ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

+5
T.N.Balasubramanian
M.Jagadeesan
ayyasamy ram
shobana sahas
விமந்தனி
9 posters

Page 5 of 20 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 20  Next

Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 Empty நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி Thu Jan 14, 2016 12:08 am

First topic message reminder :

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 8Cxbtr50Q3mb4GxrL2hl+000copy

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 UpmAbqkhRqK3UMuI0Biy+00000

Last edited by விமந்தனி on Sat Jan 16, 2016 9:51 pm; edited 1 time in total

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 Empty Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி Fri Jan 22, 2016 11:53 pm

உண்மை! பற்றற்று வாழவேண்டும் என்ற ஆசையில் பற்று வைக்க முடியாததினால் தானே பற்றில்லாமல் இருக்க தெரியவில்லை........!

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 Empty Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி Fri Jan 22, 2016 11:56 pm

நினைத்தாலே இனிக்கும்! (6)

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 VfT71SGPRdGmAJIjxXWw+06

கவானின் பேரழகைப் பற்றி பார்ப்போம். அவனது அழகு நமக்கு ஞானத்தைத் தருகிறது. "கண்டவர் தன் மனமுருகும் கண்ணபுரத்தான்' என்று நாம் சொல்கிறோம். எல்லா ஜடப்பொருள்களிலும் அவன் இருக்கிறான். பசு, ஆடு, மேஜை, சங்கிலி என எல்லாவற்றிலும் அவன் உண்டு.

ஏன் இருக்கிறான்? பகவான் இருந்தால் தான் அந்தப் பொருளே இருக்கும்.

பிரம்மத்தை(கடவுள்) தனக்குள் கொண்டிராத எந்தத் தத்துவமுமே உலகில் கிடையாது. அவன் நமக்குள்ளும் இருக்கிறான். ஆனால், நாம் அதை நம்புவதில்லை. சிலர் வீட்டில் ராமாயணப் புத்தகம் இருக்கும். ஆனால், அட்டை கூட கிழிந்திருக்காது. அப்படி கிழியாமல் வைத்திருந்தால் தானே நல்லது என நினைக்கலாம். அட்டை

கிழியவில்லை என்றால், படிப்பதற்கு புத்தகத்தை பிரிக்கவே இல்லை என்று அர்த்தம்.

இன்னும் சிலர் வாங்குவார்கள். ஒரு மூலையில் போடுவார்கள். திடீரென எடுப்பார்கள்.

தூசு தட்டி எடுத்த இடத்திலேயே வைத்து விடுவார்கள். ஆனால், படிப்பவர்கள் வீட்டில் கிழிந்திருக்கும். எல்லாரிடமும் இருந்தாலும், அது எந்தளவு பயன்பட்டது என்பதே முக்கியம்.

பசுவுக்குள் எந்த மாறுதலும் இல்லாமல் பகவான் இருப்பான். நமக்குள் லட்சுமியோடு மாலை, நான்கு தோள்கள், சங்கு, சக்கரம், புன்சிரிப்பு மிளிர இருப்பான். ஏன் இந்த வேறுபாடு? பசுமாடு அவனது அழகை அனுபவிக்காது. நாம் அனுபவிக்க வேண்டும். நாம் அவனை அனுபவிக்காவிட்டால் எப்படி?

மாட்டுக்கும், நமக்கும் வித்தியாசமில்லாமல் போய் விடுகிறது. ஆடு, மாடும் அனுபவிக்காதவனும் ஒன்று தான் என்ற நிலை ஏற்பட்டுப் போய் விடுகிறது. இப்படிப்பட்ட ஆபத்தில் நீங்கள் சிக்கி விடாதீர்கள். புருஷோத்தமன் என அவனை நினையுங்கள்.

ஒரு வீட்டில் அம்மாவிடம் பிள்ளை கோபித்துக் கொண்டான். அருகிலுள்ள தர்மசத்திரத்தில் போய் தங்கிவிட்டான்.

அம்மாவுக்கு இந்தத் தகவல் கிடைத்தது. அவளது மனம் பொறுக்கவில்லை.

ஏனென்றால், பிள்ளை வீட்டில் இருந்தால் கறியும் சோறும் சாப்பிடுவான். வகைவகையாய் எல்லாம் நடக்கும். நல்ல உடை அணிவான். சத்திரத்திலோ பழைய உணவு தான் கிடைக்கும். சரி...அவள் அவற்றையெல்லாம் தயார் செய்து எடுத்துக் கொண்டு போய் அவனிடம் நீட்டினால் என்ன சொல்வான்? அம்மா மீதுள்ள கோபத்தில் சாப்பிட மறுப்பான்.

உடனே என்ன செய்தாள்? சாப்பாட்டை தயார் செய்து கொண்டு போய், சத்திர முதலாளியிடம் கொடுத்து, இதை அவனிடம் கொடுங்கள். நான் தந்ததாக சொல்ல வேண்டாம் என்றாள். முதலாளியும் அதைப் பிள்ளையிடம் கொடுத்தான். உணவு நன்றாக இருக்கிறதே என அவரைப் பாராட்டினான் அந்தப் பிள்ளை. பெற்றோரை விட மற்றோர் தான் நன்றாகக் கவனிப்பார்கள் என்ற எண்ணம் அவனுக்குள் ஏற்பட்டது.

ஆனால், அம்மாவுக்கோ ரொம்ப சந்தோஷம். பிள்ளை திருப்தியாகச் சாப்பிட்டானே என்று. அந்த தாயன்பு பாராட்டுக்குரியது தான்.

ஆனால், இந்த தாய்க்கு அந்த மகனை கடந்த 20 வருடங்களாகத் தான் தெரியும். அவனோடு போனஜென்மம், மறுஜென்மம் உறவெல்லாம் தெரியாது.

பகவான் அப்படியா? ஆனால், அவன் நம்மோடு பல பல ஜென்மங்களாக உறவு கொண்டவன். இனி வரப்போகிற ஜென்மங்களிலும் உறவு கொள்ளப் போகிறவன்.

20 வருடமாக நம்மை அறிந்த தாயே, நம் மீது இவ்வளவு பாசம் காட்டுகிறாள் என்றால், பல ஆயிரம் ஜென்மங்களாக நம்மிடம் உறவு கொண்டுள்ள பகவான் நம் மீது எவ்வளவு பாசம் வைத்திருப்பான்!

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 Empty Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி Fri Jan 22, 2016 11:57 pm

தாயிடம் கோபித்துக் கொண்ட அந்தப் பிள்ளையைப் போல, நாமும் பல ஜென்மங்களாக அவனது உறவின் அருமையைத் தெரியாமல் தள்ளித் தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறோம். அந்தத்தாய் மகனுக்கு பாசத்தோடு

உணவிட்டது போல, அவனும் நம் தவறுகளைப் பொறுத்துப் போய்க்கொண்டே இருக்கிறான்.

இருந்தாலும், நாம் என்ன சொல்கிறோம்?

"எனக்கு என் மீது நம்பிக்கை இருக்கு! உன் உதவியே எனக்கு தேவையில்லை என்று''. இதற்குப் பெயர் தான் செருக்கு (ஆணவம்).

இரண்டு தோழிகள் இருக்கிறார்கள்.

ஒருத்தியை அவளது தாய் வேறு ஊருக்கு படிப்புக்காக அனுப்புகிறாள். படிப்பு மிகவும் அவசியம். அதற்காக,

நீண்டகாலம் பழகிய தோழியை விட்டு பிரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அந்தத் தாய்க்கு. இப்படியாக பாசம் மிக்க தோழிகள், சற்று தூரம் பிரிந்து போகிறார்கள்.

ஆனால், பகவான் அப்படியல்ல! அவன் நம்மை விட்டு பிரிவதே இல்லை. நம் இருதயத்திற்குள்ளேயே அவன் இருக்கிறான். ஏன் இவ்வளவு அருகில் இருக்கிறான் தெரியுமா? கூப்பிட்டவுடன் வருவதற்கு! இவன் எப்போது நம்மைக் கூப்பிடுவானோ, அப்போது நாம் போகலாம் என்று உள்ளேயே இருப்பான்.

ஒரு ஆள் தூரத்தில் வரும் போது, அவனது உருவம் நமக்கு சரியாகத் தெரியாது. பக்கத்தில் வர வர இன்னாரென புரியும். அதுபோல, பகவான் நம்முள்ளேயே இருப்பதை நாம் அறியவில்லை. அவன் எங்கேயோ இருக்கிறான் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். நாம் அவனை நினைக்க நினைக்க அவன் நம் அருகே நெருங்கி விடுவான்.

ஒரு கோயில் இருக்கிறதென்றால், அங்கே சென்று பகவானைப் பார்க்க சில நடைமுறைகள் உண்டு. காலை 6 மணிக்கு திறக்கும். 12.45க்கு சாத்தி விடுவார்கள். ஒருவன் 12.30 மணிக்கு போவோமே என இருப்பான். இவன் போவதற்கு தாமதமாகி விட்டது. நடை சாத்தி விட்டார்கள். பிறகு மாலை 4.30க்கு தான் திறக்கும். அதுவரை அவனுக்கு பக்தி இருக்க வேண்டுமே! இருந்தால் தான், சாயங்காலம் கோயிலுக்குப் போகும் திட்டம் நிறைவேறும்.

ஆனால், மனதுக்குள் இருக்கும் பகவானைத் தரிசிக்க இந்த திட்டமிடல் எல்லாம் தேவையில்லை. காலை 6 மணிக்கும் சேவிக்கலாம். நள்ளிரவு 12.30க்கும் சேவிக்கலாம். ஏனென்றால், அவன் சூஷ்மரூபமாக நமக்குள் இருக்கிறான். அதிலும், எந்த அளவுக்கு கருணை உள்ளத்தோடு

நமக்குள் இருக்கிறான் என்று கேளுங்கள். கேட்டால், நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

இன்னும் இனிக்கும்.....

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 Kr2LV6NTS1fZjJpe3pAh+00000

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 Empty Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by T.N.Balasubramanian Sat Jan 23, 2016 2:04 pm

இன்னும் இனிக்கட்டும் ,
இனிப்பு என்றுமே இனிக்கும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 Empty Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி Sat Jan 23, 2016 10:55 pm

T.N.Balasubramanian wrote:இன்னும் இனிக்கட்டும் ,
இனிப்பு என்றுமே இனிக்கும் .

ரமணியன்  
நன்றி ஐயா!

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 Empty Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி Sat Jan 23, 2016 11:05 pm

நினைத்தாலே இனிக்கும்! (7)

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 XW8GsvURP22acasbaSsQ+07

ரு சாக்கடை இருக்கிறது. அதன் அருகே நம்மை உட்கார வைத்தால், அப்படியே உட்கார்ந்திருக்க முடியுமா? நாற்றம் தாங்காது. முகத்தைத் திருப்பினாலும் நாற்றம் போகாது. தள்ளிப் போய் விடுவோம்.

ஆனால், பகவான் அப்படி இல்லை. நம் உடலுக்குள் ரத்தம், சதை, சீழ், சளி, மலம், சிறுநீர் என்று எத்தனையோ உபாதைகள் இருக்கின்றன.

அத்தனை நாற்றத்தையும் சகித்துக் கொண்டு, பகவான் சூஷ்மமாய் (நுண்ணிய அளவில்) உட்கார்ந்திருக்கிறான். அப்படியானால், அவன் எவ்வளவு கருணையுள்ளவன்! நம்முடைய தோலை அகற்றி விட்டு, நம்மை நாமே பார்த்தால் நமக்கே சகிக்காது. ஆனால், பகவான்

அத்தனையையும் சகித்துக் கொண்டு நமக்குள் பரமகருணா மூர்த்தியாய் இருக்கிறான்.

அப்படிப்பட்டவனை, நாம் எந்த அளவு கொண்டாட வேண்டும் என்பதை நாம் தான் முடிவெடுக்க வேண்டும். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்று உறவுகளைப் பற்றி சொல்லும் போது குறிப்பிடுவோம்.

உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மீண்டும் சேர வேண்டிய சூழலில் இவ்வாறு சொல்வதுண்டு. இதெல்லாம், மனிதர்களுக்குத் தான். பகவான் அப்படி இல்லை. அவன் நமது குற்றத்தைப் பார்ப்பதே இல்லை. குற்றம் செய்தாலும் நமக்குள்ளேயே இருந்து, நம்மை சீர்திருத்தவே முயற்சிக்கிறான். அது மட்டுமல்ல!

"உன் குற்றத்தை நான் பார்க்கமாட்டேன். உன் குணத்தையே பார்க்கிறேன்,'' என்று அவன் சொல்வான்.

பகவான் நுண்ணியனாய், சூஷ்மமாய் இருக்கிறான் என்று பார்த்தோம். இந்த சூஷ்மத்துக்கும், கிருஷ்ண அவதாரத்துக்கும் என்ன சம்பந்தம் என்பதை இனி பார்ப்போம்.

கிருஷ்ணர் "விபவ' அவதாரம். "விபவ' என்றால் "விசேஷம்'. பகவான், பர ரூபமாக அமர்ந்த கோலத்தில் வைகுண்டத்தில் உள்ளார். முக்தியடைந்தவர்களுக்கும், நித்யர்களுக்கும் (மரணமே இல்லாதவர்கள்) மட்டுமே அந்தக் காட்சி கிடைக்கும். பாற்கடலிலே அவர் சயனத்தில் உள்ளார். அங்கே பிரம்மா, ருத்ரன், வாயு, அக்னி முதலானவர்கள் அந்தக் காட்சியைத் தரிசிப்பார்கள்.

அவருக்கு நான்கு வியூகங்கள் உண்டு.

அவை வாசுதேவ, சங்கர்ஷண, ப்ரத்யும்ன, அனிருத்த என்ற நிலைகளாகும். இவற்றின் மூலம் படைத்தல், காத்தல், அழித்தல், வேதங்களைப் பாதுகாத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்கிறார். இவற்றை எல்லாம், சாதாரண மனிதர்களான நாம் காண இயலாது.

அப்படியானால், நமக்கு அவர் காட்சி தர வேண்டும்! நமக்கு பாற்கடலுக்கோ, வைகுண்டத்துக்கோ போக வழியே தெரியாது. அப்படியிருக்க, தேவர்களுக்கு கிடைக்கும் காட்சி நமக்கு கிடைக்க வழியே இல்லை. ஒருவேளை, நாம் யோகம் பண்ணப் பண்ண நமக்கு அந்தக்காட்சி கிடைக்கலாம். ஆனால், அதிலும் பல கட்டங்களைத் தாண்டியாக வேண்டும். இந்த சமயத்தில் தான் "விபவ' என்ற விசேஷ அவதாரத்தை அவர் எடுக்கிறார். அதில் ஒன்று கிருஷ்ணாவதாரம்.

Last edited by விமந்தனி on Tue Jan 26, 2016 12:58 am; edited 1 time in total

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 Empty Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி Sat Jan 23, 2016 11:08 pm

பொதுவாக, தசாவதாரம் எடுத்தாக நாம் சொல்கிறோம். ஆனால், 39.25 என்ற மாறுபட்ட கருத்துக்களும் உள்ளன. இன்னும் ஆச்சார்யார்கள் எல்லாம், பகவான் எண்ணற்ற அவதாரங்களை எடுத்தார் என எண்ணிக்கையைக் குறிப்பிடாமலும் கூறுகின்றனர்.

இப்படி ஒரு அவதாரமே கிருஷ்ணாவதாரம். எங்கோ இருக்கிற நம்மைக் காண, அவர் அழகான வடிவம் எடுத்து வந்தார்.

"சஜாதியதா' என்றால் மனித ஜாதி செய்வது போல் செயல்களைச் செய்வது. அவர் கிருஷ்ணாவதாரத்தில் வந்து மனிதனைப் போல் பேசினார், கல்யாணம் செய்தார், குழந்தை பெற்றார்.

மனிதனுக்குரிய இயற்கை சுபாவம் போல், கிருஷ்ணாவதாரத்தில் தப்பும் செய்தார். இந்த இடத்திலே தான் ஒரு கேள்வி எல்லார் மனதிலும் எழுகிறது.

"நாம் தப்பு செய்தால் பரவாயில்லை. கிருஷ்ணர் தப்பு செய்யலாமா?' என்பதே அந்தக் கேள்வி.

வாழ்க்கைய ரசிக்கவே அவர் அப்படி செய்தார். அதற்காக திருடக்கூட (வெண்ணெய்) செய்தார். அந்தக் காலத்தில், வடக்கே உள்ளவர்கள் அந்தக் காட்சிகளை நேரில் பார்த்தனர். கிருஷ்ணனைத்தரிசித்தனர். நாம் தெற்கே இருக்கிறோம். அதற்காகத்தான், அவர் அந்தர்யாமியாக உள்ளே இருக்கிறார்.  

அவரைத் தியானத்தின் மூலமே நம்மால் புரிந்து கொள்ள முடியும். பிரம்ம தண்டம் வைத்திருப்பவர்கள்

(ரிஷிகள்) தானே தியானம் செய்ய முடியும் என்று கேட்கலாம். அது அவர்களுக்கு மட்டும் உரியது அல்ல.

எல்லாராலும் அது முடியும். ஆனாலும், நம்மால் முடியவில்லையே! அதற்கு என்ன செய்ய வேண்டும்? அந்த பகவானை ஐந்து நிமிடம் மனதால் நினைத்தாலே போதும்! அதுவும் தியானம் தான். அப்படி நினைத்தாலே உள்ளே இருக்கும் அழுக்கு போய்விடும்.

அப்படியும் முடியவில்லையா? நல்லதைச் சொல்லி பகவானை நினைக்க வைக்க முடியவில்லையா? அதற்காகத்தான் கிருஷ்ணன் திருடினான், கிருஷ்ணன் பொய் சொன்னான் என்றெல்லாம் சொல்லி கிருஷ்ண நாமத்தை சொல்ல வைத்தார்கள். இதைத்தான் "களவும் கற்று மற' என்றார்கள்."களவும் கற்று மற' என்றால், அதிலுள்ள ஆபத்தைத் தெரிந்து கொள்வதற்கு மட்டுமே! திருடு, பொய் சொல் என்று சொல்வதற்காக வந்ததல்ல இந்த பழமொழி.

ஏதோ ஒரு விதத்தில் பகவானை ஐந்து நிமிடம் நினையுங்கள். உள்ளே இருக்கிற அழுக்கு போய் விடும். அதற்காக, நீங்கள் வெகுதூரம் போக வேண்டியதில்லை.

"மகாராஷ்டிராவில் போய் பால் வாங்கி வா' என்றால் ஒருவர் போவாரா? அதுவே, பக்கத்து வீட்டில் என்றால், உடனே போய் விடுவார்.

அதுபோல், எங்கோ வைகுண்டத்திலோ, பாற்கடலிலோ இருப்பவனைத் தான் நினைத்தாக வேண்டுமென்பதில்லை.

உங்களுக்குள் உள்ளவனை வணங்குங்கள். அவனை சூஷ்மமாக வணங்குவதும் சிரமம் என்பதால் தான், அர்ச்சாவதாரம்என்ற நிலை உருவானது. "அர்ச்சை' என்றால் "விக்ரஹம்'. அந்த விக்ரகத்திற்கு பழம், பூ, புளியோதரை, தயிர்ச்சாதம் என படைத்து ஆராதிக்கிறோம்.

சரி...கிருஷ்ண அவதாரத்துக்கு உரிய இன்னும் சில சிறப்புகளைப் பார்ப்போமா!
இன்னும் இனிக்கும்......

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 Ng3szvDlSaKsV6wYGNkl+00000

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 Empty Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி Tue Jan 26, 2016 1:06 am

நினைத்தாலே இனிக்கும்! (8)

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 NA5clxARNCL6FT4OzcHt+08

கிருஷ்ணர் என்பவர் ஏன் அவதரிக்க வேண்டும் தெரியுமா?
நாமும் கண்ணால் தரிசிக்க வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால், நாம் பார்க்க மறுக்கிறோம். இசை கற்றுத்தரும் ஆசிரியர் வீட்டுக்கு வருகிறார். படிக்க வேண்டிய பெண்ணோ, போனில் பேசிக் கொண்டிருக்கிறாள். அவர் கோபத்துடன் வெளியேறி விடுகிறார். அப்படியானால், அவள் இசை கற்கும் ஆர்வமில்லாமல் இருக்கிறாள்

என்று தானே பொருள். இதுபோல் தான், கிருஷ்ணரைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆர்வம் நம்மிடம் இல்லை.

ஆனால், ஒரு சிலர் பயன் பெற்றார்கள். கோபியர்கள் அவரைத் தரிசித்தனர். சஞ்சயன், விதுரர் பார்த்தார். குசேலர் பயன் பெற்றார். ஆனால், அவரைப் பார்த்தும் துரியோதனன், சகுனி கூட்டம் பயன்பெறவில்லை.

இப்போது, இன்னொரு சந்தேகம் எழும். "பகவானைப் பார்த்தாலே மோட்சம் என்கிறார்களே! துரியோதனனும், சகுனியும் பார்க்கத்தானே செய்தார்கள்! அவர்கள் ஏன் மோட்சம் பெறவில்லை?' என்று!

அதற்கு நம் மனோபாவம் தான் காரணம். நல்ல மனநிலையுடன் இருந்தால் தான் அவன் நமக்கு பலன் தருவான்.

கஸ்தூரி திலகமிட்டு, கவுஸ்துபம் என்னும் நீலக்கல் தரித்து, மூக்கு நுனியிலே புல்லாக்கு இட்டு, கையிலே புல்லாங்குழல் ஏந்தி, மணிக்கட்டில் கங்கணம் கட்டி, கழுத்திலே அட்டிகை மாலை, சரப்புளி சங்கிலி தரித்து, சந்தனம் சாத்தி, கோபிகைகளால் சூழப்பட்டு கோபாலகண்ணன் அழகே வடிவாய் விளங்குகிறான்.

இந்த அழகை நாம் ரசிக்க வேண்டும். பதிலாக, இந்த அழகு காட்டிலே ஒளிவீசும் நிலவாய் இருக்கக்கூடாது. அந்த ஒளி நாட்டிலே வீசினால் நன்றாயிருக்கும்.

நட்சத்திரங்களை ஆர்வமாகக் கூட்டிக்கழித்து பார்ப்போம் இல்லையா! அதுபோல, அழகுக்கண்ணனை நாம் பார்க்க வேண்டும்.

அவர் அழகாக விளங்குகிறார் என்பது மட்டுமல்ல. பூமிக்கு ஏற்படும் பாரத்தைப் போக்கிக் கொடுக்கிறார்.

"பரித்ராணாய சாதூனாம் வினாசாய ச துஷ்க்ருதாம்
தர்மஸம்ஸ்த்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகேயுகே!' என்று அவரே சொல்கிறாரே!

ஆம்..சாதுக்களைக் காப்பாற்றவும், துஷ்டர்களை அழிக்கவும், தர்மத்தை நிலைநிறுத்தவும் யுகம்தோறும் நான் தோன்றுகிறேன் என்கிறார் பரமாத்மா.

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 Empty Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி Tue Jan 26, 2016 1:08 am

"யாரொருவர் நான்(கிருஷ்ணர்) பிறந்தேன் வளர்ந்தேன் என்பதை நினைக்கிறாரோ, அவருக்கு பிறவியே கிடையாது என்றும் கீதை நான்காவது அத்தியாயத்தில் அவர் கூறுகிறார்.

சஞ்சயன், உத்தவன் அவரிடம் நன்றாகப் பக்தி செய்தனர். விதுரர் வீட்டுக்கு கிருஷ்ணர் வந்தார். அவரது முகத்தைப் பார்த்துக் கொண்டே, விதுரர் பழத்தை உறித்தார்.

அவர் கையில் கொடுத்தார். கொடுத்தது பழமல்ல, தோல். ஆனால், அதையும் அவன் விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டான். தன்னை மறந்து பக்தி செலுத்தினார் விதுரர்.

இப்படிப்பட்டவர்களுக்காகத் தான் பரமாத்மா கிருஷ்ண வடிவம் தாங்கி பூமிக்கு வந்தார். பகலில் விளக்கெரிந்து பயனில்லை. இரவில் எரிந்தால் தான் பயன். கடலில் மழை பெய்து பயனில்லை. நிலத்தில் பெய்தால் தான் பலனுண்டு. அதுபோல், வைகுண்டத்தில் இருந்து என்ன பயன்? அதற்காக, யாருக்கு தேவையோ, அந்த பூலோக மக்களுக்காக பகவான் வந்தார். இருளான பூமிக்கு விளக்காக, கண்ணன் என்னும் பெயர் தாங்கி வந்தார்.

ஒன்றாம் தேதி முதலாளி சம்பளம் தந்து விட்டார். ஆனால், அப்படி தந்ததே தெரியாவிட்டால் ஒரு தொழிலாளிக்கு என்ன பயன்? அந்த தொழிலாளியின் மனநிலையில் நாம் இருக்கிறோம். இங்கே நாம் முதலாளி...

அவன் தொழிலாளி போல் வருகிறான்.

நமக்காக பணி செய்ய வருகிறான். நாம் தான் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சரி...அவன் இவ்வளவு அழகாக வர வேண்டும்?

நரசிம்மர் அருகே நம்மால் போக முடியுமா? நாமெல்லாம் பிரகலாதர்கள் இல்லை. அவன் அவரைக் கண்டு பயப்படவில்லை.

அவன் மிகவும் தைரியமாக, ""என்ன ரூபம்... அழகு ரூபம்...'' என்று அவரை வர்ணித்தான். சட்டென்று அவர் அடங்கி விட்டார். பிரம்மா உள்ளிட்ட தேவர்களே அவரைக் கண்டு பயந்த நேரத்தில், பிரகலாதன் அவரை அடக்கி விட்டான். இரண்யாட்சனை ஒரே அடியில் வீழ்த்தினார் வராக அவதாரத்தில். அந்த ரூபத்தை நம்மால் ரசிக்க முடியுமா? பிரளய காலத்தில் (உலகம் அழியும் காலம்) மச்ச (மீன்)அவதாரமாக வந்தான். நாம் அப்போது இருக்கவே மாட்டோம் அவனைக் காண...!

இப்படி உயர்ந்த அவதாரங்களையெல்லாம் எடுத்து மனித ரூபத்தில் வந்தார். பத்திரிகை செய்தியில், ஒருவரை உயரத்தூக்கி கீழே போடுவது போல பகவானும் தன்னை மனுஷ ரூபத்திற்கு குறைத்துக் கொண்டு அவதாரம் எடுத்தார்.

ராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியவை அவரது மனித ரூபங்கள். கிருஷ்ணாவதாரத்தையே உயர்த்திச் சொல்கிறீர்களே! ராமாவதாரமும் உயர்ந்தது தானே எனலாம். இது உண்மை தான். ஆனால், ராமன்

சக்கரவர்த்தியின் மகன். அவரை ஒதுங்கி நின்று தான் சேவிக்க முடியும். அவராகப் பார்த்து பிச்சை போட்டால் நாம் வாங்கிக் கொள்ளலாம். அவர் அதிகம் சிரிக்க மாட்டார். மெதுவாகவே நடப்பார், மெதுவாகவே சிரிப்பார், ஆனால், நம்மைப் போல் வம்பு, விளையாட்டு எல்லாம் இருந்தால் தான் நம்மால் ரசிக்க முடியும்!

அதற்காகத் தான் கிருஷ்ணனாக இங்கே வந்தார்.

கண்ணன் குழந்தையைக் கிள்ளி விடுவார். கன்றுக்குட்டியின் வாலில் பட்டாசு கட்டுவார். வெண்ணெய் பாத்திரத்தை திருடுகிறார்... உடைக்கிறார். பசுவைக் கொண்டு சிலரை உதைக்க விடுகிறார்.

அதே நேரம், தெய்வத்தன்மைக்குரிய காரியங்களையும் செய்கிறார். ஏழுவயது குழந்தையாக இருக்கிறபோதே, கோவர்த்தனகிரியைத்

தூக்குகிறார். அவ்வப்போது, நான்கு சக்கரங்களுடன் காட்சி தருவார். ராமர் ராஜா என்பதால், தலைவர்களுடனேயே பேசினார். எப்படி?

இன்னும் இனிக்கும்......

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 Ng3szvDlSaKsV6wYGNkl+00000

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 Empty Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by T.N.Balasubramanian Tue Jan 26, 2016 2:51 pm

எப்பிடி ?.................................
காத்திருக்கிறேன் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 5 Empty Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 20 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 20  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum