ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: விசாரணை நீதிபதி அதிரடி மாற்றம்

+3
யினியவன்
T.N.Balasubramanian
ராஜா
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஜெயலலிதா சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: விசாரணை நீதிபதி அதிரடி மாற்றம் - Page 2 Empty ஜெயலலிதா சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: விசாரணை நீதிபதி அதிரடி மாற்றம்

Post by ராஜா Thu Jan 07, 2016 7:48 pm

First topic message reminder :

முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீடு மனு மீதான வழக்கில் விசாரணை நீதிபதி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கை கர்நாடக நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து, கர்நாடக மாநில அரசு, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மற்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனால் ஜெயலலிதா உட்பட நால்வர் தரப்பிலும் எதிர் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் 23-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், ஆர்.கே.அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மேல் முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது மனுக்களை விசாரித்த நீதிபதிகள், ''இந்த வழக்கு தொடர்பாக கர்நாடக மாநில அரசு, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட நால்வர் தரப்பிலும் இருந்து ஆயிரக்கணக்கான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வழக்கின் விசாரணை தொடங்குவதற்கு முன்பாக இரு தரப்பினரும் இறுதிவாதம் தொடர்பான தொகுப்பை தாக்கல் செய்ய வேண்டும். அதன் பின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை தொடங்கும்’’என தெரிவித்து, வழக்கை ஜனவரி 8-ம் தேதி ஒத்திவைத்தனர்.

இதனிடையே, கர்நாடாக, திமுக தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. வழக்கை தினந்தோறும் விசாரிப்பது குறித்து நாளை முடிவு செய்யப்படும்.

இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீடு மனு மீதான வழக்கில் விசாரணை நீதிபதி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.கே.அகர்வாலுக்கு பதிலாக நீதிபதி அமித்தவா ராய் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை முதல் விசாரணையை தொடங்க உள்ளது.

இதனிடையே, கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின், உச்சநீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்கியதை அடுத்து, இந்த வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வழக்குகள் தொடர்பான இறுதி பட்டியலை உச்ச நீதிமன்ற பதிவுத்துறை அலுவலகம் நேற்று வெளியிட்டது.

அதில், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை வரும் 8-ம் தேதி நடைபெறாது என்று பதிவுத்துறை அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


ஜெயலலிதா சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: விசாரணை நீதிபதி அதிரடி மாற்றம் - Page 2 Empty Re: ஜெயலலிதா சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: விசாரணை நீதிபதி அதிரடி மாற்றம்

Post by கார்த்திக் செயராம் Fri Jan 08, 2016 9:05 pm

ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: பிப்ரவரி 2 முதல் சுப்ரீம் கோர்ட்டில் தினசரி விசாரணை
 
டெல்லி: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணை பிப்ரவரி 2ம் தேதி முதல் ஆரம்பிக்கும் என்றும், அதற்கு முன்பாக, விசாரிக்க வேண்டிய அம்சங்களை மனுதாரர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக ஹைகோர்ட்டில் செய்த மேல்முறையீட்டின்போது, தனிக்கோர்ட்டு தீர்ப்பை நீதிபதி குமாரசாமி ரத்து செய்ததுடன், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்தார்.

 இதனை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்று விசாரணையை ஜனவரி 8ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்கும் விசாரணை நீதிபதிகளில் ஒருவரான ஆர்.கே.அகர்வால் திடீரென மாற்றம் செய்யப்பட்டார்.

 

நீதிபதி ஆர்.கே அகர்வாலுக்கு பதிலாக அமித்வா ராய் விசாரிப்பார் என்று தெரிவிக்கப்படுள்ளது. அதேநேரம், பெஞ்சின் மற்றொரு நீதிபதியான பினாகி சந்திரகோஷ் அதே பொறுப்பில் தொடருகிறார். இந்நிலையில், சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கு இன்று, நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, "வழக்கை தினமும் விசாரிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்பது பற்றி பிற வழக்குகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படும். பிப்ரவரி 2ம் தேதி முதல் 4ம் தேதிவரை இவ்வழக்கு முக்கியத்துவம் கொடுத்து தினசரி விசாரிக்கப்படும்.

 

அதன்பிறகு, வழக்குகளின் நிலைமைக்குதக்கபடி விசாரணை நடைபெறும். வழக்கில் எந்தெந்த முக்கிய அம்சங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்பது குறித்த விவரத்தை வரும் பிப்ரவரி 2ம் தேதிக்கு முன்பாக கோர்ட்டில் மனுதாரர்கள் தாக்கல் செய்ய வேண்டும்" என்று நீதிபதிகள் அறிவித்து, வழக்கை பிப்ரவரி 2ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இதற்கு முன்பாக அப்பீல் வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி பினாகி சந்திரகோஷ் கூறுகையில், "சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் 18 ஆண்டுகள் நடந்துள்ளது. சுப்ரீம்கோர்ட் என்பது விசாரணை நீதிமன்றம் கிடையாது. எனவே எந்தெந்த அம்சங்களை விசாரிக்க வேண்டும் என்பது குறித்து குறிப்பிட்டால், அந்த அம்சங்களை விசாரித்து, குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்தது, சரிதானா அல்லது தவறுதானா என்பது குறித்து தீர்ப்பளிக்க முடியும்" என்று தெரிவித்திருந்தார்.

 

எனவேதான், பிப்ரவரி 2ம் தேதிக்கு முன்பாக விசாரிக்க வேண்டிய அம்சங்களை தாக்கல் செய்யுமாறு மனுதாரர்களுக்கு நீதிபதிகள் தற்போது உத்தரவிட்டுள்ளனர். கர்நாடக அரசு, அன்பழகன், ஜெயலலிதா உள்ளிட்ட தரப்புகள் தங்கள் மனுக்களை பிப்ரவரி 2ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயமாகும். தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கு இறுதி விசாரணை பிப்ரவரி முதல் தொடங்க உள்ளது, அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி ஒன் இந்தியா


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

ஜெயலலிதா சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: விசாரணை நீதிபதி அதிரடி மாற்றம் - Page 2 Empty Re: ஜெயலலிதா சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: விசாரணை நீதிபதி அதிரடி மாற்றம்

Post by M.Jagadeesan Sat Jan 09, 2016 2:47 pm

நீதிபதி மாற்றம் இருந்தாலும் சொல்கின்ற
நீதியிலே மாற்றம் இருக்காது - ஆதிமுதல்
ஏழைகள் தோற்பதும் சல்மான்கள் ஜெயிப்பதும்
பீழையுற்ற நீதியெனச் சொல்லு .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஜெயலலிதா சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: விசாரணை நீதிபதி அதிரடி மாற்றம் - Page 2 Empty Re: ஜெயலலிதா சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: விசாரணை நீதிபதி அதிரடி மாற்றம்

Post by யினியவன் Sun Jan 10, 2016 1:40 pm

ராஜா wrote:சரியான விடை . நீங்கள் அடுத்த தேர்தலில் நிற்க தகுதியான நபர் தான்

இப்ப வேட்டியாவது மிஞ்சி இருக்கு அதையும்??? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜெயலலிதா சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: விசாரணை நீதிபதி அதிரடி மாற்றம் - Page 2 Empty Re: ஜெயலலிதா சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: விசாரணை நீதிபதி அதிரடி மாற்றம்

Post by யினியவன் Sun Jan 10, 2016 1:42 pm

T.N.Balasubramanian wrote:
நீங்கள் எங்கு நின்னாலும் எந்தன் வோட் உங்களுக்கே ! ( தகுதியை பார்த்து யார் வோட் போடறாங்க
இந்த காலத்துலே ---)
ஓஹோ அர்த்தம் வேற மாதிரி ஆகுதோ ! நான் அப்பிடி அந்த அர்த்தத்துலே சொல்லலேங்க!! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரமணியன்
ஹா ஹா ஹா
மிகுதியா பணத்தை தனக்கென அடிப்பதே அடிப்படை தகுதி
அந்தத் தகுதி இல்லா நமக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது அய்யா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜெயலலிதா சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: விசாரணை நீதிபதி அதிரடி மாற்றம் - Page 2 Empty Re: ஜெயலலிதா சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: விசாரணை நீதிபதி அதிரடி மாற்றம்

Post by ராஜா Sun Jan 10, 2016 1:56 pm

யினியவன் wrote:ஹா ஹா ஹா
மிகுதியா பணத்தை தனக்கென அடிப்பதே அடிப்படை தகுதி
அந்தத் தகுதி இல்லா நமக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது அய்யா புன்னகை
இது அந்த காலத்து ரூல்ஸ் அண்ணா ...

இப்பல்லாம் "வருவதில் மிகுதியை தனக்கென அடித்துவிட்டு எஞ்சியுள்ளதை வைத்து இலவச பிச்சையை தெளித்து ஓட்டு அறுவடை செய்யவேண்டும்" இது தான் latest rules
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜெயலலிதா சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: விசாரணை நீதிபதி அதிரடி மாற்றம் - Page 2 Empty Re: ஜெயலலிதா சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: விசாரணை நீதிபதி அதிரடி மாற்றம்

Post by T.N.Balasubramanian Sun Jan 10, 2016 4:33 pm

ஆம் அதுதான் தற்போதைய நடைமுறை .
கட்டாரில் இருந்தாலும் அழகா என்னம்மா அலசறாரு தல !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஜெயலலிதா சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: விசாரணை நீதிபதி அதிரடி மாற்றம் - Page 2 Empty Re: ஜெயலலிதா சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: விசாரணை நீதிபதி அதிரடி மாற்றம்

Post by யினியவன் Sun Jan 10, 2016 4:37 pm

T.N.Balasubramanian wrote:ஆம் அதுதான் தற்போதைய நடைமுறை .
கட்டாரில் இருந்தாலும் அழகா என்னம்மா அலசறாரு தல !

ரமணியன்
அச்சச்சோ வீட்ல அவரு தான் துவைக்கிறாருன்னு தெரிஞ்சு போச்சா உங்களுக்கும் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜெயலலிதா சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: விசாரணை நீதிபதி அதிரடி மாற்றம் - Page 2 Empty Re: ஜெயலலிதா சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: விசாரணை நீதிபதி அதிரடி மாற்றம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு
» ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு ஜன.5க்கு ஒத்திவைப்பு!
» விசாரணைக்கு கூட வெளியில் வர முடியாதா ? திகார் ஜெயிலில் விசாரணை; நீதிபதி அதிரடி !
» ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
» 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்: நீதிபதி விமலா அதிரடி மாற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum