Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் !
+2
ayyasamy ram
krishnaamma
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் !
First topic message reminder :
[size=30][/size]
மார்கழியின் அடையாளங்களான வீட்டு வாசலில் வண்ண கோலம் போடுவது மறைந்து வருகிறது. கிராமங்களிலும் இதே நிலை தொடருவதால், பாரம்பரியமான கோலமிடும் முறை காணாமல் போகும் சூழல் உருவாகியுள்ளது. மார்கழி என்றாலே உடல் சிலிர்க்கும் பனிப்பொழிவும், வீட்டு வாசலில் வண்ண கோலங்களும், பெருமாள் கோயிலில் பக்தி பாடல்களும் பெரும்பாலும் அனைவருக்குமே நினைவுக்கு வரும். இப்போது அவசர யுகத்தின் மாற்றத்தால், இவற்றில் பல மறைந்து வருகிறது.
புவி வெப்பமடைந்து மார்கழி குளிரும் காணாமல் போய் விடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மார்கழி மாதம் 30 நாட்களும் பெண்கள் காலையில் எழுந்து, வாசலில் சாணம் தெளித்து, சுத்தப்படுத்தி பலவண்ண கோலங்களை போடுவதை காண முடிந்தது. காலையில் எழுந்து கோலம் போடுவதற்காக குனிந்து எழுவது உடற்பயிற்சிக்கு ஈடானது. நம் முன்னோர், இதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தான், காலையில் எழுந்து கோலம் போடுவதை முதல் பணியாக நடைமுறையில் வைத்திருந்தனர்.
அக்காலத்தில், புள்ளி வைத்து எழில் நயத்தோடு கோலம் போடுவதை காண முடிந்தது. கோலத்தின் நடுவில் பசுஞ்சாண உருண்டையில் பூசணி பூ வைப்பர். பூசணி பூவில் லட்சுமி தெய்வம் குடியிருக்கிறாள் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் உள்ளது. வாசலில் தெளிக்கப்படும் பசுஞ்சாணம் சிறந்த கிருமி நாசினியாக திகழ்கிறது.
வீட்டிற்கு ஆரோக்கியம் தரும் கோலமிடும் வழக்கம் இப்போது நம்மிடையே மெல்ல மெல்ல மறைந்து வருகிறது. நகரங்களில் பசுஞ்சாணம் கிடைக்காத ஒன்றாகி விட்டது. அதேபோல் பூசணி பூ கிராமங்களில் கூட காணப்படுவதில்லை. இதில் ஒரே ஒரு ஆறுதல், பொங்கல் தினத்தில் மட்டும் அனேகமாக எல்லா வீடுகளிலும் பெரிய கோலமிட்டு வண்ண பொடிகளை தூவி அழகுபடுத்துவதை இன்றும் காண முடிகிறது.
இதுகுறித்து திருவள்ளூரை சேர்ந்த பெண்கள் கூறுகையில், ‘சாணம் தெளித்து கோலம் போடுவதை, பலர் நாகரிகமற்ற செயலாக கருதுகின்றனர். கிருமி நாசினியான சாணத்தை வாசலில் தெளிப்பதால், வெளியிடங்களுக்கு சென்று வீட்டுக்கு வரும் போது கால்களில் சேர்ந்து வரும் கிருமிகள், சாணம் பட்டு அழிந்து விடும் என்பர்.
குளிர்காலத்தில், எறும்பு உள்ளிட்ட சிறு உயிரினங்கள் இரை தேடி செல்ல முடியாததால், அவற்றுக்கு உணவு அளிக்கும் வகையில் பச்சரிசி கோலமிடுவது வழக்கம். ஆனால், இது பல ஆண்டுகளாக மாறி விட்டது. பெயின்டால் கோலத்தை வரைந்து விடுகின்றனர் அல்லது ரெடிமேட் ஸ்டிக்கரை ஒட்டி விடுகின்றனர். உடலுழைப்பை கொடுக்க வேண்டிய வேலைகள் எல்லாம், ரெடிமேடு மயமாகிவிடுவதால் பெண்களுக்கு உடலளவில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது’ என்றனர்.
தினகரன்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் !
மேற்கோள் செய்த பதிவு: 1183993மதன் wrote:நல்ல பதிவு அம்மா, தெரியாத விடயங்களை அறிந்து கொண்டேன்.
நன்றி மதன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் !
மேற்கோள் செய்த பதிவு: 1183978krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1183966ராஜா wrote:எங்க அக்கா எதிர்வீட்டு வேலி வரைக்கும் இருக்கும் படி பெருசா கோலம் போடுவாங்க.
போர்வையை எடுத்து பிசாசு போல முக்காடு போட்டுகொண்டு அக்காவுக்கு துணையாக கோலத்துக்கு கலர் அடிப்போம்( அக்க்சுவலா கோலத்தை கெடுப்போம்) , அப்புறம் எங்களை திட்டிக்கொண்டே அவர் சரி பண்ணுவார்
அப்புறம் அடியாள் மாதிரி சைக்கிள்ல போகிறவர்கள் , நடந்து போகிறவர்கள் கோலத்தை மிதிக்க கூடாது என்று கொஞ்ச நேரம் காவல் காப்போம்... இதெல்லாம் பள்ளிகாலத்து மலரும் நினைவுகள்...
ஹா...ஹா..ஹா....ரொம்ப சரி, நான் கோலம் போடும்போது என் தம்பிகள் எனக்கு காவல் இருப்பாங்க ராஜா .........உங்கள் பின்னூட்டம் பார்த்ததும் எனக்கு அந்த நினைவுகள் வந்தது .............நான் இரவே போட்டுவிடுவேன் ( காலை schoolkku போகணும் என்று)
பக்கத்தாத்து அக்காவுடன் சண்டை போடுவார்கள் என் தம்பிகள் , கோலம் எவ்வளவு தூரம் வரலாம் என்று கல் வைத்து மார்க் செய்வார்கள்...........அது ஒரு காலம் .............ஹும்............
பி.கு. அந்த போர்வை பின்னி blanket ஆ ராஜா?
நான் கோலம் போட்ட காலம் ஞாபகம் வருகிறது ... ராத்திரி 9 மணிக்கு வாசல் தெளித்து கோலம் போடுவேன் பொங்கல் 3 நாட்களும் ... வண்ணம் சேர்பதற்கு நேரம் பிடிக்கும் என்பதால் இரவு போட்டுவிட்டு காலையில் பார்த்து ரசிப்பேன் . அப்போதெல்லாம் மொபைல் போன் கிடையாது.. காமெராவும் இல்லை ... அன்று இருந்திருந்தால் ஒரு போட்டோ பிடித்து வைத்திருக்கலாம் .
எங்கள் வகுப்பில் ஒரு பெண் இருந்தாள்... அவளுக்கு 10 பைசா கொடுத்தால், அடுத்த நாள் புதிய, பெரிய கோலம் சொல்லி கொடுப்பாள் . ஒரு 100 கோலங்கள் போட்ட ஒரு நோட் புத்தகம் வைத்திருந்தேன் .. இப்போ அது இருக்கும் இடம் தெரியல ..
அது ஒரு காலம் . . இப்போ கோலம் போடா வீட்டு வாசலில் இடமே இல்லை ...
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் !
மேற்கோள் செய்த பதிவு: 1184166shobana sahas wrote:
நான் கோலம் போட்ட காலம் ஞாபகம் வருகிறது ... ராத்திரி 9 மணிக்கு வாசல் தெளித்து கோலம் போடுவேன் பொங்கல் 3 நாட்களும் ... வண்ணம் சேர்பதற்கு நேரம் பிடிக்கும் என்பதால் இரவு போட்டுவிட்டு காலையில் பார்த்து ரசிப்பேன் . அப்போதெல்லாம் மொபைல் போன் கிடையாது.. காமெராவும் இல்லை ... அன்று இருந்திருந்தால் ஒரு போட்டோ பிடித்து வைத்திருக்கலாம் .
எங்கள் வகுப்பில் ஒரு பெண் இருந்தாள்... அவளுக்கு 10 பைசா கொடுத்தால், அடுத்த நாள் புதிய, பெரிய கோலம் சொல்லி கொடுப்பாள் . ஒரு 100 கோலங்கள் போட்ட ஒரு நோட் புத்தகம் வைத்திருந்தேன் .. இப்போ அது இருக்கும் இடம் தெரியல ..
அது ஒரு காலம் . . இப்போ கோலம் போடா வீட்டு வாசலில் இடமே இல்லை ...
நான் போட்ட கோலங்களை எல்லாம் ஒரு file இல் பத்திரமாய் வைத்திருக்கேன் ஷோபனா, அவற்றை எல்லாம் இங்கு போட்டு வைத்திருக்கேன்...............என்றாலும் 10 பைசாவுக்கு புதிய கோலமா?............கொஞ்சம் அநியாயமாய் இருக்கு......நானெல்லாம் கோலம் class சே எடுத்திருக்கேன்
.
.
ஆமாம் கேமரா, போன் இருந்திருந்தால், அழகாய் போட்டோ எடுத்து வைத்திருக்கலாம் தான்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் !
அம்மா நான் சிறுவனாக இருக்கும் போது எனது அக்காள் அதி காலையில் கோலம் போடுவாள்...அதற்காக பூசணி பூ பறித்து வருவதும் நான் தான் மார்கழி மாதம் பனியில் கால்கள் சிள்ளிட வயலின் கதிர்கள் பனியில் நனைந்து இருக்கும் அதன் ஊடே சென்று பூவை பறித்த அனுபவம் இப்போதும் என் கண் முன்பு..........
என்னுடைய பாட நோட்டு புத்தகங்கள் என் அக்காவின் கோல நோட்டாக மாறுவதும் இந்த மார்கழி மாதத்தில் தான்...
என்னுடைய பாட நோட்டு புத்தகங்கள் என் அக்காவின் கோல நோட்டாக மாறுவதும் இந்த மார்கழி மாதத்தில் தான்...
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் !
மேற்கோள் செய்த பதிவு: 1184196கார்த்திக் செயராம் wrote:அம்மா நான் சிறுவனாக இருக்கும் போது எனது அக்காள் அதி காலையில் கோலம் போடுவாள்...அதற்காக பூசணி பூ பறித்து வருவதும் நான் தான் மார்கழி மாதம் பனியில் கால்கள் சில்லிட வயலின் கதிர்கள் பனியில் நனைந்து இருக்கும் அதன் ஊடே சென்று பூவை பறித்த அனுபவம் இப்போதும் என் கண் முன்பு..........
என்னுடைய பாட நோட்டு புத்தகங்கள் என் அக்காவின் கோல நோட்டாக மாறுவதும் இந்த மார்கழி மாதத்தில் தான்...
அது ஒரு காலம் கார்த்திக்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மாயமாகும் விமானங்களை பின்தொடரும் மர்மங்கள்
» ''மார்கழி மாதத்தில் அதிகாலையில் கோலமிடும் வழிபாட்டு முறை
» மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!!
» "ரெடிமேடு'மயத்தால் மங்கும் மார்கழி: கோலமிடும் முறைக்கு முற்றுப்புள்ளி
» மார்கழியில் காட்சி தரும் மரகதலிங்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum