ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி...

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... Empty சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி...

Post by விமந்தனி Mon Jan 11, 2016 12:25 am

மீப நாட்களாகவே....

இல்லையில்லை,

கடந்த சில காலங்களாகவே புத்தகங்கள் படிக்கும் பழக்கம் குறைந்தே காணப்படுகிறது என்பது என் ஆதங்கம். நானுமே புத்தகங்கள் படிப்பது என்பதை நிறுத்தி வெகு காலம் ஆயிற்று....

இந்த நிலையில் தான், நான் நம் தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்த மின்னூல்களை ஒவ்வொன்றாக படித்துக்கொண்டு வருகிறேன்.

அதில் நான் படித்த சில நூல்களைப்பற்றி இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நான் மட்டுமில்லை, நீங்களும் கதைப்புத்தகங்கள், மின்னூல்கள் என்று ஏதேனும் படித்தால் அந்த கதையின் தாக்கம் பற்றிய உங்களது சுவாரசியமான கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

சற்று செவிக்கும் உணவிட்டது போலிருக்குமே...? தவிர – உங்களது கருத்துக்கள், அந்த புத்தகத்தை படிக்காதவர்களுக்கும் அதனை படிக்கத்தூண்டும் விமர்சனமாகவும் அமையக்கூடும்.

தொடர்வீர்கள் என்ற நம்பிக்கையுடன், முதல் கருத்தத்தை நானே துவக்கி வைக்கிறேன்... அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... Empty Re: சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி...

Post by விமந்தனி Mon Jan 11, 2016 12:32 am

“சுந்தர காண்டம்” – ஜெயகாந்தன்

சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... SJ9aZTLwTDie6zYsxgZC+sunthara-kaandam-30490

சில நாட்களுக்கு முன், எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய சுந்தரகாண்டம் படிக்க நேர்ந்தது. அவரது எழுத்து நடையைப்பற்றி சொல்லவே வேண்டாம். படைப்பு மிக நேர்த்தியாக இருந்தது.

(2 வருடங்களுக்கு முன் அவரது “அக்கினி பிரவேசம்” படித்தேன். அந்த கதை பற்றியும் பிறகு எழுதுகிறேன்)

பொதுவாக இவரின் எழுத்துக்கள் எனக்கு அவ்வளவாக பரிச்சமில்லை. முதலும் கடைசியுமாக நான் படித்தது ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற புத்தகம் தான்.

காரணம், அவரது கதாப்பத்திரங்களின் எண்ண ஓட்டங்கள் மிக, மிக விரிவாக இருக்கும். அதை படிப்பதற்குள் ஆயாசமாகிவிடும் எனக்கு. வேகமான இளவயதில், நிதானமான வர்ணனைகள் அறிவிற்கு பிடிபட கொஞ்சம் மறுத்ததேன்னவோ நிஜம் தான்.

இப்போது...?

வயதாகிவிட்டது அல்லவா, விவேகம் நிதானிக்கிறது. ஆகவே, ஒருவித ஈடுபாட்டுடன் படிக்க முடிந்தது.

கதையின் கதாநாயகி ‘சீதா’ –வின் எண்ண ஓட்டங்கள் வெகு அருமை. ஒரு புரட்சிப்பெண்ணின் யதார்த்தமான சிந்தனை.

கதை இது தான்,

சுதந்திரமாக சிந்திக்கும் உரிமையுடன் வளர்க்கப்பட்ட சீதாவிற்கு, அவளது நடுத்தர வர்க்கத்து அப்பா, ஒரு பணக்கார ஆனால் ஒழுக்கமற்ற, முதல் மனைவியை இழந்திருந்தாலும் பரவாயில்லை என்று, மகளுக்கு விருப்பமில்லை என்றறிந்தாலும், வழக்கமாக பெற்றோர்கள் செய்யும் ப்ளாக் மெயில்  மூலமாக அவளுக்கு சுகுமாரனை திருமணம் செய்து வைக்கிறார்.

ஒழுக்கம் கெட்டவனாக இருந்தாலும், சீதாவின் வருகை தனக்குள் மிக நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பிய சுகுமாரனின் நம்பிக்கையை, ‘அவனுடன் சேர்ந்து வாழ மறுத்து’ தூளாக்குகிறாள். ஆகவே, அவனது ஒழுக்கமற்ற வாழ்க்கை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் தொடருகிறது.

அவளைப்பொருத்தவரையில், சுயலாபத்திற்காக தன்னை விற்று விட்ட தன் தந்தையையும், தன்னை அழகுப்பொருளாக நினைத்து விலைக்கு வாங்கிவிட்ட அவள் கணவனையும் ராவணனாகவே பார்க்கிறாள். இதனால் ஒட்டு மொத்த ஆண் வர்கத்தையே வெறுப்பதாகவும் ஒரு இடத்தில் சொல்கிறாள்.

தனக்குரிய ராமன் எங்கிருக்கிறான் என்று சிலாகித்து போகிறாள்.

இதிகாசத்தில் வேண்டுமானால் ராமன் கதாநாயகனாக இருக்கலாம். ஆனால், எந்த கதாநாயகனும் படாத துன்பங்களையும், துயரங்களையுமே அனுபவித்தவன் ராமன்.

வைதேகியின் துயரத்தை அனுபவிக்க சித்தமாக இருக்கும் பெண்கள் மட்டுமே தனக்கு ராமன் போன்று மணவாளன் வாய்க்கவேண்டும் என்று தவமிருப்பார்கள்.

இதில் இந்தப்பெண்ணின் தேடல் வித்தியாசமாக இருக்கிறது. யதார்த்தத்தை மீறிய ஒரு தடுமாற்றமான கற்பனை உலக சஞ்சரிப்பு.............

இதிகாச ராமனை கலிகாலத்தில் தேடினால்.. வேறு என்ன சொல்ல???????????

ஒரு ஆணின் ஒழுக்கத்தில் தான் அவன் கட்டிய மாங்கல்யத்தின் மகத்துவம் இருக்கிறது என்ற ஆசிரியரின் கருத்து நாம் அனைவருமே ஏற்றுக்கொள்ளக்கூடியது தான்.

ஆனால்......................

புதுமை புரட்சி என்ற பெயரில் வாழ்க்கையை தொலைத்து விட்டு, அர்த்தமற்ற போலி வாழ்க்கையில் தனித்து வாழ்வதில் தான் பெண் விடுதலை / சுதந்திரம் இருக்கிறது என்பது போல் முடியும் இந்தக்கதையின் முடிவில் எனக்கு உடன் பாடு இல்லை.

எழுத்தாளர் இவ்விதம் முடித்து இருந்தது கொஞ்சம் ஏமாற்றம் தான் தந்தது எனக்கு.

கதாநாயகி சீதா. கடைசியில் எடுத்த இந்த முடிவை, புதைகுழியில் இறங்கப்போகிறோம் என்று தெரிந்தும், ஏன் முதலிலேயே எடுக்கவில்லை....?  

ஆனால், யோசித்துப்பார்த்தால்..... ஒரு விஷயம் தெளிவாகிறது. பெண் குழந்தைகளை அதிகம் யோசிக்கவிட்டால் ஆபத்து அவர்கள் வாழ்க்கைக்கு தான் என்பது!.  

நன்றி!

குறிப்பு : இது என்னுடைய அபிப்பிராயம் தானே தவிர, மற்றபடி எழுத்தாளரின் எழுத்துக்களுக்கான விமர்சனம் இல்லை.

சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... Empty Re: சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி...

Post by T.N.Balasubramanian Mon Jan 11, 2016 5:00 pm

"வயதாகிவிட்டது அல்லவா, விவேகம் நிதானிக்கிறது."

சரியாக சொன்னீர்கள் அக்கா ! அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை

ஆனால், யோசித்துப்பார்த்தால்..... ஒரு விஷயம் தெளிவாகிறது. பெண் குழந்தைகளை அதிகம் யோசிக்கவிட்டால் ஆபத்து அவர்கள் வாழ்க்கைக்கு தான் என்பது!."

முற்றிலும் உண்மை என்று சொல்ல மாட்டேன் . அந்த காலத்திற்கு ஏற்றது அது .
இப்போதும் முதிர்ச்சியான எண்ணங்கள் (matured thoughts ) கொண்ட பெண்களை ,
கண்டுள்ளேன் .  சிறிதே guidelines தேவை .   ( நான் கூறிய பெண்கள் US வாசிகள் )
இங்கும் இருப்பார்கள் .நம் கண்ணில் படவில்லை .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... Empty Re: சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி...

Post by ayyasamy ram Mon Jan 11, 2016 5:47 pm

இதிகாச ராமனை கலிகாலத்தில் தேடினால்.. வேறு என்ன சொல்ல???????????
-
சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... Empty Re: சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி...

Post by விமந்தனி Tue Jan 12, 2016 4:07 pm

T.N.Balasubramanian wrote:
"வயதாகிவிட்டது அல்லவா, விவேகம் நிதானிக்கிறது."

சரியாக சொன்னீர்கள் அக்கா ! அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை
ரமணியன்
ஹ... ஹா... ஹா... ஹா.... ஈகரையின் அய்யாவுக்கே அக்கா ஆனேனா...! சூப்பருங்க ரொம்ப சந்தோஷம்....! புன்னகை புன்னகை புன்னகை ஆனா பாருங்க, கூடவே என் காதுல புகை, புகையா வர்றதையும் தவிர்க்க முடியல.... ஜாலி

சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... Empty Re: சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி...

Post by விமந்தனி Tue Jan 12, 2016 4:11 pm

T.N.Balasubramanian wrote:
ஆனால், யோசித்துப்பார்த்தால்..... ஒரு விஷயம் தெளிவாகிறது. பெண் குழந்தைகளை அதிகம் யோசிக்கவிட்டால் ஆபத்து அவர்கள் வாழ்க்கைக்கு தான் என்பது!."

முற்றிலும் உண்மை என்று சொல்ல மாட்டேன் . அந்த காலத்திற்கு ஏற்றது அது .
இப்போதும் முதிர்ச்சியான எண்ணங்கள் (matured thoughts ) கொண்ட பெண்களை ,
கண்டுள்ளேன் .  சிறிதே guidelines தேவை .   ( நான் கூறிய பெண்கள் US வாசிகள் )
இங்கும் இருப்பார்கள் .நம் கண்ணில் படவில்லை .

ரமணியன்
நீங்கள் சொல்வதும் உண்மை தான்.

//இங்கும் இருப்பார்கள் .நம் கண்ணில் படவில்லை // - இதுவும் உண்மை தான். நீங்கள் இன்னும் பார்க்கவில்லை. புன்னகை புன்னகை

சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... Empty Re: சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி...

Post by விமந்தனி Tue Jan 12, 2016 4:12 pm

ayyasamy ram wrote:இதிகாச ராமனை கலிகாலத்தில் தேடினால்.. வேறு என்ன சொல்ல???????????
-
சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... 3838410834
நன்றி ராம் ஐயா.

சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... Empty Re: சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி...

Post by T.N.Balasubramanian Tue Jan 12, 2016 5:27 pm

vimandhani wrote:நீங்கள் சொல்வதும் உண்மை தான்.

//இங்கும் இருப்பார்கள் .நம் கண்ணில் படவில்லை // - இதுவும் உண்மை தான். நீங்கள் இன்னும் பார்க்கவில்லை. புன்னகை புன்னகை

கூடிய சீக்கிரத்தில் பார்க்கலாம் !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... Empty Re: சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி...

Post by யினியவன் Tue Jan 12, 2016 5:32 pm

இவரது எழுத்துகள் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.
பள்ளி பருவத்தில் படித்த சிலவற்றில் இவரின்
கதைகளும் படித்திருக்கிறேன்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... Empty Re: சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி...

Post by T.N.Balasubramanian Tue Jan 12, 2016 5:36 pm

நானும் பல கதைகள் படித்துள்ளேன் .
திருட்டு முழி ஜோசப் என்ற பெயரில் ஒரு நீண்ட கதை
படித்தது நினைவுக்கு வருகிறது
தலைப்பு " யாருக்காக அழுதான் " என்று நினைக்கிறேன்

உருக்கமான நாவல்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி... Empty Re: சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum