புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 9:51

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடைசி வரை! Poll_c10கடைசி வரை! Poll_m10கடைசி வரை! Poll_c10 
103 Posts - 73%
heezulia
கடைசி வரை! Poll_c10கடைசி வரை! Poll_m10கடைசி வரை! Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
கடைசி வரை! Poll_c10கடைசி வரை! Poll_m10கடைசி வரை! Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
கடைசி வரை! Poll_c10கடைசி வரை! Poll_m10கடைசி வரை! Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
கடைசி வரை! Poll_c10கடைசி வரை! Poll_m10கடைசி வரை! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கடைசி வரை! Poll_c10கடைசி வரை! Poll_m10கடைசி வரை! Poll_c10 
1 Post - 1%
Guna.D
கடைசி வரை! Poll_c10கடைசி வரை! Poll_m10கடைசி வரை! Poll_c10 
1 Post - 1%
Pampu
கடைசி வரை! Poll_c10கடைசி வரை! Poll_m10கடைசி வரை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடைசி வரை! Poll_c10கடைசி வரை! Poll_m10கடைசி வரை! Poll_c10 
268 Posts - 75%
heezulia
கடைசி வரை! Poll_c10கடைசி வரை! Poll_m10கடைசி வரை! Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
கடைசி வரை! Poll_c10கடைசி வரை! Poll_m10கடைசி வரை! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கடைசி வரை! Poll_c10கடைசி வரை! Poll_m10கடைசி வரை! Poll_c10 
8 Posts - 2%
prajai
கடைசி வரை! Poll_c10கடைசி வரை! Poll_m10கடைசி வரை! Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
கடைசி வரை! Poll_c10கடைசி வரை! Poll_m10கடைசி வரை! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கடைசி வரை! Poll_c10கடைசி வரை! Poll_m10கடைசி வரை! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கடைசி வரை! Poll_c10கடைசி வரை! Poll_m10கடைசி வரை! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கடைசி வரை! Poll_c10கடைசி வரை! Poll_m10கடைசி வரை! Poll_c10 
3 Posts - 1%
Barushree
கடைசி வரை! Poll_c10கடைசி வரை! Poll_m10கடைசி வரை! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடைசி வரை!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 12 Jan 2016 - 0:49

சரக்கு மாஸ்டர் வெங்காய பஜ்ஜி மாவை, கடாயில் கொதிக்கும் எண்ணெயில் போடுவதை பார்த்தபடி நின்றிருந்தார் நரசிம்மராவ்.

பலகார அயிட்டம் தயாராகும் போது, கேஷ் கவுன்டரில் கொள்ளை போனால் கூட பொருட்படுத்த மாட்டார், நரசிம்மராவ்.


'ரவுண்ட்டானா கபே'வின், வெற்றி சூட்சுமம், அந்த வெங்காய பஜ்ஜியிலும், அக்ரூட் அல்வாவிலும் இருந்தது.
வேட்டியை மடித்துக் கட்டி, கரடி போல மண்டியிருக்கும், மார்பு ரோமத்தை, வெள்ளைத் துண்டு மறைத்தும், மறைக்காமலும் தொங்க, வெள்ளி வெற்றிலைச் செல்லத்தில், ஒரு வெற்றிலையை எடுத்து, பதமாக நீவி, அதன்மீது, சுண்ணாம்பைத் தடவினார் நரசிம்மராவ்.


முதல் ஈடு வெங்காய பஜ்ஜி, சற்று கறுத்து விட, ''கோவிந்தா... அதை அப்படியே எடுத்து, குப்பை டப்பாவுல போடு,'' என்றார் கண்டிப்பான குரலில்!


தனக்குச் சீட்டு கிழியப் போகிறது என்ற பயத்தில், ''அண்ணா... என்ன சொல்றீங்க...'' என்றான் கோவிந்தன்.


''பயப்படாத... உன் சம்பளத்தில பிடிக்க மாட்டேன்; சொல்றதைச் செய்.''
நம்பிக்கை இல்லாமல், அவரைப் பார்த்தான் சரக்கு மாஸ்டர் கோவிந்தன்.


''கோவிந்தா... ரவுண்ட்டானா கபே, இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே ஓடும்ன்னு நினைக்கிறே...'' என்றார்.
பதில் சொல்லாமல் அவரையே பார்த்தான் கோவிந்தன்.


''இப்ப போடற அயிட்டத்துக்கு மவுஸ் இருக்கிற வரை தான், இந்த கூட்டம். நாளைக்கே இன்னொருத்தன் வந்து, சூப்பரா சரக்கு போட்டா, உன் பேரு மாதிரி, நாம கோவிந்தா தான். அதுக்காகத் தான் சொல்றேன்... சரக்கு நல்லா இல்லன்னா, தூக்கிப் போட்டுட்டு, புதுசா தயார் செய்துடணும். காசு கொடுக்கிறவர் கஸ்டமர்; அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு, அந்த காசை சம்பாதிக்கிறாரோ...''


மறுபேச்சில்லாமல், கறுத்துப்போன பஜ்ஜியை, குப்பைக் கூடையில் கோவிந்தன் கொட்டிய போது, அந்த கரகரத்த குரல் கேட்டது...


''நரசிம்மராவ்...''
திரும்பிப் பார்த்தார் நரசிம்மராவ். பழைய முதலாளி சிற்சபேசன்!
ஒரு நிமிடம் அவர் உடம்பு ஆடிப் போனது.


“வாங்க வாங்க... ஏய் யார்றா அங்கே... ஒரு நாற்காலி கொண்டா...'' என்றவர், வேலையாள் நாற்காலி கொண்டு வரும் வரை காத்திருக்காமல், தானே கேஷ் கவுன்டருக்கு சென்று, மடிச்சு வைத்திருந்த குஷன் நாற்காலியை எடுத்துப் போட்டார். சிற்சபேசன் அமர்ந்ததும், மேல் துண்டை எடுத்து இடுப்பில் கட்டி, பவ்யமாக அருகில் நின்றார்.


அங்கிருந்த வேலையாள், சிற்சபேசனை ஏற இறங்கப் பார்த்தான். ஐந்து சவரனுக்கு புலிப் பல் கட்டிய மைனர் செயின்; தங்கச் செயின் கோத்த ரோலக்ஸ் வாட்ச்; விரற்கட்டை அளவுக்கு ஒரு விரலில் வைர மோதிரமும், மற்றொரு விரலில் நவரத்தினங்கள் பதித்த மோதிரமும் மின்ன, மெல்லிசாக வெள்ளையாக எட்டு முழ வேட்டியில் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார் சிற்சபேசன்.


“பிசினசுக்கு வந்தேன்; ஓட்டல் உன்னுடையதுன்னு தெரியாது. 'இங்க என்ன ஸ்பெஷல்'ன்னு சர்வர் கிட்ட கேட்டேன். 'அக்ரூட் ஹல்வா'ன்னான். உடனே உன் ஞாபகம் வந்தது; சாப்பிட்ட போது, உன் கை மணக்கிற பிரமை. சரக்கு மாஸ்டர் யாருன்னு கேட்டேன். ஏதோ பேர் சொன்னான். நரசிம்மராவான்னு கேட்டேன்; அவர் முதலாளின்னான்!”
மரியாதை குறையாமல், அவரை நோட்டம் விட்டார் நரசிம்மராவ். 



லேசாக தொப்பை தள்ளியிருந்தது. தலையில் பாதி நரை. அந்தக் கடைசி இரவில், பால் கொண்டு போனபோது, அவர் முகத்தில் படிந்திருந்த கனத்த இருள், இப்போது இல்லை. முகத்தில், தெம்பும், தெளிவும் இருந்தது. மீண்டு விட்டார் என்று தோன்றியது.
இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.


சிற்சபேசனின் பார்வை, தீர்க்கமாக வெல்டிங் உஷ்ணத்தோடு, அவரை சுடுவது போல் இருந்தது.


'உங்க ராஜாத்தியப் பாக்கணும் அப்படித் தானே... அவ அசல் ராஜாத்தி மாதிரி, சவுக்கியமா இருக்கிறா...' என சொல்லத் துடித்தார் நரசிம்மராவ். ஆனால், அது ஓட்டல். சர்வர்களும், மாவரைப்பவர்களும், சரக்கு மாஸ்டரும், கிளீனர்களுக்குமான சின்ன உலகம். அங்கே, நரசிம்மராவ் அதிபதி; எனவே மவுனமாக இருந்தார்.


“கோவிந்தா... ஒரு பிளேட்டில ஐயாவுக்கு பஜ்ஜி கொண்டா...” என்றார்.
“வேணாம் நரசிம்மராவ்... நான் டிபன் முடிச்சுட்டேன்; காபி வேணும்ன்னா கொடு.”


“இதோ நானே கலந்து எடுத்துட்டு வர்றேன்,” என்று கூறி உள்ளே சென்றவர், ஸ்பெஷலாக காபி கலந்து எடுத்து வந்தார். சிற்சபேசனுக்கு காபி கொடுத்து ஐந்து வருஷமாச்சு! நிதானமாக காபி பருகினார் சிற்சபேசன். காலி டபரா செட்டை, நரசிம்மராவ் தன் கையால் வாங்கி, கிளீனரிடம் கொடுத்தார்.
“வியாபாரமெல்லாம் எப்படிங்க இருக்கு?” என்று கேட்டார் நரசிம்மராவ்.


“இப்ப கொஞ்சம் ஸ்டெடியாகிட்டேன். வியாபாரத்த சேலத்துக்கு மாத்திட்டேன். நீ எப்ப ஓட்டல் ஆரம்பிச்சே?” 
“மூணு வருஷம் ஆகப் போகுது; எல்லாம் நீங்க போட்ட பிச்சை!”


“பெரிய வார்த்தை சொல்லாதே நரசிம்மா... உனக்கு மூணு மாச சம்பளம் பாக்கி தரணும். நான் என்ன செய்துட்டேன்... உன் கையிலே தொழில் இருந்தது; சாமர்த்தியம் இருந்ததால முன்னுக்கு வந்தே,” என்றார்.


“உங்களுக்கு பிடிச்ச மாதிரி சமைக்கணுமேங்கிற கவலையில்லேன்னா, இவ்வளவு தூரம் நான் முன்னுக்கு வந்திருக்க முடியாது,” என்றார் நரசிம்மராவ்.


அவரை உற்றுப் பார்த்தார் சிற்சபேசன். அவர் பார்வையில், அது மட்டுமா என்ற ஓர் ஓசையற்ற கேள்வி, அரூபமாக எழுந்து, நரசிம்மராவின் இதயத்தை ஈட்டி போன்று குடைந்தது.


'உங்க சொத்தை பத்திரமாக பாதுகாத்து வர்றேன். நீங்க தாராளமாக எடுத்துட்டுப் போகலாம். மனப்பூர்வமாக எந்தக் கல்மிஷமுமில்லாமே சொல்றேன்...' என, மனதுக்குள் சொன்னார்.
“ஜாகை எங்கே வச்சிருக்கே?”


“தேரடிப் பிள்ளையார் கோவில் தெரு விரிவாக்கப் பகுதியில ஒரு அரச மரம் தெரியும். அங்கே ரைட்லே கிழக்கே பாத்துத் திரும்பும் தெரு.”


ஜிப்பாவில் கையை விட்டு இரண்டு ஆயிரம் ரூபாயை எடுத்து நரசிம்மராவிடம் நீட்டினார் சிற்சபேசன்.
“இது எதுக்குண்ணா?” என்றார் நரசிம்மராவ்.
“நிலுவை நின்ன சம்பளம்...”



தொடரும்...................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 12 Jan 2016 - 0:50

“சாப்பிடற சாதமே உங்க பிச்சைதாண்ணா; நல்லபடியா இருக்கேன்; வேணாம்,'' கை கூப்பி கும்பிட்டார் நரசிம்மராவ்.

“இல்ல; எனக்கு உறுத்திட்டிருக்கு. நான் இனாமா தரல; உனக்கு சேர வேண்டிய சம்பளம். நானும் பழையபடி நல்ல நிலைக்கு வந்திட்டேன். நீ வாங்கலைன்னா என் மனசில அது பெரிய சுமையா இருக்கும்!”


சட்டென்று கை நீட்டி வாங்கிக் கொண்டார் நரசிம்மராவ். கண்கள் தழுதழுத்தன.
“நான் புறப்படறேன்,” என்று எழுந்தார் சிற்சபேசன்.


“அவசியம் வீட்டுக்குப் போய்ட்டுப் போங்கண்ணா; அவங்களையும் அழைச்சுட்டுப் போங்க,” என்றார்.
சட்டென்று நரசிம்மராவைப் திரும்பிப் பார்த்தவர், “உம்,” என்றார்.


அவர் புறப்பட்டுச் சென்ற பின், வெகு நேரம், வரை, அந்தக் காலியான குஷன் நாற்காலியையே பார்த்தபடி நின்றிருந்தார் நரசிம்மராவ்.


அவருக்கு பழைய ஞாபகங்கள் மனதில் நிழற்படமாய் தோன்றி மறைந்தன.
அன்று, சிற்சபேசன் அறைக்கு சென்ற நரசிம்மராவ், அவரிடம் பால் டம்ளரை கொடுத்த பின், மாடிப் படியில் இறங்கும் போது, 'தடதட'வென்று கதவை இடிக்கிற சத்தம் கேட்டது.


கதவைத் திறந்தால், 'சிற்சபேசன் எங்கே?' என்ற வெறிக் கூச்சல்கள். அனைவரும் அவருக்கு கடன் கொடுத்தவர்கள்.
நரசிம்மராவைத் தள்ளியபடி, மாடியிலும், கீழேயும் ஓடினர்.


'வாங்கின கடனை அடைக்க வக்கில்லாம ஐ.பி., கொடுத்து ஓடிட்டான் பனாதைப் பயல்...' என்றது ஆக்ரோஷமான ஓர் குரல்.
சிற்சபேசனை எங்கும் காணாமல் ஒரு கூட்டம் திரும்பி போனது.
அரை மணி நேரம் கூட ஆகவில்லை.


மறுபடியும், 'தடதட'வென்று கதவை இடித்தனர்.


கதவைத் திறந்ததும், 'திமுதிமு'வென்று நாலைந்து பேர், சிற்சபேசனின் படுக்கை அறையைத் தேடி மாடிக்கு ஓடினர்.


சொரேலென்று நரசிம்மராவுக்கு உறைத்து, மேலே ஓடினார். அதற்குள் ராஜாத்தியை சுற்றி நின்றிருந்த அக்கூட்டம், 'நகைகளையெல்லாம் கழற்று...' என்றது!


'இப்போ நகையை கழற்றப் போறயா, இல்லயா...' என்று கேட்டு, ஒருவன் அவள் மீது கையை வைக்க, ஆவேசத்தோடு பாய்ந்து அவன் கையைத் தட்டி விட்ட நரசிம்மராவ், 'நகை தானே வேணும்... கேட்டு வாங்கிக்க; கை வைத்தால் கொலை விழும்...' என்று கர்ஜித்தார்.


ஒருவர் கைக்குட்டையை விரிக்க, கம்மல், மூக்குத்தியைக் கூட கழற்றிக் போட்டாள் ராஜாத்தி.
'அள்ளிட்டு ஓடுங்க...' என்றார் நரசிம்மராவ்.


மூளியாக நின்றிருந்தாள் ராஜாத்தி. ஆரஞ்சுப் பதுமை போன்ற சொக்க வைக்கும் அழகு. விசாலமான கண்கள்; ஆளை அயர்த்தும் உடல் வாளிப்பு. அது மட்டுமே அப்போது அவளிடம் மிஞ்சி நின்றது.
விஷயம் தெரிந்து சிலையாக நின்றிருந்தவள், பின், குரல் உடைந்து அழ ஆரம்பித்தாள்.
'அழாதீங்கம்மா... நான் இருக்கேன்; உங்கள காப்பாத்தறேன்...' என்றார் நரசிம்மராவ்.


அன்று அவர் கொடுத்த வாக்கு, ராஜாத்தியை மட்டுமல்ல, அவரையும் வாழ வைத்தது. சிற்சபேசன் வசதியாக இருந்த காலத்தில், ராஜாத்தியை எவ்வளவு சுகபோகத்தில் வைத்திருந்தார் என்பதை நன்கு அறிவார் நரசிம்மராவ்.
அவளுக்கு விருப்பப்பட்டதை சமைத்துப் போடுவதற்காகத் தான், நரசிம்மராவுக்கு அங்கு வேலையே கிடைத்தது.
இனி, எஜமானரின் பொக்கிஷத்தை, அவர் திரும்பி வரும் வரையில், கண் கலங்காமல், மனம் கோணாமல் காப்பாற்ற வேண்டும்.


ஆறு மாதத்தில் சிறிய அளவில் சிற்றுண்டிச் சாலை வைத்தார். இரண்டே ஆண்டில் ஓட்டலாக மாற்றினார். ஆனால், தான் மட்டும் இன்னும் பழைய தவசிப் பிள்ளையாக எட்டி நின்றே, அதே மரியாதையோடு பழகுகிறார். இது, ராஜாத்திக்கு விந்தையாக இருந்தாலும், அவளும் கூட, அவர் காட்டி வரும் மரியாதைக்கும், கண்ணியத்திற்கும் குந்தகமாக நடக்கவில்லை.


இதோ நாட்கள் உருண்டோடி, ஐந்து ஆண்டுகளாகி விட்டன.
இரவு, 8:00 மணி -
சமைத்துவிட்டு கிளம்புவதற்கு முன், ராஜாத்திக்கு தகவல் தந்துவிட்டு செல்வது வழக்கம். போனில் ராஜாத்தியை கூப்பிட்டார்...
''ஹலோ... அம்மா நான் நரசிம்மன் பேசறேன்!"


''தெரியுது,'' என்றவள், ''எந்த பிரச்னை வந்தாலும் கடைசி வரை காப்பாத்தறவன் புருஷனா... பிரச்னை வந்ததும் வுட்டுட்டு ஓடறவன் புருஷனா?'' என்று கேட்டாள் ராஜாத்தி.
பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார் நரசிம்மராவ்.


''நீ மகா தியாகி மாதிரி அனுப்பி வச்ச ஆளு வந்தாரு... இதே கேள்வியை அந்த ஆளு கிட்டே கேட்டேன். கவுந்த தலையை நிமித்த முடியாமே, 'வர்றே'ன்னு அரைகுறையா முனகிட்டுப் போய்ட்டாரு. நரசிம்மா... நா என்ன பொம்பளைன்னு நினைச்சியா இல்ல, பாங்க் லாக்கர்லே போட்டுப் பூட்டி வக்கிற பொருள்ன்னு நினைச்சியா?'' என்றாள்.


நரசிம்மராவால், பதில் சொல்ல முடியவில்லை.
இரண்டு நிமிடம் மவுனம் நீடித்தது.


''நாளைக்கு காலையிலே, ஓட்டலுக்கு வர லேட்டாகும்ன்னு உன் வேலையாளுக கிட்ட சொல்லிட்டு வா,'' என்றாள்.
''எதுக்கு?''


''நாம ரெண்டு பேரும் சப் - ரிஜிஸ்ட்ரார் ஆபிசுக்கு மேரேஜ் அப்ளிகேஷன் கொடுக்க போகணும்!''

வையவன்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக