ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

2ஜி: நெருங்கும் தீர்ப்பு... பதறும் திமுக!

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

2ஜி: நெருங்கும் தீர்ப்பு... பதறும் திமுக! Empty 2ஜி: நெருங்கும் தீர்ப்பு... பதறும் திமுக!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 2:26 pm

2ஜி: நெருங்கும் தீர்ப்பு... பதறும் திமுக!
விகடன் 27-12-2015 7.50 P .M

இ ந்தியாவை உலகப்புகழ் ஊழல் நாடாகக் காட்டிய 2ஜி அலைக்கற்றை வழக்கில், சி.பி.ஐ. தனது இறுதி வாதத்தை முடித்துவிட்டது.

இனி குற்றவாளிகள் தரப்பு தங்கள் தரப்பை எடுத்துச் சொல்வதற்கான இறுதி-பதில் வாதம் நடைபெறும்.

பிப்ரவரி 1-ம் தேதியை அதற்கான ஆரம்பக் கெடுவாக குறித்துள்ளார் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி.

இந்த நேரத்தில் 2ஜி வழக்கின் ஒரு பிளாஷ்பேக்... 2ஜி அலைக்கற்றைக் கதைக்குள் ஒரு முன்கதை... என்ன நடந்தது? நாம் இப்போது 4ஜி அலைக்கற்றை சேவையைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். ஏறத்தாழ எல்லோரிடமும் 3ஜி வசதி இருக்கிறது.

ஆனால், மொத்தமாக வழக்கொழிந்துவிட்ட 2ஜி வசதிதான், அப்போது இந்தியாவின் பேசு பொருள். நாடாளுமன்றத்தை அமளிதுமளியாக்கியது. சி.பி.ஐ., வருமானவரித்துறையை அலைக்கழித்தது.

உச்ச நீதிமன்றத்தை சாட்டை சுழற்ற வைத்தது. தொலைபேசிகளில் நாம் 2ஜி வசதியைப் பயன்படுத்தி இண்டர்நெட் சேவையைப் பெறுவதற்கு, தொலைபேசி நிறுவனங்கள் அந்த வசதியை நமக்கு அளிக்க வேண்டும். நமக்கு அளிக்க வேண்டுமானால், அவற்றை அரசாங்கத்திடம் இருந்து அதற்கு லைசென்ஸ் வாங்க வேண்டும்.

அப்படி அரசாங்கத்திடம் லைசென்ஸ் வாங்க முயன்ற சில தனியார் நிறுவனங்கள், அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் துணைக்கு வைத்துக்கொண்டு சில தில்லாலங்கடி வேலையைச் செய்தன.

அதற்கு அப்போது தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா, அவருக்கு உதவியாளராக இருந்த ஆ.கே.சந்தோலியா, அன்றையத் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த சித்தார்த் பெகுரா போன்றவர்கள், அலைக்கற்றை லைசென்ஸ் பெறுவதற்கு முயன்ற சில நிறுவனங்களுக்காக சில தில்லுமுல்லுகளைச் செய்தனர்.

அதுதான் 2ஜி அலைக்கற்றை முறைகேடு. தில்லாலங்கடிகளும் தில்லுமுல்லுகளும் 2007-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், மத்திய தொலைத் தொடர்புத்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டது. 2ஜி அலைக்கற்றைகளை வாங்க விரும்பும் நிறுவனங்கள் அதற்கான விண்ணப்பங்களை அக்டோபர் 1-ம் தேதிக்குள் கொடுக்க வேண்டும் என்று சொன்னது.

அவற்றில் தகுதியான நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஏலம் மூலம் 2ஜி அலைக்கற்றை உரிமம் வழங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் இருந்தது. இதை நம்பி, 46 நிறுவனங்கள் விண்ணப்பங்களும் கொடுத்தன.

ஆனால், திடீரென என்ன ஆனாதோ... ஏதானதோ தெரியவில்லை. ஏலத்திற்கு யாருக்கும் அழைப்பு வரவில்லை. விண்ணப்பம் கொடுத்திருந்த நிறுவனங்கள், 'சரி, அரசாங்கம் இன்னும் ஏலத்தை விடவில்லை போல' என்று நினைத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால், 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதி, மத்தியத் தொலைத் தொடர்புத்துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில், 2ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு கடைசித் தேதி, செப்டம்பர் 25 என்று வந்தது. செப்டம்பர் 25 என்றால்... அது 2008-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி இல்லை. 2007-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி.

குழப்பமாக இருக்கிறதா? ஒன்றுமில்லை, பள்ளிக்கூடம் திறந்து காலாண்டுத் தேர்வு நடந்து கொண்டிருக்கும்போது, பள்ளிக்கூடம் திறக்கும் தேதியை அரசாங்கம் அறிவித்தால் எப்படி இருக்கும்? அந்தக் கதைதான்.

அதாவது, போனவருடம் விட்ட ஏலத்திற்கு, இந்த வருடம் தேதி குறித்தார்கள்... இடையில் என்ன நடந்தது என்றால், அவர்களுக்கு வேண்டப்பட்ட நிறுவனங்களுக்கு சத்தமில்லாமல் அலைக்கற்றை உரிமத்தை வழங்கிவிட்டனர்.

விண்ணப்பம் கொடுத்த நிறுவனங்கள் கொதித்தபோது, முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஏலம் கொடுக்கப்பட்டுவிட்டது என்று பதில் வந்தது.

அதன்பிறகு, இதில் நடைபெற்ற ஊழல்களை சி.ஏ.ஜி அறிக்கை அம்பலப்படுத்தியது. முறையாக ஏலம்விடாமல் சில நிறுவனங்களை அழைத்து வந்து, அவர்கள் கையில் லைசென்ஸை கொடுத்து மாலையும் மரியாதையுமாக மத்திய அரசு அனுப்பிவிட்டது.

அதுவும் 2001-ம் ஆண்டு விலையிலேயே அலைக்கற்றை உரிமத்தை, 2007-ம் ஆண்டு தனியார் நிறுவனங்களுக்கு விற்றது தொலைத் தொடர்புத்துறை. அதை வாங்கிய நிறுவனங்கள், அன்றே, அதை வேறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கைமாற்றிவிட்டு, கோடிக்கணக்கில் அல்ல.. கோடி... கோடி... கோடிக்கணக்கில் இலாபம் அடைந்தன.

அத்தனையும் அரசாங்கத்திற்கு வர வேண்டிய பணம். தனியார் நிறுவனங்கள் அள்ளிக் கொண்டு போய்விட்டன. அதனால், அரசாங்கம் நஷ்டமடைந்துள்ளது. அதுவும் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசாங்கத்துக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று சொன்னது மத்திய தணிக்கைக் குழு.

அதையும் போகிற போக்கில் சொல்லவில்லை. ஆதாரங்களுடன் சொன்னது. அதாவது மத்தியத் தொலைத் தொடர்புத்துறையிடம் இருந்து ரூ.1537 கோடிக்கு 2ஜி அலைக்கற்றையை வாங்கிய ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதில் பாதியை அரபு நாட்டு நிறுவனமான ஈடிசாலட்டுக்கு ரூ. 4200 கோடிக்கு விற்றது.

ஜஸ்ட் லைக் தட், இந்தப்பக்கம் வாங்கி, அந்தப் பக்கம் கொடுத்ததில் அந்த நிறுவனத்துக்கு லாபம், ரூ. 2600 கோடி. இதேபோல், அலைக்கற்றையை வாங்கிய மற்ற நிறுவனங்களும்செய்தன. இதெல்லாம், 2009-ம் ஆண்டு தொடங்கியதும், புகார்களாகக் குவிந்தன.

சி.பி.ஐ-யும் களத்தில் இறங்கியது. 2009-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. ஆ. ராசா இதில் ஆதாயம் அடைந்த பணத்தை வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ததாகவும், அதற்காக ஆ.ராசா மூலம் குறைந்த விலையில் அலைக்கற்றை லைசென்ஸ் வாங்கி, அதை பல மடங்கு லாபம் வைத்து விற்ற நிறுவனங்கள் உதவி செய்ததாகவும் ஒரு குற்றச்சாட்டு கிளம்பியது.

தி.மு.கவும் தொலைத்தொடர்புத் துறையும் ஸ்வான் டெலிகாம் மற்றும் ராசாவின் மூலம் ஆதாயம் அடைந்த நிறுவனங்கள், தி.மு.க தலைவர் கருணாநிதியின் குடும்பத்திற்குச் சொந்தமான கலைஞர் டி.வியில் 200 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்ததாகவும் மற்றொரு பூதம் கிளம்பியது.

தலையெழுத்தே என்று அதையும் விசாரிக்க வேண்டிய வேலையில் இறங்கிய சி.பி.ஐ., அதிலும் ஒரு வழக்கைப் பதிவு செய்தது. அதே நேரத்தில், மத்திய அமலாக்கத்துறை, வருமானவரித்துறை என்று இருக்கின்ற எல்லாத் துறைகளும் இதில் தங்கள் பங்குக்கு பல வழக்குகளைப் பதிவு செய்தன.
நன்றி-டெய்லிஹண்ட்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

2ஜி: நெருங்கும் தீர்ப்பு... பதறும் திமுக! Empty Re: 2ஜி: நெருங்கும் தீர்ப்பு... பதறும் திமுக!

Post by கார்த்திக் செயராம் Sun Dec 27, 2015 2:33 pm

காலையில் இந்த செய்தியை படித்தேன் அய்யா...தி.மு.கழகத்திற்கு ஆம்புலன்ஸ் அனுப்பியது யார்?


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

2ஜி: நெருங்கும் தீர்ப்பு... பதறும் திமுக! Empty Re: 2ஜி: நெருங்கும் தீர்ப்பு... பதறும் திமுக!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 3:02 pm

கார்த்திக் செயராம் wrote:காலையில் இந்த செய்தியை படித்தேன் அய்யா...தி.மு.கழகத்திற்கு ஆம்புலன்ஸ் அனுப்பியது யார்?
மேற்கோள் செய்த பதிவு: 1183283
கார்த்தி நீங்கள் என்ன சொல்ல வந்தீர்கள் எனபது புரியவில்லை, என் மண்டைக்கு.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

2ஜி: நெருங்கும் தீர்ப்பு... பதறும் திமுக! Empty Re: 2ஜி: நெருங்கும் தீர்ப்பு... பதறும் திமுக!

Post by கார்த்திக் செயராம் Sun Dec 27, 2015 3:33 pm

மறுபடியும் இந்த விவகாரம் தேர்தல் நேரத்தில் கிளம்பியுள்ளது. இது தி.மு.க வுக்கு தலைவலியை உண்டாக்கியுள்ளது எனவே இதை யார் கிண்டி கிளறி விட்டது என்ற கோணத்தில் கேட்டேன் ஐயா..


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

2ஜி: நெருங்கும் தீர்ப்பு... பதறும் திமுக! Empty Re: 2ஜி: நெருங்கும் தீர்ப்பு... பதறும் திமுக!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 4:39 pm

கார்த்திக் செயராம் wrote:மறுபடியும் இந்த விவகாரம் தேர்தல் நேரத்தில் கிளம்பியுள்ளது. இது தி.மு.க வுக்கு தலைவலியை உண்டாக்கியுள்ளது எனவே இதை யார் கிண்டி கிளறி விட்டது என்ற கோணத்தில் கேட்டேன் ஐயா..
மேற்கோள் செய்த பதிவு: 1183307
நன்றி கார்த்தி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

2ஜி: நெருங்கும் தீர்ப்பு... பதறும் திமுக! Empty Re: 2ஜி: நெருங்கும் தீர்ப்பு... பதறும் திமுக!

Post by ராஜா Sun Dec 27, 2015 4:42 pm

கார்த்திக் செயராம் wrote:மறுபடியும் இந்த விவகாரம் தேர்தல் நேரத்தில் கிளம்பியுள்ளது. இது தி.மு.க வுக்கு தலைவலியை உண்டாக்கியுள்ளது எனவே இதை யார் கிண்டி கிளறி விட்டது என்ற கோணத்தில் கேட்டேன் ஐயா..
மேற்கோள் செய்த பதிவு: 1183307
இதிலென்ன சந்தேகம் .... மேலிடம் தான் காரணம் புன்னகை

பொதுவா தமிழகத்தில் அதிமுக / திமுக இவற்றில் யாருக்கு வெற்றிவாய்ப்பு அதிகமுள்ளது என்று மத்தியஉளவுத்துறை அறிக்கை கொடுக்கிறதோ, அதன் மூலம் தமிழ்நாட்டில் வரபோகிற தேர்தலில் வெற்றிவாய்புள்ள கட்சிக்கு அவர்களின் கடந்தகால வரலாறு தோண்டப்பட்டு நெருக்கடிகள் கொடுக்கப்படும்.

கூட்டணிக்கு வரியா?! இல்லை வழக்கை இன்னும் கொஞ்சம் பலமாக இறுக்கவா என்று கழுத்தில் துண்டை போட்டு மத்திய ஆளும் அரசு கேட்கும் போது (அம்மாவும் , அப்பாவும்) என்ன பண்ணுவார்கள் இன்னுமொரு 5 வருடத்திற்கு நிம்மதியாக இருக்க வேண்டுமென்றால் அவர்களுடன் கூட்டணி வைத்துகொண்டால் தான் உண்டு என்ற நிலைக்கு தள்ளபடுவார்கள்.

இந்த நாடகம் மத்தியில் யார் ஆட்சி நடந்தாலும் தேர்தல் சமயத்தில் வழக்கமாக நாம் பார்க்கலாம்


Last edited by ராஜா on Sun Dec 27, 2015 4:52 pm; edited 1 time in total
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

2ஜி: நெருங்கும் தீர்ப்பு... பதறும் திமுக! Empty Re: 2ஜி: நெருங்கும் தீர்ப்பு... பதறும் திமுக!

Post by கார்த்திக் செயராம் Sun Dec 27, 2015 4:48 pm

என்னா ஒரு வில்லத்தனம்....

நன்றி ராஜா அண்ணா .. 2ஜி: நெருங்கும் தீர்ப்பு... பதறும் திமுக! 1571444738 2ஜி: நெருங்கும் தீர்ப்பு... பதறும் திமுக! 1571444738 சூப்பருங்க


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

2ஜி: நெருங்கும் தீர்ப்பு... பதறும் திமுக! Empty Re: 2ஜி: நெருங்கும் தீர்ப்பு... பதறும் திமுக!

Post by ராஜா Sun Dec 27, 2015 4:53 pm

கார்த்திக் செயராம் wrote:என்னா ஒரு வில்லத்தனம்....

நன்றி ராஜா அண்ணா .. 2ஜி: நெருங்கும் தீர்ப்பு... பதறும் திமுக! 1571444738 2ஜி: நெருங்கும் தீர்ப்பு... பதறும் திமுக! 1571444738 சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1183323அப்பதானே தேர்தலுக்கு பிறகு கதாநாயகனா இருக்கலாம் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

2ஜி: நெருங்கும் தீர்ப்பு... பதறும் திமுக! Empty Re: 2ஜி: நெருங்கும் தீர்ப்பு... பதறும் திமுக!

Post by T.N.Balasubramanian Sun Dec 27, 2015 5:00 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

2ஜி: நெருங்கும் தீர்ப்பு... பதறும் திமுக! Empty Re: 2ஜி: நெருங்கும் தீர்ப்பு... பதறும் திமுக!

Post by கார்த்திக் செயராம் Sun Dec 27, 2015 5:01 pm

ஓ கோ கதை அப்படி போகுதா.......

புரியுது நா புரியுது இனி எப்படி பெர்பாமன்ஸ் பன்றேன் மட்டும் பாருங்க.


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

2ஜி: நெருங்கும் தீர்ப்பு... பதறும் திமுக! Empty Re: 2ஜி: நெருங்கும் தீர்ப்பு... பதறும் திமுக!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» நெருங்கும் கலிபோர்னியா தீர்ப்பு... கொடைக்கானிலிருந்து மதுரைக்கு ஓடி வந்தார் நித்தியானந்தா!
» நிவாரண உதவிகள் வழங்க அனுமதி பெற தேவையில்லை- திமுக வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு
» அயோத்தி தீர்ப்பு சரியான தீர்ப்பு அல்ல; ராமர் பிறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை: திருமாவளவன்
» திமுக உதயமான ராயபுரம் தொகுதியை காங்.குக்கு விட்டுக் கொடுத்த திமுக
» திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவா? ஆதரவை விலக்குமா திமுக?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum