Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறள் கூறும் அன்பு
+3
ayyasamy ram
T.N.Balasubramanian
pricillashly
7 posters
Page 1 of 1
குறள் கூறும் அன்பு
குறள் கூறும் அன்பு
முனைவர். கி.ஜா.பிரிசில்லா,
தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்,
அ.து.ம. மகளிர் கல்லூரி (தன்னாட்சி),
நாகப்பட்டினம்
தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்,
அ.து.ம. மகளிர் கல்லூரி (தன்னாட்சி),
நாகப்பட்டினம்
சங்ககாலத்தைத் தொடர்ந்து தமிழுக்கும் தமிழர்க்கும் கிடைத்த அரிய களஞ்சியமான வள்ளுவத்தில் உலகளாவிய சிந்தனைகளும் மனிதனை உயர்த்தும் உயரிய நோக்கும் காணப்படுகிறது. வள்ளுவம் தமிழனுக்குரியது என்னும் நிலையைக் கடந்து உலகத்தவர் அனைவர்க்கும் உரியதாக உள்ளமையை உணர்ந்த பாரதி
அன்பு
மானுட வெற்றியின் அடிப்படை“அன்பு” ஐந்தறிவை புறத்தே வைத்த இறைவன் ஆறாவது அறிவாகிய மனம்; எனும்; ஆற்றலை நெறிப்படுத்த அன்பை அகத்தே வைத்தான். அன்பு உள்ளங்களை இணைக்கும்; ஆற்றலுடையது. “ஆற்றல் மிக்க அன்பு” என்பார் அப்பரடிகள். மக்களின் வாழ்வியல் பண்புகளுக்கு அன்பு மிக தேவையானது என்பது அனைத்து மதத்தாரும் போதிக்கும் கருத்தாகும். அன்பே தெய்வம் ”Love is God” என்பது உலக உயர்மொழி. திருக்குறள், அன்பு பற்றிய மனித மாண்புகளை விளக்குகிறது. இதனைப் பின்பற்றுவோர் பேற்றினையும் ஒதுக்கியவர் இழிவினையும் அடைவார் என திறம்படக்காட்டுகிறது. ஆகவே அன்பு பற்றிய வள்ளுவரின் கருத்துக்கள் மனிதசமுதாயத்தின் மறுமலர்ச்சியை உண்டாக்கும் மருந்தாக கொள்ளப்படுகி;றது.
அன்பின் வளர்ச்சி
அன்பு இயல்பாய் மலரும். “அன்பினை எடுத்துக்காட்ட அளவிலா ஆர்வம் பொங்கி” என்பது சேக்கிழார் திருவாக்கு.
உடல் வளர்ச்சியுடன் அன்பின் வளர்ச்சியும் இருக்க வேண்டும். அப்போதுதான்; நன்மை செய்து சிறப்புடன் வாழ முடியும். அந்த வாழ்க்கைதான் பயன்பட்ட வாழ்கையாக – நல்ல பண்புநிறைந்த வாழ்க்கையாக அமையும்.
அன்பின் வழி ஒழுகினால் வாழ்வின் உயர் நிலையை அடையலாம். ஆகவே, ஒவ்வொருவரும் அன்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். அன்பு பற்றி சுவாமி சித்பவானந்தர் “ வாழ்விற்கு உறுதுணையாவது அன்பு. தடைகள் எல்லாம் தகர்க்க வல்லது. பகை, வெறுப்பு, துன்பம் என்னும் பகைவர்களை உள்ளே புகவிடாமல் இருப்பது அன்பு” என்று விளக்கமளிக்கின்றார். இப்படியாக விளங்கும் அன்பு வெள்ளத்தை தடுத்து நிறுத்த முடியாது. தன் அன்பிற்குரியவர் துன்பப் படுவதை நேரில் காணும் கண்கள் விடும் கண்ணீர் அவர் தம் அன்பை வெளிஉலகிற்கு வெளிப்படுத்தி விடும்.
அன்பினால் உண்டாகும் வாழ்வு
அன்பு ஓர் அபூர்வமான சக்தி. உயிரின் உறைவிடமே அன்பு. வள்ளலார் போதித்த சுத்த சன்;மார்க்கத்தின் அடிப்படை அம்சம் எல்லா ஜீவராசிகளிடத்தும் அன்பு காட்டுதல்
“அன்பு உடையார் என்பும் உரியர் பிறர்க்கு” என்பதன் மூலம் வள்ளுவர் அன்பு தம் பொருளையும் உடலையும் விட எலும்பையும் பிறருக்கு கொடுக்க வல்லது என்கிறார். இத்தகைய அன்பு ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது. மெய்யுணர்வு சம்பந்தபட்டது.
சுவாமி விவேகானந்தர் , “ஒருவனிடம் அன்பு குடிகொண்டிருக்குமேயானால் அது பிறரிடம் எதையும் கேட்காது. மாறாக அன்பு அனைத்தையும் கொடுத்து விடுகிறது. தன்னையே பிறர்க்கும் நல்கும் பேராற்றல் இந்த அன்பினால் முடியும்” என சொற்பொழிவொன்றில் எடுத்து இயம்பியுள்ளார்.
அன்பின் வழியை பரிசுத்த வேதாகமம் கொரிந்தியருக்கு எழுதின முதலாம் நிரூபம் 13ஆம் அதிகாரத்தில் தெளிவாக எடுத்துரைக்கிறது.
''அன்பு நீடிய சாந்தமும் தயவு;முள்ளது; அன்பிற்கு பொறாமையில்லை, அன்பு தன்னை புகழாது, இறுமாப்பாயிராது.
அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது,
சினமடையாது, தீங்கு நினையாது,
அநியாயத்தில் சந்தோஷப்படாமல் சத்தியத்தில் சந்தோஷப்படும்,
சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும்,
சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.
அன்பு ஒருக்காலும் ஒழியாது.”
இதை நாம் அன்பின் இலக்கணங்களாகக்கொண்டு வாழ வேண்டும். செல்வாக்குள்ள மனிதனாக இருப்பதைவிட அன்புள்ள மனிதனாக இருப்பதே சிறந்தது. அன்புள்ளம் படைத்தவன் உலகம் மகிழ வழிகாட்டியாக விளங்குவான். அன்பின் அடிப்படையில் மனித வாழ்வு அமைந்திருக்குமானால் அமைதியிருக்கும். மகிழ்ச்சி நிலவும் உயர்வு தாழ்வு சிந்தனைகள் எழாது.
“வள்ளுவம் தன்னை உலகினுக்கே தந்து
வான் புகழ் கொண்ட தமிழ்நாடு”
எனப் புகழ்ந்துரைத்தார். வள்ளுவப் பொருட்சிறப்பை அறிந்த மதுரைத் தமிழ்நாகனார் “எல்லாப் பொருளும் இதன் பால் உள” என தெளிந்துரைத்துள்ளார். திருக்குறள் 21ஆம் நூற்றாண்டின் புதிய தலைமுறையினருக்கு வழிகாட்டும் புரட்சி நூலாக விளங்குகிறது.வான் புகழ் கொண்ட தமிழ்நாடு”
“அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா வரண்”.
என்னும் குறள் மறைந்த முன்னாள் ஐனாதிபதி ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக திகழ்ந்தது என அவரே கூறியுள்ளது வள்ளுவத்திற்கு மேலும் சிறப்பினைக் கூட்டுகிறது.உள்ளழிக்க லாகா வரண்”.
அன்பு
மானுட வெற்றியின் அடிப்படை“அன்பு” ஐந்தறிவை புறத்தே வைத்த இறைவன் ஆறாவது அறிவாகிய மனம்; எனும்; ஆற்றலை நெறிப்படுத்த அன்பை அகத்தே வைத்தான். அன்பு உள்ளங்களை இணைக்கும்; ஆற்றலுடையது. “ஆற்றல் மிக்க அன்பு” என்பார் அப்பரடிகள். மக்களின் வாழ்வியல் பண்புகளுக்கு அன்பு மிக தேவையானது என்பது அனைத்து மதத்தாரும் போதிக்கும் கருத்தாகும். அன்பே தெய்வம் ”Love is God” என்பது உலக உயர்மொழி. திருக்குறள், அன்பு பற்றிய மனித மாண்புகளை விளக்குகிறது. இதனைப் பின்பற்றுவோர் பேற்றினையும் ஒதுக்கியவர் இழிவினையும் அடைவார் என திறம்படக்காட்டுகிறது. ஆகவே அன்பு பற்றிய வள்ளுவரின் கருத்துக்கள் மனிதசமுதாயத்தின் மறுமலர்ச்சியை உண்டாக்கும் மருந்தாக கொள்ளப்படுகி;றது.
அன்பின் வளர்ச்சி
அன்பு இயல்பாய் மலரும். “அன்பினை எடுத்துக்காட்ட அளவிலா ஆர்வம் பொங்கி” என்பது சேக்கிழார் திருவாக்கு.
“அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பெனும் நாடாச் சிறப்பு”.
அன்பு ஆர்வத்தைத் தருகிறது. ஆர்வம் நட்பைத் தருகிறது. அன்பு நிறைந்த பழக்கத்திலே தோன்றி ஆர்வத்தினால் வழங்கப் பெற்று நட்பு என்ற நிலையை அடைகிறது. நட்பிற்கு மறுபெயர் தோழமை. நட்பு எல்லையற்றது. அழிவற்றது. அதனால் திருவள்ளுவர் “சிறப்பு” என்று சிறப்பித்து கூறுகிறார்;. அன்பிற்கும் நட்பிற்கும் இடையில் இணையாக இருப்பது ஆர்வம். ஆர்வத்தினை உளவியலார் apptitude என்பர். தமிழ் இலக்கியம் “பாங்கு” என்று கூறும்.நண்பெனும் நாடாச் சிறப்பு”.
உடல் வளர்ச்சியுடன் அன்பின் வளர்ச்சியும் இருக்க வேண்டும். அப்போதுதான்; நன்மை செய்து சிறப்புடன் வாழ முடியும். அந்த வாழ்க்கைதான் பயன்பட்ட வாழ்கையாக – நல்ல பண்புநிறைந்த வாழ்க்கையாக அமையும்.
“அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு”.
என்புதோல் போர்த்த உடம்பு”.
அன்பின் வழி ஒழுகினால் வாழ்வின் உயர் நிலையை அடையலாம். ஆகவே, ஒவ்வொருவரும் அன்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். அன்பு பற்றி சுவாமி சித்பவானந்தர் “ வாழ்விற்கு உறுதுணையாவது அன்பு. தடைகள் எல்லாம் தகர்க்க வல்லது. பகை, வெறுப்பு, துன்பம் என்னும் பகைவர்களை உள்ளே புகவிடாமல் இருப்பது அன்பு” என்று விளக்கமளிக்கின்றார். இப்படியாக விளங்கும் அன்பு வெள்ளத்தை தடுத்து நிறுத்த முடியாது. தன் அன்பிற்குரியவர் துன்பப் படுவதை நேரில் காணும் கண்கள் விடும் கண்ணீர் அவர் தம் அன்பை வெளிஉலகிற்கு வெளிப்படுத்தி விடும்.
“அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்”
இந்த உயர்பெரும் அன்பை இன்பத்தில் மட்டுமின்றி பிறர் துன்பத்திலும் தாராளமாக செலுத்த வேண்டும். புன்கண்நீர் பூசல் தரும்”
அன்பினால் உண்டாகும் வாழ்வு
அன்பு ஓர் அபூர்வமான சக்தி. உயிரின் உறைவிடமே அன்பு. வள்ளலார் போதித்த சுத்த சன்;மார்க்கத்தின் அடிப்படை அம்சம் எல்லா ஜீவராசிகளிடத்தும் அன்பு காட்டுதல்
“அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே”
என்று மிக அழகாகப் பாடுகிறார் வள்ளலார். எங்காவது மலை கைப்பிடியில் அகப்படுமா? அன்பு என்னும் கைப்பிடியில் இறைவன் என்ற மலையும் அகப்படும் என்கிறார். குடிசையே ஆனாலும் அன்பிருக்குமானால் அரசனும் விரும்பி நுழைவான் என்கிறார். இதனையே வள்ளுவர் பெருமான் அன்பெனும் குடில்புகும் அரசே”
“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது”.
இல்வாழ்க்கைக்கு அன்பே அச்சாணி. அன்பே இனிமை. செல்வந்தருக்கும் ஏழை எளியோருக்கும் இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை என்கிறார்;.பண்பும் பயனும் அது”.
“அன்பு உடையார் என்பும் உரியர் பிறர்க்கு” என்பதன் மூலம் வள்ளுவர் அன்பு தம் பொருளையும் உடலையும் விட எலும்பையும் பிறருக்கு கொடுக்க வல்லது என்கிறார். இத்தகைய அன்பு ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது. மெய்யுணர்வு சம்பந்தபட்டது.
சுவாமி விவேகானந்தர் , “ஒருவனிடம் அன்பு குடிகொண்டிருக்குமேயானால் அது பிறரிடம் எதையும் கேட்காது. மாறாக அன்பு அனைத்தையும் கொடுத்து விடுகிறது. தன்னையே பிறர்க்கும் நல்கும் பேராற்றல் இந்த அன்பினால் முடியும்” என சொற்பொழிவொன்றில் எடுத்து இயம்பியுள்ளார்.
அன்பின் வழியை பரிசுத்த வேதாகமம் கொரிந்தியருக்கு எழுதின முதலாம் நிரூபம் 13ஆம் அதிகாரத்தில் தெளிவாக எடுத்துரைக்கிறது.
''அன்பு நீடிய சாந்தமும் தயவு;முள்ளது; அன்பிற்கு பொறாமையில்லை, அன்பு தன்னை புகழாது, இறுமாப்பாயிராது.
அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது,
சினமடையாது, தீங்கு நினையாது,
அநியாயத்தில் சந்தோஷப்படாமல் சத்தியத்தில் சந்தோஷப்படும்,
சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும்,
சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.
அன்பு ஒருக்காலும் ஒழியாது.”
இதை நாம் அன்பின் இலக்கணங்களாகக்கொண்டு வாழ வேண்டும். செல்வாக்குள்ள மனிதனாக இருப்பதைவிட அன்புள்ள மனிதனாக இருப்பதே சிறந்தது. அன்புள்ளம் படைத்தவன் உலகம் மகிழ வழிகாட்டியாக விளங்குவான். அன்பின் அடிப்படையில் மனித வாழ்வு அமைந்திருக்குமானால் அமைதியிருக்கும். மகிழ்ச்சி நிலவும் உயர்வு தாழ்வு சிந்தனைகள் எழாது.
அன்பு வழி வாழ வேண்டும்!
அவ்வழியே வளரும் வாழ்கை!!
அவ்வழியே வளரும் வாழ்கை!!
pricillashly- புதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 22/01/2016
Re: குறள் கூறும் அன்பு
இதை நாம் அன்பின் இலக்கணங்களாகக்கொண்டு வாழ வேண்டும். செல்வாக்குள்ள மனிதனாக இருப்பதைவிட அன்புள்ள மனிதனாக இருப்பதே சிறந்தது. அன்புள்ளம் படைத்தவன் உலகம் மகிழ வழிகாட்டியாக விளங்குவான். அன்பின் அடிப்படையில் மனித வாழ்வு அமைந்திருக்குமானால் அமைதியிருக்கும். மகிழ்ச்சி நிலவும் உயர்வு தாழ்வு சிந்தனைகள் எழாது.
அன்பு வழி வாழ வேண்டும்!
அவ்வழியே வளரும் வாழ்கை!!
அருமையாக கூறியுள்ளீர் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: குறள் கூறும் அன்பு
அன்பு குறித்த தங்கள் கருத்துக்கள் ஒப்பத்தக்கன ! சிறப்பான கட்டுரை .
வள்ளுவம் தன்னை உலகினுக்கே தந்து
வான் புகழ் கொண்ட தமிழ்நாடு”
என்பது
" வள்ளுவன் தன்னை " என்றல்லவா இருக்கவேண்டும் .
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் ; அன்புடையார்
என்பும் உரிய பிறர்க்கு .
என்பதே சரி . என்பு என்ற அக்ரிணைச் சொல் உயர்திணைக்குரிய " அர் " விகுதியை ஏற்காது அல்லவா !
வ .உ . சி . அவர்களின் அறத்துப்பால் உரையில் இவ்வாறுதான் காணப்படுகிறது . பெரும்பாலான உரையாசிரியர்கள் இக்கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை .
தொடர்ந்து எழுதுங்கள் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: குறள் கூறும் அன்பு
நல்ல கட்டுரை - தொடருங்கள் இதுபோல்.
வள்ளுவத்தின் மீது அன்பு கொண்டால்
அன்பு கொள்ளும் பண்பு தானே ஊரிடுமே
வள்ளுவத்தின் மீது அன்பு கொண்டால்
அன்பு கொள்ளும் பண்பு தானே ஊரிடுமே
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Similar topics
» குறள் கூறும் அம்பு
» தினம் ஒரு குறள்....இன்றைய குறள் ..தருபவர் மீனு
» அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்
» சிவாவின் அன்பு என் பெயராக ஒளிர்கிறது.... அன்பு நன்றிகள் சிவா....
» அன்பு சிவாவின் அன்பு பதிவுகள் 27000 வாழ்த்துவோம் வாங்கப்பா...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum