புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடிக்காதது  - Page 3 I_vote_lcapபடித்ததில் பிடிக்காதது  - Page 3 I_voting_barபடித்ததில் பிடிக்காதது  - Page 3 I_vote_rcap 
24 Posts - 53%
heezulia
படித்ததில் பிடிக்காதது  - Page 3 I_vote_lcapபடித்ததில் பிடிக்காதது  - Page 3 I_voting_barபடித்ததில் பிடிக்காதது  - Page 3 I_vote_rcap 
14 Posts - 31%
nahoor
படித்ததில் பிடிக்காதது  - Page 3 I_vote_lcapபடித்ததில் பிடிக்காதது  - Page 3 I_voting_barபடித்ததில் பிடிக்காதது  - Page 3 I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
படித்ததில் பிடிக்காதது  - Page 3 I_vote_lcapபடித்ததில் பிடிக்காதது  - Page 3 I_voting_barபடித்ததில் பிடிக்காதது  - Page 3 I_vote_rcap 
1 Post - 2%
prajai
படித்ததில் பிடிக்காதது  - Page 3 I_vote_lcapபடித்ததில் பிடிக்காதது  - Page 3 I_voting_barபடித்ததில் பிடிக்காதது  - Page 3 I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
படித்ததில் பிடிக்காதது  - Page 3 I_vote_lcapபடித்ததில் பிடிக்காதது  - Page 3 I_voting_barபடித்ததில் பிடிக்காதது  - Page 3 I_vote_rcap 
1 Post - 2%
Balaurushya
படித்ததில் பிடிக்காதது  - Page 3 I_vote_lcapபடித்ததில் பிடிக்காதது  - Page 3 I_voting_barபடித்ததில் பிடிக்காதது  - Page 3 I_vote_rcap 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
படித்ததில் பிடிக்காதது  - Page 3 I_vote_lcapபடித்ததில் பிடிக்காதது  - Page 3 I_voting_barபடித்ததில் பிடிக்காதது  - Page 3 I_vote_rcap 
1 Post - 2%
Barushree
படித்ததில் பிடிக்காதது  - Page 3 I_vote_lcapபடித்ததில் பிடிக்காதது  - Page 3 I_voting_barபடித்ததில் பிடிக்காதது  - Page 3 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடிக்காதது  - Page 3 I_vote_lcapபடித்ததில் பிடிக்காதது  - Page 3 I_voting_barபடித்ததில் பிடிக்காதது  - Page 3 I_vote_rcap 
78 Posts - 73%
heezulia
படித்ததில் பிடிக்காதது  - Page 3 I_vote_lcapபடித்ததில் பிடிக்காதது  - Page 3 I_voting_barபடித்ததில் பிடிக்காதது  - Page 3 I_vote_rcap 
14 Posts - 13%
mohamed nizamudeen
படித்ததில் பிடிக்காதது  - Page 3 I_vote_lcapபடித்ததில் பிடிக்காதது  - Page 3 I_voting_barபடித்ததில் பிடிக்காதது  - Page 3 I_vote_rcap 
4 Posts - 4%
prajai
படித்ததில் பிடிக்காதது  - Page 3 I_vote_lcapபடித்ததில் பிடிக்காதது  - Page 3 I_voting_barபடித்ததில் பிடிக்காதது  - Page 3 I_vote_rcap 
3 Posts - 3%
Balaurushya
படித்ததில் பிடிக்காதது  - Page 3 I_vote_lcapபடித்ததில் பிடிக்காதது  - Page 3 I_voting_barபடித்ததில் பிடிக்காதது  - Page 3 I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
படித்ததில் பிடிக்காதது  - Page 3 I_vote_lcapபடித்ததில் பிடிக்காதது  - Page 3 I_voting_barபடித்ததில் பிடிக்காதது  - Page 3 I_vote_rcap 
2 Posts - 2%
Shivanya
படித்ததில் பிடிக்காதது  - Page 3 I_vote_lcapபடித்ததில் பிடிக்காதது  - Page 3 I_voting_barபடித்ததில் பிடிக்காதது  - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

Karthikakulanthaivel
படித்ததில் பிடிக்காதது  - Page 3 I_vote_lcapபடித்ததில் பிடிக்காதது  - Page 3 I_voting_barபடித்ததில் பிடிக்காதது  - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடிக்காதது

Page 3 of 3 Previous  1, 2, 3

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jan 31, 2016 11:39 am

First topic message reminder :

அண்மையில் ஆசிரியர் இரா .சம்பந்தன் அவர்கள் அவரது வலைப்பூவில் எழுதிய ஒரு கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. அவர் ஒரு குறளுக்கு எழுதிய உரைக்கு மறுப்புரையே இக் கட்டுரையாகும் . முதலில் ஆசிரியர் சம்பந்தன் எழுதிய கட்டுரையும் , அதற்குக் கீழே எனது மறுப்புரையும் கொடுக்கப்பட்டுள்ளது .

பெய்யெனப் பெய்யும் மழையும் பொய்யெனச் செய்த உரையும்

==================================================================
 
Written by இரா. சம்பந்தன்   
தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை
 
மனைவியைப் பற்றிப் பேசும் அழகான குறள். ஆனால் அவசரப்பட்டுப் பொருள் எழுதி அதன் அழகைக் கெடுத்து விட்டார்கள் எல்லா உரை ஆசிரியர்களும்!
 
பிற தெய்வம் தொழாது தன் கணவனாகிய தெய்வத்தைத் தொழுது துயில் எழுபவள் பெய்யென்று சொல்ல மழை பெய்யுமாம்! இது பரிமேலழகர் உரை.
 
இதற்குத் திராவிடப் பகுத்தறிவு வாதிகள் என்ன சொல்கின்றார்கள் என்று பார்த்தால் வான் புகழ் கொண்ட மேலான ஒருவர் என்ற காரணத்துக்காக ஒருவரைப் பின்பற்றி நடக்காமல் தன் கணவனை மட்டும் எண்ணி அவனுக்கு ஏற்றபடி அவனைப் பின்பற்றி நடப்பவள் பெய்யவேண்டும் என்று விரும்பும் காலத்தே பெய்யும் மழையைப் போன்றவள் ஆவாள் என்று பொருள் சொன்னார் நாவலர் நெடுஞ்செழியன்.
 
தெய்வத்தை நேசிக்கும் பரிமேலழகரும் கடவுளை மறுக்கும் நெடுஞ்செழியனும் பெண் மழை போன்றவள் என்பதில் மாறுபடவில்லை.
இந்த உரைகள் எல்லாம் தவறானவை அல்ல. வாழ்ந்த காலம் சார்ந்திருந்த கொள்கைகள் என்பவற்றை ஒட்டிப் பிறந்த உரைகள் அவை. ஆனால் வள்ளுவர் இவர்கள் எல்லாம் சொல்லும் கருத்தில் இந்தக் குறளை எழுதியிருப்பாரா என்ற சந்தேகமும் எழத்தான் செய்கிறது.
 
முன்னைய அதிகாரங்களில் தன்னால் தொழும்படி வலியுறுத்தப்பட்ட தெய்வம் இந்தக் குறளிலே தொழப்படவில்லை என்கிறார் அவர். அது மடடுமல்ல. வேறொன்று தொழவும் படுகின்றது. அந்த வேறொன்று கொழுநன் எனப்படும் கணவன் என்கின்றார்கள் வாழையடி வாழையாக உரை ஆசிரியர்கள். பண்டிதர்கள் தொடங்கி பல்கலைக் கழகங்கள் வரை ஆம்! என்று தலையை ஆட்டுகிறார்கள்.
 
மிகப்பெரிய அறிவாளியான வள்ளுவர் கடவுளைக் கும்பிடாமல் கணவனைக் கும்பிடுபவள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும் என்றோ அந்தப் பெண் பெய்யவேண்டிய காலத்து பெய்யும் மழை என்றோ எழுதியிருப்பாரா?
கணவனைக் கும்பிடு என்றாலே வள்ளுவனின் வாழ்வியல் கோட்பாடுகள் எல்லாம் தோற்றுப் போய்விடுகின்றன.
 
தற்காத்து தற்கொண்டான் பேணி என்றுதானே அவன் குறள் எழுதினான்.
கணவனை ஒரு பெண் பேணிக் கொள்ள வெண்டும். கும்பிட்டுக் கொள்ள வேண்டும் அல்ல. இது திருக்குறள்.
 
தற்காத்துத் தற்கொண்டான் பேணி தகைசார்ந்த
சொற்காத்துச் சோர்விலாள் பெண்
 
இந்தக் குறளை வாழ்க்கைத் துணை நலம் என்ற அதிகாரத்திலே  தெய்வம் தொழாஅள் என்ற ஐந்தாவது குறளுக்கு அடுத்ததாகக் கொண்டு போய் வைத்தார் வள்ளுவர். கணவனைக் கும்பிடுங்கள் என்று தான் சொன்னதாக எவரும் நினைத்து விடக் கூடாது என்பதற்காக!
 
பெண்களே! முதலில் உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள்! பின்பு உங்களைத் தற்கொண்ட கணவனைப் பேணிக் கொள்ளுங்கள்! இதற்காக தகை சார்ந்த நல்ல வார்த்தைகளைப் பேசிக் கொள்ளுங்கள்! இந்த செயல்களிலே என்றும் சோர்ந்து விடாமல் விழிப்போடு என்றும் இருங்கள்! இவையே வள்ளுவ நீதி!
 
பத்துப் பாட்டில் ஒன்றாகிய பொருநராற்றுப் படையில் முடத்தாமக் கண்ணியார் என்று புலவர் ஒரு செய்தி சொல்லுவார். பகலிலும் இரவிலும் இறைச்சியை உண்ட காரணத்தால் வயலை உழுத கலப்பையைப் போலப் பற்கள் முனை மழுங்கிப் போய்விட்டனவாம்!
 
கொல்லை உழுகொழு ஏய்ப்பப் பல்லே
எல்லையும் இரவும் ஊன்தின்று மழுங்கி!
 
இது அவர் செய்யுள் அடிகள்!
 
எனவே நாமும் வள்ளுவனின் கொழுநன் தொழுது எழுவாள் என்பதற்கு கலப்பையை நன்கு கும்பிட்டுக் கொண்டு துயில் எழுவாள் என்று பொருள் கண்டால் என்ன? கொழு என்றால் கலப்பை தானே!
 
இப்படிச் சொன்னதும் அது சந்தி விதிக்குப் பிழை புணர்ச்சி விதிக்குப் பிழை யாப்பத் தவறு  என்றெல்லாம் வரிந்து கட்டுவார்கள் தமிழ்ப் பெரியார்கள். அது உண்மையல்ல. திருக்குறள் மனித வாழ்க்கைக்கு ஆனது. இலக்கணத்துக்காக எழுதப்பட்டது அல்ல.
 
அப்படி இலக்கணம் பூசினாலும் இல்முன் என்பதை முன்றில் என்று இவர்கள் புணர்த்துகிறார்களே அது போல நற்கொழு கொழுநன் ஆயிற்று என்று எடுத்துக் கொள்வோம்! எப்படிப் பார்த்தாலும் இந்தக் குறளிலே வரும் கொழுநன் கணவன் அல்ல
 
எனவே அதிகாலையில் கணவன் வயலுக்குக் கொண்டு சென்ற கலப்பையின் நினைவோடு துயில் எழுந்து அதை வணங்கி வாழ்வின் வளத்துக்குப் பொருள் ஈட்டித்தரும் ஆரம்ப நாளான இன்றைய உழவு நன்றாக அமைய வேண்டும். என் கணவனும் எருதுகளும் துன்பமுறா வண்ணம் நிலம் மென்மையாக இருக்க வேண்டும்! நீ பெய்ய மாட்டாயா என்று தினமும் வணங்கும் தெய்வத்தையே இன்று வணங்க மறந்தவளாக வானத்தைப் பார்த்து ஏங்கும் ஒரு மனைவி பெய்யென்று சொல்ல அவளின் கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து தன்னை வணங்கா விட்டாலும் தெய்வம் அவளுக்காக மழை பெய்விக்கும்!
 
இவ்வாறு பொருள் கண்டால் எவ்வளவு அழகும் ஆழமும் யதார்த்தமும் இருக்கும்! இதை விடுத்து ஏதோ தெய்வத்தை வணங்க விரும்பாதவள் போலவும் கணவனைக் கும்பிடும் பாமரப் பெண் போலவும் அப்படிக் கும்பிட்டால் மழை பெய்யும் என்பது போலவும் இந்தக் குறளின் பொருளைக் குறுக்கி வைத்திருக்கின்றோம்!
 
தொழில் சார்ந்த எண்ணங்களும் கணவன் மனைவியரிடையே உருவாக வேண்டும். உணவு அன்பு அறம் விருந்து காதல் கற்பு  என்பவற்றோடு மட்டும் இல்வாழ்வு நின்று விடுவதில்லை. அதையெல்லாம் கடந்து தொழில் வழியாலும் மனைவியின் எண்ணம் கணவனைப் பேணுவதாக அமைய வேண்டும் என வள்ளுவன் விரும்பி இருக்கலாம்.
 
பொருள் ஈட்டும் வழியில் உள்ள இடர்களையும் உணர்ந்த இலட்சியப் பெண் ஒருத்தியை இக் குறள் மூலம் படைக்க வள்ளுவன் முயன்றிருக்கக் கூடும்! அதை முறியடித்த பெருமை அன்றைய பரிமேலழகருக்கு மட்டுமல்ல இன்றைய படித்தவர்கள் கூட்டத்துக்கும் உரியதாகும்!
 
============================மறுப்புரை =======================================

 " கொழு " என்ற சொல்லுக்குக் " கலப்பை " என்று பொருள் கொள்ளவேண்டும் என்று ஆசிரியர் எழுதுகிறார் .
" கொழுநற்" என்று சொல்லை " நற்கொழு " என்று மாற்றி " நல்ல கலப்பை " என்று பொருள் கொள்ளவேண்டும் என்று தம் கருத்தைத் திணிக்கின்றார் . இது வலிந்து பொருள் கொள்ளும் முயற்சியே அன்றி வேறல்ல !

ஜெயங்கொண்டார் எழுதிய கலிங்கத்துப் பரணியில் " கடை திறப்புப் " பகுதியில் " கொழுநர் " என்ற சொல் வருகிறது .  இதற்குக்   " கணவன் " என்ற பொருள் படிப்போர்க்கு எளிதில் விளங்கும் .

வீரர்கள் கலிங்கப்போருக்குப் புறப்பட்டுப் போகிறார்கள். திரும்பி வருவோம் எனக் குறித்த காலமும் வந்தது. காத்திருக்கும் மனைவியர் இரவெல்லாம் அவர் வந்து விட்டாரா, வந்து விட்டாரா என வாயிற் கதவைத் திறந்து பார்ப்பார்கள். வரவில்லை என அறிந்து வாயிற்கதவைச் சாத்துவார்கள். மீண்டும் வந்து விட மாட்டாரா என்று திறப்பார்கள், வரவில்லை என்று அடைப்பார்கள். இரவு முழுக்க இவ்விதம் திறந்தும் அடைத்தும் திறந்தும் அடைத்தும் வாயிற்கதவின் குடுமி தேயும். ஆனால் இன்று உண்மையிலேயே வந்து விட்டோம், ஊடல் நீங்கி, கபாடம் திறவுங்கள் என்பது அந்தப் பாடல்.

வருவார் கொழுநர் எனத் திறந்தும்
வாரார் கொழுநர் என அடைத்தும்
திருகும் குடுமி விடியளவும்
தேயும் கபாடம் திறமினோ.

ஆகவே "கொழுநன் " என்பது கணவனே அன்றிக் கலப்பை அல்ல .வள்ளுவர் "பெண்வழிச் சேறலை " வெறுத்தார் ; ஆனால் கணவனைப் பெண்கள் தெய்வமாகக் கருதுவதை அவர் ஏற்றுக்கொள்கிறார் .இன்றும் தமிழ்நாட்டுப் பெண்களிடையே இந்தப் பழக்கம் இருப்பதைக் காணலாம் .

எனவே மேலே கண்ட குறட்பாவுக்கு

தெய்வத்தைத் தொழாமல் கணவனை மட்டும் தொழுகின்ற பெண்ணுக்கு இயற்கையும் ஏவல் செய்யும்; அவள் சொன்னால் மழையும் பெய்யும் என்பதே பெரும்பாலான ஆசிரியர்கள் உரையாகும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 02, 2016 2:38 pm

T.N.Balasubramanian wrote:அடப்பாவிகளா ?
அவர் பெயரை கெடுத்து ,
என் பேரையும் கெடுத்து ,
யினியவன், நமக்கு இதெல்லாம் நமக்கு அவசியமா ?

படித்ததில் பிடிக்காதது  - Page 3 SG6B44dTy6lRQtkFGSIQ+9879-Vadivelu002

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1191441

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது செந்தில் உங்க இரண்டுபேருக்கும் ஒரே நேரத்தில்.............வெச்சுட்டாரே........... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக