ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ள நிவாரணம்......by Krishnaamma ;)

4 posters

Go down

வெள்ள நிவாரணம்......by Krishnaamma ;)  Empty வெள்ள நிவாரணம்......by Krishnaamma ;)

Post by krishnaamma Sun Feb 07, 2016 4:54 pm

ரொம்பவும் கோபமாக வீட்டின் உள்ளே நுழைந்தான் நடிகர் லட்சியகாந்த் ; 'என்னிடம் கலக்காமல் யார் இந்த வேலையை செய்ததது ?...........மானேஜரா  இல்லை நீயா' என்று தன் மனைவியை பார்த்து கேட்டான்.

'என்னன்னு சொல்லிட்டு கோபப்படுங்க, நீங்க எதை பற்றி கேட்கறீங்க என்றே தெரியவில்லை, அயல் நாட்டு ஷூட்டிங் முடித்து விட்டு உள்ளே நுழையும்போதே என்ன இவ்வளவு கோபம்?...............என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள்.................... முதலில், கொஞ்சம் அமைதியாக உட்காருங்கள், தண்ணீர் குடியுங்கள் '...என்றெல்லாம் அவன் மனைவி அன்பாக சொன்னாள்.

இவன் அவள் தந்த தண்ணீரை குடித்தும் , கொஞ்சமும் சூடு குறையாமல், "  அவன் அவன் வெய்யில் மழை என்று கஷ்டப்பட்டு மானத்தைவிட்டு சம்பாதிக்கிறான், எவன் அப்பன் வீட்டு பணம் என்று இத்தனையைத் தூக்கி தானம் பண்ணி இருகீங்க?.............என்று பேப்பரை அவள் மேல் வீசினான்  .

நிதானமாய் அதை எடுத்த அவள்," ஒ , அதுவா?............அது நாம் இல்லைங்க, வேற யாரோ ஒரு தொழில் அதிபராம், நேத்தே நம்ப மானேஜர் கண்டுபிடித்துவிட்டார், நீங்க இன்னைக்கு இங்கு வருவதால் அந்த ஆளையும் இங்கு வர சொல்லி இருக்கிறார், பார்த்து பேசினால் சரியாகிடும்..............கவலைப்படாதீங்க "......என்றாள் புன்னகையுடன்.

அவள் பேச்சைக்கேட்டதும் அவனுக்கு கொஞ்சம் ஆறுதல் பிறந்தது. விஷயம் இது தான், இவன் பேர் கொண்ட ஒரு தொழிலதிபர், சேலத்தை சேர்ந்தவர், சென்னை மழைக்காக முதல்வரின் நிவாரண நிதிக்கு பத்து லக்ஷம் ருபாய் கொடுத்திருக்கிறார். அது தவறுதலாக இந்த நடிகர் கொடுத்ததாக செய்தித்தாள்களில் வந்து விட்டது. அவ்வளவு தான், 'எவ்வளோ சின்ன நடிகர்கள் எல்லாம் எத்தனை எத்தனை  கொடுத்திருக்காங்க, இத்தனை பெரிய புகழ் பெற்ற நதிகள்  இவ்வளவு தானா தருவது' என்கிற ரீதி இல் ஆளாளுக்கு , இவரி பேரை ரிப்பேர் ஆக்கிவிட்டார்கள். அதைப் பற்றித்தான் அவனுக்கு இவ்வளவு கோபம்.

தான் உழைத்து சம்பாதித்த காசை அவ்வளவு சுலபமாய் எடுத்துக் கொடுக்க அவனுக்கு மனம் இல்லை. மேலும், முதன் முதலில் இந்த ஊருக்கு வந்து நடிக்க ஆரம்பித்த போது பட்ட கஷ்டங்களை அவன் இன்னும் மறக்கத்தயார் இல்லை............அன்று எனக்கு உதவாத ஊருக்கு இன்று நான் ஏன் உதவணும் என்கிற அபத்தமான கொள்கை தான் அவனை கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றது....அதனால் தான் இத்தனை ஆனதும் கூட அவன் தன் பர்சை திறக்கலை .

மாலை அந்த தொழிலதிபருடன் ஒரு சந்திப்பு, அதற்காக தயார் ஆனான். வந்ததும் வராததுமாக அவரிடம் பாய்ந்தான், " ஏன் சர் , நீங்க கொடுப்பதானால் உங்கள் பேர் மட்டும் போட்டீங்க, உங்க படத்தையும் போட வேண்டியது தானே?...........அதை விட்டு விட்டு பேர் மட்டும் போட்டதால் எவ்வளவு குழப்பம் பாருங்கள்" என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தான்.

இந்த நடிகரின் படங்கள் பல பார்த்திருந்த அந்த இளம் தொழில் அதிபர் மிக ஆவலுடன் அவனைக் காண வந்திருந்தார். தானும் அவரின் பேர் உடையவன் என்பதில் சில சமயங்களில் கர்வம் கூட கொண்டிருந்தார் . நடிகரிடம் இப்படிப்பேசணும், அப்படிப் பேசணும் போட்டோ எடுத்துக்கணும் என்று ஆயிரம்  கனவுகளுடன் வந்தவருக்கு பேரிடி யாக இருந்தது நடிகரின் பேச்சு.

தன்னை சுதாதரித்துக் கொள்ளவே அவருக்கு 2 நிமிடங்கள் ஆனது. 'என்ன சொல்கிறார் இவர்?............நான் விருப்பப்பட்டுத்தானே, விளம்பரம் இல்லாமல் கொடுத்தேன், அதனால் இவருக்கு என்ன' ? என்று குழம்பினார்.

அதையே நடிகரிடம் கேட்கவும் செய்தார். அதற்கு பதிலாக அந்த நடிகர் செய்தித்தாள்களின்  செய்திகளைக் காட்டினார்.  அதைப்பார்த்த அந்த தொழில் அதிபர்,' சார், நீங்க ஒரு மறுப்பு செய்தி கொடுத்து விடலாமே ' என்று அப்பாவியாய் சொன்னார்.

மேலும் கோபம் பொத்துக்கொண்டு வந்தது நடிகருக்கு, " என்ன? மறுப்பு செய்தியா?............ஏன் இன்னும் என்னை வசை பாடவா?.......இது கூட கொடுக்கலையா என்று?" என உறுமினார்.................

"இப்போ இதுக்கு நான் என்ன செய்யட்டும்?...இந்த  செய்திகள் நான் தரவில்லையே " என்றார் தொழிலதிபர்.

"நீங்க உங்கள் படம் போடாமல் பணம் தந்ததால் தான் இத்தனை பிரச்சனையும், நீங்கள் படம் போட்டு செய்தி வெளி இட்டு இருந்திருந்தீர்கள் ஆனால் இந்தப் பிரச்சனையே வந்திருக்காது எனக்கு, நீங்க என்ன செய்வீங்களோ எனக்குத்தெரியாது, எனக்கு ஏற்பட்ட அவப்  பேரை நீங்க தான் சரி செய்யணும், இல்லாவிட்டால் என் பேரை , புகழை கெடுக்கவே யாரோ சொல்லி நீங்க செய்ததாக நான் வழக்கு போடுவேன்" என்று மிரட்டினார் நடிகர்.

இது கேட்டு பயந்தே போனார் அந்த தொழியாதிபர், 'என்னடா இது வம்பாக போச்சு....நாம் நினைத்து வந்தது என்ன , இங்கு நடப்பது என்ன, நல்லதுக்கு காலம் இல்லையே......ம்ம்... வெள்ள நிவாரணத்துக்கு, தன் முகம் காட்டாமல்  பணம் கொடுத்தது ஒரு தப்பா? .....தன் பேர் கூட வெளி இல் தெரியவேண்டாம் என்று தானே சொன்னேன், யாரோ ஒரு விஷமி செய்த வேலையாகத்தான் இருக்கும். இந்த 'ஆளை' (மனதிற்குள்.............சீ.....  இவன் மேலிருந்த மதிப்பெல்லாம் போச்சே! ) தானம் செய்ய வைப்பதற்காக இப்படி செய்து இருப்பங்களோ..........எது எப்படியானால் என்ன, இப்போ நான் மாட்டிக்கொண்டேன், நல்லபடி இதில் இருந்து வெளியே வரணும் என்று எண்ணினார்.

உடனே, "ஐயோ அதெல்லாம் வேண்டாம் சார், நான் நாளையே ஒரு செய்தி கொடுத்துவிடுகிறேன், நீங்க என் மேல் கேஸ் எல்லாம் போட வேண்டாம்" ..என்று எழுந்து கை கூப்பி விடை பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார். அந்த நடிகரும் நிம்மதி பெருமுச்சு விட்டார்...........

ஆனால் , மறுநாள் காலை பேப்பரைப் பார்த்ததும் ரௌத்திரமாகிப்போனார்...............அதில் சிரித்தவாறு அந்த தொழில் அதிபர் போட்டோவும்  அவர் பேட்டியும் வந்திருந்தது .......ஆனால் அவர் தந்திருந்த செய்தி தான்............

தொடரும்...............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெள்ள நிவாரணம்......by Krishnaamma ;)  Empty Re: வெள்ள நிவாரணம்......by Krishnaamma ;)

Post by krishnaamma Sun Feb 07, 2016 5:23 pm

ஆனால் , மறுநாள் காலை பேப்பரைப் பார்த்ததும் ரௌத்திரமாகிப்போனார்...............அதில் சிரித்தவாறு அந்த தொழில் அதிபர் போட்டோவும்  அவர் பேட்டியும் வந்திருந்தது .......ஆனால் அவர் தந்திருந்த செய்தி தான்.............

அந்த இளம் தொழிலதிபர் இந்த வருடம் நல்ல லாபம் வந்ததால் தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு 2 மாத போனஸ் தரலாம் என்று நினைத்தார். அந்த நேரம் பார்த்து சென்னை வெள்ளத்தில் திண்டாடவே, அவர்களுக்கு 1 மாத போனஸ் தந்து விட்டு, மீதியை வெள்ள நிவாரண நிதியாக கொடுத்துவிட்டார் . மனம் ரொம்ப நிறைவாக இருந்தது அவருக்கு. மறுநாள் பேப்பரில் லட்சியகாந்த், பத்து லக்ஷம் ருபாய் கொடுத்திருக்கிறார் என்று பார்த்ததும், அட அவரும் இதே தொகை தான் கொடுத்திருக்கிறாரா?.......கொஞ்சம் அதிகமாய் கொடுத்திருக்கலாமே என்று முதலில் நினைத்தார், பின் ...ச்சே.. பாவம் அவர்கள் எத்தனைக்குத்தான் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள் என்று நினைத்தார்...பின் மறந்தும் போனார்..............

இந்த நிலை இல்  தான் அவர்களிடமிருந்து போன் வந்தது, சந்தோஷமாய் வந்தால் நிலைமை இப்படியாகிவிட்டது.........ம்ம்ம்.... இப்போ என்ன செய்வது?.................யோசித்தார், ஒரு முடிவெடுத்தார். முதலில் மனைவிக்கு போன் போட்டு சொன்னார், இன்னும் 2 நாட்கள் சென்னை இல் வேலை இருக்கு என்று ....பிறகு பத்திரிகை ஆபீஸ் க்கு  போன் போட்டார்...............

பத்திரிகை காரர்கள் வந்ததும், " நண்பர்களே ! என் பேர் லட்சியகாந்த், சேலத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபர், வெள்ள நிவாரண நிதிக்காக பத்து லக்ஷம் ருபாய் கொடுத்தது நான் தான். விளம்பரம் வேண்டாம் என்று பார்த்தேன், பிறகு தான் தெரிந்தது நீங்கள் தவறாக என் பேர் கொண்ட நடிகர் தான் கொடுத்திருக்கிறார் என்று தவறாக செய்தி போட்டது .............அதனால் தான் இந்த விளக்கம்" என்று போட்டு உடைத்து விட்டார்................நல்ல காலம் தன் மேல் அந்த நடிகர் மான நஷ்ட வழக்கு போடுவேன் என்று, தன்னை கூப்பிட்டு  மிரட்டினார் என்று சொல்லலை புன்னகை

அவ்வளவு தான், பத்திரிகை காரர்களுக்கு இன்னும் சந்தோஷம் அதிகமாய் போச்சு..............."ஒ...இங்கிருந்து கொண்டு கோடிக்கணக்கில் சம்பாதித்துக்கொண்டு , ஒரு பத்து லக்ஷம் ருபாய் தரக்கூட முடியலையா உன்னால்.......வெச்சுக்கறோம் " என்று சிலர்  நினைத்துக்கொண்டு , இவரை போட்டோவும் எடுத்துக்கொண்டு போய்விட்டனர்...................

சிலர் இவர் சொன்னதை அப்படியே போட்டனர், பலருக்கு பத்திரிகை சர்குலர் ஏறணுமே, அதனால் கண் காது முக்கு  வைத்து சுவை பட எழுதிவிட்டனர்..............அதை படித்துத்தான் விஷயம் மேலும் சிக்கலாகி விட்டதை உணர்ந்து கோபப்பட்டான் அந்த நடிகன்.

மீண்டும் அந்த தொழிலதிபருக்கு அழைப்பு போனது..............'மீண்டும் என்ன தொல்லை இது ?, என் வேலையை பார்க்க விடாமல்?............ஒரு நல்லது செய்ததற்கு இத்தனை மண்டை குடைச்சலா கடவுளே ?" என்று தோன்றியது அவருக்கு.

மீண்டும் நடிகரை சந்தித்தார், மீண்டும் அந்த நடிகர் கோபப்பட்டார், இவர் முடிவாக, "நாளை நான் ஒரு அறிக்கை   கொடுத்துவிடுகிறேன், அதன் பின் உங்களுக்கு தொந்தரவே இருக்காது; நீங்களும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் " என்று சொல்லி கிளம்பினார்.

முதலில் சரி என்று சொன்ன நடிகர், " நீங்க என்ன சொல்லப் போறீங்க  என்று இப்பவே எனக்கு சொல்லிவிட்டு கிளம்புங்கள்" என்றார்.

'ம்ம்... ஆணியே பிடுங்காதீங்க' என்று சொல்லப்போகிறேன் என்றார் அவர்.............நடிகருக்கு புரியலை................விழித்தார்...................

"என்ன புரியலையா? ...........என் பேரை காந்தன் என்று மட்டும் வைத்துக்கொள்ளப்போகிறேன், கெசட்டில் கொடுத்து பேரை மாற்றிக்கொள்ளப்போகிறேன்...............அதத்தான் பேப்பரில் கொடுக்கிறேன் என்று சொன்னேன்...............அப்புறம் என்றுமே என்னால் ...என் பேரால் .....உங்களுக்கோ, உங்களால் எனக்கோ தொந்தரவு இருக்காது தானே?..............உங்களால் எங்கள் மாநிலத்துக்கு எந்த உபயோகமும் இல்லையே  என்று நேற்று  நினைத்தேன் ............. உங்கள் பேராலும் எந்த உபயோகமும் இல்லை என்று இன்று புரிந்து கொண்டேன்.............ஒரு மனிதன், தன்னால் மற்றவர்களுக்கு  உபகாரம் இல்லை  என்றாலும் உபத்திரவமாவது இல்லாமல் இருக்கணும், ஆனால் உங்களால் என்றுமே எங்களுக்கு உபகாரமாய் இருக்கமுடியாது என்று புரிந்து கொண்டதுடன், எப்பவும் உங்களால் உபத்ரவம் - தொல்லை - தான் என்று புரிந்து கொண்டேன்............என்று சொல்லி விட்டு நடையை கட்டினார் காந்தன் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெள்ள நிவாரணம்......by Krishnaamma ;)  Empty Re: வெள்ள நிவாரணம்......by Krishnaamma ;)

Post by ayyasamy ram Sun Feb 07, 2016 5:51 pm

வெள்ள நிவாரணம்......by Krishnaamma ;)  3838410834 புன்னகை புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெள்ள நிவாரணம்......by Krishnaamma ;)  Empty Re: வெள்ள நிவாரணம்......by Krishnaamma ;)

Post by krishnaamma Sun Feb 07, 2016 5:55 pm

நன்றி ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெள்ள நிவாரணம்......by Krishnaamma ;)  Empty Re: வெள்ள நிவாரணம்......by Krishnaamma ;)

Post by K.Senthil kumar Sun Feb 07, 2016 7:29 pm

கதை அருமை அம்மா.......
வெளியே தெரியாமல் எவ்வளவோ நல்ல உள்ளங்கள் இருக்க
இது போன்ற நடிகர்களைத்தான் இன்று உச்சந்தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்கள்


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

வெள்ள நிவாரணம்......by Krishnaamma ;)  Empty Re: வெள்ள நிவாரணம்......by Krishnaamma ;)

Post by krishnaamma Sun Feb 07, 2016 10:52 pm

K.Senthil kumar wrote:கதை அருமை அம்மா.......
வெளியே தெரியாமல் எவ்வளவோ நல்ல உள்ளங்கள் இருக்க
இது போன்ற நடிகர்களைத்தான் இன்று உச்சந்தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1192462

ம்ம் ... இந்தப்போக்கு என்று ஒழிகிறதோ அன்று தான் நம் தமிழகம் உருப்படும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெள்ள நிவாரணம்......by Krishnaamma ;)  Empty Re: வெள்ள நிவாரணம்......by Krishnaamma ;)

Post by சசி Mon Feb 08, 2016 8:32 am

வெள்ள நிவாரணம்......by Krishnaamma ;)  3838410834 வெள்ள நிவாரணம்......by Krishnaamma ;)  3838410834 வெள்ள நிவாரணம்......by Krishnaamma ;)  3838410834
கதாசிரியர் அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள் அருமையாக இருக்கிறது அம்மா. ஒவ்வொரு வரும் நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்..


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

வெள்ள நிவாரணம்......by Krishnaamma ;)  Empty Re: வெள்ள நிவாரணம்......by Krishnaamma ;)

Post by krishnaamma Mon Feb 08, 2016 9:46 am

சசி wrote:வெள்ள நிவாரணம்......by Krishnaamma ;)  3838410834 வெள்ள நிவாரணம்......by Krishnaamma ;)  3838410834 வெள்ள நிவாரணம்......by Krishnaamma ;)  3838410834
கதாசிரியர் அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள் அருமையாக இருக்கிறது அம்மா. ஒவ்வொரு வரும் நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்..
மேற்கோள் செய்த பதிவு: 1192521

மிக்க நன்றி சசி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெள்ள நிவாரணம்......by Krishnaamma ;)  Empty Re: வெள்ள நிவாரணம்......by Krishnaamma ;)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum