ஆண்டும் மகா சிவராத்திரி அன்று ஒரு நாள் மட்டுமே சுவடிகள் இருக்கும் வெள்ளி பேழையை திறந்து பூஜை செய்யப்படுகிறது என்ற செய்தி வியப்பளிக்கக் கூடும் .

இத்தகையஇந்த அரிய பொக்கிஷங்கள் இருக்கும் இருக்குமிடம் புதுச்சேரி தான்
அவை இடம் பெற்றிருக்கும் இடம் , அந்த ஓலை சுவடிகளையும் மாணிக்க வாசகரின் உருவசிலையையும் பாதுகாக்கும் பெரும் பேறு பெற்ற இடம் அம்பலத்தடியர் திருமடம்

இதைப்பற்றிய பின் புலத்தை காணலாமா ?

திருவாசகத்துக்கு உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது அனைவரும் அறிந்த ஒரு வாக்கு.

திருவாசகம் வேறு, சிவன் வேறு என்பது அல்ல ! சிவனையே அவரின் தத்துவ விளக்கத்தை கூறும் நூல் திருவாசகம் மற்றும் திருக்கோவையார்.ஆகும் . சைவ சமயத்துக்குச் சிறப்பாக விளங்குவது யோக ஆகம நெறியே. ஆகும்
மாணிக்கவாசகர் பாடல்களில், அவர் சிவாகம நெறிவழி நிற்கும் ஞான யோகி என்பது புலனாகிறது.
சிவபுராணத்தின் ஆரம்ப வரிகளிலேயே அவர் "கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க; ஆகமம் ஆகி நின்று அன்னிப்பான் தாள் வாழ்க," என்று ஆகமத்தைச் சிறப்பித்து விடுகிறார்.

.திருவாசகத்துக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. சிவன் தன்னுடைய சிந்தையிலே நின்றதனால், அவனுடைய திருவருளாலே அவனுடைய திருத்தாள்களை வணங்கி, மாணிக்கவாசகர் உரைத்த திருப்பாடல்கள் அவை;
அவற்றை சிவபெருமானே நேரில் வந்து, தன்னுடைய திருக்கரத்தினால் எழுதி, அந்நூலின் அடியில்இவை எழுதியது, அழகிய திருச்சிற்றம்பலமுடையான் எழுதது என்று கையெழுத்திட்டு அருளிய நூல்; ! எவ்வளவசரியாக தானே வந்து உயரிய ஒரு நூலுக்கு மத்திப்புரை வழங்கி மாணிக்கவாசகரை சிவன் உலகறிய செய்ய்திருக்கிறார் பாருங்கள் !

திருப்பெருந் துறையில் தனது ஞான ஆசானாக இறைவனையே கண்டு ஆதி யோகியான சிவனையே ஆதிகுருவாகக் கண்டு அரிட இருந்து நேரடியாக யோக நெறியை கற்று அங்கே ஒரு ஞானாலயம் மன்னனின் குதிரைவாங்க கொடுத்த பணத்தில் கட்டி , பின் அதனால் மன்னனின் கோபத்திற்கு ஆடப்பட்டு சிறைபட்ட மாணிக்க வாசகரை இறைவனே நரியை பரியாக்கி திருவிளையாடல் செய்து மாணிக்கவாசகரின் பெருமையை இறைவன் உலகறிய செய்த பின் பல பாடல்களைப்பாடி ,பல திருத்தலங்களை தரிசித்து பின் தில்லையை அடைந்தார் .

கண்ட பத்து என்னும் பதிகம் பாடி வழிபட்டார். பின்னர் தில்லையின் கீழ்த்திசையில் ஒரு தவச்சாலை அமைத்துப் தங்கியிருந்து தினமும் அம்பலவாணனின் நடனத்தைத் தரிசித்துவந்தார். .

தில்லையில் அடிகள் அருளிச் செய்தவை குலாப்பத்து, கோயில் திருப்பதிகம், . கோயில் மூத்த திருப் பதிகம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப் பகுதி, . போற்றித் திருவகவல், . திருப்பொற்சுண்ணம், . திருத்தெள்ளேணம், . திருவுந்தியார், திருத்தோள் நோக்கம், . திருப்பூவல்லி, . திருப்பொன்னூசல், . அன்னைப் பத்து, , திருக்கோத்தும்பி, . குயில் திருத்தசாங்கம், அச்சோப்பத்து, என பலவாகும் .சிதம்பரம் ஆகாய தலம் ஆகையால் அங்கே பிரபஞ்சத்தைப் பற்றிய உண்மைகள் அடங்கிய திருவண்டப் பகுதி, .பாடினார்போலும் .
இவ்வாறு தில்லையில் வாழ்ந்தபோதுஅவரை பெருமைபடுத்தி ஆட்கொள்ளசிவனே ஒரு நாள் அந்தணர் வடிவில் வநது ,தான் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவரென்றும், மணிவாசகருக்காகச் சிவன் செய்த அருட்செயல் உலகெங்கும் பரவியுள்ளது எனக் கூறி மணிவாசகர் பல சமயங்களிலும் பாடிய பாடல்களை முறையாகச் சொல்லும்படிக் கேட்டுக் கொண்டார்.

மணிவாசகரும் அந்தணரை அருகிலிருத்தித் தாம் பாடிய திருவாசகப் பாடல்கள் அனைத்தையும் சொல்லியருளினார். அந்தணரும் தம் திருக்கரத்தால் அவைகளை எழுதி முடித்து `பாவைபாடிய தங்கள் திருவாயால் ஒரு கோவை பாடுக' என்று கேட்டுக் கொண்டார். அவ்வேண்டுகோளுக்கு இணங் கிய மணிவாசகர் இறைவனது திருவடிப்பேற்றை உட்கருத்தாகக் கொண்ட திரு கோவையார் என்ற நூலை சொல்லயும் இறைவன் தம் திருக்கரத்தால் அதையும் எழுதி முடித்தார். பின்னர் அந்தணர் வடிவில் வந்த சிவபெருமான் மறைந்தான். அதைக் கண்ட மணிவாசகர் இப்படித் தன்னை ஆட்கொண்டவர் சிவபிரானே என்பதை அறிந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கித் திருவருளை எண்ணி வழுத்தினார்.

திருவாதவூரரின் திருவாசகத்தையும், திருக்கோவையையும் தம் கையால் எழுதிய இறைவன் அந்நூல்களை உலகறியச் செய்ய வேண்டி நூலின் முடிவில் `திருச்சிற்றம்பலமுடையான் கையெழுத்து' எனத் திருச்சாத்திட்டுத் தில்லைச் சிற்றம்பலத்தில் வாயிற்படியிலே வைத்தருளினார்.

மறு நாள் பூசை செய்ய வந்த அந்தணர்கள் வாயிற்படியில் நூல் ஒன்று இருப்பதைக்கண்டு படித்துப் பார்த்து அதில் திருச்சிற்றம்பலமுடையான் கையெழுத்து என்றிருந்ததைக்கண்டு உடல் சிலிர்த்து இந்நூலைப் பாடிய வாதவூரரைச் சென்று கண்டு வணங்கினார். திருவாயிற்படியில் இந்நூல் இறைவனால் வைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சியை அவரிடம் தெரிவித்தார். வாதவூரர் அதைக்கேட்டு திருவருளையெண்ணி வணங் கினார்.
அந்தணர் அனைவரும் இந்நூலின் பொருளை என்னவென்று விளக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர், அதற்கு மணிவாசகர் இதன் பொருளைத் தில்லைச் சிற்றம்பலத்தில் வந்து தெரிவிக்கின்றேன் என்று சொல்லி அவர்களோடு சிற்சபைக்கு எழுந்தருளினார். அங்கு வந்து `இந்நூற் பொருள் இச்சபையில் எழுந் தருளியுள்ள ஆனந்தக் கூத்தப்பெருமானே ஆவன்' என்று சுட்டிக் காட்டி, பின் அச்சபையில் எல்லோரும் காண மணிவாசகர் மறைந்தருளினார். நடராசப்பெருமான் மணிவாசகருக்குத் தம் திருவடிகளிலே இரண் டறக் கலக்கும் பேரின்பப் பேற்றைத் தந்து அவரை ஆட் கொண்டருளினார்.

பின்பு இறைவன் கை சான்று அளித்த ஓலை சுவடியை யார் வைத்துக் கொள்வது என அந்தனர்களுக்குள் போட்டிவந்த போட்டி வந்த போது அதில் ஒரு ஓலையை இலையில் வைத்து சிவா கங்கை எனும் திருக்குளத்தில் இட்டு அந்த இல்லை கரையில் இருக்கும் அந்தணர்களுக்குள் யாரை நோக்கி வருகிறதோ அவரே வைத்துக் கொள்ளலாம் னவு செய்து குளத்தில் இட்டனர்
அந்த ஓலை அந்தணருள் எளிய ஒரு பக்தரை நோக்கி சென்றது .
அவர் இறைவன் கையெப்பம் இட்ட அந்த ஒலைசுவடிக் கட்டைப் பெற்று ,கோவிலின் வடக்கு வீதிக்கு அருகில் மடம் ஒன்றை நிறுவி இந்த ஓலைகளை பூஜித்து வந்தார்னர்
பிறகு முகமதியரின் தமிழ் நாட்டுப் படையெடுப்பின் போது , பாதுகாப்புக்காக அஞ்சி ஓலைகளை புது சேரிக்கு கொண்டுவந்து மடம் ஒன்றைஅங்கே நிறுவினர்
ஆனந்த ரங்கம் பிள்ளை டைரியில் இவர்கள் மடம் அங்கே நடைப்பெற்ற விழாக்கள் பற்றிய செய்தி இருக்கிறது
எப்போதாவது நேரம் கை கூடும் போது இந்த புனித ஓலையை கண்டு போற்றுங்கள் .

வரும் மார்ச் ஏழாம் தேதியன்று மகா சிவராத்திரி வருகிறது .
பல நூறு மக்கள் அப்போது பூஜையைக்க் கூடுவர்
இது உண்மையா என ஆராயய்வதை விட நமது பாரம்பரிய வழக்கங்களையும்
நம்பிக்கைகளையும் சற்று மதிப்பது நமக்கே நமைப்பற்றிய ஒரு பெருமித உணர்வை நமக்கு அளிக்கும் .
திருச்சிற்றம்பலம் !
அன்புடன் ,
அண்ணாமலை சுகுமாரன்
19/2/2016

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 19, 2016 5:22 pm

//ஒவ்வரு ஆண்டும் மகா சிவராத்திரி அன்று ஒரு நாள் மட்டுமே சுவடிகள் இருக்கும் வெள்ளி பேழையை திறந்து பூஜை செய்யப்படுகிறது என்ற செய்தி வியப்பளிக்கக் கூடும் .

இத்தகையஇந்த அரிய பொக்கிஷங்கள் இருக்கும் இருக்குமிடம் புதுச்சேரி தான்
அவை இடம் பெற்றிருக்கும் இடம் , அந்த ஓலை சுவடிகளையும் மாணிக்க வாசகரின் உருவசிலையையும் பாதுகாக்கும் பெரும் பேறு பெற்ற இடம் அம்பலத்தடியர் திருமடம் //


நிஜம் ஐயா, ஆச்சரியமான விவரம் புன்னகை:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: .............பகிர்வுக்கு நன்றி! ... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat Feb 20, 2016 11:30 pm


ஓலைச் சுவடிகள் தேடியபடலம் (புதிய காதை ) , 4
அண்ணாமலை சுகுமாரன்

இறைவன் கொண்டுவந்தும் கிழிக்கப்பட்ட ஓலை !

சென்ற ஒரு பதிவில் இறைவனின் கையொப்பத்துடன் கூடிய ஓலை ஒன்று பாதுகாத்து வைக்கபப்பட்டு இருப்பதைப் பற்றியும் அவைகள் மகா சிவராத்த்ரி அன்று பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படுவைதையும் எழுதியிருந்தேன்
நண்பர்கள் கவனத்தை அது அதிகம் ஈர்த்ததாகத் தெரியவில்லை கிருஷ்ணம்மா அவர்கள் மட்டும் சிரத்தையுடன் பதிவிட்டிருந்தார்கள் .அவர்களுக்கு நன்றி .

இப்போது இறைவனே கொண்டுவந்த ஓலை ஒன்றை கிழித்து எறிந்த வரலாறு ஒன்றை காண்போம்
தற்போது விழுப்புரம் மாவட்டம் என அழைக்கப்படும் பகுதியில் திருகோயிலூர் வட்டத்தில் இருந்த திருமுனைப்பாடி நாடுஎனும் பகுதியில் திருநாவலூர எனும் இடத்தில் வாழ்ந்த சடையனார் எனும் சைவ மரபினருக்கு திருமகனாக அவதரித்த அருளாளர்
நம்பிஆரூரர் எனும் நாமமுடன் சிறப்புற வாழ்ந்தார் .

"

"தம்பிரான் அருளினாலே தவத்தினால் மிக்கோர் போற்றும்
நம்பி ஆரூரர் என்றே நாமமும் சாற்றிமிக்க
ஐம் படை சதங்கை சாத்தி அணிமணிச் சுட்டிச் சாத்தி
செம் பொன் நாண் அரையில் மின்னத் தெருவில் தேர் உருட்டு நாளில் .........

தந்தையார் சடையனார் இத்தனை சிறப்பாக வளர்த்த நம்பிக்கு
புத்தூர் சடங்கவியாருடைய மகளாரைத் திருமணஞ் செய்தருளும்
ஏற்ப்பாடுகள் செய்யத்தொடங்கினார்

எப்படியெல்லாம் ஏற்பாடுகள் நடைபெற்றது தெரியுமா ?

"


நிறை குடம் தூபம் தீபம் நெருங்கு பாலிகைகள் ஏந்தி
நறை மலர் அறுகு சுண்ணம் நறும் பொரி பலவும் வீசி
உறைமலி கலவை சாந்தின் உறுபுனல் தெளித்து வீதி
மறையவர் மடவார் வள்ளல் மணம் எதிர் கொள்ள வந்தார்

இவ்வாறு மணக்கோலம் பூண்ட நம்பி குதிரை மேல் ஏறி பலரையும் கவரும் வண்ணம்

,மணமகளும் அவர்தம் தோழியரும் மறைந்திருந்து காண
கம்பீரமாக வந்தடைந்தார் .

அப்போதுதான் வந்தார் நடந்தது அந்த எதிர்பாரா திருப்பம் !
இத்திருமணத்தைத் தடுக்க இறைவனே,ஒரு முதிர்அந்தணர் வேடம் பூண்டு .

காதில் அணி கண்டிகை வடிந்த குழை தாழச்
சோதி மணி மார்பின் அசை நூலினொடு தோளின்
மீது புனை உத்தரிய வெண் துகில் நுடங்க
ஆதபம் மறைக் குடை அணிக்கரம் விளங்க

வந்தவரை அனைவரும் ஆர்வமுடன் நோக்கும் வேளையில் அவர் உரைத்தது
இடியென பாய்ந்தது அனைவர் செவிகளிலும் .

வந்துதிரு மாமறை மணத் தொழில் தொடங்கும்
பந்தரிடை நம்பி எதிர் பன்னு சபை முன் நின்று
இந்த மொழி கேண்மின் எதிர் யாவர்களும் என்றான்
முந்தை மறை ஆயிரம் மொழிந்த திரு வாயான்

முதலில் என் இந்த வழக்கை முடித்து பின் திருமணம் செய்க என முழங்கினார் !

முன்னுடையது ஓர்பெரு வழக்கினை முடித்தே
நின்னுடைய வேள்வியினை நீ முயல்தி என்றான்
ஆவதிது கேண்மின் மறையோர் என் அடியான் இந்
நாவல் நகர் ஊரன் இது நான் மொழிவது என்றான்

இதைக் கேட்டு அனைவரும் இடி கேட்டாற்போல் மயங்கி நிற்க ,
இடி இடி என ஓங்கிச் சிரித்தார் நம்பி .
ஓலையுடன் வந்த அந்தணர் ,நான் கூறுவது கேட்டு நீ சிரிப்பது ஏன் ?

அக் காலம் உன் தந்தை தன் தந்தை ஆள்ஓலை ஈதால்
இக் காரியத்தை நீ இன்று சிரித்தது என் ஏட என வினவ ,

சிரமத்துடன் சிரிப்பை நிறுத்திய நம்பி ,
கோபத்துடன் முதிய அந்தணரை நோக்கி

ஆசில் அந்தணர்கள் வேறோர் அந்தணர்க்கு அடிமை ஆதல்
பேச இன்று உன்னைக் கேட்டோம் பித்தனோ மறையோன் என்றார்

வந்த அந்தணரோ எதற்கும் அசராத கல்லுளிமங்கன் ஆயிற்றே !
நான் பித்தனோ அல்லது பேயனோ அதைப்பற்றி கவலை இல்லை
நீ இப்போது என் பின் வா என்றழைத்தார் .


அதற்க்கு நம்பியோ மேலும் மேலும் பேச்சு வேண்டாம் ஓலை இருக்கிறதென்றால்
ஓலை காட்டுக என்றார் .
அந்தணர் காட்டிய ஓலையை பற்றி கிழிதெறிந்தார் நம்பி.
அப்போதும் அசராத அந்த அந்தணர் மீண்டும் அந்தணர் அவையில் மிக்கார் மறையவர் அடிமை
ஆதல் இந்த மா நிலத்தில் இல்லை என் சொன்னாய் ஐயா என்றார் வந்தவாறிசைவே அன்றோ
வழக்கு இவன் கிழித்த ஓலை தந்தை தன் தந்தை நேர்ந்தது என்றனன் தனியாய் நின்றான்

. இசைவினால் எழுதும் ஓலை காட்டினான் ஆகில் இன்று
விசையினால் வலிய வாங்கிக் கிழிப்பது வெற்றி ஆமோ?

ஆயினும் இப்போது கிழித்தது படியோலையே என்றும் மூல ஓலை காட்ட இயலும்
எனசபையிடம் அந்தணர் கூறினார்
சபையோரும் ஓலை சுருளை பிரித்துப் பார்த்தனர்

பிறகு ஓலையுடன் வந்த அந்தணரே இவன் தந்தை அவன் தந்தை எழுதிய
வேறு எழுத்து இருப்பின் அதை இவ்வோலையுடன் ஒப்புநோக்குக என்றார் .


ஒப்பு நோக்கிய சபையோர் இரண்டும் ஒன்றே என தீர்மானித்தனர் .



பிறகு ஊர் சபையார் அந்தணரிடம் இத்தனை காலம் நீர் எங்கிருந்தீர் ?
எங்களில் யாரும் உங்களை அறிந்தில்லையே என வினவ


பெருவரும் வழக்கால் வென்ற புண்ணிய முனிவர் என்னை
ஒருவரும் அறியீராகில் போலும் என்றுரைத்துச் சூழ்ந்த
பெருமறையவர் குழாமும் நம்பியும் பின்பு செல்லத்
திருவருட் துறையே புக்கார் கண்டிலர் திகைத்து நின்றார்

எம்பிரான் கோயில் நண்ண இலங்கு நூல் மார்பர் எங்கள்
நம்பர் தங்கோயில் புக்கது என்கொலோ என்று நம்பி
தம்பெரு விருப்பினோடு தனித் தொடர்ந்து அழைப்ப மாதோடு
உம்பரின் விடை மேல் தோன்றி அவர் தமக்குஉணர்த்தல் உற்றார்

உங்கள் கோவிலில் உறையும் இறை யாமே எனக் கூறி ,
விடைமேல் காட்சி அளித்தார் .அனைவரும் திகைத்து உணவு பூர்வமாகத் தொழுதனர்

பின்பு இறைவர், நம்பியை நோக்கி `நமக்கும் அன்பின்பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை
பாட்டேயாகும், ஆதலால் மண்மேல் நம்மைச் சொற் றமிழ் பாடுக` என்றார்.

அதற்குச் சுந்தரமூர்த்தி சுவாமிகள், `கோதிலா அமுதே! இன்று உன் குணப்பெருங்கடலை நாயேன்யாதினை அறிந்து என்சொல்லிப்பாடுகேன்` என்றார்.
அதற்கு இறைவர் `முன்பு என்னைப் பித்தனென்றே மொழிந்தனை,ஆதலால் என் பெயர் பித்த னென்றே பாடுவாய்` என்றார். அப்பொழுது சுந்தரமூத்தி சுவாமிகள்
`பித்தாபிறைசூடீ` என திருப்பதிகம் பாடினார்

பித்தாபிறை சூடீபெரு மானேஅரு ளாளா
எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அத்தாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.
இவ்வரலாற்றை உறுதிபடுத்தும் கல்வெட்டுகள் பல திருவெண்ணெய்நல்லூர் அருள்மிகு வேற்கண்ணிநாயகி உடனுறை தடுத்தாட்கொண்டநாதர் கோயிலில் இருக்கிறது .
அத்தகைய கல்வெட்டுச் சான்று இதோ ,

`
ஸ்வஸ்திஸ்ரீ ஸகலபுவநச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ கோப்பெருஞ்சிங்க தேவர்க்கு யாண்டு உஎ (27)

ஆவது மேஷ நாயற்று பூர்வபக்ஷத்து சதுர்த்தஸியும் புதன்கிழமையும் பெற்ற அத்தத்து நாள்

திருவெண்ணைநல்லூர் உடையார் ஆட்கொண்ட தேவர்க்கு மத்யஸ்தன் செஞ்சி உடையான்

உதையன் கைலாய முடையான் இட்ட பிச்சன் என்று பாடச் சொன்னான் திருச்சின்னம்

இரண்டினால் வெள்ளி எடை ஐம்பத்து ஐங்கழஞ்சும், ஆவுடைய நாயனார் சீபாதத்து சாத்தின

கொடியுடன் கோத்தகால் காறையுடன் ஒன்பது மாற்றில் பொன் இரு கழஞ்சு. இது பன்மாஹேஸ்வர

ரகை்ஷ` (S.I.I. Vol XII The Pallavas No. 231.)



இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆளுடைய நம்பி என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றனர். அவர் நாச்சி மாரோடு எழுந்தருளியிருக்கும் இடம் ஆட்கொண்ட தேவர் தீர்த்தக் குளமான தேவனார் கேணியின் கீழ்க்கரை ஆகும். இச்செய்திகள் `பூமன்னுபதுமம்பூத்த ஏழுலகும் தாம் முன் செய் தவத்தால் பருதிவழித்தோன்றி` என்று தொடங்கப்பெறும் மெய்க்கீர்த்தியையுடைய இரண்டாங் குலோத்துங்க சோழதேவரின் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளன. இக்கல்வெட்டு ஏற்பட்ட காலம் கி.பி. 1148 மே மாதம் ஒன்பதாம் தேதி ஆகும். ஒரு தெருவுக்கு ஆலால சுந்தரப்பெருந்தெரு என்றும், ஒரு சுரபி மன்றாடிக்கு நம்பி ஆரூரன் கோன் என்றும், ஒரு ஊர்க்கு, தடுத்தாட்கொண்நல்லூர் என்றும் பெயர்கள் வைக்கப்பட்டிருந்தன. இவ்வூரில் வழக்குவென்ற திருவம் பலம் என்னும் பெயரால் கருங்கல் கட்டிடம் ஒன்று இருந்ததை, திரிபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்கசோழதேவரின் 29 ஆம் ஆண்டுக் கல்வெட்டு அறிவிக்கின்றது. இந்த அம்பலம் உள்ள இடம் வேறு ஒருவர்க்கு உரியதாய் இருந்தது. அதற்குப்பதில் கோயிலுக்குரிய ஒரு இடத்தை அவர்க்குக் கொடுத்து இந்த இடம் கொள்ளப்பட்டது என்பதையும் அக்கல்வெட்டு தெரிவிக்கின்றது.




இவ்வாறு
ஓலையில் எழுத்தப்பெற்ற ஆவணங்கள் மிக உறுதியான செய்திகளாக ஆவணங்களாக பண்டைய நாளில் மதிக்கப்பட்டன .,பாதுகாக்கப்பட்டன . என்பதும் ,
அந்தக்காலத்திலேயே இந்நாளில் xrox எடுக்கும் வழக்கம் போல் மூல ஓலையை படிஎடுத்தனர் .
அந்தக்காலத்திலேயே இன்றைய வங்கிகளில் செய்வதைப்போல் கை எழுத்தை ஒப்புநோக்கியே பின் ஒப்புக்கொண்டனர் .
அடிமைகளாக விற்கும் வாங்கும் பழக்கம் சுந்தரின் காலத்திற்கு முன்பே இருந்து வந்திருக்கிறது .
அதை ஓலைகளில் பதிவு செய்து வந்திருக்கின்றனர்
என்றும் பல விஷயங்கள் இந்த ஓலையைப் பற்றிய செய்திகளால் யூகிக்க முடிகிறது .

இன்னும் பல ஓலை சுவடி சங்கதிகள் இறைவன் அருள் இருந்தாலும் படிப்பவரிருந்தாலும் தொடரும் ..

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
20/2/16

நன்றி தடுத்து ஆட்கொண்ட புராணம்
http://www.shaivam.org/
www.thevaaram.org

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 21, 2016 12:06 am


சென்ற ஒரு பதிவில் இறைவனின் கையொப்பத்துடன் கூடிய ஓலை ஒன்று பாதுகாத்து வைக்கபப்பட்டு இருப்பதைப் பற்றியும் அவைகள் மகா சிவராத்த்ரி அன்று பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படுவைதையும் எழுதியிருந்தேன்
நண்பர்கள் கவனத்தை அது அதிகம் ஈர்த்ததாகத் தெரியவில்லை கிருஷ்ணம்மா அவர்கள் மட்டும் சிரத்தையுடன் பதிவிட்டிருந்தார்கள் .அவர்களுக்கு நன்றி .


நன்றி ஐயா புன்னகை................நம் பதிவர்கள் கவனித்து இருக்க மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன்.நீங்கள் தொடருங்கள் உங்கள் பதிவுகளை புன்னகை

அந்தக்காலத்திலேயே இன்றைய வங்கிகளில் செய்வதைப்போல் கை எழுத்தை ஒப்புநோக்கியே பின் ஒப்புக்கொண்டனர் . அடிமைகளாக விற்கும் வாங்கும் பழக்கம் சுந்தரின் காலத்திற்கு முன்பே இருந்து வந்திருக்கிறது .

இந்த சுந்தரரின் கதையைத்தான் நாம் திருவருச்செல்வரில் சிவாஜிகணேசண் மற்றும் ஜெமினி இன் நடிப்பிலும் பார்த்தோம் இல்லையா ஐயா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக