ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
ஹனுமான் சாலிசா ! - Page 3 Poll_c10ஹனுமான் சாலிசா ! - Page 3 Poll_m10ஹனுமான் சாலிசா ! - Page 3 Poll_c10 
heezulia
ஹனுமான் சாலிசா ! - Page 3 Poll_c10ஹனுமான் சாலிசா ! - Page 3 Poll_m10ஹனுமான் சாலிசா ! - Page 3 Poll_c10 
mohamed nizamudeen
ஹனுமான் சாலிசா ! - Page 3 Poll_c10ஹனுமான் சாலிசா ! - Page 3 Poll_m10ஹனுமான் சாலிசா ! - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹனுமான் சாலிசா !

4 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஹனுமான் சாலிசா ! - Page 3 Empty ஹனுமான் சாலிசா !

Post by krishnaamma Thu Jan 07, 2016 2:55 pm

First topic message reminder :

ஹனுமான் சாலிசா !


ஹனுமான் சாலிசா ! - Page 3 Flying-hanuman-ji-hd-wallpapers-for-facebook1

தினமுமே சொல்லலாம், ஆனால் இதை அனுமத் ஜெயந்தி இன் போது சொன்னால் பலன் அதிகம் புன்னகை

ரசன: துலஸீ தாஸ்


தோஹா

ஶ்ரீ குரு சரண ஸரோஜ ரஜ னிஜமன முகுர ஸுதாரி |
வரணௌ ரகுவர விமலயஶ ஜோ தாயக பலசாரி ||


புத்திஹீன தனுஜானிகை ஸுமிரௌ பவன குமார |
பல புத்தி வித்யா தேஹு மோஹி ஹரஹு கலேஶ விகார் ||



த்யானம்

கோஷ்பதீக்றுத வாராஶிம் மஶகீக்றுத ராக்ஷஸம் |
ராமாயண மஹாமாலா ரத்னம் வம்தே அனிலாத்மஜம் ||


யத்ர யத்ர ரகுனாத கீர்தனம் தத்ர தத்ர க்றுதமஸ்தகாம்ஜலிம் |
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம் மாருதிம் னமத ராக்ஷஸாம்தகம் ||



சௌபாஈ
ஜய ஹனுமான ஜ்ஞான குண ஸாகர |
ஜய கபீஶ திஹு லோக உஜாகர || 1 ||



ராமதூத அதுலித பலதாமா |
அம்ஜனி புத்ர பவனஸுத னாமா || 2 ||



மஹாவீர விக்ரம பஜரங்கீ |
குமதி னிவார ஸுமதி கே ஸங்கீ ||3 ||



கம்சன வரண விராஜ ஸுவேஶா |
கானன கும்டல கும்சித கேஶா || 4 ||



ஹாதவஜ்ர ஔ த்வஜா விராஜை |
காம்தே மூம்ஜ ஜனேவூ ஸாஜை || 5||


தொடரும்..............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


ஹனுமான் சாலிசா ! - Page 3 Empty Re: ஹனுமான் சாலிசா !

Post by krishnaamma Fri Jan 08, 2016 11:50 am

ayyasamy ram wrote:சூரியனை விழுங்கியதால் உலகம் இருண்டது என்பது கதை...
-
விழுங்க முயன்றவனை இந்திரன் தடுத்தான் என்பதும் கதைதான்...
-

பிறந்தவுடனே சூரியனை ஒரு பழமாகக் கருதி அதனை
விழுங்கும் பொருட்டு அனுமன் வான்நோக்கித் தாவினான்.

சூரியனுக்கு ஆபத்தென இந்திரன் தன் வஜ்ராயுதத்தால்
அனுமனைத் தாக்கினான்.
நிலைகுலைந்து கீழே வீழ்ந்த
அனுமனைக்கண்டு வாயு சினம் மேலோங்க மூவுலகிலும்
காற்று இல்லாமல் செய்தான்.

இதனால் ஏற்பட்ட சீரழிவை நீக்க, பிரமன் உள்ளிட்ட அனைத்து
தேவர்களும் வாயுவை நாடினர்.

“என் மகனுக்கு உங்கள் சக்தியை அளித்தால்தான் என் கோபம்
தணியும்” என்று வாயுதேவன் கூற அனைவரும் அவ்வாறே செய்ய
அனுமன் மிக்க பலசாலியும் அறிவாளியுமானான்.

அவனுக்கு சூரியன்  ஆசானாகி வேதநெறிகளையும், ஏனைய
சாஸ்திரங்களையும், நவவியாகரணங்களையும் கற்பித்தான்.
குருதக்ஷிணை அளிக்க முற்பட்ட அனுமனை நோக்கி,
“நீ என் மகன் கிஷ்கிந்தை இளவரசன் சுக்ரீவனுக்கு அமைச்சனாகி
சேவை புரி.  பின்னர் ஸ்ரீமந்நாராயணனின் அவதாரமான ராமன்
வரும் வரை காத்திருந்து அவருக்கு துணையாகப் பணியாற்று”
என்று ஆதவன் ஆணையிட்டான்.

அப்போதிலிருந்து ராமன் வருகையை எதிர்நோக்கியவாறே
சுக்ரீவனின் அந்தரங்க அமைச்சனாகக் திகழ்ந்தான் அனுமன்.
-
மேற்கோள் செய்த பதிவு: 1186272

ஆபத்து தான் அண்ணா, விழுங்கலை புன்னகை ...........இதே கதை தான் நான் சொல்ல வந்ததும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஹனுமான் சாலிசா ! - Page 3 Empty Re: ஹனுமான் சாலிசா !

Post by krishnaamma Fri Jan 08, 2016 11:51 am

ராம் அண்ணா, நீங்க கொடுத்துள்ள அஷ்டமா சித்திகள் என்பதில் இரண்டாவது தவறுதலாய்  இருக்கு நான் மாற்றி விடவா? புன்னகை  


அதில் பாருங்கோ மகிமா மற்றும் கரிமாவுக்கு ஒன்றே போட்டிருக்காங்க சோகம் 


அணிமாதி அஷ்ட சித்திகள்’ என்பதற்கான விளக்கம்:


தவ முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு எட்டுவிதமான சித்திகள் கிடைக்கும் என்பது சித்த மரபில் வரும் ஒரு நம்பிக்கை. 


அந்த எட்டு சித்திகள்: 
அணிமா (அணு அளவிற்கு சிறிய உருவை எடுத்துக் கொள்ளுதல்), 
மஹிமா (பிரபஞ்சத்தின் அளவிற்கு உருவை பெரிதாக்கிக் கொள்வது)
கரிமா (அதிக எடையைக் கொண்டிருப்பது), 
லஹிமா (இலகுவான எடையைக் கொண்டிருப்பது), 
ப்ராப்தி (நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்வது), 
ப்ராகாம்யா (எண்ணியதெல்லாம் அடைதல்), 
ஈசித்வா (எல்லா பொருட்கள் மேலும் ஆதிக்கம் செலுத்துவது), 
வசித்வா (எல்லா பொருட்களையும் எல்லாரையும் வசப்படுத்துவது). 


இந்த விளக்கங்களிலிருந்தே தெரியும் இவையெல்லாம் உடையவன் இறைவன் ஒருவனே என்பது. சித்தர்கள் இறைவனின் இந்த குணங்களையெல்லாம் தவ வலிமையால் அடைவார்கள் என்பது நம்பிக்கை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஹனுமான் சாலிசா ! - Page 3 Empty Re: ஹனுமான் சாலிசா !

Post by krishnaamma Fri Jan 08, 2016 12:13 pm

நானே மாற்றிவிட்டேன் ராம் அண்ணா   புன்னகை .......வேற யாராவது படிக்கும்போது தப்பாய் இருக்கக் கூடாதே என்று மாற்றிவிட்டேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஹனுமான் சாலிசா ! - Page 3 Empty Re: ஹனுமான் சாலிசா !

Post by தமிழ்நேசன்1981 Fri Jan 08, 2016 1:43 pm

இங்குள்ள வீடியோவில் ஆடியோவுடன் பாடல் வரிகளும் உள்ளது.

படித்துகொண்டே கேட்கலாம்.. கேட்டுக்கொண்டே படிக்கலாம்.
எப்படி உச்சரிப்பது என்ற குழப்பமும் தீரும். ராகத்தோடும் படிக்க உதவும்.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஹனுமான் சாலிசா ! - Page 3 Empty Re: ஹனுமான் சாலிசா !

Post by krishnaamma Fri Jan 08, 2016 2:15 pm

தமிழ்நேசன்1981 wrote:இங்குள்ள வீடியோவில் ஆடியோவுடன் பாடல் வரிகளும் உள்ளது.

படித்துகொண்டே கேட்கலாம்.. கேட்டுக்கொண்டே படிக்கலாம்.
எப்படி உச்சரிப்பது என்ற குழப்பமும் தீரும். ராகத்தோடும் படிக்க உதவும்.
மேற்கோள் செய்த பதிவு: 1186289


மிக்க நன்றி நேசன்.........எங்க உங்களை ஆளையே காணும்?...............உங்கள் தளம் சரியாகி விட்டதா............குறைந்தது ஒரு 100 பேர் உங்களைத் தேடி இருப்பார்கள்.............அந்த திரி இல் போய் பாருங்களேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஹனுமான் சாலிசா ! - Page 3 Empty Re: ஹனுமான் சாலிசா !

Post by தமிழ்நேசன்1981 Fri Jan 08, 2016 2:22 pm

krishnaamma wrote:


மிக்க நன்றி நேசன்.........எங்க உங்களை ஆளையே காணும்?...............உங்கள் தளம் சரியாகி விட்டதா............குறைந்தது ஒரு 100 பேர் உங்களைத் தேடி இருப்பார்கள்.............அந்த திரி இல் போய் பாருங்களேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1186293

நலம் அம்மா.. அந்த பதிவுகளை பார்த்தேன்.. இன்னும் சிறிது நாளாகும் தளம் அனைவரும் பார்கும்படி செய்ய.. இப்போது அடிக்கடி ஆன்லைன் வர இயலவில்லை. அதான் காரணம்.. புன்னகை
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஹனுமான் சாலிசா ! - Page 3 Empty Re: ஹனுமான் சாலிசா !

Post by krishnaamma Fri Jan 08, 2016 2:30 pm

தமிழ்நேசன்1981 wrote:
krishnaamma wrote:


மிக்க நன்றி நேசன்.........எங்க உங்களை ஆளையே காணும்?...............உங்கள் தளம் சரியாகி விட்டதா............குறைந்தது ஒரு 100 பேர் உங்களைத் தேடி இருப்பார்கள்.............அந்த திரி இல் போய் பாருங்களேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1186293

நலம் அம்மா.. அந்த பதிவுகளை பார்த்தேன்.. இன்னும் சிறிது நாளாகும் தளம் அனைவரும் பார்கும்படி செய்ய.. இப்போது அடிக்கடி ஆன்லைன் வர இயலவில்லை. அதான் காரணம்.. புன்னகை  
மேற்கோள் செய்த பதிவு: 1186294


ம்ம்.. நல்லது நேசன், அப்பப்போ வந்து போங்கள் புன்னகை........உங்களுக்கு என் (தாமதமான) புத்தாண்டு வாழ்த்துகள் புன்னகை............ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஹனுமான் சாலிசா ! - Page 3 Empty Re: ஹனுமான் சாலிசா !

Post by தமிழ்நேசன்1981 Fri Jan 08, 2016 2:38 pm

ஹனுமான் சாலீஸா - தமிழில்

ஸ்ரீகுரு திருவடித் தூளிகொண்டே
என்மன வாழியைத் தூய்மை செய்தே
நால்வகைக் கனிகளை நமக்களிக்கும்
ரகுவரன் பெரும்புகழ் பாடிடுவேன்!

அறிவிலி யானுனைத் தியானிப்பேன்
காற்றின் மைந்தனே அனுமந்தா!
வலிமையறிவுஞானம் எனக்குநல்கி
துயரங்கள் நீக்கியே காத்திடுவாய்!
*********

ஜெய ஹனுமானே! ஞானகுணக் கடலே!
மூவுலகை யெழுப்பும் வானரர் கோனே! [1]

[இ]ராமதூதனே! ஆற்றலின் நிறையே!
அஞ்சனை மைந்தனே! வாயுவின் புதல்வனே! [2]

மாபெரும் வீரனே! பெருந்திறல் வடிவே!
தீமதி நீக்கிடும் நன்மதி நண்பனே! [3]

பொன்மே னியனே! பட்டாடை புனைவோனே!
ஒளிர்குண் டலமுடன் அலைமுடி கொண்டோனே! [4]

இடி,கொடிமிளிரும் கரங்கள் கொண்டோனே!
முஞ்சைப் பூணூல் தோ ளணிவோனே! [5]

சிவனின் அம்சமே! கேசரி மகனே!
உனதொளி வீரத்தை வணங்குது உலகே! [6]

பேரறி வாளியே! நற்குண வாரியே!
[இ]ராமசேவைக்கென மகிழ்வுடன் பணிவனே! [7]

தலைவன் பெருமையைக் கேட்பதுன் பரவசம்!
[இ]ராமயிலக்குவ சீதையுன் மனவசம்! [8]

நுண்ணிய உருவாய் அன்னைமுன் தோன்றினாய்!
கோர வுருவினில் இலங்கையை எரித்தாய்! [9]

அசுரரை அழித்திடப் பேருருக் கொண்டே
இராம காரியத்தை நலமுடன் முடித்தாய்! [10]

சஞ்சீவி கொணர்ந்தே [இ]லக்குவனை எழுப்பிட
மிஞ்சிய அன்புடன் [இ]ராமனுனைத் தழுவினார்! [11]

ரகுபதி யுன்னைப் பெரிதும் புகழ்ந்தே
பரதனைப் போல்நீ உடனுறை என்றார்! [12]

ஆயிரம் நாவுடை ஆதி சேஷனுன்
பெருமையைப் புகழ்வதாய் அணைத்தே சொன்னார்! [13]

சனகாதி முனிவரும் பிரம்மாதி தேவரும்
ஈசனும் நாரதர் கலைமகள் சேஷனும்.... [14]

காலன் குபேரன் திசைக்கா வலரும்
கவிஞர் புலவரால் சொல்லிட இயலுமோ? [15]

சுக்ரீவ னுக்கு அரசை அளித்திட
[இ]ராமனின் நட்பால் உதவிகள் செய்தாய்! [16]

உன்னறி வுரையை வீடணன் கொண்டதால்
அரியணை அடைந்ததை யிவ்வுல கறியும்! [17]

தொலைவினி லொளிரும் ஞாயிறைக் கண்டே
சுவைதரும் கனியெனப் பிடித்து விழுங்கினாய்! [18]

வாயினில் [இ]ராமனின் மோதிரம் கவ்வியே
ஆழியைக் கடந்ததில் வியப்பெது முண்டோ! [19]

உலகினில் முடியாக் காரியம் யாவையும்
நினதரு ளாலே முடிந்திடும் எளிதாய்! [20]

[இ]ராமரா ச்சியத்தின் வாயிற் காவலன்நீ!
நுழைந்திட வியலுமோ நின்னரு ளின்றி! [21]

உனைச்சர ணடைந்தால் இன்பங்கள் நிச்சயம்!
காவலாய் நீவர ஏதிங்கு வெமக்கச்சம்! [22]

நின்னால் மட்டுமே நின்திறல் அடங்கும்!
மூவுலகும் அதன் முன்னே நடுங்கும்! [23]

பூதப் பிசாசுகள் நெருங்கிட வருமோ!
மஹாவீர னுன் திருநாமம் சொல்வரை! [24]

நோய்களு மகலும் துன்பங்கள் விலகும்!
பலமிகு நின்திரு நாமம் சொல்லிட! [25]

தொல்லைகள் தொலைந்திட அனுமன் அருள்வான்!
மனம்.வாக்கு,செயலால் தியானிப் பவர்க்கே! [26]

தவம்புரி பக்தர்க்கு வரங்கள் நல்கிடும்
[இ]ராமனின் பணிகளை நீயே செய்தாய்! [27]

வேண்டிடும் பக்தர்கள் ஆசைகள் நிறைவுறும்!
அழியாக் கனியாம் அனுபூதி பெறுவார்! [28]

நான்கு யுகங்களும் நின்புகழ் பாடிடும்!
நின்திரு நாமமே உலகினில் சிறந்திடும்! [29]

ஞானியர் நல்லோரைக் காப்பவன் நீயே!
தீயவை அழிப்பாய்! [இ]ராமனின் கனியே! [30]

எட்டு ஸித்திகளும் ஒன்பது செல்வங்களும்
கேட்டவர்க் கருள்வரம் சீதையுனக் களித்தார்! [31]

[இ]ராம பக்தியின் சாரமே நின்னிடம்!
என்றும் அவனது சேவகன் நீயே! [32]

நின்னைப் பற்றியே [இ]ராமனை அடைவார்!
தொடர்வரும் பிறவித் துன்பம் துடைப்பார்! [33]

வாழ்வின் முடிவினில் [இ]ராமனடி சேர்வார்!
ஹரியின் பக்தராய்ப் பெருமைகள் பெறுவார்! [34]

மறுதெய்வம் மனதில் நினையா பக்தரும்
அனுமனைத் துதித்தே அனைத்தின்பம் பெறுவார்! [35]

துன்பங்கள் தொலையும் துயரங்கள் தீர்ந்திடும்!
வல்லிய அனுமனை தியானிப் பவர்க்கே! [36]
*
ஆஞ்ச நேயனே! வெற்றி!வெற்றி! வெற்றி!*
விஞ்சிடும் குருவே! எமக்கருள் புரிவாய்! [37]

நூறுமுறை இதைத் துதிப்பவர் எவரோ
அவர் தளை நீங்கியே ஆனந்தம் அடைவார்! [38]

அனுமனின் நாற்பதைப் படிப்பவர் எல்லாம்
சிவனருள் பெற்றே ஸித்திகள் அடைவார்! [39]

அடியவன் *துளஸீ தாஸன்* வேண்டுவான்
அனைவ ருள்ளிலும் திருமா லுறையவே! [40]

சங்கடம் நீக்கியே மங்களம் அருளும்
காற்றின் மைந்தனின் ரூபம்!
[இ]ராம யிலக்குவ சீதை யுடனே
என்றுமென் னுள்ளினில் வாழும்!

*'ஸ்ரீ ராமசந்திர பகவானுக்கு வெற்றி' எனப் பாடு!

[இ]ராம [இ]லக்குவ ஜானகீ
மாருதிக்கு வெற்றியெனப் பாடு!
[இ]ராம [இ]லக்குவ ஜானகீ
மாருதிக்கு வெற்றியெனப் பாடு!

ஸ்ரீ ராமஜயம்!*
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஹனுமான் சாலிசா ! - Page 3 Empty Re: ஹனுமான் சாலிசா !

Post by krishnaamma Fri Jan 08, 2016 3:50 pm

மிகவும் அருமையாக இருக்கு நேசன்..மிக்க நன்றி !............. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஹனுமான் சாலிசா ! - Page 3 Empty Re: ஹனுமான் சாலிசா !

Post by shobana sahas Sat Jan 09, 2016 6:40 am

மிக்க நன்றி நேசன் . நலமா ?
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

ஹனுமான் சாலிசா ! - Page 3 Empty Re: ஹனுமான் சாலிசா !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum