புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_c10எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_m10எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_c10 
84 Posts - 45%
ayyasamy ram
எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_c10எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_m10எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_c10 
74 Posts - 39%
T.N.Balasubramanian
எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_c10எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_m10எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_c10எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_m10எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_c10எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_m10எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_c10எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_m10எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_c10எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_m10எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_c10 
2 Posts - 1%
prajai
எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_c10எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_m10எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_c10 
2 Posts - 1%
Manimegala
எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_c10எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_m10எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_c10 
2 Posts - 1%
Saravananj
எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_c10எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_m10எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_c10எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_m10எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_c10 
440 Posts - 47%
heezulia
எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_c10எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_m10எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_c10எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_m10எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_c10எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_m10எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_c10எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_m10எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_c10 
30 Posts - 3%
prajai
எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_c10எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_m10எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_c10எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_m10எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_c10 
5 Posts - 1%
sugumaran
எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_c10எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_m10எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_c10எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_m10எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_c10எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_m10எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Jan 05, 2016 9:53 pm

Good Governance: Who Is Responsible? என்கிற Upali Cooray எழுதிய கட்டுரை ஒன்று கொழும்பு ரெலிலிகிராப் இணைய இதழில் மார்ச் 11, 2015 அன்று வெளியாகியிருந்தது.  அதில் கிமு 205 முதல் கிமு 161 வரை அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்ட எலார (எல்லாளன் என்று தமிழில் நாம் அழைக்கும் மன்னன் மகாவம்சத்தில் எலார என்றே குறிப்பிடப்படுகின்றான்) என்ற சோழ மன்னன் தன் அரண்மனையில் அவனிடம் நீதி வேண்டிவருவோர் ஒலிக்கவிடவேண்டிய மணி ஒன்றினை பேணியதாகவும், மன்னனின் மகன் சென்ற தேரால் ஏற்றப்பட்டு கன்று ஒன்று கொல்லப்பட்டதாயும், நீதிவேண்டி தாய்ப்பசு மணியை ஒலிக்க, நிகழ்ந்ததை அறிந்த மன்னன் தன் மகனையும் அவ்விதமே தேரால் ஏற்றிக் கொல்லுமாறு தீர்ப்பளித்ததாயும் குறிப்பிடப்படுகின்றது.

இக்கதையை நாம் மனுநீதிகண்ட சோழனிற்கு நிகழ்ந்ததாக திருத்தொண்டர் புராணம் / பெரிய புராணதில் படித்திருக்கின்றோம்.  அதில் திருநகரச் சிறப்பு என்கிற பகுதியில் வருகின்ற 103 – 135 வரையான பாடல்களின் இச்சம்பவம் குறிப்பிடப்படுகின்றது.  கொழும்பு ரெலிகிராப் செய்தியை படித்தவுடன் அது மகாவம்சத்தில் இச்சம்பவம் குறிப்பிடப்படுகின்றதா என்கிற சந்தேகம் உருவாகி மகாவம்சத்தைப் புரட்டினேன்.  மகாவம்சத்தில் இருபத்தியோராம் அத்தியாயத்தில் (ஐந்து அரசர்கள்) இச்சம்பவம் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது,

“சோழ நாட்டிலிருந்து ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக இங்கு வந்த, உயர் குடியில் பிறந்த, தமிழன் ஏலாரா, அசேலனைத் தோற்கடித்து நாட்டைப் பிடித்து நாற்பத்துநாகு வருடம் ஆண்டான்.

(அவன்) எதிரிகள், நண்பர்கள் என்றா பேதாபேதம் இன்றி, நீதியின்முன் எல்லோரையும் சமமாக நடத்தி வந்தான்,

அவன் சயன அறையில், தலைக்கு மேலாக ஒரு மணி நீண்௶அ கயிற்றுடன் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது,  அவனிடம் நீதி கோரிவருபவர்கள் அந்த மணியை அடிக்கலாம்.

அரசனுக்கு ஒரு மகனும், இரு மகளும் மட்டுமே இருந்தனர்.  ஒரு சமயம் ராஜகுமாரன் ரதத்தில் தீசவாபிக்குச் சென்று கொண்டிருந்தான்.

அப்போது தாய்ப்பசுவுடன் வீதியில் படுத்திருந்த கன்றின் கழுத்தில் தேர்ச்சக்கரத்தை ஏற்றி அறியாமல் அதனைக் கொன்றுவிட்டான்.

துக்கம் தாளாது பசு அரண்மனைக்கு வந்து மணியை அடித்தது.  தன் மகனுடைய கழுத்தின் மீது தேரை ஓட்டி, அரசன் தலையை துண்டிக்கச்செய்தான். (பிரிவு 13 – 18)”

தொடர்ந்து மேலதிக வாசிப்புக்காகவென்று படித்த அ. முத்துத்தம்பிப்பிள்ளை எழுதிய யாழ்ப்பாண சரித்திரத்திலும் இச்சம்பவம் எல்லாளனுடன் (அ. முத்துத்தம்பி எல்லாளனை ஏலேலன் என்றே குறிப்பிடுகின்றார்) தொடர்புபடுத்திக் குறிப்புடப்படுகின்றது.  அ. முத்துத்தம்பிப்பிள்ளை இச்சம்பவத்தினை “ஏலேலனைச் சிங்கள சரித்திரக்காரர் நீதியிலே மநுச்சக்கரவர்த்தி எனப் பாராட்டுவர்” என்கிற அறிமுகத்துடன் இச்சம்பவத்தைக் குறிப்பிடுவதால் அவருக்கான மூலமாக மகாவம்சம் அமைந்திருக்கவும் வாய்ப்புண்டு.

பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் எழுதப்பட்டது என்பதால் அது எழுதப்பட்ட காலம் அவனது ஆட்சிக்காலமான கிபி 1133 – கிபி 1150 க்கு உட்பட்டதாகவே இருக்கவேண்டும்.  ஆனால் மகாவம்சம் எழுதப்பட்ட காலம் கிபி 6ம் நூற்றாண்டு.  தவிர, மனுநீதிச் சோழன் கதை நடந்ததற்கான வரலாற்று ஆதாரங்களும் இருப்பதாகத் தெரியவில்லை.  சிலப்பதிகாரத்தில் வழக்குரை காதையில் கண்ணகி பாண்டிய மன்னனிடம் நீதி வேண்டிப் பாடுகின்ற

“தேரா மன்னா செப்புவது உடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும்புயர்ப் புகார்என் படியே அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்
சூழ்கழல் மன்ன நின்னகர்ப் புகுந்தீங்கு
என்கால் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி”

என்ற பாடலில் இச்சம்பவம் குறிப்பிடப்படுகின்றதாயினும், அதில் மனுநீதிச் சோழன் என்கிற பெயரோ அல்லது இச்சம்பவத்தினுடன் தொடர்புடையதான சோழ மன்னனின் பெயரோ இடம்பெறுவதில்லை.  எனவே பக்தி இலக்கிய காலத்தில் எழுதப்பட்ட பெரியபுராணத்தில் பார்ப்பனச் செல்வாக்கின்காரணமாக மனு தர்மத்தை மக்களிடம் பரப்பும் நோக்குடன் இந்த “மனுநீதிச் சோழன் கதை” உருவாக்கப்பட்டிருக்கலாம்.

தவிர பல்லவர் காலத்தில் உருவான அரசனை இறைவனுக்கு இணையானவனாகக் கருதுகின்ற மரபு, சோழர் காலத்திலே இன்னமும் தீவிரமானது.  எனவே அரசன் என்பவன் வழுவிலா ஆட்சி உடையவனாக இருக்கவேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக, அவ்விதம் ஒருவன் வாழ்ந்தான் என்று கூறுவதான மனுநீதிச் சோழன் கதை திருத்தொண்டர் புராணத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கவும் கூடும்.  தவிர, இக்கதையுடன் தொடர்புள்ளதான திருவாரூர் கோயிலில் உள்ள கல்வெட்டும் விக்கிரமசோழன் காலத்திலேயே அமைக்கப்பட்டது என்பதால் அக்கல்வெட்டும் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவே இருக்கவேண்டும்.

ஆயினும் 6ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாவம்சத்தில் இந்தக் கதை எவ்விதம் இடம்பெற்றது என்பது நிச்சயம் ஆராய்ச்சிக்குரியதே.  மகாவம்சத்தில் காலத்துக்குக் காலம் இடம்பெற்ற இடைச்செருகல்கள் பற்றிச் சொல்லப்படுவது உண்டு.  ஆனால் அவ்வாறான இடைச்செருகல்கள் பௌத்தத்தின் செல்வாக்கை உறுதி செய்யும் நோக்குடையனவாகவோ அல்லது சிங்கள மன்னர்களின் செல்வாக்கை உறுதிசெய்யும் விதமானதாகவோ அமைந்திருக்கவே அதிகம் வாய்ப்புண்டு.  அவ்வாறு இல்லாது தமிழ் மன்னன் ஒருவனின் புகழ் பாடுவதான இடைச்செருகலுக்கான சந்தர்ப்பம் தர்க்கரீதியாக வலுவற்றது.  எனவே, தற்போதைய தரவுகளின்படி, பசுவொன்றின் முறைப்பாட்டைக் கேட்டு, அதற்கு நியாயம் வழங்க தன் மகனை தேர்ச்சில்லில் இட்டுக் கொன்ற மன்னன் பற்றிய ஆகப்பழைய பதிவு மகாவம்சத்திலேயே இடம்பெற்றிருக்கின்றது.  அந்த மன்னன் எல்லாளன் என்றே குறிப்பிடப்படுகின்றது.  ஆயினும், இச்சம்பவம் பற்றிய வேறு வரலாற்று ஆதாரங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.  ஆயினும், மனுநீதிச் சோழன் என்று சொல்லப்படுபவன் எல்லாளன் ஆகக் கூட இருக்கலாமே என்ற எண்ணமும் தோன்றுகின்றது!

நன்றி அருண்மொழிவர்மன்
மூலம் தாய்வீடு நாளிதழ்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 06, 2016 11:01 am

இப்பல்லாம் வரலாறு என்பதே , இது போல திரித்து கூறப்பட்டதாக ஆகிகொண்டிருக்கிறது.
எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு Maxresdefault

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jan 06, 2016 2:37 pm

எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு GAeV7WDtSzO50Xl9U1q4+330px-MadrasHighCourtManuNeedhiCholanStatue
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள மனு நீதி சோழன் சிலை

எல்லாளன் கி.மு 205 இல் இருந்து கி.மு 161 வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னன். இந்தத் தகவலைச் இலங்கை வரலாற்று ஆவணமான மகாவம்சம் பதிவுசெய்துள்ளது. இவர் ஆட்சிக்காலம் நீதியானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்ததாக மகாவம்சம் குறிப்பிடுகின்றது. மகாவம்சத்தின்படி எல்லாளன் தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்த சோழ நாட்டைச் சேர்ந்தவர். இவர் "பெருமை மிக்க உஜு இனக்குழுவைச்" சேர்ந்தவர் என்று மகாவம்சம் கூறுகிறது.

கி.மு 3 ஆம் நூற்றாண்டிற்கும் (கி.மு 247) கி.மு 1 ஆம் நூற்றாண்டிற்கும் (கி.மு 29) இடைப்பட்ட 220 ஆண்டுகால அனுராதபுர அரசின் வரலாற்றில் ஆட்சி புரிந்த 19 மன்னர்களுள் 8 தமிழ் மன்னர்கள் 81 வருடங்களுக்கு மேல் ஆட்சி புரிந்துள்ளனர்.  இதில் 44 வருடங்கள் எல்லாளனுக்கும் 22 வருடங்கள் அவனது தந்தை ஈழசேனனுக்குமுரியவை. ஆயினும், இக்கால வரலாற்றைப் பல அத்தியாயங்களில் கூறும் மகாவம்சம் தமிழ் மன்னர்களின் ஆட்சியைச் சில செய்யுட்களில் மட்டுமே கூறி முடிக்கின்றது. எல்லாளன் என்ற சோழ மன்னனை வெற்றி கொண்டதன் மூலம் இலங்கையின் விடுதலை வீரனாக வருணிக்கப்பட்ட துட்டகாமினியின் 24 ஆண்டுகால ஆட்சியை 843 செய்யுட்களில் கூறும் மகாவம்சம், 44 ஆண்டுகள் நீதி தவறாது ஆட்சி நடத்திய எல்லாளனை 21 செய்யுட்களில் மட்டுமே கூறுகிறது. இது ஒன்றே பாளி இலக்கியங்களில் தமிழ் மன்னர்களின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளமைக்கு சிறந்த சான்று.

கிபி 5 ஆம் நூற்றாண்டுக்கும் 6 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் எழுதப்பட்டதாகக் கருதப்படும், இலங்கையின் வரலாறு கூறும் பாளி நூலான மகாவம்சம் கிமு 2 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டில் இருந்து வந்து 44 ஆண்டுகள் இலங்கையை ஆண்ட தமிழ் மன்னனான எல்லாளன் மீது இந்த மனு நீதி சோழன் கதையை ஏற்றிச் சொல்கிறது.
நன்றி : விக்கிபீடியா

எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 06, 2016 4:41 pm

நல்ல தகவல் விக்கி /விமந்தனி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Jan 06, 2016 4:49 pm

எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு 3838410834 எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு 3838410834 எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா? வரலாற்று ஆய்வு 103459460

மெய்பொருள் காண்பது அறிவு
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jan 07, 2016 6:20 am

இப்படியே போனால் " புள்ளுறு புன்கண் தீர்த்தோன் " சிபி மன்னன் அல்ல ; அவனைப் பற்றி சிலப்பதிகாரத்தில் எந்தக் குறிப்பும் இல்லை என்று எழுதுவதற்கு ஒரு கூட்டம் புறப்பட்டுவிடும் . "அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன் " மனுநீதிச் சோழன் அல்ல என்று மறுத்து எழுதுவதற்கு முன்னால் ஆயிரம் முறை யோசிக்கவேண்டும் . மாபெரும் பண்டிதர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்து அது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக