ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

+5
T.N.Balasubramanian
M.Jagadeesan
ayyasamy ram
shobana sahas
விமந்தனி
9 posters

Page 3 of 20 Previous  1, 2, 3, 4 ... 11 ... 20  Next

Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 Empty நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி Thu Jan 14, 2016 12:08 am

First topic message reminder :

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 8Cxbtr50Q3mb4GxrL2hl+000copy

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 UpmAbqkhRqK3UMuI0Biy+00000

Last edited by விமந்தனி on Sat Jan 16, 2016 9:51 pm; edited 1 time in total

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 Empty Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி Wed Jan 20, 2016 11:55 pm

நினைத்தாலே இனிக்கும்! (4)

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 6KDlhrjDSA6n8yJCXqLF+04

ஷ்டமா சித்திகளில் மூன்றாவது "பிராப்தி'. "தூரத்தில் இருப்பதைத் தொடுவது' என்பதே இந்த சித்தி. அதாவது, விரல் நுனியால் சந்திரனைக் கூடத் தொடலாம். இது ஏதோ சித்து வேலை அல்ல. ஞானத்தை வளர்த்துக் கொண்டால், இதெல்லாம் சாத்தியமே. கொஞ்சமாவது தியானம் செய்தால் தான், சித்திகளை அடைவதற்குரிய ஆரம்பக்கட்டத்திலாவது நுழைய முடியும்.

சித்திகளில் நான்காவது, "பிராகாம்யம்'. அதாவது தடையின்றி விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளுதல். அது எந்த விருப்பமாக இருந்தாலும், அது நிறைவேறி விடும்.

பரத்வாஜர் ஆஸ்ரமத்துக்கு ராமபிரான் போனார். பரதன் அங்கே சதுரங்க சேனையைத் திரட்டிக் கொண்டு வந்தான். பரத்வாஜர் நான்கு சிஷ்யர்களுடன் ஆஸ்ரமத்தில் இருக்கிறார்.

வந்தவர்களை எப்படி பசியோடு அனுப்புவது? மொத்த சேனைக்கும் விருந்து போட வேண்டும்.

இத்தனை பேருக்கு சாப்பாடு போட வேண்டுமானால் செலவு என்னாகும்? செலவழித்தாலும், சாப்பாடு தயாரிக்க ஆள் வேண்டும். அவ்வளவு பொருட்களை ஒரே சமயத்தில் திரட்ட வேண்டும்.

ஆனால், பரத்வாஜர் அதுபற்றி கவலைப்படவே இல்லை.
""கை கால் அலம்பு, இலையைப் போடப் போறேன்,'' என்று சாதாரணமாக பரதனிடம் சொல்கிறார்.

""சுவாமி! என் படைக்கே சாப்பாடு போடுவதென்பது எப்படி சாத்தியம்?''

""அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்! எல்லாரையும் உட்காரச் சொல்,'' .

தசரதர் வைத்த விருந்தை விட பெரிய விருந்து இங்கே பரிமாறப்பட்டது. மாம்பழமே 12 வகை, ஆரஞ்சு 22 வகை, 50 வகை காய்கறி, 20 வகை கூட்டு...எப்படி இவ்வளவும் தயாரானது?

"பிராகாம்யம்' என்ற சித்தியை பரத்வாஜர் அறிவார். இந்த சித்தியை அடைந்தவர்கள் நினைத்தஉடன் எதுவும் நடந்து விடும். இத்தனை பேருக்கு விருந்து தயாராக வேண்டும் என அவர் நினைத்தார்!

அது நடந்து விட்டது. நம்மால் அது முடியுமா?

சில பேர் சமைத்தால் பாத்திரத்தை விட்டே வெளியே வராது. ஏனென்றால், அதற்கு அதை விட்டு வர பிடிக்கவில்லை. ஆனால், அடுப்பு மூட்டாமலே சோறு போட்டார் பரத்வாஜர்.

ஐந்தாவது சித்தியாக உள்ளது "மகிமா'. இதற்கு "பிரம்மாண்டத்தை விட பெரிய உடல் எடுப்பது' என பொருள். பிரம்மாண்டம் என்றால் இந்த பிரபஞ்சம். எத்தனை உலகங்கள் இருக்கிறதோ, அதை விட பெரிதாக வடிவெடுப்பதே இந்த சித்தி கை கூட வேண்டுவதின் நோக்கம்.

இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், "எது பெரிதோ அதைவிட பெரிதாகுதல்' எனலாம்.

ஆஞ்சநேயர் சீதையைத் தேடி லங்கைக்கு போனார். கடலைத் தாண்டிப் பறக்கும் போது, சுரஷா என்ற நாகமாதா அவரைத் தடுத்தாள்.

""ஆஞ்சநேயா! நீ எனக்கு உணவாக வேண்டும் என பிரம்மா என்னிடம் சொன்னார். ஆனால், நீ என்னைத் தாண்டி செல்கிறாயே!'' என்றாள்.

""நாகமாதா! நான் இப்போது ராமகாரியம் தொடர்பாகச் சென்று கொண்டிருக்கிறேன். அதை முடித்து விட்டு வந்து, தங்களுக்கு உணவாகி விடுகிறேன்,'' என்றார் ஆஞ்சநேயர்.

இதை யார் நம்புவார்கள்? ஆவென வாயைத் திறந்தாள் சுரஷா. ஆஞ்சநேயர் உள்ளே போய் விட்டார். ஆனால், தன் உடலை பத்து யோஜனை தூரத்திற்கு பெரிதாக்க, சுரஷாவும் வாய் அளவை உயர்த்திக் கொண்டே போனாள். சட்டென உருவத்தை அணுவளவு சிறிதாக சுருக்கிய (அனிமா சித்தியைப் பயன்படுத்தி) ஆஞ்சநேயர், அவளது காது வழியாக வெளியேறி விட்டார். ஆக, சித்திகளை அடைந்தவர் என்பதால், அவருக்கு அது சாத்தியமாயிற்று.

அது மட்டுமல்ல! ""அம்மா! உன் வாய்க்குள் புகுந்து வெளியேறி விட்டேன். இதனால், நான் உனக்கு உணவாகி விட்டதாகவே அர்த்தம்,'' என்றார்.

சாமர்த்தியமான பிள்ளை அவர். ஆகாயத்தில் சூரியனைப் பழமாகப் பார்த்து பறந்து பிடித்த சாமர்த்தியக்காரர். நமக்கெல்லாம், ஏதோ ஒரு சிறுதிறமை இருந்தாலே, பெருமை பேச ஆரம்பித்து விடுவோம்.

Last edited by விமந்தனி on Thu Jan 21, 2016 12:01 am; edited 1 time in total

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 Empty Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி Thu Jan 21, 2016 12:00 am

தம்பட்டம் அடிப்போம். அனுமான், சிறுவயதில் சூரியனைப் பழமாய் நினைத்து பறிக்கப் போன சம்பவத்தை மறந்தே போனார். ஜாம்பவான் ஞாபகப்படுத்த போய்தான், அவரது திறமையே அவருக்கு தெரிய வந்தது.

சித்திகளில் ஆறாவது "ஈசிதா'. அதாவது, மரம், மட்டை, மண், செடி, கொடியைக் கூட நம் சொல்லுக்கு கட்டுப்படச் செய்தல். ராம ராவண யுத்தம் முடிந்து, அயோத்தி செல்லும் வழியில் உள்ள மரங்களையெல்லாம் பூத்து குலுங்க வேண்டும் என்றும், பழங்கள் பழுக்க வேண்டும் என்றும் விரும்பினார் பரத்வாஜர். அவர் சொல்லுக்கு தாவரங்களெல்லாம் கட்டுப்பட்டன. கார்த்திகை மாதம் மாம்பழம் கிடைக்குமா என்றால் சீசன் கிடையாது. ஆனால், இவர் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும்.

சித்திகளில் ஏழாவதான "வசிதா' என்னும் "தன்வசப்படுத்துதல்' மூலம் பரத்வாஜருக்கு இதெல்லாம் சாத்தியமானது.

காமவாசியாயுதா என்னும் எட்டாவது சித்தி பற்றியும் தெரிந்து கொள்வோம். இதுவும் "நினைத்தது நடத்தல்' என்ற வகையில் அடங்கும். சமைத்து சாப்பிட வேண்டும் என்றால் நேரமாகும். வேலை இருக்கும்.

ஆனால்,

இருந்த இடத்திலேயே சாப்பிட நினைத்தால் அது சாத்தியமாகி விடும்.
இப்படி சித்திகளை நமக்கெல்லாம் சாத்தியமா என்றால் சாத்தியமே. ஆனால், அதற்கு பல தர்மகாரியங்கள் செய்ய வேண்டும்.

தர்மகாரியம் என்றவுடன், ஆரம்பத்திலேயே பெரிதாக ஏதும் செய்ய வேண்டுமோ என நினைக்க வேண்டாம். சிறியதில் ஆரம்பித்தால் போதும். அது போகப்போக பெரிதாக மாறி விடும். ஆறுமாதம் பொறுமையாக தர்மத்தைச் செய்து பாருங்களேன். கொஞ்சம் கொஞ்சமாக தர்மசிந்தனை மனதில் ஊறிவிடும்.

தெளிவு, புத்திக்கூர்மை, சாந்தி, ஆனந்தம் ஆகியவையும் எட்டு சித்திகளையும் அடையத் தேவை. ஆனால், இவற்றை அடையவிடாமல் பாவங்கள் நம்மை மூடிக்கொண்டுள்ளன.

ஆத்மா இருக்கிறாரே! அவர் தான் நாம்! உடலுக்கு சூஷ்ம ரூபம் இல்லை. அது ஸ்தூல (கண்ணுக்குத் தெரியும்) ரூபம்.

கொசு, எறும்பு போன்றவை கூட கண்ணுக்குத் தெரியும். ஆனால், ஆத்மாவை யாரும் பார்க்க முடியாது. அது மிகவும் நுண்ணியது. அது தங்குவதற்கு கட்டடமே வேண்டாம். குளிக்க வேண்டாம். அதற்கு உடம்பே இல்லை. சமைத்தாலும் சாப்பிட வாயில்லை.

அதற்கு வியாதியே வராது. சம்பந்தி சண்டை எல்லாம் அதற்கு கிடையாது.

அப்படியானால், ஆத்மாவுக்கும், உடலுக்கும் என்ன சம்பந்தம்? அது ஏன் உடலுக்குள் இருக்க வேண்டும்? ஆராய்வோம்.

இன்னும் வரும்....

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 UylU7CSRCHwtNj24c2Pw+00000

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 Empty Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by T.N.Balasubramanian Thu Jan 21, 2016 7:19 am

கல்யாணத்திற்கு முன்பே ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டு .
சித்திகள் பல கிடைக்கவேண்டும் என  நினைத்ததுண்டு .
எந்தன் மகனுக்கு அந்த பாக்கியம் கிடைத்தது

{.எந்தன் மனைவிக்கு தங்கைகள் நாலு } அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 Empty Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by T.N.Balasubramanian Thu Jan 21, 2016 7:21 am

அஷ்டமா சித்திகள் நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 103459460 நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 3838410834 நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 1571444738

தொடருகிறேன் ,விமந்தனி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 Empty Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by சசி Thu Jan 21, 2016 8:24 am

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 3838410834 நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 103459460 நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 3838410834 நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 3838410834
அருமை அக்கா

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 Empty Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி Thu Jan 21, 2016 11:35 pm

T.N.Balasubramanian wrote:கல்யாணத்திற்கு முன்பே ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டு .
சித்திகள் பல கிடைக்கவேண்டும் என  நினைத்ததுண்டு .
எந்தன் மகனுக்கு அந்த பாக்கியம் கிடைத்தது

{.எந்தன் மனைவிக்கு தங்கைகள் நாலு } அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரமணியன்
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 Empty Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி Thu Jan 21, 2016 11:36 pm

T.N.Balasubramanian wrote:அஷ்டமா சித்திகள் நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 103459460 நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 3838410834 நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 1571444738

தொடருகிறேன் ,விமந்தனி

ரமணியன்
நன்றி ஐயா!

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 Empty Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி Thu Jan 21, 2016 11:37 pm

சசி wrote:நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 3838410834 நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 103459460 நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 3838410834 நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 3838410834
அருமை அக்கா
நன்றி சசி!

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 Empty Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி Thu Jan 21, 2016 11:41 pm

நினைத்தாலே இனிக்கும் (5)

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 DUMpycpSS2wNRyJxvABr+05

டல் என்பது தாங்கப்படுவது. ஆத்மா என்பது தாங்குவது. ஆத்மா இருக்கும் போது, ஒரு ஆள் தனக்குத்தானே தூக்கிக் கொண்டு அலைந்த உடலை, அது போனதும் நான்கு ஆள் தாங்க வேண்டியிருக்கிறது. அதாவது, சிறியவராக (ஆத்மா) இருந்து, நம்மைத் தூக்கியவர் போய்விட்டால், நாலு ஆள் தூக்க வேண்டியிருக்கிறது. கை, கால்களை இழுத்தால் முன்பைப் போல் நேராக நிற்க மறுக்கிறது.

"வியாபக வியாப்யம்' என்று ஒரு வார்த்தை சொல்வார்கள். இதற்கு "நிறைந்திருத்தல்' என்று பொருள். ஆத்மா சூஷ்மமானது. பகவானும் சூஷ்ம உருவம் கொண்டவர். ஆத்மாவும் சூஷ்மம், பகவானும் சூஷ்மம் என்றால், நானும், பெருமாளும் சமமா? என்ற கேள்வி எழும். இங்கே ஒரு வித்தியாசம் இருக்கிறது. பகவான் "விபு'. அதாவது எங்கும் நிறைந்திருப்பவர். நாம் நம்மிடத்தில் மட்டுமே இருக்கிறோம்.

"அவன் எங்கும் பரந்துள்ளவன்' என்கிறார் நம்மாழ்வார். காலம் தானும் ஓடும். அது எதை எதையெல்லாம் சூழ்ந்துள்ளதோ அதையும் சேர்த்து ஓட வைக்கும். காலை 6.30 மணிக்கு மலர்ந்த பூவாக பகவானுக்கு சூட்டுகிறோம்.

8.30 மணிக்கு பார்த்தால் வாடிப் போயிருக்கிறது. இதை மாற்றியது எது? காலம்...! அதுபோல், இந்த உடம்பிலும் காலம் போகப்போக மாறுதலை ஏற்படுத்தி விடுகிறது. நேற்று 50 வயது. இன்று 24 மணி நேரம் கழிந்திருக்கிறது. இப்போது பார்த்தால் நேற்றை விட மூட்டு தேய்ந்திருக்கும், தோல் சுருங்கியிருக்கும். இப்படி சிறு வயதிலிருந்து ஒவ்வொரு நாளும் நம் உடலில் ஏற்பட்ட மாற்றத்துடன் தான், இன்றைய உடம்பு இருக்கிறது.

பகவான் எங்கும் வியாபித்திருப்பது போல, காலம் என்ற தத்துவமும் எங்கும் பரவியுள்ளது. ஆனால், இது பூலோகத்திற்கு மட்டும் தான் பொருந்தும். காலத்திற்கு அப்பாற்பட்ட ஒரு இடம் இருக்கிறது. அதற்குப் பெயர் தான் வைகுண்டம். அங்கே, காலம் தன் வேலையைச் செய்யாது. அங்கே முதுமை உண்டாவதில்லை. தோல் சுருங்குவதில்லை.

பூமியில் ஆத்மாவை காலம் சூழ்ந்தால் உடம்பு விழுந்து விடும். அங்கே, காலத்தால் ஆத்மாவை சூழ முடியாது. ஒருவேளை சூழ்ந்தாலும், பாதிப்பு ஏற்படுவதில்லை. காலத்தால் அங்கே ஆத்மாவைத் தொட முடிவதில்லை.

இதனால் தான் ஆழ்வார்கள், ஆத்மா வைகுந்தத்தை அடையட்டும் என்று வேண்டுகிறார்கள்.

இப்படியாக காலம் போகுது...போகுது... போகுது...போய்க்கொண்டே இருக்கிறது. ஒருவர் போய் விட்டார் என்றால், இன்னொரு குழந்தை பூமிக்கு வந்து விடுகிறது. இப்படி பிறப்பு, இறப்பு மாறி மாறி வருகிறது. இப்படியே, நாம் பிறந்து பிறந்து மாண்டு கொண்டிருந்தால் எப்படி?

ஏன் இங்கு கிடந்து மாறி மாறி சிரமப்பட வேண்டும்? இதற்கு ஒரு முடிவு வேண்டுமல்லவா! அதற்கு என்ன செய்ய வேண்டும்? இந்த உடலுக்குள் இருக்கும் ஜீவாத்மா வைகுந்தத்தை அடைய ஏதாவது
செய்தாக வேண்டுமே!

இந்த உடம்பு இருக்கிறதே! அது சின்ன வயதில் நாம் சொன்னதைக் கேட்கும். வயதாகி விட்டால், அது சொல்வதை நாம் கேட்க வேண்டியிருக்கும். சிலர் நினைப்பார்கள்.

"இந்த உடம்பை நாம் எப்படி நடத்தினால் என்ன! இதுதான் ஒருநாள் நெருப்பில் வேகப் போகிறதே!'' என்று. இங்கு தான் நாம் தவறு செய்கிறோம்.

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 Empty Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி Thu Jan 21, 2016 11:44 pm

இந்த சரீரம் சிறந்த தர்மங்களைக் கடைபிடிக்க வேண்டிய சாதனம். ஆத்மாவுக்கு தான் ஞானமுண்டு. உடம்புக்கு கிடையாது. அதனால் ஆத்மா சொல்வதை உடல் கேட்க வேண்டும். ஆத்மா சொல்லும் சிறந்த தர்மங்களை, இந்த உடலைக் கொண்டு கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக, இது தளரும் வரை தாராளமாக உழைக்க வேண்டும். இப்படி, இந்த உடலை பத்திரமாக வைக்க வேண்டியது நம் கடமை.

அப்படி வைத்தால் தான், இந்த உடல் சொர்க்கத்துக்குப் போனால் தேவேந்திர வடிவம் எடுக்கும். நரகம் போனால்' யாதனா சரீரம்' ஆகும். பிரளய (உலகம் அழியும்) காலத்தில் மட்டும் அது பிரகிருதியுடன் மெழுகில் தங்கப்பொடி ஒட்டியது போல இருக்கும். வைகுண்டத்துக்குப் போனால் தான், பகவானுக்கு சமமான சரீரம் கிடைக்கும். அதனால் தான் பகவானின் சிலையைக் கூட "திருமேனி' என்கிறோம். அவருக்கும் அணியும் ஆபரணத்தை "திருவாபரணம்' என்று மரியாதையுடன் அழைக்கிறோம்.

பகவானின் திருமேனி நம்மைப் போல் பஞ்ச பூதங்களால் ஆனது அல்ல. பஞ்ச சக்திமயமானது. நாம், இங்கே இருக்கும் வரை தமஸ் (மந்த), சத்வம் (நல்ல), ரஜஸ் (ராட்சத)என்ற குணங்களின் கலவையானவர்கள். பகவானின் உலகத்துக்குள் போய் விட்டால், அங்கே சத்வம் மட்டும் தான்.

பகவான் எங்கும் இருக்கிறார். இங்கே இருக்கிற கடிகாரத்திலும் இருக்கிறார். தன்னைப் பற்றி தெரியாதவர்

இடத்திலும் இருக்கிறார். தன்னைப் பற்றித் தெரிந்த வசிஷ்டர் முதலானவர்களிடமும் இருக்கிறார். எல்லாருக்குள்ளும் ஒரே நேரத்தில் எப்படி இருக்கிறார்? அவர் சூஷ்மமாக (யார் கண்ணுக்கும் தெரியாமல்) இருந்தாலும், எங்கும் பரந்திருக்கிறார்.

பரந்து விரிந்துள்ள அவர் எப்படி இருப்பார் என்று ஒரு கேள்வி எல்லோருக்குள்ளும் இருக்கிறது.

கருப்பு மேகத்தை நெருப்பு விழுங்கினால் இனம்புரியாத ஒரு வர்ணமாகி விடும். அப்படி ஒரு அழகான வடிவத்துடன், நமது இருதயத்தில் கட்டை விரல் அளவுக்கு இருப்பாராம். தியானிப்பவனுக்கு மட்டுமே அவர் அனுக்கிரகம் செய்வார். அவர் எனக்குள்ளேயும் இருக்கிறார், என் நகக்கண்ணுக்குள்ளேயும் இருக்கிறார் என நினைக்கும் போது தான், அவர் நமக்குத் தெரிவார்.

அவர் எங்கும் நிறைந்துள்ளவர். அவரே என்னைத் தாங்கியுள்ளார், எனக்குள்ளும் தங்கியுள்ளார். எனக்கு முன்னே, பின்னே, பக்கவாட்டில் என எங்கும் இருக்கிறார் என தினமும் ஐந்து நிமிடமாவது நினைக்க வேண்டும். அப்படி நினைத்தால் தான், அவர் புருஷோத்தமன் (எல்லாரையும் விட உயர்ந்தவர்) என நமக்குப் புரியும்.

நமக்கு தரப்பட்டிருக்கும் 24 மணி நேரத்தில், 23 மணி நேரம் இந்த உடலைப் பற்றி நினையுங்கள்.

பிரச்னையில்லை. ஆனால், ஒரு மணி நேரமாவது, இதற்குள் இருக்கும் ஜீவாத்மா பற்றி நினையுங்கள். அதுபோய் விட்டால், இந்த உடலின் கதி என்னாகும் என்பது பற்றி சிந்தியுங்கள். இந்த ஆத்மாவை வெட்ட முடியாது, தொட முடியாது, அதற்குரிய ஒரே சிறுமை என்னவென்றால், அது எங்கும் பரந்திருக்க முடியாது.

அவரவருக்குள் மட்டும் தான் இருக்கும். இப்படியெல்லாம், ஆத்மா பற்றி சிந்திக்க ஆரம்பித்து விட்டால்,

பாவம் விலகும். மனமாசு நீங்கும். ஞானஓட்டம், தெளிவு, நல்லெண்ணம் பிறக்கும்.

இன்னும் இனிக்கும்....

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 U2LiNLC0Q4KNg3tKzNsE+00000

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 3 Empty Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 20 Previous  1, 2, 3, 4 ... 11 ... 20  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum