ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறள் கூறும் அன்பு

+3
ayyasamy ram
T.N.Balasubramanian
pricillashly
7 posters

Go down

குறள் கூறும் அன்பு Empty குறள் கூறும் அன்பு

Post by pricillashly Mon Jan 25, 2016 7:41 pm

குறள் கூறும் அன்பு  
முனைவர். கி.ஜா.பிரிசில்லா,
தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்,
அ.து.ம. மகளிர் கல்லூரி (தன்னாட்சி),
நாகப்பட்டினம்
          சங்ககாலத்தைத் தொடர்ந்து தமிழுக்கும் தமிழர்க்கும் கிடைத்த அரிய களஞ்சியமான வள்ளுவத்தில் உலகளாவிய சிந்தனைகளும்  மனிதனை உயர்த்தும் உயரிய நோக்கும் காணப்படுகிறது. வள்ளுவம் தமிழனுக்குரியது என்னும் நிலையைக் கடந்து உலகத்தவர் அனைவர்க்கும் உரியதாக உள்ளமையை உணர்ந்த பாரதி
வள்ளுவம் தன்னை உலகினுக்கே தந்து
வான் புகழ் கொண்ட தமிழ்நாடு
எனப் புகழ்ந்துரைத்தார். வள்ளுவப் பொருட்சிறப்பை அறிந்த மதுரைத் தமிழ்நாகனார் “எல்லாப் பொருளும் இதன் பால் உள” என தெளிந்துரைத்துள்ளார். திருக்குறள் 21ஆம் நூற்றாண்டின் புதிய தலைமுறையினருக்கு வழிகாட்டும் புரட்சி நூலாக விளங்குகிறது.
“அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா வரண்”.
               என்னும் குறள் மறைந்த முன்னாள் ஐனாதிபதி ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக திகழ்ந்தது என அவரே கூறியுள்ளது வள்ளுவத்திற்கு மேலும் சிறப்பினைக் கூட்டுகிறது.

அன்பு
                 மானுட வெற்றியின் அடிப்படை“அன்பு” ஐந்தறிவை புறத்தே வைத்த இறைவன் ஆறாவது அறிவாகிய மனம்; எனும்; ஆற்றலை நெறிப்படுத்த அன்பை அகத்தே வைத்தான். அன்பு உள்ளங்களை இணைக்கும்; ஆற்றலுடையது. “ஆற்றல் மிக்க அன்பு” என்பார் அப்பரடிகள். மக்களின் வாழ்வியல் பண்புகளுக்கு அன்பு மிக தேவையானது  என்பது அனைத்து மதத்தாரும் போதிக்கும் கருத்தாகும்.  அன்பே தெய்வம் ”Love  is  God”  என்பது உலக உயர்மொழி. திருக்குறள், அன்பு பற்றிய மனித மாண்புகளை விளக்குகிறது. இதனைப் பின்பற்றுவோர் பேற்றினையும் ஒதுக்கியவர்  இழிவினையும் அடைவார் என திறம்படக்காட்டுகிறது. ஆகவே அன்பு பற்றிய வள்ளுவரின் கருத்துக்கள் மனிதசமுதாயத்தின் மறுமலர்ச்சியை உண்டாக்கும் மருந்தாக கொள்ளப்படுகி;றது.

அன்பின் வளர்ச்சி
              அன்பு இயல்பாய் மலரும். “அன்பினை எடுத்துக்காட்ட அளவிலா ஆர்வம் பொங்கி” என்பது சேக்கிழார் திருவாக்கு.
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பெனும் நாடாச் சிறப்பு
”.
அன்பு ஆர்வத்தைத் தருகிறது. ஆர்வம் நட்பைத் தருகிறது. அன்பு நிறைந்த பழக்கத்திலே தோன்றி ஆர்வத்தினால் வழங்கப் பெற்று நட்பு என்ற நிலையை அடைகிறது. நட்பிற்கு மறுபெயர் தோழமை. நட்பு எல்லையற்றது. அழிவற்றது. அதனால் திருவள்ளுவர் “சிறப்பு” என்று சிறப்பித்து கூறுகிறார்;. அன்பிற்கும் நட்பிற்கும் இடையில் இணையாக இருப்பது ஆர்வம். ஆர்வத்தினை உளவியலார் apptitude என்பர். தமிழ் இலக்கியம் “பாங்கு” என்று கூறும்.

             உடல் வளர்ச்சியுடன் அன்பின் வளர்ச்சியும் இருக்க வேண்டும். அப்போதுதான்; நன்மை செய்து சிறப்புடன் வாழ முடியும். அந்த வாழ்க்கைதான் பயன்பட்ட வாழ்கையாக – நல்ல பண்புநிறைந்த வாழ்க்கையாக அமையும்.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
”.
 
                  அன்பின் வழி ஒழுகினால் வாழ்வின் உயர் நிலையை அடையலாம். ஆகவே, ஒவ்வொருவரும் அன்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். அன்பு பற்றி சுவாமி சித்பவானந்தர் “ வாழ்விற்கு உறுதுணையாவது அன்பு. தடைகள் எல்லாம் தகர்க்க வல்லது. பகை, வெறுப்பு, துன்பம் என்னும் பகைவர்களை உள்ளே புகவிடாமல் இருப்பது அன்பு” என்று விளக்கமளிக்கின்றார்.  இப்படியாக விளங்கும் அன்பு வெள்ளத்தை தடுத்து நிறுத்த முடியாது. தன் அன்பிற்குரியவர் துன்பப் படுவதை நேரில் காணும் கண்கள் விடும் கண்ணீர் அவர் தம் அன்பை வெளிஉலகிற்கு வெளிப்படுத்தி விடும்.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்
                         இந்த உயர்பெரும் அன்பை இன்பத்தில் மட்டுமின்றி பிறர் துன்பத்திலும் தாராளமாக செலுத்த வேண்டும்.

அன்பினால் உண்டாகும் வாழ்வு

                    அன்பு ஓர் அபூர்வமான சக்தி. உயிரின் உறைவிடமே அன்பு. வள்ளலார் போதித்த சுத்த சன்;மார்க்கத்தின் அடிப்படை அம்சம் எல்லா ஜீவராசிகளிடத்தும் அன்பு காட்டுதல்
“அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே”
                   என்று மிக அழகாகப் பாடுகிறார் வள்ளலார். எங்காவது மலை கைப்பிடியில் அகப்படுமா? அன்பு என்னும் கைப்பிடியில் இறைவன் என்ற மலையும் அகப்படும் என்கிறார். குடிசையே ஆனாலும் அன்பிருக்குமானால் அரசனும் விரும்பி நுழைவான் என்கிறார். இதனையே வள்ளுவர் பெருமான்
“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது”.
                  இல்வாழ்க்கைக்கு அன்பே அச்சாணி. அன்பே இனிமை. செல்வந்தருக்கும் ஏழை எளியோருக்கும் இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை என்கிறார்;.
  “அன்பு உடையார் என்பும் உரியர் பிறர்க்கு” என்பதன் மூலம் வள்ளுவர் அன்பு  தம் பொருளையும் உடலையும் விட எலும்பையும் பிறருக்கு கொடுக்க  வல்லது என்கிறார். இத்தகைய அன்பு ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது. மெய்யுணர்வு சம்பந்தபட்டது.
          சுவாமி விவேகானந்தர்   ,   “ஒருவனிடம் அன்பு குடிகொண்டிருக்குமேயானால் அது பிறரிடம் எதையும் கேட்காது. மாறாக அன்பு அனைத்தையும் கொடுத்து விடுகிறது. தன்னையே பிறர்க்கும் நல்கும் பேராற்றல் இந்த அன்பினால் முடியும்” என சொற்பொழிவொன்றில் எடுத்து இயம்பியுள்ளார்.
                 அன்பின் வழியை பரிசுத்த வேதாகமம் கொரிந்தியருக்கு எழுதின முதலாம் நிரூபம் 13ஆம் அதிகாரத்தில் தெளிவாக எடுத்துரைக்கிறது.
''அன்பு நீடிய சாந்தமும் தயவு;முள்ளது; அன்பிற்கு பொறாமையில்லை, அன்பு தன்னை புகழாது, இறுமாப்பாயிராது.
அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது,
சினமடையாது, தீங்கு நினையாது,
  அநியாயத்தில் சந்தோஷப்படாமல் சத்தியத்தில் சந்தோஷப்படும்,
சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும்,
சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.
அன்பு ஒருக்காலும் ஒழியாது.”

   இதை நாம் அன்பின் இலக்கணங்களாகக்கொண்டு வாழ வேண்டும். செல்வாக்குள்ள மனிதனாக இருப்பதைவிட அன்புள்ள மனிதனாக இருப்பதே சிறந்தது. அன்புள்ளம் படைத்தவன் உலகம் மகிழ வழிகாட்டியாக விளங்குவான். அன்பின் அடிப்படையில் மனித வாழ்வு அமைந்திருக்குமானால் அமைதியிருக்கும். மகிழ்ச்சி நிலவும் உயர்வு தாழ்வு சிந்தனைகள் எழாது.
அன்பு வழி வாழ வேண்டும்!
அவ்வழியே வளரும்  வாழ்கை!!
pricillashly
pricillashly
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 22/01/2016

Back to top Go down

குறள் கூறும் அன்பு Empty Re: குறள் கூறும் அன்பு

Post by T.N.Balasubramanian Mon Jan 25, 2016 8:27 pm

இதை நாம் அன்பின் இலக்கணங்களாகக்கொண்டு வாழ வேண்டும். செல்வாக்குள்ள மனிதனாக இருப்பதைவிட அன்புள்ள மனிதனாக இருப்பதே சிறந்தது. அன்புள்ளம் படைத்தவன் உலகம் மகிழ வழிகாட்டியாக விளங்குவான். அன்பின் அடிப்படையில் மனித வாழ்வு அமைந்திருக்குமானால் அமைதியிருக்கும். மகிழ்ச்சி நிலவும் உயர்வு தாழ்வு சிந்தனைகள் எழாது.
அன்பு வழி வாழ வேண்டும்!
அவ்வழியே வளரும் வாழ்கை!!

அருமையாக கூறியுள்ளீர் .குறள் கூறும் அன்பு 103459460

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குறள் கூறும் அன்பு Empty Re: குறள் கூறும் அன்பு

Post by ayyasamy ram Mon Jan 25, 2016 8:49 pm

குறள் கூறும் அன்பு 103459460 குறள் கூறும் அன்பு 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82800
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குறள் கூறும் அன்பு Empty Re: குறள் கூறும் அன்பு

Post by M.Jagadeesan Mon Jan 25, 2016 8:58 pm

அன்பு குறித்த தங்கள் கருத்துக்கள் ஒப்பத்தக்கன ! சிறப்பான கட்டுரை .


வள்ளுவம் தன்னை உலகினுக்கே தந்து
வான் புகழ் கொண்ட தமிழ்நாடு”

என்பது

" வள்ளுவன் தன்னை " என்றல்லவா இருக்கவேண்டும் .

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் ; அன்புடையார்
என்பும் உரிய பிறர்க்கு .

என்பதே சரி . என்பு என்ற அக்ரிணைச் சொல் உயர்திணைக்குரிய " அர் " விகுதியை ஏற்காது அல்லவா !
வ .உ . சி . அவர்களின் அறத்துப்பால் உரையில் இவ்வாறுதான் காணப்படுகிறது . பெரும்பாலான உரையாசிரியர்கள் இக்கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை .

தொடர்ந்து எழுதுங்கள் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

குறள் கூறும் அன்பு Empty Re: குறள் கூறும் அன்பு

Post by யினியவன் Mon Jan 25, 2016 10:37 pm

நல்ல கட்டுரை - தொடருங்கள் இதுபோல்.

வள்ளுவத்தின் மீது அன்பு கொண்டால்
அன்பு கொள்ளும் பண்பு தானே ஊரிடுமே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குறள் கூறும் அன்பு Empty Re: குறள் கூறும் அன்பு

Post by விமந்தனி Tue Jan 26, 2016 12:26 am

கட்டுரை அருமை. தொடருங்கள்.


குறள் கூறும் அன்பு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுறள் கூறும் அன்பு L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குறள் கூறும் அன்பு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

குறள் கூறும் அன்பு Empty Re: குறள் கூறும் அன்பு

Post by K.Senthil kumar Tue Jan 26, 2016 4:47 am

குறள் கூறும் அன்பு 3838410834 குறள் கூறும் அன்பு 3838410834 குறள் கூறும் அன்பு 103459460


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

குறள் கூறும் அன்பு Empty Re: குறள் கூறும் அன்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum