புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறள் கூறும் அம்பு  Poll_c10குறள் கூறும் அம்பு  Poll_m10குறள் கூறும் அம்பு  Poll_c10 
284 Posts - 45%
heezulia
குறள் கூறும் அம்பு  Poll_c10குறள் கூறும் அம்பு  Poll_m10குறள் கூறும் அம்பு  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
குறள் கூறும் அம்பு  Poll_c10குறள் கூறும் அம்பு  Poll_m10குறள் கூறும் அம்பு  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
குறள் கூறும் அம்பு  Poll_c10குறள் கூறும் அம்பு  Poll_m10குறள் கூறும் அம்பு  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குறள் கூறும் அம்பு  Poll_c10குறள் கூறும் அம்பு  Poll_m10குறள் கூறும் அம்பு  Poll_c10 
19 Posts - 3%
prajai
குறள் கூறும் அம்பு  Poll_c10குறள் கூறும் அம்பு  Poll_m10குறள் கூறும் அம்பு  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குறள் கூறும் அம்பு  Poll_c10குறள் கூறும் அம்பு  Poll_m10குறள் கூறும் அம்பு  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
குறள் கூறும் அம்பு  Poll_c10குறள் கூறும் அம்பு  Poll_m10குறள் கூறும் அம்பு  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
குறள் கூறும் அம்பு  Poll_c10குறள் கூறும் அம்பு  Poll_m10குறள் கூறும் அம்பு  Poll_c10 
7 Posts - 1%
mruthun
குறள் கூறும் அம்பு  Poll_c10குறள் கூறும் அம்பு  Poll_m10குறள் கூறும் அம்பு  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறள் கூறும் அம்பு


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 05, 2016 7:37 pm

சிலபேர் பார்ப்பதற்குக் கரடுமுரடாக இருப்பார்கள்; ஆனால் தங்கமான குணத்தைப் பெற்றிருப்பார்கள் முட்கள் நிறைந்த பலாப்பழத்தின் உள்ளே இனிய சுளைகள் இருப்பதைப்போல ! அதிர்ந்து பேசமாட்டார்கள்; அடுத்தவர் படுகின்ற துன்பத்தைக் காணச் சகியாதவராய் , ஓடிவந்து உதவி செய்வார்கள் ! நம் வீட்டிலே நடக்கின்ற நல்லது கெட்டதுகளில் தவறாமல் பங்கு கொள்வார்கள் ! ஆடை அணிவதில் அவ்வளவாகக் கவனம் செலுத்தமாட்டார்கள் !

இன்னும் சிலரோ நேர்த்தியாக உடை அணிவார்கள் .நாளொரு மேனியும் , பொழுதொரு வண்ணமுமாக வலம் வருவார்கள் ! பகட்டாக இருக்கும் காஞ்சிரம் பழங்களைப்போல, இவர்களால் யாருக்கும் எந்தவித நன்மையையும் கிடையாது; மாறாக அடுத்தவர் அசந்து இருக்கும் நேரத்தில், அவர்கள் தொடையிலே கயிறு திரிப்பார்கள் ; கூடவே  இருந்து குழிபறிக்கும் குள்ளநரி வேலையை செய்வார்கள் ! நாம் செய்கின்ற சிறிய தவறைக்கூட , ஊதிப் பெரிதாக்கி ,மேலிடத்திற்குப் போட்டுக் கொடுப்பார்கள் !

இவ்விரண்டு மனிதர்களையும் கவனித்த வள்ளுவரின் உள்ளத்திலே உதித்தது ஒருகுறள் ! அவர் கையாளும் உவமைகளில்தான் எத்தனை அழகு !  குறளைப் பார்ப்போமா !

கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலால் கொளல் . ( கூடாவொழுக்கம் -279 )

பார்ப்பதற்கு நேராகவும் , அழகாகவும் இருக்கும் அம்பு கொடுமை செய்யும்; ஒரு வில் வளைந்தாலே , ஓர் உயிர் போகப்போகிறது என்று பொருள் .ஆனால் யாழ் என்ற கருவி வளைந்து காணப்பட்டாலும் ; இனிய இசையைத் தரவல்லது . எனவே ஒருவர் செய்கின்ற செயலை வைத்தே , அவரது குணத்தை மதிப்பிடவேண்டும் .

இனி அடுத்தகாட்சி .

சில நூறு ஓட்டுகளே உள்ள வார்டு மெம்பர் தொகுதிக்கு ஒருவர் வேட்பாளராக நிற்கிறார் . மிகவும் எளிதாக வெற்றி பெறுகிறார் .  மற்றொருவரோ சட்ட மன்றத் தொகுதியில் MLA ஆவதற்குப் போட்டியிடுகிறார் . யாரை எதிர்த்து தெரியுமா ? முதலமைச்சரை எதிர்த்து போட்டியிடுகிறார் . நூறுக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவுகிறார் .

உண்மையிலேயே வென்றவர் யார் ? ஊடலில் தோற்றவர் வென்றார் என்பதுபோல , சட்டமன்றத் தொகுதிக்குப் போட்டியிட்டுத் தோற்றவரே வென்றவராகக் கருதப்பட வேண்டும் . ஏன் தெரியுமா ? வார்டு மெம்பராக வெற்றிபெறுவது எளிதான செயல் ; ஆனால் ஒரு முதலமைச்சரை எதிர்த்துப் போட்டியிடுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல ! மிரட்டல் , உருட்டல்களைச் சமாளிக்கவேண்டும் . பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்யவேண்டும் . அதுவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பது என்பது எவ்வளவு கடினமான காரியம் !

ஒரு அரசனுக்கு தன்னினும் வலிமை குறைந்த மன்னனுடன் போரிடுவது பெருமை தராது ; மாறாக வலிமைமிக்க மன்னனுடன் பொருது , பெறுகின்ற தோல்வி அவனுக்குப் பெருமை தரும் .
உலகத்தையே வெல்லவேண்டும் என்ற பேராசையால் மாவீரன் அலெக்சாண்டர் இந்தியாவிற்குள் நுழைகிறான் . அவனது பெரும்படையைக் கண்டு எல்லா மன்னர்களும் அஞ்சி நடுங்கினர் .சென்ற இடமெல்லாம் அவனுக்கு வெற்றி ! போரஸ் மன்னன் ஒருவன் மட்டுமே அவனை எதிர்த்துப் போரிட்டான் . ஜீலம் நதிக்கரையில் கடுமையான போர் நடந்தது. போரின் முடிவில் போரஸ் மன்னன் தோற்றுப் போனான் . ஆனாலும் அவனது தோல்வியைப் பற்றிப் பேசாது , அவனது துணிவைப் பற்றியே உலகம் இன்றளவும் பேசுகிறது .

வள்ளுவர் வாழ்ந்த காலத்திற்கு முன்பு நடந்த இந்தப் போரைப்பற்றி , வள்ளுவரும் அறிந்திருக்கக் கூடும் .
அவர் உள்ளத்திலே அருமையான குறள் ஒன்று பிறக்கிறது.

கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது . ( படைச் செருக்கு -772 )

ஒரு தந்தை தன் இரு மகன்களிடம் , காட்டிலே சென்று வேட்டையாடி வாருங்கள் என்று பணிக்கிறார் .
இருவரும் காட்டிற்குள் செல்கின்றனர் ; சிறிது தூரம் சென்றவுடன் ஒரு காட்டு யானைப் பயங்கரமாகப் பிளிறிக்கொண்டு அவர்களை நோக்கி வருகிறது .

அதைக்கண்ட தம்பியானவன் பயந்துபோய், பின்னங்கால் பிடரியில் அடிபட ஓட்டமெடுத்தான் . ஆனால் அண்ணனோ , சிறிதும் அஞ்சாமல் அந்த யானையை எதிர்கொண்டான் . தன் கையிருந்த வேலை அதன்மீது வீசியெறிந்தான் . யானை அஞ்சிப் பின்வாங்கியது ; வலிதாங்கமுடியாமல் யானை பிளிறிக்கொண்டே காட்டிற்குள் ஓடி மறைந்தது .

பயந்து ஓடிய தம்பி வழியில் ஒரு குறுமுயலைக் கண்டான் . தன் அம்பால் அதனை அடித்து வீழ்த்தினான் . இறந்துபோன முயலைக் கையில் பிடித்தவாறு வீட்டிற்குச் சென்றான் . தன் தந்தையிடம் தான் வேட்டையாடிய முயலை மிக்கப் பெருமிதத்துடன் காட்டினான் . ஆனால் தந்தை எதுவும் பேசாமல் இருந்தார் . அப்போது அண்ணன் குனிந்த தலையுடன் வந்தான் .

அவனைப் பார்த்த தந்தை , " என்னப்பா ! நீ எதுவும் வேட்டையாடாமல் வெறுங்கையுடன் வந்திருக்கிறாயே ? "
என்று கேட்டார் .

" அப்பா ! ஒரு மதங்கொண்ட யானையை எதிர்த்துப் போரிட்டேன் ! நான் எறிந்தவேல் அதன் முதுகில் குத்தியது ; ஆனால் அதை என்னால் கொல்ல முடியவில்லை; தப்பித்துவிட்டது "

இதைக் கேட்ட தந்தை எழுந்துவந்து தன்  மகனைக் கட்டித் தழுவிக் கொண்டார் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Feb 05, 2016 7:57 pm

அருமை ஐயா. நல்ல விளக்கங்கள்



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 05, 2016 8:13 pm

சசியின் பாராட்டுக்கு நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Feb 05, 2016 9:00 pm

மிகவும் சுவையான உரை அய்யா . இத்தனை அழகாக எழுதும் உங்களுக்கு ஒரு பயணக்கட்டுரை எழுதுவதில் சந்தேகம் ஏன்? அய்யா.
உங்களின் மேலே உள்ள கட்டுரை மிகவும் நேர்த்தியாக , தமிழில் , தெளிவாகவும் சுவையாகவும் இன்னும் படிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தையும் தூண்டுவதாக உள்ளது .
உங்கள் பயணக்கட்டுரையை சீக்கிரம் எதிர்பார்கிறேன் அய்யா . கணக்கு புதிர்களும் போடுங்கள் அய்யா .
வி பொ பாவித்தேன் . குறள் கூறும் அம்பு  103459460 குறள் கூறும் அம்பு  3838410834 குறள் கூறும் அம்பு  3838410834 குறள் கூறும் அம்பு  1571444738

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 05, 2016 9:28 pm

தங்களின் பாராட்டுக்கு நன்றி சோபனா ! பயணக் கட்டுரை எழுதுவதில் தயக்கமில்லை ! குறிப்புகளைத் தயார் செய்துகொண்டு இருக்கிறேன் . புதிர்க் கணக்குகளையும் விரைவில் வெளியிடுகிறேன் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Feb 05, 2016 9:30 pm

M.Jagadeesan wrote:தங்களின் பாராட்டுக்கு நன்றி சோபனா ! பயணக் கட்டுரை எழுதுவதில் தயக்கமில்லை ! குறிப்புகளைத் தயார் செய்துகொண்டு இருக்கிறேன் . புதிர்க் கணக்குகளையும் விரைவில் வெளியிடுகிறேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1192133
நன்றி அய்யா . சந்தோசம் . நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக