ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் பார்வை: தாரை தப்பட்டை - இன்னொரு பாலா படம்!

2 posters

Go down

முதல் பார்வை: தாரை தப்பட்டை - இன்னொரு பாலா படம்! Empty முதல் பார்வை: தாரை தப்பட்டை - இன்னொரு பாலா படம்!

Post by ayyasamy ram Fri Jan 15, 2016 2:17 pm

முதல் பார்வை: தாரை தப்பட்டை - இன்னொரு பாலா படம்! 4HAWwYjuSFyCXAOs4J4t+thaarai_2676419f_2696711f
-
பாலா இயக்கத்தில் வெளியாகும் ஏழாவது படம், குரு இயக்கத்தில் சிஷ்யர் சசிகுமார் நடிக்கும் முதல் படம், இளையராஜா இசையில் வெளியாகும் 1000-வது படம் என்ற இந்த காரணங்களே 'தாரை தப்பட்டை' படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.

பொதுவாக பாலா படமென்றால் வன்மம், குரோதம், கொடூரமாகப் பழிவாங்கும் படலம், குரல்வளையைக் கடித்து துப்புவது, ரத்தம் தெறிப்பது என்ற டெம்ப்ளேட் நிச்சயமாக இருக்கும்.

'தாரை தப்பட்டை' படத்துக்கு 'ஏ' சான்றிதழ் கொடுத்திருப்பதால், அதீத வன்முறை பீதியுடன் தயங்கியே தியேட்டருக்குள் நுழைந்தோம்.

'தாரை தப்பட்டை' படம் எப்படி?

சசிகுமார் சன்னாசி தாரை தப்பட்டை மற்றும் கரகாட்டக் குழுவை நடத்தி வருகிறார். அதில் முக்கிய அங்கம் வகிக்கும் கரகாட்டக்காரர் வரலட்சுமியை இன்னொருவருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார். அந்த முயற்சி என்ன ஆனது? கரகாட்டக் கலைஞர்கள் என்ன ஆகிறார்கள்? என்பது மீதிக் கதை.

'போராளி' படத்தில் சசிகுமார் தோற்றத்தை பார்த்திருக்கிறோம். அதன் இன்னொரு முழுமையான தோற்றப் பரிமாணம்தான் சன்னாசி சசிகுமார். குழு தலைவனாக நடந்துகொள்வது, கோபத்தில் வார்த்தைகளை சிதற விடுவது, காதலில் கலங்குவது, நடந்ததை உணர்ந்து வெகுண்டெழுவது என தன் பங்களிப்பை சிறப்பாக வழங்கியிருக்கிறார்.

வரலட்சுமி சரத்குமார் நடிப்பிலும், கரகாட்டக்காரராக பேச்சு, உடல்மொழி, நடனத்திலும் பின்னி எடுக்கிறார். உன் பேரு என்ன? என்று கேட்கும்போது 'மிஸ்டர் சூறாவளி' என கெத்து காட்டுகிறார். நாயகனின் லாவகப் பேச்சு பிடிக்காமல் எட்டி உதைத்து தன் கோபத்தை வெளிப்படுத்தி நடிக்கத் தெரிந்த நடிகை என்பதை நிரூபித்திருக்கிறார். முதல் பாதி முழுக்க வரலட்சுமி தான் ப்ரொட்டாகனிஸ்ட் என்ற உணர்வை ஏற்படுத்துகிறார்.

ஜி.எம்.குமார் திறமையுள்ள கலைஞனாக, மிடுக்காகவும், அதே சமயத்தில் அழுத்தமாகவும் நடித்திருக்கிறார்.

கருப்பையா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் (அறிமுகம்) இரு வேறு குணநலன் கொண்ட கதாபாத்திரங்களையும் சரியாக செய்திருக்கிறார். அமுதவாணன், காயத்ரி ரகுராம், அந்தோணி தாஸ், சதீஷ் கௌஷிக் ஆகியோர் பொருத்தமான தேர்வு.

இளையராஜாவின் இசையும், செழியனின் ஒளிப்பதிவும் படத்துக்குப் பெரும் பலம்.

வதன வதன வடிவேலனே என்ற மோகன் ராஜனின் பாடல் அறிமுகப் பாடலாய் கரகாட்டக் கலைஞர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. இளையராஜா எழுதி இசையமைத்த உள்ளம் என் கோயில் பாடலுக்கு தியேட்டரே மெய் சிலிர்த்தது. தேவையான இடங்களில் மட்டும் பின்னணி இசை அமைத்து ஆட்சி செலுத்திய விதத்தில் இளையராஜா ஈர்க்கிறார்.

கரகாட்டக் கலைஞர்கள் பின்புலத்தையும், அவல நிலையையும் செழியன் தன் கேமராவில் கடத்தி இருக்கிறார்.

கரகாட்டக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தைக் குறித்த நிலையை சொல்லும் திரைக்கதை வழக்கமான பாலா படமாக ஒரு கட்டத்தில் மாறும்போது தடுமாற்றமும், தடம் மாற்றமும் நிகழ்கிறது.

உணர்வுகளை உருக்கமும் நெருக்கமுமாகக் காட்டிய பாலா அதற்கடுத்த காட்சிகளில் வேறு திசையில் பயணிக்க வைக்கிறார். அது படத்துக்கு பெரிய பாதகத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், இது டெம்ப்ளேட் தானே. இன்னும் ஏன் இதை பாலா விடாமல் வைத்துக்கொண்டு அடம்பிடிக்கிறார் என்ற கேள்வி எழாமல் இல்லை.

ஆனால், அந்த இடங்களில் இளையராஜா தன் இசையால் நிரப்பி சரி செய்ய முயற்சித்ததை சொல்லியே ஆக வேண்டும். சில இடங்களில் லாஜிக் மிஸ் ஆவதை மறுப்பதற்கில்லை.

அனுராக் காஷ்யப், ராஜ்குமார் ஹிரானி முதலான இந்திய சினிமாவின் முக்கிய இயக்குநர்கள் கண்டு வியக்கும் தமிழ் இயக்குநர் பாலா. ஒரு முக்கிய சினிமா படைப்பாளிக்கு காட்சிப்படுத்துதலில் தனக்குரிய பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று மூத்தவர்கள் சொல்வது உண்டு. கொடூரமான வன்முறைக் காட்சிகளை பாலா படமாக்கும் விதம் மென்மேலும் கோரமாக உருவெடுத்து வருகிறது. அப்படிக் காட்சிப்படுத்துவதைவிட, ரத்தத்தைத் திரையில் தெளிக்காமல் - வன்முறையின் தாக்கத்தை ரசிகர்கள் துல்லியமாக உணரும் வகையிலான சினிமா மொழியைக் கையாள்வதே நல்ல உத்தியாக இருக்கும் எனத் தோன்றுகிறது.

நிஜ வாழ்வில் கலைஞர்கள் நிலையை திரையில் காட்டியதற்காகவும், மனிதத்தை கீழே விழாமல் பிடித்ததற்காகவும் இந்த 'தாரை தப்பட்டை'யை இன்னொரு பாலா படம் என்ற விதத்தில் வரவேற்கலாம்.
-
தமிழ் தி இந்து காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முதல் பார்வை: தாரை தப்பட்டை - இன்னொரு பாலா படம்! Empty Re: முதல் பார்வை: தாரை தப்பட்டை - இன்னொரு பாலா படம்!

Post by Namasivayam Mu Sat Jan 16, 2016 8:03 am

முதல் பார்வை: தாரை தப்பட்டை - இன்னொரு பாலா படம்! 3838410834


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

முதல் பார்வை: தாரை தப்பட்டை - இன்னொரு பாலா படம்! Empty Re: முதல் பார்வை: தாரை தப்பட்டை - இன்னொரு பாலா படம்!

Post by ayyasamy ram Sat Jan 16, 2016 6:46 pm

முதல் பார்வை: தாரை தப்பட்டை - இன்னொரு பாலா படம்! 31bXJx8tSW6RHpGiYynC+saas_2697885f
-
நாயகி மது அருந்துவது, அதிர்ச்சிகரமான வார்த்தைகளைப் பிரயோகிப் பது - இதெல்லாம்தான் டிரெண்டா?! மகாத்மா காந்தி சிலையின் முன்பு காசுக்காகக் குறைவான ஆடைகளுடன் ஆடுவது போன்ற அவலச் சுவைக் காட்சியின் காலம் எப்போதோ முடிந்துவிட்டது.

முதலிரவில் தன்னுடன் இருக்கும் நபர் தன் கணவன் அல்ல என்பது தெரி யாமலா ஒரு பெண் இருப்பாள்? நாயகி யைக் கலகக்காரியாக காட்டுவதில் இயக்குநருக்கு இருக்கும் முனைப்பு, அவளை நுண்ணுணர்வு கொண்ட வளாகக் காட்டுவதில் இல்லை.

கதைக்கோ திரைக்கதைக்கோ தேவையற்ற, அளவுக்கு அதிகமான குரூரம், வன்முறை, குரோதம் போன்ற வற்றை வெளிப்படுத்தித்தான் மனித நேயத்தை உணரவைக்க வேண்டுமா?

இந்தத் தப்பட்டைக்கு இல்லை தனி முத்திரை..!
-
திரைப்பட விமரிசனம் - தமிழ் தி இந்து காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முதல் பார்வை: தாரை தப்பட்டை - இன்னொரு பாலா படம்! Empty Re: முதல் பார்வை: தாரை தப்பட்டை - இன்னொரு பாலா படம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum