புதிய பதிவுகள்
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_c10ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_m10ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_c10 
29 Posts - 38%
ayyasamy ram
ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_c10ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_m10ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_c10 
21 Posts - 28%
Dr.S.Soundarapandian
ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_c10ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_m10ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_c10 
13 Posts - 17%
Rathinavelu
ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_c10ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_m10ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_c10ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_m10ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_c10 
3 Posts - 4%
Sindhuja Mathankumar
ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_c10ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_m10ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_c10 
1 Post - 1%
Guna.D
ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_c10ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_m10ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_c10 
1 Post - 1%
mruthun
ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_c10ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_m10ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_c10ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_m10ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_c10 
104 Posts - 48%
ayyasamy ram
ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_c10ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_m10ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_c10ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_m10ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_c10ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_m10ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_c10ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_m10ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_c10ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_m10ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_c10ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_m10ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_c10ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_m10ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_c10 
2 Posts - 1%
manikavi
ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_c10ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_m10ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_c10 
2 Posts - 1%
mruthun
ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_c10ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_m10ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu 28 Jan 2016 - 10:41

ரத்தன் நவால் டாடா (Ratan Naval Tata, பிரித்தானிய இந்தியாவில் பம்பாயில், 1937 ஆம் ஆண்டு டிசம்பர் 28 அன்று பிறந்தவர்), ஜாம்சேத்ஜி டாட்டா நிறுவிய, அவரது குடும்பத்தினரின் பிற்கால சந்ததியினரின் தொகுதியாக விரிவாக்கிய தொழில் திரளாக விளங்கும், இந்தியாவின் மிகப்பெரிய தொழிற்திரளான டாடா குழுமத்தின் தற்போதைய தலைவராக உள்ளார். அவர், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டாடா பவர், டாடா கல்சல்டன்சி சர்வீஸஸ், டாடா டீ, டாடா கெமிக்கல்ஸ், தி இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி மற்றும் டாடா டெலிசர்வீசஸ் ஆகிய பெரும் டாடா நிறுவனங்களுக்கும் தலைவராக பொறுப்பேற்று உள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை தொகு

மும்பையின் வளமும் புகழும் மிகுந்த டாடா குடும்பத்தில் ரத்தன் டாடா பிறந்தார். அவர் சூனு மற்றும் நவால் ஹார்முஸ்ஜி டாடா ஆகியோரின் மகனாகப் பிறந்தார். ரத்தன், டாடா குழும நிறுவனர் ஜாம்செட்ஜி டாடா வின் கொள்ளுப் பேரனாவார். ரத்தனின் குழந்தைப்பருவம் இடர்ப்பாடுகள் நிறைந்ததாக இருந்தது. 1940-ஆம் ஆண்டுகளின் இடையே அவரது பெற்றோர்கள் பிரிந்த போது அவருக்கு ஏழு வயதாகவும் அவரது இளைய சகோதரர் ஜிம்மிக்கு ஐந்து வயதாகவும் இருந்தது. அவரது அன்னை குடும்பத்திலிருந்து வெளியேறியபின், ரத்தனையும் அவரது சகோதரரையும் அவர்களது பாட்டியார் லேடி நவஜிபாய் வளர்த்தார்.

ஆரம்பகாலத் தொழில் வாழ்க்கை தொகு
ரத்தன் டாடா, 1962 ஆம் ஆண்டில் கார்நெல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்புப் பொறியியலில் பிஎஸ்சி இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றார். பின்னர், 1975 ஆம் ஆண்டில் ஹார்வர்ட் வணிகப் பள்ளியில் உயர் மேலாண்மை பட்டம் பெற்றார்[2]. ஜே. ஆர். டி. டாடா வின் அறிவுரையின்படி, ஐபிஎம் நிறுவனத்தில் கிடைத்த வேலையை உதறி விட்டு அவர் 1962 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டாடா குழுமத்தில் சேர்ந்தார். அவர் முதலில் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்ற ஜாம்ஷெட்பூருக்கு சென்றார். அவர் பிற உடலுழைப்புப் பணியாளர்களுடன் (blue-collar employees) சேர்ந்து சுண்ணாம்புக்கல் வாருதல் மற்றும் சூளைகளைக்[3] கையாளும் பணிகளைச் செய்தார். கூச்சம் நிறைந்தவரான ரத்தன் டாடா, சமூகக் கவர்ச்சி இதழ்களில் மிக அபூர்வமாகவே தோன்றுவார். பல ஆண்டுகளாக, மும்பை யின் கொலாபா மாவட்டத்தில், புத்தகங்களின் நெரிசல் மிகுந்த, நாய்கள் நிரம்பி வழியும் விடலைக் குடியிருப்பில் (bachelor flat) வாழ்ந்த அவர், வியக்கத்தக்க பெருந்தகையாக விளங்குகிறார்.[4][5]

தொழில் வாழ்க்கை தொகு

1971 ஆம் ஆண்டில், மிக மோசமான நிதி நெருக்கடியில் இருந்த தி நேஷனல் ரேடியோ அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனி லிமிடெட் (Nelco) நிறுவனத்தின் பொறுப்பு இயக்குனராக ரத்தன் பொறுப்பேற்றார். நுகர்வோர் மின்னணு சாதனங்கள் உற்பத்தி செய்வதைத் தவிர்த்து, உயர் தொழில்நுட்பப் பொருட்களை உருவாக்க முதலீடுகளை அந்நிறுவனம் செய்ய வேண்டும் என்று ரத்தன் யோசனை கூறினார். வழக்கமான ஆதாயப் பங்குகளைக் கூட ஒழுங்காக வழங்காத நெல்கோ நிறுவனத்தின் நிதி நிலை வரலாற்றைக் கருத்தில் கொண்ட ஜேஆர்டி, இந்த ஆலோசனையை ஏற்பதில் தயக்கம் காட்டினார். மேலும், ரத்தன் பொறுப்பை ஏற்றபோது நெல்கோ நிறுவனம் நுகர்வோர் மின்னணு சாதனச் சந்தையில் 2 சதவீதப் பங்கும் விற்பனையில் 40 சதவீத இழப்பெல்லையும் கொண்டிருந்தது. ஆயினும், ஜே.ஆர்.டி., ரத்தனின் ஆலோசனைகளைப் பின்பற்றினார்.

1972 ஆம் ஆண்டு முதல் 1975 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், படிப்படியாக நெல்கோவின் சந்தைப் பங்கு 20 சதவீதத்தை எட்டியது. தனது இழப்புகளையும் அந்நிறுவனம் மீட்டெடுத்தது. ஆனால், 1975 ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்ததுடன் பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 1977 ஆம் ஆண்டில் தொழிற்சங்கப் பிரச்சினைகள் தோன்றின. எனவே, தேவை அதிகரித்தபோதும் அதற்கேற்ப உற்பத்தி பெருகவில்லை. இறுதியில் டாடாக்கள் தொழிற்சங்கங்களை எதிர்த்தனர். ஒரு வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஏழு மாதக் கதவடைப்பு நடந்தேறியது. ரத்தன், நெல்கோவின் அடிப்படைத் திறமைகளைத் தொடர்ந்து நம்பிக்கையுடன் ஆதரித்த போதும், அவரது முயற்சி தாக்குப்பிடிக்கவில்லை.

1977 ஆம் ஆண்டில், டாடா குழும வசமிருந்த எம்ப்ரஸ் மில்ஸ் துணி ஆலை, ரத்தனிடம் ஒப்படைக்கப் பெற்றது. அவர் அந்நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றபோது, அந்நிறுவனம் டாடா குழுமத்தின் நொடிந்த சில நிறுவனங்களுள் ஒன்றாக இருந்தது. ரத்தன் அதை மீட்டெடுத்ததுடன் ஆதாயப் பங்கும் அறிவித்தார். ஆயினும், குறைந்த தொழிலாளர் சார்புள்ள நிறுவனங்களிடமிருந்து வந்த போட்டியின் விளைவாக பல நிறுவனங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. எம்ப்ரஸ் ஆலையைப் போன்று அதிகமான தொழிலாளர் படைகளைக் கொண்ட, நவீனமயமாக்கலுக்கு மிகவும் குறைவாக செலவழித்த நிறுவனங்களும் அவற்றில் அடங்கும். நிறுவனத்தில் ஒரு சிறு முதலீட்டை மேலும் செய்ய வற்புறுத்தினார், ஆனால் அது போதவில்லை. முரட்டுத்தன்மை வாய்ந்த நடுத்தரப் பருத்தித் துணியையே எம்ப்ரஸ் ஆலை உற்பத்தி செய்தது. இவ்வகைப் பருத்தித் துணிக்கான சந்தை பாதிப்புக்கு உள்ளாகியதால், எம்ப்ரஸ் ஆலை அதிக இழப்புக்குள்ளாகியது. நீண்ட காலத்திற்கு நிதி உதவிகளை, குழுமத்தின் பிற நிறுவனங்களில் இருந்து மாற்றி வழங்க டாடாவின் தலைமையகமான பம்பாய் ஹவுஸ் விரும்பவில்லை. எனவே, சில டாடா இயக்குனர்கள், குறிப்பாக நானி பல்கிவாலா, ஆலையை மூட முடிவு செய்தனர். இறுதியில், 1986 ஆம் ஆண்டில், ஆலையை மூடினார்கள். அம்முடிவால் ரத்தனுக்கு மிகுந்த மனக்கசப்பு ஏற்பட்டது. பின்னாளில், ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில், வெறும் ஐம்பது இலட்சம் ரூபாய் இருந்திருந்தால் எம்ப்ரஸ் ஆலையை சீராக்கி நடத்தியிருக்கலாம் என்று அவர் கூறினார்.

1981 ஆம் ஆண்டில், குழுமத்தின் மற்றொரு பங்குதார நிறுவனமான டாடா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குனராக ரத்தன் பொறுப்பேற்றார். அந்நிறுவனத்தை, குழுமத்தின் செயல்திட்டங்களுக்கான சிந்தனைக் கொள்கலனாகவும், உயர் தொழில்நுட்ப வர்த்தகங்களுக்கான ஆக்க முயற்சிகளை மேற்கொள்ளும் நிறுவனமாகவும் மாற்றுவது அவரது பொறுப்பானது.

1991 ஆம் ஆண்டில், அவர் ஜே.ஆர்.டி. டாடா விடமிருந்து குழுமத் தலைவர் பொறுப்பை ஏற்றார். வயதானவர்களை வெளியேற்றி இளைய மேலாளர்களை நியமித்தார். அதன் பிறகு, டாடா குழுமத்தின் எதிர்காலத்தை மாற்றியமைப்பதில் அவர் பெரும் பங்காற்றினார். இன்று, இந்திய பங்குச் சந்தையில் உள்ள வணிக நிறுவனங்களில் மிக அதிகமான சந்தை முதலீடு உள்ளதாக டாடா குழுமம் திகழ்கிறது.

ரத்தனின் வழி காட்டுதலில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பொது நிறுவனமானது. டாடா மோட்டார்ஸ் நியூ யார்க் பங்குச் சந்தை யில் பட்டியலானது. 1998 ஆம் ஆண்டில், டாடா மோட்டார்ஸ் அவரது சிந்தனையில் பிறந்த டாடா இண்டிகாவை அறிமுகப்படுத்தியது.

2007 ஆம் ஆண்டு ஜனவரி 31 அன்று, ரத்தன் டாடாவின் தலைமையின் கீழ், டாடா சன்ஸ் நிறுவனம், எஃகு மற்றும் அலுமினியம் தயாரிக்கும் ஆங்கிலோ-டச்சு நிறுவனமான கோரஸ் குழுமத்தைக் கைப்பற்றியது. இக்கைப்பற்றல் மூலம் ரத்தன் டாடா இந்திய வணிகக் கலாச்சாரத்தின் புகழ்பெற்ற ஆளுமையானார். இந்த இணைப்பு உலகிலேயே ஐந்தாவது பெரிய எஃகு உற்பத்தியாளரை தோற்றுவித்துள்ளது.

2008 ஆம் ஆண்டு மார்ச் 26 அன்று, ரத்தன் டாடாவின் தலைமையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஜாகுவார் மற்றும் லாண்ட் ரோவர் நிறுவனத்தை ஃபோர்டு மோட்டார் நிறுவனத்திடமிருந்து வாங்கியது. ஒன்றாம் தரமாக உலகமே போற்றும் பிரித்தானிய தர அடையாளங்களான ஜாகுவார் மற்றும் லாண்ட் ரோவர் ஆகிய இரண்டும் 1.15 பில்லியன் பவுண்டுக்கு (2.3 பில்லியன் டாலர்) விலை போனது இந்தியாவுக்கு பெருமை ஈட்டித் தந்தது.


டாடா நானோ கார், 2008
ஒரு இலட்சம் ரூபாய் விலையுள்ள ஒரு தானுந்தை மக்களுக்காக தயாரித்து விற்பது ரத்தன் டாடாவின் நீண்ட காலக்கனவாக இருந்தது. (1998 ஆம் ஆண்டில், தோராயமாக 2200 அமெரிக்க டாலர்கள்; இன்று 2000 அமெரிக்க டாலர்கள்) வார்ப்புரு:ConvertToUSD. 2008 ஆம் ஆண்டு ஜனவரி 10 அன்று புது தில்லியில் நடைபெற்ற மோட்டார் வாகனப் பொருட்காட்சியில் அந்த தானுந்தை அறிமுகப்படுத்தியதுடன் அவரது கனவு நனவானது. டாடா நானோ வின் மூன்று மாதிரிகளை காட்ச்சிக்கு வைத்தார்கள். ஒரு இலட்சம் ருபாய் விலையில் ஒரு தானுந்தியை தயாரித்து தனது வாக்குறுதியை ரத்தன் டாடா நிறைவேற்றினார். அத்துடன், தான் வாக்களித்தபடி குறிப்பிட்ட விலையில் தானுந்தை உற்பத்தி செய்ததைக் குறிப்பிடும் வகையில் "ஒரு வாக்குறுதி ஒரு வாக்குறுதியே" என்றும் கூறினார். ஆயினும், காரின் விலை பின்னர் அதிகரித்துள்ளது. அண்மையில் மேற்கு வங்கத்தில் உள்ள சிங்கூரில், நானோ உற்பத்திக்கான அவரது தொழிற்சாலைக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்தபோது, அம்மாநிலத்தை விட்டு வெளியேற அவர் எடுத்த முடிவை இந்திய வணிக ஊடகங்களும் ஆங்கிலம் பேசும் நடுத்தர வர்க்கமும் வரவேற்றன. ரத்தன் டாடா, புத்ததேப் பட்டாச்சார்ஜியின் தலைமையிலான இடதுசாரி அரசுடன் சேர்ந்துகொண்டு, மக்களை அவர்களது நிலத்தை விட்டு பலவந்தமாக வெளியேற்றுவதாக பானர்ஜி குற்றம் சாட்டினார்.

மேற்கு வங்கத்தில் சில காலம் இருந்தது சர்ச்சைக்குள்ளான பிறகு, ரத்தன் டாடா தனது குழுவினருடன் 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று, அவர்களது ஒரு இலட்சம் ரூபாய் நானோ கார் திட்டத்தை அகமதாபாத் அருகே உள்ள சானந்துக்கு மாற்றினர். 2000 கோடி ரூபாய் (20 பில்லியன் ரூபாய்) முதலீட்டில், உலகின் மிக மலிவான கார், தற்காலிகமாக அமைந்த தொழிற்சாலையில் இருந்து குறித்த தேதியில் தயாரித்து வழங்குவோம் என்றும் அறிவித்தார். தொழிற்சாலையை அமைப்பதற்கு, குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி அவருக்கு இலவச நிலம் உள்ளிட்ட பெரும் சலுகைகளை வழங்கினார்.

மையப் பகுதியில் அமைந்துள்ள 1,100 ஏக்கர்கள் (4.5 km2) நிலத்தை விரைவாக ஒதுக்கீடு செய்ததற்காக மோடியை ரத்தன் டாடா பாராட்டினார், நிறுவனத்திற்கு மிகவும் அவசரமாக புதிய இடம் தேவைப்பட்டதால், மாநிலத்தின் நற்பெயரைக் கணக்கில் கொண்டு அம்மாநிலத்தை தேர்ந்தெடுத்ததாக கூறினார்.

நானோ தானுந்து, 2009 ஆம் ஆண்டு மார்ச் 23 அன்று, பல மாதங்களுக்கு முன்னரே செய்த முன்பதிவுகளுடன், மிகுந்த கோலாகலத்திற்கிடையே வெளியானது.

சொந்த வாழ்க்கை தொகு

[6] திரு ரத்தன் டாடா ஒரு உலோக நீல வண்ண மெசெராட்டி மற்றும் பெர்ராரி கலிபோர்னியா வாகனங்கள் வைத்துள்ளார். ஜேஆர்டி, ஓட்டுனர் வைத்துக்கொள்ளாமல் தனது சொந்த பியட் காரையே வேலைக்குச் செல்லவும் திரும்பவும் பயன்படுத்தியதைப் போலவே[6], ரத்தன் டாடாவும் தனது பழைய மாதிரி மெர்சடிஸ் செடானை தானாக ஓட்டிச் செல்வதையே விரும்புகிறார். அவர் சில சமயங்களில் தனது சொந்த ஜெட் விமானத்தில் பறப்பதை விரும்புகிறார். வணிக விமானப் போக்குவரத்தில்[7] தற்போது பயன்பாட்டில் இல்லாத, வழக்கில் இல்லாத பால்கன் ஜெட் விமானம் ஒன்று அவரிடம் உள்ளது. அவர் திருமணம் புரிந்து கொள்ளவில்லை.[8]

ரத்தன் டாடா பெரும்பாலும் குழுமத்தின் பணி வழித் தலைவர் அல்லது முதன்மைச் செயல் அலுவலராக உள்ளார். குழுமத்தின் பங்குதாரர் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தில் உள்ள அவரது மூலதனப் பங்குகளில் பெரும்பாலானவை, குடும்ப வழியில் பெற்ற பங்குகளே ஆகும். அவரது பங்கு ஒரு சதவீதம் அல்லது அதற்கும் குறைவானதே. அவரது தனிப்பட்ட பங்கு மதிப்பு, தோராயமாக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேறும். [சான்று தேவை]டாடா சன்ஸின் மூலதனப் பங்குகளில் ஏறக்குறைய 66 சதவீதம், அசல் ஜாம்செட்ஜி குடும்ப உறுப்பினர்கள் நிறுவிய, பொதுநல அறக்கட்டளைகளிடம் உள்ளன. இதில் மிக அதிகமான பங்கு, ஜாம்செட்ஜியின் மைத்துனரான ஷபூர்ஜி பல்லோஞ்சி மிஸ்த்ரி வழியிலான குடும்பத்தினரிடம் உள்ளது. பங்குதாரர்களான அறக்கட்டளைகளிலேயே பெரியவை, சர் தோரப்ஜி டாடா அறக்கட்டளை மற்றும் சர் ரத்தன் டாடா அறக்கட்டளை (இது ரத்தன் டாடாவிலிருந்து வேறுபட்டது) ஆகிய இரண்டும் ஆகும். இவை ஜாம்செட்ஜி டாடாவின் மகன்களின் குடும்பத்தாரால் தோற்றுவித்தவை. ரத்தன் டாடா, சர் ரத்தன் டாடா அறக்கட்டளையின் அறங்காவலர் குழுவில் உறுப்பினராகவும், சர் தோராப்ஜி டாடா அறக்கட்டளையின் தலைவராகவும் உள்ளார்.[சொந்தக் கருத்து?]. சர் ரத்தன் டாடா, உலக சுற்றுச் சூழல்மாற்ற சகாப்தத்தில், இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அடையாள முகமாகவும் அறியப்படுகிறார்.

நன்றி விக்கிபீடியா.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri 29 Jan 2016 - 1:09

நல்ல தகவல் நன்றி பகிர்வுக்கு




ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Mரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Uரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Tரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Hரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Uரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Mரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Oரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Hரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Aரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Mரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  Eரத்தன் டாடா பிறந்த தினம் இன்று  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக