ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மு.வ. வாசகம் ! நூல்ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Go down

மு.வ. வாசகம் !  நூல்ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty மு.வ. வாசகம் ! நூல்ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Fri Jan 01, 2016 4:06 pm

மு.வ. வாசகம் !

நூல்ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் !


eramohanmku@gmail.com


நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


சாகித்திய அகாதெமி, குணா கட்டிடம், 443, அண்ணா சாலை,
தேனாம்பேட்டை, சென்னை – 600 018. விலை : ரூ. 190

*****

இலக்கிய இமயம் மு. வரதராசனார் பற்றி அவரது செல்லப்பிள்ளை என்று அழைக்கப்படும் இலக்கியத்தேனீ இரா. மோகன் அவர்கள் வடித்துள்ள நூல் அல்ல சிலை. ஒரு சிற்பி சிலை செதுக்கும் நுட்பத்துடன் வடித்து உள்ளார். தேவையற்ற ஒரு சொல் கூட இல்லை என்று சொல்லுமளவிற்க்கு மிக நேர்த்தியாக எழுதி உள்ளார்.


இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்(து)
அதனை அவன்கண் விடல். ( 517 )


திருக்குறள் வழி நடந்து வாழ்வில் வெற்றி கண்ட மாமனிதர் பற்றிய நூலை மேலே உள்ள திருக்குறளுக்கு ஏற்ப சாகித்ய அகாதெமி நிறுவனம் மு.வ. அவர்களைப் பற்றி எழுதிட சரியானவர் யார்? என்று தேர்ந்தெடுத்து தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களிடம் ஒப்படைத்தமைக்கு பாராட்டுக்கள். செவ்வன செய்துள்ளார். செம்மையாக தொகுத்துள்ளார். தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களுக்கு மு.வ. அவர்கள் அருள்வாக்குப் போல இரண்டு வரிகள் எழுதி இருந்தார்கள்.


தமிழ் உன்னை வளர்த்தது
நீ தமிழை வளர்க்க வேண்டும்!


நூலாசிரியர் தமிழை வளர்த்து வருவது மட்டுமன்றி தனது ஆசான், ஞானகுரு, வழிகாட்டி இப்படி எல்லாமுமான மு.வ. அவர்களுக்கு மு.வ. வாசகம் என்ற நூல் எழுதி மகுடம் சூட்டி உள்ளார்.ஆசிரியர் மாணவர் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துள்ளார் .இன்றைய இளைய தலைமுறை கவனத்தில் கொள்ள வேண்டியது .


மு.வ. அவர்களை நான் நேரில் பார்த்தது இல்லை. என் போன்று மு.வ. அவர்களைப் பார்த்திராத பலருக்கு அவரைப்பற்றி எழுதி அவரது படைப்பைப் பற்றி எழுதி, அவரை நம் கண்முன் காட்சிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார். நூல்ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் .அட்டைப்பட வடிவமைக்கு, உள்அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளது.சிறப்பாகப் பதிப்பித்த சாகித்ய அகாதெமிக்கு பாராட்டுக்கள்.


நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் எழுதிய முன்னுரையில் இருந்து சில துளிகள்.


"இருபதாம் நூற்றாண்டு கண்ட தமிழ்ச் சான்றோர்களுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க ஒருவர் மு. வரதராசனார் (1912-1974) ஆவார். தமிழ்கூறு நல்லுலகம் மு.வ. என்ற இரண்டு எழுத்துக்களால் அவரை மதிப்போடும், மரியாதையோடும் அழைத்து மகிழ்ந்த்து. மு.வ. என்ற இரண்டு எழுத்துக்களீன் விரிவு ‘முன்னேற்ற வரலாறு என்பதாகும்."


இலக்கிய இமயம் மு.வ. அவர்கள் இலக்கிய வடிவங்களான கடிதம், கதை, நாவல், கட்டுரை என்று எல்லாவற்றிலும் தனி முத்திரை பதித்த மிக்ச்சிறந்த ஆளுமையாளர், ஆற்றலாளர். அவரின் படைப்புகளில் உள்ள தேன்துளிகளை சேகரித்து வழங்கி உள்ளார் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள்.


மு.வ. அவர்கள் அன்னைக்கு எழுதிய கடிதத்தில் சிறு துளிகள் :

“நீ ஒரு தமிழன் ; பழங்காலப் பிற்போக்குத் தமிழனாக இருந்து வாயால் மட்டும் விளங்காதே ; உணர்வால் மட்டும் உயராதே ; செயலாலே சீர்ப்படு என்று எனக்கு எழுதிய கடிதத்தை மறந்து விடவில்லை”.


உலகில் உள்ள ஒவ்வொரு தமிழரும் செயலாலே சீர்பட்டால் தமிழ்மொழி சிறந்து விளங்கும் என்பதை நன்கு உணர்த்துகின்றார் மு.வ.. அதனை இந்நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள், மு.வ. அவர்கள் எழுதிய எல்லா நூலும் படித்திராத புதியவர்களுக்கு இந்நூல் ஒன்று படித்தால் போதும். மு.வ. அவர்களைப் பற்றிய புரிதல் உண்டாகும்.


திருமணமான தங்கைக்கு எழுதிய மடலில் உள்ள வைர வரிகள் இதோ:


“நல்லவர் நட்பு வளர்பிறை போல் வளரும் என்கிறார் திருவள்ளுவர். உங்கள் அன்பான இல்வாழ்க்கை வளர்பிறை போல் வளர் வேண்டும் என்று விரும்புகின்றேன். அது என் வாழ்த்துதலில் இல்லை ; நீங்கள் வாழும் முறையில் இருக்கிறது”.


இலக்கிய இமயம் மு.வ. அவர்கள், திருமணமான தங்கைக்கு எழுதும் மடலில், நான் வாழ்த்துவதால் மட்டுமே நீ சிறப்பாக வாழ்ந்து விட முடியாது, நீ வாழும் முறையில் தான் உள்ளது, எனவே சிறப்பாக நீ வாழ வேண்டும் என்கிறார். வாழ்த்துவதால் மட்டும் ஒருவர் வாழ்ந்து விட முடியாது என்பதையும், செம்மையாக வாழ வேண்டும் என்பதையும் நன்கு உணர்த்தி உள்ளார்.

இப்படி மடல்கள் தம்பிக்க்கு, நண்பர்க்க்கு என்று எழுதியவை இந்நூலில் இடம் பெற்றுள்ளன. தனி நூலாக வந்தவற்றை சிறு கட்டுரையாக, சுருக்கி சுண்டக் காய்ச்சிய பாலாக வழங்கி இலக்கிய விருந்து வைத்துள்ளார் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள்.


திருக்குறளுக்கு எத்தனையோ பேர் உரை எழுதி இருக்கிறார்கள், எழுதுகிறார்கள். ஆனால் மு.வ. அவர்கள் எழுதிய திருக்குறள் உரைக்கு ஈடான உரை இதுவரை வந்ததில்லை. இனிவரப் போவதும் இல்லை என்று அறுதியிட்டுக் கூற முடியும். அந்த உரை படித்த பண்டிதர் தொடங்கி பாமரர் வரை எல்லோருக்கும் எளிதில் விளங்கும் எளிய உரை. விற்பனையிலும் சாதனை படைத்த உரை.


மு.வ. அவர்களுக்கு மிகவும் பிடித்த இருவர் யார்? என்றால் திருவள்ளுவர், காந்தியடிகள் என்பார். மூன்றாவதாக பிடித்தவர் யார் என்றால் இரா. மோகன் என்பார். இது வெறும் புகழ்ச்சி அல்ல, உண்மை. மு .வ .அவர்களின் செல்லைப் பிள்ளை என்று இலக்கிய உலகால் அழைக்கப் பெற்றவர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் .


அவர் வழியிலேயே நூலாசிரியரும் தடம் பதித்து வருகிறார். பேச்சு காற்றோடு கலந்து விடும், எழுத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்ற மு .வ .அவர்களின்அறிவுரையை அறவுரையை, ஏற்று, ஓய்வின்றி தொடர்ந்து எழுதி வருகிறார். எழுதுக என்று சொன்ன ஆளுமையாளர் மு.வ. பற்றியும் எழுதியது கூடுதல் சிறப்பு.


மு.வ. அவர்கள், இரா. மோகன் அவர்களை இலக்கியத்தில் உருவாக்கியது போலவே, தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள்,என் போன்ற பலரை இலக்கியத்தில் உருவாக்கி வருகிறார்கள்.இலக்கிய இமயம் மு .வ . அவர்களின் இலக்கியப் பரம்பரை தொடர்கிறது எனலாம் .


இலக்கிய இமயம் மு.வ. அவர்கள் காந்தியடிகள் பற்றி தனி நூல் எழுதி உள்ளார்கள். அவற்றிலிருந்து கனிச்சாறாக பிழிந்து தந்துள்ளார், இலக்கியத் தேனீ இரா.மோகன் அவர்கள்.


இன்றைக்கு அரசியல்வாதிகள் உள்பட பலரும் காந்தியடிகள் பெயரை உதட்டளவில் உச்சரிக்கின்றனர். ஆனால் உள்ளத்தளவில் அவர் கொள்கைகளை ஏற்று உள்ளனரா? என்பது கேள்விக்குறி தான். அதனை படம்பிடித்துக் காட்டும் விதமாக எழுதி உள்ளார், பாருங்கள்.


“அண்ணலைப் புகழ்வோர் பற்பலர் ; போற்றுவோர் மிகப்பலர் : வழிபடுவோர் பலர் ; ஆயினும் அவருடைய வாழ்க்கை உணர்த்தும் உண்மைகளை நாடுவோர் சிலர் ; அவற்றை உணர்த்தும் உண்மைகளை நாடுவோர் சிலர் ; அவற்றை உள்ளவாறு உணர்வோர் மிகச் சிலர் ; உணர்ந்து பயன்படுத்துவோர் ஒரு சிலரே ! படைப்பின் சட்டங்களை ஒட்டி இயங்கிய தூய வாழ்க்கை ! ஆகையால் அது எல்லா மக்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் நல்வாழ்க்கையாகும்”.


இலக்கிய இமயம் மு .வ . அவர்கள் அன்று எழுதியது இன்றும் பொருந்துவதாக உள்ளது பாருங்கள் .


மு.வ. அவர்கள் குறிப்பிட்ட மிகச் சிலர், மிகப் பலராக வளர்ந்தால் நாடு நலம் பெறும், உலகம் அமைதி அடையும். அமெரிக்காவின் அதிபர் ஒபாமா வரை காந்தியடிகளின் சிறப்பை அறிந்து வைத்துள்ளார், மதிக்கிறார், போற்றுகிறார். நம்மை ஆண்ட இங்கிலாந்திலேயே சமீபத்தில் காந்தியடிகளின் சிலை திறக்கப்பட்டது..இந்த நிகழ்வு காந்திய வெற்றிக்கு எடுத்துக்காட்டு. ஆனால் நம் நாட்டில் தான் இன்னும் காந்தியடிகள் பற்றி, அவரது உன்னத வாழ்வு காந்தியம் பற்றி, இன்னும் உணரவில்லை என்பது கசப்பான உண்மை. நூல் படிக்கும் போது பல்வேறு நினைவுகளை மலர்விக்கின்றன.


நோபல் நாயகர் கவியரசர் தாகூர் பற்றி, மு.வ. அவர்கள் எழுதிய நூலில் உள்ள சாரத்தை வழங்கி உள்ளார். தாகூர் அவர்களுக்கு நோபல் பரிசு வாங்கித் தந்த கீதாஞ்சலி பாடல்களின் வைர வரிகள் இந்த நூலில் தமிழில் உள்ளன.



இலக்கிய இமயம் மு.வ. அவர்கள் வடித்த இலக்கியங்கள் அனைத்திலும் தேர்ந்தெடுத்த முத்துக்களை எடுத்து புகழ்மாலை தொடுத்து தனது ஆசானுக்கு சூட்டி மகிழ்ந்துள்ளார் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் .பாராட்டுக்கள் . .

.
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics
» கனவெல்லாம் கலாம் ! நூல்ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சிற்பியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர்கள் தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் , தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி.
» இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் 2 : கவிஞர் இரா. இரவி !
» "கவிதை அலை வரிசை " நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா மோகன். நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி .

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum