ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்

+4
T.N.Balasubramanian
யினியவன்
ராஜா
கார்த்திக் செயராம்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் Empty ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்

Post by கார்த்திக் செயராம் Tue Jan 12, 2016 4:33 pm

 ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் G8E6KY1HTiyjCKTi2Rhf+jallikattu1a

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்த மத்திய அரசின் அறிவிக்கைக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும், இதனால் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதித்தது. இதனால் கடந்த ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.

இந்த ஆண்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி மத்திய அரசை தமிழக அரசு வற்புறுத்தியது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் மாட்டு வண்டி போட்டிகளை நடத்த மத்திய அரசு கடந்த 8-ம் தேதி அனுமதி வழங்கியது. இது தொடர்பான அறிவிக்கையை மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களிலும், திண்டுக்கல் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கை, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மீறும் வகையில் இருப்பதாக விலங்குகள் நல அமைப்புகள் குற்றம்சாட்டி உள்ளன. விலங்குகள் நல ஆர்வலர்களும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயம் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய விலங்குகள் நல வாரியம், இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட 4 அமைப்புகள் சார்பிலும், 9 தனி நபர்கள் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக மொத்தம் 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

அந்த மனுக்களில், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் பிற மாநிலங்களில் மாட்டு வண்டி பந்தயம் நடத்த அனுமதித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டு உள்ளது.

மேலும் இவற்றில் இரு மனுக்கள் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான மனுக்கள் ஆகும். அதாவது, மத்திய அரசின் அறிவிக்கை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் வகையில் உள்ளதாக அவற்றில் கூறப்பட்டு உள்ளது.

தலைமை நீதிபதி சி.எஸ்.தாக்குர் மற்றும் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மனுதாரர்கள் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கே.கே.வேணுகோபால், அரிமா சுந்தரம், ஆனந்த் குரோவர் மற்றும் சித்தார்த் லுத்ரா ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.



அப்போது, "மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கை, உச்ச நீதிமன்றம் கடந்த 2014–ம் ஆண்டு மே 7ம் தேதி வழங்கிய தீர்ப்பை முற்றிலும் அலட்சியப்படுத்துவதாக உள்ளது. ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயம் ஆகியவை பாரம்பரியமான விளையாட்டுகள் என்றும், இந்த விளையாட்டில் கலந்து கொள்ளும் காளைகள் எந்த வகையிலும் கொடுமைப்படுத்தக்கூடாது என்றும் அந்த அறிவிக்கையில் கூறப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு போன்ற போட்டிகளில் ஈடுபடுத்தப்படும் காளைகள் தானாகவே ஓடுவதற்கோ அல்லது பந்தயத்தில் கலந்துகொள்வதற்கோ ஏற்றவை அல்ல என்றும், அவை வலுக்கட்டாயமாக போட்டிகளில் ஈடுபடுத்தப்படும் போது மிகவும் சோர்வடைகின்றன என்றும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தனது தீர்ப்பில் கூறி உள்ளது. இதுபோன்ற போட்டிகள் காளைகளின் நலனுக்கு எதிரானது என்றும் கூறி இருக்கிறது.

ஜல்லிக்கட்டு போட்டி சட்டத்துக்கு எதிரானது. இந்த போட்டி மிருகவதை தடை சட்டத்தை மீறும் வகையில் நடத்தப்படுகிறது. உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, அறிவிக்கை மூலம் மத்திய அரசு மீறுவது சட்டவிரோதமானது. எனவே, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். மத்திய அரசின் அறிவிக்கையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என்று கூறினர்.

வாதங்களை கேட்ட நீதிபதிகள், மனுக்கள் 11-ம் தேதி (இன்று) விசாரிக்கப்படும் என்று உத்தரவு பிறப்பித்தனர். அதன்படி, இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு வழக்கை நீதிபதி பானுமதி ஏற்கனவே விசாரித்ததால் இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றம் செய்த தலைமை நீதிபதி, வழக்கை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணா அடங்கிய அமர்வு விசாரிக்கும் என்று உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து நண்பகலில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, விலங்குகள் நல வாரியம் சார்பில் வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதிடுகையில், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து ஏற்கனவே உள்ள அறிவிக்கையை மீற முடியாது என்றும், புதிய அறிவிக்கையில் ஜல்லிக்கட்டு அனுமதிக்காக புதிய அம்சத்தை சேர்த்தது சரியல்ல என்றும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து வாதிட்ட அட்டர்னி ஜெனரல், புதிய அறிவிக்கையில் காளை வதை தொடர்பாக கவனத்தில் கொண்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

விலங்குகள் நல வாரியத்தின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளித்து மத்திய அரசு பிறப்பித்த அறிவிக்கைக்கு இடைக்கால தடை விதித்ததோடு, மத்திய, மாநில அரசு உள்ளிட்ட தரப்புகள் 4 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

மதுரை மாவட்டம், பாலமேட்டில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடக்க இருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நன்றி விகடன் செய்தி ..


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

 ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் Empty Re: ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்

Post by ராஜா Tue Jan 12, 2016 5:11 pm

சோகம் இந்த தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததிலேயே ஒவ்வொரு கட்சிகாரனும் ஒவ்வொரு மாதிரியா அறிக்கை விடுறானுங்க. இதில் எப்படி நாம் ஒற்றுமையா மேல் முறையீடு பண்ணி ஜல்லிக்கட்டு நடத்துவது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் Empty Re: ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்

Post by யினியவன் Tue Jan 12, 2016 5:13 pm

சில நாட்களுக்கு முன் நீக்கம், இன்று மீண்டும் தடை, நாளை நீக்கம் என விளையாடுவது எந்தக் கட்சிக்கு வாக்குகளைத் தரப் போகுது வரும் தேர்தலில்? ஓட்டுக்கான விளையாட்டாகி விட்டது தமிழனின் ஜல்லிக்கட்டு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் Empty Re: ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்

Post by T.N.Balasubramanian Tue Jan 12, 2016 5:15 pm

தடையா ,
நான் பங்கு பெறுவதாக இருந்தேனே !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் Empty Re: ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்

Post by விமந்தனி Tue Jan 12, 2016 5:17 pm

வருடாவருடம் இதுவும் பொங்கல் விளையாட்டுகளில் ஒன்றாகிவிட்டது.


 ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

 ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் Empty Re: ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்

Post by விமந்தனி Tue Jan 12, 2016 5:18 pm

T.N.Balasubramanian wrote:தடையா ,
நான் பங்கு பெறுவதாக இருந்தேனே !

ரமணியன்
சிரி சிரி சிரி சிரி வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா!


 ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

 ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் Empty Re: ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்

Post by யினியவன் Tue Jan 12, 2016 5:21 pm

T.N.Balasubramanian wrote:தடையா ,
நான் பங்கு பெறுவதாக இருந்தேனே !

ரமணியன்
இன்று வியாபார நோக்கமோ அய்யாவுக்கு?
அங்கு சிரிப்பு, நலம் இவற்றை வாங்கி விற்கிறார்
இங்கு பங்கு சந்தை வியாபாரம் - பேஷ் பேஷ் நல்லாருக்கு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் Empty Re: ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்

Post by ayyasamy ram Tue Jan 12, 2016 6:58 pm



ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தும் வகையில் அவசரச் சட்டம் இயற்றக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

எனவே, வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தும் வகையில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அவசரச் சட்டம் இயற்ற வேண்டும்.

ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் Empty Re: ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்

Post by M.Jagadeesan Wed Jan 13, 2016 9:08 am

அவசரச் சட்டத்தைத் தமிழக அரசே இயற்றலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

 ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் Empty Re: ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்

Post by ayyasamy ram Wed Jan 13, 2016 9:22 am

 ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் 0DAyl2cFSrGtKvD3y3BS+IMG-20160113-WA0004
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் Empty Re: ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை - உச்ச நீதிமன்றம்
» டாஸ்மாக் வழக்கில் அரசுக்கு சாதகமான தீர்ப்பு- ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
» காவிரி விவகாரம் - மத்திய அரசின் இடைக்கால மனுவை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
» மனைவியுடன் சேர்ந்து வாழும்படி கணவனை நீதிமன்றம் வலியுறுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
» கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum