ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!

+2
T.N.Balasubramanian
krishnaamma
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  Empty வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!

Post by krishnaamma Sun Feb 07, 2016 10:28 am

எல்லாம் கிடைத்தாலும், எதையாவது ஒன்றை நினைத்து ஏங்குவதே மனதின் சுபாவம். அதிலிருந்து, சுலபத்தில் விடுபட முடியாது. உலகம் முழுவதும் நம்மை பாராட்டினாலும், 'ச்சே என்னய்யா இது... எல்லாரும் என்னை பாராட்டுகின்றனர்; இந்த ஆள் மட்டும் ஒரு வார்த்தை கூறவில்லையே... முத்தா உதிர்ந்து விடும்...' என்று அங்கலாய்க்கும். மனம். இதிலிருந்து விடுபட என்ன வழி...

ஒருமுறை, கடுந்தவம் புரிந்தார் விசுவாமித்திரர். உலகினர், அவரது, தவத்தை வியந்து, 'இவரல்லவா பிரம்மரிஷி...' என்று பாராட்டினர்; அதைக் கேட்டு விசுவாமித்திரரும் மகிழ்ந்தார். இருப்பினும், அவர் உள்ளத்தில், 'எல்லாரும் பாராட்டுகின்றனர்; ஆனால், வசிஷ்டர் என்னை பாராட்டவில்லையே... அவர் வாயால், பிரம்மரிஷி பட்டம் பெற்றால் அல்லவா பெருமை...' என நினைத்தவர், 'நாம் சென்று வசிஷ்டரை வணங்கலாம்; பதிலுக்கு அவரும் வணங்கினால், நாம் பிரம்மரிஷி; மாறாக, அவர் நம்மை ஆசீர்வதித்தால், நாம் பிரம்மரிஷி அல்ல...' என தீர்மானித்தார்.

உயர்நிலையில் உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் வணங்கினால், இருவரும் சமம்; ஒருவர் வணங்கும்போது, அடுத்தவர் அவருக்கு ஆசி கூறினால், வணங்கியவர் இன்னும் பக்குவம் பெற வேண்டும் என்பது பொருள்.
விசுவாமித்திரர், வசிஷ்டரை வணங்கிய போது, அவர் தன் இரு கரங்களையும் தூக்கி அவரை ஆசீர்வதித்தார்.

இதனால், மனம் நொந்து, மறுபடியும் தவம் செய்ய துவங்கினார் விசுவாமித்திரர். சிறிது காலம் ஆனது; விசுவாமித்திரரின் இஷ்டதெய்வம் அவர் முன் தோன்றி, 'விசுவாமித்திரா... நீ இப்போது சென்று வசிஷ்டரை வணங்கு; பதிலுக்கு அவர் உன்னை வணங்கா விட்டால், அவர் தலை வெடிக்கட்டும் என்று, சாபம் கொடுத்து விடு...' என்றது!

உடனே சென்று வசிஷ்டரை வணங்கினார் விசுவாமித்திரர். அவரோ, முன் போலவே, இரு கரங்களையும் தூக்கி ஆசீர்வதித்தார்; இதனால், சாபம் கொடுக்கத் தயாரானார் விசுவாமித்திரர்.

ஆனால், அவர் செய்த தவத்தின் காரணமாக மனதில் நல்ல எண்ணங்களே எழுந்தன. 'என்ன பைத்தியக்காரத்தனம் இது! இவர் என்னை பிரம்மரிஷி என்று ஒப்புக் கொள்ளாவிட்டால் என்ன... நான் கோபத்திற்கு இடம் கொடுத்து, அறிவிழந்து இவரைச் சபிக்க எண்ணி விட்டேனே...

'இவ்வளவு காலம் தவம் செய்தும், எனக்குள் இருக்கும் கெட்ட எண்ணம் நீங்கவில்லையே... இவருக்குச் சாபம் கொடுக்க நினைத்ததன் மூலம், என் தவசக்தி எல்லாம் வீணாகி விட்டது. எல்லா ஜீவராசிகளிலும் ஒரே ஆன்மா தானே குடிகொண்டுள்ளது. அப்படியிருக்கையில் இப்படிப்பட்ட தவறை இனி செய்யக் கூடாது...' என நினைத்து தலைகுனிந்து திரும்பினார் விசுவாமித்திரர்.

அப்போது, 'முனிவரே... நில்லுங்கள்; நான் உங்களை வணங்க வேண்டாமா...' என்றார் வசிஷ்டர்.
சட்டென்று திரும்பினார் விசுவாமித்திரர். வசிஷ்டர் கைகளை கூப்பி வணங்கி, 'பிரம்மஞானம் அடைந்த உங்களை வணங்கி, உங்கள் வணக்கத்தை ஏற்றுக் கொள்கிறேன்...' என்று கூறி, விசுவாமித்திரரை தழுவிக் கொண்டார்.

மனம் நெகிழ்ந்தார் விசுவாமித்திரர். 'முனிவரே... முன்பு உங்களிடம் இருந்த கோபம் முதலான எல்லா தீய குணங்களும் நீங்கி, அனைத்தையும் பிரம்ம மயமாக பார்க்கும் தன்மை, வந்து விட்டது. அதனால், இப்போது நீங்கள் பிரம்ம ஞானி, பிரம்ம ரிஷியாகி விட்டீர்கள்...' என்று பாராட்டினார் வசிஷ்டர்.

நற்குணங்களே நிலையான உயர்வைத் தரும்; தீய குணங்கள் உயர்வைத் தருவது போலத் தோன்றினாலும், முடிவில் நம்மைக் கீழே வீழ்த்தி விடும்.

பி.என்.பரசுராமன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  Empty Re: வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!

Post by T.N.Balasubramanian Sun Feb 07, 2016 10:34 am

பழமொழி தெரியும்
விளக்கம் இன்று கிடைத்தது .
நன்றி
பரசுராமன் /க்ரிஷ்ணாம்மா

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  Empty Re: வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!

Post by krishnaamma Sun Feb 07, 2016 10:40 am

T.N.Balasubramanian wrote:பழமொழி தெரியும்
விளக்கம் இன்று கிடைத்தது .
நன்றி
பரசுராமன் /க்ரிஷ்ணாம்மா

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1192358

நிஜமா சொல்லறீங்களா ஐயா புன்னகை...............விஸ்வாமித்திரர் நிறைய முறை முயன்று கடைசியாகத்தான் ப்ருமரிஷி பட்டம் பெறுவார் பிரும்மாவிடமிருந்து அப்பவும் அவர், 'வசிஷ்டரைக் கூப்பிட்டு அந்த பட்டத்தை எனக்கு தர சொல்லுங்கள்' என்று பிரும்மவிடமே வேண்டுகோள் வைப்பார் புன்னகை

நான் அப்படித்தான் படித்திருக்கேன், கேட்டிருக்கேன்....இவர் கொஞ்சம் வேர் மாதிரி எழுதி இருக்கார் என்றாலும் கருத்து ஒன்று தானே என்று எடுத்து போட்டேன் ஐயா புன்னகை

நன்றி !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  Empty Re: வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!

Post by ராஜா Sun Feb 07, 2016 11:17 am

நாங்க படித்த / கேட்ட கதை வேறு மாதிரி இருக்கும்.
புன்னகை

சத்ரிய குலத்தில் வந்த விஸ்வாமித்திரர் பிரம்மரிஷி புன்னகை ஆக முடியாது என்று கேலி பண்ணியவர்களை எல்லாம் புறம் தள்ளி தனது தவவலிமையால் பிரம்மரிஷி பட்டம் பெற்றவர் விசுவாமித்திரர்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  Empty Re: வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!

Post by சசி Sun Feb 07, 2016 11:21 am

நல்ல விளக்கங்கள் அம்மா. நாமெல்லாம் சும்மா..... பட்டம்... இப்போவெல்லாம் பணம் கட்டினால் தானக வரும்..

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  Empty Re: வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!

Post by krishnaamma Sun Feb 07, 2016 11:26 am

ராஜா wrote:நாங்க படித்த / கேட்ட கதை வேறு மாதிரி இருக்கும்.
புன்னகை

சத்ரிய குலத்தில் வந்த விஸ்வாமித்திரர் பிரம்மரிஷி புன்னகை ஆக முடியாது என்று கேலி பண்ணியவர்களை எல்லாம் புறம் தள்ளி தனது தவவலிமையால் பிரம்மரிஷி பட்டம் பெற்றவர் விசுவாமித்திரர்.
மேற்கோள் செய்த பதிவு: 1192381

ம்ம்... அது ரொம்ப பெரிய கதை ராஜா.............விஸ்வாமித்திரர் ஷத்திரியர் ஆனாலும் எப்படி மனம் மாறி தபஸ் பண்ணினார் பரசுராமர் அந்தணர் குலத்தில் பிறந்தும் எப்படி ஒரு ஷத்திரியர் போல எல்லோரையும் வெட்டித்தள்ளினார் என்பது ரொம்ப சுவையான கதை............புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  Empty Re: வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!

Post by krishnaamma Sun Feb 07, 2016 11:32 am

சசி wrote:நல்ல விளக்கங்கள் அம்மா. நாமெல்லாம் சும்மா..... பட்டம்... இப்போவெல்லாம் பணம் கட்டினால் தானக வரும்..
மேற்கோள் செய்த பதிவு: 1192382

ம்ம்... நிஜம் சசி புன்னகை...........பட்டம் ..பதவி....விருது எல்லாத்துக்கும் இப்போ தேவை திறமை இல்லை.....

" காசு,பணம் துட்டு, மனி".
.என்று ஆகிவிட்டது சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  Empty Re: வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!

Post by T.N.Balasubramanian Sun Feb 07, 2016 12:00 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:பழமொழி தெரியும்
விளக்கம் இன்று கிடைத்தது .
நன்றி
பரசுராமன் /க்ரிஷ்ணாம்மா

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1192358

நிஜமா சொல்லறீங்களா ஐயா புன்னகை...............விஸ்வாமித்திரர் நிறைய முறை முயன்று கடைசியாகத்தான் ப்ருமரிஷி பட்டம் பெறுவார் பிரும்மாவிடமிருந்து அப்பவும் அவர், 'வசிஷ்டரைக் கூப்பிட்டு அந்த பட்டத்தை எனக்கு தர சொல்லுங்கள்' என்று பிரும்மவிடமே வேண்டுகோள் வைப்பார் புன்னகை

நான் அப்படித்தான் படித்திருக்கேன், கேட்டிருக்கேன்....இவர் கொஞ்சம் வேர் மாதிரி எழுதி இருக்கார் என்றாலும் கருத்து ஒன்று தானே என்று எடுத்து போட்டேன் ஐயா புன்னகை

நன்றி !
மேற்கோள் செய்த பதிவு: 1192364

ஆஹா ,மறுமொழியிட்டு ,பதிவிடு ,ஆணைப் பிறப்பித்து , வேறு வேலையாக சென்று விட்டேன் .
Timed out என்று கேலி செய்துகொண்டு நிற்கிறது .
சரி மீண்டும் ,இம்போசிஷந்தான் .

எப்போதுமே வசிஷ்டர் no . I
விஸ்வாமித்திரர் கடும்தவம் செய்து  no I ஆக வர முயற்சிக்கிறார் . முடிவதில்லை .
இதன் நடுவே   திரிசங்கு  மகாராஜா , மானிட ரூபத்திலே ,சொர்கத்திற்கு பிரவேசிக்க , வசிஷ்டரின்
தவவலிமையை , உபயோகிக்க வேண்டுகோள் விடுக்கிறார் .
அது நடவாத காரியம் என வசிஷ்டர் மறுக்கவே ,
அதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்கிறார் விஸ்வாமித்திரர் .
தனது தவவலிமையால் திரிசங்குவை  மாநிடரூபத்தில்  அனுப்புகிறார் .
இந்த விபரீதத்தைப்  பார்த்த யமதர்மன் , சொர்க்க வாசலில் திரிசங்கு நுழையும் போது ,
அவரை பூமிக்கே தள்ளிவிட , திரிசங்குவும் , விஸ்வாமித்திரா, சொன்னப்படி செய் என வேண்ட ,
மீண்டும் தந்து தவ வலிமையால் , ஆகாசத்தில் ,அந்தரத்தில் , ஒரு சொர்கத்தை உண்டாக்குகிறார் .

இதைக் கண்டு வசிஷ்டர் , விஸ்வாமித்திரர் தவ வலிமை கண்டு ,பிரம்ம ரிஷி தாங்கள் எனக்கூற ,
விஸ்வாமித்திரர் மனம் மகிழ்கிறார் .

இது RS மனோஹரின் விஸ்வாமித்திரர் டிராமாவில் கண்டு ரசித்தது .

அதை விட ஸ்ரீ பரசுராமனின் கதை மனதை கவர்ந்தது என்பது ஒப்புக்கொள்ளவே வேண்டும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  Empty Re: வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!

Post by krishnaamma Sun Feb 07, 2016 12:02 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:பழமொழி தெரியும்
விளக்கம் இன்று கிடைத்தது .
நன்றி
பரசுராமன் /க்ரிஷ்ணாம்மா

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1192358

நிஜமா சொல்லறீங்களா ஐயா புன்னகை...............விஸ்வாமித்திரர் நிறைய முறை முயன்று கடைசியாகத்தான் ப்ருமரிஷி பட்டம் பெறுவார் பிரும்மாவிடமிருந்து அப்பவும் அவர், 'வசிஷ்டரைக் கூப்பிட்டு அந்த பட்டத்தை எனக்கு தர சொல்லுங்கள்' என்று பிரும்மவிடமே வேண்டுகோள் வைப்பார் புன்னகை

நான் அப்படித்தான் படித்திருக்கேன், கேட்டிருக்கேன்....இவர் கொஞ்சம் வேர் மாதிரி எழுதி இருக்கார் என்றாலும் கருத்து ஒன்று தானே என்று எடுத்து போட்டேன் ஐயா புன்னகை

நன்றி !
மேற்கோள் செய்த பதிவு: 1192364

ஆஹா ,மறுமொழியிட்டு ,பதிவிடு ,ஆணைப் பிறப்பித்து , வேறு வேலையாக சென்று விட்டேன் .
Timed out என்று கேலி செய்துகொண்டு நிற்கிறது .
சரி மீண்டும் ,இம்போசிஷந்தான் .

எப்போதுமே வசிஷ்டர் no . I
விஸ்வாமித்திரர் கடும்தவம் செய்து  no I ஆக வர முயற்சிக்கிறார் . முடிவதில்லை .
இதன் நடுவே   திரிசங்கு  மகாராஜா , மானிட ரூபத்திலே ,சொர்கத்திற்கு பிரவேசிக்க , வசிஷ்டரின்
தவவலிமையை , உபயோகிக்க வேண்டுகோள் விடுக்கிறார் .
அது நடவாத காரியம் என வசிஷ்டர் மறுக்கவே ,
அதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்கிறார் விஸ்வாமித்திரர் .
தனது தவவலிமையால் திரிசங்குவை  மாநிடரூபத்தில்  அனுப்புகிறார் .
இந்த விபரீதத்தைப்  பார்த்த யமதர்மன் , சொர்க்க வாசலில் திரிசங்கு நுழையும் போது ,
அவரை பூமிக்கே தள்ளிவிட , திரிசங்குவும் , விஸ்வாமித்திரா, சொன்னப்படி செய் என வேண்ட ,
மீண்டும் தந்து தவ வலிமையால் , ஆகாசத்தில் ,அந்தரத்தில் , ஒரு சொர்கத்தை உண்டாக்குகிறார் .

இதைக் கண்டு வசிஷ்டர் , விஸ்வாமித்திரர் தவ வலிமை கண்டு ,பிரம்ம ரிஷி தாங்கள் எனக்கூற ,
விஸ்வாமித்திரர் மனம் மகிழ்கிறார் .

இது RS மனோஹரின் விஸ்வாமித்திரர் டிராமாவில் கண்டு ரசித்தது .

அதை விட ஸ்ரீ பரசுராமனின் கதை மனதை கவர்ந்தது என்பது ஒப்புக்கொள்ளவே வேண்டும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1192391

மனோகர் டிராமா நீளம் கருதி ஒன்றே ஒன்று போட்டுவிட்டார் ஐயா, இது போல பல சம்பவங்கள் உண்டு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  Empty Re: வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!

Post by ayyasamy ram Sun Feb 07, 2016 12:19 pm

வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  103459460
-
பஞ்சத்தின் கொடுமை குறித்து திரு பி.என்.பரசுராமன்
விரிவாக ஒரு பதிவிட்டிருக்கிறார்...
-
அப்பதிவிலிருந்து சுருக்கமாக:
-
திரேதா யுகம் முடிந்து துவாபர யுகம் ஆரம்பமான காலம் அது.
அப்போது பன்னிரண்டு ஆண்டுகள் மழையே பெய்யவில்லை.
-
எங்கும் பசி, பட்டினி...
பசியின் கொடுமையை விசுவாமித்திர முனிவர் அனுபவித்தார்.
-
'இறவாமல் இருக்க என்ன வழி?' என்று சிந்தனை செய்தபடியே,
சென்றவர் பார்வையில், அங்கே ஒரு வீட்டில் கீழே விழுந்து கிடந்த
மாமிசமான நாயின் தொடை ஒன்று பார்வையில் பட்டது.
-
அந்த மாமிசத் துண்டை திருடவும் முனைகிறார்
....அந்த வீட்டின் சொந்தக்காரனான காட்டுவாசி, அவரை யார்
என்று தெரிந்து கொண்டு, அவர் செயலைத் தடுக்கிறான்...
-
அவர் பசியை போக்கிக்கொள்ள பாப செயலை செய்யக்
கூடாது என வலியுறுத்துகிறான்....
-
விசுவாமித்திரர் கேட்பதாக இல்லை! "எனக்கு நன்மையை
விரும்புவது உண்மையாக இருந்தால், இந்த நாயின் தொடையை
எனக்குக் கொடு!" என்று சொல்லிவிட்டு, தான் நினைத்தபடியே
மாமிசத்தை எடுத்துக்கொண்டார்.

அவ்வளவு நேரம் பசி - கொடுமை என்றெல்லாம் பேசினாலும்,
விசுவாமித்திரர் தான் எடுத்ததை உடனே உண்ணவில்லை. அதைத்
தன் மனைவியோடு சேர்ந்து சாப்பிட விரும்பினார். அதன்படியே
மாமிசத்தை எடுத்துக்கொண்டு போனவர், முறைப்படி தானே
அதைப் பக்குவம் செய்தார்.

அதன்பிறகு வகை வகையான இந்திரன் முதலான தேவர்களை
அழைத்து - தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் உண்டான செயலைச்
செய்யத் தொடங்கினார். அதன்மூலம் தேவர்களும், பித்ருக்களும்
மகிழ்ந்தார்கள். தேவேந்திரன் மழையைப் பொழிந்து,
பயிர்-பச்சைகளை உண்டாக்கினான்.

உத்தமமான முனிவரான விசுவாமித்திரரும் நீண்டகாலம் தவம்
செய்து, தன் பாவங்களைப் போக்கி உயர்ந்த நிலையை அடைந்தார்.

கதை முடிந்தது. அது போகட்டும்... பசியின் கொடுமையை விவரிக்க
இது போதுமல்லவா?
--
எதற்கும் இன்னொரு முறை, பஞ்சத்தை விவரிக்கும் பகுதியைப்
படித்துப் பாருங்கள்! பஞ்சத்தின் தாக்கமும், பசியின் கொடுமையும் புரியும்.

பெரும் அளவில் பூஜைகள் செய்து - வசதி, வாய்ப்பு உள்ளவர்களுக்கு
உணவு போடுபவர்கள்... உணவுக்காகத் தவிக்கும் ஒரு ஜீவனின் ஒரு வேளை
பசியைத் தணித்தால் கூட, அது தெய்வத்துக்குச் செய்ததுக்குச் சமம்.
நமக்குத் தெரிந்து மழை குறைந்து வறட்சி வந்தாலும், பெரிய பஞ்சத்தை
பார்த்தது இல்லை;

எதிர்காலத்திலும் பார்க்க வேண்டாம் என இறைவனை வேண்டுவோம்!
-
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  Empty Re: வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum