ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அணைக்கட்டு சுவரின் அறிவியல்

+4
யினியவன்
கார்த்திக் செயராம்
விமந்தனி
T.N.Balasubramanian
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அணைக்கட்டு சுவரின் அறிவியல் Empty அணைக்கட்டு சுவரின் அறிவியல்

Post by T.N.Balasubramanian Fri Jan 01, 2016 7:31 pm

அணைக்கட்டு சுவரின் அறிவியல்

அணைக்கட்டு சுவரின் அறிவியல் 8Sdbzb2S9q5kB5m6gmZA+dam_2676069f

உங்கள் அம்மா, அப்பாவுடன் சுற்றுலா போகும்போது அணைக்கட்டுகளைப் பார்த்திருக்கிறீர்களா? அணைக்கட்டு சுவரின் அடிப்பகுதி அகலமாகவும் மேற்பகுதி குறுகியதாகவும் இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? இதற்குக் காரணம் என்ன? வாங்க, ஒரு சின்ன சோதனை செய்து தெரிந்துகொள்வோம்.

தேவையான பொருட்கள்:

உயரமான பிளாஸ்டிக் பாட்டில் அல்லது ஆய்வக அளவு ஜாடி, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, தடித்த ஊசி, தண்ணீர்.

சோதனை:
அணைக்கட்டு சுவரின் அறிவியல் YACTwgJfQByZVDUoSic9+e1_2676068a

# ஓர் உயரமான பிளாஸ்டிக் ‘ஆய்வக அளவு ஜாடி’யை எடுத்துக்கொள்ளுங்கள்.

# மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக்கொள்ளுங்கள்.

# ஊசியை மெழுகுவர்த்திச் சுடரில் சூடுபடுத்திச் சமமாக இடைவெளி விட்டு நேர்க்கோட்டில் துளையிடுங்கள்.

# அளவு ஜாடியைக் கைப்பிடிச் சுவர் மீது நேராக வைத்துக்கொள்ளுங்கள்.

அணைக்கட்டு சுவரின் அறிவியல் Hc9vsQBBQiyl46KRnSdA+e2_2676067a

# இப்போது அளவு ஜாடி முழுவதும் தண்ணீரை ஊற்றுங்கள். இப்போது என்ன நடக்கிறது எனப் பாருங்கள்?

துளைகளிலிருந்து தண்ணீர் பீய்ச்சி அடிப்பதைப் பார்க்கலாம். ஜாடியின் அடியில் உள்ள துளையிலிருந்து வெளிவரும் தண்ணீர் அதிக தொலைவிலும், ஜாடியின் மேற்பகுதியில் உள்ள துளையிலிருந்து வரும் தண்ணீர் குறைந்த தொலைவிலும் பீய்ச்சி அடிப்பதைப் பார்க்கலாம். இதற்குக் காரணம் என்ன?

அணைக்கட்டு சுவரின் அறிவியல் PeHgPMSQST2xbD8sK15A+e3_2676066a

நடந்தது என்ன?

ஒரு பொருள் மீது செயல்படும் விசைக்கும் பரப்புக்கும் இடையே உள்ள விகிதம் அழுத்தம் எனப்படும். ஓரலகு பரப்பில் செயல்படும் விசை அழுத்தம் ஆகும். திட, திரவ வாயுப் பொருட்கள் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி வைத்தால், பாத்திரத்தின் வடிவத்தை அது பெறுகிறது. பாத்திரத்தின் அடிப்பாகத்தில் ஓரலகு பரப்பில் செயல்படும் நீரின் எடையே அடிப்பகுதியில் உள்ள அழுத்தம் ஆகும்.

திரவத்தில் ஒரு புள்ளியில் செயல்படும் அழுத்தம், புள்ளியிலிருந்து திரவமட்டத்தின் உயரத்தையும் திரவத்தின் அடர்த்தியையும் பொறுத்தது. திரவத்தில் ஏதேனும் ஒரு கிடைமட்டப் பரப்பில் உள்ள எல்லாப் புள்ளிகளிலும் அழுத்தம் சமமாக இருக்கும்.

திடப்பொருள்கள் எப்போதும் கீழ்நோக்கியே அழுத்தத்தைக் கொடுக்கின்றன. ஆனால், திரவங்களும் வாயுக்களும் எல்லாத் திசைகளிலும் அழுத்தத்தைக் கொடுக்கின்றன.

செங்குத்துக் கோட்டில் ஒரே அளவில் துளைகள் இடைப்பட்ட அளவு ஜாடியில் நீரை ஊற்றும்போது, தண்ணீர் வெவ்வேறு தொலைவுகளில் பாய்கின்றன. அளவு ஜாடியில் உள்ள தண்ணீரின் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க அழுத்தமும் அதிகரிக்கிறது. மேலே உள்ள துளையிலிருந்து வரும் தண்ணீர், மிகக் குறைந்த தொலைவுக்குப் பாய்கிறது. ஜாடியின் அடியில் உள்ள துளையிலிருந்து தண்ணீர் அதிகத் தொலைவுக்கு வெளியே பாய்கிறது. அதற்கு மேல் உள்ள துளையில் உயரத்துக்கு ஏற்றாற்போல் தண்ணீர் வெளியே பாய்கிறது. ஜாடியில் உள்ள துளைகளிலிருந்து நீர் வெளியே பீய்ச்சி அடிக்கப்படும் தொலைவு, நீரின் அழுத்தத்தைக் குறிக்கிறது.

திரவ மட்டத்திலிருந்து கீழே செல்லச் செல்ல துளையிலிருந்து வெளியேறும் நீரின் தொலைவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுவே சோதனையின் முடிவு. திரவத்தின் ஆழம் அதிகரிக்கும்போது, அழுத்தமும் அதிகரிக்கிறது.

பயன்பாடு:

ஏரிகள், குளங்கள், அணைக்கட்டுகள் ஆகியவற்றின் சுற்றுச்சுவரை அமைக்கும்போது, நீரின் அழுத்தம் கவனத்தில் கொள்ளப்படும். சில அணைக்கட்டுகளில் நீர் திறந்துவிடப் பயன்படும் மதகுகள் வெவ்வேறு உயரங்களில் அமைக்கப் பட்டிருக்கும்.

இப்போது அளவு ஜாடியை அணையாகவும், அளவு ஜாடியில் உள்ள தண்ணீரை அணையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் தண்ணீராகவும், ஜாடியில் உள்ள துளைகளை அணைக்கட்டின் மதகுகளாகவும் கற்பனை செய்துகொள்ளுங்கள். அளவு ஜாடியிலிருந்து வெளியேறும் தண்ணீர், வெவ்வேறு தொலைவுகளுக்குப் பீய்ச்சி அடித்ததல்லவா?

அதைப் போலவே அணைக்கட்டில் வெவ்வேறு உயரங்களில் உள்ள மதகுகளிலிருந்து வெளியேறும் தண்ணீரும் வெவ்வேறு தொலைவுகளுக்கு வேகமாகப் பாயும். அணைக்கட்டின் அடிப்பாகத்தில் உள்ள மதகிலிருந்து அதிக வேகத்துடனும் அதிக தொலைவுக்கும் தண்ணீர் பாயும். அணைக்கட்டின் மேற்பகுதியில் அமைந்த மதகிலிருந்து வெளியேறும் தண்ணீர் குறைந்த தொலைவுக்குப் பாயும். அணைக்கட்டு நீர்த்தேக்கத்தின் அடிப்பகுதியில் தண்ணீரின் அழுத்தம் அதிகம். மேற்பகுதியில் நீரின் அழுத்தம் குறைவு.

அணைக்கட்டுகளின் அடிப்பகுதியில் நீரின் அதிக அழுத்தத்தை தாங்குவதற்காகவே அணைக்கட்டுச் சுவரின் அடிப்பகுதி அகலமாக வடிவமைக்கப்படுகிறது. மேற்பகுதியில் நீரின் அழுத்தம் குறைவாக இருப்பதால் அணைக்கட்டுக்களின் மேற்பகுதி கீழ்ப்பகுதியைவிட அகலம் குறைவாகக் கட்டப்படுகின்றன.

கட்டுரையாளர்: இயற்பியல் பேராசிரியர், அறிவியல் எழுத்தாளர்

நன்றி

தி ஹிந்து (தமிழ்)


ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அணைக்கட்டு சுவரின் அறிவியல் Empty Re: அணைக்கட்டு சுவரின் அறிவியல்

Post by விமந்தனி Fri Jan 01, 2016 7:44 pm

நல்ல பதிவு. மறுபடியும் பள்ளியில் அறிவியல் பாடம் படித்த அனுபவம்.  என் பெண்ணிற்கும் இந்த பதிவை படித்து பார்க்க சொல்லி விளக்கினேன் ஐயா. நன்றி!


அணைக்கட்டு சுவரின் அறிவியல் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅணைக்கட்டு சுவரின் அறிவியல் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அணைக்கட்டு சுவரின் அறிவியல் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அணைக்கட்டு சுவரின் அறிவியல் Empty Re: அணைக்கட்டு சுவரின் அறிவியல்

Post by கார்த்திக் செயராம் Fri Jan 01, 2016 7:59 pm

நல்ல பதிவு பயனுள்ள தகவல் ஒரு கடினமான பௌதீக கருத்தை எளிமையாக விளக்கிய விதம் அருமை..
நன்றி ஐயா .. அணைக்கட்டு சுவரின் அறிவியல் 3838410834 அணைக்கட்டு சுவரின் அறிவியல் 103459460 அணைக்கட்டு சுவரின் அறிவியல் 1571444738 சூப்பருங்க மகிழ்ச்சி


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

அணைக்கட்டு சுவரின் அறிவியல் Empty Re: அணைக்கட்டு சுவரின் அறிவியல்

Post by யினியவன் Fri Jan 01, 2016 8:40 pm

நல்ல எளிய விளக்கம் - அருமை

இந்த டாஸ்மாக் தண்ணீர் எப்படி பாயும்?

ஒவ்வொன்னா உள்ளார போக போக அழுத்தம் கூடி
ஒரே தூக்கலா தூக்கி தலைக்கேறி போதை பாஞ்சுடுது போல புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அணைக்கட்டு சுவரின் அறிவியல் Empty Re: அணைக்கட்டு சுவரின் அறிவியல்

Post by T.N.Balasubramanian Fri Jan 01, 2016 9:45 pm

யினியவன் wrote:நல்ல எளிய விளக்கம் - அருமை

இந்த டாஸ்மாக் தண்ணீர் எப்படி பாயும்?

ஒவ்வொன்னா உள்ளார போக போக அழுத்தம் கூடி
ஒரே தூக்கலா தூக்கி தலைக்கேறி போதை பாஞ்சுடுது போல புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1184570

அருமை , செய்முறை படம் போட்டு விளக்கவும் !
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அணைக்கட்டு சுவரின் அறிவியல் Empty Re: அணைக்கட்டு சுவரின் அறிவியல்

Post by Dr.S.Soundarapandian Sat Jan 02, 2016 9:23 am

நான் மராட்டிய மாநிலத்தில் இரண்டு ஆண்டுகள் விஞ்ஞான ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளேன் ! அப்போது நான் மாணவர்களுக்குச் செய்து காட்டிய சோதனைகளை நினைப்பூட்டிவிட்டீர்கள் !
அணைக்கட்டு சுவரின் அறிவியல் 1571444738 அணைக்கட்டு சுவரின் அறிவியல் 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

அணைக்கட்டு சுவரின் அறிவியல் Empty Re: அணைக்கட்டு சுவரின் அறிவியல்

Post by யினியவன் Sat Jan 02, 2016 12:26 pm

T.N.Balasubramanian wrote:
அருமை , செய்முறை படம் போட்டு விளக்கவும் !
ரமணியன்

ராஜா, பாலாஜியை செல்பி எடுத்து போட சொல்றேன் அய்யா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அணைக்கட்டு சுவரின் அறிவியல் Empty Re: அணைக்கட்டு சுவரின் அறிவியல்

Post by சசி Sat Jan 02, 2016 1:14 pm

ஐயா அருமையான பதிவு 
மீண்டும் பள்ளிக்கு செல்வது போன்ற உணர்வு. நன்றி ஐயா


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

அணைக்கட்டு சுவரின் அறிவியல் Empty Re: அணைக்கட்டு சுவரின் அறிவியல்

Post by T.N.Balasubramanian Sat Jan 02, 2016 1:34 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
அருமை , செய்முறை படம் போட்டு விளக்கவும் !
ரமணியன்

ராஜா, பாலாஜியை செல்பி எடுத்து போட சொல்றேன் அய்யா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1184653

ஹாஹ்ஹா கூடவே இருந்து குழியை பறிப்பது என்பது இதுதானோ !
பாவம் பாலாஜி ராஜா !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அணைக்கட்டு சுவரின் அறிவியல் Empty Re: அணைக்கட்டு சுவரின் அறிவியல்

Post by T.N.Balasubramanian Sat Jan 02, 2016 1:42 pm

சசி wrote:ஐயா அருமையான பதிவு 
மீண்டும் பள்ளிக்கு செல்வது போன்ற உணர்வு. நன்றி ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1184656

ஆம் பள்ளிக்கு சென்ற நினைவு வந்தாலும் ,
இப்போது , அப்போது புரிந்ததை விட நன்றாக புரிகிறது அல்லவா ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அணைக்கட்டு சுவரின் அறிவியல் Empty Re: அணைக்கட்டு சுவரின் அறிவியல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்
» ஆயக்குடி TNPSC CENTRE இதுவரை வழங்கிய சமூக அறிவியல், அறிவியல், கணிதம்
» இணையில்லா இந்திய அறிவியல் - அசரவைக்கும் அறிவியல் விளக்கம் மின்னூல் வடிவில் .
» TNPSC தேவையான "பொது தமிழ்","அறிவியல்","சமூக அறிவியல்" வினா விடை அனைத்தும் ஒரே இடத்தில்.
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum