ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறியாயோ.... அஞ்சுகமே .....

+8
ஜாஹீதாபானு
கார்த்திக் செயராம்
krishnaamma
M.Jagadeesan
ayyasamy ram
shobana sahas
T.N.Balasubramanian
K.Senthil kumar
12 posters

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 3 Empty அறியாயோ.... அஞ்சுகமே .....

Post by K.Senthil kumar Fri Jan 08, 2016 7:24 pm

First topic message reminder :

அறியாயோ.... அஞ்சுகமே .....

மருதாணி பறிச்சுவந்து
ஆட்டுரலில் அரச்சுவந்து
என் விரலில் உருட்டி உருட்டி –உன்
உள்ளங்கையில ஒட்டிவச்சா
உச்சந்தல குளுரடிச்சு
கூச்சத்துல சிலுத்துக்குவ
சின்ன  பொண்ணே  தெரியாதா..??

உன் மூக்குகீழ  தூசு அத
ஒனக்கு நான் தொடச்சிவிட
காலையில நீ வந்து
கண்ணாடி பாக்கையில
செவந்த மீச கொஞ்சம்
செரப்பத்தான் மொளச்சிருக்கும்
ஊரே குலுங்கி அத
ஒக்காந்து சிரிச்ச கத
ஒனக்குந்தான் தெரியாதா..???

பாண்டி வெளையாட்ட
பக்குவமா நீயாட
நொண்டி வெளையாட்ட –நீ
நொனசொல்லி நானாட
உப்புமூட்ட ஒன்ன தூக்கி
ஒருவீதி சுத்திவந்து
எறங்க சொல்லி நான் கேக்க
எறங்காம நீ இருக்க –நான்
இடுச்சி விட்டதால –நீ
இடுப்போடிஞ்சி போனகத
எலஞ்சியமே தெரியாதா ...??  

ஆளுக்கொரு பிடிச்ச
அரிசியத்தான் எடுத்துவந்து
கரிசமர வெறகு கொல்லி
கணக்கத்தான் பொருக்கிவந்து
ஆத்துகோயில் பக்கத்துல
அடுப்பத்தான் பத்தவச்சு
கூட்டாஞ்சோறு ஆக்கிதின்னு
கொண்டாடி குளுந்தோமே
கொஞ்சங்கூட தெரியாதா...??

கரடோரம் மாடுமேய்க்க
கயிர்புடிச்சி நடக்கையில
ஓமாடு முன்ன போக
ஏமாடு பின்ன வர
கோமியத்த ஓமாடு
கொடங்கோடமா  அடிச்சிவிட
பாவாட நனைஞ்சதால
பசங்க கண்ணு பட்டுடாம –நீ
பதுங்கி பதுங்கி நடந்த கத
பச்சமண்ணே தெரியாதா..??

ஒங்க ஊட்டு வாசலுல
பொங்கலுக்கு கோலம்போட
நீ கொஞ்சம் கோடிழுக்க
நான் கொஞ்சம் கலரடிக்க
ஒரு நாள் முழுக்க அத
ஒக்காந்து ரசிப்போமே
ஒனக்கு அது தெரியாதா..??

வாழதோப்பு ஓரத்துல
வரப்போரம் நடக்கையில
வாழக்கா நான் பறிக்க
வாஞ்சையோட நீ கடிக்க
வரிபல்லு கரையாள –நீ
அர கெழவியான கத –என்
அஞ்சுகமே தெரியாதா...??

வயசுக்கு நீ வந்த பின்ன
வெளையாட வாரத்துக்கு
ஓஊட்டுல தடவிழுகவிழ
ஏமனசுல இடிவிழுகவிழ
இடிஞ்ச மனசோட
இத்தன நாள் இருக்கேனே
இந்த கத ஒனக்குந்தான்
இப்பவரைக்கும் தெரியாதா..??



                கே.செந்தில்குமார்


Last edited by T.N.Balasubramanian on Fri Jan 08, 2016 8:28 pm; edited 1 time in total (Reason for editing : spelling)


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down


அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 3 Empty Re: அறியாயோ.... அஞ்சுகமே .....

Post by K.Senthil kumar Sat Jan 09, 2016 7:49 pm

கார்த்திக் செயராம் wrote:களத்து மேட்டு பக்கம் புல் அருக்க போகயில.(நான்)
கன்டாங்கி சேலை ஒன்னு சந்தையில் வாங்கிவர
கன்டவங்க பாத்திடாம ஒளிந்து நின்று பாக்கயில.(நீ)
கண்ணான கண்ணனுக்கு கடி முத்தம் கொடுத்தாயே.(உன்)
கன்னக்குழி சிரிப்புக்கு தான் உலகத்தையே தந்திடலாமா.


அருமை செந்தில் ...
மேற்கோள் செய்த பதிவு: 1186664

அடடே .......அருமை கார்த்திக் ..


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 3 Empty Re: அறியாயோ.... அஞ்சுகமே .....

Post by K.Senthil kumar Sat Jan 09, 2016 7:57 pm

கார்த்திக் செயராம் wrote:களத்து மேட்டு பக்கம் புல் அருக்க போகயில.(நான்)
கன்டாங்கி சேலை ஒன்னு சந்தையில் வாங்கிவர
கன்டவங்க பாத்திடாம ஒளிந்து நின்று பாக்கயில.(நீ)
கண்ணான கண்ணனுக்கு கடி முத்தம் கொடுத்தாயே.(உன்)
கன்னக்குழி சிரிப்புக்கு தான் உலகத்தையே தந்திடலாமா.

மேற்கோள் செய்த பதிவு: 1186664

கண்டாகி சேல ஒன்ன வாங்கி தந்த மச்சானே
கந்தலான சேலையத்தான் வாங்கி வந்து வச்சியே
ஒலகம் தெரியாத ஓங்கூட வாழவே
ஒரு கோடி ஆசையாத்தான் உள்ளத்துல தச்சேனே ...


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 3 Empty Re: அறியாயோ.... அஞ்சுகமே .....

Post by T.N.Balasubramanian Sat Jan 09, 2016 8:00 pm

K.Senthil kumar wrote:
கார்த்திக் செயராம் wrote:களத்து மேட்டு பக்கம் புல் அருக்க போகயில.(நான்)
கன்டாங்கி சேலை ஒன்னு சந்தையில் வாங்கிவர
கன்டவங்க பாத்திடாம ஒளிந்து நின்று பாக்கயில.(நீ)
கண்ணான கண்ணனுக்கு கடி முத்தம் கொடுத்தாயே.(உன்)
கன்னக்குழி சிரிப்புக்கு தான் உலகத்தையே தந்திடலாமா.

மேற்கோள் செய்த பதிவு: 1186664

கண்டாகி சேல ஒன்ன வாங்கி தந்த மச்சானே
கந்தலான சேலையத்தான் வாங்கி வந்து வச்சியே
ஒலகம் தெரியாத ஓங்கூட வாழவே
ஒரு கோடி ஆசையாத்தான் உள்ளத்துல தச்சேனே ...
மேற்கோள் செய்த பதிவு: 1186668

பேஷ் பேஷ் தொடருங்கள் !

அறிவோமே .....அச் சுகமே !!

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sun Jan 10, 2016 10:48 am; edited 1 time in total


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 3 Empty Re: அறியாயோ.... அஞ்சுகமே .....

Post by கார்த்திக் செயராம் Sat Jan 09, 2016 8:13 pm

கன்டாங்கி சேலை கூட கந்தையாகி போகும் புள்ள.
கண்மணியே உன் மேல வச்ச ஆசை எப்போதுமே புதுசுதான்டி.
என் உசுரு இருக்கு முட்டும் மயிலே நான் மறப்பேனா.
உலகமே எதிர்திட்டாலும் நீதானே என் உசுரு.


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 3 Empty Re: அறியாயோ.... அஞ்சுகமே .....

Post by krishnaamma Sat Jan 09, 2016 9:49 pm

வாவ் ! ரெண்டு பெரும் மாத்தி மாத்தி அசத்தறீங்களே , கார்த்தி மற்றும் செந்தில் புன்னகை ..................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 3 Empty Re: அறியாயோ.... அஞ்சுகமே .....

Post by K.Senthil kumar Sun Jan 10, 2016 2:05 am

கார்த்திக் செயராம் wrote:களத்து மேட்டு பக்கம் புல் அருக்க போகயில.(நான்)
கன்டாங்கி சேலை ஒன்னு சந்தையில் வாங்கிவர
கன்டவங்க பாத்திடாம ஒளிந்து நின்று பாக்கயில.(நீ)
கண்ணான கண்ணனுக்கு கடி முத்தம் கொடுத்தாயே.(உன்)
கன்னக்குழி சிரிப்புக்கு தான் உலகத்தையே தந்திடலாமா.

மேற்கோள் செய்த பதிவு: 1186664
[quote="K.Senthil kumar"

கண்டாகி சேல ஒன்ன வாங்கி தந்த மச்சானே
கந்தலான சேலையத்தான் வாங்கி வந்து வச்சியே
ஒலகம் தெரியாத ஓங்கூட வாழவே
ஒரு கோடி ஆசையாத்தான் உள்ளத்துல தச்சேனே ...[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1186668
கார்த்திக் செயராம் wrote:கன்டாங்கி சேலை கூட கந்தையாகி போகும் புள்ள.
கண்மணியே உன் மேல வச்ச ஆசை எப்போதுமே புதுசுதான்டி.
என் உசுரு இருக்கு முட்டும் மயிலே நான் மறப்பேனா.
உலகமே எதிர்திட்டாலும் நீதானே என் உசுரு.
மேற்கோள் செய்த பதிவு: 1186671

ஒன் மனசு நெனப்பு மட்டும் ஒசத்தியா மச்சானே –நான்
உள்ளத்துல ஆசையெல்லாம் கல்லாக்கி வெச்சேனே
நமக்கு வருமானம் இல்லாம வண்டி ஓடாதே
நாளும் காசு செக்க நீ போனா கழுத்த நீட்டுறனே


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 3 Empty Re: அறியாயோ.... அஞ்சுகமே .....

Post by K.Senthil kumar Sun Jan 10, 2016 2:19 am

krishnaamma wrote:வாவ் ! ரெண்டு பெரும் மாத்தி மாத்தி அசத்தறீங்களே , கார்த்தி மற்றும் செந்தில் புன்னகை ..................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1186694

இதே போல் சரவணன் எழுதிய கவிதைக்கு  போட்டிக்கவிதை பதிவிட்டுள்ளேன் அதையும் ஒருமுறை பார்த்துவிடுங்கள் அம்மா ....
அதன் தலைப்பு அகம் திறந்து சொல்லிவிடடி


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 3 Empty Re: அறியாயோ.... அஞ்சுகமே .....

Post by கார்த்திக் செயராம் Sun Jan 10, 2016 6:31 am

காசு பணம் வேனும் முன்னு பட்டனம் தான் போகனுமா ?
கழனி காடு இங்கு இருக்கு பாடு பட்டா போதுமடி.
காரவீடு ஒன்னு இருக்கு காராம் பசு மூணு இருக்கு.
காட குஞ்சு பொரிச்சிருக்கு கம்மல் கூட வாங்கி இருக்கு.
கண்மணியே உன நானும் கண்ணீர் சிந்த விடமாட்டேன்.


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 3 Empty Re: அறியாயோ.... அஞ்சுகமே .....

Post by K.Senthil kumar Sun Jan 10, 2016 8:07 am

K.Senthil kumar wrote:
கார்த்திக் செயராம் wrote:களத்து மேட்டு பக்கம் புல் அருக்க போகயில.(நான்)
கன்டாங்கி சேலை ஒன்னு சந்தையில் வாங்கிவர
கன்டவங்க பாத்திடாம ஒளிந்து நின்று பாக்கயில.(நீ)
கண்ணான கண்ணனுக்கு கடி முத்தம் கொடுத்தாயே.(உன்)
கன்னக்குழி சிரிப்புக்கு தான் உலகத்தையே தந்திடலாமா.

மேற்கோள் செய்த பதிவு: 1186664
[quote="K.Senthil kumar"

கண்டாகி சேல ஒன்ன வாங்கி தந்த மச்சானே
கந்தலான சேலையத்தான் வாங்கி வந்து வச்சியே
ஒலகம் தெரியாத ஓங்கூட வாழவே
ஒரு கோடி ஆசையாத்தான் உள்ளத்துல தச்சேனே ...
மேற்கோள் செய்த பதிவு: 1186668
கார்த்திக் செயராம் wrote:கன்டாங்கி சேலை கூட கந்தையாகி போகும் புள்ள.
கண்மணியே உன் மேல வச்ச ஆசை எப்போதுமே புதுசுதான்டி.
என் உசுரு இருக்கு முட்டும் மயிலே நான் மறப்பேனா.
உலகமே எதிர்திட்டாலும் நீதானே என் உசுரு.
மேற்கோள் செய்த பதிவு: 1186671

ஒன் மனசு நெனப்பு மட்டும் ஒசத்தியா மச்சானே –நான்
உள்ளத்துல ஆசையெல்லாம் கல்லாக்கி வெச்சேனே
நமக்கு வருமானம் இல்லாம வண்டி ஓடாதே
நாளும் காசு செக்க நீ போனா கழுத்த நீட்டுறனே[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1186710

கார்த்திக் செயராம் wrote:காசு பணம் வேனும் முன்னு பட்டனம் தான் போகனுமா ?
கழனி காடு இங்கு இருக்கு பாடு பட்டா போதுமடி.
காரவீடு ஒன்னு இருக்கு காராம் பசு மூணு இருக்கு.
காட குஞ்சு பொரிச்சிருக்கு கம்மல் கூட வாங்கி இருக்கு.
கண்மணியே உன நானும் கண்ணீர் சிந்த விடமாட்டேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1186739

பட்டணம் போகாட்டி பட்ட தெனம் ஏத்திக்குவ (பட்ட - பட்ட சாராயம் )
காடு கழனி வச்சு கந்து ரொம்ப வாங்கிக்குவ
கார வீடு எல்லாமே கடனுக்கு போயிரும்மே
காசு பணம் சேக்க நீ கடல் தாண்டி போனாலும் –நான்
கண்ணாளா எப்போதும் கண்முழிச்சு காத்திருப்பேன்

ரொம்ப நல்ல எழுதிரிங்க கார்த்திக்.. தனியா ஒரு தலைப்பு போட்டு பதிவிடுங்கள் ...





மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 3 Empty Re: அறியாயோ.... அஞ்சுகமே .....

Post by கார்த்திக் செயராம் Sun Jan 10, 2016 8:21 am

கடல் தாண்டி போனவங்க கஸ்டத்த கேட்டேன்டி.
கடல் தாண்டி போயித்தான் காசு பணம் பாக்கனுமா.
கழனியில் பாடுபட்டா காசு பணம் சேத்திடலாம்.
காலையில எழுந்திடுவேன் காளை ரெண்டு பூட்டிகிவேன்.
காட்டை நல்லா உழுதுடுவேன் கரை வச்சி பூசிடுவேன்.
கஞ்சியத்தான் குடிச்சிபுட்டு கஸ்டப்பட்டு உழைச்சிடுவேன்.
கண்மணியே உனை நானும் ராணி போல பாத்துகுவேன்.


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 3 Empty Re: அறியாயோ.... அஞ்சுகமே .....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum