புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Poll_c10பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Poll_m10பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Poll_c10 
56 Posts - 73%
heezulia
பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Poll_c10பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Poll_m10பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Poll_c10பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Poll_m10பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Poll_c10பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Poll_m10பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Poll_c10பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Poll_m10பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Poll_c10 
221 Posts - 75%
heezulia
பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Poll_c10பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Poll_m10பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Poll_c10பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Poll_m10பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Poll_c10பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Poll_m10பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Poll_c10 
8 Posts - 3%
prajai
பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Poll_c10பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Poll_m10பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Poll_c10பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Poll_m10பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Poll_c10பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Poll_m10பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Poll_c10 
3 Posts - 1%
Barushree
பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Poll_c10பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Poll_m10பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Poll_c10பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Poll_m10பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Poll_c10பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Poll_m10பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பீப் பாடல்! கவிஞர் இரா. இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Dec 21, 2015 7:31 pm

பீப் பாடல்!

கவிஞர் இரா. இரவி

*****

நடிகர் சிம்பு பீப் பாடல் பாட அனிருத் இசையமைக்க அப்பாடல் யூடியூபில் இணையத்தில் வலம் வர பிரச்சனை வந்தவுடன் இருவருமே உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறோம் என்று சொல்லி இருந்தால், பிரச்சனை முடிவுக்கு வந்து இருக்கும். அதை விடுத்து நடிகர் சிம்பு வீர வசனம் பேசியது. எரியும் நெருப்பில் எண்ணெய் விடுவதாக இருந்தது.நான் இசை அமைக்கவில்லை என்று பல்டி அடித்தார் அனிருத்.பிரச்சனை மேலும் பெரிதானது. கண்டன ஆர்ப்பாட்டங்களும் காவல்துறையில் புகார்களும் ஆரம்பமானது.


நடிகர் சிம்புவின் தந்தை டி. ராஜேந்தர் மிக உருக்கமாக தொலைக்காட்சியில் பேசி இருந்தார். டி. ராஜேந்தர் சகலகலா வல்லவர், திறமையானவர், பல ஆண்டுகள் அவர் சம்பாதித்த புகழை, அவரது மகன் சிம்பு சில நொடியில் சிதைத்து விட்டார். குடிபோதையில் ரௌடிகள் கத்தும் கெட்ட வார்த்தையை பாடலாகப் பாடலாமா? என்று ஒரு கனம் சிந்தித்து இருக்க வேண்டும். இப்படி ஒரு பாடலுக்கு இசையமைக்கலாமா? என்று இசையமைத்தவரும் சிந்தித்து இருக்க வேண்டும்.


இணையத்தில் சிம்பு ஏற்றவில்லை என்கிறார் டி. ராஜேந்தர் சரி. தவறாக வேண்டுமென்றே யாரோ ஏற்றி விட்டனர். ஆனால் பாடியது சிம்பு இல்லை என்று சொல்ல முடியுமா? இந்த பாடலுக்கு நடிகை சினேகா சொன்னது போல ஊடகங்களும் அளவிற்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்த காரணத்தால், அந்த ஆபாசப் பாடல் பிரபலமடைந்து இன்று இளைஞர்கள் பலர் அலைபேசியில் வைத்து கேட்டு வருகின்றனர். சத்தமாகவும் பாடலை ஒலிக்க விடுகின்றனர். நமது சகோதரிகள் அப்பாடல் ஒலிக்கும் நேரம் சென்றால் எவ்வளவு சங்கடப்படுவார்கள். இதனை ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்து இருந்தால் சிம்பு இவ்வளவு கேவலமான கீழ்தரமான பாடலை பாடி இருக்க மாட்டார்.


நடிகர் சிம்பு இசையமைப்பாளர் அனிருத் இருவருக்கும் நேர்ந்த துன்பத்திற்கு காரணம் கூடா நட்பு .


புகழ்பெற்ற பெரிய மனிதர்களுக்கு அவர்களின் நற்பெயரைக் கெடுக்கும் வண்ணம் மகன்கள் அமைந்து விடுவது உண்டு. அதுபோலவே டி. ராஜேந்திரன் பெயரைக் கெடுக்கும் வண்ணம் அவரது மகன் சிம்பு அமைந்து விட்டார். இந்தப் பாடல் பிரச்சனை வந்த நிமிடமே மன்னிப்பு கேட்டு இருந்தால் அத்தோடு முடிந்து இருக்கும். அதை விட்டு விட்டு திரைப்படத்திற்கு வசனம் எழுதுவது போல இந்தப்பாடல் எதிர்ப்பவர்கள் வீட்டில் எல்லாம் கேமிரா வைத்தால் என்னாகும் என்று அகராதியாக பேசி அவரே அவருக்கு மண் போட்டுக் கொண்டார்.


இனியாவது இவ்வளவு நடந்த பின்பாவது இருவரும் ஊடகத்தின் மூலம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டால் பிரச்சனை முடிவுக்கு வரும். ஊடகங்களும் நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும் போது சென்னை கண்ணீரில் மிதக்கும் காலத்தில் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டிய அவசியமில்லை. இந்தப் பாடலை அரசும் தடை செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.


திரைப்படத்தின் மூலம் கொலைவெறிப் பாடல், அடிடா அவளை இதுபோன்ற பாடல்களை பிரபலப்படுத்தி மக்களும் அவற்றை விரும்பிக் கேட்டு புகழின் உச்சிக்கு அவர்களை கொண்டு சென்றதன் விளைவே, அவர்களுக்கு எதை வேண்டுமானாலும் பாடலாம் எந்த பாடலுக்கும் இசை அமைக்கலாம் என்ற துணிச்சல் வந்து விட்டது.


திரைப்படப் பாடல் சிறு குழந்தைகள் வரை மனப்பாடம் செய்து பாடுகின்றனர். தொலைக்காட்சிகளிலும் பாடுகின்றனர். எனவே திரைப்படப் பாடல் ஆசிரியர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.


இந்தப்பாடலுக்கு கண்டனம் செய்து கட்டுரை எழுதிய சாருநிவேதா என்ற எழுத்தாளர் பாடலில் பாடிய கெட்ட வார்த்தையை நான் நாவலில் பயன்படுத்தி இருக்கிறேன் என்று ஒப்புதல் வாக்கு மூலம் தந்து விட்டு நாவல் 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் படிப்பது என்று விளக்கம் தந்து இருந்தார் .அவரும் திருந்த வேண்டும் .இனி எந்த நாவலிலும் கெட்ட வார்த்தையை பயன்படுத்துக் கூடாது .


எவ்வளவு பணம் தந்தாலும் சமுதாயத்தை சீரழிக்கும், பாடலையும், தமிங்கிலப் பாடலையும் எழுதுவதில்லை என்ற முடிவுக்கு வர வேண்டும்.


இந்த நிகழ்வை திரைப்படப் பாடல் ஆசிரியர்கள் அனைவரும் எச்சரிக்கையாகக் கொண்டு இனிவரும் காலங்களில் தமிழ்ப்பாடல்களில் ஆங்கிலச்சொல் கலந்து எழுதுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இயக்குனர் கேட்கிறார், தயாரிப்பாளர் கேட்கிறார், நடிகர் கேட்கிறார் என்று ஆங்கிலச் சொல் கலந்து எழுதும் அவலத்திற்கு முடிவு எடுங்கள். சிம்புக்கு நேர்ந்த நிலைமை இனி உங்களுக்கு நேரலாம். கவனமாக எழுதுங்கள். தமிங்கிலம் தவிர்த்திடுங்கள். தமிழ்க்கொலையை நிறுத்திடுங்கள்.

*****

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 21, 2015 9:30 pm


'பீப்' பாடல் விவகாரம்: ஐகோர்ட்டில் சிம்பு முன்ஜாமீன் மனு
செய்துள்ளார்...
-
சிம்புவுக்கு ஆதரவாக சென்னையில் ரசிகர்கள் தீக்குளிக்க முயன்றதால்
பரபரப்பு ,..
-
இணையத்தில் #WeSupportSTR என்னும் ஹெஷ்டேக்கை உருவாக்கி
இந்த விவகாரத்தில் சிம்புவிற்கு அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து
வருகின்றனர்.
-



விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Dec 22, 2015 12:54 am

//ஊடகங்களும் நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும் போது சென்னை கண்ணீரில் மிதக்கும் காலத்தில் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டிய அவசியமில்லை. இந்தப் பாடலை அரசும் தடை செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.


திரைப்படத்தின் மூலம் கொலைவெறிப் பாடல், அடிடா அவளை இதுபோன்ற பாடல்களை பிரபலப்படுத்தி மக்களும் அவற்றை விரும்பிக் கேட்டு புகழின் உச்சிக்கு அவர்களை கொண்டு சென்றதன் விளைவே, அவர்களுக்கு எதை வேண்டுமானாலும் பாடலாம் எந்த பாடலுக்கும் இசை அமைக்கலாம் என்ற துணிச்சல் வந்து விட்டது.
//
- உண்மை! ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பீப் பாடல்!  கவிஞர் இரா. இரவி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Dec 22, 2015 8:42 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Dec 22, 2015 12:22 pm

சிம்புவின் பாடல் சிரிப்பாய் சிரிக்கிறது
நம்பிக்குக் கல்யாணம் செய்திடுக - தம்பிக்குக்
கால்கட்டுப் போட்டால்தான் காரிகையின் காலடியில்
நூல்போல் கிடப்பார் சுருண்டு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Dec 22, 2015 6:26 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

Similar topics
» அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது ! நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது ! நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» தெரிந்தும் தெரியாமலும் நூல் ஆசிரியர் : கவிஞர் செல்வக்குமார் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
» இசைக்குயில் எம் .எஸ் .சுப்புலட்சுமி நூற்றாண்டு ! உலகம் உள்ளவரை உம் பாடல் ஒலிக்கும் ! கவிஞர் இரா .இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக