புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Poll_c10கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Poll_m10கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Poll_c10கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Poll_m10கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Poll_c10 
1 Post - 14%
Manimegala
கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Poll_c10கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Poll_m10கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Poll_c10கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Poll_m10கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Poll_c10கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Poll_m10கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Poll_c10கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Poll_m10கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Poll_c10 
11 Posts - 4%
prajai
கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Poll_c10கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Poll_m10கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Poll_c10 
9 Posts - 4%
Jenila
கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Poll_c10கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Poll_m10கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Poll_c10கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Poll_m10கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Poll_c10கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Poll_m10கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Poll_c10 
2 Posts - 1%
jairam
கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Poll_c10கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Poll_m10கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Poll_c10கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Poll_m10கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Poll_c10கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Poll_m10கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Jan 26, 2016 5:45 pm


மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல்... இராணுவப்புரட்சி மூலம் சண்டையின்றி இரத்தமின்றி ஆட்சியை கைப்பற்றிய...கதாஃபி...(லிபிய மக்களுக்கு) மிகவும் நல்ல ஆட்சியாளர்தான்..!'தான் மட்டுமே என்றேன்றும் லிபியாவை ஆளவேண்டும்' என நினைகாத வரை..!கதாஃபி...(லிபிய மக்களுக்கு) மிகவும் நல்ல ஆட்சியாளர்தான்..! தந்நாட்டு மக்களை அநியாயமாக கொன்று குவித்து கொலைகாரன் ஆகாத வரை..!இந்த லிபிய மக்கள் கடாஃபியின் கீழ் எப்படி வாழ்ந்தார்கள்..? ஆட்சியாளரான கடாஃபியின் ஆட்சி எப்படி இருந்தது..? அது பற்றி மேற்கத்திய சியோனிச ஊடகங்களால் மறைக்கப்பட்ட உண்மைகளை இனியும் நாம் அறியாதிருக்க கூடாது சகோ..! அவற்றில் சில உங்கள் ஆச்சர்ய பார்வைக்கு..!


'ஒவ்வொரு லிபியரிடமும் ஒரு வீடு இருந்தாக வேண்டும்' என்று அறைகூவி, அப்படியே அரசின் மூலம் மக்களுக்கு வீடு கட்டிக்கொடுத்தும் வந்தார்..! எப்படி..? புதிதாக திருமணம் ஆன தம்பதியருக்கு அரசு மொய் வைக்கும்..! எவ்வளவு தெரியுமா..? 60,000 லிபிய தினார் (50,000 அமெரிக்க டாலர் = அதாகப்பட்டது... சுமார் 24 லட்ச ரூபாய்ங்க ..!) எதுக்காம்..? அவர்களுக்கான ஒரு வீடு வாங்க..! மதுவை தடை செய்த கடாஃபி, லிபியாவில் கல்வி முற்றிலும் இலவசம் என்றார்.

அவர், 1969-ல் ஆட்சியை கைப்பற்றியபோது 25 % இருந்த லிபிய நாட்டின் கல்வி கற்றோர் எண்ணிக்கை... இப்போது... 83 %..! நாட்டின் மக்கள் தொகையில் 25% லிபியர்கள் பல்கலைக்கழக பட்டம் பயின்றவர்கள்..!  லிபியருக்கு தேவைப்படும் கல்வியோ மருத்துவமோ லிபியாவால் தர இயலவில்லை எனில், லிபிய அரசு செலவில் இலவசமாக வெளிநாட்டிற்கு அனுப்பிவைத்து அவை தரப்படும்..! அதுமட்டுமா..? அகாலத்தில்... மாசத்துக்கு 2,300 அமெரிக்க டாலர் (சுமார்1,12,000 ரூபாய்) பயணப்படியாகவும் அவர்களுக்கு அளிக்கப்படும்..! லிபியாவில் படித்து பட்டம் பெற்ற ஒரு லிபிய பட்டதாரிக்கு 'வேலை இல்லை' எனில்,அந்த பட்டப்படிப்புக்கு


தக்க வேலை கிடைத்தால் என்ன சம்பளம் அவருக்கு கிடைக்குமோ, அது அப்படியே அரசின் கஜானாவிலிருந்து அந்த வேலை இல்லா பட்டதாரிக்கு 'படி'-யாக வந்து சேர்ந்துவிடும்..! EB பில் என்றால் என்னவென்றே லிபியர்களுக்கு தெரியாதாம்..! லிபியாவில் தடை இல்லாத மின்சாரம் உண்டு... முற்றிலும் இலவசமாக..! மாதம் தோறும் அரசு ரேஷன் கடையில் பொருட்கள் மிகக்குறைந்த விலைக்கு வாங்கிக்கொள்ளலாம். இந்த சலுகை குடிமகன்களுக்கு மட்டுமல்ல..!வெளிநாட்டிலிருந்து அங்கே சென்று வேலை பார்ப்பவர்களுக்கும்..! (இத்தகவல்- லிபியாவில் வேலை செய்துவிட்டு பின்னர் என் நிறுவனத்தில் வேலை செய்த பொறியாளர் திரு.D.S.V.பிரசாத் சொன்னது)


லிபியாவின் எந்த வங்கியிலும் கடன் பெற்ற லிபியரிடம் அந்த கடனுக்கான வட்டியேவசூலிப்பது கிடையாது..! அசலை மட்டும் அவர் திருப்பித்தந்தால் போதும்..! ஒரு லிபியர் விவசாயம் செய்ய நாடினால்... 'வாங்க வாங்க' என்று அரசே வரவேற்று அவருக்கு தேவையான நிலம் தந்து, பண்ணை வீடு தந்து, விதை தந்து, உரம் தந்து, பாசன வசதி தந்து... ம்ம்ம்... எல்லாமே இலவசம்ங்க சகோ..! ஒரு லிபியர் கார் வாங்க எண்ணினால்... என்ன வகை காராக இருந்தாலும் சரி... உடனேஅரசு  50% பில்லை கட்டிவிடும்..!

அப்போ...பெட்ரோல் விலை..? ஹி... ஹி... லிட்டர் ஆறேமுக்கால் ரூபாய்ங்க சகோ..! (அட..! சவூதியை விட முப்பது பைசா விலை குறைவா இருக்கே..!) லிபியாவுக்கு பிறநாட்டிலோ... IMF-இலோ எங்குமே கடனே இல்லையாம்..! ஆனால், 150பில்லியன் அமெரிக்க டாலருக்கு லிபியாவுக்கு வரவேண்டிய பணம்தான் வெளியே  நிற்கிறதாம்..! ஆட்சியை கைப்பற்றியவுடனேயே, லிபியாவில் இருந்த அமெரிக்காவின் மிகப்பெரிய விமானதளத்தை மூடச்செய்து, எண்ணெய் கம்பெனிகளை பன்னாட்டு ஏகாதிபத்திய கம்பெனிகளின் கரங்களிலிருந்து பறித்து அரசின் பங்குகளை உயர்த்தி அவற்றை லிபிய அரசு வசமாக்கினார்.,

கடாஃபி.  அதிலிருந்து உலகிற்கு விற்கின்ற எண்ணெயில்ஒவ்வொரு லிபியருக்கும் கூட அவருக்கு உரிய பங்கு உண்டு என்றார். அது மக்களின் தனி வங்கிக்கணக்கில் சேர்ந்து விடும். ஒரு தாய் ஒரு குழந்தையை ஈன்றேடுத்தால் அவருக்கான லிபிய அரசின் சன்மானம் சுமார் 2.5 லட்சம் ரூபாய்..! 40 ஸ்லைஸ் வெட்டுத்துண்டுகள் போடப்பட்ட ஒரு மிகப்பெரிய பிரட் பாக்கெட் விலை ஏழு ரூபாய் முப்பது காசுதான் லிபியாவில் விற்கிறது..! ஆப்ரிக்காவிலேயே நம்பர் ஒன் பொருளாதாரம் & GDP. நீரற்ற வறண்ட நாடான லிபியாவின் முழுப்பாலைவன மக்களும் தண்ணீர் பெற வேண்டி... உலகிலேயே மிகப்பெரிய நீர்ப்பாசன திட்டம் (Great Man-Made River project) நிறைவேற்றியவர் கடாஃபி மட்டுமே..! கடாஃபி..! ஒருகாலத்தில் லிபிய மக்களின் புரட்சித்தலைவர்..! இப்பேர்பட்ட சிறந்த ஆட்சியாளர்தான்...

சிறந்த ஆட்சியாளராக இருந்தவர்தான் கடாஃபி..! எகிப்தின் ஹோஸ்னி முபாரக் போலவோ, டுனிசியாவின் பென் அலி போலவோ நிர்வாகத்திறமை அற்றவரோ... ஊழல்வாதியோ அல்லர்..! இவர்களுக்கு இடையே உள்ள ஒரே பெரிய வித்தியாசம்... அமெரிக்க-பிரிட்டிஷ்-ஐரோப்பிய நாடுகளின் ஏகாதிபத்தியத்துக்கு

முழுமையாக எவ்வித நிபந்தனையும் விதிக்காமல் அடிபணியாதது மட்டுமே..!  இவரைப்போயா... இவ்வளவு சிறந்த சர்வாதிகாரியையா(!?)  லிபிய மக்கள் எதிர்த்தனர்..? அல்லது எதிர்த்த புரட்சியாளர்களை கொல்லவும் அனுமதித்தனர்..? ஆமாம்..! ஏன்..? லிபிய புரட்சியாளர்கள்... அவர்களும் மிகவும் நல்லவர்கள் தான்..! ஒரு கொலைகார சர்வாதிகாரியை கொல்ல இன்னொரு கொலைபாதக நேட்டோ பயங்கரவாதிகளின் உதவியை ஒப்புக்கொள்ளும் வரை..! கதாஃபி... (அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்திய பயங்கரவாதிகளுக்கு) மோசமான ஆட்சியாளர் ஆனார்..! எப்போது..?

"லிபிய மற்றும் அரபுலக எண்ணெய்க்கான வர்த்தகம் இனி அமெரிக்க டாலரில் அல்ல... தங்கத்தில் தான் இருக்க வேண்டும்" என்று சொல்லும் வரை..! முன்னர் நடந்த இதையும் கூட... மறந்திருக்க மாட்டீர்கள் சகோ..! அன்று... அமெரிக்காவின் நண்பனாக இருந்து அவர்களின் ஆயுதங்கள் மூலம் ரஷ்ய ஆயுதங்கள் வைத்திருந்த ஈரானுடன் போர் புரிந்த இராக்கின் அதிபர் சதாம் ஹுசேன், தன் எண்ணெய் வெறியால் பின்னர் குவைத்தை ஆக்கிரமித்ததால் அமெரிக்காவின் எதிரியானார்..!  விளைவு..?  அமெரிக்க "நவீன ஆயுதங்களுக்கும்", அமெரிக்க "அதிநவீன ஆயுதங்களுக்கும்" இடையே வளைகுடா போர் மூண்டது..!  அதன் முடிவில், குவைத் விடுதலை அடைந்தவுடன், அந்த ஆத்திரம்... "இனி இராக்கிய எண்ணெய் பரிவர்த்தனை புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் 'ஈரோ' நாணயத்தில்தான் நடைபெறும்" என்று சதாம் ஹுசேன் அறிவித்த பின்னர், "WMD(Weapons of Mass Destruction) வைத்திருக்கிறார் சதாம் ஹுசேன்" என்று பொய்கூறி இராக்கில் நுழைந்ததே அமெரிக்க பிரிட்டிஷ் படைகள்..!

(ராஜீவ் சந்திரசேகரனின் Green Zone என்ற ஹாலிவுட் படம் பாருங்கள் சகோ..!) 'ஈரோ'விற்கே அந்த கதி என்றால்... கடாஃபி, தங்கம் கேட்டால்..? இதோ... ஆப்ரிக்காவில் ஒரு இராக்/ஆப்கானிஸ்தான்... உருவாக்கப்படுறது..! முன்னர் தாலிபானிடம் ரஷ்ய ஆதரவு ஆப்கானிய நஜிபுல்லா அரசை எதிர்த்து போரிடச்சொல்லி டன் டன்னாக வெடி பொருட்களையும் நவீன ஆயுதங்களையும் ஒசாமா மூலம் கொண்டு போய் ஆப்கானில் கொட்டி... நடுத்தெருவில் நஜிபுல்லாவை தூக்கில் போடவைத்தது போலவே... இப்போதும்  ஆயுதங்களை கொட்டியுள்ளார்கள் லிபியாவில்..!

அதேபோல நடுத்தெருவில் அடிபட்டு, உதைபட்டு, இழுபட்டு, சுடப்பட்டு கொல்லப்பட்டார் கடாஃபி..! ஆட்சியாளர்களுக்கு ஒரு படிப்பினையாக...! சில மாதங்களுக்கு முன்னர் நிராயுதபாணியாக தெருவில் இறங்கி புரட்சி செய்த குடுகுடு கிழவன் முதல், நடக்கத்தெரிந்த சிறுவன் கைகளில் எல்லாம் இன்று புதுப்புது நவீனரக ஆயுதங்கள்,  வெடிகுண்டுகள் எல்லாம் எப்படி முளைத்தன..?  இங்கே photo gallery பாருங்கள். மகிழ்ச்சியில் குதித்து குதித்து வானத்தை நோக்கி "டம்... டம்" என்று சுடுகிறார்கள்..! அதில் ஒரு அதிபயங்கர துப்பாக்கி குண்டு வானில் சென்று வெடிக்கிறது..!!! என்னவொரு பயங்கர ஆயுதம்..!!! இந்த குண்டை உடலில் ஒருவன் வாங்கினால் பிழைக்க வழியே இல்லையே சகோ..?

யு-ட்யூபில் அணிவகுக்கும் ஆதாரங்கள் இவை..!  இவைகளை எல்லாம் தயாரித்து அன்போடும் பாசத்தோடும் நிராயுதபாணியாக நின்ற லிபியர்கள் கைகளில் அளித்த அந்த அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் இப்போது அவற்றை திரும்பியா வாங்கிக் கொள்வார்கள்..? பதிலுக்கு அந்த பயங்கரவாதிகள் இந்த கொலைகார புரட்சியாளர்களிடம்  பிரதியுபகாரமாக கச்சா எண்ணெய் அல்லவா கேட்பார்கள்..? இதோ... இப்போதே ஆரம்பித்தும் விட்டார்களே..! இதனை லிபியர்கள் எதிர்த்தால்..? அப்போது, தங்கள் கைகளில் இருக்கும் அந்த ஆயுதங்களை லிபியர்கள் இனி என்னதான் செய்வார்கள்..? அடப்பாவமே..! இதோ... ஆப்ரிக்காவில் இன்னொரு ஆப்கன்/இராக் உருவாக்கப்பட்டு விட்டதா..!?


இனி அமைதி காக்கும் நேட்டோ கூட்டுப்படைகள் லிபியாவில்  நிரந்தரமாக தங்கிவிடுமா..? லிபியர்கள் தங்கள் தலையில் அள்ளிப்போட்டுக்கொண்டது அமெரிக்க மண் அல்ல... அவர்களின் மலம்..! எத்தனை முறை குளித்தாலும் பல வருடங்கள் ஆகுமே... பயங்கரவாதம் எனும் அந்த துர்நாற்றம் நீங்கி... அமைதி எனும் அந்த வாசனை மீண்டும் வீச..! எகிப்திலும்  துனிசியாவிலும் அமெரிக்க நேட்டோ பயங்கவாதிகள் நுழையாததற்கு அங்கே லிபியா மாதிரி எண்ணெய் வளம் இல்லாமை மட்டுமே காரணம் அல்ல சகோ..!

அந்தந்த நாட்டு அறிவுடைய ராணுவங்களும் மக்களும்தான் காரணம்..! அரசுக்கு எதிரான புரட்சியாளர்கள் மீது ஏவப்பட்ட பென் அலியின் கொலைபாதக அடக்குமுறை கட்டளையை துனிசியாவின் ராணுவம் ஏற்கவில்லை.  அரசுக்கு எதிரான புரட்சியாளர்கள் மீது ஏவப்பட்ட ஹோஸ்னி முபாரக்கின் கொலைபாதக அடக்குமுறை கட்டளையை எகிப்தின் ராணுவமும் ஏற்கவில்லை. அதனால்... அங்கே மக்கள் புரட்சியும் வெற்றிபெற்றது..! சர்வாதிகார ஆட்சியாளர்களும் உயிரோடு நாட்டைவிட்டு தப்பித்தார்கள்..!      

ஆனால், லிபியாவின் ராணுவம் கடாஃபியின் கொலைபாதக அடக்குமுறை கட்டளையை ஏற்றது..! நிராயுதபாணியாக நின்ற புரட்சியாளர்களையும் பொதுமக்களையும் ஈவிரக்கமின்றி அநியாயமாக சுட்டுக்கொன்றது..!      இதன்  விளைவுதான் பழிதீர்க்க பொதுமக்களுக்கும் புரட்சியாளர்களுக்கும் ஆயுதங்கள் தேவைப்பட்டது.  திடுமென அவை அவர்களின் கைகளில் விதம் விதமாக தரப்பட்டன..! வெடித்தன..! பழிவாங்கும் உணர்ச்சிக்கு முன்னால்... கற்ற கல்வியோ... அனுபவித்த வாழ்க்கையோ... எதுவுமே அவர்களை சிந்திக்க வைக்கவில்லை..! லிபியர்களின் அறிவு அப்போது ஏனோ வேலை செய்யவில்லை..!      

அதனால்... கடாஃபி, அமெரிக்க நேட்டோ பயங்கரவாதிகளால் 'கொல்லவைக்கப்பட்டார்'...!    அல்லது...     புரட்சியாளர்களால் நேரடியாக கொல்லப்பட்டார்..!    அல்லது...   அமெரிக்க நேட்டோ பயங்கரவாதிகளால் மறைமுகமாக கொல்லப்பட்டார்..!    பின்வருவன எல்லாமே இனி... மற்ற சர்வாதிகாரிகளுக்கு சிறந்த படிப்பினைகள்..!  தான்மட்டுமே நாட்டை ஆளவேண்டும் என்று எண்ணாதீர்கள்..!       என்னதான் சிறப்பாக ஆட்சி செய்தாலும், தம்மைவிட வேறொருவர் இன்னும் சிறப்பாக ஆட்சி செய்வார் என்று நம்புங்கள்..!      

மக்களில் ஒரு சாரார் தம்மை- தம் ஆட்சியை எதிர்த்தால்... பேசாமல் அதையே ஒரு வழக்காக நீதி மன்றத்தில் வைத்து, ஆட்சியாளர் குற்றவாளிக்கூண்டில் ஏறி தம் தரப்பு வாதங்களை வைத்து இருவருக்கும் பொதுவான நம்பகமான நீதிபதி கொண்டு அமைதியான முறையில் தீர்வு காணுங்கள்..! அதை நேரடி ஒளிபரப்பில் நாட்டு மக்களுக்கு காண-கேட்க அளியுங்கள்..!        எக்காரணம் கொண்டும் எதிர்க்கும் பொதுமக்கள் மீது கொலைபாதக அடக்குமுறை செலுத்தி கொன்று குவிக்காதீர்கள்..!      

தன்னை சுற்றி எப்போதும் பெண்களை (பாதுகாவலர்கள் எனும் பெயரில்) வைத்துக்கொண்டு ஆடம்பரமாகவும் அசிங்கமாகவும் மக்களுக்கிடையே அநீதி இழைத்துக்கொண்டு வாழ்ந்தால்... மக்கள் உங்களை அடியோடு வெறுத்து விடுவார்கள்... நீங்கள் எவ்வளவுதான் சிறந்த ஆட்சியாளர் என்றாலும் கூட..!   அடுத்து...   இன்னொரு கேடுகெட்ட மோசமான படிப்பினை ஒன்றும் உள்ளது..! எண்ணெய் வளம் கொண்ட ஆட்சியாளர்களின் தலை மயிர்கூட இனி அமெரிக்க - பிரிட்டிஷ் - ஐரோப்பிய  ஏகாதிபத்திய நலனுக்கு எதிராக அவர்களின் விருப்பத்துக்கு எதிராக ஆடிவிடக்கூடாது..! அப்படி மீறி ஆடினால்...

அந்த தலையே கொய்யப்படும்..! அல்லது... கொய்யவைக்கப்படும்..!   மக்களே..! உலகின் பயங்கரவாதங்களுக்கு எல்லாம் மூலகர்த்தாவான... ஆயுதவியாபாரம் செய்யும் அமெரிக்க -ஐரோப்பிய- சியோனிஸ நேட்டோ பயங்கரவாதிகளை நாம் எப்போது இனங்கண்டு கொள்வது..? அமெரிக்கர்களே இவ்வுண்மையை புரிந்து கொண்டு "WALL STREET ஆக்கிரமிப்பு போராட்டம்" என்று ஆரம்பித்து விட்டார்களே..!

நன்றி தேன்கூடு .




எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Jan 26, 2016 6:32 pm

நாட்டமை என்ற பெயரில் அமெரிக்கா செய்யும் அட்டூழியங்கள் அளவில்லாதது....



மெய்பொருள் காண்பது அறிவு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 26, 2016 6:44 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 26, 2016 8:12 pm

கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  103459460
-
கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  8RCZuyCSRVi8oylawGRA+gaddafi-26813-150
-
லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி மும்மர் அல் கடாபி
பள்ளிச்சிறுமிகளை எப்படியெல்லாம் தனது காமப் பசிக்கு
இரையாக்கினார் என்பது குறித்த புதிய புத்தகம் ஒன்றில்
பரபரப்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
-
அந்த சிறுமிகளை அவர் செக்ஸ் அடிமையாக வைத்திருந்தார் என்றும்,
தனது கோட்டைக்குக் கீழே அறை அமைத்து அவர்களை அடைத்து
வைத்து பாலியல் ரீதியாக அவர்களை தனது இச்சைக்குப் பயன்படுத்தி
வந்ததாகவும்
Gaddafi's Harem: The Story Of A Young Woman And The Abuses Of Power In Libya
என்ற தலைப்பிலான அந்த நூல் கூறுகிறது.
பிரான்ஸைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் அன்னிக் கோஜீன் இதை எழுதியுள்ளார்.
-
இந்த நூல் தற்போது 1 லட்சம் பிரதிகள் விற்றுள்ளதாம்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jan 26, 2016 9:59 pm

அமெரிக்காவின் நரித்தனமான வேலைக்கு மற்றுமொரு நாடும் இரயாகிவிட்டது.

கடைசி பதிவில் இருப்பது 100% உண்மை என்று சொல்லி விட முடியாது காரணம் அமெரிக்காகாரன் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வான் செய்ய வைப்பான் காராணம் ஆவன் உலகெங்கிலும் ஆயுதம் விற்க வழி பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு கேடு கேட்ட நாடு




கடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Mகடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Uகடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Tகடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Hகடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Uகடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Mகடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Oகடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Hகடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Aகடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Mகடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  Eகடாபி - அறிந்த செய்தியும் அறியாத தகவல்களும்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக