ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
heezulia
நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 17 Poll_c10நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 17 Poll_m10நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 17 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

+5
T.N.Balasubramanian
M.Jagadeesan
ayyasamy ram
shobana sahas
விமந்தனி
9 posters

Page 17 of 20 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19, 20  Next

Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 17 Empty நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி Thu Jan 14, 2016 12:08 am

First topic message reminder :

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 17 8Cxbtr50Q3mb4GxrL2hl+000copy

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 17 UpmAbqkhRqK3UMuI0Biy+00000

Last edited by விமந்தனி on Sat Jan 16, 2016 9:51 pm; edited 1 time in total

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 17 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 17 Empty Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by T.N.Balasubramanian Sat Mar 05, 2016 4:12 pm

Krishnaammaa wrote:சரிதான், ஆனால் சிலசமையங்களில் நம் செய்கையை நாமே பார்க்கும்போது, இது பூர்வஜன்ம கர்மாவா?...இல்லை அடுத்த ஜன்மத்திர்க்காக நாம் இப்போ செய்து கொண்டிருக்கும் பாவமா என்று புரிய மாட்டேன் என்கிறதே? சோகம்

எல்லாமே பூர்வ ஜன்ம கர்மாதான் .

அதைத்தான் இப்போது செய்கிறீர்கள் .

அதன் பலாபலன்களை அடுத்த ஜன்மத்தில்தான் அறிய முடியும் .

நீங்கள் கேட்கும் கேள்வியே , பூர்வ ஜன்மத்தில் எழுந்த சந்தேகமே !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 17 Empty Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி Mon Mar 07, 2016 12:14 am

நினைத்தாலே இனிக்கும்! (19)

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 17 HV3hqQ5QTl2TE3eTukWN+19

தொண்டரடிப்பொடியாழ்வார் திருமாலை பாசுரத்தில் வேதம் வகுத்த நியதிப்படி மனிதனுக்கு வயது 100 என குறிப்பிடுகிறார். இதில் பாதிக் காலத்தை மனிதன் தூங்கியே கழிக்கிறான்.

இரவில் தூங்கும் மனிதர்களுக்கு மட்டுமே இதுவும் பொருந்தும். பகலிலும் தூங்குபவர்களை பற்றி நாம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

மீதி 50 ஆண்டுகளில், பிறந்த ஓரிரு ஆண்டுகள் குழந்தை நிலையில் ஏதும் அறியாப் பேதையாக வாழ்நாள் கழிகிறது. பின் சிலகாலம் பாலகனாக மனிதன் விளையாட்டில் ஈடுபடுகிறான். இளமை முறுக்குடன் கட்டிளம் காளையாக உலகை ரசிக்கப் பழகுகிறான்.

முப்பது வயதாகும் போது அவன் கவனம் வேலை, கல்யாணம், குழந்தை என குடும்ப பொறுப்பாக மாறுகிறது. இதெல்லாம் முடிந்த பிறகு கடவுளைப் பற்றித் தெரிந்து கொள்வோம் என காலத்தைக் கடத்துகிறான்.

இறுதியில் 60 வயதாகும்போது, கோயில் வழிபாடு, கதாகாலட்சேபம் என வரும்போது கடவுளை அறிய வேண்டும் என்று மனம் துடிக்கிறது.

ஆனால், கண் பார்வை குறைபாடு, கை,கால் வலி, சர்க்கரை நோய் என்று வியாதியின் தாக்கம் உடலில் தொடங்குகிறது. ஆரோக்கியம் இருந்த காலத்தில் ஆண்டவனைத் தேட மனம் ஒத்துழைக்கவில்லை. மனம் கடவுளிடம் ஈடுபடும் போது ஆரோக்கியம் குறைய ஆரம்பித்து விடுகிறது.

இதையே திருமாலை பாசுரத்தில் ஆழ்வார் அழகாக எடுத்துச் சொல்லியுள்ளார்.

விஷ்ணு புராணத்திற்கு உரை எழுதியவர் எங்களாழ்வான் என்பவர். ஸ்ரீரங்கத்திற்கு அருகிலுள்ள திருவெள்ளறையில் அவதரித்தவர். இவரால் எழுதப்பட்ட "விஷ்ணு சித்தீயம்' என்னும் உரையே விஷ்ணுபுராணத்திலுள்ள நுட்பமான விஷயங்களை எல்லாம் நமக்கு எடுத்துச் சொல்கிறது.

எங்களாழ்வான் வீட்டுக்கு ஒருமுறை, காஞ்சிபுரத்தில் இருந்து நடாதூர் அம்மாள் என்ற பக்தர் வந்தார். கதவு தாழிட்டிருந்ததால், கதவைத் தட்டி அழைத்தார்.

""யார் வந்திருப்பது?''என்று கேட்டார் எங்களாழ்வான்.

""காஞ்சிபுரத்தில் இருந்து நான் வந்திருக்கிறேன்'' என்றார் நடாதூர் அம்மாள்.

""நான் செத்த பின் வாரும்'' என வீட்டுக்குள் இருந்து பதில் வந்தது.
ஒன்றும் புரியாமல் நடாதூர் அம்மாள் காஞ்சிபுரத்திற்குத் திரும்பி விட்டார். அங்கிருந்த பெரியவர்களிடம் விளக்கம் கேட்டார்.

"நான்' என்பது அகங்காரத்தைக் குறிக்கும். செருக்கு சிறிதும் இல்லாமல் பணிவுடன் இருப்பவனே கடவுளைப் பற்றி அறியும் தகுதி உடையவன் என்பதையே எங்களாழ்வான் குறிப்பாகச் சொல்லியிருக்கிறார் என்பதை
அறிந்தார் நடாதூர் அம்மாள்.

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 17 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 17 Empty Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி Mon Mar 07, 2016 12:15 am

மீண்டும் காஞ்சிபுரத்தில் இருந்து திருவெள்ளறை புறப்பட்டார். அங்கு இந்த முறை, ""அடியேன் வந்திருக்கிறேன்'' என்று சொல்ல,

எங்களாழ்வான் கதவைத் திறந்து வரவேற்றார். அவரிடம் ராமானுஜரால் எழுதப்பட்ட மாபாஷ்யத்திற்கு விளக்கம் கேட்டு மகிழ்ந்தார் நடாதூர் அம்மாள்.

"நான்' என்பதும் "அடியேன்' என்பதும் ஒரு நபரையே குறித்தாலும், இந்த இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. நான் என்பது அகங்காரத்தின் வெளிப்பாடு. பணிவின் அடையாளம் அடியேன் என்பது.

அகங்காரத்தை அடியோடு போக்கவே, அடியவர்களைக் காணும் போது விழுந்து சேவிக்க வேண்டும் என சம்பிரதாயத்தைப் பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

தலைக்கனம் அற்றவனாக மனிதன் வாழ வேண்டும் என்பதே சாஷ்டாங்கமாகச் சேவிப்பதன் நோக்கம்.

பூலோகத்திற்கும், சத்தியலோகத்திற்கும் காலக்கணக்கே வேறு விதமானது. இதை விளக்குவதற்கு வேடிக்கையாக ஒரு கதை சொல்லுவார்கள்.

அந்தக் காலத்தில் ஒரு ராஜா இருந்தார். அவர் தன் பெண் ஜாதகத்தோடு அவளுக்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளை ஜாதகத்தையும் எடுத்துக் கொண்டு பிரம்மாவிடமே திருமணப் பொருத்தம் பார்க்க சத்தியலோகத்திற்குப் புறப்பட்டார். அங்கே எங்கு பார்த்தாலும் ஒரே ஆட்டம் பாட்டம் தான். அதைக் கண்ட ராஜா கொஞ்சநேரம் நாட்டியம் பார்த்துவிட்டுப் போகலாம் என்று ரசிக்க ஆரம்பித்தார். பின்னர் பிரம்மாவின் இருப்பிடத்திற்குப் போனார்.

அவரிடம் ஜாதகத்தைக் கொடுத்து பொருத்தம் பார்க்கச் சொன்னார். பிரம்மாவோ, ""நீர் நாட்டியம் பார்த்த நேரத்திற்குள் பூலோகத்தில் மாப்பிள்ளைக்கு பேரனுக்குப் பேரன் பிறந்து வளர்ந்து கொண்டிருக்கிறான்'' என்று பதில் அளித்தார். அந்த மாதிரி பூவுலகிற்கும், மேல் உலகத்திற்கும் காலக்கணக்கு முற்றிலும் மாறுபாடாக இருக்கிறது.

தேவலோகத்தில் ஒருநாள் என்பது நமக்கு ஒரு ஆண்டு. தை முதல் ஆனி வரையுள்ள ஆறுமாதமும் உத்ராயணம் என்னும் பகல்பொழுதாக அவர்களுக்கு இருக்கும். ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறுமாதமும் தட்சிணாயனம் என்னும் இரவுப்பொழுது.

இப்படியாக கால கணக்கில் நான்கு யுகங்கள். அதில் 4,32,000 ஆண்டுகள் கொண்டது நாலாவதான கலியுகம். அதிலும் உத்தேசமாக 5000 ஆண்டுகள் தான் தற்போது வரை கழிந்திருக்கிறது.

இன்னும் 4,27,000 ஆண்டுகள் பாக்கியிருக்கிறது. தர்மத்திற்கு தலைகுனிவு எப்போது உண்டாகிறதோ அப்போது தான் கண்ணன் பூலோகத்தில் மீண்டும் அவதரிக்கப் போவதாக கீதையில் கூறியிருக்கிறார்.

அதற்குள் நம் ஜென்மத்தைக் கடைத்தேற்றி கண்ணனின் திருவடிகளைப் பற்றிக் கொண்டு உய்யும் வழியைத் தேடிக் கொள்வது தான் விஷ்ணு புராணம் கேட்டதன் பலன்.

சிருஷ்டியைத் தொடங்கும் முன் பிரம்மா பரம்பொருளான நாராயணரைத் தியானம் செய்ய ஆரம்பித்தார். நாராயணனுக்குரிய மந்திரமாக இருப்பது "ஓம் நமோ நாராயணா'.

நாராயண என்பதற்கு தண்ணீரை இருப்பிடமாகக் கொண்டவன் என்பது பொருள். நாராயணனே இந்த உலகம் அத்தனைக்கும் இருப்பிடமாகவும் இருக்கிறான் என்றும் பொருள் இதற்குண்டு. "அயன' என்பதற்கு இருப்பிடம் என்று பொருள். இதற்கு இரண்டு சுழி "ன' என்னும் எழுத்து "நார' என்ற பதத்தோடு சேரும் போது மூன்று சுழி "ண' வாக மாறி விடும் என சமஸ்கிருத இலக்கண சூத்திரம் கூறுகிறது.

இப்படி மூன்று சுழி கொண்ட "நாராயண' என்று எழுதினால் அது பரம்பொருளான நாராயணனை மட்டுமே குறிக்கும். இது வேறு பாஷைகளில் இல்லாத தனி சிறப்பான விஷயம்.

தமிழ் எவ்வளவு சிறந்த மொழியோ, அதே அளவுக்கு சமஸ்கிருதமும் உயர்ந்த மொழி. இரண்டையும் இரு கண்களாக நம் பெரியவர்கள் போற்றி வந்திருக்கிறார்கள். உபயவேதாந்தம் என்பதை உ.வே. என்று வைணவ சம்பிரதாயத்தில் சேர்த்துக் கொள்வர்.

அதற்கு சமஸ்கிருதத்தில் உள்ள நாலு வேதம், திராவிட வேதமான நாலாயிர திவ்ய பிரபந்தம் இரண்டிலும் கை தேர்ந்தவர் என்பதே பொருள்.

நாராயணரைத் தியானித்த பிரம்மா மானச புத்திரர்களான சனகாதி நால்வரைப் படைத்து, தன் சிருஷ்டி தொழிலுக்கு உதவும்படி வேண்டினார். ஆனால், அவர்களோ தந்தையான பிரம்மாவின் சொல்லைக் கேட்பதாக இல்லை. அப்பாவின் பேச்சை ஏற்காத பிள்ளைகளாக அவர்கள் இருந்தார்கள்.

ஏன் அப்படி நடந்து கொண்டார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இன்னும் இனிக்கும்.......

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 17 M1450nENT3u1vn9VQ4P2+00000

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 17 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 17 Empty Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி Mon Mar 07, 2016 12:18 am

krishnaamma wrote:விமந்தனி , என் கேள்வி மேலே பார்த்தீங்களா?.ஏதும் நடுவே விட்டுப்போச்சா? புன்னகை
இல்லை எதுவும் விட்டுப்போகலை. தொடர்ச்சி தான். முதல் முறை படிக்கும் போது எனக்கும் அப்படித்தான் தோன்றியது. புன்னகை

Post by krishnaamma Mon Mar 07, 2016 11:31 am

விமந்தனி wrote:
krishnaamma wrote:விமந்தனி , என் கேள்வி மேலே பார்த்தீங்களா?.ஏதும் நடுவே விட்டுப்போச்சா? புன்னகை
இல்லை எதுவும் விட்டுப்போகலை. தொடர்ச்சி தான். முதல் முறை படிக்கும் போது எனக்கும் அப்படித்தான் தோன்றியது. புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1196800

ம்ம்... சரி விமந்தனி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 17 Empty Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி Thu Mar 17, 2016 10:50 pm

நினைத்தாலே இனிக்கும்! (20)

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 17 BIAgR8ofT6GhDANFahGe+20

பிரம்மா படைத்த மானச புத்திரர்களான சனகாதி முனிவர்கள் நால்வரும் பிரம்மாவின் சிருஷ்டித் தொழிலுக்கு உதவி செய்ய விரும்பவில்லை. பிரம்ம பாவனையில் ஈடுபடப் போவதாக சொல்லிவிட்டு, பரம்பொருளான திருமாலை நோக்கி தியானத்தில் ஆழ்ந்தனர்.

மூன்று விதமான பாவனையில் உலகில் மனிதர்கள் வாழ்கிறார்கள். அவை பிரம்மபாவனை, கர்ம பாவனை, உபய பாவனை. கடவுளையே எப்போதும் தியானித்து பக்தி செலுத்துவது பிரம்ம பாவனை.

நம்மாழ்வார் போன்ற ஆழ்வார்கள் அனைவரும் இந்த பாவனையில் வாழ்ந்தவர்கள். வேலை, சம்பாத்தியம், குடும்பப் பொறுப்பு என எப்போதும் கடமையில் ஈடுபட்டு இருப்பது கர்ம பாவனை.

ஆனால், மனிதர்கள் பெரும்பாலும் பிரம்ம, கர்ம என்ற இரண்டு நிலையிலும் கலந்து வாழவே விரும்புகிறார்கள். இந்தக் கலப்புக்கு உபயபாவனை என்று பெயர்.

சனகாதி நால்வரும் தியானத்தில் ஆழ்ந்து திருமால் மீது பக்தி செய்து வாழ்ந்தனர். அதன்பின், சிருஷ்டித் தொழிலுக்காக பிரம்மா சுவாயம்ப மனுவைப் படைத்தார்.

அவருக்கு உதவியாக ஒரு பெண்ணையும் படைத்தார். இருவரும் மனிதர்கள், அசுரர்கள், விலங்குகள், தாவரங்கள் என பலவிதமான உயிர்களையும் படைக்கத் தொடங்கினர். அவ்வாறு பிறந்த இருவர் தான் இரண்யாட்சன், இரண்யகசிபு என்னும் அசுரர்கள்.

இவர்களில் இரண்யாட்சன் என்பவன் பூமியைக் கடலுக்கு அடியில் ஒளித்து வைத்தான். இதனால், பூமிபிராட்டி செய்வதறியாமல் திகைத்தாள். அப்போது திருமால் பிரம்மாவின் மூக்கில் இருந்து சிறுபன்றியாக உருவெடுத்து வந்தார்.

தன் உருவத்தை பெரிதாக்கிக் கொண்டார். 10 யானை, 100யானை, 1000 யானை என்னும் அளவுக்கு அளவு உருவம் பெரிதானது. இந்த இடத்தில் பராசரர் விஷ்ணு புராணத்தில் வராகப் பெருமானின் மகிமையை "மகாவராகா' என்றே போற்றுகிறார்.

ராமானுஜர் காலத்தில் வாழ்ந்தவர் பராசர பட்டர். அவருடைய சீடரான நம் ஜீயர் திருமாலின் அவதாரங்களில் சிறந்தது எது? யாருடைய திருவடியைப் பற்றிக் கொண்டால் சம்சாரப்பந்தத்தில் இருந்து தப்பிக்கலாம்? என்ற கேள்வியைக் கேட்டார்.

மச்சாவதாரத்தைப் பற்றிக் கொண்டால் பலன் கிடைக்காது. மீன் தான் வாழும் நீரை விட்டு வெளியேறி கரைக்கு வந்து விட்டால் உயிருக்குப் போராடும். அதனால், சம்சாரக் கடலைத் தாண்டுவதற்கு உதவ முடியாது.

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 17 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 17 Empty Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி Thu Mar 17, 2016 10:52 pm

ஆமை வடிவான கூர்மாவதாரத்தில் திருமால் மந்திரமலையைத் தாங்க வேண்டியிருந்தது. அவரே சுமையோடு இருக்கும் போது உயிர்களின் சுமையை எப்படி அவரால் தீர்க்க முடியும்?

நரசிம்மராக வந்தபோது, மனிதனும், விலங்குமாக இருவேறு உருவம் தாங்கி நின்றார் திருமால். அதனால், அவரை நம்பி வழிபட தயக்கமாக இருக்கும்.

வாமன மூர்த்தியாக வந்தபோது, தன் சின்ன காலைக் காட்டி மூன்றடி கேட்டார். ஆனால், திரிவிக்ரமனாக வளர்ந்து உலகத்தையே அளந்து கொண்டு சென்று விட்டார். அதனால், மகாபலியை ஏமாற்றியவர் வாமனர்.

கிருஷ்ணாவதாரத்தில் திருமால் பொய்யே வடிவமாக இருந்தார். மாயம் செய்வதில் வல்ல அவரை காதலியான ஆண்டாளே, "மாலாய்ப் பிறந்த நம்பியை, ஏலாப்பொய்கள் உரைப்பானை' என்று பாடியுள்ளார். பொய் பேசுவதில் வல்ல கண்ணனையும் நம்புவதற்கு இல்லை.

ஆனால், பிரளய காலத்தில் பன்றியாக வந்து பூமிபிராட்டியைக் கடலுக்குள் இருந்து இடந்து எடுத்து வந்த வராகப்பெருமாளின் திருவடியைப் பற்றிக் கொண்டால் சம்சார பந்தத்தில் இருந்து விடுபட்டு நற்கதி பெறமுடியும் என்று பதிலளித்தார் பராசரபட்டர்.

பூமித்தாய் பொறுமையின் இலக்கணமாக விளங்குகிறாள். அவளிடம் நாம் செய்யும் அபசாரம் கொஞ்சம் நஞ்சமல்ல! மலம், ஜலம் அத்தனை கழிவையும் தன்மீது தாங்கிக் கொண்டு பிள்ளைகளான நம்மை ஏற்றுக் கொள்கிறாள்.

பூமியைக் கொத்துவதும், அகழ்வதும், தோண்டுவதும் என எத்தனையோ செய்தாலும் அவள் நம் மீது கோபம் கொள்வதில்லை. இப்படிப்பட்ட பொறுமை மிக்க பூமிதேவி கூட, இயற்கையை மதிக்காமல் நடந்து கொள்ளும் போது சீற்றம் கொள்ள நேரிடுகிறது. அதுவே பூகம்பமாகிறது.

அதனால், பூமி உள்ளிட்ட அனைத்து இயற்கை வளங்களையும் காக்க வேண்டியது நம் பொறுப்பு.

ஆழ்வார்கள் பன்றி அவதாரத்தை, "பெருங்கேழல்' என்று குறிப்பிடுகிறார்கள். "பெரிய பன்றி' என்பது இதன் பொருள். அவரின் திருமேனியும், திருவடியும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பிரம்மாண்டமாக இருந்தது. மேருமலை கூட சிறுகல் போல பன்றியின் கால் குளம்பில் மாட்டிக் கொண்டதால், "கடகட' என சத்தம் கேட்டதாம். பூமி பிராட்டி பன்றியின் பெரிய தந்தத்தில் ஒட்டிக் கொண்டு நின்ற காட்சி, பூர்ண சந்திரனில் இருக்கும் கறைத்திட்டு போல இருந்தது. வராகமூர்த்தியின் காலில் அணிந்திருந்த சிலம்பு ஆபரணத்தில் மேரு, இமாசலம் போன்ற பர்வதங்கள் பரல்கற்களாக இருந்து ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன.

சிங்கம், புலி, யானை போன்ற விலங்குகளை உயர்வாகக் கருதுவோம்.
விலங்கினங்களில் பன்றிக்கு மதிப்பு கொடுப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், தாழ்வாகவே கருதுவோம். பன்றியின் அழுக்கு மேனியில் இருந்து எப்போதும் நீர் கொட்டிக் கொண்டிருக்கும்.

ஆண்டாளும் தன் பாசுரத்தில், "பாசி தூர்த்துக் கிடந்த பார்மகளுக்காக பண்டொரு நாள்' திருமால் வராக அவதாரம் எடுத்து வந்ததாக குறிப்பிடுகிறாள்.

திருமால் ஏன் பன்றியாக அவதாரம் செய்ய வேண்டும் என்பதற்கு விளக்கம் கொடுக்கிறார் பெரியவாச்சான்பிள்ளை.

கணவனும், மனைவியும் கருத்தொருமித்து வாழ்ந்திருக்கும் காலத்தில் அன்பு பாராட்டுவதும், ஆடை, அலங்காரத்தில் ஈடுபட்டு தங்களை அழகுபடுத்திக் கொள்வதும் சகஜம். ஆனால், இருவரில் ஒருவர் நோயுற்று நலிந்திருக்கும் நேரத்தில் இன்னொருவர் அப்படி அழகுபடுத்திக் கொள்வது அன்பின் அடையாளம் ஆகாது.

தன் தர்மபத்தினியான பூமிதேவி, இரண்யாட்சனிடம் சிக்கிக் கொண்டு கடலுக்கடியில் இருந்தபோது, அழுக்குமேனியாகி விட்டாள். இதையே ஆண்டாள், "பாசி தூர்த்துக் கிடந்த பார்மகள்' என்று பாசுரத்தில் குறிப்பிடுகிறாள்.

மனைவி மீது கொண்ட அன்பின் அடையாளமாக, பவித்ரமே வடிவான எம்பெருமான் திருமாலும் சங்கு, சக்கரம், பட்டு, பீதாம்பரம் என எல்லா ஆடை, அலங்காரங்களைத் துறந்து விட்டு அழுக்குடம்பில் நீர் சொட்ட பன்றி வடிவாகப் பிராட்டியைக் காக்கப் புறப்பட்டார்.

இன்னும் இனிக்கும்........

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 17 PS4cnkRQIXmZ4yPRblgW+00000

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 17 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 17 Empty Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by T.N.Balasubramanian Fri Mar 18, 2016 6:35 am

கூர்மாவதாரம் .......பன்றியாக அவதாரம் ......நன்றி .
அறிவது என்னவென்றால் ,
மனைவிக்காக கணவன் எதையும் செய்யலாம் என்று
அன்று அவர் அவதார புருஷனாக வந்து எடுத்துக் காண்பிக்க ,
இன்றும் எல்லா ஆண்களும் அதையே பின்பற்றுகிறார்கள் . புன்னகை  புன்னகை  புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 17 Empty Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by krishnaamma Fri Mar 18, 2016 3:11 pm

திருமால் ஏன் பன்றியாக அவதாரம் செய்ய வேண்டும் என்பதற்கு விளக்கம் கொடுக்கிறார் பெரியவாச்சான்பிள்ளை.

கணவனும், மனைவியும் கருத்தொருமித்து வாழ்ந்திருக்கும் காலத்தில் அன்பு பாராட்டுவதும், ஆடை, அலங்காரத்தில் ஈடுபட்டு தங்களை அழகுபடுத்திக் கொள்வதும் சகஜம். ஆனால், இருவரில் ஒருவர் நோயுற்று நலிந்திருக்கும் நேரத்தில் இன்னொருவர் அப்படி அழகுபடுத்திக் கொள்வது அன்பின் அடையாளம் ஆகாது.

தன் தர்மபத்தினியான பூமிதேவி, இரண்யாட்சனிடம் சிக்கிக் கொண்டு கடலுக்கடியில் இருந்தபோது, அழுக்குமேனியாகி விட்டாள். இதையே ஆண்டாள், "பாசி தூர்த்துக் கிடந்த பார்மகள்' என்று பாசுரத்தில் குறிப்பிடுகிறாள்.

மனைவி மீது கொண்ட அன்பின் அடையாளமாக, பவித்ரமே வடிவான எம்பெருமான் திருமாலும் சங்கு, சக்கரம், பட்டு, பீதாம்பரம் என எல்லா ஆடை, அலங்காரங்களைத் துறந்து விட்டு அழுக்குடம்பில் நீர் சொட்ட பன்றி வடிவாகப் பிராட்டியைக் காக்கப் புறப்பட்டார்.

என்னே பெருமாளின் கருணை?.................... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அழுகை அழுகை அழுகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 17 Empty Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி Thu Mar 24, 2016 12:01 am

நினைத்தாலே இனிக்கும்! (22)

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 17 UOc8iUodTbOUKAeHFa1u+krishna_om_by_vishnu108-d3bwf29

பூமிதேவியை வராகப் பெருமாள் காப்பாற்றியதும், மீண்டும் பிரம்மா படைப்புத் தொழிலை ஆரம்பித்தார். அவரால் பூமியில் முதலில் ஏற்பட்ட சிருஷ்டி தாவரங்கள் தான்.

மரம், செடி, கொடி, புல், பூண்டு என்னும் ஐந்துவகையான தாவரங்கள் அவரால் படைக்கப்பட்டன. பின் விலங்குகள், தேவர்கள், மனிதர்கள் என படைப்பு தொடர்ந்தது.

காரணம் இல்லாமல் யாரும் இந்த பூமியில் பிறப்பு எடுப்பதில்லை. அவரவர் செய்த கர்ம நியதிப்படி பிறவிச் சக்கரம் தொடர்கிறது. பாவ, புண்ணிய பதிவுக்கேற்ப அந்தந்த உயிர்களின் ஆத்மாவின் அறிவு ஒளி வேறுபடும். தாவரத்திற்கும், மனிதருக்கும் ஆத்மா இருந்தாலும், ஆத்மாவிலுள்ள அறிவின் ஒளி மாறுபடவே செய்கிறது.
வைஷ்ணவ சித்தாந்தப்படி, ராமானுஜரின் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு நம்பெருமாளை பூரணமாகச் சரணாகதி அடைந்து விட்டால் மீண்டும் பிறவி உண்டாகாது என்பது நிச்சயம்.

"நான் இன்னும் கொஞ்சம் நாழிகை கழித்து பிறந்திருந்தால், ராஜா போல இருப்பேன். அப்படி இல்லாததால இப்போ கஷ்டப்படறேன்,'' என்று பலரும் அலுத்துக் கொள்வதுண்டு.

அவ்வையாரோ, "அரிது அரிது மானிடர் ஆதல் அரிது! கூன் குருடு செவிடு நீங்கிப் பிறத்தல் அரிது!'' என்று மனிதப்பிறவியின் மகத்துவத்தைச் சொல்லி இருக்கிறார். ஆனால், மனிதப்பிறவியின் பெருமையை உணராமல் நாம் வருத்தப்படுகிறோம்.

மும்பையில் உபன்யாசம் செய்யப்போயிருந்த சமயத்தில் ஒரு ஆங்கில வாசகம் கண்ணில் பட்டது. ""நான் இன்று இருக்கும் நிலை இறைவன் எனக்கு அளித்த பரிசு! நான் செய்து காட்ட வேண்டிய நாளைய நிலை தான் நான் திரும்ப அவருக்கு நான் அளிக்கும் பரிசு,'' என்று எழுதப்பட்டிருந்தது.

வேதம் தான் என்றில்லாமல், நல்லதை யார் சொன்னாலும் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். கடவுள் நமக்கு எல்லாவற்றையும் சரியாகவே கொடுத்திருக்கிறார். அதைக் கொண்டு நாம் தான் வாழ்ந்து காட்ட வேண்டும்.

மகாபாரதத்தில் ஒரு சந்தேகம் நமக்கு எழத் தான் செய்யும். துரியோதனன் கடைசி வரை நன்மையை மட்டுமே அனுபவித்தான். பஞ்சபாண்டவர்கள் எப்போதும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஏன் நாம் துரியோதனன் மாதிரி தர்மத்தை மறந்து வாழ்ந்திடக் கூடாது என்று எண்ணத் தோன்றலாம். கத்தியின் பயன்பாடு பழம் நறுக்குவது. அதையே உயிரைக் கொல்லவும் பயன்படுத்தலாம்.

விளக்கின் பயன்பாடு ஒளியூட்டவே. அதன் வெளிச்சத்தில் பயன் தரும் நல்ல புத்தகத்தை வாசிக்கலாம். அதே நெருப்பைக் கொண்டு ஊரைக் கொளுத்தினால் என்னாகும்? வாழ்வை நன்மைக்காக பயன்படுத்த வேண்டியது அவரவர் கையில் தான் இருக்கிறது.

குருக்ஷேத்திரத்தில் யுத்தம் முடிவுக்கு வந்தது. ஹஸ்தினாபுரத்தில் இருந்து கண்ணன் துவாரகைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தான். அந்த சமயத்தில் அரண்மனைப்பக்கமாக உதங்க மகிரிஷி வந்து கொண்டிருந்தார். அவர் கண்ணனைப் பார்த்து, ""கண்ணா! யுத்தம் முடிந்ததாமே! யார் அதில் ஜெயித்தது?'' என்றார்.

"மகரிஷி! தர்மம் ஜெயித்தது. அதர்மம் அழிந்தது. தர்மத்தின் பக்கம் இருந்த பாண்டவர்கள் தான் வெற்றி,'' என்றான் கண்ணன்.

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 17 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 17 Empty Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 17 of 20 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19, 20  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum